Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பழமையின் வழமை எங்கே? 17

அதிரைநிருபர் பதிப்பகம் | September 09, 2012 | , , , ,


"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல காலவகையினாலே" என்று ஒரு கவிஞன் குறிப்பிட்டான்.

உலகம் வளரும்போது புதிய மாற்றங்கள் உருவாகும். மாற்றம் ஒன்றே மாறாதது என்று ஒரு குறிப்பும் உண்டு.

சில நாடுகள் தங்களின் அடிப்படை கலாச்சார, பண்பாடுகளை மட்டும் எந்த காலத்திலும் இழந்துவிடவில்லை. பெல்ஜியம் நாட்டில் நடைபெறும் காளைச் சண்டை, சுவிஸ் நாட்டில் நடைபெறும் தக்காளித் திருவிழா ஆகியவற்றோடு, நமது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும், பெரம்பலூர் மீன்பிடி திருவிழாவும், உலகம் தனது பண்பாட்டின் சாயலை முற்றிலுமாக இழந்துவிடவில்லை என்பதை பறைசாற்றுகின்றன.

ஆனாலும் கலாச்சாரம், பண்பாடு, பண்டைய நடைமுறைகளில் பலவற்றை வரலாற்று சிறப்புடைய அதிரைப்பட்டினம் இழந்து நிற்பதை வேதனையோடு  குறிப்பிடவே வேண்டும்.

முக்கியமாக கலரிகளில் பாலும் சோறு மறைந்துவிட்டது. அதன் இடத்தை வடநாட்டு பிர்னி ஸ்ட்ராங்கா  ஆக்கிரமித்து சமீபகாலமாக பன்-ஸ்வீட் கலரிகளில் அரசால்கிறது. நமக்கெல்லாம் ஒரு ஆறுதல் கத்தரிக்காய் பச்சடியும்  உருளைக்கிழங்கும் இன்னும்  அமுலில் இருக்கிறது, உருளைக்கிழங்கில் அந்தக் கொழுப்பும் கிட்னியும்  கலந்து கிடக்கிறது என்பதே. ஒரு சந்தோஷமான செய்திதானே !

அந்தக் காலத்தில் விலைக்காரத் தெருவில் கிராமத்து தின்பண்டங்களை - குறிப்பாக சுட்ட பனங்காயும் சக்கரவள்ளி கிழங்கு, பொட்டி கிழங்கு இன்னும் பல சமாச்சாரங்களைக் காணோம். அதை விற்றவர்களையும்  காணோம் . அதற்கு பதிலாக மாசா,  செவன்-அப், பெப்சி, மவுண்டன்-டூ பாட்டில்கள் / டின்கள் சனல்களில் தூக்கு போட்டு தொங்குகின்றது    

நமது உம்மா, பெரியம்மாமார்களின் காதுகளில் அலுக்கத்து என்று ஒரு வகை நகை பவுன்  வளையங்களாக வரிசையாக குத்தி அழகுபடுத்தி இருப்பார்கள். இப்போது அவைகளைக் காணோம். பதிலாக எல்லா  வயதினரும் கிளிக்கூண்டு ஜிமிக்கி போட்டு இருக்கிறார்கள்.

சில வீடுகளின் கொள்ளை புறத்தில் இருக்கும் கிணறுகளைக் காணோம்   அதற்கு பதிலாக வாட்டர் டேங்குகள் முளைத்துள்ளன.

பத்தாயம் மற்றும் நெல் கொட்டி வைக்கும் குதிர்கள் இவைகளை  காணோம்  அரிசி எல்லாம் பிளாஸ்டிக் பக்கட்டில் குடிபுகுந்து விட்டன.

மாவு அரைக்கும் குடைக்கல் மற்றும் அம்மிகளைக் காணோம் ஆனால் நாம் எல்லோரும் குடைக் கல்லை நினைவு படுத்துவது போல் உடலால் பெருத்து உள்ளோம் அடுப்பங்கரையில் நிரந்தரமாக மிக்ஸியும் கிரைண்டரும்  இடம் பிடித்துக்கொண்டன 

வீட்டு கொல்லைப்புறத்தில் இருக்கும் கழனிப்பானையைக் காணோம் அது  போன இடம் தெரியவில்லை..

உம்மம்மாவும் வாப்புச்சாவும் வைத்திருக்கும் விசிறியைக் காணோம்  தலைக்கு மேல் ஃபேன்  தொங்காத வீடு  இல்லை இப்போ. 

மணலைக் குவித்து அதில் நீர் தெளித்து வீட்டு கூடத்தின் மூலையில் இருக்கும் புகை போட்ட அந்த மண்குடங்களைக் காணோம். அது போய்  இப்போது குளிர் சாதனப் பெட்டியின் கிர்ர் என்ற சப்தம்தான் வருகின்றது (இந்த சப்தம் கூடுமா கூடாதான்னு பெரலிய கெளப்பிராதிய வாப்பாமாரா) 

மாவு இடிக்கும் உரலையும் காணோம் அதன் கூட இருக்கும் உலக்கையையும் காணோம்     (அதில் உட்கார வைத்துதானே நமக்கெல்லாம் சுன்னத் செய்வார்கள் ) 

கோழி பெட்டியும் காணோம் அதை பிடிக்கவரும் கீரிப்பிள்ளையையும் காணோம்.

தெருவில் சிறு வதில் ஓட்டிய சைக்கிள் டயர் வண்டியையும் காணோம் நொங்கு வண்டியும் காணோம்.

மண் பானையில் ஈ மொய்க்கும் பதனியையும் காணோம் மோர் பானையையும் காணோம்.

வீட்டின் கொல்லைப்புறத்தில் அடைத்திருக்கும் வேலியில் முளைத்திருக்கும் முள்ளு முருங்கை மரத்தையும்   காணோம் அதன் கூடவே முளைத்துவரும்  வாவை மரத்தையும் காணோம்.

இதையும் சேர்த்துச் சொல்லவில்லை என்றால் MSM கோவிச்சுக்குவார் அதனால் மேற்சொன்னவைகளோடு சேர்ந்து அந்த கம்பன் ரயிலையும் காணோம்.

இப்படி பல பலசுகளையும் காணோம் என்று தேட காரணம் நம்ம MSM  நெய்னா வை ஊரில் நேரில் சந்தித்ததே காரணம்

இன்னும் பல காணாமல் போனவைகளைப் பற்றிய பின்னூட்டங்களை எதிர் பார்த்தவனாக.

இப்படியாக என் நினைவுக்குத் தெரிந்த வரை பட்டியலிட்டுள்ளேன். மேலும் பலரிடம் இதைவிட அதிகமாக காணாமல் போன சரக்குகள் நினைவலையில் பதிந்து கிடக்கும் அவைகளை அறியத் தாருங்களேன் இன்ஷா அல்லாஹ்.

Sஹமீத்

17 Responses So Far:

Yasir said...

எங்கே எல்லாத்தையும் தான் சொல்லிப்புட்டியல :) இனிமே என்ன இருக்கு

/வெட்டிகுளத்துல தப்படித்த பசங்களையும் காணோம் /
/காச்சல் குருவியைக்காணோம் / முக்கால் வாசி இந்த இனத்தை அழிச்சது உங்க குரூப்புதாண்டு தெருவுல ஒரே பேச்சு,

இன்னும் கிடைச்சா மீண்டும் வர்ரேன் காக்கா...

ZAKIR HUSSAIN said...

நாம் ஓய்வு வயதை எட்டும்போது இப்போது காணாமல் போன விசயங்களை ஏதாவது புதுப்பிக்க முடியுமா என பார்ப்போம்.

ZAKIR HUSSAIN said...

//மாவு அரைக்கும் குடைக்கல் மற்றும் அம்மிகளைக் காணோம் //

பெண்களுக்கு பொதுவாக இருதய பிரச்சினைகள் வராமல் இருந்த காலம் போய், பெண்களும் பாதிக்கப்பட்டதில் இதற்கு பங்கு உண்டு.

இடது கையையும் , வலது கையையும் சுற்றுவதில் இருதய நாளங்களுக்கு ரத்தத்தை ஓட வைக்கும் திறன் இருப்பது பிரச்சினைகள் வந்த பிறகுதான் தெரிகிறது.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

காணவில்லை. ரொம்ப வருத்தமாக ஏங்கச்செய்திடும் தொகுப்பு!

வீட்டுக் கொள்ளையில் காணப்பட்ட பசுமையை காணவில்லை அதனால் குளிர்ந்த காற்றும் இல்லை.

வீட்டின் நடுவே இருந்த முற்றம் காணவில்லை அதனால் வீட்டில் குளுமை இல்லை

பல முழமாய் இருந்த வீட்டின் சுவர்கள் இன்று குறுகி ஒரு ஜான் அளவானதால் சூட்டை தடுக்கும் சக்தி இல்லை.

Ebrahim Ansari said...

ஆக்கம் தந்த ஷா ஹமீதும் , முதல் பின்னுட்டம் தந்த மருமகனார் யாசிர் அவர்களும் கடல்கரைத் தெருவில் கம்பீரமாய் நின்ற அந்த பெரிய புளிய மரத்தை காணோமே. அதுதான் போகட்டும் சின்னப்புளிய மரமும், அதைசுற்றி சிமின்ட் மேடையும்,அங்கு உட்கார்ந்து மலேசிய கதைகளைப் பேசும் வாப்பாமார்களையும் காணோமே. ஊமையர் கடையைக்காணோம்; அங்கு காலையில் கிடைக்கும் தலைக்கறி ஆணத்தையும் காணோம். காலையில் ரயிலில் சென்னையிலிருந்து வரும் ஆட்களை வரவேற்று பொறடி சொரியும் கூட்டம் காணோம்; இரவு ரயிலில் சென்னைக்கு ஏற்றுமதியாகும் இறால்கூடையைக் காணோம்.

வெட்டிக்குளத்திலே தப்படிப்பது மட்டுமா கைலியால் முட்டை கட்டி ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு போட்டிபோட்டுப் போவதும் காணோம்.

அது சரி, ஜாவியாவில் சிறு வயது பையன்களை உள்ளே விட ஒரு வாவ கம்பு இருக்குமே அது இருக்கா காணோமா?

இந்த லிஸ்ட் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
தம்பி சபீர் அவர்களுக்கும் தம்பி நெய்னா அவர்களுக்கும் வழிவிட்டு

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

செத்த நேரத்துலெ சாகுலாக்கவை ஊர்லெ கண்மாசியாக்காணோமே.

நல்ல நினைவூட்டல் தொலைந்து போன இனிய பழயவைகளை சொல்லி.

தோனா.கானா இருந்தும் தபால் போக்குவரத்தைக்காணோம்.

ஊர் மக்களிடம் பரவலாக பணங்காசுகள் இருந்தும் அமைதியைக்காணோம்.

சொந்த, பந்த உறவு பேண கிழ போல்ட் அப்பாக்களைக்காணோம்.

சிட்டுக்குருவிகளை சரிவர காணோம்.

கலர்க்கலரான காய்ச்சல் குருவிகளை கண்மாசியாக் காணோம்.

நல்லாப்பேஞ்சிக்கிட்டு இருந்த பருவகாலத்து மழையைக்கூட சரிவர காண முடியவில்லை.

ஓட்டு வீடுகளைக்காணோம்.

ஊரில் எங்கு பார்த்தாலும் மார்க்க பயன்கள் நிறைந்து பெரும்பான்மை மக்களிடம் குறைந்த பட்ச அமல்கள் கூட காணோம்.

வீடுகளில் பாலுக்காக வளர்க்கப்பட்ட மாடுகளையும், கன்றுக்குட்டிகளையும் காணோம்.

சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்ட கடையைக்காணோம். அதற்கு தேவையான சொலுசனைக்காணோம்.

வண்ணாரப்புள்ளையின் பொதி சுமக்கும் கழுதையைக்காணோம். அதன் காட்டுக்கத்துகளைக்காணோம்.

வீட்டில் மண்ணெண்ணெய், விறகடுப்பைக்காணோம்.

அலயாத்திக்காட்டிலிருந்து விறகு ஒடித்து தலையில் சந்தூக்கு போல் சுமந்து வரும் அந்த பொண்டுவொளைக்காணோம்.

ஊர் அமைத்திக்கு பங்கம் விளைவிக்கும் சண்டை, சச்சரவுகளில் காட்டும் ஆர்வம் மார்க்க விசயங்களில் காணோம்.

ஆக மொத்தம் ஊரில் பெரும்பான்மையான மக்களிடம் மெண்டல், ஃபிஸிக்கலில் ஆரோக்கியத்தைக்காணோம்.

பிள்ளைகள் பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள், பொறுப்புகளைக்காணோம்.

இன்ஷா அல்லாஹ் காணோம் தொடரும்.

Shameed said...

Yasir சொன்னது…

//உங்க குரூப்புதாண்டு தெருவுல ஒரே பேச்சு,//

காட்டு இலாக்கவுலே காட்டி குடுத்துராதிய

sabeer.abushahruk said...

ஹமீது,

ஊருக்குப் போய் கண்டதையெல்லாம் க்ளிக்கி எடுத்து காணாததையெல்லாம் எழுதியெடுத்தும் வந்தீர்களா?

அதெல்லாம் இருக்கட்டும்.

தெருக்களைக் காணவில்லையே; தெருக்களுக்குப் பதிலாகக் குறுக்குச் சந்துகள்தான் இருக்கின்றன.

ஏழெட்டுப் படிகள் கொண்ட வாசல்களில் நான்கைந்து படிகள் மூழ்கி ரெண்டு மூனுதானே இருக்கிறது.

திண்ணைகளை (தடக்கல)காணவில்லை. திண்ணையில் பாட்டிகளைக் காணவில்லை. பாட்டிகளும் பல்லாங்குழிகளும் சுருக்குப் பையும் எலந்தவடையும் எங்கேங்கானும்?


திண்ணையில் கண்ணம்மா பாட்டி

நள்ளிரவில்
நனைந்திருந்த நிலையத்தில்
நின்றது பேரூந்து

முன்னிரவின் மழை
மிச்சமிருந்தது
மசாலாப் பால் கடையின்
மக்கிப்போன கூரையில்

மஞ்சள் தூக்கலாக யிருந்த
மசாலாப் பாலில்
மடிந்த ஈசல்
பாலை
மேலும்
அசைவமாக்கியிருந்தது

எடை குறைந்த
பயணப் பொதியோடு
ஈரத்தில் நடந்து
என்
வீடிருந்த சந்தின்
முச்சந்தியை அடையவும்

காணும் தூரத்தில்
என் வீட்டுக்கு எதிர் வீட்டில்
மேடையிட்டத் திண்ணையில்
கண்ணம்மா பாட்டி
உட்கார்ந்திருந்தது

கண்ணம்மா பாட்டி
கதை சொல்லாது
காதைக் கிள்ளாது
பாதையில் செல்வோரை
வதைக்கவும் செய்யாது

சுருங்கிய தோலுக்குள்
ஒடுங்கிய உடலும்
சுருக்குப் பைக்குள்
சுண்ணாம்பும் புகையிலையும்
இடது கையில்
குச்சி யொன்றும்
எப்போதும் வைத்திருக்கும்

பல்லாங்குழியோ பரமபதமோ
பாட்டியோடு விளையாடினால்
தோற்றாலும்கூட
இழந்தை வடையோ
இஞ்சி மரபாவோ தரும்

முடிந்து வைத்த காசவிழ்த்து
முறுக்கு திண்ணச் சொல்லும்

கண்ணம்மா பாட்டி
இல்லாத திண்ணையை
நான் கண்டதே யில்லை
எனினும்
இத்தனை இரவிலுமா
இப்படித் தனித்திருக்கும்?!

தனிமைதான்
முதுமையின் முகவரியோ?

பின் படலின் கொக்கி நீக்கி
கொல்லைப்புற வழியில்
சென்று உறங்கிப் போனேன்.

மூன்று மாதங்கள் கழித்து
வந்திருந்த என்னை
மறுநாள் காலை
எழுப்பிய உம்மா
வழக்கம்போல
இறந்து போனவர்கள்
இருந்த வீடுகளுக்கு அழைத்துப் போயிற்று

இரண்டாவது வீடாக
எதிர் வீட்டுக்குச் செல்ல
இறந்தது யாரென கேட்க
உம்மா சொன்னது
கடந்த சனி யன்று
கண்ணம்மா பாட்டி யென்று!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அடுப்பங்கரையில் இருந்த அஞ்சறைப்பெட்டியைக்காணோம்.

படுக்கையறையில் இருந்த முட்டலாம்ப்பைக்காணோம்.

பாசம், நேசம் போற்றும் உற்றார், உறவினரைக்காணோம்.

தென்னந்தோப்பில் மோட்டார் பம்ப்செட் ஓடும் சப்தத்தைக்காணோம் (மனைகளாக மலர்ந்து விட்டன)

தெருவோரம் வெலக்கார ஆச்சியைக்காணோம்.

கலியாணக்கார வீட்டில் பூவந்தி உருண்டையைக்காணோம்.

ஜாவியாவினுள் செல்ல அனுமதிக்கும் அளவுக்கம்பைக்காணோம்.

பல்லாங்குழிகளில் துள்ளிக்குதித்து விளையாடும் புளியங்கொட்டைகளைக்காணோம்.

பெண்களின் கைகளில் சடுகுடு விளையாடிய கலச்சிக்காய்களைக்காணோம்.

தட்டந்தரையில் சதுரக்கோடிட்டு பெண்கள் விளையாடும் சில்கோடுகளைக்காணோம்.

கொலக்கொலாயா மந்திரிக்கா நரி,நரியா சுத்திவாவைக்காணோம்.

இச்சா, இனியா, காயா, பழமா, பார்க்கலாமாவைக்காணோம்.

கொக்கரக்கோ, கண்டாச்சைக்காணோம்.

சொல்லி அடிக்கும் அந்தடியைக்காணோம்.

மரமேறி பறித்த மா, கொய்யா மரங்களைக்காணோம்.

வீட்டுக்கொல்லையில் தார்,தாராய்த்தொங்கும் வாழை மரங்களைக்காணோம்.

தென்னை ஓலை பறித்து அதில் குச்சி எடுத்து செய்து பறக்க விட்ட பட்டங்களைக்காணோம். அதில் அனுப்பப்பட்ட தந்திகளைக்காணோம்.

கில்லியின் இருபுற கூர்மையையும், ஒற்றக்கால் பம்பரத்தையும் காணோம்.

மாணவர்கள் ஆசிரியர்களுக்கு செலுத்தும் உண்மை மரியாதையைக்காணோம்.

சண்டை, சச்சரவுக்கு காட்டும் ஆர்வம் சகலமும் கொண்டு வந்து சேர்க்கும் அமைதிக்கு காட்டக்காணோம்.

இப்படிக்காணோம், காணோம் ஏகப்பட்டக்காணோம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும், ஹமீத் காக்கா,

ஆதங்கமான ஞாபகமூட்டல்... MSM Nயை ஊரில் பார்த்ததும் இது போன்று எழுத ஆரம்பித்துவிட்டீர்களா?

//அந்தக் காலத்தில் விலைக்காரத் தெருவில் கிராமத்து தின்பண்டங்களை - குறிப்பாக சுட்ட பனங்காயும் சக்கரவள்ளி கிழங்கு, பொட்டி கிழங்கு இன்னும் பல சமாச்சாரங்களைக் காணோம். அதை விற்றவர்களையும் காணோம் . //

உண்மையில் வருத்தபட வேண்டிய விசயம்... இதற்கு நாம் தான் காரணம்.. அருகாமையில் இருக்கும் தோப்பு, வயல்களை மனையாக போட்டு விவசாயத்தை சாகடித்துக்கொண்டிருக்கிறோம்.. ஆச்சிமார்கள் கிழங்கு வகைகளை வைத்து வியாபாரம் செய்வதை கடந்த ஒரு வருடமாக போரூராட்சி அனுமதிப்பதில்லை, அவர்களை துரத்திவிடுகிறார்கள். காரணம் இவர்களால் தெருவில் சுகாதார சீர்கேடாம்...

crown said...

தாஜுதீன் சொன்னது… ஆச்சிமார்கள் கிழங்கு வகைகளை வைத்து வியாபாரம் செய்வதை கடந்த ஒரு வருடமாக போரூராட்சி அனுமதிப்பதில்லை, அவர்களை துரத்திவிடுகிறார்கள். காரணம் இவர்களால் தெருவில் சுகாதார சீர்கேடாம்...
--------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். ஆச்சிமார்கள் இந்த ஆட்சியாளர்களாள் விரட்டி அடிக்கப்படும் சோகம்.வயதான காலத்திலும் உழைத்து சாப்பிடும் இவர்களின் வயத்தில் அடிப்பது என்ன நியாயமோ?

Yasir said...

//சொல்லி அடிக்கும் அந்தடியைக்காணோம்.// மாஷா அல்லாஹ் மலைத்து,திகைக்க வைக்கின்றது உங்கள் ஞாபக சக்தி சகோ.நெய்னா.

அப்துல்மாலிக் said...

இப்போ இருக்கிறது கூட கடந்து(காணாமல்)ம் போகும்

S.O.S.தாஜுதீன் சாகுல் ஹமீது said...

இதில் Comments கொடுத்த எல்லா நண்பர்களையும் ஊரில் காணோம்.


Muhammad abubacker ( LMS ) said...
This comment has been removed by the author.
Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

புதுமைகள் புகையாய் வந்ததால் பழமைகள் பகையாய் போனது நிதர்சன உண்மை ஹமீது காக்கா.
பழசை பற்றி எவ்வொளவோ சொல்லவேண்டி இருக்கின்றன.அத பற்றி சொல்ல ஆரம்பித்தால் புதுசுகள் மறந்து போய்டும் .
அப்புறம் வீட்டில் இட்லி ,தோசை கிடக்காம போய்விடும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு