வாழ்க்கையில்
முன்னேறத்தான் எல்லோரும் சிந்திக்கிறோம். பணம் / சொத்து / ஹெல்த் /
உறவுகள், இருப்பினும் சமயங்களில் ஏன் நாம் எதில் சிந்திக்கிறோமோ அதில் பின்னோக்கி
போகிற மாதிரி இருக்கிறது.
இது இன்றைக்கு வந்த கேள்வியல்ல, மனித நாகரீகம் தோன்றிய காலத்திலேயே இதுவும் தோன்றியிருக்கலாம்.
முன்பு நான்
சொன்ன கான்சியஸ் மைன்ட் / சப்கான்சியஸ் மைன்ட் விசயங்களில் கவனிக்க வேண்டிய விசயம். பிரைன் செல்ஸ். நாம்
தொடர்ந்து எந்த விசயத்தை நமது மைன்ட் தன் வசம் வைத்துள்ளது என்பதை செக்
செய்ய வேண்டியது நம் கடமை. தொடர்ந்து ஒரு விசயத்தை நினைக்க நினைக்க அது ப்ரைன்
செல்லாக உருவாகிறது. அதனால்தான் சின்ன வயதிலிருந்து நல்ல விசயங்கள கேட்க
பழக்கப் படுத்துகிறார்கள். நாம் வளர்ந்த பிறகு கேட்கும் குப்பைகளை தூர
வீசத்தெரியவில்லை என்றால் உள்ளுக்குள் இருந்து குடைச்சல் போடும். இப்போது முன்னேர முடிவெடுத்தவர்கள் ஏன்
தொடர்ந்து முன்னற முடியாமல் போவதற்கான காரணம். முடிவெடுத்த பிறகு அவர்களின் தொடர்
சிந்தனைகள் வாழ்க்கையின் பிரச்சினைகளை மட்டும் எப்படி சமாளிப்பது என்ற ஒரே சி.டி
யை திருப்பி திருப்பி கேட்டுக் கொண்டிருக்கும்.இப்போது புரிந்திருக்கும் தொடர்ந்து
கேட்கப்படும் "பிரச்சினைகளை சமாளிப்பது எப்படி?" சி.டி
சுபிட்சத்துக்கு இழுத்து செல்லாமல், பிரச்சினைகளுடன் உங்கள் மைன்டை முழு "ரேம்" ஐ பயன்படுத்தி
ஒட்டிக் கொண்டிருக்கும். மைன்ட் மட்டுமல்ல, மண்டையும் சூடாகுமா ஆகாதா?.
கமன்டோ
பயிற்சிகளில் கண்ணுக்கு நேராக நின்று சத்தம் போட்டு பயிற்சியில் ஈடுபடும் வீரர்களை
ஒரே விசயத்துக்கு தயார் படுத்துவது இதற்காகத்தான். உங்கள் எனர்ஜியுடன் உங்களை இணைப்பதற்கான
பயிற்சிகளில் ஒன்று கண்ணாடி முன்னால் நின்று உங்கள் கண்ணில் உள்ள சின்ன கறுப்பு
வளையத்தை கவனிப்பது [ஒரு 10 நிமிடமாவது]. கொஞ்சம் கஷ்டம்தான் என்றால்
மூச்சுகளுக்கான இடைவெளி மீது கவனம்
செலுத்துவது Between Inhalation and exhalation.
இதை நான்
எழுதக் காரணம் நம் வாழ்க்கை எதை ஆணித்தரமாக நம்மிடம் கேட்கிறதென்றால் ஒவ்வொரு நிமிடத்தின்
உண்மைகளையும் உங்களை வைத்தே சந்திக்க வைக்கிறது.[அதுதான் தெரியுமே!!என்று ஒரே
வார்த்தையில் சொல்லிவிட வேண்டாம்]உண்மையை சொன்னால் பெரும்பாலும் நாம்
நிதர்சனங்களை சந்திக்காமல் தப்பிக்க பார்க்கிறோம்.
நம் மனதுக்கு எது
சந்தோசம் தருகிறதோ அதை நாம் சந்திக்க தயார். ஆனால் எது கவலை அளிக்கிறதோ அதை
சந்திக்காமல் அதற்கான காரணத்தை உங்கள் கற்பனையில் உதிக்கும் ஏதாவது காரணத்தோடு
இணைத்து விடுவது.
ஒரு உதாரணமாக
சொன்னால் நல்ல சம்பாதியம் இருந்தால் நன்றாக செலவு செய்வது, சம்பாத்யம் குறைந்தால் அதற்கு எந்தவகையிலும் தானும் ஒரு காரணம் என்ற உண்மையை
மீறி அவன் / இவன் / காலம் / சூழ்நிலை என்று அடுக்கிக் கொண்டே போவது.
எப்போதெல்லாம்
தப்பிக்க நினைக்கிறீர்களோ அப்போதெல்லாம் வாழ்க்கையை நீங்கள் சந்திக்கவில்லை.
வாழ்க்கையை எப்போது சந்திக்கவில்லையோ அங்கே நீங்கள் இல்லை.
அதனால்தான்
உங்களை நீங்கள் முதலில் சந்திக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
எப்போதெல்லாம்
உங்களை சரியாக நீங்களே சந்திக்கும் தருனம் வருகிறதோ அப்போதெல்லாம் நீங்கள் ஒரு
கிரியேட்டர் [புதிதாக உருவாக்குபவர்] ஆகிறீர்கள்.அதனால்தான்
வாழ்க்கையின் போராட்டம் / சவால்
எதுவானாலும் "விழிப்புணர்வுக்கும் - விழிப்புணர்வு இல்லாத" தொடர்பே பிரதானம். அல்லது மையப்புள்ளி.
வாழ்க்கையில்
வெற்றி பெற்றவர்கள் அனைவரும் ஒரு விதமான சூழ்நிலையை சந்திக்கும்போது அவர்கள்
தப்பிக்காமல் எதிர் கொண்டதாலேயே வெற்றியடைந்ததாக சொல்வார்கள்.
- உன்னால் ஒரு காசுக்கும் புண்ணியமில்லை...
- உன்னால் என்ன சாதிக்க முடியும்?
- எப்படி எங்களை விட்டு போய் வாழ்ந்து விடுவாய் என்று பார்க்கிறேன்.
இதுபோன்ற
கேள்விகள் தன்னை அழித்து க்கொள்ளும் தற்கொலைக்கும் தூண்டக் கூடியது. எப்போது சவால்களை ஏற்றுக் கொள்கிறோமோ அப்போதே நமக்குள்
இருக்கும் கோழை இறந்து விடுகிறான்.
தொடக்கூடிய
தூரத்திலும் , பார்க்க கூடிய தூரத்திலும் உள்ள விசயங்களில்
நம்பிக்கை வைப்பது ஒன்றும் பெரிதல்ல. பார்க்க முடியாத தூரத்தில் உள்ள
விசயங்களையும் நம்பி சாதிப்பதில்தான் வெற்றி இருக்கிறது.
Impact of
Negativity in Life:
எவ்வளவு பெரிய
சாதனையாளருக்கும் சறுக்குதலை ஏற்படுத்துவது நெகட்டிவான விசயங்கள். இதை முதலில்
மனரீதியாக கட்டுப் படுத்துவதை விட நம்மை சுற்றி நடக்கும் நெகட்டிவ் விசயங்கள்
மற்றவர்கள் நமக்குள் வந்து கொட்ட அனுமதிப்பதுதான்.
பொதுவாக
இவர்களுடைய அறிவுரைகளை கேட்டு அதற்கு நமது மைன்டில் ஒரு ஃபைல் உருவாக்கி பிறகு
அவர்களிடம் என்ன பேசுவது அல்லது நமது தொழிலை அல்லது படிப்பை கெடுக்க வரும்போது
எப்படி சமாளிப்பது என்று அதிகம் சிந்திக்காமல் அதற்கு நேரமும் ஒதுக்கி கொண்டு
இருக்காமல் அவர்களை சரியாக கையாள்வது என்னவென்றால் அவர்களை தவிர்த்து விடுவதே
சிறந்த முடிவு.
ஒரு சிறந்த
கம்பெனியின் சி.இ.ஓ போன்றவர்கலுக்கும் இதுபோன்ற நெகட்டிவ் ஆட்களை சமாளிக்க வேண்டிய
சூழ்நிலைகள் இருக்கும், அதற்காக அவர்கள் அதிக நேரம் ஒதுக்குவதில்லை, செக்ரட்டரியிடம் சொல்லி ' சார் முக்கிய மீட்டிங்கில் இருக்கிறார்"
என்ற பதிலே வரும். சரி பிராக்டிக்கல் வாழ்க்கைக்கு செக்ரட்டரிக்கு எங்கே போவது
என்று கேட்கலாம். குறைந்தபட்சம் உங்கள் வாசல் கதவுகளை திறந்து வைத்து வரவேற்காமல் இருக்கலாம் அல்லவா?.
நான் முன்பு
இருந்த ஆபிசின் நுழைவாயிலில் ஒட்டியிருந்த
வாசகம்...சில சமயங்களில் இது போன்ற வாசகங்களும் வாழ்க்கையை செதுக்கும்.
Small people talk about Other People,
Average people talk about Things,
Great people talk about Ideas
இன்னும் சந்திப்போம்
ZAKIR HUSSAIN
26 Responses So Far:
படிக்கட்டு ஏற்றம் ..
பெயருக்கு ஏற்ற கருத்துள்ள
தொடர் ..இடை வெளி இல்லாமல்
தொடர ஆசை படுகிறேன்
//நம் மனதுக்கு எது சந்தோசம் தருகிறதோ அதை நாம் சந்திக்க தயார்.
ஆனால் எது கவலை அளிக்கிறதோ அதை சந்திக்காமல் அதற்கான காரணத்தை உங்கள் கற்பனையில் உதிக்கும் ஏதாவது காரணத்தோடு இணைத்து விடுவது.//
எல்லாச் சூழலுக்கும் பொருந்தும்.
//சரி பிராக்டிக்கல் வாழ்க்கைக்கு செக்ரட்டரிக்கு எங்கே போவது என்று கேட்கலாம். குறைந்தபட்சம் உங்கள் வாசல் கதவுகளை திறந்து வைத்து வரவேற்காமல் இருக்கலாம் அல்லவா?.//
! YES ! ஏற்க வேண்டிய அறிவுரை...
ஜஸாக்கல்லாஹ் ஹைர் !
"ஹை க்ளாஸ்" அறிவுரைகள்.
ஜஸாக்கல்லாஹ் ஹைர் ஜாஹிர் காக்கா.
தம்பி ! மலேசியாவிலும் கொத்தனார் டிமாண்டா?
ஈர்த்த வரிகள்.
//எப்போதெல்லாம் தப்பிக்க நினைக்கிறீர்களோ அப்போதெல்லாம் வாழ்க்கையை நீங்கள் சந்திக்கவில்லை. வாழ்க்கையை எப்போது சந்திக்கவில்லையோ அங்கே நீங்கள் இல்லை. // மகுடம் சூட்டிக்கொண்ட கருத்து.
To Bro Ebrahim Ansari,
//மலேசியாவிலும் கொத்தனார் டிமாண்டா? //
படி சிறுசா வந்தவுடனேயே நினைத்தேன். அதிக வேலைகளுக்கிடையே எழுதியது. [ அப்டீனா மத்த எபிசோட் எழுதும்போது "வெட்டி" யா நீயினு சபீர் கேட்பான். சாகுல் கொஞ்சம் "நீங்க" போட்டு கேட்பாப்லெ...மேட்டர் ஒன்னுதான்.]
//ஈர்த்த வரிகள். // இதை புரிந்துகொள்ள Highest Level Of understanding "facts" வேண்டும் என நான் நினைக்கிறேன். வாழ்க்கையில் அனுபவங்கள் அதிகம் பெற்ற நீங்கள் உடனே புரிந்துகொண்டதில் ஆச்சர்யம் இல்லை.
இதுவரை பொறுமையுடன் படித்து வரும் அனைவருக்கும்......
இந்த 19 எபிசோட்ஸ் எழுத நான் எந்த புத்தகத்தையும் பார்த்து எழுதவில்லை. [ இனிமேலும் பார்க்காமல் எழுத முடியும்.]
நான் கலந்து கொண்ட கார்ப்பரேட் & பெர்சனல் ட்ரைனிங் மெட்டீரியல் இன்னும் இருக்கிறது. இருப்பினும் இன்னும் 2, 3 எபிசோட்களில் இந்த 'படிக்கட்டுகள்' ஒரு முடிவுக்கு வரும்.
இருப்பினும் வாழ்வியலுக்கு உதவியாக பலர் எழுதியிருக்கிறார்கள். அவர்களின் புத்தகத்திலிருக்கும் நமக்கு தேவையானதையும் எழுதலாம் என்றிருக்கிறேன்.
இதுவரை நான் எதை தொட்டு எழுதவில்லை என்பதை வாசகர்கள் குறிப்பிட்டு எழுதினால் அதை பற்றியும் சிந்தித்து எழுதலாம் என இருக்கிறேன். I need your assistance.
வாழ்வியல் சம்பந்தமாக சில தலைப்புகளின் கீழ் நபிகள் நாயகம் [ ஸல்] அவர்களின் வாழ்க்கை முறையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பல விசயங்கள் கோர்வையாக பேச / எழுத தெரியாதவர்களால் மறைந்தே கிடக்கிறது. இதை சரியாக நெறிப்படுத்தி எழுதினால் நாம் மிகுந்த பயன அடையளாம்.
இதில் ஸ்பெலிஸ்ட்களாக சகோ.அதிரை அஹ்மது , ஜமீல்நானா, சகோ.அலாவுதீன். நண்பன் இக்பால்.எம்.ஸாலிஹ் போன்றவர்களின் எழுத்து நிச்சயம் சமுதாயத்துக்கு பயன்படும்.
மறந்து விடவேண்டாம் என் வேண்டுகோளை....[I need your assistance].
//அவர்களை சரியாக கையாள்வது என்னவென்றால் அவர்களை தவிர்த்து விடுவதே சிறந்த முடிவு.//
சரியாக சொல்லி இருக்கின்றீர்கள்...இவர்களை பார்ப்பது / பேசுவது நமக்கு அதேபோன்ற வியாதியை ஏற்படுத்திவிடும்....நிறையபேர்களை நான் அவாய்டு செய்து இருக்கின்றேன்....சமீபத்திய அனுபவம் நைஜீரியா சென்று இருந்தபோது - முதலில் சந்தித்த நபர் எல்லாவற்றிற்க்கும் நெகட்டிவ்வாகவே சொல்லிக்கொண்டிருந்தான்...இங்கே திடீரென்று மழைவரும் நீ மார்க்கெட்டு போய்க்கிட்டு இருப்பாய் அப்ப இடி விழும்,இங்கே ஒண்ணும் செய்ய முடியாது,போன்ற கதைகளாக, வாய் கழுவாம வந்திருப்பான் போல....அடுத்த இரண்டு தினங்களுக்கு பிறகு சந்தித்த நபர் SWOT கொள்கைப்படி பேசினார்,பாஸிட்டிவ்வாகவும்,பிராக்ட்டிகளாகவும் இருந்தது...அந்த முதல் நபரை அவாய்டு செய்ததால் இன்று நைஜீரியாவில் எங்க நிறுவனம் ஓகோ என்று இல்லாவிட்டாலும் ஒகே அளவிற்க்கு பிசினஸ் செய்துகொண்டு இருக்கின்றோம்..முதல் ஆளின் “நெகட்டிவ் திங்கிங்”க்கு செவிச்சாய்த்து இருந்தால் இன்று அந்த மார்க்கெட்டின் சாவியைத் தொலைத்து இருப்போம்
அஸ்ஸலாமு அலைக்கும்,
ஜாஹிர் காக்கா, வழக்கம் போல் புத்துணர்வூட்டும் பதிவு. ஜஸக்கல்லாஹ் ஹைர்.
இன்னும் 2 அல்லது 3 எபிசோட் மட்டும் தானா?
//வாழ்வியல் சம்பந்தமாக சில தலைப்புகளின் கீழ் நபிகள் நாயகம் [ ஸல்] அவர்களின் வாழ்க்கை முறையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பல விசயங்கள் கோர்வையாக பேச / எழுத தெரியாதவர்களால் மறைந்தே கிடக்கிறது. இதை சரியாக நெறிப்படுத்தி எழுதினால் நாம் மிகுந்த பயன அடையளாம்.
இதில் ஸ்பெலிஸ்ட்களாக சகோ.அதிரை அஹ்மது , ஜமீல்நானா, சகோ.அலாவுதீன். நண்பன் இக்பால்.எம்.ஸாலிஹ் போன்றவர்களின் எழுத்து நிச்சயம் சமுதாயத்துக்கு பயன்படும்.
மறந்து விடவேண்டாம் என் வேண்டுகோளை....[I need your assistance]. //
நானும் ஜாஹிர் காக்காவின் வேண்டுகோளை வழிமொழிகிறேன். :-)
//இதுவரை நான் எதை தொட்டு எழுதவில்லை என்பதை வாசகர்கள் குறிப்பிட்டு எழுதினால் அதை பற்றியும் சிந்தித்து எழுதலாம் என இருக்கிறேன். I need your assistance.//
காக்கா : நான் கை இப்போதான் கையை தூக்கினேன்...
1. யூகத்தின் அடிப்படையில் நிகழ்ந்திருக்குமோ?, செய்திருப்பார்களோ?, என்ற மனோநிலையைப் பற்றி அலசவில்லைன்னு நினைக்கிறேன். அது வளர்வதற்கான காரணிகளை அலசினால் நன்மையே.
2. தட்டிக் கொடுப்பது / தட்டிக் கேட்பது / கொட்டிக் கொடுப்பது இவைகளைப் பற்றி சொன்ன ஞாபகம் இருந்தாலும் ஏதோ ஒன்று சொல்லவிலையோ என்ற ஐயம் இருக்கு ஒருவேலை நான் கவனிக்காமல் இருந்திருக்கலாம், அப்படியில்லை எனில் அதனையும் அலசலாமே !
3. தவறவிட்ட தருணங்களை இனியும் தக்க வைத்துக் கொள்ள என்ன செய்யலாம் !?
:)
//பார்க்க முடியாத தூரத்தில் உள்ள விசயங்களையும் நம்பி சாதிப்பதில்தான் வெற்றி இருக்கிறது.//
இன்னும் சற்று உரத்துச் சொன்னால் ஆன்மீகமாகிவிடும் இந்தக் கருத்து.
வெற்றிக்கான இரகசியங்களை பகிரங்கப் படுத்திவரும் இந்தத் தொடர் முடிவுற்றாலும் வேறு ஒரு ரூபத்தில் இவனை எழுத வைக்க நான் கியாரண்ட்டி.
இந்தப் படிக்கட்டுகளின் வடிவம் சற்றே வித்தியாசமானதாக இருப்பதே இதன் வெற்றிக்குக் காரணம. நானும் எத்துனையோ (உதய மூர்த்தி, அப்துர்ரஹீம், சுகி சிவம், (மனம் மகிழுங்கள் - சத்தியமார்க்கம்) நூருத்தீன் போன்றோரின் உளவள ஆக்கங்கள் படித்திருந்தாலும் படிக்கட்டுகளை வித்தியாசமாகக் காட்டியது இதன் பிரத்யேக வடிவம். அதுதான், இம்மாம் பெரிய செய்தியையும் அநாயசமாக சொல்ல இவன் பிரயோகித்த நகைச்சுவை எனும் ஆயுதம்.
புருவம் உயர்த்த வைத்த ஆலோசனைகளைப் புன்னகைத்துக்கொண்டே வாசிக்க வைக்க இவனால் மட்டுமே முடியும்.
நல்லாருப்பா.
முதல் போட்டோ கூறும் கருத்து சூரியன் மறையப்போகின்றது இனி மேற்கு பக்கமே இந்த பூக்கள் திரும்பி இருப்பதில் அர்த்தம் இல்லை முன்னேர்ப்பாடக கிழக்கே திரும்பி காலையில் உதிக்கும் சூரியனை எதிர் பாத்துக்கொண்டுள்ளது.இந்த பூக்கள்
வாழ்க்கையில் எல்லா நல்ல விசயங்களிலும் முன்னே இருக்கா வேண்டும் என்று சொல்லுவது உங்கள் எழுத்து மட்டும் அல்ல நீங்கள் பதியும் புகைப்படமும்தான்
//புருவம் உயர்த்த வைத்த ஆலோசனைகளைப் புன்னகைத்துக்கொண்டே வாசிக்க வைக்க இவனால் மட்டுமே முடியும். // WoW .....exactly kavikakka
//நல்லாருப்பா.//
எழுத்துப்பிழை
நல்லாரு'டா'.
//யூகத்தின் அடிப்படையில் நிகழ்ந்திருக்குமோ?, செய்திருப்பார்களோ?, என்ற மனோநிலையைப் பற்றி அலசவில்லைன்னு நினைக்கிறேன். அது வளர்வதற்கான காரணிகளை அலசினால் நன்மையே.//
ஜாயிரு, போட்டு வாங்கறமாதிரி தெரியாது. சிக்கிக்காதடா என் சிங்கம்.
நேற்று ஒரு தொலைக்காட்சியில் “கனவுகள்” பற்றி ஓர் உளவியல் மருத்துவர் சொன்ன விடயம்” “கான்சியஸ்/ சப் கான்சியஸ் மைண்ட்” என்ற இரு பிரிவுகளில் அடங்கும் நம் உணர்வுகளில் கான்சியஸ் மைண்ட் மட்டும் உறங்கும் தன்மை கொண்டது; சப் கான்சியஸ் மைண்ட் உறங்காத் தன்மை கொண்டது; அதுவே கனவுகளின் வடிகால்” என்றார். உங்களின் ஆக்கத்திலும் இவ்விரு மைண்ட் களைப் பற்றி எழுதும் அளவுக்கு அறிவும் ஆய்வும் நிரம்பி வழிவதைக் கண்டேன். (மாஷா அல்லாஹ்) உங்களையும் ஓர் உளவியல் மருத்துவர் என்றே நான் அழைப்பேன்.
படித்ததில் பிடித்தது மூத்த சகோ. ஈனா ஆனா காக்கா அவர்கட்குப் பிடித்த அவ்வரிகள் தான்; அதிலும் ஓர் ஆழமான கவிநயம் காண்கின்றேன்; உற்ற நண்பரின் மூச்சுக் காற்றை உள் வாங்கி விட்டீர்களா?
உள் மூச்சு/ வெளி மூச்சைக் கணிப்பது- கவனிப்பது என்பதும் “யோகா”வின் பால பாடம்; ஆக, நீங்கள் படிக்கட்டுகளால் ஏணி; படிப்பறிவால் ஞானி; அறிவைச் சுரப்பதால் தேனீ!
உளவியலார்கள் பலர் ஆன்மீக ஏற்புடையராய் இருப்பதில்லை; ஆனால் இந்த உளவியல் மருத்துவர் ஆன்மீகம் ஏற்கும் ஆற்றல் மிகு உளவியலாராய் இருப்பதும் உண்மை (உங்களின் உற்ற நண்பரின் வாக்குமூலம் சான்று)
கவிவேந்தரின் கணிப்பே என்னுடையதும்; ஆம். உங்களின் உளவியல் ஆக்கம் நகைச்சுவையால் படிக்கட்டுகளாய் ஏற்றம் பெற்று விட்டது.
எனக்கு அழைப்பு வந்த “வாழ்க்கை வாழ்வதற்கே” எனும் தலைப்பிலான ஒரு சொற்பொழிவிற்கு உங்களின் படிக்கட்டுகளைத் தான் என்னுரையின் அடித்தட்டுகளாய் அமைத்து உரையை ஆயத்தமாக்கி வைத்திருந்தேன்; ஆனால், அதே நாளில் கவியரங்கம் நடத்த வேண்டிய வாய்ப்பும் அழைப்பாக அமைந்ததால், சொற்பொழிவில் இப்பொழுது கலந்து கொள்ளாவிட்டாலும், இன்ஷா அல்லாஹ் மற்றொரு வாய்ப்பில் உங்கள் படிக்கட்டுள் என் வழக்குரையும் கட்டுகளாய் அமைத்து வாதிடுவேன்!”பேச்சின் தந்தை”(அபுல்கலாம்)எனும் பெயர் பெற்றிருந்தாலும், சொற்பொழிவை விடக் கவியரங்கத்தில் கவிதை வாசிப்பதில் எனக்கு ஏனோ ஓர் இன்பம் கிடைக்கின்றது!அதனாற்றான் இரு வாய்ப்புகளில் ஒன்றான எனக்கு இன்பம் தரும் கவியரங்கைத் தெரிவு செய்தேன்!
ஏற்கனேவே, உங்களின் படிக்கட்டுகள் சின்னத்திரையின் அரங்குகளில் மேற்கோள் காட்டப்பட்டிருப்பதும் அ.நி.யில் அறிந்து கொண்டேன்; இப்பொழுதாவது, அ.நி.யின் பதிவாளர்களின் திறமைகளை அ நி யாயமாகக் குறை கூறுபவர்கள் உணர்வார்களாக!
To Bro Abulkalam,
//அ.நி.யின் பதிவாளர்களின் திறமைகளை அ நி யாயமாகக் குறை கூறுபவர்கள் உணர்வார்களாக! //
பொது" என்று வந்துவிட்டாலே விமர்சனங்களுக்கு வருத்தப்படக்கூடாது.
நமக்கு பிடித்த விசயம் மற்றவர்களுக்கும் பிடிக்கும் என்று நினைப்பது நம் தவறுதான்.
Sabeer said:
//வெற்றிக்கான இரகசியங்களை பகிரங்கப் படுத்திவரும் இந்தத் தொடர் முடிவுற்றாலும் வேறு ஒரு ரூபத்தில் இவனை எழுத வைக்க நான் கியாரண்ட்டி.//
//புருவம் உயர்த்த வைத்த ஆலோசனைகளைப் புன்னகைத்துக்கொண்டே வாசிக்க வைக்க இவனால் மட்டுமே முடியும்.//
உண்மை. ஏற்ற இறக்கத்துடன் எளிய அரிய கருத்துகளை ஜாகிர் தனது நகைச்சுவை கலந்த நடையில் எழுதிவருவது, தட்டிக் கொடுக்கத் தக்கது. வாழ்க! வளர்க!
தம்பி ஜாகிர் சொன்னது
//பொது" என்று வந்துவிட்டாலே விமர்சனங்களுக்கு வருத்தப்படக்கூடாது.//
கவியன்பன் அவர்களே!
உண்மை. பேராசிரியர் கவிக்கோ அவர்கள் பொது வாழ்வில் இருப்பவர்களை ரப்பர் மரத்துக்கு ஒப்பிடுவார். ரப்பர் மரம் தினமும் கத்தி கொண்டு கீறப்படும். அப்படி கீரியவனுக்கே ரப்பர் பாலை வடித்துத் தந்து பயனளிக்கும். அதுபோலத்தான் பொது அரங்கில் வந்துவிட்டால் விமர்சனங்களால் கீறப்படுவதற்கு, கோபப்படக்கூடாது.
கீறுவதற்கு பதில் காயப்படுத்துகிறார்களே என்கிறீர்களா? காயத்த மரங்கள் கல்லடி படுவது புதிதல்லவே.
அன்புள்ள தம்பி சபீர்! மருமகன் யாசிர்! அதிரை அறிஞர் அஹமது காக்கா!
அஸ்ஸலாமு அலைக்கும்.
தம்பி ஜாகீரைப்பாராட்டும் உங்கள் கூடாரத்தில்/கூட்டத்தில் எனக்கும் ஒரு இடம் தாருங்களேன்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜாஹிர் காக்கா நலமாக இருக்கிறீர்களா ?
இதற்க்கு முன் படிக்கட்டுகளில் ஏற முடியாமல் போனதை நினைத்து வருத்தப் படுகின்றேன்
திடீரென்று படிக்கட்டு தாவியதால் மூச்சு கடுமையா வாங்குது காக்கா.
// உன்னால் ஒரு காசுக்கும் புண்ணியமில்லை...
உன்னால் என்ன சாதிக்க முடியும்?
எப்படி எங்களை விட்டு போய் வாழ்ந்து விடுவாய் என்று பார்க்கிறேன்.//
இந்த வார்த்தை தோட்டாக்கள் சிலரின் துருவாடை பிடித்த வாய் துப்பாக்கியிலிருந்து என்னையும் நோக்கியும் பாய்ந்து இருக்கின்றது காக்கா. அல்லாஹ்வின் உதவியால் பாதுகாக்கப் பட்டேன்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
// /அ.நி.யின் பதிவாளர்களின் திறமைகளை அ நி யாயமாகக் குறை கூறுபவர்கள் உணர்வார்களாக! //
நிச்சயமாக இறைவன் நாடிவிட்டால்.உணர்வார்கள் உணர்த்தப் படுவார்கள்.
ஆமா யாரோ சொன்னார்களாமே அ.நி தளத்தை படித்து கருத்து எழுவது அவங்க குடும்பத்தில் உள்ள நாலு பெரும்.மற்றும் அவங்களுடைய கூட்டளிமார்கள் ஐந்து ஆறு பேருதான் என்று.
வேகமான வாகனத்தில் பயணித்தால் சரியாக பார்த்து தெரிந்துகிட முடியாது
நிதானமான கம்பன்லே பயணித்து பாருங்க தெளிவா பார்த்து தெரிந்துகிடலாம்.
(சாரி) கம்பனே இன்னும் விடவில்லைல
படிக்கட்டுவதை நிறுத்தப்போகிறான் என்று யாரும் பயப்பட வேண்டாம்!
I am pretty sure that he is gonna commence an Elevator operation very soon! Go ahead Zakir.
தம்பி ஜாகிர் சொன்னது
//பொது" என்று வந்துவிட்டாலே விமர்சனங்களுக்கு வருத்தப்படக்கூடாது.//
கவியன்பன் அவர்களே!
உண்மை. பேராசிரியர் கவிக்கோ அவர்கள் பொது வாழ்வில் இருப்பவர்களை ரப்பர் மரத்துக்கு ஒப்பிடுவார். ரப்பர் மரம் தினமும் கத்தி கொண்டு கீறப்படும். அப்படி கீரியவனுக்கே ரப்பர் பாலை வடித்துத் தந்து பயனளிக்கும். அதுபோலத்தான் பொது அரங்கில் வந்துவிட்டால் விமர்சனங்களால் கீறப்படுவதற்கு, கோபப்படக்கூடாது.
கீறுவதற்கு பதில் காயப்படுத்துகிறார்களே என்கிறீர்களா? காயத்த மரங்கள் கல்லடி படுவது புதிதல்லவே.
-------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். அழிக்க முடியாத உண்மை( ரப்பர் ஒரு அழிப்பான்)!
நம் மனதுக்கு எது சந்தோசம் தருகிறதோ அதை நாம் சந்திக்க தயார். ஆனால் எது கவலை அளிக்கிறதோ அதை சந்திக்காமல் அதற்கான காரணத்தை உங்கள் கற்பனையில் உதிக்கும் ஏதாவது காரணத்தோடு இணைத்து விடுவது.
ஒரு உதாரணமாக சொன்னால் நல்ல சம்பாதியம் இருந்தால் நன்றாக செலவு செய்வது, சம்பாத்யம் குறைந்தால் அதற்கு எந்தவகையிலும் தானும் ஒரு காரணம் என்ற உண்மையை மீறி அவன் / இவன் / காலம் / சூழ்நிலை என்று அடுக்கிக் கொண்டே போவது.
எப்போதெல்லாம் தப்பிக்க நினைக்கிறீர்களோ அப்போதெல்லாம் வாழ்க்கையை நீங்கள் சந்திக்கவில்லை. வாழ்க்கையை எப்போது சந்திக்கவில்லையோ அங்கே நீங்கள் இல்லை.
-------------------------------------------------------------
இவை மூன்றும் நடு படிக்கட்டுகள். இடையில் வாழ்வில் நிற்றுவிடாமல் மேலேரி செல்ல உதவும் படிகளை எப்படித்தான் சிந்தித்து கட்டினீர்களோ? ஒருவேளை இதுபோல் பல படிகட்டு தாண்டி , அதன் மீதேறி நடந்து வந்த அனுபவம்தான் இப்படியெல்லாம் எழுத வைத்திருக்கு. ஜீனியஸ்சுக்கு வாழ்த்துக்கள்.
சகோ. ஜாகிர் - அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
////எப்போதெல்லாம் தப்பிக்க நினைக்கிறீர்களோ அப்போதெல்லாம் வாழ்க்கையை நீங்கள் சந்திக்கவில்லை. வாழ்க்கையை எப்போது சந்திக்கவில்லையோ அங்கே நீங்கள் இல்லை.////
////எவ்வளவு பெரிய சாதனையாளருக்கும் சறுக்குதலை ஏற்படுத்துவது நெகட்டிவான விசயங்கள். இதை முதலில் மனரீதியாக கட்டுப் படுத்துவதை விட நம்மை சுற்றி நடக்கும் நெகட்டிவ் விசயங்கள் மற்றவர்கள் நமக்குள் வந்து கொட்ட அனுமதிப்பதுதான். ////
உண்மை! உண்மை! உண்மை! வாழ்த்துக்கள்!
****************************************************
படிக்கட்டுகள் - முடிவல்ல ஆரம்பம்!
****************************************************
இந்த பின்னூட்டங்களை எழுதிய அனைவருக்கும் நன்றி. நான் , நீங்கள் புகழும் அளவுக்கு உயர்ந்ததாக கருதவில்லை. நான் அனுபவித்த சில உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.
அடுத்த படிக்கட்டில் சந்திக்களாம் [ அபுஇப்ராஹிம் சில ஹின்ட் கொடுத்தது உதவும் ]
Post a Comment