Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் மாநபியின் மாண்பை எடுத்துரைக்க - அனைத்து அமைப்புகள் போராட்டம் - காணொளி 10

அதிரைநிருபர் பதிப்பகம் | September 21, 2012 | , , , , ,


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

அதிரையில் இன்று (21-09-2012) தக்வா பள்ளி அருகில் துவங்கிய ஊர்வலம் பேருந்து நிலையத்தில் அனைத்து ஜமாத், மற்றும் அமைப்புகளின் கூட்டான போராட்டமாக அதிரை த.மு.மு.க. தலைமையில் நடைபெற்றது.

உலக மாந்தர்ட்கு அருட்கொடையாக அருளப்பெற்ற நம் உயிரினும் மேலான உத்தம நபி(ஸல்) அலைஹிவஸல்லம் அவர்களைப் பற்றி அவதூறு பரப்ப முயன்ற கயவர்களையும், அதற்கு உறுதுணையாக இருக்கும் அமெரிக்க அரசையும், யுடியூப் நிறுவனத்தையும் கண்டித்து, இன்று அதிரை அனைத்து கட்சி, ஜமாத், அமைப்புகள் ஒன்றினைந்து மிகப்பெரிய கண்டப்போராட்டம் நடத்தினர்.

இதில் அதிரை த.மு.மு.க. சகோ. செய்யது, பாப்புலர் ஃபிரண்ட் சகோ. முஹம்மது, இந்திய தவ்ஹீத் ஜமாத் அப்துல் ஹமீத், அதிரை பே.ம.தலைவர் சகோ S. அஸ்லம் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயலாளர் சகோ தமீம் அன்சாரி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்

இறைத்தூரை இழிபடுத்த எத்தனித்த எத்தர்களை எதிர்ப்பதில் எம்மக்கள் எவ்வகையிலும் சலைத்தவர்களல்ல, அதனை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை அனைத்து சகோதரர்களும் அதிரையில் பேருந்து நிலையத்தில் ஒன்று கூடி நிருபித்தார்கள் - அல்ஹம்துலில்லாஹ் !

அதிரைநிருபர் குழு

10 Responses So Far:

Shameed said...

தெளிவான புகை படங்களுடன் உடனுக்குடன் ஊர் செய்தியை பதிந்ததற்கு நன்றி

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...


இன்சா அல்லாஹ் நமது நிய்யத் நிறைவேறட்டும். அவன்களின் சூழ்ச்சி அழியட்டும்.

வண்ணமிக்க தெளிவான படங்களுடன் ஊர் செய்திகளை தந்தமைக்கு நன்றி.

கலந்துகொண்ட அனைத்து உங்களையும் இறைவன் பொருந்திக் கொள்வானாக!

ரெண்டு பேரும் ஒன்னா சேந்துட்டியலா. இன்சா அல்லாஹ் ஊரு இனி உருப்பட்டுடும். இதெ.. இதே தானே எதிர் பார்த்தோம்!

மேலும்,

நமது உயிரினும் மேலான ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது அதிமதிகம் சலவாத் மொழிந்தருள்வோமாக.

اللَّهُمَّ صَلَّ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ ...اللَّهُمَّ بَاَرِكْ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍكَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ

U.ABOOBACKER (MK) said...

இந்த ஒற்றுமை மாநபி வழியில் எல்லா விஷயங்களில்
தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!

ZAKIR HUSSAIN said...

படங்கள் எனக்கென்னவோ அவ்வளவு தெளிவாக இருப்பதாக தெரியவில்லை.

கேமராவில் இருக்கும் Back Lighting option மற்றும் கம்ப்யூட்டரில் போட்டோக்களுக்கான சாஃப்ட்வேரில் இருக்கும் Fill Lighting இதை இரண்டையும் பயன்படுத்தவே இல்லை என தெரிகிறது.

இணையத்தில் வெளியிடும்போது இவைகளை கவனம் எடுத்துக்கொள்வதுடன்., கூட்டங்களை எடுக்கும்போது "முதுகு பக்கம் ஃபோகஸ் செய்வதை தவிர்க்கவும்.

இவை போட்டோ எடுப்பதிலும் தவறு.."கூட்டத்தின் முக்கியத்துவம்" என்ற கருவிலும் தவறு ஏற்படும்.

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

மாச அல்லாஹ் ஒற்றூமை ஓங்குக வேற்றூமையை மரந்து நம் ஊர் நல்ல விசயங்களில் இது போல் செயல் பட்டால் எங்களை போன்றவர்களுக்கெல்லாம் மட்றட்ட மகிழ்ச்சி கொள்வோம்

zubair said...

ஜூபைர்.அ

அஸ்ஸலாமு அலைக்கும்

எல்லாப் புகழும் இறைவனுக்கே நம் சமுதாயத்திற்கு எதிராக நடைப்பெறுகின்ற அனைத்து சூழ்ச்சிகளுக்கும் இறைவனின் உதவிகளைக் கொண்டு. அனைவரும் தங்களுக்குள் இருக்கும் வேற்றுமையை மறந்து போராடி வெற்றிப் பெற துஆ செய்வோமாக. ஆமீன்

இந்த ஒற்றுமை மாநபி வழியில் எல்லா விஷயங்களில்
தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்

RAFEEQCMP said...

அஸ்ஸலாமு அழைக்கும் ...
நேற்று அதிரையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஊரின் ஒற்றுமையை எடுத்துக்காட்டுகின்றது .
இதேபோன்று எந்த இயக்க கொடியும் இல்லாமல் அதிரை முஸ்லிம்கள் என்ற பெயரில் மற்றொரு ஆர்ப்பாட்டத்தை அதிரை முஸ்லிம்கள் எதிர்ப்பார்கிரார்கள் .அன்பார்ந்த இயக்கவாதிகளே தயவுசெய்து தங்களுடைய இயக்க கொள்கைகளை விட்டுவிட்டு நம் உயிரினும் மேலான முஹம்மது நபி (ஸல் ) அவர்களை இழிவு படுத்தி திரைப்படம் எடுத்த அமெரிக்க காமவெறியர்களை கண்டித்து நாம் ஆர்ப்பாட்டம் நடத்தினால் நம்முடைய ஒற்றுமை என்ன என்பதை நம்முடைய எதிரிகளுக்கு தெரியப்படுத்தலாம் .

அப்துல்மாலிக் said...

ஒன்று பட்டால் உண்டு சிறப்பான வாழ்வே...

ஓங்கட்டும் நம் முழக்கம்...

Ebrahim Ansari said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு மிக மிக நல்ல செய்தி. இந்த முயற்சிகள் தொடரவேண்டும் .தொடர்புடையோர்க்கு பாராட்டுக்கள்.

அபு அபீரா said...

சமுதாய ஓற்றுமையை விரும்பக்கூடிய அதிரைவாசிகளுக்கு இது ஒரு மகிழ்சிகரமான செய்தி.

தங்களிடையேயுள்ள கருத்து வேற்றுமைகளை மறந்து அல்லாஹ்வுக்காக ஒத்த கருத்துள்ள விஷயங்களில் இது போன்று ஒன்றிணைந்து செயல்படுவது வரவேற்கத்தக்கது - பராட்டிற்குறியது. அல்லாஹ்வுக்காக இது போல் எல்லா நல்ல விஷயங்களிலும் ஒன்றினைந்து செயல்பட்டால் நமதூர் மற்ற ஊர்களுக்கு முன்னமாதிரியாக மாறும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.

இணைந்து செயல்பட்ட அனைத்து இயக்ககங்களுக்கும் - கலந்துக்கொண்ட அனைத்து சகோதரர்களுக்கும் நன்றி பல!

அடுத்து இன்னொரு விஷயத்தையும் இங்கே சுட்டிக்காட்டியாக வேண்டும். இது போன்ற ஆர்பாட்டங்களும் போராட்டங்களும், நம்முடைய உணர்வுகளை வெளிக்காட்ட பயன்படுமே ஒழிய, இந்த பிரச்சினைக்கு முழுமையான தீர்வாக முடியாது என்பதையும் நாம் உணரவேண்டும்.

பெருமானாருக்கு எதிரான இந்த திரைப்படம் எடுக்கப்பட்டதன் முக்கிய நோக்கம், உலகலாவிய அளவில் பெரும் எதிர்ப்புகைளையும் மீறி ஏற்பட்டுவரும் இஸ்லாமிய வளர்ச்சியை தடுத்து நிறுத்தவேண்டும் என்பது தான். அப்படிப்பட்டவர்களுடைய நோக்கங்களையும் எண்ணங்களையும் தவிடு பொடியாக்கும் விதத்தில் நாம் நம்முடைய இஸ்லாமிய பிரச்சாரத்தை தீவிரப்படுத்த முன்வரவேண்டும். ஆங்காங்கே, இஸ்லாத்தைப் பற்றியும் பெருமானாரின் போதனைகள் பற்றியும் எடுத்துறைக்கும் வண்ணமாக துண்டு பிரசுரங்கள் வெளியிட வேண்டும். மொத்தத்தில் நாம் நமது பகுதிகளில் தஃவா பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும்.

எனவே நம் சகோதரர்கள், நம் உயிரினும் மேலான நபி (ஸல்) அவர்களை விமர்சித்து படம் எடுத்ததற்கு ஒன்று கூடிய கண்டனம் தெரிவித்ததோடு நின்றுவிடமல், கண்மனி நாயகம் (ஸல்) அவர்களின் நற்புகழை பரப்பும் வண்ணம் நம்முடைய தஃவா பிரச்சாரத்தை செய்ய முன்வரவேண்டும் என்பதே இந்த பிரச்சினைக்கு சரியான தீர்வாக அமையும்.

- தஸ்லீம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு