முஸ்லிம்களை ஒழிக்க திட்டம் !


கிறிஸ்தவர்கள் ஸ்பெயினில் மேற்கொண்ட முறைமை இன்று இந்தியாவில் கடைபிடிக்கப்படுகின்றது.

கி.பி 712 லிருந்து கி.பி 1492 வரை ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி. 780 ஆண்டுகள் அந்த மண்ணில் நீதி மிக்கதொரு ஆட்சி நிலைத்திருந்தது.

இன்றைக்கும் ஸ்பெயின் நாட்டு மக்கள் பேசிடும் மொழியில் அரபி மொழி அப்படியே விரவி வரக் கேட்கலாம். அவர்களுடைய பண்பாடு அந்த இஸ்லாமியப் பண்பாட்டின் அரவணைப்பிலிருந்து இன்றும் விடுபடவில்லை. அடுத்தடுத்து அந்த மக்களை ஆட்கொண்ட ஐரோப்பிய பண்பாடு இந்த இஸ்லாமியப் பண்பாட்டின் ஆதிக்கத்தை அசைக்க முடிந்ததே தவிர அழிக்க முடியவில்லை.

இஸ்லாம் வகுத்து வழங்கிய சமூகப் பாதுகாப்புத் திட்டம், பொருளாதாரப் பாதுகாப்புத் திட்டம், ஸ்பெயின் நாட்டு மக்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல, ஐரோப்பாவின் சமூக-பொருளாதார பாதுகாப்புத் திட்டத்திலும் ஊடுருவி நிலைத்து நிற்கின்றது. இஸ்லாம் கற்றுத்தந்த அரசியல் இங்கிதங்களின் இதத்தை அவர்கள் இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த ஸ்பெயினில் இன்று ஒரு முஸ்லிம்கூட இல்லை எனலாம்.

780 ஆண்டுகள் ஆட்சி செலுத்திய மண்ணில், ஆட்சி செலுத்திய மார்க்கத்தைச் சார்ந்த ஒருவரும் இல்லை. இது எப்படி? பிற்றை நாட்களில் முஸ்லிம்களை வேரோடும், வேரடி மண்ணோடும் களைந்திட வேண்டும் என்பதை இலட்சியமாக ஆக்கிக் கொண்டு அங்கே ஒரு கூட்டம் திட்டம் தீட்டிற்று. அந்தத் திட்டம் ஓராண்டு திட்டமோ, ஒரு ஐந்தாண்டு திட்டமோ, ஒரு ஐம்பதாண்டு திட்டமோ அல்ல. அது 120 ஆண்டுகாலத் திட்டம்.

இப்படியொரு நீண்டகாலத் திட்டத்தைத் தீட்டி அதன் வழியில் அந்தச் சதிக் கும்பல் செயல்பட்டபோது, தன் திட்டத்தைத் துல்லியமாக நிறைவேற்றியபோது.. 1612-இல் ஸ்பெயினில் கடைசி முஸ்லிமும் தன் வாழ்வை இழந்தான். இந்தக் காலக்கட்டத்தில்.. அதாவது ஸ்பெயினில் முஸ்லிம்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, முஸ்லிம்கள் இந்த உலகில் அநாதையாக இருந்து கொண்டிருக்கவில்லை. இந்தக் காலக்கட்டத்தில் உலகத்தில் நாகரிகமடைந்த பகுதிகள் அனைத்தும் முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ்தான் இருந்தன.

துருக்கி முஸ்லிம்கள் கான்ஸ்டாண்டி நோபிள் நாட்டை 1553-இல் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார்கள். பால்கான் தீபகற்பம் முழுவதும் முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. எகிப்தில் பணபலமும் படைபலமும் நிறைந்ததொரு ஆட்சியை முஸ்லிம்கள்தான் நடத்திக் கொண்டிருந்தார்கள். இந்தியத் துணைக்கண்டமோ முகலாயர்களின் ஆட்சியின் கீழ்.

இப்படி, உலகில் ஒரு பெரும் நிலப்பரப்பை முஸ்லிம்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தபோதே.. ஸ்பெயினிலிருந்த முஸ்லிம்கள் சின்னாபின்னமாகத் துண்டாடப்பட்டார்கள். கூட்டாகக் கொலை செய்யப்பட்டார்கள். இறுதியில் பூண்டோடு ஒழிக்கப்பட்டார்கள். உலகில் நீண்ட நெடியதொரு நிலப்பரப்பை முஸ்லிம்கள் ஆட்சி செய்துகொண்டிருக்கும்போதே.. ஸ்பெயின் வாழ் முஸ்லிம்கள் எப்படி நசுக்கப்பட்டு, விரட்டப்பட்டு, வெட்டப்பட்டு, தடம் தெரியாமல் ஆக்கப்பட்டார்கள்?

இதை முஸ்லிம்கள் ஆய்வு செய்தார்களோ இல்லையோ, இந்தியாவில் உள்ள இந்து வெறியர்கள் ஆய்வு செய்தார்கள்! இந்த ஆய்வை இவர்கள் நடத்தியதும் அதன் அடிப்படையில் இந்திய முஸ்லிம்களைப் பூண்டோடு அழிக்கத் திட்டம் தீட்டியதும் இப்போதல்ல. 1920 முதல் 1930 வரை. அதாவது..

இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் உலகில் முஸ்லிம் அரசுகளால் சூழப்பட்டிருக்கும்போதே அவர்களை அழிப்பது எப்படி என்பதைப் பற்றி ஆய்வு செய்யவும், திட்டம் தீட்டவும் 10 ஆண்டுகள் எடுத்துக்கொண்டனர். இந்த இந்து வெறியர்கள் ஸ்பெயினில் முஸ்லிம்களை அழிக்க கங்கணங்கட்டிக் கொண்டு செயல்படுத்திட முன் வந்தார்கள்.

இதில் மிகவும் வருந்தத்தக்க செய்தி என்னவெனில், இன்றைக்கு இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு ஸ்பெயினில் முஸ்லிம்கள் அழிக்கப்பட்ட வரலாற்றையும் தெரியாது, தங்களைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள சதியையும் தெரியாது.

முஸ்லிம்களில் உள்ள சிந்தனையாளர்கள் இதைப் பற்றிச் சிந்திப்பார்கள், இந்தியாவில் வாழுகின்ற முஸ்லிம்கள் பூண்டோடு ஒழிக்கப்படுமுன் அதை முறியடிக்க முன் வருவார்கள், அதற்கான செயல் திட்டத்தை வகுத்திடுவார்கள் என்ற நல்ல நோக்கத்தோடுதான் இந்தச் சிற்றேடு உங்கள் கைகளில் சமர்க்கப்படுகின்றது.

ஸ்பெயினில் முஸ்லிம்கள் அழிக்கப்பட்ட வரலாறு

இந்தியாவில் இன்று இருப்பதைப் போல் அன்று ஸ்பெயினில் வாழ்ந்த முஸ்லிம்கள் மூன்று வகைப்படுவார்கள்:

1. அரபுகளின் கிளைஞர்கள்

2. அரபு முஸ்லிம்களுக்கும் ஸ்பெயினில் இஸ்லாத்தைத் தழுவியர்களுக்கும் பிறந்த குழந்தைகள்.

3. கிறிஸ்தவர்களாக இருந்து இஸ்லாத்தின் சீரிய கொள்கைகளால் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள்.

முஸ்லிம்களின் கையிலிருந்த கடைசி பகுதியான 'கிரனடா' வீழ்ந்தவுடன் அரபுகளின் கிளைஞர்களாக இருந்த முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் துனீஸியா, மொராக்கோ போன்ற பகுதிகளுக்குக் குடிபெயர்ந்து போய்விட்டார்கள். இப்படி ஸ்பெயினிலிருந்து குடி பெயர்ந்து சென்ற அத்தனை அரபு முஸ்லிம்களும் தாங்கள் போய்ச் சேர்ந்திட வேண்டும் என்று விரும்பிய பகுதிகளுக்குப் போய்ச் சேர்ந்து விடவில்லை. அவர்களில் ஒரு பெரும் பகுதியினர் கிறிஸ்தவர்களால் வழியிலேயே கொலை செய்யப்பட்டார்கள்.

ஸ்பெயினிலேயே தங்கிவிட்ட அரபுகளின் கிளைஞர்களான முஸ்லிம்களை-"வெளிநாட்டிலிருந்து ஊடுருவியர்கள்" 'ஸ்பெயினை அலைக்கழித்தவர்கள்' என்றெல்லாம் குற்றம்சாட்டி பாமர மக்களின் கோபத்தை அந்த முஸ்லிம்களின் மேல் பாய்ச்சினார்கள்.

ஏனைய முஸ்லிம்கள், அதாவது.. அரபு முஸ்லிம்களுக்கும் ஸ்பெயினில் இஸ்லாத்தைத் தழுவியர்களுக்கும் இடையே பிறந்த முஸ்லிம்கள்- கிறிஸ்தவர்களாக இருந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள்- இவர்களெல்லாம் ஸ்பெயினிலேயே எப்படியும் வாழ்ந்து விடலாம் என்ற எண்ணத்தில் அங்கேயே தங்கி விட்டார்கள்.. இவர்களின் இந்த எண்ணத்தை வலுப்படுத்துகின்ற வகையில் - ஸ்பெயினில் ஆட்சி செய்து கொண்டிருந்த கிறிஸ்தவ மன்னர் ஓர் அறிவிப்பைச் செய்தார். அப்போது ஸ்பெயினை ஆண்டு கொண்டிருந்தவர் 'பெர்டினன்டு' என்ற கிறிஸ்தவ மன்னர்.

கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களை அழிப்பதிலேயே கவனமாக இருந்தார்கள் என்றாலும் கிறிஸ்தவ மன்னரின் இந்த உறுதி மொழியை முஸ்லிம்கள் அப்படியே நம்பினார்கள். இன்றைக்கு இந்திய ஆட்சியாளர்கள் முஸ்லிம்களுக்குத் தந்து கொண்டிருக்கும் உறுதி மொழியைப் போன்றதே இந்த உறுதி மொழியும்! இதை அன்றைய ஸ்பெயின் வாழ் முஸ்லிம்கள் புரிந்து கொள்ளவில்லை. கிறிஸ்தவ மன்னர் தந்த உறுதிமொழி வேறொன்றுமில்லை. அது இதுதான் 'எல்லா மதத்தவர்களுக்கும் சம உரிமையுண்டு, பாதுகாப்பு உண்டு' இந்த உறுதிமொழி உயிருடன் இருக்கும்போதே.. கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களை ஆங்காங்கே கொலை செய்துகொண்டே இருந்தார்கள்.

திட்டமிட்டுச் செய்யப்பட்ட இந்தக் கொலைகள் ஏதோ எப்போதோ நடக்கின்ற சிறு தவறுதான் என்ற அளவில் பிரச்சாரம் செய்யப்பட்டன. இந்தக் கொலைகள் முஸ்லிம்களைப் பூண்டோடு ஒழிக்கத் தீட்டப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதி என்பது திறமையோடு மறைக்கப்பட்டது.. இந்தத் தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது 50 ஆண்டுகள் தொடர்ந்து நடந்தன.

ஆரம்ப நாட்களில் முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட போது, அவர்கள் இயன்ற வரை எதிர்த்துப் போராடினார்கள். போகப் போக எதிர்ப்பின் வேகம் குறைந்தது. பின்னர் எதிர்ப்பே இல்லை என்றானது.

ஆரம்ப நாட்களில் அவர்கள் எதிரிகளை எதிர்த்து நின்றார்கள் என்றாலும் பெருமளவில் அழிந்தார்கள். எதிர்ப்பு கடுமையாக இருந்த இடங்களில் மன்னர் பெர்டினன்டின் பட்டாளம் முஸ்லிம்களைப் பலி கொண்டது. முடிவில் மன்னரின் பட்டாளமே முன்னின்றது.

அன்று ஸ்பெயினில் நடந்த இந்த வரலாற்று நிகழ்வுகளை இந்தியா விடுதலையடைந்த 1947 ஆம் ஆண்டு முதல் இன்று வரை நடந்து வரும் முஸ்லிம் கொலைகளின் வரலாற்றோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.

இவையாவும் ஒன்று போல் ஒரே திட்டத்தின் கீழ் நடந்து வருவதைக் காணலாம். அன்றைக்கு ஸ்பெயினில் கிறிஸ்தவ சதிக்கூட்டம் திட்டம் போட்டு முஸ்லிம்களைக் கொலை செய்து கொண்டிருக்கும் போது, ஸ்பெயினை ஆண்டு கொண்டிருந்த பெர்டினன்ட் அரசரின் கிறிஸ்தவ அரசு முஸ்லிம்களை அரசுப் பணிகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அகற்றிக் கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை வேரறுக்க பின்வரும் வழி முறைகளைப் பின்பற்றிற்று அரசு. அவைகளாவன:

1) அரபு மொழி நிர்வாகத் துறையிலிருந்து முற்றாக அகற்றப்பட்டது,

2) (மஸ்ஜித்) பள்ளிவாயில்களோடிருந்த கல்விக் கூடங்களில் (மதரசாக்களில்) மார்க்கக் கல்வியை மட்டுந்தான் போதிக்க வேண்டும் என்றும், அவர்கள் ஏற்கனவே போதித்துக் கொண்டிருந்த வரலாறு, விஞ்ஞானம், கணக்கு போன்ற பாடங்களைக் கற்றுத் தரக்கூடாது என்று கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

3) அரசின் நிர்வாகத்தின் கீழ் நடந்த பாடசாலைகளில் முஸ்லிம்களின் வரலாற்று திரிக்கப்பட்டு 'அவர்கள் கொடுமையாளர்கள்' என்று போதிக்கப்பட்டது. முஸ்லிம்கள் ஸ்பெயினை ஆண்ட காலம் 'இருண்ட காலம்' என இட்டுக்கட்டப்பட்டது.

4) முஸ்லிம்களின் வீடுகள் அடிக்கடி காவல் துறையினராலேயே சூறையாடப்பட்டன. இதற்கு 'அவர்கள் வீடுகளில் ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கிறார்கள்' 'வீடுகளில் இரகசியக் கூட்டங்களைக் கூட்டினார்கள்' – என்றெல்லாம் காரணங்கள் கூறப்பட்டன.

5) உண்மையாக அரபு நாட்டிலிருந்து வந்து ஸ்பெயினில் குடியேறிய அரபு நாட்டு முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களின் பரம வைரிகள் ஸ்பெயினை அழித்தவர்கள் என்பன போன்ற அவதூறுகளை இடைவிடாமல் பிரச்சாரம் செய்தார்கள். இந்தப் பொய்ப் பிரச்சாரங்களால் பாமர மக்கள் 'முஸ்லிம்கள் வெட்டி வீழ்த்தப்பட வேண்டிய வீணர்கள்' என்ற முடிவுக்கு வந்தனர்.

6) கிறிஸ்தவர்களிலிருந்து இஸ்லாத்திற்கு மதம் மாறிப் போனவர்கள் மீண்டும் கிறிஸ்தவத்திற்கு வந்துவிடும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

7) அரபு நாட்டு முஸ்லிம்களுக்கும் ஸ்பெயினில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கும் பிறந்த முஸ்லிம்கள் 'சட்ட விரோதமாகப் பிறந்தவர்கள்' என்று அறிவிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்கள் அவர்கள் மீண்டும் கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்றப்பட்டார்கள்.

8) இஸ்லாமிய முறைப்படி செய்யப்பட்ட திருமணங்கள் 'மீண்டும் அரசாங்கத்தில் பதிவு செய்யப்படவேண்டும்' என்று சட்டம் வந்தது. பின்னர் இஸ்லாமிய முறைப்படிச் செய்யப்பட்ட திருமணங்கள் செல்லாது' என்று அறிவிக்கப்பட்டது.

9) ஸ்பெயினில் வாழ்ந்த முஸ்லிம்கள் கடைசி முயற்சியாக தங்கள் தலைமுறையை இஸ்லாத்தில் தக்கவைத்துக் கொள்ள தங்கள் குழந்தைகளுக்கு அடிப்படை மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொடுத்தார்கள். ஆனால் காலப் போக்கில் தங்களுக்கேற்பட்ட அளவுக்கதிகமான இழப்பைக் கண்டு நிலை குலைந்தனர். 'இஸ்லாமிய முறைப்படி செய்யப்பட்ட திருமணங்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில், முஸ்லிம்கள் முதலில் இஸ்லாமிய முறைப்படி தங்கள் திருமணங்களைத் தங்கள் இல்லங்களில் வைத்து இரகசியமாகச் செய்து கொள்வார்கள்.

பின்னர் அரசின் அதிகாரிகள் முன் அரசு விதிகளுக்கேற்ப ஒரு முறை சடங்குகளை நிறைவேற்றுவார்கள். காலப்போக்கில் முஸ்லிம்கள் இன்னும் இரகசியமாக இஸ்லாமிய முறையைப் பின்பற்றுகிறார்கள் என்பதை அறிந்த அதிகாரிகள், அந்த திருமணங்களைக் கண்டுபிடித்துத் தண்டனைகள் தந்தார்கள்.

ஆகவே முஸ்லிம்கள் இஸ்லாமிய முறைப்படித் திருமணங்கள் செய்வதை நிறுத்தினார்கள். முஸ்லிம்கள் இத்தகைய கெடுபிடிகளைச் சந்திக்க இயலாமல் திக்குமுக்காடிக் கொண்டிருந்தபோது, பல முஸ்லிம்கள் இஸ்லாத்தை விட்டு கிறிஸ்தவர்களாகி விட்டார்கள் என்ற பிரச்சாரம் முழுவேகத்தில் அவர்களை வந்து தாக்கிற்று.

விரக்தி, பீதி - இவை முஸ்லிம்களை முழுமையாக ஆட்கொண்டன. கற்றறிந்த முஸ்லிம்கள் ஸ்பெயினைக் காலி செய்து விட்டு துனீசியா, மொராக்கோ போன்ற நாடுகளில் குடியேறினர். அங்குள்ள முஸ்லிம்கள் அவர்களை அனுதாபத்தோடு அரவணைத்துக் கொண்டார்கள்.

உலமாக்கள் சிலர்தான் ஸ்பெயினின் முஸ்லிம்களைக் காப்பாற்றிடும் முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஆனால், மார்க்க விதிமுறைகளை மட்டுமே கற்று வைத்திருந்த இவர்களால் அந்த முஸ்லிம்களைக் காப்பாற்றிட இயலவில்லை. அன்றைய முஸ்லிம்களைக் காப்பாற்றிட அரசியல் அறிவு, உலக நிலை பற்றிய அறிவு, முஸ்லிம்களைச் சுற்றிப் பின்னப்பட்டிருந்த சதியின் விபரம், நிலையான தன்மை, இஸ்லாத்தைப் பற்றிய முழுமையான அறிவு-இவையாவும் தேவைப்பட்டன. இவற்றோடு கிறிஸ்தவ கொலை வெறிக் கும்பலைச் சமாளித்து முஸ்லிம்களின் உயிரைக் காப்பாற்ற ஓர் வலுவான தற்காப்புப் படையும் தேவைப்பட்டது.

மார்க்க நெறிமுறைகளை மட்டுமே கற்று வைத்திருந்த அந்த உலமாக்களிடம் இவற்றில் எதுவும் இருக்கவில்லை. ஸ்பெயினிலிருந்து வெளியேறி துருக்கி போன்ற நாடுகளில் குடியேறிய முஸ்லிம்கள் அந்த நாட்டு ஆட்சியாளர்களிடம் ஸ்பெயினின் முஸ்லிம்களைக் காப்பாற்றச் சொல்லி முறையிட்டிருக்கலாம்.. ஆனால் அவர்கள் - ஸ்பெயினிலிருந்து வெளியேறி துருக்கி போன்ற நாடுகளில் குடியேறிய முஸ்லிம்கள் - அந்த முஸ்லிம் ஆட்சியாளர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் முடக்கிப் போட்டார்கள். அந்த முஸ்லிம் ஆட்சியாளர்களிடம், நீங்கள் ஸ்பெயினில் வாழ்ந்திடும் முஸ்லிம்களைக் காப்பாற்றிட ஏதேனும் செய்தால் அதைக் காரணங்கள் காட்டி அங்குள்ள முஸ்லிம்களை ஆட்சியாளர்கள் அதிகமாகக் கொடுமைப் படுத்துவார்கள் என்று கூறி அந்த முஸ்லிம் ஆட்சியாளர்களைத் தடுத்தார்கள்.

அன்றைக்கு ஸ்பெயின் இருந்த சூழ்நிலையில் ஓர் 'அஹமது ஷா அப்தாலி' தேவைப்பட்டார். ஆனால் அப்படி யாரும் அன்றைக்கு இருக்கவில்லை. காலப்போக்கில் ஸ்பெயின் முஸ்லிம்கள் தங்கள் தனித்தன்மைகள் அனைத்தையும் இழந்தார்கள். பின்னர் முஸ்லிம்கள் என்ற நிலையை இழந்தார்கள். எஞ்சி இருந்த மார்க்க அறிஞர்கள் தங்களுக்கு வேலை இல்லை என்பதை உணர்ந்தார்கள், வெளிநாடுகள் நோக்கி நடந்தார்கள்.

இப்படிக் கடைசி முஸ்லிமும் ஸ்பெயினைக் காலி செய்த ஆண்டுதான் கி.பி 1612.

இந்திய முஸ்லிம்களின் நிலை

ஸ்பெயினில் முஸ்லிம்களைப் பூண்டோடு ஒழிக்க தீட்டப்பட்ட நீண்ட காலத்திட்டத்தைப் போன்றதொரு திட்டம் இந்தியாவிலும் தீட்டப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட ஸ்பெயினை விட அதிகமான துல்லியமும் துரிதமும் கடைப்பிடிக்கப்படுகின்றன.

இந்தியாவில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துபவர்களுக்கும் அன்று ஸ்பெயினில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துபவர்களுக்கும் இடையே ஒரு வேற்றுமை. இவர்கள் ஸ்பெயினில் இந்தத்திட்டத்தைச் செயல்படுத்தியவர்களைவிட, நயவஞ்சகர்களை விட, நயவஞ்சகத் தனத்திலும் - நம்பவைத்து ஏமாற்றுவதிலும் கை தேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள்.

இந்தியாவில் உருது மொழி முஸ்லிம்களின் மொழியாகக் கருதப்படுகின்றது. இஸ்லாமிய இலக்கியங்கள் நிறைந்து கிடைப்பதாலேயே இது முஸ்லிம்களின் தொழி எனக் கருதப்படுகின்றது. இந்த உருது மொழியை இந்தியாவை விட்டு வெளியேற்ற எத்தனையோ வியூகங்களை வகுத்துச் செயல்படுத்தினார்கள்.

முஸ்லிம்களைக் காப்பாற்றிட வேண்டும் என்று எந்த முஸ்லிமாவது விரும்பினால் அவன் உடனேயே 'வகுப்புவாதி' என முத்திரை குத்தப்படுகின்றான். எந்த முஸ்லிமாவது இஸ்லாத்தை விட்டுக் கொடுத்து உயர்சாதி இந்துக்களுக்குப் பக்க தாளம் போட்டால் அவன் 'தேசிய முஸ்லிம்' எனப் போற்றப்படுகின்றான்.

ஆங்கிலம் கற்ற முஸ்லிம்கள் பிராமணர்களோடு கை கோர்த்துக் கொண்டு அவர்களைப் போல வாழ ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் குடியிருப்பதைவிட இந்துக்கள் வாழும் பகுதிகளில் குடியமர்வதையே விரும்புகின்றார்கள். பாமர முஸ்லிம்கள் சேரிகளிலும் சாலையோரங்களிலும் வாழ்கின்றார்கள். இவர்கள் இஸ்லாத்தை இதய சுத்தியோடு பின்பற்றும் உணர்வுள்ள முஸ்லிம்கள்.

இவர்கள் தாம் ஒவ்வொரு வகுப்புக் கலவரங்களின் போதும் அழிவுக்கும் இழிவுக்கும் ஆட்படுகின்றார்கள். இவர்கள் மொத்த முஸ்லிம்களில் 95 சதவிகித்தினர். மேட்டுக்குடியில் குடியிருக்கும் மெத்தப் படித்த மேதாவி முஸ்லிம்கள் 'இந்தப் பாமர முஸ்லிம்கள்தான் கலவரங்களுக்குக் காரணம்' என்ற அடிக்கடி ஆள்காட்டி இந்து வெறியர்களின் திருப்தியைப் பெறத்துடிக்கின்றனர். படித்த முஸ்லிம்களுக்கும் பாமர முஸ்லிம்களுக்கும் இடையேயுள்ள இடைவெளி இணைக்க இயலாத ஒன்றாகவே இருந்து வருகின்றது.

பாமர முஸ்லிம்கள் கூட்டம் கூட்டமாக, கிராமம் கிராமமாகக் கொலை செய்யப்படுகின்றார்கள். மேட்டுக்குடியில் வாழும் படித்த முஸ்லிம்கள் 'இதை பாமர முஸ்லிம்கள் தங்கள் கைகளாலேயே தேடிக்கொண்டது' என்று பசப்புகின்றார்கள். எதுவும் செய்ய இயலாத முஸ்லிம் தலைமை, முறையிட இடம் தெரியாமல் திண்டாடுகின்றது.

இந்தியாவில் பொட்டுப் பூச்சிகளைப் போல முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுகின்றார்கள் 'இது அநியாயம், அவர்களைக் காப்பாற்றிட வேண்டும்' என்று உலக முஸ்லிம்கள் பேசினால் 'ஐயோ! இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில், தலை இட்டுவிட்டார்கள்' என்று உரக்க முழங்கி அவர்களின் அபயக் குரலை அடக்கிப் போட்டு விடுகிறார்கள். ஆனால் இங்கே உள்நாட்டு விவகாரம் முஸ்லிம்களைக் கூட்டமாகக் கொலை செய்வதும், அந்தக் கொலைவெறிக் கும்பலுக்கு ஆதரவு தருவதும் தான்.

இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் வரலாறு திட்டமிட்டே சிதைக்கப்படுகின்றது. "குரூரமானவர்கள் இந்த உலகில் உண்டு என்றால் அவர்கள் முஸ்லிம்கள்தான்" எனப் பள்ளிக்குப் பாடம் பயிலவரும் பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை விதைக்கின்றார்கள். இந்த இந்திய மண்ணின் விடுதலைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட முஸ்லிம் வீரர்கள், தியாகிகளின் பெயர்கள் முழுமையாக இருட்டிப்புச் செய்யப்பட்டுள்ளன.

ஆங்கில ஏகாதிபத்தியத்தைத் திணற அடித்து, 'சரணடைய மாட்டேன்' சாவை சலனமின்றி ஏற்றுக் கொள்வேன்' என்று நெஞ்சுயர்த்தி நின்று தன் உயிரைத் தந்த உண்மை வீரன் தியாகி திப்பு சுல்தானின் பெயர் இந்திய இளைய தலைமுறையினருக்குத் தெரியாமல் போய்விடும்படி செய்கிறார்கள்.

ஆங்கிலேயனுக்கு அடிமை சேவகம் செய்து இந்தியர்களைக் காட்டிக்கொடுத்த் துரோகிகள் - ' தியாகிகள்' எனப் போற்றப் படுகிறார்கள். தனது ஓய்வு ஊதியத்திற்காகப் போராடிய 'தான்தியா தோப்பே', தான் தத்தெடுத்த மகன் ஆட்சியாளனாக ஆக்கப்பட வேண்டும் என்று போராடிய 'ஜான்சி ராணி லட்சுமி பாய்' இவர்களெல்லாம் இந்தியா முழுவதும் 'தேசியத் தலைவர்கள்' எனவும் , விடுதலைப் போர்வீரர்கள் எனவும் பிரச்சாரம் செய்யப்படுகிறார்கள்.

விஞ்ஞானம், மருத்துவம் இன்னுமுள்ள துறைகள் இவற்றில் எத்துனைதான் சாதனைகளை முஸ்லிம்கள் சாதித்துக் காட்டினாலும் அவர்களுக்கு விருதுகளோ, பரிசுகளோ தரப்படுவதில்லை. அவர்கள் விரக்திக்கே உள்ளாக்கப்படுகிறார்கள்.

இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்குக் காலமெல்லாம் விசுவாசமாக இருந்த 'மௌலானா ஆஸாத்' 'ரபீ அஹ்மத் கித்வாய்', 'செய்யத் மஹ்மூத்', 'ஹுமாயூன் கபீர்' போன்றவர்களின் பெயர்களை நினைவு கூர ஒரு தெருவின் பெயர் கூட இல்லை.

ஆனால் உயர் ஜாதிக்காரர்களில் நாட்டுக்கு எதுவுமே செய்யாதவர்களின் எத்தனையோ வீதிகள்! சாலைக்கள்!! நகரங்கள்!!!

வரலாற்றைத் திருத்தி - திரித்து - எழுதி, அதனை முழுமையாக முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டார்கள். இதன் விளைவாக நித்தமும் முஸ்லிம்கள் கொலை செய்யப்படுகின்றார்கள்.

இராணுவம், காவல் துறை, அரசு நிர்வாகம் இவற்றில் முஸ்லிம்கள் மெல்ல மெல்ல புறக்கணிக்கப்பட்டு வருகின்றார்கள். இத்தனைக்கும் இலக்காக்கி நிற்கும் முஸ்லிம்களைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை.

இதில் வேதனைக்குரிய செய்தி என்னவெனில் எத்தனையோ இயக்கங்கள் முஸ்லிம்களுக்கிடையோ தோன்றுகின்றன. இவற்றில் எதுவும் முஸ்லிம்களைக் காப்பாற்ற முன்வரவில்லை. அத்தனையும் இஸ்லாத்தைக் காப்பாற்ற இருப்பதாகவே அறிவிக்கின்றன.

இந்தியாவில் முஸ்லிம்களே இல்லை என்றாகி விட்டால் இஸ்லாம் எப்படிக் காப்பாற்றப்படும்? ஸ்பெயினில் முஸ்லிம்களே இல்லை என்றாக்கிவிட்டார்கள். ஆகவே அங்கே இஸ்லாம் இல்லை என்றாகிவிட்டது!
 • முஸ்லிம்களைத் திட்டம்போட்டுக் கொலைசெய்தது..
 • முஸ்லிம்களின் சொத்துக்களையும், தொழில்களையும், வியாபாரங்களையும் குறிவைத்துத் தாக்கி அவர்களை ஓட்டாண்டி ஆக்கி விட்டது,
 • காவல் துறை, இராணுவம் அரசு நிர்வாகம் இவற்றில் அவர்கள் புறக்கணிக்கப் பட்டுவிட்டார்கள்..
 • மக்கள் தொடர்பு கருவிகளான வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் வகுப்புவெறி இந்துக்களை ஊடுருவ விட்டது.
 • அரசின் நிர்வாக மொழிகளில் ஒன்றாக இருந்த உருது மொழியை 1948-1949 இல் ஒரே இரவில் அது இனி நிர்வாக மொழிகளுள் ஒன்றாக நீடிக்காது என அறிவித்துவிட்டது. அது முதல் உருது மொழிக் கல்விக் கூடங்களை மூடியது.
 • முஸ்லிம் தனியார் சட்டத்தை 'பொது சிவில் சட்டம்' என்ற முழக்கத்தைக் கொண்டு சின்னா பின்னப்படுத்தியது.
 • வரலாற்றைத் திருத்தி எழுதி முஸ்லிம்கள் இந்த நாட்டுக்குச் செய்த தியாகங்களை மறைத்து அவர்களை எதிரிகளாகக் காட்டியது.
 • முஸ்லிம்களினன் விரோதிகளைத் தேசிய தலைவர்களாகக் காட்டியது.
 • முஸ்லிம்கள் செய்யும் ஏற்றுமதி இறக்குமதி வாணிபத்தைக் 'கடத்தல்' என முத்திரை குத்தி அவர்கள் செய்யும் தொழில்களாலேயே அவர்களைத் தேச விரோதிகள்' என விஷ வித்தை விதைத்தது.
 • முஸ்லிம்கள் விரும்பாத தலைமைகளை அவர்கள் பால் திணித்தது.
 • முஸ்லிம்கள் இந்து தலைமைக்குத் தலையசைத்துப் போகும்படி செய்தது.

இப்படி முஸ்லிம்களை அழிக்கும் திட்டம் முழுமையாக்கப்பட்டுவிட்டது.

இந்தத் திட்டத்தை விதையாகத் தூவியவர்கள் அறுவடைக்காகக் காத்திருக்கின்றார்கள். அறுவடைக் காலம் வருமுன் இந்தச் சதித்திட்டங்களை முறியடிக்க முஸ்லிம்கள் முன்வரவில்லை என்றால் அன்றை ஸ்பெயினைப் போல் இந்தியாவும் ஆகிவிடும்.

இன்னொன்றையும் நினைவுபடுத்த விரும்புகின்றோம். இஸ்லாமும் அதனைப் பின்பற்றும் முஸ்லிம்களும் பாமர முஸ்லிம்களால் தான் வரலாறு நெடுகிலும் காப்பாற்றப்பட்டிருக்கின்றார்கள். இந்தப் பாமர முஸ்லிம்கள்தான் முஸ்லிம் மக்கள் தொகையில் 95 சதவிகித்தினர். வசதியான முஸ்லிம்கள் மொத்த முஸ்லிம் மக்கள் தொகையில் 5 சதவிகிதம் மட்டுமே. இவர்கள் பெரும்பாலும் பாமர முஸ்லிம்களைக் குறை காண்பதிலும் உயர்ஜாதி இந்துக்களுக்கு துதிபாடுவதிலும்தான் தங்கள் காலத்தைக் கழித்து வருகிறார்கள்.

இவர்கள் இஸ்லாத்தைப் பற்றி அதிகமாகக் கவலைப்படுவார்கள். ஆனால் முஸ்லிம்களைப் பற்றி அதிகமாகக் கவலைப்படமாட்டார்கள். ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.. மதம் அதனைப் பின்பற்றுபவர்களைப் பாதுகாப்பதில்லை, மாறாக மதத்தைப் பின்பற்றுபவர்கள் தாம் அதனைக் காப்பாற்ற வேண்டும்.

இந்தியாவில் இஸ்லாம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் முஸ்லிம்கள் காப்பாற்றப்பட்டாக வேண்டும்.

இது இயலாத ஒன்றல்ல, முஸ்லிம்கள் முன்வந்தால்!

- வி.டி. இராஜசேகர்

24 கருத்துகள்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

வேதனையோடு விழிப்பூட்டும் தகவல்கள்!

//முஸ்லிம்களைக் காப்பாற்றிட வேண்டும் என்று எந்த முஸ்லிமாவது விரும்பினால் அவன் உடனேயே 'வகுப்புவாதி' என முத்திரை குத்தப்படுகின்றான். எந்த முஸ்லிமாவது இஸ்லாத்தை விட்டுக் கொடுத்து உயர்சாதி இந்துக்களுக்குப் பக்க தாளம் போட்டால் அவன் 'தேசிய முஸ்லிம்' எனப் போற்றப்படுகின்றான்.//

நடைமுறையில் 100 க்கு 100 உண்மை.

இந்த சதியிலிருந்து விடுபட முஸ்லிம்கள் முழு இஸ்லாத்தை கடைபிடிக்க வேண்டும்,

ஆலிம்கள் தான் கற்றதை காலமெல்லாம் எத்திவைத்துக் கொண்டே இருக்கவேண்டும்.

தப்லீக்கில் தன்னை மேம்படுத்துவதோடு அறவே இல்லாதவர்களுக்கு எத்திவைப்பதை முழுமையாக செய்ய வேண்டும்.

நாகரீகம் என்ற பெயரில் கலாச்சாரத்திலிருந்து விடுபடுவதை களைய வேண்டும்.

அந்த மாதிரி சதியை நாயன் போக்கி அவர்களும் நாளை நம் பக்கம் இணைய துஆ செய்வோம்.

Meerashah Rafia சொன்னது…

மறைக்கப்பட்ட பல உண்மைகள்..ஆச்சர்யப்படவைகின்றன

hassaan சொன்னது…

வரலாறு அறியாதவர்கள் வரலாறு படைக்க முடியாது என்பதை ஆணித்தரமாக இந்த கட்டுரை எடுத்து காட்டுகிறது


//இந்தியாவில் முஸ்லிம்களே இல்லை என்றாகி விட்டால் இஸ்லாம் எப்படிக் காப்பாற்றப்படும்? ஸ்பெயினில் முஸ்லிம்களே இல்லை என்றாக்கிவிட்டார்கள். ஆகவே அங்கே இஸ்லாம் இல்லை என்றாகிவிட்டது!//
சிந்திக்க வைக்கும் வரிகள் முஸ்லிம்களுக்கு நல்ல நினைவூட்டல்!!

அதிரை சித்திக் சொன்னது…

அல்லாஹ் ...!மனம் ..பதறுகிறது ...!

இத்தனை சூழ்ச்சிகளா....!என்றோ நடந்த

நிகழ்வு தானே என அலச்சியமாக இருந்து விட

கூடாது ...மழலைகளிடம் ..கல்வியோடு இஸ்லாத்தினையும்

போதிக்கணும்...இஸ்லாம் கற்கும் உலமாக்களிடம்

உலக நடப்புகளையும் போதிக்கணும் ..

Noor Mohamed சொன்னது…

//(மஸ்ஜித்) பள்ளிவாயில்களோடிருந்த கல்விக் கூடங்களில் (மதரசாக்களில்) மார்க்கக் கல்வியை மட்டுந்தான் போதிக்க வேண்டும் என்றும், அவர்கள் ஏற்கனவே போதித்துக் கொண்டிருந்த வரலாறு, விஞ்ஞானம், கணக்கு போன்ற பாடங்களைக் கற்றுத் தரக்கூடாது என்று கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.//

ஆம்! மறக்க முடியாத வரலாற்று உண்மை. மார்க்க கல்வி, உலக கல்வி என கல்வியை இரு கூறாக கூறுபோட்டது அப்போதுதான் ஆரம்பமானது. இதன் மூலமே இஸ்லாம் உலக வாழ்வுக்கு உகந்ததல்ல என்ற தவறான செய்திகளை நாகரீகம் என்ற பெயரால் அநாகரிகமான முறையில் பரப்பப்பட்டது.

இன்றும் இதை வைத்துதான் மார்க்க கல்வி, உலக கல்வி என நாமும் தவறாகக் கூறிக் கொண்டிருக்கிறோம். ஆனால் கணிதம், விஞ்ஞானம், வரலாறு, நிலநூல் அனைத்தையும் உலகுக்கு ஊட்டியவர்கள் இஸ்லாமியர்கள் என்ற உண்மை வரலாறு ஊமையாகிவிட்டது. இதன் எதிரொலிதானோ என்னவோ;

//விஞ்ஞானம், மருத்துவம் இன்னுமுள்ள துறைகள் இவற்றில் எத்துனைதான் சாதனைகளை முஸ்லிம்கள் சாதித்துக் காட்டினாலும் அவர்களுக்கு விருதுகளோ, பரிசுகளோ தரப்படுவதில்லை. அவர்கள் விரக்திக்கே உள்ளாக்கப்படுகிறார்கள்//

Ebrahim Ansari சொன்னது…

அன்பானவர்களே!

இந்த ஆக்கத்தை தந்ததன் மூலம் கொஞ்சம் குளிர்ந்த தண்ணீரை உறங்கிக் கொண்டிருந்த நமது முகங்களில் தெளித்து எழுந்து உட்காரவைத்த திரு. இராஜசேகர் அவர்களுக்கு நன்றி சொல்வோமாக.

மீண்டும் வெளியிட்டு இருக்கும் அதிரை நிருபர் குழுவுக்கும் நமது பாராட்டுக்கள்.

வரலாற்று சம்பவங்களின் அடிப்படையில் இது ஒரு எச்சரிக்கை மணி. அபாய சங்கு.

இதில் ஓங்கி ஒலிக்கும் சங்கு இதுவாகும்

//இதில் வேதனைக்குரிய செய்தி என்னவெனில் எத்தனையோ இயக்கங்கள் முஸ்லிம்களுக்கிடையோ தோன்றுகின்றன. இவற்றில் எதுவும் முஸ்லிம்களைக் காப்பாற்ற முன்வரவில்லை. அத்தனையும் இஸ்லாத்தைக் காப்பாற்ற இருப்பதாகவே அறிவிக்கின்றன. //

எப்படியெல்லாம் சண்டைபோடலாம் என்று காரணங்கள் கண்டு பிடிக்கிறோம். எப்படியெல்லாம் கை குலுக்கலாம் என்று யோசிக்க மறந்துவிடுகிறோம்.

கட்டுரையாளர் இட்டிருக்கும் காரணப்பட்டியலில் உள்ளவை அனைத்தையும் நாம் வெற்றி கொள்ள முடியும். நம்மில் ஒற்றுமையும் ஒரே குரலும் இருந்தால் .

//இவர்கள் இஸ்லாத்தைப் பற்றி அதிகமாகக் கவலைப்படுவார்கள். ஆனால் முஸ்லிம்களைப் பற்றி அதிகமாகக் கவலைப்படமாட்டார்கள். ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.. மதம் அதனைப் பின்பற்றுபவர்களைப் பாதுகாப்பதில்லை, மாறாக மதத்தைப் பின்பற்றுபவர்கள் தாம் அதனைக் காப்பாற்ற வேண்டும்.//

//இந்தியாவில் இஸ்லாம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் முஸ்லிம்கள் காப்பாற்றப்பட்டாக வேண்டும்.//

//இது இயலாத ஒன்றல்ல, முஸ்லிம்கள் முன்வந்தால்!//

அனைத்தும் முத்தான வரிகள்.

தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள் என்று தலையில் குட்டி சொல்லும் வரிகள்.

crown சொன்னது…

Ebrahim Ansari சொன்னது…

அன்பானவர்களே!

இந்த ஆக்கத்தை தந்ததன் மூலம் கொஞ்சம் குளிர்ந்த தண்ணீரை உறங்கிக் கொண்டிருந்த நமது முகங்களில் தெளித்து எழுந்து உட்காரவைத்த திரு. இராஜசேகர் அவர்களுக்கு நன்றி சொல்வோமாக.

மீண்டும் வெளியிட்டு இருக்கும் அதிரை நிருபர் குழுவுக்கும் நமது பாராட்டுக்கள்.

வரலாற்று சம்பவங்களின் அடிப்படையில் இது ஒரு எச்சரிக்கை மணி. அபாய சங்கு.

இதில் ஓங்கி ஒலிக்கும் சங்கு இதுவாகும்.
-------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். இதை நான் வழிமொழிகிறேன். மேலும் இந்த எச்சரிக்கை மணியை ஒவ்வொருத்தரும் தன் மனதில் ஒலிக்க விட்டு கொண்டே இருக்கனும் . பின் ஒற்றுமையாக இருந்து இந்த சதியை முறியடிக்கனும். இல்லை யென்றால் நம் சந்ததி வழி மாறி போகும் அபாயம் நிகழலாம். அல்லாஹ் பாதுகாக்கணும். ஆமீன்.

Unknown சொன்னது…

வரலாற்று சம்பவங்களின் அடிப்படையில் இது ஒரு எச்சரிக்கை மணி. அபாய சங்கு.

also pls watch below

http://www.youtube.com/watch?v=IPUOlcab-Po

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

இந்த ஆக்கத்தை தந்ததன் மூலம் கொஞ்சம் குளிர்ந்த தண்ணீரை உறங்கிக் கொண்டிருந்த நமது முகங்களில் தெளித்து எழுந்து உட்காரவைத்த திரு. இராஜசேகர் அவர்களுக்கு நன்றி சொல்வோமாக.

அப்துல்மாலிக் சொன்னது…

ஒரு கூட்டத்தை அழிக்கவேண்டுமென்றால் முதலில் அவர்களுக்குள் பிரிவினையை (பள்ளியில் படித்த 10 மாடு சேர்ந்து ஒரு சிங்கத்தை துரத்தியடித்த கதை) உண்டு பண்ண வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ நம்மிடையே அது நடந்துக்கொண்டிருக்கு....

Ibn Abdulwahid சொன்னது…

அஸ்ஸலமு அலைக்கும்
அன்பான சகோதரர்களே
மிகவும் சிந்திக்க தூண்டிய ஆக்கம் - ஆனால் இதில் இருந்து நாம் நம்மை காத்துக்கொள்ள என்ன வழி என அறியாமல் நாளும் பொழுதும் சென்றுகொண்டிருக்கிறது. ஸ்பெயின் மட்டும் அல்ல உலகின் ஏனைய இது போன்ற பகுதிகளுகெல்லாம் முதலில் இஸ்லாம் எப்படி சென்றடைந்தது என்பதை நாம் அறிய கடமைப்பட்டுள்ளோம். வீழ்ச்சியை பற்றி அறிந்த நாம் முன்பு வளர்ந்ததையும் அறிய வேண்டும். அதற்கு நம் முன்னோர்களான இறைத்தூஉரம் அவர்கள் வழிவந்த ஸஹாபாக்களும் செய்த தியாகங்களும் தான் காரணம்.அவர்களின் வரலறுகள் நம்மில் எத்தனை பேர்களுக்கு தெரியும்?

அல்லாஹ் தனது திருமறையில்-

முஸ்லிம்களை நோக்கி " நீங்கள் கவலைப்பட வேண்டாம் அச்சப்படவேண்டாம் வெற்றி நிச்சயம் உஙளுக்கே - உண்மையான மூமின்களாக இருந்தால் " என்று ஒரு நிபந்தனையை போடுகின்றான்.

நமது சத்திய ஸஹாபாக்கள் இதற்கு முற்றிலும் பொருத்தமானவர்களாக இருந்ததால் வெற்றிமேல் வெற்றி - உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கலீபாவாக இருந்த போது உலகத்தில் பெரும் பகுதி அவர்கள் ஆட்சியின் கீழ். இன்னிலை படிப்படியாக மாறி பின் வந்தவர்கள் உலக மாயையில் வீழ்ந்ததால் தோல்வி மேல் தோல்வி -

-//இந்தியாவில் இஸ்லாம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் முஸ்லிம்கள் காப்பாற்றப்பட்டாக வேண்டும்.//-
அவ்வாறு அல்ல - இந்தியாவில் மட்டுமல்ல எங்குமே இஸ்லாத்தினை முழுமையாக பின்பற்றுவதன் மூலமே அல்லாஹ் முஸ்லிம்களைக்காப்பற்றுகின்றான். அதனை பின்பற்றாததினால் அவர்களை அழிக்கிறான் - அவன் நாடிய முறையில

//இது இயலாத ஒன்றல்ல, முஸ்லிம்கள் முன்வந்தால்!//

அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு அவர்களின் வழிவந்த சத்திய ஸஹாபாக்களின் வழிகாட்டுதல்களின் படியே தவிர - சாத்தியமில்லை

அன்புடன் புகாரி சொன்னது…

அன்பிற்கினிய சகோ இபுறாகிம் அன்சாரி அவர்களுக்கு,
அன்பும் அமைதியும் அருளாகட்டும்!

நான் சொல்ல நினைத்த அத்தனையையும் நீங்கள் சொல்லிவிட்டீர்கள். இனி நான் சொல்ல ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. அது இதுதான்.

**** உங்களுக்கு என் நன்றி *****

உங்களின் முன்னேற்ற உணர்வுகளோடு வெற்றியின் திசை நோக்கி இஸ்லாமிய இதயங்கள் அத்தனையும் மலரட்டும். இஸ்லாம் செழித்துச் சிறக்கட்டும்.

====================================================
”இந்த ஆக்கத்தை தந்ததன் மூலம் கொஞ்சம் குளிர்ந்த தண்ணீரை உறங்கிக் கொண்டிருந்த நமது முகங்களில் தெளித்து எழுந்து உட்காரவைத்த திரு. இராஜசேகர் அவர்களுக்கு நன்றி சொல்வோமாக. மீண்டும் வெளியிட்டு இருக்கும் அதிரை நிருபர் குழுவுக்கும் நமது பாராட்டுக்கள். இதில் ஓங்கி ஒலிக்கும் சங்கு இதுவாகும்

//இதில் வேதனைக்குரிய செய்தி என்னவெனில் எத்தனையோ இயக்கங்கள் முஸ்லிம்களுக்கிடையோ தோன்றுகின்றன. இவற்றில் எதுவும் முஸ்லிம்களைக் காப்பாற்ற முன்வரவில்லை. அத்தனையும் இஸ்லாத்தைக் காப்பாற்ற இருப்பதாகவே அறிவிக்கின்றன. //

எப்படியெல்லாம் சண்டைபோடலாம் என்று காரணங்கள் கண்டு பிடிக்கிறோம். எப்படியெல்லாம் கை குலுக்கலாம் என்று யோசிக்க மறந்துவிடுகிறோம்.

//இவர்கள் இஸ்லாத்தைப் பற்றி அதிகமாகக் கவலைப்படுவார்கள். ஆனால் முஸ்லிம்களைப் பற்றி அதிகமாகக் கவலைப்படமாட்டார்கள். ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.. மதம் அதனைப் பின்பற்றுபவர்களைப் பாதுகாப்பதில்லை, மாறாக மதத்தைப் பின்பற்றுபவர்கள் தாம் அதனைக் காப்பாற்ற வேண்டும்.//

//இந்தியாவில் இஸ்லாம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் முஸ்லிம்கள் காப்பாற்றப்பட்டாக வேண்டும்.//

//இது இயலாத ஒன்றல்ல, முஸ்லிம்கள் முன்வந்தால்!//

அனைத்தும் முத்தான வரிகள். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள் என்று தலையில் குட்டி சொல்லும் வரிகள்.<<<<
====================================================

அன்புடன் புகாரி

Ibn Abdulwahid சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்

1) முதன் முதலாக முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொள்பவர்களிடம் இறைவனுக்கு இணைவைப்பு எந்த ரூபத்திலும் இருக்கக்கூடாது.

2) அவன் நம்ப சொன்னவற்றை நம்புமாறு முஸ்லிம் சிறார்கள் உள்பட அனைவருக்கும் விளக்கப்படவேண்டும்.

3)அவனது ஏவல் விலக்கல்கள் முழுமையாக பின்பற்றப்படவேன்டும்

4)இறைவனுக்கு வழிப்படுவதுடன் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு அவர்களின் வழிகாட்டுதல் கள் கடைபிடிக்கப்படவெண்டும்.

5)இவை தவிர ஏனைய இஸ்லாமிய சட்ட வரம்புகள் நடைமுறைப்படுத்தபடவேன்டும்.

இஸலாத்தினை முழுமையாக முஸ்லிம்கள் அனைவரும் பின்பற்றுவதன் மூலம் அதனைக்காப்பாற்றினால் முஸ்லிம்கள் அல்லாஹ்வால் காப்பாற்றப்படுவர். இதுவல்லாமல் வேறு வழிகளில் இயக்கங்களாலோ மற்ற எவராலுமோ இஸ்லாத்தையோ, முஸ்லிம்களையோ காப்பாற்ற முடியாது என்பது வரலாறுகள் தரும் படிப்பினைகளாகும்

///இது இயலாத ஒன்றல்ல, முஸ்லிம்கள் முன்வந்தால்!///

அன்புடன் புகாரி சொன்னது…

ஒரு முஸ்லிம் என்பவன் மதத்தில்மட்டுமே சிறந்தவனாக இருக்க வேண்டுமா? உலக அரங்கில் முன்னுக்கு நிற்பவனாக அவன் இருக்கக் கூடாதா? ஏன்?

உலக அரங்கில் பல மதத்தவர்கள் இருக்கின்றார்கள். இவர்களுள் முஸ்லிம்களின் சாதனைகள் என்ன? எத்தனை புதிய கண்டுபிடிப்புகளைச் செய்திருக்கிறார்கள். எத்தனை பேர் ஆய்வாளர்களாக இருக்கிறார்கள்? எத்தனை பேர் அறிவியல், பொருளாதாரம், விண்வெளி ஆராச்சி போன்ற பல துறைகளிலும் நோபல் பரிசுகளைப் பெற்றவர்களாக இருக்கிறார்கள் அல்லது பெறுகின்ற தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களெல்லாம் எந்தெந்த நாடுகளில் அதிகம் இருக்கிறார்கள்.

உலக அரங்கில் ஒரு முஸ்லிமின் முகம் எது?

அன்புடன் புகாரி

Unknown சொன்னது…

Asan Buhari சொன்னது…
உலக அரங்கில் ஒரு முஸ்லிமின் முகம் எது?
------------------------------------------------
சிந்திக்க வைத்த கேள்வி...!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Ibn Abdulwahid சொன்னது…

அஸ்ஸலமு அலைக்கும்

இஸ்லாம் என்பது வெறுமனே ஒரு மதம் மாத்திரமல்ல உயர்ந்த வாழ்வியல் திட்டமாகும். அது அகில உலக மாந்தர்களுக்கும் அதன் படைப்பாளனால் வழங்கப்பட்டதாகும் .

இஸ்லாத்தில் உலக கல்வி, மார்க்க கல்வி என்ற பாகுபாடு கிடையாது. சமீப காலங்களில் தான் அது சதிகாரர்களால் அவ்வாறு பிரிக்கப்பட்டது. இஸ்லாமைய மேதைகளால் உலகிற்கு எத்தனையோ கன்டுபிடிப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
///விஞ்ஞானம், மருத்துவம் இன்னுமுள்ள துறைகள் இவற்றில் எத்துனைதான் சாதனைகளை முஸ்லிம்கள் சாதித்துக் காட்டினாலும் அவர்களுக்கு விருதுகளோ, பரிசுகளோ தரப்படுவதில்லை. அவர்கள் விரக்திக்கே உள்ளாக்கப்படுகிறார்கள்///

//வரலாற்றைத் திருத்தி - திரித்து - எழுதி, அதனை முழுமையாக முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டார்கள். இதன் விளைவாக நித்தமும் முஸ்லிம்கள் கொலை செய்யப்படுகின்றார்கள்//.

உலக அரங்கில் ஒரு முஸ்லிம் முகத்தின் நிலை இவ்வாறு சித்தரிக்கபடுகிறது. காரணம் மீடியா அவர்கள் கைகளில்

அன்புடன் புகாரி சொன்னது…

அன்பிற்கினிய சகோ தாகா,
அன்பும் அமைதியும் அருளப்படட்டும்!

>>>>இஸ்லாமிய மேதைகளால் உலகிற்கு எத்தனையோ கன்டுபிடிப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.<<<<

ஏதேனும் குறிப்பிட்டுச் சிலவற்றை இங்கே கூறமுடியுமா? உலக அரங்கில் அது எத்தனை விழுக்காடு என்ற புள்ளிவிபரம் கிடைக்குமா? அறியும் ஆவலில் உள்ளேன்.

>>>>>உலக அரங்கில் ஒரு முஸ்லிம் முகத்தின் நிலை இவ்வாறு சித்தரிக்கபடுகிறது. காரணம் மீடியா அவர்கள் கைகளில்<<<<<<

அந்த மீடியா ஏன் நம் கையில் இல்லை? இன்னொருவன் யார் உங்களுக்கு உரிமைகள் வழங்க, உங்களைப் பற்றிச் சொல்ல? நீங்கள் சொல்லுங்களேன்? ஏன் உங்களால் சொல்ல முடியவில்லை?

உலக மக்கள் தொகை கணக்கைப் பாருங்கள். இதில் சாதனையாளர்களின் பட்டியல் எதில் அதிகம் என்று சிந்தித்துப் பாருங்கள்?

கிருத்தவர் 33.32%
முஸ்லிம் 21.01%
இந்து 13.26%
புத்தம் 5.84%
சீக் 0.35%
யூதர் 0.23%
பாஹாய் 0.12%
பிற மதங்கள் 11.78%
மதமற்றோர் 11.77%
நாத்திகர் 2.32%

Source of info: http://www.30-days.net/muslims/statistics/world-stats/

அன்புடன் புகாரி

Ibn Abdulwahid சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்புக்குரிய சகோதரர் அசன் புஹாரி அவர்களுக்கு நீங்கள் உங்கள் பின்னூட்டத்தில்
///ஒரு முஸ்லிம் என்பவன் மதத்தில்மட்டுமே சிறந்தவனாக இருக்க வேண்டுமா? உலக அரங்கில் முன்னுக்கு நிற்பவனாக அவன் இருக்கக் கூடாதா? ஏன்?///
என்று எனது பின்னூட்டத்திற்க்கு கேள்வி எழுப்பி மேலும் தொடர்ந்து செல்கிறீர்கள்.
உலக அரங்கில் முன்னுக்கு நிற்க கூடாது என்று எந்த இஸ்லாமிய மார்க்க மேதைகள் கூறினார்கள்? அவ்வாறு கூறினால் அது தவறு என்பது அடுத்த விசயம்.
உலக அரங்கில் இஸ்லாமியர்கள் வழங்கிய கண்டுபிடிப்புகளை பட்டியல் போடமுடியுமா என்று கேள்வி எழுப்பி உள்ளீர்கள் இதோ
கூகுளில் - தட்டி பாருங்கள் உங்கள் கேள்விக்கான பதில
scientifical inventions made by muslim

How Islamic inventors changed the world
From coffee to cheques and the three-course meal, the Muslim world has given us many innovations that we take for granted in daily life. As a new exhibition opens, Paul Vallely nominates 20 of the most influential- and identifies the men of genius behind them


///அந்த மீடியா ஏன் நம் கையில் இல்லை? இன்னொருவன் யார் உங்களுக்கு உரிமைகள் வழங்க, உங்களைப் பற்றிச் சொல்ல? நீங்கள் சொல்லுங்களேன்? ஏன் உங்களால் சொல்ல முடியவில்லை?///

அந்த மீடியாவை நம் கையில் கொண்டுவர நாம் இணைந்து செயல்பட வேண்டும் . நம் போன்றவர்களுக்குதான் முதலில் நாம் கண்டுபிடித்ததையே விளக்க வேண்டியுள்ளதே!
மீடியாவை கைவசப்படுத்துவது மிகவும் கடினமே
இருந்தாலும் இணைந்து போராட நான் ரெடி நீங்க ரெடியா?

Ibn Abdulwahid சொன்னது…

followings for more details see
"Huge and awesome scientific discoveries made by Muslims !"
by dr.zakir naik in youtube also

ok? is it enough or u want more?

அன்புடன் புகாரி சொன்னது…

அன்பினிய சகோ தாகா,

>>>>உலக அரங்கில் முன்னுக்கு நிற்க கூடாது என்று எந்த இஸ்லாமிய மார்க்க மேதைகள் கூறினார்கள்? அவ்வாறு கூறினால் அது தவறு என்பது அடுத்த விசயம்.<<<<

அப்பாடா.... இப்போது சற்றே மனம் சமாதானமடைகிறது. எவரேனும் அவ்வாறு கூறினால் அது தவறு என்ற தெளிவோடு வந்திருக்கும் இந்த மறுமொழியை நான் பாராட்டுகிறேன்.

>>>>>>இஸலாத்தினை முழுமையாக முஸ்லிம்கள் அனைவரும் பின்பற்றுவதன் மூலம் அதனைக்காப்பாற்றினால் முஸ்லிம்கள் அல்லாஹ்வால் காப்பாற்றப்படுவர். இதுவல்லாமல் வேறு வழிகளில் இயக்கங்களாலோ மற்ற எவராலுமோ இஸ்லாத்தையோ, முஸ்லிம்களையோ காப்பாற்ற முடியாது என்பது வரலாறுகள் தரும் படிப்பினைகளாகும்<<<<<<

முன்பு நீங்கள் இப்படி எழுதி இருந்தீர்கள். அதற்கான விளக்கம் தேவைப்பட்டது. அதனால்தான் என் கேள்விகளை முன்வைத்தேன்.

இஸ்லாத்தைப் பின்பற்றுதல் என்றால் என்ன? மார்க்க அறிவு மட்டும் பெறுவதா? அப்படிப் பெற்றுவிட்டால் இறைவன் நம்மைக் காப்பாற்றிவிடுவானா?

இந்த இழையின் கட்டுரை மிகத் தெளிவாகக் கூறும் விசயத்தை உள்வாங்கினீர்களா? ஸ்பெயினில் இஸ்லாமியர்கள் அழிக்கப்பட்டார்கள். அப்படி அழிக்கப்பட்டவர்களில் மார்க்கத் தொண்டர்களும் இருந்தார்கள் மார்க்க அறிஞர்களும் இருந்தார்கள்.

இஸ்லாமியன் என்பவன் அறிவுடையவனாய் இருப்பது அவசியமானது. உலக சபையில் அவன் உயரம் உயர்ந்ததாக இருத்தல் வேண்டும், அல்லது சற்றும் குறைந்ததாக இருக்கக் கூடாது. அதற்கு முஸ்லிம்கள் என்ன செய்யவேண்டும்? அதைப்பற்றி ஒரு பட்டியல் இட்டால் வாசிக்க எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

>>>>How Islamic inventors changed the world - From coffee to cheques and the three-course meal, the Muslim world has given us many innovations that we take for granted in daily life.<<<<

WHAT WERE THE GREATEST INVENTIONS OF ALL TIME? - Here is the Encyclopædia Britannica's list for--The Greatest Inventions of All Times

http://www.edinformatics.com/inventions_inventors/

இந்த வலைத்தளம் சென்று பாருங்கள். எவரேனும் ஒரு முஸ்லிம் இருக்கிறாரா என்று கூறுங்கள்.


>>>>>>>>அந்த மீடியாவை நம் கையில் கொண்டுவர நாம் இணைந்து செயல்பட வேண்டும் . நம் போன்றவர்களுக்குதான் முதலில் நாம் கண்டுபிடித்ததையே விளக்க வேண்டியுள்ளதே!<<<<<<<<<<<

ஏன் விளக்கினால் என்ன குறைந்துவிடும்? அனைவருக்கும் அறிவினை வளர்ப்பதைவிட பெருஞ் சேவை வேறேதும் உண்டா? ஏன் சினம் கொள்கிறீர்கள்? நம் குறைகளை நாம் ஒப்புக்கொள்வதுதானே வளர்ச்சியின் முதல் படி? உங்களுக்கு ஏதேனும் மாற்றுக்கருத்து உண்டா?

>>>>மீடியாவை கைவசப்படுத்துவது மிகவும் கடினமே. இருந்தாலும் இணைந்து போராட நான் ரெடி நீங்க ரெடியா? <<<<<

இஸ்லாமியர் அனைவரும் ஏற்றுக்கொள்ளும், இஸ்லாமிய மத அறிஞர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும், உங்களின் அருமையான திட்டத்தைக் கூறுங்கள் சகோ தாகா. அது சரியானதாக இருந்தால் நான் என்ன இந்த உலகமே உங்கள் பின்னால்தான்!

அன்புடன் புகாரி

Ibn Abdulwahid சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரரே

////இந்த வலைத்தளம் சென்று பாருங்கள். எவரேனும் ஒரு முஸ்லிம் இருக்கிறாரா என்று கூறுங்கள்.///


தாங்கள் பின்வரும் வளைத்தலம் சென்று பாருங்கள் நீங்கள் கேட்பது கிடைக்கும்.
http://scienceislam.com/muslims_science.php

////இஸ்லாமியர் அனைவரும் ஏற்றுக்கொள்ளும், இஸ்லாமிய மத அறிஞர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும், உங்களின் அருமையான திட்டத்தைக் கூறுங்கள் சகோ தாகா. அது சரியானதாக இருந்தால் நான் என்ன இந்த உலகமே உங்கள் பின்னால்தான்! ////

ம்... நான் என்ன புதிதாக திட்டம் சொல்லப்போகிறேன். அதுதான் 1400 வருடங்களுக்கு முன்பே நம் சத்திய இறைத்தூதர் எல்லாம் சொல்லிவிட்டார்களே...
அதன்படி அனைவரும் நடந்தால் எல்லாம் சரியாகிவிடும்.. - இன்ஷா அல்லாஹ்...

அன்புடன் புகாரி சொன்னது…

அன்புச்சகோ தாகா அவர்களுக்கு, அன்பும் அமைதியும் அருளப்படட்டும்.

நீங்கள் வாழும் அல்-கோபருக்கு அருகில் உள்ள தமாமில்தான் நான் பதினெட்டு ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன். நான் முதலில் சேர்ந்த நிறுவனத்திற்கு அருகில் ஒரு தபால் அலுவலகம் இருக்கும். அங்கே ஒரு நாள் நான் சென்றிருந்தபோது, தபால் ஆபிஸ் கிளார்க் மிகக் கடுமையாக கத்திக்கொண்டிருந்தான் ஓர் இந்தியனைப் பார்த்து.

அந்த இந்தியன் ஒரு லட்ச ரூபாய்க்கு ட்ராப்ட் எடுத்து அந்த போஸ்ட் ஆபீசில் ரிஜிஸ்டர் செய்திருக்கிறான். அதற்கான ரசீதை பத்திரமாகக் கையில் வைத்திருக்கிறான். ஆனால் ஒரு மாதம் ஆகியும் கடிதம் போய்ச் சேரவில்லை. எனவே அந்த ரசீதை தினமும் கொண்டுவந்து போஸ்ட் ஆபிசில் கேட்பதும், இங்கிருந்து போயாச்சு உன் ஊருக்கு போன் செய்து கேள் என்று சொல்வதுமாகவே மேலும் சில வாரங்கள் ஓடிவிட்டன. பாவம் இந்தியன் கதறி அழத் தொடங்கிவிட்டான்.

போஸ்ட் ஆபீஸ் கிளார்க் (அரபிதான் வேறு யார்) மிகுந்த கடுப்புக்கு உள்ளாகி, ”பிச்சைக்கார நாயே, நீ என்னிடமா ஒரு லட்சம் ரூபாயைக் கொடுத்தாய்? இந்தா நீ என்னிடம் கொடுத்த ஒண்ணேகால் ரியால். எடுத்துக் கொண்டு ஓடிவிடு. என்று ஒண்ணேகால் ரியாலை அந்த இந்தியன் முகத்தில் விட்டெறிந்தான். இனி இந்தப் பக்கம் வந்தால் கொன்னுடுவேன் கொன்னுன்னு கடுமையாக மிறட்டினான்.

அன்று எனக்கு எந்த மனோ நிலை வந்ததோ அதே மனோ நிலையை மீண்டும் இன்று நான் பெற்றேன்!

>>>>தாங்கள் பின்வரும் வளைத்தலம் சென்று பாருங்கள் நீங்கள் கேட்பது கிடைக்கும்.
http://scienceislam.com/muslims_science.php<<<<

நான் அனுப்பிய வலைத்தளத்தையும் நீங்கள் அனுப்பி இருக்கும் இந்த வலைத்தலத்தையும் ஒப்பிட்டு, முழுவதும் வாசித்துப் பார்த்தீர்களா அன்புச்சகோ தாகா????

அன்புடன் புகாரி

Ibn Abdulwahid சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
அசன் புஹாரி அவர்களே

////ஒரு முஸ்லிம் என்பவன் மதத்தில்மட்டுமே சிறந்தவனாக இருக்க வேண்டுமா? உலக அரங்கில் முன்னுக்கு நிற்பவனாக அவன் இருக்கக் கூடாதா? ஏன்?

உலக அரங்கில் பல மதத்தவர்கள் இருக்கின்றார்கள். இவர்களுள் முஸ்லிம்களின் சாதனைகள் என்ன? எத்தனை புதிய கண்டுபிடிப்புகளைச் செய்திருக்கிறார்கள். எத்தனை பேர் ஆய்வாளர்களாக இருக்கிறார்கள்? எத்தனை பேர் அறிவியல், பொருளாதாரம், விண்வெளி ஆராச்சி போன்ற பல துறைகளிலும் நோபல் பரிசுகளைப் பெற்றவர்களாக இருக்கிறார்கள் அல்லது பெறுகின்ற தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களெல்லாம் எந்தெந்த நாடுகளில் அதிகம் இருக்கிறார்கள்.

உலக அரங்கில் ஒரு முஸ்லிமின் முகம் எது?

அன்புடன் புகாரி////

இதற்காத்தான் நான் அந்த வளைத்தலத்தை மேற்கோள் காட்டினேன். உங்களைப்போல் ஒரு முஸ்லிம் ஏன் நீங்களே அவ்வாறு சாதனைப்ப்டைத்தால் நான் அதனைக்கொண்டு பெருமைப்பட நான் ரெடி..
http://scienceislam.com/muslims_science.php

அன்புடன் புகாரி சொன்னது…

அன்பின் சகோ தாகா,

>>>>உங்களைப்போல் ஒரு முஸ்லிம் ஏன் நீங்களே அவ்வாறு சாதனைப்ப்டைத்தால் நான் அதனைக்கொண்டு பெருமைப்பட நான் ரெடி..<<<<<

இப்படி நகைச்சுவையாய்த்தான் நம் கருத்தாடல் முடியும் என்று நான் எதிர்பார்த்தேன் :)

கட்டுரை தந்த அந்த அயலார் வேறு ஏதானும் வழியில் சாந்தியும் சமாதானமும் அடையட்டும்!

அயலாரின் கட்டுரையை ஆதரித்து அருமையான கருத்துக்களையும் சேர்த்துச் சொன்ன இப்ராகிம் அன்சாரிக்கும் மேலும் சிலருக்கும் மீண்டும் ஒரு நன்றி. யாரோ சிலர் இங்கும் அங்குமாய் நம் சமூகத்திலும் இருக்கிறார்கள்தான் :)

>>>>Ebrahim Ansari சொன்னது…

இந்த ஆக்கத்தை தந்ததன் மூலம் கொஞ்சம் குளிர்ந்த தண்ணீரை உறங்கிக் கொண்டிருந்த நமது முகங்களில் தெளித்து எழுந்து உட்காரவைத்த திரு. இராஜசேகர் அவர்களுக்கு நன்றி சொல்வோமாக.

மீண்டும் வெளியிட்டு இருக்கும் அதிரை நிருபர் குழுவுக்கும் நமது பாராட்டுக்கள்.

வரலாற்று சம்பவங்களின் அடிப்படையில் இது ஒரு எச்சரிக்கை மணி. அபாய சங்கு.

இதில் ஓங்கி ஒலிக்கும் சங்கு இதுவாகும்

//இதில் வேதனைக்குரிய செய்தி என்னவெனில் எத்தனையோ இயக்கங்கள் முஸ்லிம்களுக்கிடையோ தோன்றுகின்றன. இவற்றில் எதுவும் முஸ்லிம்களைக் காப்பாற்ற முன்வரவில்லை. அத்தனையும் இஸ்லாத்தைக் காப்பாற்ற இருப்பதாகவே அறிவிக்கின்றன. //

எப்படியெல்லாம் சண்டைபோடலாம் என்று காரணங்கள் கண்டு பிடிக்கிறோம். எப்படியெல்லாம் கை குலுக்கலாம் என்று யோசிக்க மறந்துவிடுகிறோம்.

கட்டுரையாளர் இட்டிருக்கும் காரணப்பட்டியலில் உள்ளவை அனைத்தையும் நாம் வெற்றி கொள்ள முடியும். நம்மில் ஒற்றுமையும் ஒரே குரலும் இருந்தால் .

//இவர்கள் இஸ்லாத்தைப் பற்றி அதிகமாகக் கவலைப்படுவார்கள். ஆனால் முஸ்லிம்களைப் பற்றி அதிகமாகக் கவலைப்படமாட்டார்கள். ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.. மதம் அதனைப் பின்பற்றுபவர்களைப் பாதுகாப்பதில்லை, மாறாக மதத்தைப் பின்பற்றுபவர்கள் தாம் அதனைக் காப்பாற்ற வேண்டும்.//

//இந்தியாவில் இஸ்லாம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் முஸ்லிம்கள் காப்பாற்றப்பட்டாக வேண்டும்.//

//இது இயலாத ஒன்றல்ல, முஸ்லிம்கள் முன்வந்தால்!//

அனைத்தும் முத்தான வரிகள்.

தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள் என்று தலையில் குட்டி சொல்லும் வரிகள்.<<<<<<<<<<<

அன்புடன் புகாரி