Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மனு நீதி மனித குலத்துக்கு நீதியா? அலசல் தொடர் - 4 29

அதிரைநிருபர் பதிப்பகம் | June 25, 2012 | , , , , ,

அலசல் தொடர் : நான்கு. 

உலகம் தோன்றிய பின் – பல்வேறு நாகரீகங்கள் –பல நாடுகளில் வளர்ந்த விதங்கள் பற்றி படித்து இருக்கிறோம். அவற்றுக்கான ஆதாரங்களையும் வரலாற்று அறிஞர்கள்  சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். உலகின் பல பாகங்களில் வரலாற்றின் பக்கங்களில் அநீதியும், அடக்குமுறையும், ஆட்சி செய்தே வந்திருக்கின்றன.  வலியோரால் எளியோர் தாழ்த்தப் பட்டிருக்கிறார்கள்; அவர்கள் மீது அடக்கு முறை ஏவப்பட்டிருக்கிறது; தட்டிக்கேட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தூக்கிலடப்பட்டிருக்கிறார்கள். நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள். 

ஒரு காலகட்டத்தில் பொறுமை மீறி எளியோர் திரண்டு வலியோரை எதிர்த்திருக்கிறார்கள். புரட்சிகள் வெடித்திருக்கின்றன. இத்தகைய அடக்குமுறைக்கும் அத்துமீறல்களுக்கும் இடையே  அரசுகள் அல்லது ஆளுவோர் பின்பற்றிய DOCTRINE என்று சொல்லப்பட்ட கோட்பாடுகளே பெரும்பாலும் காரணமாக இருந்து இருக்கின்றன.  

இந்தியா மற்ற ஏனைய நாடுகளின் வரலாறுகளை ஒப்பிட்டு நோக்கும்போது ஒரு வித்தியாசம் தென்படுகிறது. மற்ற நாடுகளில் இருந்த மக்களுக்குள் ஏற்றத்தாழ்வு போன்ற பிரச்னைகள் மக்களின் எழுச்சியால் அழிந்தொழிந்தன. அல்லது மனிதர் குல மாணிக்கங்கள் தலைவர்களாய் கிடைத்ததால் அழிந்தொழிந்தன. இந்தியாவில் இருக்கும் சாதிப் பிரச்னைகள் காலகாலமாக இருந்துகொண்டுதான் இருக்கின்றன. உடன்கட்டை ஏறும் பழக்கம் மட்டுமே ஒரு புண்ணியவான் உடைய கடாட்சத்தால் நின்று போனது. 

பிரஞ்சு நாட்டிலே சர்வாதிகாரமும், அடக்குமுறையும் தாண்டவமாடியபோது பிரஞ்சுப்புரட்சி    1789- ல் ஏற்பட்டது. நூற்றாண்டுகள் காலமாக ஆதிக்கம் செலுத்திவந்த அடக்குமுறைகள், ஆட்சிமுறைகள் யாவும் மூன்றே ஆண்டுகளில் மக்கள் சக்தியால் தவிடுபொடியாக்கப்பட்டு சமத்துவமும் , சகோதரத்துவமும் அரியணை ஏறின. இன்றுவரை அந்த புரட்சி ஏற்றிய தீபம்தான் பிரான்சு நாட்டில் சமத்துவ ஒளி வீசி வருகிறது. 

பிரான்சு நாட்டில் ஏற்பட்ட புரட்சியின் தாக்கம் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் எதிரொலித்து, புரட்சி இல்லாமலேயே அங்கு சமத்துவமும், சகோதரத்துவமும் ஆட்சியின் ஆணிவேராக நிலை பெற்றன.

ரஷ்யாவிலும் இதேபோல் நிலைமை ஏற்பட்டபோது மக்கள் ஒன்று திரண்டு போராடி ஆட்சியில் எற்கனவே நிலவிய பாகுபாடுகள் அகற்றப்பட்டன. சைனாவிலும் கூட இப்படி வரலாற்றின் உதாரணங்கள் நம்மால் சுட்டிக்காட்டப்படும். 

அராபிய தேசங்களில் தோன்றிய அருமை நபி முமது ரசூல் ( ஸ்ல) அவர்கள் தனது சொல்லாலும், செயலாலும் காலம் காலமாக அந்த மண்ணில் நிலவி வந்த எண்ணற்ற அறிவுக்கொவ்வாத மூட மடமைகளை தலைகீழாக மாற்றி அறிவின்பாதையைக் காட்டினார்கள். அகோல்கைகள் மண்ணில் நிலைபெர்ரதுடன் இன்றளவும் இலட்சோப இலட்சம் பேர்கள அந்தக் கொள்கைகளை நோக்கி இணைந்து வருகிறார்கள்.  

ஆனால்- இந்தியாவில் ?? பெரும் கேள்விக்குறி. ஆண்டாண்டுகாலமாக இருந்துவரும் சாதிக்கொடுமைகள் இன்னும் தீரவில்லை. எத்தனையோ மேதைகள், அறிஞர்கள் அறிவுப்புரட்சியை ஏற்படுத்தினார்கள். உயர்சாதி வகுப்பில் பிறந்தவ ஒரு சிலர்  கூட இந்த தீண்டாமையையும், ஆலயப்பிரவேச மறுப்பையும் எதிர்த்து அணிதிரண்டார்கள். 

“பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே- வெள்ளைப் 
பரங்கியை துரை என்ற காலமும் போச்சே’ – என்று பாரதியார் பாடினார். 

கலைஞர் கருணாநிதி தாழ்த்தப்பட்டவர்களும் அர்ச்சகராகும் சட்டமும் கொண்டுவந்தார். காந்தி , விதவை மணத்தை ஆதரித்து எழுதினார். ஆனாலும் பயனில்லை. உயர்சாதியின் ஆதிக்கம் அழியவில்லை. அந்த அளவு “அவாளின்” செல்வாக்கு வேரூன்றி இருக்கிறது. சாதியாலும் , சம்பிரதாயத்தாலும், ஏற்ற தாழ்வாலும் உளுத்துப்போய் இருக்கும் இந்திய சமுதாய சுவற்றில் அங்கங்கு பூச்சுவேளை, பட்டி பார்த்து வர்ணம் பூசும் வேலைதான்  நடந்து இருக்கிறது. ஆனால் அந்த பழைய சுவற்றை அடியோடு இடித்துவிட்டு இனியொரு புதிய  சமுதாயச்சுவர்  எடுத்தால்தான் விடிவு. இப்படிப்பட்ட புதிய சுவரைத்தான் பிரஞ்சு ,ரஷ்யா, ஐரோப்பிய , அரபு தேசங்கள் எடுத்தன. பழமைச்சுவர் இடித்துத் தள்ளப்பட்டது.  

இனியொரு விதி செய்வோம் அதை எந்நாளும் காப்போம் என்பதை மறந்ததால் இன்றுவரை இந்த நாட்டில் உயர்சாதியினரின் ஆட்சிதான் நடந்துவருகிறது. பெரும் பதவிகளில் எல்லாம் மிகக்குறைந்த சதவீத மக்கள்தொகை கொண்ட ஆரியரின் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. (மத்திய மாநில தலைமைச் செயலகங்களின் உணவு விடுதிகளில்  தயிர் சாதமும் மாவடுவும்தான் அதிகம் விற்பனையாகிறதாம்.)  இதனால் தாழ்த்தப்பட்டோர் , சிறுபான்மையினர் மேலே வரமுடியாமல்தான் இருக்கிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று வார்த்தையளவில்தான்  சொல்லப்படுகிறது. நடைமுறையில்,  பரமக்குடியில் தாழ்த்தப்பட்டவனின் மேல் துப்பாக்கிக் குண்டு பாய்கிறது. அதற்காக பிரான்சு போல், ரஷ்யா போல் புரட்சி வரவேண்டுமென்று சொல்லவில்லை. தங்களின் சக்தியை இன்னும் மக்கள் உணராமல் “ஐயா சாமி” என்று வாய்பொத்தி ஆமாம் சாமி போடும் கண்மூடிப்பழக்கமெல்லாம் மண்மூடிப் போகவேண்டுமென்றே சொல்கிறோம். உயர் சாதிக்குப் பல்லக்குத் தூக்கும் மனப்பான்மை மடியவேண்டுமென்றுதான் சொல்கிறோம். இவர்கள் இப்படி உயர்சாதிக்கு ஜால்ராப் போடுவதற்கு  கல்வி யறிவு இல்லாமையும், கடவுளின் பெயரால் காலம் காலமாக பயமுறுத்தப்படுதலும் அடிப்படைக் காரணங்களாகும்

கடவுளுக்கு காணிக்கை செலுத்தாவிட்டால் கண் போய்விடும், ரத்தம் கக்கி சாவாய், அம்மனுக்கு கோபம வந்தால் மழை பெய்யாது என்றெல்லாம் கல்வி அறிவில் பலகீனமாக்கப்பட்டவர்கள் பயமுறுத்தப்பட்டு உயர்சாதியினர் ஏழைமக்களின் உதிரத்தை உறிஞ்சிக் கொழிக்கின்றனர்.  இத்தகைய அப்பாவிகளை மிரட்டி வைத்து இருப்பதில் மனு நீதியின் பங்கு பெரும் பங்கு ஆகும். தாழ்த்தப்பட்டவர்கள் நேரடியாக சொர்க்கம் செல்ல இயலாது என்றும், ஒரு பிராமணருடைய உயிரைக்காப்பாற்ற இலவசமாக தன் உயிரைக்கொடுத்தால் மட்டுமே சொர்க்கம் செல்ல முடியும் என்றும் அத்தியாயம் பத்து 62- வது சுலோகத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. அதுபற்றி பின்னர் பார்க்கலாம்.

இப்போது தொடராக, மனு நீதியின்  CHAPTER III. 3. சொல்கிறது. 

12. For the first marriage of twice-born men, wives of equal caste are recommended; but for those who through desire proceed to marry again the following females, chosen according to the direct order of the castes, are most approved. 

13. It is declared that a Shudra woman alone can be the wife of a Shudra, she and one of his own caste the wives of a Vaisya, those two and one of his own caste the wives of a Kshatriya, those three and one of his own caste the wives of a Brahmin. 

14. A Shudra woman is not mentioned even in any ancient story as the first wife of a Brahmin or of a Kshatriya, though they lived in the greatest distress. 

15. Twice-born men who, in their folly, wed wives of the low (Shudra) caste, soon degrade their families and their children to the state of Shudras. 

17. A Brahmin who takes a Shudra wife to his bed, will after death sink into hell; if he begets a child by her, he will lose the rank of a Brahmin. 

இருபிறவி பிறந்த உயர்சாதி ஆண்மகன் தனக்கு சமமான சாதியைச் சேர்ந்த பெண்ணைத்தான் திருமணம் முடிக்கவேண்டும். ( இரு பிறவி என்பதற்கு முன் அத்தியாயத்தில் விளக்கம் இருக்கிறது- பிறப்பது ஒரு பிறவி- பூணூல் அணிவது இரண்டாம் பிறவி). அவர்களுக்கு ஒரு மனைவி போதாது என்று நினைக்கும் பட்சத்தில் இரண்டாவதாக மணமுடிப்பதாக இருந்தாலும் தனது சாதியைச் சேர்ந்த பெண்ணையே மணமுடிக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட சாதியான சூத்திர சாதிப்பெண் ஒரு சூத்திரனையே மணமுடிக்க வேண்டும். நெடுங்காலங்களுக்கு முந்திய புராணங்களில் கூட ஒரு பிராமணன் சூத்திரப்பெண்ணை மணமுடித்த வரலாறு கிடையாதாம்.  

ஏதோ ஒரு உடலின் இச்சையில் அல்லது முட்டாள்தனத்தில் ஒரு “அபிஷ்டு”  உயர்சாதி பிராமணன் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த பெண்ணை மணமுடிப்பானாகில் அவனும் அவனது குடும்பமும் உயர்சாதி அந்தஸ்தை இழந்துவிடுவார்கள். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் உடனே பதவியிறக்கம் செய்யப்பட்டு சூத்திரர்களாகிவிடுவார்கள். ஒரு சூத்திரப்பெண்ணோடு தனது படுக்கையைப் பங்கிட்டுக்கொள்ளும் ஒரு பிராமணன்  நரகத்துக்குப் போகக்கடவன். அத்துடன் அதன்மூலம் ஒரு குழந்தையும் பெற்றால் அந்த பிராமணன் தனது உலக மகா அந்தஸ்தாகிய பிராமண அந்தஸ்தை இழந்து “அசடாகி” விடக்கடவன். சுப மஸ்”தூ.”

இன்னும் சுழலும் இந்த சாட்டை ...
-இபுராஹீம் அன்சாரி

29 Responses So Far:

crown said...

உயர்சாதியின் ஆதிக்கம் அழியவில்லை. அந்த அளவு “அவாளின்” செல்வாக்கு வேரூன்றி இருக்கிறது. சாதியாலும் , சம்பிரதாயத்தாலும், ஏற்ற தாழ்வாலும் உளுத்துப்போய் இருக்கும் இந்திய சமுதாய சுவற்றில் அங்கங்கு பூச்சுவேளை, பட்டி பார்த்து வர்ணம் பூசும் வேலைதான் நடந்து இருக்கிறது.
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். ஆமாம் இங்கும் வர்ணம் தான் பூசப்பட்டிருக்கு! எல்லாம் அவாள் வண்ணம். ஸ்தரமான தடுப்புச்சுவர் எழுப்பமுடியாமல் இருந்து கொண்டுதான் இருக்கிறது. சுவர் இல்லாமல் சுதந்திரம் என்னும் சித்திரம் எப்படி வரைய முடியும்??சுதந்திரம் என்பது ஒரு நாட்டிலிருந்து விடுதலை பெறுவதுமட்டுமல்ல தனிஉடமைமறுப்பவர்களிடமிருந்து பெறப்படும் உரிமையே சுதந்திரம் என்பது.அருமையான விழிப்புணர்வு .வாழ்த்துக்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஒரு “அபிஷ்டு” உயர்சாதி பிராமணன் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த பெண்ணை மணமுடிப்பானாகில் அவனும் அவனது குடும்பமும் உயர்சாதி அந்தஸ்தை இழந்துவிடுவார்கள்.//

அது சரி, அவா ஆத்து பொண்ணு இதே காரியத்தை செய்தால்... ஜட்ஜ்மென் ஷேம் தானே ? இல்லே ஒரு சொம்பு தண்ணீர் தெளிப்பா அலல்து ஒரு குடம் முழுகளா ?

சேக்கனா M. நிஜாம் said...

"சமூக நீதியின் முரசு" மூத்த சகோ. இப்ராகிம் அன்சாரி அவர்களே,

கடந்த தொடரில் நான் பதிந்த கருத்தே இப்பதிவுக்கும்

அதிரை சித்திக் said...

நான் சிறுவனாய் இருந்த போது..என் உறவினரோடு

விழுப்புரம் ,,சென்றிருந்தேன் அவர் ,பால்ய சிநேகிதன் வீட்டுக்கு

சென்று வரலாம் என ஒருவர் வீட்டிற்கு அழைத்து சென்றார் ..

அங்கே தீண்டாமை தாண்டவமாடிய காட்சியை..விவரிக்கிறேன் ,

(பெயர் மாற்றம் செய்யப்பட்டது ) ராஜாஎன்பவர் தாழ்த்த பட்ட இனத்தை

சார்ந்தவர் .லட்சுமி பிராமின் ..லட்சுமிக்கு தொழுநோய் ,,ராஜா நன்கு படித்த

பட்ட தாரி அரசு உத்தியோகம் ..லட்சுமி பார்க்க அழகாக இருப்பார் ..அவரின்

நோயை கருத்தில் கொண்டு லட்சுமிக்கு யாரும் வரன் கொடுக்க முன் வரவில்லை

இளம் குமரியான லட்சுமியின் வனப்பை கவர்ந்த ராஜா மனதை பரி கொடுத்தார்

கிளை தேடிய முல்லை கொடிலட்சுமி ராஜாவின் அடைக்கலத்தை அங்கீகரித்து

கொண்டார் மணமாகிய மறு நிமிடமே அக்ரஹாரத்தில் இருந்துலட்சுமி துரத்தப்பட்டார்

வயதான தாயாருடன் வாடகை குடியிருப்பில் தஞ்சம் கொண்டனர் ராஜா லட்சுமி

.என்னதான் தன மகளுக்கு வாழ்வு அளித்தாலும்

தாழ்த்த பட்ட இனம் என்ற தீட்டு இருப்பதாக நம்பும் லட்மியின் அம்மா

தினமும் ராஜா அமர்ந்த இடத்தை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து விடுவார் .

.நாங்கள் சென்ற தினத்தில் கூட . ..ராஜா உட்கார்ந்த இடத்தை

ஈர மான துணி கொண்டு துடை தார் ..என்ன இது ,,என என் உறவினர் வினவினார்

அது அவங்க நம்பிக்கை எனவே நான் எதுவும் சொல்வதில்லை..முடிந்த வரை வீட்டிற்கு

வெளியில்தான் இருப்பேன் உண்க ,உறங்க .மட்டுமே வீட்டிற்குள் செல்வேன் ..

,நான் நான் உணவருந்தி விட்டு எழுந்த மறு நிமிடமே

லட்சுமியின் அம்மா நான் அமர்ந்த இடத்தை தண்ணீர் விட்டு துடைத்து விடுவார்

இது தினமும் நடக்கும் நிகழ்வு என்றார்

லட்சுமி பாவம் அவளுக்கு உடல் நிலை சரியாக இருந்தால் இந்த சங்கடம்

இருந்திருக்காது என்றார் ..பிராமின் ..செய்வது எல்லாம் சரி என்று தாழ்த்த பட்ட

மக்களிடம் மனதில் ஊறி போய் விட்டது ..ஐயர் வீட்டு பெண்ணை மற்ற இன மக்கள்

தொட்டு தாலி கட்டினால் அது பெரும் தீட்டு என்றும் அவன் குடும்பத்திற்கே நாசம்

விளைவிக்கும் என்றும் நம்பிக்கையை பரப்பி வைத்துள்ளார்கள் ..வீரமில்லா பிராமின்

விவேகமாக சாஸ்திரம் என்று அழகாக காதில் பூ சுத்து கிறார்கள் ..,

அப்துல்மாலிக் said...

அவா ளுகளுக்கு மட்டும் அறிவு எங்கேர்ந்து வருது, முஸ்லிம்கள் மொதலாளியாக இருக்கும் கம்பெனிகளீல் கூட அவா க்கள்தான் மெனேஜிங்க் டைரக்டராம். நம் சமுதாயத்துக்கு காசை மட்டும் கொடுத்து அடுத்தவாளிடம் அடிமையா இருக்கசெய்துட்டான் அந்த வல்ல இறைவன்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஆண்டவன் படைத்த உயிருக்கு இவர்கள் உயர்வு-தாழ்வு கொடுப்பதா?
ஏன் இன்னும் பெரும்பான்மை மனித நேயங்கள் இவர்களை மதிக்கிறதோ!
அம்பேத்கார் பெரியாருக்குப்பின் வேறு யாரை இவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கார்களோ!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

வழக்கம் போல் காக்காவின் தாக்கமான ஆக்கம்.

"காலமெல்லாம் தீண்டத்தகாதவனாக கருதி ஒதுக்கி வைக்கப்படும் சூத்திரன் நாட்டில் பரவலாக நடாத்தப்படும் மதக்கலவரங்களில் மட்டும் தன் வீட்டு மாப்பிள்ளை போல் அவாளால் உபசரிக்கப்படுகிறான்".

உல‌க‌ப்போர்க‌ளையும் மிஞ்சிடும் கொடுமைக‌ள் நிறைந்த‌து நாட்டில் ஒரு சிலரால் திட்ட‌மிட்டே ந‌ட‌த்த‌ப்ப‌டும் ம‌த‌க்க‌ல‌வ‌ர‌ங்க‌ள்.

ஆழிப்பேர‌லை சுனாமி வ‌ந்து உல‌க‌ வ‌ரைப‌ட‌த்தையே கொஞ்ச‌ம் ந‌க‌ர்த்தி விட்ட‌தாக‌ அறிவிய‌லாள‌ர்க‌ள் சொல்வ‌து போல் சும்மா இருந்த‌ பாப‌ர் ம‌சூதியை இடித்த‌ பின் ந‌ம் நாடு ப‌ல‌ இன்ன‌ல்க‌ளையும், சொல்லாத்துய‌ர்க‌ளையும் அடைந்து கொண்டிருப்ப‌தாக‌வே க‌ருதப்ப‌டுகிற‌து.

ம‌ன‌சாட்சியுட‌ன் மெள‌ன‌மாய் பேசிக்கொள்ப‌வ‌ர்க‌ளுக்கு நிச்ச‌ய‌ம் இது உண‌ர‌ப்ப‌டும்..........

Shameed said...

எத்தனை அம்பேத்கார் வந்தாலும் அவாளை திருத்த முடியாது திண்ணை கழுவுவதும் தீட்டு களிப்பதுமாகத்தான் இருப்பார்கள் இதற்க்கு ஒரே வழி நாட்டில் உள்ள அனைவரும் அம்பேத்காரா மாறனும்

Yasir said...

//" மஸ்”தூ." // தூ தூ ச் சீ இதெல்லாம் ஒரு ஜாதி .....இன்னும் உரித்துக்காட்டுங்கள் இவர்கள் அநியாயத்தை

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இப்றாஹீம் அன்சாரி காக்கா,

நல்ல வரலாற்று தகவல்களுடன் அடிமைத்தனத்த்து சாட்டியடி தந்துள்ளீர்கள். இருப்பினும் என்னுடை மனதில் பட்ட ஒரு வரலாற்று வீரர், அடிமைத்தனத்தினால் பாதிக்கப்பட்டு மீண்டும் ஒர் மிகப்பெரிய அங்கீகாரம் பெற்றவர் பற்றிய தகவலை இங்கு பகிர்கிறேன்.. அவர் தான் ஹஜரத் பிலால் (ரழி) அவர்கள்.

சுப்ஹானல்லாஹ்....

பிலால் (ரழி) அவர்கள் இஸ்லாத்திற்கு முன்பு இருந்த நிலை (அன்று) கேவலமாக கருதப்பட்ட ஓர் அடிமைக்கு பிறந்த அடிமை, பிறகு இஸ்லாத்தை ஏற்றதற்காக தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையையும் சகித்துக்கொண்டார்கள்... இதற்கு பகரமாக நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு முறையும் என்னுடைய பிலால், என்னுடைய பிலால் என்ற வார்த்தையை பல சந்தர்பத்தில் சொல்லி கவுரபடுத்தினார்கள், தொழுக்கைகான அழைக்கும் பொறுப்பை பிலால் அவர்களுக்கு கொடுத்தார்கள். மக்கா வெற்றிக்கு பிறகு அல்லாஹ்வின் கிருபையால் மிகப்பெரிய ஆட்சியாளராக முதல் முதலில் கஃபத்துல்லா சாவியை கையில் எடுத்து உள்ளே நுழையும்போது அழைத்துச் சென்ற இரண்டு தோழர்கள்களில் பிலாலும் ஒருவர். இந்த அங்கீகாரம் வேறு எந்த நபி தோழருக்கும் கிடைக்கவில்லை. வரலாற்றை புரட்டிப்பார்த்தால் அபூபக்ர் (ரழி) அவர்களும் உமர் (ரழி) அவர்களும் பிலால் (ரழி) அவர்களுக்கு நபிகளார் கொடுத்த அதே முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதை அறியலாம்.

சூத்திரன் என்ற பட்டத்தை உடைக்க ஒரே வழி, இஸ்லாத்தை ஏற்பது என்பதே பிலால் (ரழி) போன்றவர்களின் வரலாறுகள் சான்று என்பதை யாரும் மறுக்க முடியாது.

Anonymous said...

நம்மவர்களுக்கு எந்த நீதியும் கிடைக்காது. நாம் தான் நீதியை பற்றி சொல்லிக்கொண்டு இருக்கிறோம். நம் சமுதாயத்தவர்களுக்கு நீதி என்பதே கிடையாது.நீதியில் கூட ஜாதி,இனம் என்றல்லாம் பார்க்கிறார்கள். நம்மவர்களுக்கு சரியான நீதி என்பதே கிடையாது

Ebrahim Ansari said...

தம்பி அபூ இபுராஹீம் கேட்பது

//அவா ஆத்து பொண்ணு இதே காரியத்தை செய்தால்... ஜட்ஜ்மென் ஷேம் தானே ?//

ஒரே ஜட்ஜ்மென்ட் தான். பெண்ணுக்கு இரண்டு அடி கூட விழும். இன்ஷா அல்லாஹ்

தொடரின் ஆறாம் பகுதியில் பெண்ணின கொடுமைகளை விவரிக்க இருக்கிறேன். பொறுத்திருந்து பாருங்கள்.

Ebrahim Ansari said...

எம். ஹெச். ஜெ. கேட்டது

//அம்பேத்கார் பெரியாருக்குப்பின் வேறு யாரை இவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கார்களோ!//

பெருமகன்கள் எப்போதும் பிறந்து கொண்டே இருப்பார்கள் என்று எதிர்பார்க்க இயலாது. நாம்தான் திருத்தவேண்டும். அதே நேரம்

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று கைகளைக் கட்டிக்கொண்டு காத்து இருக்க முடியாது. பெரியாருக்குப் பின் ஒரு தொய்வும் பின்னடைவும் ஏற்பட்டுவிட்டது. அதனால் ஆட்டம் அதிகமாக இருக்கிறது. பார்க்கலாம். விழிப்புணர்வை பகிர்ந்து கொண்டே இருப்போம்.

Ebrahim Ansari said...

தம்பி மு. செ. மு. நெய்னா அவர்கள் கருத்துரையிட்டது

//"காலமெல்லாம் தீண்டத்தகாதவனாக கருதி ஒதுக்கி வைக்கப்படும் சூத்திரன் நாட்டில் பரவலாக நடாத்தப்படும் மதக்கலவரங்களில் மட்டும் தன் வீட்டு மாப்பிள்ளை போல் அவாளால் உபசரிக்கப்படுகிறான்".//

நன்மையை ஏவி தீமையை தடுக்கும் சமுதாயமாக நம்மை இறைவன் அறிவித்து இருக்கிறான். A open declaration by Allah SWT.

ஆனால் நாம் அழைப்புப் பணியை புறக்கணித்துவிட்டு நம்மவர்கள் மேலேயே ஏதாவது தீமையை ஏவுவதில் முனைப்பாக இருக்கிறோம். எங்கே யாரை நம்மவர்களாக இலகுவாக (தூ)ஆக்கமுடியும் என்ற் கோணத்தில் சிந்திக்காமல் அந்த வட்டாரத்தை சுளையாக தூக்கிக் கொடியவர்கள் கரங்களில் கொடுக்கிறோம். காலமெல்லாம் கைகட்டி நின்ற மக்களுக்கு கட்டளை இடுவது அவாளுக்கு இலகுவாகிறது.

எல்லாவற்றிற்கும் இயக்கம் இருக்கிறதே – அழைப்புப்பணிக்கு இயக்கம் இருக்கிறதா? கண்ணெதிரே காட்டுக்கருவையையும், கல்லிச்செடியையும் வளர்வதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு பெருநாள் பிறையைப் பற்றி கவலைப்படும் இயக்கங்கள் தனது சக்திகளை வீண்டிக்கின்றனவே -இதைப்பற்றி நீங்கள் எழுதுங்களேன்.

அழைப்புப்பணிக்கு இயக்கம் காண்பதே இவைகளைத் தோண்டி எடுக்கக் காரணம்.

Ebrahim Ansari said...

அருமை நண்பர் சித்தீக் அவர்களே!

நானும் பலவற்றைப் பார்த்து இருக்கிறேன். நம் ஊர் சிவன் கோயில் அருகே உள்ள அய்யர் வீட்டில் சிறுவயதில் நான் பால் வாங்கப் போயிருக்கிறேன். பால் செம்பை திண்ணையில் வைக்கவேண்டும். திண்ணையில் இருந்து செம்பை எடுத்து பாலை ஊற்றிவிட்டு திண்ணையின் மேலேயே வைத்துவிட்டு “ எடுத்துக்கோடா அம்பி” என்பார்கள். நாம் கொடுக்கும் காசை கையால் வாங்காமல் “ அப்படி திண்ணையில் வய்யுடா அம்பி “ என்று அந்த மொட்டை அடித்த விதவை பட்டு மாமி சொல்வார்கள். காசுக்கு தீட்டு இல்லை. காசு தருபவன்தான் தீட்டுப்பட்டவன். நாய் விற்ற காசு மட்டும் குலைக்காது..

Ebrahim Ansari said...

தம்பி அப்துல் மாலிக் அவர்கள் வெளிப்படுத்தும் ஆதங்கம்.

//முஸ்லிம்கள் மொதலாளியாக இருக்கும் கம்பெனிகளீல் கூட அவா க்கள்தான் மெனேஜிங்க் டைரக்டராம்.//

யார் காரணம்? அப்படி ஒரு இமேஜ் உருவாகிவிட்டது.

ஐயர்கள் - ஹையர்கள் ( AIYERS ARE HIGHERS) என்கிற மாயையின் வெளிப்பாடு. அத்துடன் சூது, வாது, சகுநிவேளை, ஒட்டிவிடுவது, வெட்டிப்பிரிப்பது, அடுத்துக்கெடுப்பது, முகஸ்துதி, வார்த்தை அலங்காரம், காட்டவேண்டியதைக் காட்டி, பெறவேண்டியதை பெறுவது எல்லா தகிடுததங்களும் அத்துப்படி- தாயின் பாலோடு சேர்த்து ஊட்டப்படும் குலவித்தைகள்.

இவர்களை மனதில் வைத்தே வள்ளார் “ உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” என்று பாடினாரோ?

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி ஜனாப். தாஜுதீன் அவர்கள் குறிப்பிடுவது:

//சூத்திரன் என்ற பட்டத்தை உடைக்க ஒரே வழி, இஸ்லாத்தை ஏற்பது என்பதே பிலால் (ரழி) போன்றவர்களின் வரலாறுகள் சான்று என்பதை யாரும் மறுக்க முடியாது.//

ஏற்கனவே குறிப்பிட்டு இருப்பதைப் போலவே இந்த தொடர், இன்னும் இதற்கு முன்பு எழுதியவை, இன்ஷா அல்லாஹ் இன்னும் எழுத இருப்பவை யாவும் அழைப்புப்பணியை முன்னிறுத்துவதற்காகவே இருக்கும்.

இத்தொடர் முடியும் போது நன்றாக உரைக்கும் வண்ணம் பல வரலாற்று சம்பவங்களை ஒப்பீடாக காட்ட எண்ணி இருக்கிறேன்.

தாங்கள் தந்திருக்கும் இந்த வரலாற்று சான்றுகள் அவைகளில் தலையாய இடம் பெறும்.

அத்துடன் ஏதோ நான், நீங்கள், மற்றவர்கள் எழுதி நீங்களும் நம்மில் சிலரும் மட்டும் படித்து பின்னூட்டம் இடுவது என்கிற சம்பிரதாயமாக இல்லாமல் இந்த கருத்துக்களை கொண்டு சேர்க்கவேண்டிய இடங்களில் சேர்க்க வேண்டும் என்பதே என் அபிலாஷை. அதற்கு நாம் அனைவரும் பாடுபடவேண்டும். பணியாற்றவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ZAKIR HUSSAIN said...

//Twice-born men who, in their folly, wed wives of the low (Shudra) caste, soon degrade their families and their children to the state of Shudras. //


ஏதோ Game Show மாதிரி இருக்கு

Ebrahim Ansari said...

தம்பி ஜாகீர் !

ஆமாம். Game Show தான். ஆனால் இத்தனை நூற்றாண்டுகளாய் நடக்கிறதே என்பதுதான் பிரச்னை.

sabeer.abushahruk said...

இந்த ஆய்வு நான் அறிந்திராத பல தகவல்களை வெளிச்சம்போட்டு காட்டுகிறது. தொடர் முடிந்தபிறகு மீண்டும் ஒருமுறை முதலிலிருந்து ஒரே மூச்சில் வாசிக்க வேண்டும் என்றும் அப்படி வாசிக்கும்பட்சத்தில் இன்னும் நரம்புகள் முருக்கேறி இவாளின் வன்டவாளங்களை எளியோருக்கு தெளிவாக எடுத்துச்சொல்ல முடியும் என்றும் தோன்றுகிறது.

எனினும் காக்கா, தற்போது ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்விலும் அறிவிலும் இவிங்க ஏன் அவாளுக்கு அடங்கிப் போறாய்ங்க?

Anonymous said...

சகோதரர்களுக்கு,

படைத்தவனின் சாந்தியும் சமாதாமும் உண்டாகட்டும்..

மனுநீதி தொடரை மட்டுமல்ல இங்கே வெளியாகும் கட்டுரை, கவிதைகளை படித்து வருகிறேன், அதற்கான கருத்தை சொல்ல மனதில் தோன்றும் ஆனால் எழுத முடியவில்லை இதுதான் உண்மை.

நானும் ஆத்து பொண்ணாகதான் இருந்தேன், எங்கள் வீட்டில் நடந்ததையே இங்கு சொல்கிறேன்.

பள்ளிக்கூடத்திலிருந்து பழக்கம் தொடர்ந்து நண்பரை திருமணம் செய்து கொள்ள விரும்பினேன் வீட்டில் அப்பாவிடம் சொன்னேன் அவர் சம்மதிக்கவில்லை, அம்மா சரியென்றவர் அமைதியாக இரு என்று சொல்லி அடக்கி வைத்தார். எனது நண்பரைப் பற்றியும் அவரின் குடும்பத்தைப் பற்றியும் எங்கள் வீட்டில் நன்கறிவர்.

நான் கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும்போது மீண்டும் பேச்சை ஆரம்பித்தேன், அம்மா "படிப்பை முடி பையனும் படிப்பை முடிக்கட்டும் அப்புறம் யோசிக்கலாம்" என்று சொன்னாலும் எனக்கு உள்ளூர பதற்றம் இருந்தது.

இதற்கிடையில் என்னுடைய அக்காவுக்கும் இதே நிலைதான் இருந்தாலும் முடிவை தானாக எடுத்துக் கொண்டு தனக்கு பிடித்தவரோடு ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துவிட்டு அப்பா அம்மாவிடம் சொன்னாள். அம்மா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அப்பா, பாட்டி, அண்ணன் இவர்களின் வெறுத்து ஒதுக்கும் போக்கு எனக்கு மிகவும் கஷ்டத்தை கொடுத்தது.

இதேபோல் செய்தால் இதுதான் நிலையோ என்ற பயம் இருந்ததாலும் தளர்ந்து விட்டேன், இதுவரை அப்பா அவளை ஏற்றுக் கொள்ளவில்லை, அதற்கான காரணத்தை எனக்கு சொல்லத் தெரியவில்லை.....

அக்காவின் செய்தது சாதி வேறு, என் நிலையோ மார்க்கம் வேறு. அப்பா அந்த நிமிடத்திலிருந்து கட்டுப்பாடுகள் விதித்தார் எனக்காகவே வேறு ஊருக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு மாறினோம் நாளடைவில் பல போராட்டத்திற்கு பின்னரே நானும் திருமணம் செய்து கொண்டேன்.

அம்மாவிடம் அதிகம் சண்டை போட்டிருக்கிறேன், 'பெரியவா ஆத்துல சேர்க்க மாட்டா இதுதான் அவரின் பதிலாக இருக்கும்' வேறு விளக்கங்கள் கிடைக்காது, ஆனால் எனது திருமணத்திற்கு பின்னர் விளக்கங்களும் தெளிவுகள் நிறைய என்னுடய தேடலுக்கு கிடைக்கிறது கற்றுக் கொண்டேன்.

என் கணவர் மற்றும் குழந்தைகளோடு இறைவன் காட்டிய நேர்வழியின் பக்கம் அவனது நாட்டப்படி எங்களை அமைத்துக் கொண்டதால் தெளிவுடன் இருக்கிறோம் - புகழ் அனைத்தும் இறைவனுக்கே.

எங்களோடு இருப்பதற்கு பொற்றோர் விரும்புவதால் அண்ணன் குடும்பம் எனது பெற்றோரை தள்ளி வைத்துவிடுவோம் என்று பயமுறுத்தி வைத்திருக்கின்றனர். இறைவன் நேர்வழியை காட்டி மனிதனால் இயற்றப்பட்ட சடங்கு சம்பிரதாயங்களை துடைத்தெரிந்து தூய இஸ்லாத்தின் பக்கம் அவர்களின் மீதமிருக்கும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இறைவனிடம் பிராத்திக்கிறேன்.

-சகோதரியின் வேண்டுகோளுக்கினங்க பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது.

Unknown said...

காக்கா,

நன்னா ஒரு விஷயம் நேக்கு தெரியுதன்னா .....
அவாள்ட பாஷையை அவாள்ட ஆத்துல மாத்திரம் பேசிண்டு வெளியிலே நன்னா நடிக்குறா......

தன் பாஷையை கூட சமூகத்தில் பங்கிடாமல் இருப்பதை வைத்தே அவர்களின் தீண்டாமை கொள்கை எவ்வுளவு உயிர்ப்புடன் இருப்பதை அறியலாம் .

Yasir said...

today news in thatstamil.com
//திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே ஆடையூர் அரசு நடுநிலைப் பள்ளியில் தலித் மாணவர்களை சேர்க்கக் கூடாது என்று மற்றொரு சமூக பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவ்த்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆடையூரில் அரசு நடுநிலைப் பள்ளியும் ஆதி திராவிடர் நடுநிலைப் பள்ளியும் இயங்கி வருகிறது. ஆதி திராவிடர் நடுநிலைப் பள்ளியில் சரியாக பாடம் நடத்தப்படாததால் அரசு நடுநிலைப் பள்ளியில் சில தலித் மாணவர்களை பெற்றோர் சேர்த்தனர்.
ஆனால் இதற்கு மற்றொரு சமூகத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து தலித் மாணவர்களுக்கு உடனே டிசி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டமும் நடத்தப்பட்டதால் அங்கு கல்வித்துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஒரே பகுதியில் ஆதி திராவிடர் பள்ளியும் அரசு நடுநிலைப் பள்ளியும் இயங்காமல் ஒரே பொதுப் பள்ளியாக இயங்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் கருத்து//

Ebrahim Ansari said...

முகம் காணமுடியாத பெயர் அறியமுடியாத அன்பு சகோதரிக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

//என் கணவர் மற்றும் குழந்தைகளோடு இறைவன் காட்டிய நேர்வழியின் பக்கம் அவனது நாட்டப்படி எங்களை அமைத்துக் கொண்டதால் தெளிவுடன் இருக்கிறோம் - புகழ் அனைத்தும் இறைவனுக்கே.//

நாங்கள் எழுதுவது இப்படியெல்லாம் சென்று சேர்கிறது என்பதை உங்கள் மூலம் அறியும்போது எல்லாம் வல்ல இறைவனுக்கு மிகவும் நன்றி செலுத்துகிறோம்.

நாம் எழுதுவது விழலுக்கு இறைத்த நீரல்ல என்று அறியும்போது மீண்டும் மீண்டும் தெம்பு பிறக்கிறது.

உங்களையும் உங்களின் கருத்துக்களையும் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.

தங்களைப்போல் பலர் அறியவேண்டும் – இறைமார்க்கத்தில் உண்மையின்பால் வரவேண்டுமேன்பதே எங்களின் நோக்கம். விரைவில் உங்கள் குடும்பத்தார் அனைவரும் உங்களையும் நீங்கள் அரவணைத்துக்கொண்ட உண்மையையும் அறிந்து உங்களுடனும், எங்களுடனும் இணைந்துவாழ அருள் புரியுமாறு வல்ல இறைவனிடம் இறைஞ்சுகிறோம்.

வஸ்ஸலாம்.

Ebrahim Ansari said...

அன்புத்தம்பி ஹார்மிஸ் அப்துல் ரகுமான் அவர்களுக்கு,

//தன் பாஷையை கூட சமூகத்தில் பங்கிடாமல் இருப்பதை வைத்தே அவர்களின் தீண்டாமை கொள்கை எவ்வுளவு உயிர்ப்புடன் இருப்பதை அறியலாம் .//

சரியான கருத்து. தேசங்கள் தோறும பாஷைகள் வேறு என்று சொல்வார்கள். தஞ்சை தமிழுக்கும், திருநெல்வேலி தமிழுக்கும், கோவைத்தமிழுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

ஆனால் இவர்கள் மொழி பாலக்காட்டிலிருந்து – பண்ருட்டி வரை – ராஜஸ்தானிலிருந்து ராயலசீமா வரை ஒரே வடிவம்- வார்த்தைகள்.

அவா, இவா ,நன்னா ,அசடு, அம்மாஞ்சி, அபிஷ்டு, படுத்துறான், ஜலம், வரச்சே, போரச்சே, ஆத்துக்கு, - இப்படி .

அத்துடன் பேசும்போதே ஏதோ மவுண்ட்பேட்டன் பிள்ளைகள் போல் திடீரென்று ஆங்கிலம் வந்துவிடும். இதை சொல்லும்போது நினைவுக்கு வருகிறது நான் இரண்டாம் மொழியாக கல்லூரியில் இந்தி எடுத்துப் படிக்கும்போது இந்தி பேராசிரியர் சொல்லுவார் “ IF YOU ARE SHOUTING LIKE THIS கண்டிப்பா ஆப்சென்ட் போட்டுடுவேன் “ என்பார். அதுக்கு பசங்க “ IF YOU ARE BORING LIKE THIS கண்டிப்பா கேண்டீனுக்குபோயிடுவோம்” என்பார்கள்.

இப்படி ஆங்கிலம் கலந்து இவர்கள் பேசும் பாஷைக்கு மணிப்பிரவாளம் என்று தனி ஸ்டைல் பெயராம்.

Ebrahim Ansari said...

அன்புக்குறிய மருமகன் யாசிர்!

திருவண்ணாமலை சம்பவம் போன்ற - தற்காலத்திலும் நடைபெறும் இத்தகைய சம்பவங்களை தொடரின் அடுத்த அத்தியாயங்களில் சான்றுகளுடன் குறிப்பிட இருக்கிறேன். இன்ஷா அல்லாஹ்.

Ebrahim Ansari said...

கருத்துரை தந்த – தொடரை தொடர்ந்து படித்து ஆர்வமூட்டும் வார்த்தைகளின் வடிவமைப்பாளர் தம்பி கிரவுன், மார்க்கத்தின் சாட்டை அர.அல., விழிப்புணர்வு வித்தகர் ஷேக்கனா நிஜாம், பேசும்படம் சாகுல் ஹமீது, ஆகிய அனைவருக்கும் மிகவும் கடமைப்பட்டு இருக்கிறேன். ஜசக்கலாஹ் ஹைரண்.

அபூபக்கர் அமோஜான் அவர்கள்

//நம்மவர்களுக்கு எந்த நீதியும் கிடைக்காது. நாம் தான் நீதியை பற்றி சொல்லிக்கொண்டு இருக்கிறோம். நம் சமுதாயத்தவர்களுக்கு நீதி என்பதே கிடையாது.நீதியில் கூட ஜாதி,இனம் என்றல்லாம் பார்க்கிறார்கள். நம்மவர்களுக்கு சரியான நீதி என்பதே கிடையாது //

இப்படி PANIC ஆகவேண்டாம். நம்பிக்கை வையுங்கள் து ஆச செய்யுங்கள்.

கவித்தம்பி ( எல்லோருக்கும் கவிக்காக்கா எனக்கு கவித்தம்பிதானே!) மிக்க நன்றி. எப்போ வருகிறீர்கள்? உங்களின் கேள்விக்கு விரிவான பதில் அடுத்தடுத்த அத்தியாயத்திலே விரிவாக தர முயற்சிக்கிறேன். இன்ஷா அல்லாஹ்.

L.M.S. மற்றும் அலாவுதீன் ஆகியோரை கண்கள் தேடுகின்றனவே.

இப்னு அப்துல் ரஜாக் said...

இந்த அதி மேதாவி ??? பிராமணக் கலாச்சாரத்தால் சூத்திரர்கள் மட்டும் துயர் பெற வில்லை.மனித சமூகம் அனைத்துக்குமே கேடே

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு