கடந்த சில நாட்களாக அதிரையில் பரப்பரப்பாக பேசப்படும் செய்தி மாட்டுக்கறி வியாபாரத்துக்கு தடையா / தடையில்லையா? என்பதுதான். இது தொடர்பாக அதிரை பேரூராட்சி மன்றத் தலைவர் சகோதரர் S.H.அஸ்லம் அவர்கள் நமது சகோதர வலைத்தளங்களில் அவர்களின் நிலையை மக்கள் மத்தியில் விளக்கமாக எடுத்துரைத்தார், மேலும் அதிரை தமுமுக மீது சில குற்றச்சாட்டுகளையும் அதில் முன் வைத்தார்கள்.
இதன் தொடர்ச்சியாக, சமுதாய சேவை செய்கிறோம் என்று சொல்லுகிறீர்கள் ஆனால் பேரூராட்சி மன்றத் தலைவர் அவர்கள் அதிரை த.மு.மு.க. பற்றி பட்டியலிட்டு குற்றம் சாட்டியுள்ளார் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று பொதுமக்களின் வேண்டுகோளுடன் அதிரை தமுமுக நிர்வாகிகளை அனுகினோம். அதன் காணொளியினை இங்கே பதிந்துள்ளோம்.
சகோதரர் செய்யது பேட்டி
சகோதரர் அஹமது ஹாஜா பேட்டி
சகோதரர் சாகுல் ஹமீத் பேட்டி
பட்டுக்கோட்டை பஜக, இந்து முன்னனியினரிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் நகல்கள், மற்றும் அதிரை பேரூராட்சி கூட்ட அழைப்பு நகல்.
இந்த பேட்டி இயக்கங்கள் அல்லது தனிநபர் இவர்களில் யாரையும் உயர்த்தவோ தாழ்த்தவோ அல்ல, நம் சகோதரர்களுக்கிடையே புரிந்துணர்வு ஏற்படவேண்டும், பகைமை போக்கவேண்டும். சம்பத்தப்பட்ட இருசாராரும் தங்கள் தரப்பில் உள்ள தவறுகளை உணர்ந்து, ஒருவருக்கொருவர் பகை மறந்து ஒற்றுமையுடன் அவர்களின் சமுதாய சேவையை செய்யவேண்டும் என்பதே அதிரை மக்கள் அனைவரின் ஆவல். இதனை நிறைவேற்றுவார்களா ? பொருத்திருந்து பார்ப்போம் !.
இந்த பேட்டி இயக்கங்கள் அல்லது தனிநபர் இவர்களில் யாரையும் உயர்த்தவோ தாழ்த்தவோ அல்ல, நம் சகோதரர்களுக்கிடையே புரிந்துணர்வு ஏற்படவேண்டும், பகைமை போக்கவேண்டும். சம்பத்தப்பட்ட இருசாராரும் தங்கள் தரப்பில் உள்ள தவறுகளை உணர்ந்து, ஒருவருக்கொருவர் பகை மறந்து ஒற்றுமையுடன் அவர்களின் சமுதாய சேவையை செய்யவேண்டும் என்பதே அதிரை மக்கள் அனைவரின் ஆவல். இதனை நிறைவேற்றுவார்களா ? பொருத்திருந்து பார்ப்போம் !.
46 Responses So Far:
அதிரை சேர்மன் இஸ்லாமியர்
தமுமுக சகோதரங்கள் இஸ்லாமியர்கள்
மாறிமாறி வசைமாறி மொழிந்து வெட்கி தலைகுனிகிறேன்.
வெட்கி தலைகுனிவது மொத்தத்தில் அதிரையர்கள்,
மொத்தத்தில் பாதிக்கப்படுவது அதிரையர்களே!
அன்பிற்கினிய சொந்தங்களே,
கடந்த காலங்களில் அரசியல் கட்சிகள் மத்தியிலும், மாநிலத்திலும் நம் சமுதாயத்திற்கு மாறி, மாறி அடித்த ஆப்புகள் இன்னும் பிடுங்கப்படவில்லை. அதன் வலியோ ரணமாகி உலகெங்கும் இன்று மெல்ல, மெல்ல பரவி புற்று நோயாய் மாறிக்கொண்டிருக்கும் வேளையில் வர இருக்கும் மரணத்திற்காக போராடுவதா? இல்லை அதுவரை எஞ்சியிருக்கும் வாழ்விற்காக போராடுவதா? என்ற நிலைக்கு ஆளாகி இருக்கிறோம்.
சண்டையில்லாமல் அமைதியாய் செட்ல்லாக வேண்டிய இடம் கபுருஸ்தானை தவிர வேறென்னவாக இருக்க முடியும்?
ஆனால் தவறு எங்கோ குடிகொண்டிருக்கிறது. அது நன்கு ஆராய்ந்து கண்டெடுக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படாதவரை படுக்கையறையில் ரத்தம் குடிக்கும் மூட்டைப்பூச்சிகளை கொத்து, கொத்தாக வைத்துக்கொண்டு வராண்டாவில் மேலும் கொசுக்களை ஒழிக்க மருந்தடிப்பது போல் ஆகி விடும்.
தமிழ் நாட்டில் நமக்கு நாமே என்ற திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது
அதிரைபட்டினத்தில் நமக்கு நாமே ஆப்பு அடிக்கும் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது
தமுமுகவின் ஜவஹிருல்லாஹ் ,அஸ்லம் பாஷா ,தமீம் அன்சாரி ஆகியோர் தோர்க்க வேண்டும் என துஆ செய்கிறேன் என் கூரியாதக் கூறும் செய்து காக்கா அவர்களுக்கு ஒரு கேள்வி.
தமுமுகவின் அரசியல் பிரிவான மமக சார்பில் இராமநாத புரத்தில் SDPI யின் வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என நினைத்து களம் கண்ட மமகட்சி காவி சிந்தனையுள்ள கட்சியா??
அதிரை நிருபருக்கு இது வரை ஊர் செய்திகள் எதுவும் போடாத நீங்கள் ... இந்த செய்தி போடா அவசியம் ?????
நீங்கள் தான் இந்த செய்தியை முதலில் தலத்தில் விட்டிர்கள்.. கரணம்... ??????????????
இது அதிரை மக்களின் கேள்வி??????
தமிழ் நாட்டில் நமக்கு நாமே என்ற திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது
அதிரைபட்டினத்தில் நமக்கு நாமே ஆப்பு அடிக்கும் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது >>>>>>>
ரொம்ப சரியா சொன்னீங்க சாகுல் ...ஆப்பு யாருடையது பெரியது போக போக தெரியும் ..பாவம் ..புண்ணியம்
பார்க்காம அரசியல் செய்கிறார்கள் ..
பசுவதைக்காக வருந்தி அதை எதிர்த்து போராடும் சகோதரர்கள் நம் சுற்றுவட்டாரங்களில் அரசின் எத்தனையோ நிர்வாக சீர்கேடுகளுக்காகவும் அல்லது காலம் காலமாக நம் பகுதிகளில் ஓடி கடைசியில் அகல ரயில் பாதை என்று சொல்லி அரசியல் விளையாட்டில் பழிவாங்கப்பட்ட கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் கொண்டு வருவதற்காகவும் ஏன் களத்தில் இறங்கி போராட முன்வரவில்லை?
இந்து முண்ணனியோ, இஸ்லாமிய முண்ணனியோ எந்த சூழ்நிலையிலும் மனித நேயத்தில் பிண்ணனியாகி விட வேண்டாம்.
"லக்கும் தீனுக்கும் வலியத்தீன்" உன் மதம் உனக்கு மேன்மையானதே. அவன் மதம் அவனுக்கு மேன்மையானதே. இதில் என்ன குற்றம், குறை கண்டுகொண்டாய்???
மனிதன் தன்னைத்தானே வதை செய்து கொள்ளும் எத்தனையோ நேர்ச்சைகளும், நரபலிகளும், விலங்கு, பறவை பழிகளும், ரத்தக்காட்டேறி (இன்று போய் நாளை வா) மூட நம்பிக்கைகளும் நம் நாட்டின் கிராமந்தோறும் பரவிக்கிடக்கின்றனவே அதை எதிர்த்தெல்லால் ஏன் விழிப்புணர்வு இயக்கங்களும், பிரச்சாரங்களும் நடத்தப்படுவதில்லை? மண் குட பொன் குட பிரச்சினையா?
உயர்ந்தவனோ? தாழ்ந்தவனோ? வெயிலில் நடக்கயில் நிழல் என்னவோ கருப்பு தான். பணக்காரனோ? பரம ஏழையோ? தேகத்தில் ஓடுவது என்னவோ சிகப்பு நிறம் ரத்தம் தான். அமெரிக்க அதிபரானாலும், ஆண்டிப்பட்டி ஏழையானாலும் இறந்தால் சவமே. காலம் தாழ்ந்தால் துர்நாற்றமே.......
அஸ்ஸலாமு அலைக்கும்.
நூல்: புகாரி பாகம்6, அத்தியாயம்72, எண்5502
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்
கஅப் இப்னு மாலிக்(ரலி) அவர்களின் ஆடுகளை அவர்களின் அடிமைப் பெண் ஒருவர் மதீனாவின் கடைவீதிக்கு அருகில் 'சல்உ' எனும் இடத்திலுள்ள சிறிய மலையொன்றில் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஆடு ஒன்று காயமடைந்தது. உடனே அப்பெண் கல் ஒன்றை (கூர்மையாக) உடைத்து அதனால் அந்த ஆட்டை அறுத்தார். மக்கள் நபி(ஸல்)அவர்களிடம் இதைக் கூறி (இதை உண்ணலாமா என்று கேட்ட)னர். நபி(ஸல்) அவர்கள் அதை உண்ணும்படி அவர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
மேற்கண்ட நபிமொழிச் சான்று, இக் காணொளி 07:50 நிமிடத்தில் சொல்லப்பட்டதற்கானது.
செத்ததை அறுத்து விற்பனை செய்திருந்தால் சாட்சி/சான்றுகளுடன் சொல்லவும்; விற்றவனுக்குச் செருப்படி விழும், இன்ஷா அல்லாஹ்.
அரசியல்வியாதிகளுக்கே (இது சேர் மன் மேட்டர் போல அச்சுப் பிழையல்ல) உரிய உத்தியில் மலிவான விளம்பரம் தேடும் விதமாக பசுவைக் தொழுபவர்களின் வாக்குகளையும் கருத்தில் கொண்டு அவர்களைத் தூண்டி விட்டு ஊர் அமைதியைக் குலைக்கும் விதமாக 'கன்று ஈனும் தருவாயிலுள்ள பசு' அது இது எனப் பிதற்ற வேண்டாம்.
நாம் வீட்டில் வளர்க்கும் கோழி போன்றவை விபத்தில் அடிபட்டால் அவற்றை உடனடியாக முறையாக ஹலாலான முறையில் அறுத்து உணவாகப் பயன்படுத்துவது வழக்கம். இது நாம் அனைவரும் அறிந்ததை விட ஊரின் புகழ் பெற்ற ஹைவே?யின் மத்தியில் இருக்கும் வீட்டில் பிறந்து வளர்ந்த இந்தப் பதிவின் நாயகனின் வீட்டில் நடைபெற்றிருக்கச் சாத்தியக்கூறுகள் மிகுதி.
கோழிக்கொரு நீதி; மாட்டுக்கொரு நீதியா?
அல்லாஹ் ஹலாலாக்கிய ஒன்றை வேண்டாமெனச் சொல்ல எவனுக்கும் அருகதையில்லை.
வேண்டுமென்றால் ஊரில் அடிபடும் கோழி, ஆடு, மாடுகளை சிங்கப்பூர் சீமான் தம் சொந்தப் பொறுப்பில்/செலவில் எடுத்து வைத்தியம் செய்து குணமானதும் உரியவரிடம் ஒப்படைக்கட்டும். பின்னர் அவர்கள் அவற்றை அறுத்துப் புசிப்பார்கள்.
---
தொடர்ச்சி...
காவடிக் கலகத்தைக் கிட்டத்தட்ட மக்கள் மறந்து விட்ட பிறகு மக்களின் மறதியில் மிகுந்த நம்பிக்கை வைத்து, அது குறித்து இந்தக் காணொளி
http://adiraixpress.blogspot.com/2012/06/blog-post_3848.html
01:32 நிமிடத்தில் (00:05) ஐந்தே வினாடிகளில் தனக்கும் அதற்கும் அறவே தொடர்பில்லாதது போன்ற சப்பைக்கட்டு யாரை ஏமாற்ற?
இவருக்கு இன்றுவரை நற்சான்று அளித்துக் கொண்டிருக்கும் கீழ்க் கண்டவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில்?
\\வலுக்கட்டாயமாக FIR போடவைததும் பேரூராட்சி தலைவர்தான் என்பதையும் அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்\\ -தமீம்
\\இச்சம்பவத்தில் நடுநிலை வகிக்க வேண்டிய அதிரை நகரத் தலைவர் அஸ்லம், கந்தூரிக் கோஷ்டியினருக்கு வெளிப்படையான ஆதரவாளராகத் தன்னை இனங்காட்டிக் கொள்வதும் குற்றவாளிகளுக்குப் பரிந்து பேசுவதற்காகக் காவல்நிலையம்வரை வருவதும் அவரது தூய சேவைகளுக்கு இழுக்கைத் தேடித் தருவனவாகும்\\ -ஜமீல்
\\கந்தூரி விசயத்தில் பேரூராட்சி தலைவர் அஸ்லம் நடந்து கொண்ட விதம் பற்றி வரும் தகவல்கள் வருத்தமளிக்கின்றன...இன்னும் நான்கு வருடங்கள் கழித்து வரும் தேர்தலுக்கான முன்னேற்பாடு என்று அவர் - கருதினால், நிச்சயம் அவர் தவறானதொரு முடிவில் இருக்கிறார் என்றே படுகிறது...\\ -நிஸார் அஹமது
---
கல்யாணத்திற்கு வரவில்லை; கருமாதிக்குப் போகவில்லை என்றெல்லாம் உங்களிருவரின் சொந்த/குடும்பப் பகைகளைச் சொல்லி மறுபடியும் அரசியல்வியாதிகளுக்கே உரிய மலிவான அனுதாப விளம்பரம் தேடி மக்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
---
'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற அரசியல்வியாதிகளின் மூ/சூ-த்திரத்தின் படி, உள்ளூர் தமுமுக-விற்கும் pfi-க்கும் உள்ள பகையை ஊதிப் பெரிதாக்கும் அற்ப வேலையைச் செய்வதற்கா மக்கள் இவரைத் தெரிந்தெடுத்தீர்கள்?
இந்தக் காணொளியை பதிவிட்ட முபீன், அஎ கல்வி விருது விழாவின் போது நடந்த வெளிவராத behind scene-ல் நடந்த சாச்சாவின் உளக் கிடக்கைகளையும் காணொளியாகத் தந்திருந்தால் ஊரறிந்திருக்கும். வாய்ப்பைத் தவற விட்டுவிட்டாயே மகனே.
முதலில் இந்தப் பதிவைப் பார்த்த போது ஒரு கருத்து கூடப் பதிவாகி இருக்கவில்லை. இப்போது பார்த்தால் பதிவுக்குச் சார்பான ஏகப்பட்ட கருத்துக்கள்! ஜால்ராச் சத்தம் காதைக் கிழிக்கிறது!!
மக்கள் எப்படியோ; மக்கள் சேவகனும் அவ்வாறே வாய்ப்பான்.
"இவன் வந்ததற்கு அவன் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ" என்ற எண்ணம் ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் சாமானிய மக்களுக்கு ஏற்படுவதுண்டு. அதற்கு நடந்து முடிந்த தேர்தலும் விதிவிலக்கல்ல என்றே சான்றளிக்கின்றன, நடந்து கொண்டிருக்கும் அருவருக்கத்தக்க நிகழ்வுகள்.
நடந்து முடிந்த தேர்தலின் போது இவருக்கு வாக்கு சேகரித்த ஒருவர் சொன்னார் இப்படி:
"அவன் வந்தால் கண்டவனையும் ஏசி கலகத்தை உண்டு பண்ணுவான்...யாருக்குக் கேவலம், நமக்கு தானே" என்று.
இப்போதும் அவர்தான் சொல்ல வேண்டும், நடந்து கொண்டிருக்கும் அருவருக்கத்தக்க நிகழ்வுகளால் யாருக்குக் கேவலம் என்று!
உள்ளதை உள்ளபடியும், முரண்களையும் சுட்டிக்காட்டவும் மிகுதியானோருக்குத் தயக்கம். அவன் நம்மைத் தவறாய் நினைத்து விடுவானோ; இது தப்பாய்ப் போய் விடுமோ என்று கண்ணெதிரில் உள்ளவனுக்கு இருக்கும் அச்சம் நம்மைப் படைத்தவனிடம் இல்லாதது ஏனோ?! அல்லாஹ் நம் கண்ணெதிரில் தோன்றாததாலா? அவன் நம் கண்ணெதிரில் தோன்றும் அந்த மறுமை நாளின் போது எவருக்கும் அவகாசம் இருக்காது, நம் எண்ணங்களையும் செயல்களையும் மறுபரிசீலனை செய்ய!
போலிப் பெயர்களில் கருத்திடும் பொறுக்கிகளின் கொட்டம் அடங்குவது எப்போது?
அஸ்ஸலமு அலைக்கும்
ஒருதரப்பு செய்திகளை மட்டும் கேட்டு விட்டு அதற்கு கமான்ட் செய்வது எற்புடையது அல்ல பேரூராட்சி தலைவர் பக்கமே தவறுகள் நிகழ்திருப்பதை நன்கு உனரமுடிகின்றது. இதற்கு காரனம் அரசியல் கால்புனர்வும் அரசியல் முதிர்வும் இல்லாததே. மேலும் இவரின் இப்போக்கு நிடிதால் தனக்கு ஓட்டுபோட்ட மக்களின் எதிர்பயும் அவரின் ஆதரவாக உள்ள சிலருடைய எதிர்பயும் விரைவில் அதிரை மக்கள் தெரிவிப்பார்கள் என்பது தின்னம். இந்த விசயதில் என் கருத்து என்ன வென்றால் சகோதரர் மு.இ.ஷாஃபி அவர்களின் கருதை வழிமொழிகின்றேன். வஸ்ஸ்லாம்
muslimkal eppa ottrumaiodu illaiyo appove avakaluku aliu nerinkivettathu
ethu varalaru sollum paadam pls cooperats brothers
sontha pagaiyai utharivittu ottrumaiyodu erungal athuve samuthayathukku
nallathu, nallathu seiyavettalum paravaellai summa erunthale poorum.
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
சகோதரர்களே! இவ்வளவு குழப்பங்களுக்கு யார் காரணம் பொறுப்பற்று இச்செய்திகளை மக்களிடத்தில் பரப்பிய இணையதள நண்பர்கள் தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு சம்பவம் நடைபெற்றால் அச்சமபவத்தில் ஈடுபடுகிற அனைத்து தரப்பு தகவல்களையும் ஒருங்கே வெளியிட வேண்டும் என்கிற ஒரு அடிப்படையான கொள்கைகூட இல்லாதவர்கள் தான் இன்று நமதூர் இணையதளங்களை நடத்துகிறார்கள் என்பதற்கு இச்சமவத்தை வெளியிட்ட முறையிலிருந்து நமக்கு தெரிய வருகிறது.
நாளை மறுமையில் அவரவர் பொறுப்புகள் குறித்து விசாரிக்கப்படவுள்ளோம் என்பதை மனதில் நிறுத்தி இனி செய்திகளை வெளியிட வேண்டும்மென கேட்டுக் கொள்கிறேன்.
முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். ஹுஜுராத் 49:6
அதுபோன்றே வெளியிடக்கூடிய செய்தியின் மூலம் மக்களுக்கு பயன் இருக்கிறதா? இல்லை பிரச்சனைகள் ஏற்படுத்தக்கூடியதா? என்பதையெல்லாம் கவனத்தில் கொண்டு செய்திகள் வெளியிடவும். அதோடு பிரச்சனைகள் இருக்கக்கூடிய செய்திகளாயிருந்தால், தாங்கள் வெளியிடக்கூடிய செய்திகள் மூலம் பிரச்சனைகள் இன்றி சமமாதானம் ஏற்படுத்தக்கூடிய செய்திகளாக இருக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோல்.
முஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறு, அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால் நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள். (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான். 49:9
வஸ்ஸலாம்.
அன்புடன்,
B. ஜமாலுத்தீன்
050-2855125
Shafeeq said...
அதிரை அன்புச்சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்,
தம்பி ஜமாலுதீன் கருத்தின் தொடர்ச்சியாக ஒரு சில கருத்துக்களை நமதூர் நலனில் அக்கறை உள்ள அனைவரின் பார்வைக்காக...............
இனி வரும் காலங்களில் கிடைக்கும் செய்திகளை தன்னுடைய இணைய தளம் மக்கள் மத்தியில் விளம்பரம் பெற நினைத்து அனைத்தையும் செய்திகளாக போடாமல், இதன் உண்மை நிலவரத்தை அறிந்த பின் பதிந்தால் நல்லது.
மேலும் அது உண்மை சம்பவமாக இருந்தாலும், பதியக்கூடிய செய்தி இரு முஸ்லிம் சகோதரர்கிடையில் இஸ்லாம் வலியுறுத்தி சொல்லக்கூடிய ஒற்றுமையையை கெடுக்கும் நோக்கத்தில் இருந்தால் அதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இச்செய்திகளை நம்மை விட மாற்று மத சகோதரர்கள், நம்மிடயே குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய RSS போன்ற அமைப்பில் உள்ளவர்கள் தினமும் பார்க்கிறார்கள் என்பதை மனதில் கொள்ளவும்.
இது போன்ற செய்திகளால் இணைய தளங்களை அதிகம் பார்க்ககூடிய வெளிநாட்டில் வாழும் அதிரை சகோதரர்கள் மிகவும் வேதனைக்கு உள்ளாகிறார்கள்.
விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை, கேட்டுப்போபவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை.
வஸ்ஸலாம்
கே.ஷபீக் அஹ்மத்.
June 29, 2012 5:52 PM
சகோ. ஜமாலுதீன், சகோ. ஷபீக் கூறியதுபோல மாட்டுக்கறி பற்றி அவதுார் செய்தியை முதலில் நிருபா் வளைப்புவில் Video பதிவுடன் பொய்யான Notice உடன் வெளியிட்டு இருந்தனா் மேலும் அதன் பொருப்பாளா்கள் ஊா்ரில் தான் இருந்துள்ளார்கள் இதனை வெளியிடுவதற்கு முன் பேருராட்சி தலைவரிடம் உண்மை செய்தியை கேட்டறிந்து வெளியிட்டிருந்தால் அனைத்து குழப்பத்தை தவிர்த்திருக்கலாம்.
Election நேரத்தில் கூட எந்த செய்தியையும் வேளியுாடமல் நடுநிலை வகித்த அதிரை நிருபா் திடீரென்டு இப்பதிவை வெளியிட்டிருப்பாது எல்லுருக்கும் சந்தேகத்தை எற்படுத்தியுள்ளது.
வஸ்ஸலாம்
மதியழகன் said...
சேர்மன் அஸ்லம் அவர்களின் சில பிளஸ்....
1. போராட்ட குணம்
2. சாதிக்கும் மனப்பான்மை.
3. எதையும் முன்னின்று செய்வது.
4. மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற உந்துதல்.
5. ஊழலற்ற நிர்வாகம்.
சேர்மன் அஸ்லம் அவர்களின் சில மைனஸ்...
1. பிரச்சினைகளை தானே முன்னின்று அணுகுவது.
2. அனைவரையும் அரவணைக்காமல் நடப்பது.
3. தேர்தலில் தனக்கெதிராக வேலை பார்த்ததால் நட்புராமல் தவிர்ப்பது.
4. எதிரியை நண்பனாக்கும் மனோபக்குவம் இல்லாதது.
குறிப்பு: அஸ்லம் அவர்கள் தனது மகளின் திருமண அழைப்பிதழை வீட்டிற்கு சென்று கொடுக்க முயன்றதை தவிர்த்த சகோதரரின் செயல் வன்மையாக கண்டிக்க தக்கது. ஒரு மூமின் பண்பெல்ல இந்த செயல்.
அதிரை தென்றல் (Irfan Cmp) said...
என்ன நடந்து கொண்டிருகிறது ஊரில்
ஏன் இந்த ஈகோ
ஏன் இந்த பாகுபாடு
ஏன் இந்த ஒற்றுமையின்மை
ஏன் இந்த வறட்டு பிடிவாதம்
ஏன் இந்த இயக்க/கட்சி வெரி
ஏன் இந்த போட்டி/பொறாமை
இந்த அணைத்து கேள்விகளுக்கும் விடை நம்மிடமே உள்ளது சிந்திப்பீர் சகோதரர்களே
எப்பொழுதான் திருந்த போகிறோமோ அல்லாஹ் தான் பாதுகாக்க வேண்டும்
June 28, 2012 2:00 PM
பட்டுக்கோட்டை இந்துதுவாக்கள் அதிரை விவகாரத்தில் தலையிட என்ன அதிகாரம் உள்ளது ?
அப்படியே அவர்கள் புகார் அளித்தாலும் அதிரை பேரூர் நிர்வாகம் இதை எப்படி நடைமுறைபடுத்த முயல்வது ?
உள்ளூர் விவகாரத்தில் தலையிட எந்த ம....க்கும் அனுமதியில்லை.
இந்த பிரச்னை தொடர்பாக சகோதரர் சேர்மன் அவர்கள் தரப்பில் விளக்கம் தரவோ இங்கு சொல்லப்பட்டக் குற்றச்சாட்டுகளை மறுக்கவோ விழையும் பட்சத்தில் அதையும் வெளியிடுவது அதிரை நிருபரின் பொறுப்பாகும்.
செய்தியென்று கருதி புறக்கனிக்கத்தக்க சிரிய விடயங்களை இலக்கியத் தரத்தில் இயங்கும் அதிரை நிருபர் என்றுமே வெளியிடாது. எனினும், இதுபோன்ற இஸ்லாமிய உணர்வுகள் பொதிந்தவை செய்தியாகவே இருப்பினும் வெளியிடவும் தயங்காது.
இதில் நடுநிலை எப்படி நிலைநாட்டப்பட வேண்டுமெனில் இரண்டு தரப்பின் விளக்கங்களையும் வெளியிடுவதில்தான் என்பதை உணர வேண்டும்.
நந்த வனத்தில் ஒரு ஆண்டி ..
நாலாறு மாதமா குயவன வேண்டி ..,
கொண்டு வந்தான் ஒரு தோண்டி ..அத
கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி ...
என்பதை போல ....
அதிரையில் ஒரு ஆண்டி
நாற்பது வருடமா அதிரை மக்களை வேண்டி
சேர்மன் பதவி பறிதாண்டி ..இப்போ
கூத்தாடி கூத்தாடி போட்டுடைக்க போராண்டி ...
அஸ்ஸலாமு அலைக்கும்
சேர்மன் அஸ்லமின் கானொளிக்கான எனது பின்னூட்டத்தையே இதற்கும் மீண்டும் பதிகிறேன்
///அவசரப்பட்டு இது போன்றவான முக்கிய விசயங்களை public ல் பேசி நம் இஸ்லாமிய கண்ணியத்தையும் ஒற்றுமையை யும் வீணாக குலைத்து கொள்வதை தயவு செய்து நிறுத்தி விடுங்கள் .,
நம் அதிரை அணைத்து முஹல்லா கூட்டமைப்பில் வைத்து சம்பத்தப்பட்டவர்கள் பேசி சுமூக நடந்து கொள்வது நம் சமுதாயத்துக்கும் நல்லது நம் ஊருக்கும் நல்லதாகும் .
இதனால் தேவையில்லாமல் வீண் பழி, நேர விரயம், மனக்கஷ்டம் இன்னும் பல கெடுதலான காரியங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டாகிறது .
அல்லாஹ் மற்றும் அவனது தூதருக்கு கட்டுப்பட்டு நடக்ககூடிய தலைமை மற்றும் மக்கள் என்று மாறாத வரையில் சைத்தானின் இதுபோன்ற சூழ்ச்சிகலில் இருந்து தப்புவது கடினமே ...///
new -
சகோதரர்களே நம்மிடம் மார்க்க அறிவு இருக்கும் அளவிற்கு அதன் செயல்பாடு இல்லாததால் இந்த இழி நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். நாம் அவற்றைப் பேணி மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தால் மற்ற சமுதாயத்தினருக்கு நம் மீது முன்பிருந்த மதிப்பும் கன்னியுமும் மீட்டெடுக்கப்படும். அவ்வாறு இல்லாமல் இவ்வாறு சண்டையிட்டுக்கொண்டிருந்தால் அதனால் பாதிக்கப்படுவது நம் சமுதாய மக்கள்தான் என்பதனை நாம் அனைவரும் உணர வேண்டும்.
இவ்விடத்தில் - காட்டில் ஒன்றாக மேய்ந்து கொண்டிருந்த மாட்டுக்கூட்டதை நரியின் தந்திரத்தால் சிங்கம் அடித்துத் தின்ற கதை சொல்வார்களே அது தான் நினைவுக்கு வருகிறது.
அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக
//தமுமுகவின் அரசியல் பிரிவான மமக சார்பில் இராமநாத புரத்தில் ஸ்DPஈ யின் வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என நினைத்து களம் கண்ட மமகட்சி காவி சிந்தனையுள்ள கட்சியா??//-அதிரை மஜ்லீஸ்
மமக அதிமுக என்ற பெரிய கட்சியுடன் கூட்டணி வைத்து,அவர்களால் ஒதுக்கப்பட்ட இராமநாதபுரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.SDPI யின் வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்று அல்ல. சமுதாய அக்கரை இருந்தால் தனித்து போட்டியிட்ட SDPI தன்னுடன் ஒத்த கருத்துடைய பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் வெற்றி பெறுவதற்காக போட்டியிலிருந்து விலகியிருக்கவேண்டும் என்பதை ச்கோதரர் உணரவேண்டும்.
ஆகையால் நம்முடைய நல்லிணக்கமான பயணத்தை தங்குதடையின்றி தொடர இதுபோன்ற பதிவுகள் எந்த தளத்தில் வெளியிடப்படுகிறதோ அதே தளத்தில் அதற்கு மறுப்புமொழி/விளக்கப்பதிவுகள் வெளியிடப்பட்டு சகோதரர்கள் தத்தமது குறை, நிறைகளை யார் மனமும் புண்படாத வகையில் படைத்த அல்லாஹ்வை முன்னிறுத்தி எவ்வித விருப்பு, வெறுப்பிற்கு இடமளிக்காது பரஸ்பரம் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு தவறுகள் திருத்தப்பட்டு ஊர் நலனுக்கும், மனித நேயத்திற்கும் வித்திடுவார்களேயானால் அதுவே நாம் ஈருலகிற்கும் செய்யும் பெரும்பாக்கியமாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்.
ரத்தவெறி பிடித்து எப்படியாவது ஏதேனும் வகையில் கலவரத்தை தூண்டி அதன் மூலம் ரத்த ஆறு ஓட்ட விரும்பும் குறிகிய மனப்பான்மை உடையோருக்கு கூட ஆபத்து காலங்களில் "ரத்த தானம்" மூலம் எம் உதிரம் கொடுத்து அவர்கள் உயிர்காக்க உதவும் இறைவனுக்காக எவ்வித பிரதிபலனும் பாரா இயக்கங்களாகவே இருந்து விட்டு போவோம் நாம்.....
அஸ்ஸலாமு அலைக்கும்.
த. மு.மு.க., ம.ம.க. இயக்கங்களை தவிர்த்து ஊரில் வேறு யாருக்கும் நகரத் தலைவரோடு குரோதங்கள் உண்டா?
அவரைப்பற்றி வரும் தவறான விமர்சனங்கள் ஒரு கட்சியிலிருந்தே என்பதால், நம்மால் அதை பெரிது படுத்த முடியவில்லை.
இருந்தாலும், சகோ. செய்யத், சகோ. அஹ்மத் ஹாஜா, சகோ சாவன்னா, இவர்களின் உணர்ச்சிபூர்வமான, சான்றுகளோடு கூடிய விமர்சனங்களை நகரத்தலைவரின் கவனத்துக்கு கொண்டு சென்று அவரை சரி செய்வது ஊரில் இருக்கும் பொது நலனில், சமுதாய நலனில் அக்கறை கொண்டிருக்கும் பெரியவர்களின் பொறுப்பாகும்.
வெளி ஊர்களில் இருந்து மார்கத்துக்கு முரணாக சாகடிக்கப்பட்ட, அறுக்கப்பட்ட, மற்றும் செத்த மாடுகளை அதிரைப்பட்டினத்திற்கு கொண்டு வந்து விற்றுக்கொண்டிருந்த நிலையில் சகோ. சாவன்னா திறந்த மாட்டிறைச்சிக்கடை அதிரை மக்களுக்கு கிடைத்த பாக்கியமாகும். இதை கட்சி பாகுபாடின்றி நகரத் தலைவரே முன்னின்று மக்களுக்காக, மக்களின் ஹலாலான உணவுக்காக உரிமம் பெற்றுக் கொடுத்தால் நிச்சயம் இறை உதவி கிடைக்கும்.
ட்ரெயினில் அடிபட்ட மாட்டை சாகும் முன்பே முறையாக அறுத்து விட்டால் மார்க்கத்தின் அடிப்படையில் சரிதான். ஆனால் எத்தனை பேர்களுக்கு அப்படிப்பட்ட சூழலில் அறுக்கப்பட்ட மாட்டின் இறைச்சியை சாப்பிட மனம் வரும். அது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டாலும் மனம் அதற்க்கு ஒப்பாவிட்டால் அது அவருக்கு தடுக்கப்பட்டதுதான்.
இதில் ஷாபி(இன்) கொல வெறியை மறப்போம். தான் உண்மை என்று உணர்ந்ததை உரக்க சொல்கிறார் அவ்வளவுதான்.
தலைமை பதவிக்கு வரும் முன் இருந்த தம்பி அஸ்லத்திற்கும், நகரத் தலைவராகி இருக்கும் அஸ்லத்திற்கும். நிறைய்ய வேடுபாடு காணவேண்டும். அவருடைய ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மக்கள் கண்டு கொண்டுதான் இருக்கிறார்கள். அவருக்கு சாதகமான மக்கள் அதிரையில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் நிறைந்து இருந்தாலும் த. மு. மு. க. போன்ற ஓரளவு மக்கள் செல்வாக்கு மிக்க இயக்கங்கள் மற்றும் அதன் உறுப்பினர்களுடன் நட்புணர்வோடு நடந்துகொண்டால் நகர்த்தலைவரின் "தூய" எண்ணங்கள் மற்றும் "தூய்மை சேவைகள்" இனிதே நடைபெறும். அனைத்து முஹல்லா கூட்டமைப்பு போன்ற ஊரின் ஒற்றுமையில் நாட்டமுள்ள நன்மக்கள் இவர்களுக்குள் நடக்கும் சர்ச்சையில் தலையிட்டு சரி செய்யலாமே.
முஹம்மத் தமீம்
ZUBAIR FROM DUBAI
அஸ்ஸலாமு அலைக்கும்,
இந்த பேட்டி இயக்கங்கள் அல்லது தனிநபர் இவர்களில் யாரையும் உயர்த்தவோ தாழ்த்தவோ அல்ல, நம் சகோதரர்களுக்கிடையே புரிந்துணர்வு ஏற்படவேண்டும், பகைமை போக்கவேண்டும். சம்பத்தப்பட்ட இருசாராரும் தங்கள் தரப்பில் உள்ள தவறுகளை உணர்ந்து, ஒருவருக்கொருவர் பகை மறந்து ஒற்றுமையுடன் அவர்களின் சமுதாய சேவையை செய்யவேண்டும் என்பதே அதிரை மக்கள் அனைவரின் ஆவல். இதனை நிறைவேற்றுவார்களா ? பொருத்திருந்து பார்ப்போம் !.
என்னுடைய கருத்து
இவர்களுடைய காணொளியினை பதிவதற்கு முன்பாக குற்றம் சுமத்தப்பட்டவரையும் பேட்டி எடுத்து அவர்களுடைய கருத்துகளையும் கேட்டறிந்து. பொதுவான கருத்துடைய சான்றோர்களின் முன்பாக இந்த சர்ச்சைக்குறிய விசயங்களை விவாதித்து சுமுகமான தீர்வுகளை ஏற்படுத்தி இருந்தால்.
ஓற்றுமையை நோக்கமாக கொண்டுச்செல்லும் நமது இனணயத்தை பற்றி இவர்கள் இவ்வாறு கூற நாம் வழி ஏற்படுத்திற்க்க மாட்டோம் என்று கருதிகிறேன்.
அதிரை அன்புச்சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்,
தம்பி ஜமாலுதீன் கருத்தின் தொடர்ச்சியாக ஒரு சில கருத்துக்களை நமதூர் நலனில் அக்கறை உள்ள அனைவரின் பார்வைக்காக...............
இனி வரும் காலங்களில் கிடைக்கும் செய்திகளை தன்னுடைய இணைய தளம் மக்கள் மத்தியில் விளம்பரம் பெற நினைத்து அனைத்தையும் செய்திகளாக போடாமல், இதன் உண்மை நிலவரத்தை அறிந்த பின் பதிந்தால் நல்லது.
. நம்மிடயே குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய RSS போன்ற அமைப்பில் உள்ளவர்கள் தினமும் பார்க்கிறார்கள் என்பதை மனதில் கொள்ளவும்.
இது போன்ற செய்திகளால் இணைய தளங்களை அதிகம் பார்க்ககூடிய வெளிநாட்டில் வாழும் அதிரை சகோதரர்கள் மிகவும் வேதனைக்கு உள்ளாகிறார்கள்.
சகோ. ஜமாலுதீன், சகோ. ஷபீக் கூறியதுபோல மாட்டுக்கறி பற்றி அவதுார் செய்தியை முதலில் நிருபா் வளைப்புவில் Video பதிவுடன் பொய்யான Notice உடன் வெளியிட்டு இருந்தனா் மேலும் அதன் பொருப்பாளா்கள் ஊா்ரில் தான் இருந்துள்ளார்கள் இதனை வெளியிடுவதற்கு முன் பேருராட்சி தலைவரிடம் உண்மை செய்தியை கேட்டறிந்து வெளியிட்டிருந்தால் அனைத்து குழப்பத்தை தவிர்த்திருக்கலாம்.
Election நேரத்தில் கூட எந்த செய்தியையும் வேளியுாடமல் நடுநிலை வகித்த அதிரை நிருபா் திடீரென்டு இப்பதிவை வெளியிட்டிருப்பது எல்லுருக்கும் சந்தேகத்தை எற்படுத்தியுள்ளது.
இது போன்று இன்னும் பலவற்றை தவிர்த்து இருக்கலாம். வஸ்ஸலாம்
ஓற்றுமை என்ற கயிற்றை பிடித்துகொள்ளுங்கள் என்றது இஸ்லாம்....அதைப்பிடிக்கவிட்டாலும் பரவாயில்லை உங்களவர்களின் தனிப்பட்ட விருப்ப/வெறுப்பு என்ற கத்தியை கொண்டு அதனை அடியோடு அறுத்து எறிந்துவிடாதீர்கள்.....வரக்கூடிய தலைமுறையாவது அதனை கடைப்பிடிக்கும்....அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்
அதிரைநிருபர் இதனை தவிர்த்து இருக்கலாம்.....அல்லது கவிக்காக்காவின் கருத்துப்படி இருபாலரின் கருத்தினையும் சமுதாய நலன்கருதி பதிந்து இருக்கலாம்....
ஒருத்தருக்கொருத்தர் தன் தரப்பு நியாயங்களை சொல்லிக்கொண்டும் அதற்கு பதில் கொடுத்துக்கொண்டும் போனால் முடிவு என்பது எட்டாக்கனியாகவே போய்விடும். இதுலே நிறைய அந்நிய சக்திகளின் சதி தெரிந்தோ தெரியாமலோ விளையாடுவது போல் தெரிகிறது. வார்த்தைப்போரினால் தாக்குதல் நடத்தி இறுதியில் பாதிக்கப்படுவது என்னவோ நம் சகோதரர்கள்தான். தயவு செய்து இந்த பிரச்சினைகளை இத்தோடு விட்டொழித்துவிட்டு ஊரின் முன்னேற்றத்திற்கு பாடுபடுங்கள் என்று ஊர்வாசிகளின் ஒருவனாக கேட்டுக்கொள்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
மேற்கண்ட பதிவையொட்டி கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும் மிக்க நன்றி.
அதிரைநிருபர்.in வலைத்தளம் அதிரை பேரூராட்சி மன்றத் தலைவர் அவர்களுக்கு எதிரானது போன்ற மாயைகூட்டி சிலர் கருத்துக்களை பதிந்துள்ளார்கள் – தெளிவுபடுத்த வேண்டியது எமது கடமையே!.
துவக்க நாள் முதல் அதிரை சார்ந்த அன்றாட செய்திகள் அனைத்தையும் அதிரைநிருபர் வலைத்தளத்தில் காண்பது மிக அரிது என்பதை இணைய வாசகர்கள் அறிவர். இருப்பினும், பெரும்பாலான வாசகர்களின் அன்பான வேண்டுகோளை ஏற்று அதிரை சார்பு செய்திகளை பதிவதற்கான வாய்ப்புகள் நிரம்ப இருந்தும் பல்வேறு மட்டுறுத்தலுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் இடையே அவ்வப்போது முக்கிய செய்திகளையும் பதிந்து வருகிறோம்.
மாட்டுக்கறி அறுப்பது / விற்பது தொடர்பான சர்ச்சை இப்போது உதித்ததல்ல இது கடந்த சில மாதத்திற்கு மேலாக ஆரம்பமானது, அரசியல் காரணங்களால் / அல்லது வேறு காரணங்களால் மாட்டு இறைச்சி விற்பனை செய்யும் சகோதரருக்கும் போரூராட்சி மன்றத் தலைவர் அவர்களுக்கும் உள்ள பிரச்சினைகள் என்றே எங்களுக்கு அனுப்பப்படும் தகவல்களை மட்டுறுத்திக் கொண்டு அதிலிருந்து ஒதுங்கியே இருந்தோம்.
இதன் தொடர்ச்சியாக நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகளும் அமைதியான சூழலில் இருக்கும் நம் அதிரைச் சகோதரர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தும் சூழல் எழுந்ததன் விளைவே இவ்விசயத்தில் கவனம் செலுத்த உந்தப்பட்டோம். போரூராட்சி நிர்வாகத்தினரின் நடவடிக்கைகள் தக்வா பள்ளி மார்க்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது இது தொடர்பாக சம்பத்தப்பட்ட மட்டு இறைச்சி விற்கும் சகோதரர் சாகுல் ஹமீத் அவர்களை அதிரை சார்புடைய வலைத்தளங்களுக்கு செய்திகள் சேகரித்து தரும் சகோதரர்கள் அனைவரும் சந்திக்க சென்றார்கள்.
அங்கு நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் போரூராட்சி அதிகாரிகளின் அனுகுமுறை மற்றும் அது தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொண்டார், அப்போது இப்பிராச்சினைக்கு பல காரணிகளில் அதில்முன்னிருத்திய காரணம் பாசீச தீய சக்திகளின் சூழ்ச்சியின் விளைவால் காட்டப்பட்ட ஆதாரம். இதனை இப்படியே விட்டு மவுனம் காத்தால் பாசீச தீயசக்திகளின் ஆளுமை தலைதூக்கும் அதனை தவிர்க்கும் விதமாகவே சகோதரர் சாஹுல் அவர்களின் வாய்மொழியாக அளித்த பேட்டியை காணொளியாக பதிவெடுத்து வெளியிட்டோம். அதில் அவதூறுக்கு பேச்சே இல்லை, அந்த காணொளி செய்தியை சகோதர வலைத்தளங்களுக்கு அனுப்பியும் வைத்தோம் அதோடு அந்தந்த வலைத்தளங்களின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு இருக்குமாயின் பதியுமாறும் வேண்டுகோளும் வைத்தோம் !
மாட்டுக்கறி தொடர்பாக தமுமுகவினர் ஒட்டிய கண்டன போஸ்டருக்கு பேரூராட்சி மன்றத் தலைவர் அவர்களின் நிலைபாட்டையும் அதிரை வலைத்தளங்களுக்கு செய்திகள் சேகரித்து பதிந்துவரும் சகோதரர் தனிப்பட்ட ஒருவரால் எடுக்கப்பட்ட காணொளி பேட்டியினை சகோதர வலைத்தளங்களில் பதிந்துள்ளார், அதே காணொளி பேட்டியினை அதிரைநிருபர் வலைத்தளத்திலும் பதிவதற்கென்று பகிர்ந்தளிக்கவில்லை அவ்வாறு அனுப்பித் தந்திருந்தால் கட்டாயம் பேருராட்சி மன்றத் தலைவரின் தன்நிலை விளக்கத்தையும் பதிவுக்குள் கொண்டு வந்திருப்போம். அவ்வாறு ஏதும் வேண்டுகோள் வரவில்லை.
பேரூராட்சி மன்றத் தலைவர் அவர்களின் பேட்டி கணொளியில் த.மு.மு.க.வினர் மீது குற்றச்சாட்டுகள் அடுக்கியிருந்தார். அந்த குற்றச்சாட்டுகளுக்கு தமுமுக பதில் சொல்லியே ஆகவேண்டும் என்ற கேள்விக் கனைகளும் எதிர்ப்பார்ப்பும் அதிரை மக்கள் மத்தியில் எழுந்தது.
தொடரும்... 1 of 2
தொடர்கிறது... 2 of 2
ஏற்கனவே இதுதொடர்பான முதல் காணொளியை நாம் வெளியிட்டதால் அதற்கான விளக்கமாக சகோதர வலைத்தளங்களில் வெளியான காணொளியில் கண்ட குற்றச்சாட்டுகளுக்கு தமுமுக அதிரை நிர்வாகிகளை சந்தித்து விளக்கம் கேட்டோம். அது தொடர்பான செய்திகளை நீங்களே காணொளிகளில் பார்த்திருப்பீர்கள். இதற்கும் விளக்கம் / மறுப்பு தெரிவித்து பேரூராட்சி மன்றத் தலைவர் அவர்கள் பதிலுரையாகவோ காணொளியாகவோ தந்து பதியச் சொன்னால் அதை எவ்வித தயக்கமின்றி நிச்சயம் அதிரைநிருபர் வலைத்தளத்தில் பதிவுக்குள் கொண்டுவருவோம் இன்ஷா அல்லாஹ்.
குற்றச்சாட்டுகளுக்கு தமுமுக சகோதரர்களின் விளக்கங்களை அதிரையின் அனைத்து தளங்களிலும் போடுவதாகவே செய்தி சேகரிக்க சென்றவர்களால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. ஏனோ தெரியவில்லை சகோதர வலைத்தளங்களில் சிலவற்றில் தமுமுக நிர்வாகிகளின் காணொளி பேட்டி வெளியிடவில்லை. காணொளிப் பேட்டி அவரவர்களின் வலைத்தள நெறிமுறைகளுக்கு உட்பட்டு இல்லாமல் இருந்திருக்கலாம்.
சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் ஊரில் உள்ளார்கள், இவர்களை வைத்து முட்டி மோதும் வேடிக்கை விளையாட்டுக்கள் விளையாடுவதை தவிர்த்து சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் சம்பந்தப்பட்டவர்களின் நெருங்கிய நண்பர்களோ, ஜமாத்தினரோ முன்னின்று செய்யாமல், ஒருவர் மாற்றி மற்றவர் உசுப்பேத்தியே வேடிக்கை பார்க்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.
இயக்க / கட்சி / சங்க தலைவர்கள் இணையதளங்களில் போட்டி போட்டு பேட்டி கொடுத்து ஒருவருக்கு ஒருவர் சாடிக்கொண்டிருப்பதால், பகைமையே நீடிக்கும், அங்கே மக்கள் நலன் காற்றில் பறக்கவிடப்பட்ட காகிதமாகவே தள்ளாடும். இதே நிலை தொடராமல் அடியோடு வேரறுக்கு வேண்டும்.
இஸ்லாமிய சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு பணமும், இயக்க / அரசு பதவியும் இருந்தால் எதை வேண்டுமாலும் செய்யலாம் என்ற நிலை அதிரையில் தலைதூக்கி, நம் எல்லோருக்கும் அது ஒரு அச்சுறுத்தலாகி விடுமோ என்ற ஐயத்தாலும், அரசியல் காழ்ப்புணர்வால் சில சமூகவிரோத கும்பல்களை தூண்டிவிட்டு, நயவஞ்கத்தனமாக நாடகமாடி குளிர்காய நினைத்தவர்களின் சூழ்ச்சியை வெளிக்கொணரவே இந்த பதிவை பதிவதற்கு துணிந்தோமே தவிர. நம் சகோதரர்கள் யாரையும் உயர்த்தவோ தாழ்த்தவோ அல்ல என்பதை மீண்டும் ஞாபகமூட்டுகிறோம்
நெறியாளர்
www.adirainirubar.in
மின்னஞ்சல் : editor@adirainirubar.in
அன்பு (நெறியாள) மைத்துனர்,
வஅலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மதுல்லாஹ்...
உங்கள் விளக்கத்துக்கு நன்றி.
மு.கி. காக்காவுக்கு எக்ஸ்பிரஸில் அளித்த பதில் உங்கள் பார்வைக்கு....
மாட்டிறைச்சிக்குத் தடையா? என்ற பதிவு அ.நி.யில் வெளியிடப்பட்டு, அவர்களின் கோரிக்கையை ஏற்று அதிரை எக்ஸ்பிரஸிலும் வெளியிடப்பட்டது. அந்தப் பதிவில் சேர்மனுக்கு எதிராகச் சொல்லப்பட்டவற்றிற்கு, அவரது விளக்கத்தைப் பெற்று சக பதிவர் முபீன் வெளியிட்டார். அடுத்து மூன்று வீடியோக்களின் தொடுப்புகள் எனது மற்றும் ஜஃபருல்லாஹ்வின் தனிமடல்களுக்கு வந்தன. அந்த மடலுக்கு அதிரை எக்ஸ்பிரஸின் பொறுப்பாளராக இருக்கும் ஜஃபருல்லாஹ் எழுதிய குறிப்பு... "இதை இப்போதைக்கு பதிய வேண்டாம் இதுபோன்ற செய்திகளுக்கு இத்துடன் முற்றுப் புள்ளி வைப்போம்....."
தமுமுகவின் வீடியோவை வெளியிட்டால், அதற்கு மறுப்பு வீடியோ, பின்னர் தமுமுகவின் வீடியோ... பின்னர் அதற்கும் மறுப்பு என, இது தொடர்கதையாக அமைந்து, பிரிவுகளின் இடைவெளி அதிகரித்துவிடும் என்பதால் மேற்கண்ட முடிவு.
----
முன்னதாக கடந்த 20ஆம் தேதி, "அதிரையில் “மாட்டுக்கறி” வியாபாரத்திற்கு தடையா ?" என்று தலைப்பிட்ட குறிப்பிட்ட அந்த வீடியோவை எக்ஸ்பிரஸில் பதியலாமா என்று எனது மெயில் ஐடியில் கேட்கப்பட்ட போது நான் அளித்த பதில்...
//வீடியோவைக் காண நேரம் வாய்க்குமா எனத் தோன்றவில்லை.
தடை உண்மை எனில், கண்டிப்பாக அதைக் கண்டித்து பதிவிட வேண்டும். பெயர் வேண்டும் எனில் என் பெயரைப் போட்டுக் கொள்ளுங்கள்.//
மு.கி. காக்காவுக்குப் பதில் அளிக்கும் போது, அ.நி.யின் பெயரை இழுத்ததில் வருத்தம் இல்லைதானே?
//மு.கி. காக்காவுக்குப் பதில் அளிக்கும் போது, அ.நி.யின் பெயரை இழுத்ததில் வருத்தம் இல்லைதானே?//
என்னுடைய பின்னூட்டத்தில் ஏதும் வருத்தம் தொனித்ததா ? இருந்திருக்காதே... அங்கே பொருத்தம் கருதியே அங்கே ஊட்டமிட்டேன் ! :)
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பான சகோதரர்களே
சமுதாய மற்றும் ஊர் நலன் கருதி அனைத்து இயக்க மற்றும் அமைப்பு சகோதரர்களும் எந்த பிரச்சனைகளாக இருந்தாலும் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பில் சம்பந்தப்பட்டவர்கள் ஆரம்பத்திலேயே முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சுமூகமாக பேசி தீர்த்துக்கொள்ளுங்கள். இதனை விட்டு விட்டு பப்ளிக்கில் பிரச்சனையை கொண்டு வந்தால் அதிகரிக்குமே தவிர தீராது.
வளர்ச்சிக்கான பாதைகளை நோக்கி சமுதாயத்தை கொண்டு செல்லாமல் நமக்குள்ளே சண்டையிட்டுக்கொண்டால் விளைவு எப்படி இருக்கும்?
அனைத்து முஹல்லா கூட்டமைப்பு இதற்காக எந்த முயற்சியாவது செய்கிறதா? அனைத்து தரப்பு மக்களும் இதனை வலியுறுத்தி அவர்கள் அல்லாஹ்விற்கு பயந்து அனைவரும் ஏற்றுக்கொள்ளும் நியாயமான தீர்ப்பினை வழங்க வேண்டும். அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் கட்டுப்பட வேண்டும்.பிற்காலத்தில் ஏதேனும் நிகழ்ந்தால் அதற்கு ஒரு முன் மாதிரி தீர்வாக இது அமையும் என்பது என் கருத்தாகும்.
//சமுதாய மற்றும் ஊர் நலன் கருதி அனைத்து இயக்க மற்றும் அமைப்பு சகோதரர்களும் எந்த பிரச்சனைகளாக இருந்தாலும் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பில் சம்பந்தப்பட்டவர்கள் ஆரம்பத்திலேயே முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சுமூகமாக பேசி தீர்த்துக்கொள்ளுங்கள். இதனை விட்டு விட்டு பப்ளிக்கில் பிரச்சனையை கொண்டு வந்தால் அதிகரிக்குமே தவிர தீராது.//
சகோ அஹமது தாஹா அவர்களின் கருத்தை வழி மொழிகிறேன்.
யாராக இருந்தாலும் அவதூறு சொல்லாதீர்கள்.இதுக்காக மஹ்ஷரில் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
அஸ்ஸலமு அலைகும்
நெறியாளர் (காக்கா) வின் தெளிவான விளக்கத்திற்கு நன்றி. இந்த விசயதில் அதிரை நிருபரின் நிலைப்பாடு மிகச்சரியானது. தொடரட்டும் உங்கள் இனையச் சேவை விமர்சனங்கள் ஒன்ரும் குறிப்பாக நமதூருக்கு ஒன்ரும் புதிது அல்ல. இந்த நிலைபாட்டை தவிர்து வெருஒரு நிலைபாடு எடுதிருந்தாலும் விமர்சனங்கள் வரத்தான் செய்திருக்கும்,என்பதயுன் நீங்கள் அறிவீர்கள். வஸ்ஸலாம்
அஸ்ஸலாமு அலைக்கும்.
மேதகு அண்ணன் தமீம் பாணியில் நானும் திருப்பிக் கேட்பேன் இப்படி:
தமுமுக, மமக இயக்கத்தினரோடு அதிரை பேரூராட்சித் தலைவனுக்கு குரோதங்கள் ஏன்?
விமர்சனங்கள் ஒரு கட்சியிலிருந்து வருவதால் அவை எல்லாம் 'தவறானவை' என எண்ணும் உங்கள் நீதியை என்னவென்பது?
\\த. மு.மு.க., ம.ம.க. இயக்கங்களை தவிர்த்து ஊரில் வேறு யாருக்கும் நகரத் தலைவரோடு குரோதங்கள் உண்டா?
அவரைப்பற்றி வரும் தவறான விமர்சனங்கள் ஒரு கட்சியிலிருந்தே என்பதால், நம்மால் அதை பெரிது படுத்த முடியவில்லை.\\ - தமீம்.
---
உங்கள் சகோக்களின் சான்றுகளை பெரியவர்கள் அதிரை பேரூராட்சித் தலைவனின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமா? தாய் மொழியில் உள்ளதையே விளங்க இயலவில்லை என்றால் உங்களைப் போன்ற கொ.ப.செ.க்கள் விளக்கலாமே? ஊரில் இப்போதெல்லாம் பெரியவர்களை எவன் மதிக்கிறான்? "தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்; பணம் உள்ளவன் பத்தும் செய்பவன்" எனும் நிலைதான். எனினும் இவை எல்லாம் சரியானதோ நிலையானதோ இல்லை என்பதை உணர மறுத்தால் உணர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும், இன்ஷா அல்லாஹ்.
---
உரிமம் குறித்து: இது விரைந்து கிடைக்க தடையாய் இருப்பதே அதிரை பேரூராட்சித் தலைவன்தான் என்ற 'சண்டைக்காரக் கட்சி'க்காரனின் பழி பொய்யென நிரூபிக்கட்டுமே பார்க்கலாம், உரிமம் விரைந்து கிடைக்கச் செய்து!
---
"அல்லாஹ் ஹலாலாக்கிய ஒன்றை வேண்டாமெனச் சொல்ல எவனுக்கும் அருகதையில்லை".
என முன்பு சொன்னதே கீழ்க்கண்ட மாற்றுக் கருத்துக்குமான மறுமொழி.
\\...ஆனால் எத்தனை பேர்களுக்கு அப்படிப்பட்ட சூழலில் அறுக்கப்பட்ட மாட்டின் இறைச்சியை சாப்பிட மனம் வரும். அது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டாலும் மனம் அதற்க்கு ஒப்பாவிட்டால் அது அவருக்கு தடுக்கப்பட்டதுதான்.\\ -தமீம்.
இங்கு ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். உடும்புக்கறி சாப்பிட சாப்பிட விரும்பாத ரசூல்(ஸல்) அவர்கள், எனக்கு அதைச் சாப்பிட மனம் ஒப்பவில்லை எனவே எனக்கு அது 'தடுக்கப்பட்டது' எனச் சொல்லவில்லை. விருப்பப்பட்ட மற்றவர் அதை உண்ணத் தடுக்கவுமில்லை; மாறாக, அனுமதித்து உள்ளார்கள்.
முக்கியமாக, இவரது ஃபத்வாவின் கடைசி வாக்கியமான "தடுக்கப்பட்டதுதான்" என்பதற்கான மார்க்கச் சான்றை அவர் இங்கே பொதுவில் வைக்க வேண்டும். முடியாவிட்டால் தான் அவ்வாறு சொன்னது தவறுதான் என மனமுவந்து ஒத்துக்கொண்டு அல்லாஹ்விடம் தவ்பாச் செய்ய வேண்டும்.
---
சினிமாப் பொறுக்கிகளின் வார்த்தைகளை என் கூட்டாளி ஒருவன் மேற்கோள் இட்டது அவனது அறியாமை மட்டுமல்லாமல் அது விவாதத்தின் பொருளை திசை திருப்பும் மலிவான உத்தியான கயமைத்தனம்.
எனது கூட்டாளிக்கு நிகராக தாங்களும் அதையே சுட்டு இங்கு இட்டிருப்பது உங்கள் வயதிற்கு ஏற்புடையதல்ல!
எனக்கருகில் உள்ள உங்களிடம் இதைவிட மிகத்தெளிவாகவே நான் இதைச் சொல்வேன் என்பதும் தாங்கள் அறியாததல்ல. எனினும், உங்களது கருத்தைப் பொதுவில் வைத்ததனால், நானும் அவ்வாறு செய்வது தானே நீதி?
Contd...
ஒரு பக்கச் சார்பான விமரிசனமென எனது கூட்டாளி சொன்னது நியாயமல்ல. தவறு ஒரு பக்கமே இருந்தாலும் இரு தரப்பையும் சமமாக கண்டிக்க வேண்டும் என்பது இந்திய சனநாயக நீதியாக இருக்கலாம்; இஸ்லாமியப் பண்பன்று.
(இந்திய சனநாயக நீதி: ஒரு பிரச்சினையில் பாதிக்கப்பட்டவர்களையும் பாதிப்பு ஏற்படுதியவர்களையும் சமமாக கண்டிப்பது/ கைது செய்வது / தண்டிப்பது மற்றும் பாதிக்கப்பட்ட சமுதாய இயக்கத்தையும், பாதிப்பு ஏற்படுத்திய சமுதாய இயக்கத்தையும் தடை செய்வது... என்பன கடந்த கால, நிகழ் கால தொடரும் இந்தியப் போலி சனநாயக அவலங்கள்)
'சண்டைக்காரக் கட்சி'காரனின் தவறு என்னவென எனது கூட்டாளி சான்றுகளுடன் சொல்லட்டும்; சம்மந்தப்பட்டவனை முகத்தில் அறைந்தது போல் கேட்க எனக்கொன்றும் அச்சமில்லை. எவனிடமும் எனக்குச் செஞ்சோற்றுக் கடனுமில்லை, அல்ஹம்துலில்லாஹ்!
---
என் மற்றொரு கூட்டாளி சம்சுதீன் ஆரூடம் சொன்னது போல அடுத்த தேர்தலில் நடக்கவும் சாத்தியம் இல்லாமலில்லை! அதற்காக இப்போது நடக்கும் அநியாயத்தை கண்டிக்காமல் இருக்க முடியாது.
---
எனது முந்தைய கருத்தில் மேற்கோளிட்ட இங்கு கருத்திடும் இருவர் பொதுவில் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு சம்மந்தப்பட்டவரிடம் விளக்கம் கிடைத்து அதை மாற்றிக் கொண்டீர்களா? எனில், முந்தைய குற்றச்சாட்டை பொதுவில் வைத்தது போல அதையும் இங்கு பொதுவில் வைக்கவும். இல்லையெனில் இலையெனில் 'காவடிக் கலக'திற்கும் தனக்கும் சம்மந்தமில்லை என அதிரை பேரூராட்சித் தலைவன் இந்தக் காணொளியில் சொன்னது அப்பட்டமான பொய் என்பது உங்களிருவராலேயே உறுதியாகி விடும்.
\\...வலுக்கட்டாயமாக FIR போடவைததும் பேரூராட்சி தலைவர்தான் என்பதையும் அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்\\ -தமீம் [இரண்டு நாட்கள் முன்பு வரை குறித்த 'அதிரையில் கந்தூரி...' பதிவில் பதியப்படிருந்த இவரது இந்தக் கருத்து இப்போது காணவில்லை! அஎ விளக்கம் தேவை.]
\\நிஸார் அஹமது said... கந்தூரி விசயத்தில் பேரூராட்சி தலைவர் அஸ்லம் நடந்து கொண்ட விதம் பற்றி வரும் தகவல்கள் வருத்தமளிக்கின்றன..இன்னும் நான்கு வருடங்கள் கழித்து வரும் தேர்தலுக்கான முன்னேற்பாடு என்று அவர் - கருதினால், நிச்சயம் அவர் தவறானதொரு முடிவில் இருக்கிறார் என்றே படுகிறது...\\
---
ஒருவனுக்கு பொறுப்பினை அளித்துப் பணியில் அமர்த்தினால், அந்தப் பணியைச் செய்பவனை அவனுக்குப் பொருப்பளித்தவர்கள் ஓயாமல் புகழ்ந்து கொண்டிருக்க மாட்டார்கள். அவன் தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பல்லாத மற்றவற்றில் ஈடுபட்டு குழப்பம் ஏற்படுத்தினாலே கண்டிக்கப் படுவான். இதுவே அதிரை பேரூராட்சித் தலைவனுக்கும் பொருந்தும். ஓயாமல் புகழுரைப்பவர் புகழ்வது அவரவரது 'செஞ்சோற்றுக் கடன்'!
நன்றி.
zubair from dubai
அஸ்ஸலாமு அலைக்கும்
இங்கு குற்றம் சுமத்தியவர் அல்லது சுமத்தப்பட்டவர்கள் ஆகிய இரு தரப்பினர்களையும் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் உங்களுடைய கருத்துக்களை பரிமாறிக்கொண்டால் பயனுள்ளதாக இருக்கும்
அவ்வாறு இல்லாமல். அவரை அவ்வாறு செய்ய சொல் இவ்வாறு சொல் என்பதுப்போன்று நமக்கு நாமே கருத்துக்கு பதில் கருத்து கூறியக்கொள்வது உகந்தவையாக தெரியவில்லை காக்காமார்களே
தயவு செய்து உங்களால் சம்பந்தப்பட்டவர்களை ஒற்றுமைப்படுத்த நேரில் வாய்ப்புகள் இல்லை என்றால். ஊரில் இருக்கும் பொது கருத்துடையவர்களை உங்களின் ஆலோசனைகளால் ஊக்கப்படுத்துங்கள்
வஸ்ஸலாம்
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். ((திருகுர்ஆன் 33:௩௬
ஒருவனுக்கு பொறுப்பினை அளித்துப் பணியில் அமர்த்தினால், அந்தப் பணியைச் செய்பவனை அவனுக்குப் பொருப்பளித்தவர்கள் ஓயாமல் புகழ்ந்து கொண்டிருக்க மாட்டார்கள். அவன் தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பல்லாத மற்றவற்றில் ஈடுபட்டு குழப்பம் ஏற்படுத்தினாலே கண்டிக்கப் படுவான். இதுவே அதிரை பேரூராட்சித் தலைவனுக்கும் பொருந்தும். ஓயாமல் புகழுரைப்பவர் புகழ்வது அவரவரது 'செஞ்சோற்றுக் கடன்>>>>>>>>>>>>
ஷாபியின் கருத்து காரமாக இருந்தாலும் நிதர்சனமான உண்மை .....சிறியோர் செய்த வெள்ளாமை ..விளைந்தாலும் வீடு வந்து சேராது என்பது பழமொழி ...அதாவது விவசாயம் செய்து பயிர்களை காத்து அறுவடை செய்தாலும் பலன் அடையும் விதமாக வீட்டிற்கு வந்து சேராது என்பது
போல ..நல்ல காரியம் செய்ய முற்பட்ட அஸ்லம் பகைகளை அதிக படுத்திக் கொள்வது நல்லதல்ல ..தா மு மு க வும் கொஞ்சம் அடக்கி வாசித்தால் நல்லது என்பதே என் கருத்து
ஒரு தனி நபர் செய்யும் வியாபாரத்திற்கு சுகாதராத்துறைக்கும் நடக்கும் பிரச்சினையை ஒரு இயக்கத்திற்கும், கட்சிக்கும் நடக்கும் பிரச்சனையாக ஆக்கவேண்டாம்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
அடிபட்ட மிருகங்கள் ஆகுமானவையா?
[url]http://www.satyamargam.com/1941[/url]
தனியொருவன் செய்யும் அட்டூழியத்திற்கு வக்காலத்து வாங்க அப்படியென்ன செஞ்சோற்றுக்கடன் மற்றும் வலுவான(?) இயக்கத்தில் இருந்து கொண்டு இயல்பாய் சொந்தப் பெயரில் கருத்திட அப்படி என்னத் தயக்கம், ஜுபைரின் வாப்பாவுக்கு?
அதிரை துபையானது எப்போது?!
சிங்கப்பூராக்கப் போறேன் என்றல்லாவா பேசிக்கிட்டாய்ங்க ;-)
zubair from dubai- al baraha 7
அஸ்ஸலாமு அலைக்கும்
மு.இ.ஷாஃபி காக்கா அவர்களின் தவறான புரிந்துணர்வுக்காக பதிகின்றேன் துபையில் இருந்து ஜூபைர் என்று எனது கருத்தை பதிந்த நான் துபையில் தான் இருக்கிறேன் மேலும் மற்றொரு ஜீபைர் என்பவர்க்கும் எனக்கும் தொடர்பில்லை
நான் பதிந்த கருத்துக்கள் இதுவே
2.இவர்களுடைய காணொளியினை பதிவதற்கு முன்பாக குற்றம் சுமத்தப்பட்டவரையும் பேட்டி எடுத்து அவர்களுடைய கருத்துகளையும் கேட்டறிந்து. பொதுவான கருத்துடைய சான்றோர்களின் முன்பாக இந்த சர்ச்சைக்குறிய விசயங்களை விவாதித்து சுமுகமான தீர்வுகளை ஏற்படுத்தி இருந்தால்.
ஓற்றுமையை நோக்கமாக கொண்டுச்செல்லும் நமது இனணயத்தை பற்றி இவர்கள் இவ்வாறு கூற நாம் வழி ஏற்படுத்திற்க்க மாட்டோம் என்று கருதிகிறேன்.
2.இங்கு குற்றம் சுமத்தியவர் அல்லது சுமத்தப்பட்டவர்கள் ஆகிய இரு தரப்பினர்களையும் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் உங்களுடைய கருத்துக்களை பரிமாறிக்கொண்டால் பயனுள்ளதாக இருக்கும்
அவ்வாறு இல்லாமல். அவரை அவ்வாறு செய்ய சொல் இவ்வாறு சொல் என்பதுப்போன்று நமக்கு நாமே கருத்துக்கு பதில் கருத்து கூறியக்கொள்வது உகந்தவையாக தெரியவில்லை காக்காமார்களே
தயவு செய்து உங்களால் சம்பந்தப்பட்டவர்களை ஒற்றுமைப்படுத்த நேரில் வாய்ப்புகள் இல்லை என்றால். ஊரில் இருக்கும் பொது கருத்துடையவர்களை உங்களின் ஆலோசனைகளால் ஊக்கப்படுத்துங்கள்..
மு.இ.ஷாஃபி காக்கா இதில் ஏதேனும் உங்களுக்கு மனசங்கடத்தை ஏற்படுத்தி இருந்தால் மன்னிப்புக்கோருகிறேன்.
மறப்போம் மன்னிப்போம் மறுமை வாழ்வை சுவைப்போம்.
இறைவன் நாடினால்..
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அன்பிற்கினிய சகோதரர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
இங்கே நான் வேறொரு தளத்தில் பதியப்பட்ட ஒரு பதிவிற்கு, நான் எழுதிய பின்னூட்டத்தை இந்த பதிவில் என்னுடைய ஒப்புதல் இன்றி சகோதரர் ரோஸ்கான் பதிந்துள்ளார். இது முறையில்லா செயல் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். வஸ்ஸலாம்.
அன்புடன்,
B. ஜமாலுத்தீன்
050-2855125
பிரட்சனைக்கான பதிலா ?
அஸ்ஸலாமு அலைகும்
1. மார்கெட்டில் மாடு அறுத்து விபற்து சம்மந்தமான பிரட்சனையில் த.மு.மு.க மற்றும் பேரூராட்சி தலைவர் ஆகிய இருதரப்புக்கும் இருந்த கருத்து வேற்றுமைகளையும் அதற்கான வாசகர்களின் கருத்துக்களையும் இத்தளதில் நாம் இது வரையில் பார்த்தோம்.இது சம்மந்தமாக நமது சகோதர இனயதளமான அதிரைபோஸ்டுக்கு .பேரூராட்சி தலைவர் அவர்கள் கொடுதுள்ள பேட்டியில் இந்த விசயதை திசைதிருப்ப முயல்வதை அரிய முடிகின்றது. இந்தபிரட்சனை என்ன? துலுக்காபள்ளி மார்கெட்டில் மாடு அறுத்து விற்கலாமா கூடாதா என்பதா? எப்படிபட்ட மாட்டை அருப்பது என்பதா?, அல்ல பேரூராட்சி தலைவர் வீட்டு திருமனதில் பங்கேற்கவில்லை என்பதா?. த.மு.மு.க வால் வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு ஒரே ஒருபிரட்சனைக்கு (அடிபட்ட மாடு) மட்டும் தான் பதில் சொல்லியுள்ள பேரூராட்சி தலைவர் அதுவும் மார்கப்படி கூடும் என்பதால் அதுவும் மக்கள் எதிர்பார்த்த பதில் அல்ல. மற்றபடி த.மு.மு.க வின் ஏனைய அனைத்து குற்றசாட்டுகளுக்கும் நீங்கள் (பேரூராட்சி தலைவர்) ஏன் பதில் சொல்லவில்லை அப்படியானால் மற்றகுற்றச்சட்டுகளை நீங்கள் (பேரூராட்சி தலைவர்) தவறு என்று ஏற்றுக்கொள்கின்றீர்களா? மக்கள் எதிர்பார்த்த பிரட்சனைக்கான பதிலை சொல்ல மறுப்பதன் மூலம் நீங்கள் தான் (பேரூராட்சி தலைவர்) பொய்யர் என்றால் தவரில்லை தானே?
1 of 1
தொடர்கிறது..
2.மூன்றாவது நபரின் கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டேன் என்று சொன்ன தலைவரின் செயல் நகைப்புக்குரியதாய் உள்ளது. எனேன்றால் அவர் கேள்வி கேட்பது த.மு.மு.க விடம் தான் அந்த இயகதில் இவர்சொன்ன மூன்றாவது நபறும் நிர்வாகியாக உள்ளார் எனவே நீங்கள்(தலைவர்)விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவரும் கேள்வி கேட்கத்தான் செய்வார் அதற்கு பதில் சொல்வது உங்கள்(தலைவவர்) மீது தார்மீக கடமை தானே
3.மூன்றா வது நபரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டேன் என்ற தலைவர், தனக்கு சதகமான விசயம் என்று கருதி மூன்றாம் நபர்சொன்ன விசயமான ஷாஹுல்ஹமீது தவறு செய்திருந்தால் அவர் மீது நடவடிகை எடுக்கப்படும் என்று சொன்ன அதற்கு மட்டும் பதில் அளிதுள்ளதன் மூலம் தான் ஒரு சந்தர்பவாதி என்று நிருபிக்கின்றார் தானே
4. தலைவர் வீட்டு திருமனத்துக்கு யார்யார் வரவில்லை என்பதெல்லம் அதிரை பேரூராட்சியின் பிரட்சனையோ பொதுமக்களின் பிரட்சனையோ அல்ல எனவே இந்த பதிலையும் மக்கள் எதிர்பார்க்கவில்லை தானே
5.தலைவர் சொல்லியுல்ல ஒரேஒரு பதிலையும் எற்பதற்கு ஐயமாக உள்ள்து.ஏனென்றால் அதுவும் தலைவர் அவர்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் தான் எந்தமதிரியான (தனக்கு சாதகமான) பதிலை எதிர்பாற்கின்றாறோ அந்த பதிலை வரவலைகும் விதத்திலேயே தலைவரின் கேள்வி அமைந்துள்ளது அதிலும் மாடு விற்றவர் மாடு இறக்கும் தருவாயில் இருந்தது என்று சொல்கின்றார்.ஆனால் தலைவர் பேட்டியில் ஒருஇடதில் அவரிடம் மாடு செத்துவிட்டது தானே என்று சொல்கின்றார்.இது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது தானே
எனவே பிரச்சனைகள் ஒன்று அதற்கான பதிலோ வேருஒன்றுமாக இறுப்பது பேரூராட்சி தலைவர் மீதான த.மு.மு.க வின் குற்றச்சாட்டுகள் அனைத்தயும் நியாய மானதுதான் என்று எற்றுக்கொள்ளும் விததில் உள்ளது தானே
வஸ்ஸலாம்
பிரட்சனைக்கான பதிலா ?
அஸ்ஸலாமு அலைகும்
1. மார்கெட்டில் மாடு அறுத்து விபற்து சம்மந்தமான பிரட்சனையில் த.மு.மு.க மற்றும் பேரூராட்சி தலைவர் ஆகிய இருதரப்புக்கும் இருந்த கருத்து வேற்றுமைகளையும் அதற்கான வாசகர்களின் கருத்துக்களையும் இத்தளதில் நாம் இது வரையில் பார்த்தோம்.இது சம்மந்தமாக நமது சகோதர இனயதளமான அதிரைபோஸ்டுக்கு .பேரூராட்சி தலைவர் அவர்கள் கொடுதுள்ள பேட்டியில் இந்த விசயதை திசைதிருப்ப முயல்வதை அரிய முடிகின்றது. இந்தபிரட்சனை என்ன? துலுக்காபள்ளி மார்கெட்டில் மாடு அறுத்து விற்கலாமா கூடாதா என்பதா? எப்படிபட்ட மாட்டை அருப்பது என்பதா?, அல்ல பேரூராட்சி தலைவர் வீட்டு திருமனதில் பங்கேற்கவில்லை என்பதா?. த.மு.மு.க வால் வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு ஒரே ஒருபிரட்சனைக்கு (அடிபட்ட மாடு) மட்டும் தான் பதில் சொல்லியுள்ள பேரூராட்சி தலைவர் அதுவும் மார்கப்படி கூடும் என்பதால் அதுவும் மக்கள் எதிர்பார்த்த பதில் அல்ல. மற்றபடி த.மு.மு.க வின் ஏனைய அனைத்து குற்றசாட்டுகளுக்கும் நீங்கள் (பேரூராட்சி தலைவர்) ஏன் பதில் சொல்லவில்லை அப்படியானால் மற்றகுற்றச்சட்டுகளை நீங்கள் (பேரூராட்சி தலைவர்) தவறு என்று ஏற்றுக்கொள்கின்றீர்களா? மக்கள் எதிர்பார்த்த பிரட்சனைக்கான பதிலை சொல்ல மறுப்பதன் மூலம் நீங்கள் தான் (பேரூராட்சி தலைவர்) பொய்யர் என்றால் தவரில்லை தானே?
1 of 1
http://www.satyamargam.com/1941[url][/url]
அஸ்ஸலாமு அலைக்கும்.
கேள்வி : உண்பதற்கு ஆகுமாக்கப்பட்ட ஒட்டகம்/ஆடு/மாடு/பறவை போன்றவை விபத்திலோ வேறு காரணங்களினாலோ அடிபட்டிருந்தால் அவற்றை இறப்பதற்கு முன்னர் ஹலாலான முறையில் அறுத்துச் சாப்பிடுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா?
- சகோதரர் ஷாஃபி, மின்னஞ்சல் வழியாக
பதில்: வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ் ...
அல்லாஹ் நமக்கு உண்ண அனுமதிக்கும் விலங்குகளில்/பறவைகளில் மூன்று அம்சங்கள் ஒன்றோடொன்று கலந்திருக்க வேண்டும்.
1. அனுமதிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும்.
2. உயிரோடிருக்க வேண்டும்.
3. அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டவையாக இருக்க வேண்டும்.
இவற்றை விளக்கும் இறைவசனம்:
"(தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாத பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டது, கழுத்து நெறித்துச் செத்தது, அடிபட்டுச் செத்தது, கீழே விழுந்து செத்தது, கொம்பால் முட்டப்பட்டுச் செத்தது, (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தது ஆகியவை உங்கள் மீது ஹராமாக்கப்பட்டிருக்கின்றன; (அனுமதிக்கப்பட்ட விலங்கு/பறவைகளில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர ..." (5:3).
மேற்கண்ட வசனம், உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகளேயானாலும் அவை விபத்தினால் இறந்து விடுமாயின் அவற்றின் இறைச்சியை உண்ணக்கூடாது என நேரடியாகத் தடுக்கிறது. ஆகவே, உண்ண அனுமதிக்கப்பட்ட பிராணிகளுள்
1. தானாகச் செத்தவை
2. விபத்தினால் செத்தவை
3. உயிரோடிருந்த நிலையில் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாதவை
ஆகியவற்றை உண்பதற்கு அனுமதில்லை என்று விளங்குகிறோம்.
உண்ண அனுமதிக்கப்பட்ட பிராணிகள் விபத்தினால் காயமடைந்த நிலையில் இறக்கும் தருவாயில் இருக்குமாயின் அவற்றை முறைப்படி அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்து உண்ணலாம் என்பதற்கு நபிமொழிகளில் சான்று உள்ளது!
'ஸல்வு' எனுமிடத்தில் மேயக்கூடிய சில ஆடுகள் எங்களுக்குச் சொந்தமாக இருந்தன. அந்த ஆடுகளில் ஒன்று சாகும் தருவாயில் இருப்பதை எங்களின் அடிமைப்பெண் பார்த்துவிட்டு, ஒரு கல்லை (கூர்மையாக) உடைத்து, அதன் மூலம் அந்த ஆட்டை அறுத்தார். "நபி(ஸல்) அவர்களிடம் இதுபற்றி நான் கேட்கும்வரை சாப்பிடாதீர்கள்!" என்று கூறினேன். நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு அதைச் சாப்பிடுமாறு கூறினார்கள்.
- அறிவிப்பாளர் கஅபு இப்னு மாலிக் (ரலி) (நூல்கள் - புகாரி 2304, 5502; இப்னுமாஜா; அஹ்மத்; முவத்தா மாலிக்).
கேள்வியில் கேட்டுள்ளபடி செத்துவிடும் என்கிற நிலையிலுள்ள விலங்குகளை/பறவைகளை அல்லாஹ்வின் பெயர்கூறி அறுத்து, அவற்றைப் பயனுள்ள, ஹலால் உணவாக ஆக்கிக்கொள்ளலாம்.
மேலும், வேட்டைக்குப் பழக்கப்படுத்தப்பட்ட வேட்டைநாய்/சிறுத்தை போன்ற விலங்குகளும் ராஜாளி போன்ற பறவைகளும் வேட்டைக்கு அனுப்பப்படும்போது அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்பப்பட்டு, அவை நமக்காக வேட்டையாடிய ஹலாலான விலங்குகள்/பறவைகள் உயிரோடிருந்தாலும் செத்துவிட்டாலும் அல்லாஹ்வின் பெயர் கூறி உண்பதற்கு ஆகுமானவையாகும் (இறைவசனம் 5:4இன் சுருக்கக் கருத்து). இதுவே இஸ்லாம்!
http://adiraipost.blogspot.com/2012/07/blog-post_03.html
இந்தக் காணொளியின் தொடக்கத்தில் ௦௦:48 வினாடியிலிருந்து ௦1:00 நிமிடம் வரை,
மகிழங்கோட்டை-கீழக்காடு பகுதி, வடிவேல் என்பவரிடம், "நீங்க என்னிடம் தகவல் ஒன்னு சொன்னீங்க, என்னுடைய பசு மாடு ஒன்னு ரயில்ல அடிபட்டு அரை உயிராய் இருக்கும்போது நான் ஆயிரம் ரூபாய் விலை பேசி விற்றேன், அந்தக்கறியை அவர் வெட்டி விற்றார் என்று..." என அஸ்லம் சொல்லிகொடுக்க, விற்றதாகச் சொல்லப்படும் பெரியவர் ஆமோதிக்கிறார்.
மாறாக,
காணொளியின் 02:55 - 23:59 நேரத்தில் நாலே வினாடிகளில்,
"அப்ப நீங்க ரயில்ல அடிபட்ட செத்த மாட வித்தது உண்மை" என்று அஸ்லம் சொல்லிக் கொடுக்க விற்றதாக சொன்னவர் "உண்மை" என்று மட்டும் அடுத்த வினாடியில் (02:59-03:00) சொல்கிறார்!
எது உண்மை?
அரை உயிராய் விற்றதா அல்லது செத்த மாட்டையா? இரண்டையும் சொல்லிக் கொடுப்பது அஸ்லம்! நேரெதிரான இரண்டுக்கும் தலையாட்டுவது மகிழங்கோட்டை-கீழக்காடு பகுதி, பெரியவர் வடிவேல்!!
அரை உயிராய் இருந்த பசுமாடு ஒன்று மற்றும் செத்த மாடு மற்றொன்று. ஆக மொத்தம் இரண்டு வெவ்வேறானவையா?
பொய் சொல்பவன் அரை-குறை அறிவுள்ள மனிதர்களிடமே மாட்டிக் கொள்ளும்போது பேரறிவாளனான அல்லாஹ்விடம் தப்புவது எப்படி?
தவறிழைப்பது மனிதர்களின் இயல்பு. செய்த தவறை மறைக்க தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டிருப்பவனை அல்லாஹ் மன்னிப்பது கடினம்.
இதற்கு மேலும் தவறிழைக்காமல் தன்னிலை உணர்ந்து, குறித்த சம்பவத்தில் இஸ்லாமிய இயல்பைப் பேணி ஹலாலான மாட்டுக்கறி அதிரையில் கிடைக்க உரிமம் வேண்டி விண்ணப்பித்திருக்கும் சாவன்னாவுக்கும் மற்ற அனைவர்க்கும் உரிமம் கிடைக்கச் செய்வது அ.பே.த. அஸ்லத்தின் கடமை.
அதே சமயம், இஸ்லாத்தில் தடையோ குற்றமோ அல்லது சட்ட விரோதமோ இல்லாத நிலையில், தனது வியாபாரம் பாதிக்கும் என்று அஞ்சி "ரயிலில் அடிபட்ட மாட்டை அறுத்து விற்கவில்லை" என்று சாவன்னா பொய் சொல்லத் தேவையில்லை. "உணவளிப்பவன் அல்லாஹ்; அதை எவனாலும் தடுக்கவியலாது" என்பதை நினைவில் கொள்ளவும்.
துப்பறியும் பத்திரிக்கையாளன் அ.போஸ்ட் அ.ர.ஹிதாயத்துல்லாஹ், அநியாயப் பரப்புரைகளுக்கு துணை நிற்காமல் குறித்த சம்பவத்தில் நல்லிணக்கம்-ஒற்றுமைக்கு பாடுபட வேண்டும்.
\\தனியொருவன் செய்யும் அட்டூழியத்திற்கு வக்காலத்து வாங்க அப்படியென்ன செஞ்சோற்றுக்கடன்\\
இதை மு.இ.ஷாஃபி காக்காவிடம் கேட்கிறேன் தக்வா பள்ளிக்கு செந்தமான கடையில் இருந்துக்கொண்டு நீங்கள் வக்காலத்து வாங்கும் நபர் பள்ளிக்கு வாடகை தருகிறாரா? பள்ளிக்கே வாடகை தராதவருக்கு வக்காலத்து வாங்குவதன் நோக்கம் உங்களுக்கு சேர்மனை பிடிக்கவில்லை என்று நாங்கள் என்னலாமா?
துப்பறியும் பத்திரிக்கையாளன் அ.போஸ்ட் அ.ர.ஹிதாயத்துல்லாஹ், அநியாயப் பரப்புரைகளுக்கு துணை நிற்காமல் குறித்த சம்பவத்தில் நல்லிணக்கம்-ஒற்றுமைக்கு பாடுபட வேண்டும்.
---------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். சரியா சொன்னீங்க நானும் வழிமொழிகிறேன். அவ(ன்)ரிடமும் எடுத்துச்சொல்லிறேன் இன்சா அல்லாஹ்.
Post a Comment