உலக புகைப்பட நாள் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 19ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடி மகிழ்கின்றனர் !
அதிரைநிருபரிலோ மாதமிருமுறை அல்லது அதற்கு மேலாக ஒரு பதிவு பேசும்படமாக புகைப்பட ரசனைக்கு மகுடம் சூட்டி வருவதை நன்கு அறிவீர்கள்.
புகைப்படம் எடுப்பது கலையாக இருந்த காலம் மலையேறியதோ என்று நினைக்கும் அளவுக்கு, இன்றைய புகைப்பட கருவிகளின் ஆதிக்கம். அலைபேசி, அணியும் ஆடையின் பொத்தான், இடுப்பில் கட்டும் பெல்ட், காதில் தொங்கும் தோடு, ஹெட்ஃபோன், கடிகாரம், இப்படியாக ஏராளமான பயன்பாட்டில் இருக்கும் சாதனங்களில் இணைக்கப்பட்டு சரளமாக எல்லோர் கைகளில் கிடைப்பதை கிளிக் செய்ய விஞ்ஞானம் உதவியிருக்கிறது.
பட்டென்று ரசித்ததை படமாக்க எல்லோரிடமும் புகைப்பட மெடுக்க கேமரா கைகளில் இருப்பதில்லை அல்லது நாம் எதிர்பார்க்கும் படியான காட்சிகள் அமையாமல் காத்திருக்கும் கேமரா கண்களுக்கும் அமைவதில்லை.
பொழுதை கழிக்க ஊர் சுற்றியதல்ல, செல்லும் இடமெல்லாம் சிந்தையில் சிக்கியதை சித்திரமாக்க கிடைத்த மூன்றாம் கண்ணின் பளிச் தான் இது.
மாங்காய்க்கு மட்டும்தான் வாய் ஊருமா ?
கடின உழைப்பளிகள்தான் இவர்கள், இருந்தாலும் குறித்த நேரத்தில் கொடுக்க மாட்டார்கள் (??) என்பது மட்டும் நிச்சயம்.
நல்லாத்தான் இருக்கு ஆனா யாரும் வருவதில்லையோ !!? - இந்த இடம் நிறைய பேருக்கு மறந்திருக்கலாம், இது அதிரையில் புகழ் பெற்ற ஷிஃபா மருத்துவமணை உள்வளாகத்தில் அமைத்திருக்கும் இளைப்பாரும் குடில்.
இந்த அழகிய சாலையையும் இடப்பக்கமிருக்கும் வீடுகளின் அழகையும் புகைப்படத்தில் பார்த்ததும் பலருக்கு நினைவுகள் மலருமே!!! குறிப்பாக கவிதைக்கு மட்டும் தலைகாட்டும் கிரீடக்காரருக்கு.
புல்லு கட்டு மல்லு கட்டாம தலைலே உட்கார்ந்து போகுது, பின்னாலே அட !வடபோச்சேன்னும் மாடு ஏங்குது !?
தென்னை மரத்தில் இப்படி காய்க்கும்ன்னு எதிர் பார்க்க கூடாது. தென்னப்புள்ளைய இன்று போட்டுட்டு நாளைக்கு இப்படி வந்தா எப்படினு ஏங்கவும் கூடாது !
காக்கை உட்க்கார்ந்தும் பனம்பழம் விழ வில்லைன்னு கம்ளைண்ட் பன்னக் கூடாது
சுனாமி வந்தாலும் இது சுற்றுமான்னு விளையாட்டா கூட கேட்டுராதிய.
சரிங்க, இனி கவிஞர்கள் அதிகம் இருக்கும் இந்த அதிரைநிருபர் வாசகர்கள் வட்டத்தின் நடுவில் ஒரு மல்லிகைப் பூவினை வேறுபட்ட கோணங்களில் (ஃ)போட்டா(ல்) என்னவெல்லம் செய்வார்கள் எப்படியெல்லாம் கற்பனைக் குதிரையை ஓட்டுவார்கள் என்று சும்மாதாங்க யோசிச்சு பார்த்தேன்.
சரிங்க, இனி கவிஞர்கள் அதிகம் இருக்கும் இந்த அதிரைநிருபர் வாசகர்கள் வட்டத்தின் நடுவில் ஒரு மல்லிகைப் பூவினை வேறுபட்ட கோணங்களில் (ஃ)போட்டா(ல்) என்னவெல்லம் செய்வார்கள் எப்படியெல்லாம் கற்பனைக் குதிரையை ஓட்டுவார்கள் என்று சும்மாதாங்க யோசிச்சு பார்த்தேன்.
23 Responses So Far:
மல்லிகைப் பூக்களை கவிஞர்கள் மட்டும்தான் ரசிப்பார்களா? கட்டுரையாளர்களுக்கு கலாரசனை இருக்காதா?
நெறியாளருக்கு ஒரு யோசனை. இந்த மல்லிகைக் கொத்தில் உள்ள மூன்று பூக்களையும் பற்றி என்ன தோன்றுகிறது என்று நான்குவரி கவிதை எழுதி வெளியிடும்படி நமது கவிஞர்களிடம் கேட்டால்? கண்ணுக்கு சாகுல் தந்த விருந்தில் மனதுக்கு நிறைவுதர கவி விருந்தும் சேருமே.
அஸ்ஸலாமு அலைக்கும்.
மொட்டு விட்ட மல்லிகையே!
நீ மலர்ந்து இருப்பதுபோல நானும் மலர்ந்தேன்!
நான் பிறந்து வளர்ந்த மாளிகை(?)யைப்பார்த்து!
உனக்கு மட்டும் தானா வாசனை என்பது ?
என் மண்ணுக்கும் அது இருப்பது தெரியாதா?
நீ பார்க மட்டும் தான் குளிர்சி! ஆனால்,
என் வீதிதை நினைத்தாளே குளிர்சி!
அளவிட முடியா மகிழ்சி!
( இபுறாகிம் அன்சாரி காக்கா கவிஞர்களிடம் கேட்டார்கள் ஆனால் நான் எழுதி விட்டேன் மன்னிக்கவும்).
அஸ்ஸலாமு அலைக்கும்,
ஹமீத் காக்கா...
//மாங்காய்க்கு மட்டும்தான் வாய் ஊருமா ?//
காலை நேரத்திலேயே வாய் ஊர வச்சிட்டியலே...
//நான் பிறந்து வளர்ந்த மாளிகை(?)யைப்பார்த்து!//
சகோதரர் தஸ்தகீர்... தங்கள் வளர்ந்த விட்டை தேடி பிடித்தோம்... மீதியை ஹமீத் காக்கா சொல்லுவார்கள்.. ஹி ஹி
கவிஞர்களிடம் கவி கேட்டேன். கவிஞரில் ஒருவர்தான் எழுதியுள்ளார். இவரது புனை பெயரே ஒரு கவிதையல்லவா?
டீக்கடைக்காரரிடம் டீயை கையில் வாங்கி இருக்கையில் அமர்ந்தவர் டீக்கடைக்காரரைப்பார்த்து கடிக்க (திண்ண) ஏதாவது இருக்கா? எனக்கேட்க, அதற்கு டீக்கடைக்காரர் பக்கத்துலெ நாய் தான் இருக்கிறது வேணுமாண்டு கேட்டாரேப்பார்க்கலாம்........ஒரே சிரிப்பு தான்.... ஒரு ஜோக்குடன் ஆரம்பமாகிறது என் பார்வை.......
ஷமீத் காக்காவின் ஃபோட்டோக்கள் என்றுமே கருத்துக்களை கச்சிதமாக கவரும் நல்ல தோட்டாக்கள் தான்.
முதல் படத்தில் பொரிச்ச மீனு எந்த மலை ஏறுகிறதென்று தெரியவில்லை. படிக்கட்டில் மெல்ல, மெல்ல ஏறிச்செல்கிறதே? அதான் கேட்டேன்.
நல்ல இளம் பெண்களுக்கு மஹர் கொடுத்து மார்க்கம் மணமுடிக்க சொல்வது போல் நல்ல இளநீருக்கு முற்றிய தேங்காயை விட மவுசும், காசும் என்றுமே அதிகம் தான்.
பல ஆண்டுகாலம் ஊரின் நல்ல பல சந்தோஷ நிகழ்வுகளையும், சங்கடங்களையும் அமைதியுடன் அவதானித்து வரும் ஒரு கிராமத்து அண்டங்காக்கை.
நல்ல சுற்றுப்புற சூழ்நிலையை பெற்றிருக்கும் என்னை (ஷிஃபா மருத்துவமனை) சீராட்டி, பாராட்டி, கைதூக்கி வளர்த்து ஆளாக்க வேண்டிய நீங்கள் (உள்ளூர்க்காரர்கள்) இப்படி பொடுபோக்குடன், பொறுப்பற்று மாற்றான் தோட்டத்திற்கு (வெளியூர் மருத்துவமனைகள்) சென்று மல்லிகை பறித்து பெருமிதம் கொள்வதில் உங்களுக்கு என்ன பெருமை வரப்போகிறது என வேதனையுடன் அமைதியாய் (ஷிஃபா மருத்துவமனை) அங்கு வந்து போவோரை கேட்கும் இந்த களைப்பாறும் குடில்.
உலகில் மல்லிகைப்பூவின் வாசத்திற்கு மயங்காதோர் 'ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள்' புத்தகத்தில் நிச்சயம் இடம் பெற வேண்டியவர்கள் தான். அரசியல் என்பது ஒரு சாக்கடை அதனால் தான் என்னவ்வோ ஒரு அரசியல்வாதியும் மல்லிகைப்பூவை தன் கட்சி சின்னமாக வைக்கவில்லை போலும்???
வாயில்லா ஜீவனுக்கு உணவூட்ட புல் பறித்துச்செல்லும் இந்த வயதான மூதாட்டிக்கு உணவூட்ட அந்த இறைவனே பொறுப்பேற்றுக்கொள்வான்.
கடல் அலையின் சுழற்சியும், கரை ராட்டினத்தின் மகிழ்ச்சியும் ஒன்றுக்கொன்று ஒட்டிப்பிறவா இரட்டைக்குழந்தைகள்.
பருவ மழை பொய்த்துப்போனதால் மரத்தில் காய்க்க வேண்டிய இளநீர் வண்டிக்குள் குலை,குலையாய் காய்த்துக்குலுங்குகிறது......என ஒரு போலி வாழ்க்கை?
கலிஃபோர்னியாவில் இருந்தாலும் அந்த குளக்கரையில் இருக்கும் தன் வீடே தனக்கு என்றும் வசந்த மாளிகை என க்ரவுனார் நிச்சயம் பெருமிதம் அடையாமல் இருக்கப்போவதில்லை. சாட்டை சுழற்றி தட்டி எழுப்பப்படும் அவரின் அந்த நினைவலைக்குதிரைக்கு கடிவாளம் தான் ஏது?
கல் நெஞ்சம் கொண்டிருப்போரின் நெஞ்சங்களில் கொஞ்சம் ஈரத்தை கொண்டு வர முயற்சிப்பதை விட இந்த கல்லை உடைத்து தேவையான பொருளை உருவாக்குவதென்பது இந்த கல்லுடைக்கும் நபருக்கு ஒன்றும் கடினமான காரியமல்ல......
சுண்டைக்காய் கால் ரூபாய், சுமை கூலி முக்கால் ரூபாய் என்பது போல் கட்டுரை கொஞ்சம் தான் பின்னூட்டம் கொஞ்சம் ஓவராத்தெரியலெ.......
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
அஸ்ஸலாமுஅலைக்கும்.
பொறித்த மீன்!
என் கவனத்தை பறித்தமீன்!
இன்று இல்லத்தில் ருசித்தமீன்!
இப்படி காட்சியே தூண்டில் போடுதே!
மீனே நீயே எம் நாவிற்கு தூண்டில் போடுவதால்
எம் ஆவலை அடக்க முடியவில்லை!
பரவச படுத்தும் பட பிடிப்பு!
இனிமேல் சாகுல் இடம் சொல்லி சாப்பாட்டு சமாச்சாரங்களை ஃபோகஸ் செய்ய வேண்டாம் என்று சொல்ல வேண்டும்.
வீட்டில் அன்றைய மெனு வீட்டில் மாறிப்போக சாகுல் எடுத்த போட்டோ காரணமாகிவிடுகிறது.
//இபுறாகிம் அன்சாரி காக்கா கவிஞர்களிடம் கேட்டார்கள் ஆனால் நான் எழுதி விட்டேன் மன்னிக்கவும்//
To Bro Crown....உங்களுக்கு கவிதை தெரியாது என்று சொன்னால் வேறு யாருக்குத்தான் தெரியும்?
ஹமீது காக்காவை கவர்ந்த அனைத்து புகைப்படங்களும் எங்களையும் கவர்ந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை
படம் 1 : நீங்கள் பிடித்து பொறித்து பகிர்ந்த மீனும் வாய் மட்டுமல்ல மறு நொடியே மார்க்கெட் போக தூண்டும்
படம் 3 : இதை கட்டிய புதிதில் பலரும் இவ்விடத்திருக்கு சும்மாவாச்சும் வந்து அமர்ந்து உரையாடிவிட்டு / மட்டுமல்ல மருத்துவரைக்காண கூட வருபவர்களும் அமர்ந்து போவதை வழமையாக இருந்தவர்கள் ஏராளம்
மற்றும் அனைத்து படங்களும் அருமை
...
இது பூவிற்காக
பூக்கள் என்றும் அழகானவை
அழகான பூக்கள் எ(ந)ம்மை இழுக்கும்
இழுக்கும் பூக்களில் கிடக்கும் முட்கள்
முட்செடிப் பூக்கள் மணம் தராதே!
மணம் தராத பூக்களில் ஏதுமில்லை
ஏதுமில்லாப் பூக்களில் தேனிருக்கும்
தேனிருக்காத பூக்களில் கள்ளிருக்கும்
கள்ளிருக்காத பூக்களில் வண்டுமிருக்காதே!
சாவன்னா காக்கா..பொரிச்ச மீனைக்காட்டி ஜாஹிர் காக்கா சொன்னதுபோல் வீட்டில் இன்றைய மெனுவை மாத்த வச்சிடீங்களே....புகைப்படங்கள் புன்னகையை வர வழைத்த படங்கள்
மல்லிகையே உன்னை
கில்லும் கையே கூட
மணக்க வைப்பாயே
நீ மணத்த
மணவறை இன்றும்
கூட சுகமாக என் நினைவில்
கவிக்காக்கா மன்னியுங்கள் இது க(வ்)விதையா
பூக்களே!
தனித்தனியாய் பூத்தாலும்
ஒரு காம்பில் குடியிருக்கும்
உங்களுக்கு தெரிந்த ஒற்றுமை
எங்களுக்குத் தெரியலையே.
கவித்தம்பி மன்னியுங்கள் இது க(வ்)விதையா
தாஜுதீன் சொன்னது…
//நான் பிறந்து வளர்ந்த மாளிகை(?)யைப்பார்த்து!//
//சகோதரர் தஸ்தகீர்... தங்கள் வளர்ந்த விட்டை தேடி பிடித்தோம்... மீதியை ஹமீத் காக்கா சொல்லுவார்கள்.. ஹி ஹி//
தஸ்தகீர் வீடு என்று தாஜுதீன் சொன்னதும் கேமராவிற்கே ஒரு உற்சாகம் வந்து விட்டது
மன்னன் மயங்கும்
பொன்னான மலர்
கைபட்டு கசக்கினாலும்
கைக்குள் வாசம்
காண்போம் அதன் தியாகம்!
மலரைத் தீண்டிச் செல்லும்
மலரின் வாசம் போலவே
புலரும் ஆற்றலைச் சொல்லும்
புலமையோர்ப் பாட லேன்பேனே
கானகத்தில் எத்தனை மலர்களைக்
கண்ட போதிலும் மல்லிகைத்
தானாக நம்மைக் கவர்ந்திழுப்பது
தனிச்சுவைப் பொருந்திய கவிதைபோல்
பாத்ததுண்டா மல்லிகை
சிவப்பு நிறத்தில்
வாடா மல்லிகை
மழலையின்
மாசிலாப் புன்சிரிப்பு
மல்லிகைப் பூ
என்று மினிக்கும் இலக்கியம் போலவே
தென்றலும் பூவாசம் தூவிட- நன்றாய்
அகத்தி லிறங்கிடும் அப்பொழுதில் பூவின்
சுகந்தம் தருமே சுகம்
அங்கொரு மல்லிகை மெல்லிதழ் கோதியே
ஆகா, மதுர கவி மொழிவாள்
எங்கும் இயங்கும் இயக்கம் அனைத்திலும்
ஏற்றதோர் ஆசு கவி பொழிவாள்
வசந்தமும் நின்வரவேற்கும் - சுகந்த
வாசலும் நீவரப் பார்க்கும்
அசைந்தசைந் தேமது வார்க்கும் - மலர்
அணிக்கும்நின் மேல் அன்றோ நோக்கும்
கனவினில் வந்த கணவனைப் பற்றி
மனதினை ஈர்க்கின்ற மல்லிகைப் பாவால்
மலரவும் வைத்தநீ மல்லிகைப் பூவே
புலருமுன் பாடற் புகழ்
மருதாணி, மல்லிகை வாசம்
நீ தரும் பாசம்
இதனைக் காண
வரவேண்டும் இந்திய தேசம்
ZAKIR HUSSAIN சொன்னது…
//இனிமேல் சாகுல் இடம் சொல்லி சாப்பாட்டு சமாச்சாரங்களை ஃபோகஸ் செய்ய வேண்டாம் என்று சொல்ல வேண்டும்.
வீட்டில் அன்றைய மெனு வீட்டில் மாறிப்போக சாகுல் எடுத்த போட்டோ காரணமாகிவிடுகிறது. //
எங்கள் வீட்டில் மெனு மாறவில்லை நீங்கள் அனுப்பிய நெத்திலி கருவாடு போட்டுவாங்குது
ஈனா ஆனா காக்கா,
உணர்வில்கூட சமூக நலன் நாடுதல் யாவருக்கும் வருவதில்லை. கவிதையை விட தங்களின் கருத்தே அழகு.
//பூக்களே!
தனித்தனியாய் பூத்தாலும்
ஒரு காம்பில் குடியிருக்கும்
உங்களுக்கு தெரிந்த ஒற்றுமை
எங்களுக்குத் தெரியலையே//
மற்றொரு கோனம்
மல்லிகையே,
தனித்தனியாய் பூத்தாலும்
தளிர்த்துவந்த காம்பில்
ஒற்றுமையைப் பறைசாற்றும்
வித்தையில் யாம் அறிவிலியே!
இன்னொன்று
ஒரே கட்டுக்குள்
மூன்று மொட்டுகள்
ஒன்றையொன்று பிரியாத
ஒற்றுமை காண் மனிதா.
யாசிர் தம்பி,
நினைவுக்கும் வாசம் இருப்பதாகக் கொள்வதே கவிதைதான். கவிக்கருவைவிட மணம் உங்கள் நினைவு.
//மல்லிகையே உன்னை
கில்லும் கையே கூட
மணக்க வைப்பாயே
நீ மணத்த
மணவறை இன்றும்
கூட சுகமாக என் நினைவில்//
மற்றொரு கோணம்
மல்லிகையே உன்னை
கில்லினாலும் அள்ளினாலும்
கைமணக்கும் நிஜம்
கனவினிலும் நினைவினிலும்
சுகமாக நிலைக்கிறது
மணவறையில்
நீ மணத்த மணம்.
இத்தனை அருகில்
மொட்டென அரும்பில்
எத்துணை அழகு... மல்லிகை
கொடியிலே உதித்து
கூந்தலில் மலர்ந்து
நொடியிலே மனத்தை
பிடியிலே கொணரும் மல்லிகை
ஒற்றையாய் ரசிக்க...ரோசா
ஒற்றுமையாய் கோர்த்து
சரமென சிரிக்க மல்லிகை
வாடு வதற்குள்
சூடுவது நலம்
சூடி உதிர்ந்தபின்னர்
கூந்தலில் மணம்.
ஹமீது பாய், கலக்கல் கிளிக்குகள்.
//வாடு வதற்குள்
சூடுவது நலம்
சூடி உதிர்ந்தபின்னர்
கூந்தலில் மணம்//
ஆஹா...
அனுபவம் பேசியது
...அழகாய் வீசியது
இனிவரும் காலமதில்
...இனிமைக் கோலமிடும்!
மனங்குளிர் வண்ணப்படங்களும் மனமகிழ் மல்லிகையும் இனிமை.
தேடலில் கிடைத்த மருத்துவ மகத்துவம் இங்கே:-
#பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும்.
#நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.
#தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.
#மல்லிகைப் பூ எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.
#அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.
#மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.
*பல மகத்துவங்களைக் கொண்டுள்ள மல்லிகை பூ மாண்பு, மதிப்பு,மன ஈர்ப்பு,தரும் அது கூந்தலின் சிரிப்பும் கூட!
மலர்தலும் உதிர்தலும்
இயல்பெனினும்
காலக்கணக்கில் கட்டுண்டு நிகழாமல்
சிறு தூறலிலும்
உடன் மலர்ந்து விடுகின்றன
சாலைச்சோலையில்
பூக்கள்... குடைகளாய்;
தேனருந்தும் வண்டுகள்தாம்
மூக்குடைந்து திரும்புகின்றன
முயற்சியில் தோற்று.
Post a Comment