நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளிக்கூட நேரம் மாற்றம் ! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, ஜூன் 15, 2012 | , ,


அதிரை இமாம் ஷாஃபி(ரஹ்) மெட்ரிக் பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களிடமிருந்து, பள்ளிக்கூட நேர மாற்றத்திற்கான விளக்கமும், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கான வேண்டுகோள் வைத்துள்ளார்கள்.

அதில் குறிப்பாக, மாணவமணிகள் அதிகாலையில் கற்பதால் ஏற்படும் பலன்களை விளக்கியுள்ளார்கள், அதனை நடைமுறைப் படுத்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளது.தகவல் : அஹமது இபுறாஹிம்

16 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

இமாம் ஷாஃபி(ரஹ்) மெட்ரிக் பள்ளி நேர மாற்றத்திற்கான விளக்கமும், பெற்றோர்க்கும், மாணவர்களுக்கும் வழங்கியிருக்கும் வழிகாட்டல் அருமை !

இதனை அனைவரும் பின்ற்ற வேண்டும், அதோடு பள்ளி நிர்வாகத்தோடு ஒத்துழைத்து நம் பிள்ளைகளின் படிப்பில் பிரகாசிக்க உதவவேண்டும் இன்ஷா அல்லாஹ் !

அதிகாலை பொழுதோடு அன்றைய நாளின் துவக்கம் குதூகலமே !

பள்ளிப்பருவ நாட்களில் அதனை அனுபவித்த சுகம் அதனால் கண்ட பலன்கள் ஏராளம்.

ஏன், இங்கு வேலைக்கு செல்ல அந்தப் பழக்கமே பேருதவியாக எவ்வித சிரமமின்றி செல்ல பழக்கியது !

அதிகாலை விழித்து பஜ்ர்'க்கு பின்னர் அன்றை நாள் முழுவதும் நிறைநேரம் இருப்பதை உணர்வுபூர்வமாக கண்டது !

இங்கு விடுமுறை நாட்களில் நீண்ட நேரம் தூங்கி எழுந்து அந்த நாட்களை தொலைத்த காலங்கள் ஏராளம் !

Noor Mohamed சொன்னது…

கற்பதற்கு ஏற்ற நேரம்

"காலைக் கல்; மாலைப் புல்” என்று ஒரு பழமொழி உண்டு. காலை நேரத்தில் கல்லின் மேல் உட்காரலாம்; குளிர்ச்சியாக இருக்கும். மாலை நேரத்தில் கல்லின் மேல் உட்கார்ந்தால் சுடும். காலை நேரத்தில் புல்லின் மேல் உட்கார்ந்தால் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். மாலை நேரத்தில் புல்லின் மேல் அமர்ந்தால் இதமாக இருக்கும் என்று சிலர் பொருள் கூறுவார்கள்.

மாறாக, வேறு ஒரு பொருளும் கூறுவர்.

காலையில் கற்க வேண்டும். அப்போது மனம் அமைதியாக இருந்து கல்வியை ஏற்கத் தயாராக இருக்கும். காலை என்பது அதிகாலை பஜ்ர்'க்கு மேல்; அப்போது கற்கும் கல்வி கல்வெட்டு போல் மூளையில் பதியும். "இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து” என்பது கல்வி பற்றிய ஒரு பழமொழி.

"மாலைப் புல்” என்பதற்கு, மாலை நேரம் இன்பத்தை அனுபவிப்பதற்கு ஏற்ற நேரம் என்று கூறுவர். (புல்-புல்லுதல்-இன்பம் அனுபவித்தல்). அதுதான் மாலை முழுதும் விளையாட்டு.

Ibn Abdulwahid சொன்னது…

அஸ்ஸலமு அலைக்கும்

கல்வி நேர மாற்றம் வரவேற்புக்குரியது தான்.-
“நீங்கள் இளைப்பாறுவதற்காக இரவையும், நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் அல்லாஹ்தான் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் பொழிகின்றான்; ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை” (40:61)

இரவில் முந்நேரம் உறங்கி, காலையில் சீக்கிரம் எழுந்து, இறைவனைப்புகழ்ந்து, பஜ்ர் தொழுகையை நேமமாக தொழுது, இறைவனின் அருளைப்பெற்று, அன்றைய காலைப்பொழுதை சுறுசுறுப்புடன் அடையப்பெற்றவர்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள்வானாக.-

அதிரை என்.ஷஃபாத் சொன்னது…

நேர மாற்றம், கண்டிப்பாக மிகப் பெரிய மாற்றத்தைத் தரும் இன்ஷா அல்லாஹ். வரவேற்போம்.!!

Shameed சொன்னது…

இங்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான நம் கட்டுரையை பின்னுட்டமாக இடுவது பொருத்தமாக இருக்கும்


அதிரைநிருபர் குழு | Tuesday, December 21, 2010 | கல்வி விழிப்புணர்வு , ஷாஹுல் ஹமீது

இன்று முன்னேறிய நாடுகளை கவனித்தால் ஒரு முக்கியமான செய்தி நமக்கு புலப்படும். இந்த நாடுகளில் பள்ளி கூடங்கள் எல்லாம் அதிகாலை 7 மணிக்கு தொடங்கி விடும். அது போல் அரசு அலுவலகங்கள் 8 மணிக்கு தொடங்கி விடும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகூடம் அனுப்பிவிட்டு தாங்கள் வேளைக்கு செல்வதற்கும் வசதியாக இருக்கும் .


குழந்தைகளும் அதிகாலை படிப்பை தொடங்குவதால் படித்தவை அனைத்தும் மனதில் நிற்கும் நன்றாக படிக்கும் குழந்தைகள் பிற்காலத்தில் வாழ்கையில் நல்ல முன்னேற்றமும் தகுதியும் அடைவதால் வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்ல முன்னேற்றம் கிடைகின்றது .


அதை விட முக்கியமான விஷயம் அதிகாலையில் எழவேண்டும் என்பதால் இரவில் சீக்கிரம் தூங்கி விடுவார்கள். மானாட ம(யீர்)யில் ஆட்டம் போன்ற மட்டமான TV நிகழ்ச்சிகள் பார்த்து மூளை மழுங்கடிக்கபடுவது தவிர்க்கப்படுகின்றன. அதிகாலையில் எழுந்து பள்ளிக்கூடம் செல்வதால் 7 மணிக்கு ஸ்கூல் என்றால் 6 30 க்கு வீட்டில் இருந்து கிளம்பவேண்டும் இவர்கள் 5 மணிக்கு எல்லாம் எழுந்து ரெடியாக வேண்டும் 5 மணிக்கு எழுந்தால் இறை வணக்கமான சுபுஹு தொழுகை நிறைவேறிவிடும்.


குழந்தைகளுக்கு படிப்பு படிப்பு என்று படிப்பை மட்டும் சொல்லிக்கொடுக்காமல் படிப்பினுடன் சேர்ந்து வெளிபழக்க வழக்கங்களையும் சொல்லிக்கொடுக்க வேண்டும். உதரணத்திற்கு சாப்பாட்டு நேரத்தில் திடீர் விருந்தாளி வந்து வந்து விட்டால் மேலும் உடனே சமைக்க நேரமிருக்காது, இருக்கும் உணவை பகிர்ந்து உண்பதற்கு பழகி கொடுக்க வேண்டும் (யார் வந்தால் என்ன, எனக்குள்ள கொள்ளளவு என்னவோ அதை புல் செய்து கொள்வேன் என்ற சிந்தனையை இளைய வயதிலேயே எழாமல் இருக்க நல்ல புத்திமதிகளை புரியும்படி சொல்ல வேண்டும்).

Shameed சொன்னது…

part 2
நமது ஊரின் முக்கியமான பேங்க்: 10 மணிக்கு பேங்க் திறப்பார்கள் அங்கு வேலை செய்வோரின் முகத்தை பார்த்தால் தூங்கி வலிந்து கொண்டுதான் இருக்கும். போட்டிருக்கும் சட்டை காலர் அழுக்கு பிடித்தே இருக்கும் அல்லது காலர் பிய்ந்து போயிருக்கும் இந்த இரண்டில் ஒன்று இல்லை என்றால் இவர் பேங்க்கில் வேலை செய்பவர் இல்லை என்று அர்த்தம்.


நாம் போய் கவுண்டரில் ஏதாவது விபரம் கேட்டால் அண்ணார்ந்து பார்க்கவே ஐந்து நிமிடம் ஆகும் நாம் கேட்டதற்கு பதில் அந்த நாலாவது சீட்டில் போய் கேளுங்கள், இங்கே வந்து களுத்தை அறுக்குரியலே என்று சிடு சிடுப்பார். அந்த நாலாவது சீட்டுக்கு போன அங்கு ஆளே இருக்க மாட்டார், என்னவென்று கேட்டால் லீவுலே போயிருக்கார் என்பார்கள் சரி மனேஜரை பார்க்கலாமென்று போனால் லாக்கருக்கு போனவர் இன்னும் வரவில்லை என்று நம்மை மதிக்காமல் பியுன் சொல்லிவிட்டு போய்க்கொண்டு இருப்பான் .லாக்கருக்குல போனவரு அவருடைய டூட்டி டைம் முடிஞ்சிதான் வெளியோ வருவாரு போல.


இதெல்லாத்தையும்விட காஷ் கவுண்டரில் உள்ளவர் பணம் தரும்போது என்னவோ அவர் வீட்டு பணத்தை நமக்கு சும்மா எலங்கஸன் நன்கொடையா தருவது போல் பல அலப்பறை செய்து விட்டுதான் பணத்தை கையில் கொடுப்பார். இவர்களிடம் ஒரு சிரிப்பையோ அல்லது கனிவான வார்த்தையையோ நாம் எதிர்பார்த்தால் நாம் ஏமாந்து தான் போகணும். இங்கு கொடுமை என்னவென்றால், இவர்கள் வாங்கும் சம்பளம் நம் பணம் என்பது நமக்கே தெரியாது, அவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது.


அடுத்து பத்திரப்பதிவு அலுவலகம்: அதே 10 மணி அதே அலுக்கு சட்டை தரையை சீய்க்கும் எட்டுமுழ வேஷ்டி. இவர்களுக்கு சம்பளத்தை விட கிம்பளம் ஜாஸ்தி அதிலும் அதிரைப்பட்டினம் என்றால் சொல்ல வேண்டியது இல்லை ஊரில் மழை பெய்கிறதோ இல்லையோ இங்கு பணமழைதான் தினமும் .


கை நாட்டு எடுத்து விட்டு கை விரல் துடைக்க ஒரு துணி ஒன்று கொடுப்பார்கள் அதில் விரல் துடைத்தால் அந்த விரலை அன்றே அறுத்து எரிந்து விடவேண்டியதுதான், அவ்வளவு துர்நாற்றம் அந்த துணியில்.


பத்திர பதிவு ஆபிசர்: ஓ அந்த இடமா வேலிவ் கூடுதல் ஆச்சே! எக்ஸ்ட்ரா இன்னும் பத்திரம் ஒரு 50 THOUSAND ஆகும் நீங்க ஒன்னு பண்ணுங்க பத்திர எழுதரிடம் 15000 கொடுத்திருங்க பாக்கியா நான் பாத்துக்கொள்கின்றேன் என்பார் நமக்கு இதே எல்லாம் கேட்டு தலைசுத்தும் பணத்தை கொடுத்தமா வேலைய முடிச்சமான்னு வீடு வந்து சேருவோம் . இவ்வளவு பணத்தை வாங்கும் அந்த பத்திர பதிவு ஆபிசர் கை நக அழுக்கை பார்தா முழுசா மூணு நாளைக்கு சோறு சாப்பிட மனசு வராது...


மேலே கண்ட அனைவரும் நன்கு படித்து பட்டம் வாங்கியவர்கள் தான் ஆனால் இவர்கள் நடை முறை கல்வியை பயில மறந்தவர்கள் .


நாம் என்ன செய்ய வேண்டும்


நாம் நம் பிள்ளைகளுக்கு 5 வேலை தொழுகையையும், நல்ல படிப்பையும், ஹராம் ஹலாலையும், சுத்தம், நேர்மையும், நல்ல பழக்க வழக்கங்களையும், எல்லோரையும் மதிக்கவும் கற்றுகொடுக்க வேண்டும் .


இங்கு வரும் நாம் சகோதரர்கள் அவரர்களுக்கு தெரிந்த நல்ல விசயங்களை நம் மாணவ செல்வங்களுக்கு கட்டுரை மற்றும் பின்னுட்டம் மூலம் அறியத்தரவும்.


மற்றும் ஒரு சுவாரஸ்யமான சிந்தனை தூண்டும் பதிவில் சந்திக்கலாம்.


அன்புடன்.


-- SHAHULHAMEED
DAMMAM

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

அட ! - அன்றைய விழிப்புணர்வு கட்டுரை இன்று பின்னூட்டமாக !

அதிகாலை விழிப்பு...
வாழ்வின் செழிப்பு.. !

Shameed சொன்னது…

m.nainathambi.அபுஇபுறாஹிம் சொன்னது…

//அட ! - அன்றைய விழிப்புணர்வு கட்டுரை இன்று பின்னூட்டமாக !

அதிகாலை விழிப்பு...
வாழ்வின் செழிப்பு.. ! //

மனசு மறக்கவில்லை ,பொருத்தம்தானே பதிந்தது !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

அதிகாலை விழிப்பு, அதிகாலை படிப்பு எல்லாம் நல்லது தான்.
அதுக்காக அதிகாலையிலேயே பள்ளி துவங்குவதால்
காலை உணவில் அவசரம்,
பகல் உணவில் பெற்றோர் கவனிப்பின்மை,
சில பகுதிகளுக்கு பள்ளி வாகனம் 1 மணி நேரத்துக்கு முன்பே வந்து விடுதல்
போன்ற அசெளகரியங்களும் இருக்கத் தான் செய்கின்றன.
இதை நியாயப்படுத்த அழகான அதிரை வாழ்க்கையில் சூழ்நிலை கருதி அத்தனையும் இழந்த மற்ற ஊர்களோடு ஒப்பிடுவது சரியல்ல.

அப்துல்மாலிக் சொன்னது…

இது பற்றி அதிரைஎக்ஸ்பிரசில் விவாதம் வந்தபோது நான் சொன்னது சரியான பள்ளி இயங்கும் நேரம் காலை 7.30 முதல் மதியம் 2.30 மணிவரை இடையில் 30 நிமிடம் இரண்டு முறை இடைவெளி, நிச்ச்யம் வெற்றியடையும், மாணவர்களும் காலைப்பொழுதின் தனித்தன்மையை உணர்வார்கள்

Ebrahim Ansari சொன்னது…

முன்நூட்டத்துக்கு பின்னூட்டம் இடுவதா அல்லது முன்னர் வந்த ஷா.ஹமீது உடைய கட்டுரைக்கு பின்னூட்டம் இடுவதா என்று புரியவில்லை. கை கொடு ஷாகுல். நான் முன்பு படித்திருக்கவில்லை. மிக்க மகிழ்ச்சி.

அரபு நாடுகளில் மட்டும் ஒன்றும் பேசாமல் விடியற்காலையிலேயே பிள்ளைகளை ஜோடித்து பள்ளிக்கு அனுப்பிவிட்டு தொலைதூரம் உள்ள அலுவலகத்துக்கும் வாய் பேசாமல் போகிறோம் . ஊரில் மட்டும் கூடியவை கூப்பிடுதூரத்தில் உள்ள பள்ளிக்கு சற்று சீக்கிரமே போவதில் என்ன பிரச்னை?

சமாளிக்க வேண்டியதுதான். நல்ல மாற்றங்களை ஏற்கும் பக்குவங்களை இனியேனும் உண்டாக்கிக்கொள்வோமா?

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்,

இமாம் ஷாஃபி பள்ளி நேரம் மாற்றம், பொதுவாக இவ்வருட பள்ளி ஆரம்பித்த நாட்களில் இது தொடர்பாக விமர்சனம் ஏற்பட்டது, இதில் காலை மார்க்க கல்வியை மக்தப் மதர்ஸாவில் கற்று வரும் மாணவர்களுக்கு நேரம் குறைவாக உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இதில் மக்தப் மதர்ஸா ஆசிரியர்கள் பள்ளி முதல்வர் அவர்களிடம் முறையிட்டதாக பரவலாக ஊரில் பேசப்பட்டது.

இன்றைய காலகட்டத்தில் மார்க்க கல்வியின் அவசியம் பற்றி பெற்றோர்கள் பலர் உணர்ந்துள்ள இந்நிலையில், பள்ளிக்கூடங்களும், மக்தப் மதர்ஸாக்களும் ஒன்றிணைந்து செயல்படுவது காலத்தின் கட்டாயம்.

சகோதரர் அப்துல் மாலிக்கின் கருத்துடன் நானும் உடன்படுகிறேன். சிறுவயதிலிருந்தே அதிகாலையில் எழும்பும் பழக்கம் ஏற்படுவதற்கு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

Saleem சொன்னது…

இதற்கு முன்னரே ஒரு சகோதர வலைப்பதிவில் கூறினேன் ://///"""பெரும்பாலான பெற்றோர்கள் தற்போது உள்ள நடைமுறை வரவேற்கத்தக்கது என்று கூறுகின்றனர்.ஆரம்பத்தில் கஷ்டமாக தெரியும் பிறகு பழகிவிட்டால் சரியாகிவிடும்."""////// அது போல இப்பொழுது அனைவரும் இந்த நேர மாற்றத்தை வர வேற்றுள்ளனர்!!!

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்,

இமாம் ஷாஃபி பள்ளி நிர்வாகத்திற்கு,

பள்ளியின் நேர மாற்றத்தால் ஒரு சில மாணவர்களின் பெற்றோர் கொஞ்சம் சிரமப்படுகிறார்கள், இதனால் 5 அல்லது 10 நிமிடம் காலதாமதமாக வருகிறார்கள், அவர்களை பள்ளியில் அனுமதிப்பதில்லை. அம்மாணவர்கள் பள்ளிக்கும் செல்லாமல் வீட்டிற்கும் செல்லாமல், வேறு வழிகளை தேட முயற்ச்சிக்கிறார்கள்.

காலதாமதமாக வரும் மாணவர்களை பள்ளியின் உள்ளே வரவைத்து மாணவர்களை திருத்தும் வழிகளை கையாளலாம்.

மாணவர்களை வெளியில் துரத்துவது என்பது பல தீயவழிகளுக்கு விட்டுச்செல்லும் என்பது என் தனிபட்ட கருத்து. தன் பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு காலதாமதமில்லாமல் அனுப்புவது அனைத்து பெற்றோரின் கடமை.

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

இன்றைய காலகட்டத்தில் மார்க்க கல்வியின் அவசியம் பற்றி பெற்றோர்கள் பலர் உணர்ந்துள்ள இந்நிலையில், பள்ளிக்கூடங்களும், மக்தப் மதர்ஸாக்களும் ஒன்றிணைந்து செயல்படுவது காலத்தின் கட்டாயம்.

Saleem சொன்னது…

பெரும்பாலும் தனியார் வாகனத்தில் வருபவர்கள் தான் தாமதமாக வருகிறார்கள் அதிலும் சிறு பிள்ளைகள் சரியாக வருகின்றனர். இன்றையதினம் சுமார் 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தாமதமாக வந்தனர் அனைவரையும் பள்ளிக்கு அனுமதித்தனர். ஆனால் கேட் பூட்டியதும் வரும் மாணவர்களைத்தான் அனுமதிக்கிறதில்லை.

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு