Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் “மாட்டுக்கறி” வியாபாரத்திற்கு தடையா ? - அதிர்ச்சி ரிப்போர்ட் ! 26

அதிரைநிருபர் பதிப்பகம் | June 20, 2012 | , , , ,


அதிரையில் அமைதியை குலைக்க பின்னப்பட்டிருக்கும் சதி அம்பலமாகியிருக்கிறது, அமைதியாக அனைத்து சமுதாயத்தவரும் சகோதர பாசத்தோடு இன-மத பேதமின்றி உறவாடி வரும் அதிரை மக்கள் மத்தியில் பாஸீச கும்பலொன்று தனது வேலையை அரங்கேற்றி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக அவர்கள் கையில் எடுத்திருக்கும் சர்ச்சை 'மாட்டுக் கறி', இதற்கு பேரூராட்சி மன்றம் தடைவிதித்து விட்டதாக பகிங்கமாக சுவரொட்டிகள் ஒட்டி ஊர் முழுவதும் பதற்றமான சூழலை பாஸீச விஷமிகள் ஏற்படுத்தி வருகின்றனர்.

நீண்ட நாட்களாக அமைதியான முறையில் தொழில் செய்துவரும் சகோதரர்களுக்கு இவ்வாறான தொந்தரவுகள் கொடுப்பதிலிருந்தும், ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை தனித்து தகுந்த சட்ட ஆதாரங்களை முன்வைத்து அதற்கான ஆவண செய்வதை விடுத்து, ஏதோ தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளை களம் இறக்கி அங்கே முஸ்லீம் விரோத கும்பலின் தலையீட்டால் கலகம் ஏற்படுத்தும் சதி அம்பலமாகியிருக்கிறது.


அன்பார்ந்த அதிரை சகோதரர்களே, முஸ்லீம்களின் ஒரு பொது அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் மார்கெட்டில், பாஸீச விரோதிகளின் ஆதிக்கம் நுழைய அனுமதிக்க வழிவகை செய்ய துணை போகாதீர்கள், வீணான பதற்றம் ஏற்படுத்தி சகோதரர்கள் மத்தியில் கலவர பீதியை ஏற்படுத்தும் கும்பலை சட்டபூர்மவாக தண்டிக்க முறையான நடவடிக்கைகளில் இறங்குவதற்கு ஒற்றுமையுடன் ஒன்றினையுங்கள்.

நம் சகோதரர்கள் அனைவரும் ஒற்றுமைகாத்து சகோதரத்துவம் பேனுவோம் இன்ஷா அல்லாஹ்....

-அதிரைநிருபர் குழு

26 Responses So Far:

Unknown said...

சின்னப் பிள்ளைத்தனம். அரசியல் முதிர்ச்சியின்மை. கட்சிக் காழ்ப்பு. இந்து முன்னணியின் பெயரை யாரோ வேண்டுமென்றே வம்புக்கு இழுத்துள்ளார்கள். இதிலும் சந்தேகம் உள்ளது.

Meerashah Rafia said...

அதிரை அஹ்மது சொன்னது…
//. இந்து முன்னணியின் பெயரை யாரோ வேண்டுமென்றே வம்புக்கு இழுத்துள்ளார்கள். இதிலும் சந்தேகம் உள்ளது.//

இருக்கக்கூடும்..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

மாட்டுகறி வியாபாரத்தை தடை செய்ய பல அரசியல் விளையாட்டுக்கள் அதிரையில் கடந்த ஒரு மாத காலமாக விளையாடப்பட்டு வருகிறது.

அதிரையில் ஹலாலான முறையில் மாட்டுக்கறி அருக்கப்பட்டு சகோதரர் ஹமீத் அவர்களால் கடந்த 10 வருடங்கலாக வியாபாரம் செய்யப்பட்டு வருகிறது.

அதிரையில் மாட்டு அறுக்கக்கூடாது என்று தடைவிதிக்க பேரூராட்சிக்கு எந்தவித அதிகாரமும் இல்லை.

அமைதியாக இருக்கும் அதிரையில் மதக்கலவரத்தை தூண்டும் முயற்சியை ஒரு சில தீயசக்திகள் முன்னெடுத்துள்ளார்கள், இதற்கு அரசியல் காழ்புணர்வை தீர்க்கும் எண்ணத்தில் அரசியல் தலைகளுக்கும் அறிந்தோ அறியாமலோ நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவளித்துவருவது மிகவும் வேதனையே..

முஸ்லீம்கள் அதிகம் வாழும் அதிரையில் மாடு அறுக்காமல் வேறு எங்கு சென்று மாடு அறுக்க முடியும்?

தக்வாபள்ளி மார்கேட்டில் ஒரு நாளைக்கு ஒரு மாடு அறுப்பது சுகாதார சீர்கேடு என்பது நகைச்சுவையே...

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். யாரோ கொம்புசீவி விட்டுள்ளார்கள். நம் சமூகத்தில் உள்ளவர்களே நம் கழுத்துக்கு(ஷரியத்துக்கு)கத்திவைக்கும் மோடி(டு) (மாடு)முட்டித்தனம்.யார் நம் மார்பில் முட்ட பார்ப்பது? அரசியல் காழ்புணர்ச்சி இப்ப மாட்டு இறைச்சின் மூலம் இறையாண்மை??க்கே வெ(வே)ட்டுவைப்பது நியாயமா? இதை இப்பவே களைய நாம் ஒன்று திரளனும். இன்னும் மழையில் நனைந்த மாடு போல் சொரணையற்று இருந்தால் நாளை மருமை விசாரனையில் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டிவரும்.

அடியான்! said...

இந்த போஸ்ட்டருக்கும் இந்து முன்னனிக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பே இல்லை பெரும்பாலும் இந்து முன்னனியில் பிரசுரங்கல் போட்டால் இவண் என்றுதான் போடுவார்கள் இதில் இங்ஙகனம் என்று உள்ளது

மற்றோன்று இந்து முன்னனி காரர்கள் ஊருக்குள் அதாவது இஸ்லாமியர்கல் வசிக்கும் இடங்களில் வந்து இப்படி தைரியமாக போஸ்டர்கள் ஒட்ட மாட்டார்கள்.

இதில் ஏதோ சம்த்திங் ராங்.... டேய் உங்க அரசியல் விளையாட்ட வேறு எங்காவது வச்சி கோங்க ...... பாவம் டா அப்பாவி அதிரை இளைஞர்கள் மறுபடியும் கோர்ட்டு கேசுன்னு அலைய விட்டுடாதீங்க ப்ளீஸ்.

Unknown said...

Dear Brother's

This is not issue. Before the shop owner put all garbage in graveyard. Adirai municipality inform the show owner don’t pass all garbage in graveyard. But the show owner informs and you can see the video he told before adirai chairman support him. The shop owner already in TMMK. But he is doing bad as per above message. Please clarify this matter two people are Muslim. I request to TMMK please take compromise to both muslim brothers.
நட்பை வளர்த்தல்
(1) ஸலாம் கூறுதல்
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ( لَا تَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا أَوَلَا أَدُلُّكُمْ عَلَى شَيْءٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ ) وفي رواية: ( وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا تَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا )
என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, நிச்சயமாக நீங்கள் ஈமான் கொள்ளும் வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவருக்கொருவர் நேசிக்கும் வரை ஈமான் கொண்டவர்களாக முடியாது. உங்களிடையே நேசத்தை ஏற்படுத்தும் ஒரு காரியத்தை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? உங்களிடையே ஸலாத்தைப் பரப்புங்கள்!
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், நூல்: முஸ்லிம் 81)
உறவினர்களாக இருப்பினும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் சந்திக்கும் போதெல்லாம் ஸலாம் கூறவேண்டும்.
(2) அன்பைத் தெரிவித்தல்
أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ كُنْتُ جَالِسًا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ مَرَّ رَجُلٌ فَقَالَ رَجُلٌ مِنْ الْقَوْمِ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَأُحِبُّ هَذَا الرَّجُلَ قَالَ هَلْ أَعْلَمْتَهُ ذَلِكَ قَالَ لَا فَقَالَ قُمْ فَأَعْلِمْهُ قَالَ فَقَامَ إِلَيْهِ فَقَالَ يَا هَذَا وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ فِي اللَّهِ قَالَ أَحَبَّكَ الَّذِي أَحْبَبْتَنِي لَهُ
நபி (ஸல்) அவர்களின் சபையில் நான் இருந்தேன். அப்போது ஒரு மனிதர் (எங்களை) கடந்து சென்றார். எங்களுடன் இருந்தவர்களில் ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! நான் இந்த மனிதரை நேசிக்கிறேன் என்றார். அதனை அவருக்கு தெரிவித்துவிட்டாயா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர் இல்லை என்றார். எழுந்து சென்று அவரிடம் தெரிவித்துவிடு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர் எழுந்து சென்று, இன்னவரே! நான் உம்மை அல்லாஹ்வுக்காக நேசிக்கிறேன் என்றார். அதற்கு அந்த மனிதர், யாருக்காக நீ என்னை நேசித்தாயோ அந்த அல்லாஹ் உம்மை நேசிப்பானாக! என்று கூறினார்.
அறிவிப்பர்: அனஸ் (ரலி) அவர்கள், நூல் : அஹ்மது 11980

mansoor said...

அஸ்லம் அவர்களின் அரசியல் விலையாட்டு ஒர் எல்லை இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிரது,இதை இதோடு நிருதி கொள்ளட்டும் அது தான் அவருக்கும் சமுதியதிர்கும் நல்லது,அமைதியாக வழும் ஊரில் பிரச்சினைகள் உருவாக வழி வகுக்க வேண்டாம், வள்ள அல்லாஹ்வை பயந்து கொள்லுங்கள்,அதிரை தமுமுக சஹோதரர் கலிடம் உல்ல அரசியல் கால்புனர்சியை மரந்து ஊர் முன்னேற்றதிலும் சமுதாய நலனிலும் அக்கரை உள்ளவராக செயல்படுமாரு அன்புடன் கோருகிரோம்.

அதிரை சித்திக் said...

ஆழம் தெரியாமல் அஸ்லம் காலைவிடுவதாக தெரிகிறது ..நடுத்தெருவில் ஓரிரு பிரச்சனையில் வென்று விட்டால் எல்லாம் நான் தான் ..என்ற அகம்பாவம் கொள்ளகூடாது ..பல பிரச்சனைக்கு காரணமான ..அஸ்லாம்..கொஞ்சம் அடக்கி வாசித்தால் நல்லது ..பழிவாங்கும் நோக்கத்தோடு செயல் பட்டால்.(.செய்தார்.... செய்தவினை ,செய்தவற்கே எய்து விடும் )..கவனம் தேவை அஸ்லாம் ..பிரச்சனை அதிகமானால் சிங்கபூருக்கு ஓடும் பருப்பு எப்போதும் வேகாது ..எதிரிகளை குறைத்து கொள்வது நல்லது ..சிலர் நாகரிக மாக ஒதுங்கி கொள்வார்கள் .சிலர் தனது வன்மத்தை மிக கேவலமாக நடத்தி காட்டுவார்கள் ..வாழ்கையில் வெற்றி கிடைத்தால் அடக்கம் வந்திட வேண்டும் ..ஒரு ஊருக்கு ..தலைவர் என்றால் ..குப்பை கூளங்களை அள்ளவும் மற்றும் சில நிர்வாகத்திற்கு மட்டும் தான் ..பணம் காசை வைத்து எப்படியோ தனது கனவு நிறைவேறி விட்டது சந்தோசம் ..அதற்காக எல்லோரிடமும் அதிகாரம் செலுத்த நினைப்பது அவ்வளவு நல்லதல்ல .,

எதிரிகளை நண்பர்களாக இருக்க முயற்சி செய்யுங்கள் ...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மிகவும் கேவலமான ரிப்போர்ட்!

தமுமுக சகோதர சேர்மனிடம் அணுசரித்து போக வேண்டும்.
சேர்மன் அவர்கள் தமுமுக விடம் இணக்கமாக நடந்து கொள்ள வேண்டும்.
கடைக்காரர் கழிவு அப்புறப்படுத்துவதிலிருந்து பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட நடைமுறையை முழுமையாக பின்பற்ற வேண்டும்.
சேர்மன் அவர்கள் எல்லா பிரச்சனைகளுக்கும் முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக தொடர்ந்து கறி வியாபரம் செய்ய அனுமதி அறிவிப்பு செய்ய வேண்டும்.
மேலும் சேர்மன் அவர்கள் இணையத்தில் தோன்றி உண்மையை விளக்க வேண்டியது கடமை.
இந்த பிரச்சனைக்கு சகோதர சமுதாயத்தை இணைப்பது நல்லதல்ல.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அன்பானவர்களுக்கு,

இதை சேர்மன் vs தமுமுக என்று அனுகாமல்... நமக்கு ஹலாலக்கப்பட்ட ஓர் உணவுப்பொருள் அதிரையில் அறுக்க மற்றும் விற்க தடை செய்ய என்ன காரணம் என்று விவாதிக்கலாமே...

அதிரையில் உள்ள, அதுவும் தக்வா பள்ளி மார்க்கெட்டில் உள்ள விவகாரத்திற்கு ஏன் பட்டுக்கோட்டை ப ஜ க, பட்டுக்கோட்டை ஹிந்து முன்னனி அதிரையில் மாட்டுகறி அறுப்பதற்கு தடைவிதிக்கக்கோரி மனு கொடுக்க வேண்டும்?

முத்தம்மாள் தெருவாசிகள் என்று பெயரிட்டு மாட்டுகறி அறுப்பதற்கு தடைவிதிக்கக்கோரி மனு கொடுத்திருப்பதிலிருந்தும் தெரிகிறது இதில் ஏதோ மர்மம் உள்ளது என்று... காரணம் சுகாதாரத்திற்கு மாடு மார்கேட்டில் அறுப்பது காரணம் என்று சொல்லுவது எல்லாம் நகைப்புகுறியது.

மீன் வியாபரிகளிடம் வழக்கமான கூட்டம் என்று அழைத்து மாட்டுகறி அறுப்பதற்கு தடைவிதிக்கக்கோரும் மனுவில் கையெழுத்து வாங்கியுள்ளார்கள் மீன் வியாபாரிகளின் பொருப்பாளர்கள்...

இந்த நான்கு மனுக்களும் குறுகிய காலகட்டத்தில் பெறப்பட்டுள்ளது....

ஹஜ்ஜுப் பெருநாள் குர்பானிக்கு மாடு அறுக்க வேண்டுமா வேண்டாமா என்பதை நம அதிரைவாசிகள் முடிவு செய்துக்கொள்ளட்டும்....

இப்னு அப்துல் ரஜாக் said...

மொத்தத்தில் ஹலாலாக முறையில் அறுத்து மக்கள் பயன்படவேண்டும் என்ற எண்ணத்தில் இவர் செய்கின்றாறேன்றால் இதுபோன்றோற்கு நாம் ஆதரவு காட்டவேண்டும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நமதூர் மற்றும் சுற்று வட்டார இஸ்லாமிய மற்றும் இந்து சமய சகோதர பெருங்குடிம‌க்க‌ளே,

முதற்கண் நம் அனைவர்களுக்கும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் உண்டாகட்டுமாக.....

இஸ்லாமிய‌ முண்ண‌னியாக‌ இருக்க‌ட்டும், இந்து முண்ண‌னியாக‌ இருக்க‌ட்டும் உல‌கில் வாழ்வ‌தென்ன‌வோ ஒரு முறையே. ம‌ர‌ண‌ம் என்ன‌வ்வோ நிச்ச‌ய‌ம் ந‌ம் அனைவ‌ர்க‌ளுக்கும் ஒரு நாள் வ‌ந்தே தீர‌க்கூடிய‌தாக‌ இருக்கிற‌து.

ந‌ம் ஊரில் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ந‌ட‌ந்த‌ க‌ச‌ப்பான‌ ச‌ம்ப‌வ‌ங்கள் நினைக்கயில் இன்னும் ந‌ம் உள்ள‌த்தை துளைத்துக்கொண்டு ப‌டாத‌ பாடுப‌டுத்திக்கொண்டிருக்கிற‌து. ப‌ட்ட‌ வேத‌னைக‌ள் ஓராயிர‌ம், இழ‌ந்த‌ வாலிப‌ம் க‌ண‌க்கில‌ட‌ங்கா......சகோதரனின்றி பிறந்ததால் உங்களை எல்லாம் சகோதரன் என கூறிக்கொள்வதில் உள்ளப்பெருமிதம் கொள்கிறேன்....போதும் ச‌கோத‌ர‌ர்க‌ளே...போதும் ச‌கோத‌ர‌ர்க‌ளே போதும்.....தாங்காது......

"ல‌க்கும் தீனுக்கும் வ‌லிய‌த்தீன்" உம்ம‌த‌ம் உன‌க்கு; எம்ம‌த‌ம் என‌க்கு என்று அவ‌ர‌வ‌ர‌ர் ம‌த‌ங்க‌ளை ம‌தித்து ந‌ட‌ந்து இறுதியில் இன்முக‌த்துட‌ன் இறைவ‌ன‌டி சேர‌ அவ‌னிட‌மே சிர‌ம் தாழ்த்தி வேண்டி வ‌ண‌ங்குகிறேன்.

ந‌ம்முடைய‌ காழ்ப்புண‌ர்ச்சிக‌ளும், முதிர்ச்சிய‌ற்ற‌ ம‌ன‌ப்போக்கும், ம‌த‌ துவேச‌மும் ம‌ண்ணோடு ம‌ண்ணாக‌ ம‌றைய‌ட்டுமாக‌.......

அதிரை முஜீப் said...

சகோதர்களே...! மாட்டுக்கறி வியாபாரதிற்குத்தான் நோட்டீஸ் பிரகாரம் தடையே தவிர, தின்பதற்கு அல்ல..!! எனவே ஒரு பீப் பிரை, பீப் சுக்கா, ஒரு பீப் கடாய் பார்சல்...!!!.

அப்துல்மாலிக் said...

அப்படி என்னா ஸ்பெஷ்லா மாட்டுக்கறி மீது மட்டும் அவ்வளவு காட்டம்?. ஆடு, கோழி கழிவுகளும்தான் நோய் உண்டாக்கும் வஸ்து, தடைசெய்யவேண்டும் என்றால் எல்லாத்தையும் செய்யவேண்டும். தத்தமது சுய லாபத்துக்காக ஒட்டுமொத்த சமுதாயத்தையே பகடைக்காயாக வைப்பது சரியல்ல, எல்லாவற்றிற்கும் ஒருவனிடத்தில் பதில் சொல்லவேண்டி வரும்......

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

மாட்டுக்கறி வேண்டாம் அது ஒரு மிருக வதை என்று வாதிடும் சகோதரர்கள் தயவு செய்து வாதிடுமுன் தோலால் செய்யப்பட்ட மணி பர்ஸ், பேண்ட் பெல்ட், கைக்கடிகாரம், வீட்டிலுள்ள பேக், காலில் அணியும் செருப்பு, வீட்டின் இருக்கைகள், வாகனத்தின் இருக்கைகள், மொபைல் போன் வைக்கும் உறை, கையுறை இன்னும் பிற நமக்கு உடனே அறிந்து கொள்ள முடியாத பொருட்களில் மிருகங்களில் தோல், கொழுப்பு ஏதேனும் தன்னால் அல்லது தன் வீட்டினரால் பயன்படுத்தப்படுகின்றனவா? இல்லையா என உறுதி செய்ய இயலுமா?

அன்பர்களே, அவரவர் மதங்களில் உள்ள அனுமதிக்கப்பட்ட சடங்களுக்கு அந்தந்த மதம் சாராத எவரும் தடைகல்லாக இருந்து தடைவிதிக்க முற்படாதீர். அதற்குத்தான் என்றோ தெள்ளத்தெளிவாக இஸ்லாம் சொல்லி விட்டது. "பிற மத கடவுள்களை ஏசாதீர்கள். உம்மதம் உனக்கு; எம்மதம் எனக்கு" என்று 1400 வருடங்களுக்கு முன்பே என்றோ வர இருக்கும் மதக்கலவரங்கள் வராமல் தடுத்து முற்றுப்புள்ளி வைக்க சொல்லி விட்டது. நமக்குத்தான் அது இன்னும் அறிவுக்கு எட்டவில்லை.

ஆனால் ம‌னித‌, மிருக‌ க‌ழிவுக‌ளை ம‌னித‌ர்க‌ள் வ‌சிக்கும் இட‌ங்க‌ளில் கொட்டி அவ‌ர்க‌ளுக்கு எந்த‌ வித‌த்திலும் இடையூறு செய்ய‌ இஸ்லாம் ஒரு போதும் அனும‌திக்க‌வில்லை. அத‌ற்கு மாற்று வ‌ழிக்கு ந‌ல்ல‌ வ‌ழி காண‌ அது என்றுமே த‌டைக‌ல்லாக‌ இருந்த‌தில்லை.

Ahamed Arif (Arabic Institute of Commerce) said...

//அப்துல்மாலிக் சொன்னது…
அப்படி என்னா ஸ்பெஷ்லா மாட்டுக்கறி மீது மட்டும் அவ்வளவு காட்டம்?. ஆடு, கோழி கழிவுகளும்தான் நோய் உண்டாக்கும் வஸ்து, தடைசெய்யவேண்டும் என்றால் எல்லாத்தையும் செய்யவேண்டும். தத்தமது சுய லாபத்துக்காக ஒட்டுமொத்த சமுதாயத்தையே பகடைக்காயாக வைப்பது சரியல்ல, எல்லாவற்றிற்கும் ஒருவனிடத்தில் பதில் சொல்லவேண்டி வரும்...... //

விற்காமல் தூக்கிப் போடப்படும் அழுகிப்போன காய்கறிகள், கீரைகள் போன்றவற்றையும் இந்த லிஸ்டில் சேர்த்துக் கொண்டு காய்கறி வியாபாரத்தையும் தடை செய்து விட்டு எல்லோரும் 24 மணிநேரம் நான்ஸ்டாப் விரதம், நோன்பு வைத்துக் கொண்டு இருந்து விடலாம்..?

Unknown said...

Before the shop owner put all garbage in graveyard. Adirai municipality inform the show owner don’t pass all garbage in graveyard.

Unknown said...

Dear Brothers,

அதிரை சித்திக், Ahamed Arif,தாஜுதீன்,mansoor please Check this below message

//But the show owner informs and you can see the video he told before adirai chairman support him. The shop owner already in TMMK. But he is doing bad as per above message. Please clarify this matter two people are Muslim. I request to TMMK please take compromise to both muslim brothers. //

Adirai pasanga😎 said...

அஸ்ஸலாமு அலைக்கும்

இது நம்மிடையே இருக்கும் குறைந்த பட்ச ஒற்றுமைய்யும் குலைய சைத்தான் ஏற்படுத்தும் சதிகளுல் இதுவும் ஒன்றாகும். நம்மில் யாரும் யாரையும் அவசரப் பட்டு குறைக்கூறி பிரச்சனைகளை பெரிதாக்கி விட காரணமாக இ/ருந்து விட வேண்டாம்.

ஊரில் நாம் துவங்கி இருக்கும் அனைத்து முஹல்லா
கூட்டமைப்பு சார்பாக அனைவரும் ஒருங்கினைந்து தீர விசாரித்து தக்க நடவடிக்கை எடுப்பது நல்லது.
அதே சமயம் அல்லாஹ் அவனது தூதருக்கு கட்டுப்பட்ட தலைமை மற்றும் மக்கள் என்று இருந்தால்தான் நம்மை வேறு யாரும் ஒன்றும் செய்ய முடியது - இன்ஷா அல்லாஹ்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும், சகோதரர் Rose Khan,

நீங்கள் குறிப்பிட்டுள்ள குப்பை தொடர்பான பிரச்சினை அல்ல தற்போது ஊரில் நடந்திருப்பவை.. அதிரையில் மாட்டுகறி அறுக்கக்கூடாது, அதிரைக்கு வெளியில் அறுக்க வேண்டும் என்பது தான் அதிரை பேரூராட்சியின் தற்போதைய நிலைபாடு...

அதிரையில் ஏன் மாட்டுகறி அறுக்கக்கூடாது என்பதற்கு பசுவதை தடுப்புச்சட்டம், சுகாதார சீர்கேடு என்று நேற்று முன் தினம் ஹமீத் அவர்களின் கடைக்கு வந்த ஆபீஸர்கள் காரணம் கூறியுள்ளார்கள்..

அவர்கள் சொன்ன காரணத்தில் பசுவதை தடுப்புச்சட்டம் தமிழகத்தில் இல்லை...

சுகாதார சீர்கேடு என்று சொன்னால் ஒட்டுமொத்த தக்வா பள்ளி மார்கேட் பகுதி அனைத்தையும் காலி செய்யவேண்டிய சூழல், ஒர் மாட்டுக்கறி கடையால் மட்டும் சுகாதார சீர்கேடு என்பது வேடிக்கையே....

அதிரையில் மாட்டுக்கறி அறுக்கக்வோ விற்கவோ கூடாது என்பதற்கான தகுந்த காரணத்தையும், அதிரையில் அல்லாமல் வேறு எந்த ஊரில் மாடு அறுக்க வேண்டும் என்பதனையும் எழுத்துப்பூர்வமாக அதிரை பேரூராட்சி தெளிவுபடுத்தவேண்டும்...

////rose Khan சொன்னது…
Dear Brothers,

அதிரை சித்திக், Ahamed Arif,தாஜுதீன்,mansoor please Check this below message

//But the show owner informs and you can see the video he told before adirai chairman support him. The shop owner already in TMMK. But he is doing bad as per above message. Please clarify this matter two people are Muslim. I request to TMMK please take compromise to both muslim brothers. /////

நீங்கள் மீண்டும் ஒரு முறை இந்த வீடியோவை பாருங்கள்....

முன்னால் பேரூராட்சி தலைவி தாஹிரா அம்மாள் இருக்கும் போது மாட்டுகறி, அறுத்து விற்பதற்கு போரூராட்சியில் தீர்மானம் போட்டு அனுமதியளித்துள்ளார்கள் என்று தான் சொல்லியுள்ளார்...

அதிரையில் மாட்டுகறி அறுப்பது மற்றும் விற்பனை செய்வது தொடர்பான பிரச்சினையில் தமுமுக vs பேரூராட்சி என்று இணைத்து பேசுவது அறிவுடமையாக தெரியவில்லை.

தெள்ளத்தெளிவாக தெரிகிறது.... அரசியல் காழ்புணர்ச்சியால் நம்முடைய மார்க்கம் அனுமதித்த உணவு பொருளுக்கு தடையாக ஒரு சில சமூக விரோத கும்பல்களின் சூழ்ச்சி.... உண்மையான முஸ்லீம் எவனும் இதை அனுமதிக்க மாட்டான்..

இது தொடர்பாக அதிரை பேரூராட்சி நிர்வாகம் தெளிவான விளக்கத்தை மக்கள் மத்தியில் தெரிவிக்க கடமைபட்டுள்ளது....

Shameed said...

மாட்டுக்கறியை வைத்து யாரோ யாருக்கோ பல்ஸ் பாக்குறாங்கோ இதிலே மாடுகளுக்கு பதிலா மனுசங்கோ பலியாகி விட கூடாது!

Ebrahim Ansari said...

அன்பானவர்களே!

நேற்றுத்தான் ஸ்பெயினில் நடந்த வரலாற்றுச் சம்பவங்களைப் படித்தோம். இன்று இப்படி நமது ஒற்றுமைக்கு வேட்டுவைக்கும் தகவல் வந்திருக்கிறது.

இந்து சமய சகோதரர்களின் புனித இடங்களாக கருதப்படும் காசி, இராமேஸ்வரம், மதுரா, அயோத்தி முதலிய இடங்களில் கூட மாட்டுக்கறிக்கு தடை இல்லை. அவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளும் மக்கள் வாழும் பகுதிகளில் அதற்குரிய கடைகள் இருந்தே வருகின்றன.

ஆனால் அதிராம்பட்டினத்தில் தடை என்றால்?? எங்கோ ஏதோ இடிக்கிறது.

சகிப்புத்தன்மையும், ஒற்றுமையும், விட்டுக்கொடுத்தலும், அரவணைப்பும், தவறுகளை மன்னிக்கும்- மறக்கும் தன்மையும் இருந்தால் எல்லோருக்கும் நன்மையே விளையும்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு – ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வே!

ஊரின் அமைதியை முன்னிலைப்படுத்தி சொந்த விருப்பு வெறுப்புகளைப் புறந்தள்ளி புரியவேண்டியவர்கள் புரிந்து நடந்து கொள்ளவேண்டுகிறோம்.

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும்

இது நம்மிடையே இருக்கும் குறைந்த பட்ச ஒற்றுமைய்யும் குலைய சைத்தான் ஏற்படுத்தும் சதிகளுல் இதுவும் ஒன்றாகும். நம்மில் யாரும் யாரையும் அவசரப் பட்டு குறைக்கூறி பிரச்சனைகளை பெரிதாக்கி விட காரணமாக இ/ருந்து விட வேண்டாம்.

ஊரில் நாம் துவங்கி இருக்கும் அனைத்து முஹல்லா
கூட்டமைப்பு சார்பாக அனைவரும் ஒருங்கினைந்து தீர விசாரித்து தக்க நடவடிக்கை எடுப்பது நல்லது.
அதே சமயம் அல்லாஹ் அவனது தூதருக்கு கட்டுப்பட்ட தலைமை மற்றும் மக்கள் என்று இருந்தால்தான் நம்மை வேறு யாரும் ஒன்றும் செய்ய முடியது - இன்ஷா

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எனவே !
ஆளுமையில் இருப்பவர்களுக்கும்...
ஆளுமைக்குட்படுத்தப் பட்டவர்களுக்கும்...
இப்படியாங்க முட்டுவாங்க !?

பிரச்சினை ! அறுபடுவதா ? அறுப்பவரா ? அல்லது வெறுப்பவரா !? அறுக்கப்படும் இடமா !?

பாடி ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக்'ங்கிற கதையாவுல இருக்கு !!

வேண்டாமே... ! ப்ளீஸ் !

Yasir said...

மாட்டின் பெயரை உபோயிகித்து நம் சமுதாயத்த்தை மாட்டிவிடாமல் இருந்த்தால் சரிதான்....

சேக்கனா M. நிஜாம் said...

சுகாதாரத்துறை அதிகாரிகளே !

“சுகாதாரம்” என்ற ஒரு காரணத்தைக் காட்டி “அந்த” இடத்தில் அறுக்க வேண்டாம் என்றால்,

1. அவ்விடத்தில் அறுக்கும் மற்றவைகள் சுகாதாரமான முறையில் அறுக்கப்படுகிறதா ?

2. அல்லது அறுக்கப்படுகிற இடம்தான் சுகாதாரத்துடன் காணப்படுகிறதா ?

3. “கார்பைட்” இரசாயணம் கலந்த ஏரளாமான மாம்பழங்கள் ஊரில் பஸ் நிலையம் அருகே விற்பனை செய்யப்படுகிறதே ! இதை தடுக்கத்தான் முடியுமா ?

4. சர்பத் ஸ்டால்களில் இனிப்பை கூட்டுவதற்காக “ஜாங்கிரின்” என்ற இரசாயணம் கலந்தும், அழுகிய பழங்கள் மூலம் தயாரிக்கப்படுகிற ஜூஸ்கலை விற்பனை செய்யும் வியாபார நிறுவனங்களை தடை செய்ய தில்லு இருக்கா ?

5. உணவு விடுதிகளில் உணவுப்பொருட்களில் சுவையை கூட்ட “அஜினோமோட்டோ” கலந்து விற்பனை செய்யப்படுகிறேதே ! இதை தடுக்கத்தான் முடியுமா ?

6. பலசரக்கு கடைகளில் விற்பனை செய்யும் உணவுப் பொருட்களில் ஏகப்பட்ட கலப்படங்கள் உள்ளதே இவற்றை கண்டுபிடித்து தடுக்கத்தான் முடியுமா ?

7. கொசுத் தொல்லை ஏராளமாக ஊரில் உள்ளதே. இதை ஒழிக்க முடியுமா ?

இவற்றை முதலில் விளக்கிவிட்டு எடுங்க பாப்போம் உங்கள் நடவடிக்கையை...................

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு