அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.
அவதூறு:
நம்பிக்கை
கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும், தெளிவான
பாவத்தையும் சுமந்து விட்டனர். (அல்குர்ஆன்: 33:58)
நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு
வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக
அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக்
கவலைப்படுவீர்கள். (அல்குர்ஆன் : 49:6)
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில்
நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம்
பேசவேண்டாம், உங்களில்
எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ்
ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)
'புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?' என
நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது,'அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்' என
நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் 'புறம்' 'என்றார்கள். நான் கூறுவது என்னுடைய
சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய்.
நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய்
(அவதூறு கூறுகிறாய்)' என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (முஸ்லிம்)
(ரியாளுஸ்ஸாலிஹீன்: 1523)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யார் ஒருவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொள்கின்றாரோ அவர்
பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்' (அறிவிப்பவர்
: அபூஹுரைரா (ரலி), (புகாரி)
நற்செயல்கள், சந்தேகம், அநீதம்
...நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்... (அல்குர்ஆன்
: 2:148)
'உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சொர்க்கத்தின் பக்கமும் விரைந்து
செல்லுங்கள்; அதன் அகலம்
வானங்கள், பூமியைப்
போலுள்ளது. அது இறையச்சமுடையயோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.' (அல்குர்ஆன் : 3:133)
நம்பிக்கை
கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு நல்வாழ்வும், அழகிய
தங்குமிடமும் உண்டு. (அல்குர்ஆன்:
13:29)
'என் உயிரை தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக!
நீங்கள் நல்லதை ஏவுங்கள். தீயவற்றிலிருந்து தடுங்கள். இல்லையெனில் உங்கள் மீது தனது
தண்டனையை அல்லாஹ் இறக்கி வைப்பான். பின் அவனை அழைத்தாலும், அவன் உங்களுக்கு பதில் கூறமாட்டான்' என்று
நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி) அவர்கள் (திர்மிதீ). (ரியாளுஸ்ஸாலிஹீன்:
193)
'இருள் நிறைந்த இரவு போல் (தொடரும்) குழப்பத்தை
அஞ்சி, நீங்கள்
நற்செயல் புரிய விரையுங்கள். ஒருவன் காலையில் மூஃமினாக இருப்பான். மாலையில் காபிராக
இருப்பான். அல்லது மூஃமினாக மாலையில் இருப்பான். காபிராக காலையில் எழுவான். உலக நோக்கங்களுக்காக
தன் மார்க்கத்தையே விற்று விடுவான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்:
87)
'நிச்சயமாக உண்மையை பேசுதல், நல்லது
செய்வதை ஏற்படுத்தும். நல்லது செய்வது சொர்க்கத்தை பெற்றுத்தரும். நிச்சயமாக!
உண்மையை பேசுபவர், இதில்
உண்மையாளர் என அல்லாஹ்விடம் பதிவு செய்யப்படுவார். நிச்சயமாக! பொய் பேசுதல், தவறுகள்
செய்வதை ஏற்படுத்தும். தவறுகள் நரகைப் பெற்றுத்தரும். நிச்சயமாக ஒருவர் பொய்
பேசினால், அல்லாஹ்விடம்
பொய்யர் என பதிவு செய்யப்படுவார் என்று நபி(ஸல்) கூறினார்கள்.'' (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்).
ரியாளுஸ்ஸாலிஹீன்: 54 )
'உனக்கு சந்தேகம் ஏற்படுத்துவதை விட்டு
விடுவீராக! உனக்கு சந்தேகம் ஏற்படாதவை பக்கம் செல்வீராக! நிச்சயமாக உண்மை, அமைதி
(அளிக்கும்). பொய்
சந்தேக(த்தை வளர்க்கு)ம்'' என்று
நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமுஹம்மத் ஹஸன்
இப்னு அலீ(ரலி) அவர்கள். (திர்மிதீ). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 55 )
'உங்களில்
ஒருவர் தீமையைக் கண்டால் தன் கையால் அதைத் தடுக்கட்டும், அதற்கு இயலாவிட்டால் தன் நாவால் தடுக்கட்டும்
அதற்கும் இயலாவிட்டால் தன் இதயத்தால் (வெறுக்கட்டும்). இது, இறை நம்பிக்கையில் மிக பலவீனமானதாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ
(ரலி) அவர்கள் (முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 184)
அநீதம் இழைத்தோருக்கு எந்த நண்பனும், அங்கீகரிக்கப்படும் பரிந்துரையாளனும் இல்லை. (அல்குர்ஆன்
: 40:18)
அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளனும்
இல்லை. (அல்குர்ஆன் : 22:71)
''ஓர் அடியான் (நல்லதா? கெட்டதா?) என சிந்திக்காமல் பேசுகிறான். அதன்
மூலம் அவன் கிழக்கிற்கும் மேற்கிற்குமிடையே உள்ள மிக தூரமான அளவுக்கு நரகில் வீழ்வான்'' என, நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்).
ரியாளுஸ்ஸாலிஹீன்: 1514 )
''ஒவ்வொரு முஸ்லிமின் ரத்தம், அவரின் கண்ணியம், அவரின் பொருள் அனைத்தும் (சீர்குலைக்க) இன்னொரு முஸ்லிமின் மீது தடையாகும்''
என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்). ரியாளுஸ்ஸாலிஹீன்: 1527 )
''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
S.அலாவுதீன்
8 Responses So Far:
கேட்ட ஹதீஸக இருந்தாலும் சொல்லப்படவேண்டிய நேரம் அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டவர்கள் அல்லாஹ்விடம் மண்ணிப்புத்தேடுங்கள் அல்லாஹ் மண்ணிப்போனும் மிகைத்தோனுமாக இருக்கி
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்புச் சகோதரர் அலாவுதீன் குறுவிடுப்பிலிருந்து திரும்பி வந்து “காலமும் சூழலும் அறிந்து” ஆக்கம் அளித்துள்ளீர்கள்; ஜஸாக்கல்லாஹ் கைரன்
தக்க சமயத்தில் பொருத்தமான நினைவூட்டல்.
ஜஸாக்கல்லாஹ் க்ஹைர், அலாவுதீன்.
ஹதிசையும் இஸ்லாத்தையும் நன்கு அறிந்த ஒரு சிலர் உலக இச்சைக்கு ஆசைப்பட்டு பல தவறுகளை செய்ய முற்ப்படுகின்றனர்
சரியான நேரத்தில் பதியப்பட்ட சரியான கட்டுரை
அமைதியற்ற அதிரை உள்ளத்துக்கு அருமருந்தாய்;
ஒற்றுமை,
சகிப்புத் தன்மை,
பெரியோரை மதித்தல்,
சிறியோரை அணுசரித்தல்,
மார்க்கத்தை முழுமையாய் பேணி
உன் பொருத்தத்தோடு வாழும் நற்பாங்கை கொடு நாயனே!
அன்புச் சகோதரர் அலாவுதீன் அவர்கள் அதிரை நிருபர் தளத்திற்குக் கிடைத்த பேறு பெற்ற பண்பாளர் ஆவார்கள் என்பதை அவர்களுடன் சில மணி நேரங்கள் பயணித்துப் பேசி கொண்ட போது அவர்களிடமுள்ள “அமல்களின்பால்” தீவிர பற்றும் விடாமுயற்சியின் வழியாகக் கண்டேன்;
1) மதுரையில் கண் மருத்துவமனையில் இருந்த போது “தொழுகைக்குப் போக மஸ்ஜித் எங்குள்ளது? எப்படிப் போக வேண்டும்” என்று தீர விசாரித்த அவர்களின் ‘ஈமான்” எனும் நம்பிக்கை;தொழுகையை விடாமல் குறித்த நேரத்தில் தொழுது விட வேண்டும் என்ற ஆர்வம் அவர்களிடம் இருப்பதைக் கண்டு கொண்டேன்.
2) துபை வரும்பொழுது இஷா தொழுகையை எப்படியும் வழியில் ஒரு மஸ்ஜிதில் தொழுது விட வேண்டும் என்று ஆர்வத்துடன் சொல்லிக் கொண்டே வந்த அவர்களின் விடாமுயற்சியும் தொழுகை மற்றும் குர் ஆன் ஓதுதல் (குர் ஆன் ஓதி முடிப்பதற்காகவே இத்தளத்தில் ரமலான் மாத்த்தில் ஆக்கங்கள் எழுதவில்லை என்ற கட்டுப்பாடு0 ஆகிய நற்பழக்கங்களைக் கண்டு வியந்தேன்
இவற்றை அடியேன் ஈண்டுக் குறிப்பிடுவதால் ‘தனிநபர்” புகழாரம் என்று கருத வேண்டா. எவரொருவர் அமல்களில் கவனமுடன் இருப்பாரோ அவரே தான் “பயான்’ செய்யவும் பிறருக்குத் தூண்டுகோல் செய்ப்வராகவும் இருக்க முடியும்; வீண் பெருமைக்காக (அமல் செய்யாமல்) பிறர்க்குக் குர்-ஆன் ஹதீஸ் விளக்கம் சொல்லுவதால் இக்லாஸ் எனும் உளத்தூய்மையின்றி எப்பலனும் கிட்டாமல் போய்விடும். ஆனால், அருமைச் சகோதரர் அலாவுதீன் அவர்களிடம் அமல்கள் செய்து கொண்டு பிறர்க்கும் எத்தி வைக்கும் இக்லாஸ் இருப்பதாற்றான், இத்தொடர் மட்டுமல்ல அவர்கள் எழுதும் எத்தொடரும் நிறைவான வெற்றியை எட்டும், இன்ஷா அல்லாஹ்!
அவர்கள் நீடுழி வாழ்ந்து அல்லாஹ்வின் பாதையில் நம்மை அழைக்கும் இச்சீரிய பணிக்கு அல்லாஹ்விடமே நற்கூலிகளைப் பெறுவார்களாக!
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி!
ஜஸாக்கல்லாஹ் ஹைர்!
அமைதிக்கும் ஆளுமைக்கும் தக்க தேரத்தில் பதியப்பட்ட மருந்து இந்த ஆக்க விருந்து
Post a Comment