Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை நிருபர் – தள விளக்கம் 47

அதிரைநிருபர் பதிப்பகம் | September 15, 2012 | , , ,


இது
விதையின்றி விளைந்த
விருட்சம்
விடைதேடி வென்ற
வெளிச்சம்

கொள்கைக்காக கிளைத்தப்
புரட்சிப் பூ

முக்கனியின் சுவையென
முத்தமிழின் விசைகொண்டு
மூத்தவர்கள் மேல்பார்த்து
இளையவர்கள்
எழுதிப் பழகும்
இடம்

பொய்யையும்
போலி முகவரிகளையும்
புறந்தள்ளி
மெய்யறிவுக்கான
தேடல்

கயமைக்கு எதிராய்க்
கடுமையாய்ச் சாடும்
ஊடகம்

கனவுகள் இருந்தால்
கவனமாய்ப் பதியும்
புத்தகம்

இது
யாருக்கும் எதிரல்ல
ஊருக்கும் புதிரல்ல

அதிரை
எழுத்தாளர்கள்
பயணிக்க வாய்த்த
குதிரை

அரசியல் பேசும்
அரசியல் செய்யாது
பின்புலம் அமைக்கும்
பின்னால் குத்தாது

மார்க்க விளக்கங்கள்
மனநல ஆக்கங்கள்
கட்டுரை வழிகாட்டல்கள்
கவிதைச் சுவையூட்டங்கள்
கடந்தகால நினைவுகள்
கையிருப்பில் கனவுகள்
மூன்றாம் கண்ணால் பேசும்படங்கள்
முத்திரை பதிக்கும் பின்னூட்டங்கள்
என
கலைகட்டும்
களம்

இது
பிசைந்து வைக்கப்பட்ட
பாற்சோறு
பிடித்தால் புசிக்கலாம்
பதிந்து வைக்கப்பட்ட
குறிப்பேடு
படித்தால் ரசிக்கலாம்

எலிக்குஞ்சல்ல இது
இரைக்காகச் சிக்கிப்
பொறிக்குள் மாட்ட
அக்னி குஞ்சு
அடங்காத நெஞ்சுறத்தை
அடையாளமாய்ப் பெற்ற
அதிரையர்களின்
அகம்!
அமைதியின் ஆளுமை!

---------0-o-0---------

Sabeer AbuShahruk

47 Responses So Far:

அதிரைக்காரன் said...

மார்கெட்டிங் மேனேஜரானதற்கு வாழ்த்துகள் சபீர் காக்கா.

இருந்தாலும் கீழுள்ள வாசகங்கள் எல்லா பதிவுகளுக்கும் செயல்படுத்தினால் நல்லது.

அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
:-):-):-)

KALAM SHAICK ABDUL KADER said...

//மார்க்க விளக்கங்கள்
மனநல ஆக்கங்கள்
கட்டுரை வழிகாட்டல்கள்
கவிதைச் சுவையூட்டங்கள்
கடந்தகால நினைவுகள்
கையிருப்பில் கனவுகள்
மூன்றாம் கண்ணால்
பேசும் படங்கள்
என
கலைகட்டும்
களம்//

KALAM SHAICK ABDUL KADER said...

உண்மை;வெறும் புகழ்ச்சியல்ல

KALAM SHAICK ABDUL KADER said...

//இது
யாருக்கும் எதிரல்ல
ஊருக்கும் புதிரல்ல//

அமைதியின் ஆளுமை என்பது அழகாய் வெளிப்படுத்டும் வரிகள்

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

ஆலுக்கொருதிசையாய்
ஆலாய்ப்பறந்து
தொடர்பற்றுக்கிடக்கயிலே
தொடர்புச்சாதனம் கொண்டு
பலமரம் தேடி
கோத்திட்ட பூவாய்
கதம்பமாலை
அதிரை நிருபர்
தின்னைத்தோழர்கள்
ஒன்று கூடி கதை கதையாய்
பேசிட கிடைத்த அற்ப்புத சாதனம்
கணினி

sabeer.abushahruk said...

அன்பின் அதிரைக்காரர், ('ன்'னின் மரியாதைக்குறைவு என் தன்மைக்கு ஏற்புடையதல்ல)

இங்கு
சில கேள்விகளுக்கு
விடை வைத்திருக்கிறேனேயன்றி
விற்பனைக்குக்
கடை விரிக்கவில்லை

எதை மார்க்கெட்டிங் செய்ய?
குதிரைக்காரனாயிருந்தாலும்
குதிரையை விற்க மெனக்கெடலாம்
நானும்
உங்களைப் போல
அதிரைக்காரன்தானே
அதிரையை விற்கவா
மார்க்கெட்டிங் செய்ய?

தங்களின் இரண்டாவது கமென்ட்டுக்கு ஓங்கி ஒரு ரெண்டு நிமிஷம் கைதட்டுவதைத் தவிர வேறொண்றும் என்னால் செய்ய இயலாது.

இது நான் எழுதிய தள விளக்கம்தான். வலை உலகில் பின்னி பெடல் எடுக்கும் பெரும் பெரும் தல விளக்கம் அல்ல.

மற்றபடி போலி முகங்கள் பற்றிய கருத்தில் உங்களோடு ஒத்துப் போகும் நான் தங்களின் தொலைபேசி ஆலோசனையை அதிரை நிருபர் நிர்வாகிகளிடம் ஸ்திரமாக பதிந்து வைத்துள்ளேன்.

நானும் ஸ்மைலீஸ் போட்டு விடுகிறேன். :) :) :)

அதிரை சித்திக் said...

இது விதையில்லா விருட்சம் ...?
(க)விதை போட்டு கருத்தை
அறுவடை செய்யும் கவிஞர்
இருக்கும் போதுவிதைக்கா பஞ்சம்
இருள் தன்னை நீக்கும் எழுத்தென்னும்
விளக்கு இருக்கும் நம் தளத்திற்கு
வெளிச்சத்திற்கா பஞ்சம் ..
யார் வேண்டுமானாலும் எழுதலாம்
நல்லதை நாடுவோம் அல்லதை சாடுவோம்
பாலை மட்டும் அருந்தும் அன்ன பறவை நாம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அப்பவே ஒரு கீரீடக் கவிஞன் சொன்னான் தள ன்னாலே நம்ம தல தான்னு...

Kavianban KALAM, Adirampattinam said...

//எதை மார்க்கெட்டிங் செய்ய?
குதிரைக்காரனாயிருந்தாலும்
குதிரையை விற்க மெனக்கெடலாம்
நானும்
உங்களைப் போல
அதிரைக்காரன்தானே
அதிரையை விற்கவா
மார்க்கெட்டிங் செய்ய?//

”மார்கெட்டிங்” என்ற வரிகளைப் படித்ததும் எனக்குள் ஏற்பட்ட வேதனை தீருமுன் உடன் மறுமொழி இடல் கண்டு, உங்களிடம் தொலைபேசியிலாவது என் வேதனையை பகிரலாம் என்ற எண்ணம் கைவிட்டேன். உண்மையில் கவிஞர்களை உசுப்பிவிட்டால் உணர்ச்சிவயப்படுவர் என்பதை அதிரையர்கள் அறிந்து கொள்க!

Kavianban KALAM, Adirampattinam said...

//தல தான்னு//

தல தல தான் தலைவா

Shameed said...

தள விளக்கம்'ன்னு சொல்லிபுட்டீங்க... 'ள' பெரிசா இல்லே சிறிசா ?ன்னு கொழப்பமா இருக்கே... சரியா தல அது !? என்னமோங்க சொல்லித்தான் தெரியனுமா ? இதெல்லாம்... ஏனுங்க... ?

அதிரைக்காரன் said...

அன்பின் சபீர் காக்கா.
சரியான கவிதைக்கு எம்மன்னன் பரிசு வழங்கினால் முதலில் ஆனந்தப்படுபவன் நானே. ஆனால். தவறான பொருள் தரும் கவிதைக்கு எம் மன்னன் தவறாக பரிசு வழங்கினால் தட்டிக்கேட்பவனும் நானே என்று நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற நக்கீரன் வகையல்ல அடியேன். உங்கள் கவிதையின் பொருட்குற்றமாய் இத்தளத்தின் திரைமறைவு செயல்பாடுகள் இருக்கும் நிலையில் உண்மைக்குப் புறம்பான புகழ்ச்சிகள் வஞ்சப்புகழ்சியோ என்று கருதிவிடக்கூடாது என்ற ஆதங்கத்தில் பின்னூட்டமிட்டேன். வரிகள் வருத்தியிருப்பின் ஆழ்ந்த வருத்தங்கள்.:(

கலாம் காக்கா. கவிஞர்களை நான் உசுப்பேற்றவில்லை. மேலும். வெரும் புகழ்ச்சிகள்தான் மகிழ்ச்சி தரும் விமர்சனமென்றால். மன்னிக்கவும் என்னிடம் அதற்கு இருப்பில்லை.

உள்ளொன்று கொண்டு
புறமொன்று காட்டும்
கள்ளச் சிரிப்புடன்
நயமாகப்பேசி நடித்து
நெறியற்றோர் நடத்தும்
நாடகமேடையில்
அமைதி எப்படி
ஆளும்?

பாசாங்கு பேசும்
பசப்பு மொழிகளால்
பின்னூட்டப்பெட்டி
நிறைந்தால்தான்
பொன்னான கருத்தெனில்
என்னால் இயலாது.

நன்றி.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தளம் பற்றி
தல யின்
கவியால் விளக்கம்
கலங்கரை விளக்கம்

Ebrahim Ansari said...

//உள்ளொன்று கொண்டு
புறமொன்று காட்டும்
கள்ளச் சிரிப்புடன்
நயமாகப்பேசி நடித்து
நெறியற்றோர் நடத்தும்
நாடகமேடையில்
அமைதி எப்படி
ஆளும்?//

(1)உள்ளொன்று புறமொன்று
(2)கள்ளச்சிரிப்பு
(3)நடிப்பு
(4)நெறியற்றோர்
(5) நாடகமேடை

இத்தனை இ.பி.கோ அல்லது (அதிரை பீனல் கோடு)அ.பி.கோ கொண்ட குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டு இருக்கிறதே. இவற்றுக்கு ஆதாரங்கள்- சாட்சிகள் சமர்ப்பிக்கப்படுமா? அப்படி சமர்ப்பிக்கப்படாவிட்டால் இவை பொய்வழக்கு என்று தள்ளுபடியாகுமே.

சான்றுகள் இல்லாவிட்டால் வழக்கை ( வார்த்தைகளை) வாபஸ் பெறுவதே நல்லது.

அச்சமாக இருக்கிறது. அநீதிகளை எதிர்த்து செயல்படவேண்டிய இரட்டைக்குழல் துப்பாக்கிகள் குறிதவறி குறி வைக்கின்றனவோ என்று அச்சமாக இருக்கிறது. வீண் வழக்குகள் வேண்டாம். வீண் விவாதங்களும் வேண்டாம். அவரவர் வழியில் அவரவர் செல்லலாம். முடிந்தால் பொதுப் பிரச்னைகளில் ஒன்று சேரலாம்; கை குலுக்கலாம்; ஒத்துழைக்கலாம். இல்லாவிட்டால் பலரும் பார்க்கும்படி பகை பாராட்ட வேண்டாமே. அவரவர் வழி அவரவர்க்கு. போற்றும் பூச்செண்டும் வேண்டாம்; தாக்கும் கருங்கல்லும் வேண்டாம்.

"இரண்டு கைகள் நான்கானால் இருவருக்கேதான் எதிர்காலம் - பகைவர்களே நில்லுங்கள் - புலிகள் இரண்டு வருகின்றன " என்பது மெய்ப்ப்படுமா?

Ebrahim Ansari said...

தம்பி சபீர் அவர்களே!

நீங்கள் கடை விரிக்கவில்லை. கவிதையை விதைத்திருக்கிறீர்கள். உங்களின் சார்பை இவ்வளவு உயர்வான கவிதையால் வெளிப்படுத்த( உங்களால்) உன்னால் முடியும் தம்பி!

sabeer.abushahruk said...

அதிரைக்காரர்,
அமைதி கொள்ளுங்கள்
பதற்றப் படாதீர்கள்

உங்களுக்கு மிகவும் பரிச்சயமான உங்கள்மேல் அன்பு கொண்ட காக்கா என்னிடம்தான் விவாதிக்கிறீர்கள், தம்பி.

ஏனெனில் வரிந்துகட்டிக்கொண்டு எழுதும் உங்கள் பின்னூட்டங்களில் உறக்கம் கலைந்த ஒரு தன்மைபோன்ற தடுமாற்றம் தெரிகிறது.

அலாவுதீனின் "அமைதியற்ற மனதுக்கு அருமருந்தும்" ஜாகிரின் "படிக்கட்டுகளும்" ஒரு முறை ஊன்றி வாசித்துவிட்டு மேற்கொண்டு எழுதினால் உங்களுக்கு நீங்களே முரண்பட மாட்டீர்கள். அமைதியின் ஆளுமையும் விளங்கும்.

முரண்: நான் நக்கீரன் அல்லன் என்கிறீர்கள் - பாட்டில் பொருட்குற்றம் உள்ளது என்கிறீர்கள். நக்கீரந்தானே பொருட்குற்றம் சொன்னதாக திருவிளையாடல்? இப்ப நான் என்ன செய்ய?

நீங்கள் நக்கீரனோ சகுணியோ எனக்கு அறியும் அவசியம் இல்லை.

பொருட்குற்றம் ?

கள்ளனுக்குக்
காவல்துரை பொருட்குற்றம்

கயமைக்குக்
கண்ணியம் பொருட்குற்றம்


கள்ளக்காதலுக்குக்
கற்பு பொருட்குற்றம்
என்பதுவே மனிதன் காணும் நியதி.

தனக்குப் பிடிக்கவில்லையெனில்
படிக்கட்டுகளும் சறுக்கும்
அருமருந்தும் கசக்கும்

உங்களைப்பார்து மட்டுமல்ல எனக்கும் சேர்த்தே ஒரு கவிஞன் சொன்னான்:

சுட்டும் விரலால் பிறரைக் காட்டி குற்றம் கூறுகையில்
மற்றும் மூன்று விரல்கள் உன் மார்பினைக் காட்டுதடா! மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து முதுகைப் பாருங்கள்; முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு, அதனைக் கழுவுங்கள்!

எனக்குத்தெரிந்து இந்தப் பதிவுக்கான முதல் பின்னூட்டம் இட்டவரையும் சேர்த்து அ.அ.காக்கா, ஜமீல் காக்கா, ஈனா ஆனா காக்கா, நான், என் நண்பர்கள், என் அண்ணன் தம்பி, மாமா மச்சான், சகலை மச்சினன் என்று மொத்தமே பத்து பதினைந்து பேர்மட்டும்தான் இங்கு படிக்கிறோம் பின்னூட்டமிடுகிறோம். இதில் யார் பாசாங்கு செய்கிறோம் என்று 'மர்மம்' ஏதும் இல்லாமல் சுட்டிக்காட்டுவதே ஆண்மை!

அப்புறம் ஒரு "அட!" சொல்ல மறந்துவிடேன், உங்களின் தள விளக்கக் கவிதைக்கு.

பொருட்குற்றமே இல்லாத புனிதமான கவிதையாக்கும், ஹிஹி?

sabeer.abushahruk said...

// உங்கள் கவிதையின் பொருட்குற்றமாய் இத்தளத்தின் திரைமறைவு செயல்பாடுகள் இருக்கும் நிலையில் உண்மைக்குப் புறம்பான புகழ்ச்சிகள் வஞ்சப்புகழ்சியோ என்று கருதிவிடக்கூடாது என்ற ஆதங்கத்தில் பின்னூட்டமிட்டேன்.//

திரைமறைவு செயல்பாடுகள்???

உங்களுக்கு மட்டும் திரை விலகியதா, அதிரைக்காரர்?

I pass this comment to Adirai Nirubar

Ebrahim Ansari said...

//எனக்குத்தெரிந்து இந்தப் பதிவுக்கான முதல் பின்னூட்டம் இட்டவரையும் சேர்த்து அ.அ.காக்கா, ஜமீல் காக்கா, ஈனா ஆனா காக்கா, நான், என் நண்பர்கள், என் அண்ணன் தம்பி, மாமா மச்சான், சகலை மச்சினன் என்று மொத்தமே பத்து பதினைந்து பேர்மட்டும்தான் இங்கு படிக்கிறோம் //

பத்து பதினைந்துபேர்????? பெங்களூர், புது டில்லி, சென்னை, ஹைதராபாத்,போன்ற ஊர்களிலும் யூகே, யு எஸ் ஏ மலேசிய , சிங்கை, இலங்கை போன்ற நாடுகளிலும் உள்ளவர்கள் படித்ததாக IP 2 MAP ஆதாரம் சொல்கிறதே. அப்படியென்றால் நமக்கு வரும் தொலைபேசிகள் அனாமத்தா?
தம்பி சபீர் அவர்களே! ஒரு சந்தேகம்- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டுவிடுமா? வானை நோக்கி திரையைப் போட்டால் வட்ட நிலவுதான் மறைந்துவிடுமா?

அதிரைக்காரன் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

மரியாதைக்குரிய அன்சாரி காக்கா இ/அ .பி.கு (பின்னூட்ட குற்றச்சாட்டுக்கு :)ஆதாரம் கேட்டதற்காக சில தகவல்களை பொதுவில் வைக்க வேண்டிய நிர்ப்பந்தம். வாசகர்கள் பொருத்தருள்க.

1) தனிநபர் தாக்குதல் பின்னூட்டங்கள் உடனடியாக நீக்கப்படும் என்ற தளநெறியாளர் முந்தைய பதிவில் என்னைச் சாடும் பின்னூட்டங்களை மட்டும் விட்டுவைத்தது நெறியாளர் பார்வைக்கு வரவில்லையா? தொலைபேசி தெரிவித்த பிறகும் அடுத்த இருநாட்கள் விட்டுவைக்கப்பட்ட அவை தற்போது தளத்தில் இல்லை.

2), 3) நேரில் பேசும்போது நயமாகப்பேசி வாய்ப்புகிடைக்கும்போது வசைபாட களம் அமைத்ததால் முன்னது நடிப்பு.

4) அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம் என்று சொல்லி அவதூறுகளால் அநீதி இழைக்கப்பட்டவனின் உள்ளக்குமுறலின் வலிமை தெரியாதவர்களா தளநெறியாளர்கள்? சகமுஸ்லிமின் கண்ணியம் காப்பதும் கடமை என்ற நெறிதவறியதால் நெறியற்றோர்.

4) ப்ளாக்கரில் பரிச்சயம் உள்ளவன் என்றமுறையில் கவனித்தது. முந்தைய பதிவில் அவதூறுகளையும் சேர்த்து 75 பின்னூட்டங்கள் இருந்தன. பின்னூட்ட பெட்டி முடக்கப்பட்டதால் பதில்கொடுக்க வழியமைக்கச்சொல்லி கேட்டும் மறுத்துவிட்டு. என்மீதும் அபுசுஹைமாமீதும் அவதூறு சொல்லும் பின்னூட்டத்தை நீக்காமலும். அபுசுஹைமாவின் பதில் பின்னூட்டத்தை நீக்கியும் 62 பின்னர் 61 என்று திரைமறைவில் (பிளாக்கரிலுள்ள வசதி இது) தேவையான பின்னூட்டத்தை வெளியிட்டு மூடப்பட்ட பின்னூட்டபெட்டியில் வசதிக்கேற்ப விளையாடியது.

இதையெல்லாம் நெறியாளர் மறுத்தால் என்னுடைய மூன்று பின்னூட்டங்களையும் நீக்கிக்கொண்டு நான் சொன்னவற்றை திரும்பப்பெறுகிறேன். தளநடத்துனர்களின் இந்தசித்துவேலை தெரியாமல் அன்பின் சபீர்காக்கா கவிவிரித்ததையே தவறான பொருளுக்கு நற்சான்றளிக்கும் இந்த விளக்கப்பதிவை மார்க்கெட்டிங் செய்ததாகச் சொன்னேன்.

உறவுகளும் நட்புகளும்
உளமாற கொஞ்ச
தஞ்சமடையும் தளத்தில்
நஞ்சு கண்டதால்
நெஞ்சு பதறியே
எந்தன் நெருப்புவரிகள்
சிலரின் மனம்
சுட்டிருந்தால்
அடியேன் பொறுப்பல்ல.

அன்சாரி காக்கா மற்றும் சபீர் காக்கா ஆதாரம் கேட்டு என் நேர்மையையும் ஆண்மையையும் ஐயுற்றதால் இந்தப்பின்னூட்டம். நெறியாளர் விரும்பினால் நீக்கலாம்.

(மனவலியைத் தாண்டி வயிறும் வலித்ததால் இன்று அலுவலகம் செல்லவில்லை. மொபைலில் டைப்புவதற்கு ஒரு மணிநேரம் எடுத்தது. இதற்குமேல் என்னிடமிருந்து எந்த கருத்தும் வராது.)

வஸ்ஸலாம்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். இதைவிட அருமையாக கவிதை மூலம் விளக்க முடியாது. உள்ளங்கை நெல்லிக்கனி என்பதை மற்றவர்களும் பார்த்து தெரியட்டும் என காட்டிய விதம் அருமையோ அருமை! மின் அஞ்சல் மூலம் வெறுப்பை வளர்க்கும் பொருப்பை சில மர்மயோகிகள் வளர்க்க காரணம் அவர்களின் ஒருதலைப்பட்சமான ஆக்கம் வெளியிடாத வெறுப்பின் உஸ்னமே என அறிந்தும் இருக்கிறோம். அருமை நண்பன் ஜமால் இம்மாம் பெரிய வெடியை டமால்னு வெடிச்சிருக்கான்.யான்டாப்பா இந்த கோபம்.சரி ,சரி அதிரை நிருபருக்கு உன் ஸ்டைலில் நல்ல தொரு ஆக்கம் அனுப்புடா!

crown said...
This comment has been removed by the author.
Shameed said...

" அன்புள்ள நண்பர் சபீர் அவர்களுக்கு !

விற்பனை ஆகாத சரக்குக்குத்தான் மார்கெட்டிங் தேவை. ஆனால் நமது தளத்தில் வெளிவருபவை உற்பத்தி ஆகும் முன்பே ஆர்டர் குவிகிற அறிவு சரக்குகளாகும்.தயாரிப்பு தாமதமானால் ஏன் இன்னும் வரவில்லை என்று காத்திருந்து வாங்கிப்போகும் கல்விச்சரக்கு ஆகும். படிக்கட்டுகள் ஏன் சுணக்கம்? பேறுபெற்ற பெண்மணிகள் என்ன ஆனது? சகோதரி எழுதும் சகோதரருக்கு உடல் நலம் தேரிவிட்டதா? மனுநீதி தொடர் நூல் வடிவில் வருமா? என்று கடல் கடந்த நாடுகளில் இருந்தெல்லாம் கேள்வி கேட்கும் வாடிக்கையாளர்கள் நிறைந்த தளம். கிண்டி முடிக்கும் முன்பே கியூவில் நின்று வாங்கும் ஹல்வா இது. நாரிப்போகும் சரக்கல்ல. நாளைக்கு இருப்பு வைத்தாலும் குணம் , மணம் மாறாமல் விற்கப்படும் விஷயம் இது. இதன் கற்பூர வாசனை என்பது .....

ஆமா நான் ஒன்னு கேட்கின்றேன் அவங்களுக்குன்னு ஒன்னு இருக்குரப்போ மேலே போடவேண்டியதை மேலே போட்டுக்கொள்ளட்டும் கிழே போட வேண்டியதை கிழே போட்டுக்கொள்ளட்டும் யார் இவர்களை தடுத்ததாம் நாம் யாரவது யோசனை கேட்டோமா என்ன ?

N.A.Shahul Hameed said...

அஸ்ஸலாமு அலைக்கும்!
கடை விரிக்கவில்லை - ஆனால்
மடை திறந்து விட்டீர் - இன்று
எடை போட்டுப் பார்த்தால்
விடை கிடைக்கும் - இங்கு
N.A.Shahul Hameed

Anonymous said...

அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

அன்பிற்குரிய சகோதரர் அதிரைக்காரன்:

நேரடியாக நெறியாளர் என்ற பொறுப்பில் இருக்கும் என்னைச் சுட்டும் உங்களின் குற்றச்சாட்டுகளுக்கு அவசியம் பதில் அளிப்பது எனது கடமை, அதுவும் பொதுவில் வைக்கப்பட்ட பகிங்கர குற்றச்சாட்டுகளுக்கு.


//1) தனிநபர் தாக்குதல் பின்னூட்டங்கள் உடனடியாக நீக்கப்படும் என்ற தளநெறியாளர் முந்தைய பதிவில் என்னைச் சாடும் பின்னூட்டங்களை மட்டும் விட்டுவைத்தது நெறியாளர் பார்வைக்கு வரவில்லையா? தொலைபேசி தெரிவித்த பிறகும் அடுத்த இருநாட்கள் விட்டுவைக்கப்பட்ட அவை தற்போது தளத்தில் இல்லை.//

நீங்கள் எனக்கு ஃபோன் செய்த பின்னர் சுட்டிய கருத்துக்களை கருத்துப் பெட்டி முடக்கம் செய்த பின்னரும் நீக்கம் செய்தேன், அதோடு என்னுடைய பெயரிட்டு சகோதரர் ஷாஃபி எழுதியிருந்த பின்னூட்டத்தில் இருந்த தனிமனித சாடலை நான் கவனிக்காமல் இருந்ததே அது முற்றிலும் எனது கவனக்குறைவே அன்றி வேறு எவ்வித உள்நோக்கமில்லை. அவ்வாறு ஏதும் உள்நோக்கம் இருந்திருந்தால் ஏனைய பின்னூட்டங்களை நீக்கியிருக்க மாட்டேன் எக்காரணத்தைக் கொண்டும்.

//2), 3) நேரில் பேசும்போது நயமாகப்பேசி வாய்ப்புகிடைக்கும்போது வசைபாட களம் அமைத்ததால் முன்னது நடிப்பு.//

தம்பி, அன்று மட்டுமல்ல என்றுமே நயமாக பேசுவது எனது இயல்பு அதறகாக வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வசை என்பது எனது பண்பல்ல, நடிப்பும் அல்ல அன்றைய அதே இரவு அலைபேசி உறையாடலில் அல்லாஹ்வுக்காக பொருந்திக் கொள் உளமாற செய்ததல்ல என்று சொன்னேன் மறக்க வேண்டாம்.

//4) அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம் என்று சொல்லி அவதூறுகளால் அநீதி இழைக்கப்பட்டவனின் உள்ளக்குமுறலின் வலிமை தெரியாதவர்களா தளநெறியாளர்கள்? சகமுஸ்லிமின் கண்ணியம் காப்பதும் கடமை என்ற நெறிதவறியதால் நெறியற்றோர். //

அவசியம் சக முஸ்லீமின் கண்ணியம் காப்பது கடமை நீங்கள் உணர்ந்திருப்பது போன்றே நானும் உணர்ந்திருக்கிறேன் அதற்காக வருந்தவும் செய்கிறேன், அதன் வலி என்னவென்றும் நன்கறிவேன். நெறியற்றோர் என்று தீர்ப்பளிக்க உள்ளங்களில் உள்ளதை பிளந்து பார்த்தது போன்ற குற்றச் சாட்டு கண்டிக்கத்தக்கது.

//4) ப்ளாக்கரில் பரிச்சயம் உள்ளவன் என்றமுறையில் கவனித்தது. முந்தைய பதிவில் அவதூறுகளையும் சேர்த்து 75 பின்னூட்டங்கள் இருந்தன. பின்னூட்ட பெட்டி முடக்கப்பட்டதால் பதில்கொடுக்க வழியமைக்கச்சொல்லி கேட்டும் மறுத்துவிட்டு. என்மீதும் அபுசுஹைமாமீதும் அவதூறு சொல்லும் பின்னூட்டத்தை நீக்காமலும். அபுசுஹைமாவின் பதில் பின்னூட்டத்தை நீக்கியும் 62 பின்னர் 61 என்று திரைமறைவில் (பிளாக்கரிலுள்ள வசதி இது) தேவையான பின்னூட்டத்தை வெளியிட்டு மூடப்பட்ட பின்னூட்டபெட்டியில் வசதிக்கேற்ப விளையாடியது.//

மூடிய பின்னூட்டத்தை திரும்ப திறந்து விடுங்கள் என்று கேட்டது உண்மை, அதனை எப்படி மீண்டும் திறப்பது மூடியது சரியே என்று பதிலுரையும் அளித்தேன். கருத்துப் பெட்டியை முடக்கிய பின்னர்தான் சுட்டிக்காட்டியதில் ஒவ்வொன்றாக நீக்கம் செய்தேன் அதில் விடுபட்ட ஒன்று முற்றிலும் எனது கவனக்குறைவே அதற்காக ஒட்டு மொத்த தளத்தினை குற்றமெடுப்பதும் சாடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

//இதையெல்லாம் நெறியாளர் மறுத்தால் என்னுடைய மூன்று பின்னூட்டங்களையும் நீக்கிக்கொண்டு நான் சொன்னவற்றை திரும்பப்பெறுகிறேன். தளநடத்துனர்களின் இந்தசித்துவேலை தெரியாமல் அன்பின் சபீர்காக்கா கவிவிரித்ததையே தவறான பொருளுக்கு நற்சான்றளிக்கும் இந்த விளக்கப்பதிவை மார்க்கெட்டிங் செய்ததாகச் சொன்னேன்.//

இந்த தளத்தில் பதியப்படும் கருத்துக்கள் அனைத்தும் அவசியமேற்படும்போது மட்டுறுத்தலுக்குட்படுத்துவதும், பொறுப்பில் இருக்கும் நெறியாளர் ஆளுமைக்குட்பட்டதே.

நெறியாளர் என்ற அடிப்படையில் மேற்சொன்ன விளக்கம் உங்களுக்கு மட்டுமல்ல இதனை வாசிக்கு அனைத்து வாசகர்களுக்கும், பின்னூட்டங்களில் கலந்து கொண்டு சாதக / பாதக கருத்துக்கள் பதிந்த சகோதரர்கள் அனைவருக்கும் இதுவரை போதும்.

கவனிக்க, உங்கள் நிலையிலிருந்து அதிரைநிருபர் தளத்தின் நெறியாளர் நெறியற்றவர் என்று சாடும் போக்கை நீங்களே உணர்ந்து என்னோடும் மனம் விட்டு பேசுவீர்கள் இன்ஷா அல்லாஹ் ! அனுபவம் வாய்ந்த வலைஞராகிய உங்களுக்கு அதிகம் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.


ஆரோக்கியத்தை பேணிக் கொள்ளுங்கள்,

வஸ்ஸலாம்,

நெரியாளர்,
என்று அறியப்படும் m.nainathambi

Anonymous said...

Dear Adiraikkaaran,

What else can be more important than the friendship in between both of us and the brotherhood among all our town mates? A street quarrel amongst our town mates? An accusation pointing at you or me? Neither of them my dear.

It is like, you asked me a question and I answered to that. Now, if any of my words sound hurting you, I apologies for that.

I want you to take care of your health and lets discuss any disputed issues on some other occasions, preferably in person.

With love to Jamaludeen.

Sabeer

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி ஜமாலுத்தீன் அவர்களுக்கு,

முதலில் நலம் பேணுங்கள் மற்றவை பிறகு பேசலாம். நமக்குள் பேச ஒரு தடையும் இல்லை. தம்பி கிரவுன் உரிமையுடன் உங்களிடம் வைத்துள்ள கோரிக்கை காணும்போது மிகவும் மகிழ்வாக இருக்கிறது.

விரைவில் நலம்பெற இறைஞ்சுகிறேன்.

Yasir said...

எங்கள் ஆஸ்தான கவியின் கவிவரிகள் கண்ணியமான வகையில் ”அதிரை நிருபர்” பற்றி உண்மையைச்சொல்லி அ.நி.யை நியாய / அநியாயத்தை எந்த வித பாகுபாடின்றி ,ஒரு சாரர்க்கு வேண்டி சாய்ந்துபோகாமல் நிமிர்ந்து எப்போதும் மிடுக்க்காக நடைபோட்டுக்கொண்டிருக்கும்/கொண்டிருக்கின்றது என்பதை அழகாகச் சொல்லி இருக்கின்றது

//எலிக்குஞ்சல்ல இது
இரைக்காகச் சிக்கிப்
பொறிக்குள் மாட்ட
அக்னி குஞ்சு// 1000% கரெக்க்ட்

KALAM SHAICK ABDUL KADER said...

மறப்போம்; மன்னிப்போம்
உரிமைக்குக் குரல் கொடுப்போம்
உறவுக்குக் கை கொடுப்போம்

Meerashah Rafia said...

//மூத்தவர்கள் மேல்பார்த்து
இளையவர்கள்
எழுதிப் பழகும்
இடம்//

அதிரை
எழுத்தாளர்கள்
பயணிக்க வாய்த்த
குதிரை//
சிறப்புகளில் சிறந்தவை

//இது
யாருக்கும் எதிரல்ல
ஊருக்கும் புதிரல்ல//
சிறப்பு கவனம் தேவை

அதிரைக்காரன் சொன்னது…
வெரும் புகழ்ச்சிகள்தான் மகிழ்ச்சி தரும் விமர்சனமென்றால். மன்னிக்கவும் என்னிடம் அதற்கு இருப்பில்லை

என் நிலைபாடு

நெறியாளர் சொன்னது…
//சகோதரர் ஷாஃபி எழுதியிருந்த பின்னூட்டத்தில் இருந்த தனிமனித சாடலை நான் கவனிக்காமல் இருந்ததே அது முற்றிலும் எனது கவனக்குறைவே அன்றி வேறு எவ்வித உள்நோக்கமில்லை.//


அந்த பின்னூட்டத்தை நீக்கச்சொல்லி நானும், மன உளைச்சலுக்கு ஆளான பாதிக்கப்பட்ட சகோதரும் அனுப்பிய நாள் மற்றும் நேரம் :
Thu, Sep 13, 2012 at 5: 22 PM
Thu, Sep 13, 2012 at 8:35 PM
Thu, Sep 13, 2012 at 10:48 PM
Fri, Sep 14, 2012 at 9:37 AM
Fri, Sep 14, 2012 at 12:39 PM
Fri, Sep 14, 2012 at 4:49 PM
Fri, Sep 14, 2012 at 8:33 PM

மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து மின்னஞ்சல்களும் அந்த "தனிமனித சாடலை" பற்றிதான் பேசப்பட்டது. சில மின்னஞ்சலில் எந்தை பின்னூட்டம் குரிப்பிடப்படுகின்றதென்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.. இந்த மின்னஞ்சல்களுக்கு இடையில் நெறியாளர் வந்து வேறு ஒருவர் வேறொரு விசயமாக பேசியதற்கு பதிலளித்து சென்றிருந்தார்.. மறுபடியும் என் கேள்விக்கு பதில் எங்கே என்று கேட்கப்பட்டது.. குறைந்த பட்சம் "எந்த கேள்வி என்றாவது கேட்டிருக்களாம்".. மௌனமாகவே அந்த மின்னஞ்சல் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு அந்த பின்னூட்டம் எத்தனை மணிக்கு நீக்கப்பட்டதென்றும் தெரியவில்லை..நீக்கபட்டதென்று மின்னஞ்சலும் வரவில்லை.. கவனக்குறைவால் ஏற்பட்டதாக மன உளைச்சலுக்கு ஆளானவர்களிடம் ஆறுதல் மின்னஞ்சலும் போய் சேர்ந்ததாக தெரியவில்லை..

இவைகளை வைத்து நீங்கள் வேண்டுமென்றேதான் செய்தீர்கள் என்று ஆதாரம் காட்ட வரவில்லை..இவை அனைத்தையும் தாண்டி கவன குறைவு ஏற்பட்டிருப்பின் மிக அதிக கவனம் தேவை என்பதே என் வேண்டுகோள்..

Vavanna (உமர்தம்பிஅண்ணன்) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சபீர் காக்கா நீங்கள் அவிழ்த்துவிட்ட குதிரை தடு மாற்றம் இல்லாமல் பயணிக்கின்றது.அதை கண்டு ரசிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். வாழ்த்துக்கள்.

இது புகழ்ச்சி அல்ல. .

உண்மையான மகிழ்ச்சி.

லெ.மு.செ. அபுபக்கர்

Ebrahim Ansari said...

Ref to Comments of Shameed. blog-post 4878

இப்படி ஒரு நல்ல அன்புக்கதை உங்களுக்கிடையில் இருந்து இருக்கிறதா? எனக்குத் தெரியாது.

நீரடித்து நீர் விலகாது.

வரலாறு சொன்ன சாகுலுக்கு நன்றி.

Unknown said...

ச‌கோ. அதிரைக்கார‌ர், Meerashah ம‌ற்றும் அதிரை நிருப‌ரை குற்ற‌ம் காணும் ச‌கோத‌ர‌ர்க‌ளுக்கு:‍‍

உங்க‌ளுக்கு பின்னூட்ட‌த்தில் ப‌தில் கொடுப்ப‌த‌ற்கு வாய்ப்பு கொடுக்க‌ப்ப‌ட‌வில்லையே என்ப‌தை அறியும்போது ஆச்ச‌ரியமாக‌ இறுக்கிறது.!!! :)

ஆனால் அதே ச‌ம‌யம் தாங்க‌ள் ந‌ட‌த்தும் இணைய‌ த‌ள‌த்தில் ஒரு ஆலிமைப்ப‌ற்றி "ச‌ங்" க‌ம் கூறிய குற்ற‌ச்சாட்டுக‌ளுக்கு ப‌தில் அளிக்க‌ பின்னூட்ட‌ப்பெட்டி ஏன் திற‌க்க‌ப்ப‌ட‌வில்லை? " Double Standard"????

ஹைத‌ர் அலீ ஆலிம் அவ‌ர்க‌ளும் சித்தீக் ப‌ள்ளியும் வெளியிட்ட‌ த‌ன் நிலை வில‌க்க‌த்தை த‌ங்க‌ளுடைய‌ ப‌த்திரிக்கை த‌ர்ம‌ம் காக்கும் நெறியாள‌ர் ஏன் இன்னும் வெளியிட‌வில்லை? இதுதான் த‌ங்க‌ளுடைய‌ ப‌த்திரிக்கை த‌ர்ம‌மா? "Double Standard" !!!

இதுதான் தாங்கள் கூறும் அல்ல‌து க‌ருதும் நெறியா?

Double Standard ல் ஜார்ஜ் புஷ்ஷை தாங்க‌ள் மிகைத்து விட்டீர்க‌ள்

Meerashah Rafia said...

//ச‌கோ. அதிரைக்கார‌ர், Meerashah ம‌ற்றும் அதிரை நிருப‌ரை குற்ற‌ம் காணும் ச‌கோத‌ர‌ர்க‌ளுக்கு:‍‍//
நிறைகள் மட்டும்தான் வாழ்கையா?என்ன உலகமடா இது..
என் பின்னூட்டத்தை படித்த உங்களுக்கு வேண்டுமென்றால் குறையாக தெரிந்திருக்கலாம்.. இந்த தள நிர்வாகிகளுக்கு இனி வரும் காலங்களில் இத்தகைய குறைகளை நிறைகளாக மாற்ற உதவக்கூடும்..
நிறைகளையும் சுட்டிக்காட்டிருந்தேன். அதையும் படித்து என் எழுத்தக்களில் உள்ள குறைகளை மட்டும் கண்டுபிடிப்பதை தாங்கள் தவிர்க்கலாம்..

நிறைகளை மட்டும்தான் எழுதவேண்டும் என்ற நிபந்தனை இங்கு இல்லை என்பது நிரூபர் ஆரம்பத்த நாளிலிருந்து எமக்கு தெரியும் என நம்புகின்றேன்.. 2 1/2 வருடமாக பல்வேறு பதிவுகளில் கிட்டத்தட்ட 100க்கணக்கான நிறைகளை பின்னூட்டமாக பதிந்திருக்கின்றேன்.. 4,5 குறைகளை பதிந்ததில் சிலதை மட்டும் புதிதாக வந்துள்ள நீங்கள் (என்னோடு ஒப்பிடுகையில்) பார்க்கநேரிட்டது துரதிஷ்டம் என்றுதான் கூறவேண்டும்.. நீங்களும் என் குறைகளும் மட்டும் காணாமல் நிறைகளையும் காணுங்கள் என்று வேண்டுகோள் வைக்கின்றேன்.. தேவைபடின் நிருபர் நிர்வாகிகளையோ, பதிவர்கலையோ தொடர்புகொண்டு நான் கூறுவதெல்லாம் உண்மையா என்று ஊர்ஜிதம் செய்துகொள்ளுங்கள்.. பொய் என்றால் என்னிடம் தாராளாக முறையிடலாம்..


//ஆனால் அதே ச‌ம‌யம் தாங்க‌ள் ந‌ட‌த்தும் இணைய‌ த‌ள‌த்தில்..//
எந்த தளத்தையும் நான் நடத்தவில்லை..

அதுசரி..இவ்ளோ அழகா கேள்வி கேட்குகிறீர்களே உங்கள் மின்னஞ்சலையும் சேர்த்துதானே 5 நாட்களுக்குமுன் பின்னூட்ட நீக்கத்தை பற்றி எழுதிருந்தேன்..பதிலே காணோமே!! Don't worry I am not going to ask 'r u double standard'.. Just leave it..Wasalaam..

Yasir said...

// இந்த தள நிர்வாகிகளுக்கு இனி வரும் காலங்களில் இத்தகைய குறைகளை நிறைகளாக மாற்ற உதவக்கூடும்.// சகோ.மீராஷா தங்களின் ஆலோசனைக்கு நன்றி....ஆனால் அது அதிரை நிருபருக்கு தேவையில்லை...அ.நி-யின் ஒரு சில முகங்கள் மட்டும்தான் உங்களுக்கு தெரியும் என்று நினைக்கின்றேன்....அ.நி.க்கு நெஞ்சலும்பு,முதுகெலும்பு,விலா எலும்பு,கவசம் என்று மெத்த படித்தவர்கள்,மார்க்கமேதைகள்,அனுபவசாலிகள்.சமுதாயத்திலும்,வாழ்கின்ற நாட்டிலும் உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களும் இருக்கின்றார்கள்

அவர்களுக்கு தெரியும் “குறைகளை களைவதும்,நிறைகளை நிரப்புவதும்“


Meerashah Rafia said...

சகோ. Yasir சொன்னது…
//சகோ.மீராஷா தங்களின் ஆலோசனைக்கு நன்றி....ஆனால் அது அதிரை நிருபருக்கு தேவையில்லை...//

நன்றிக்கு நன்றி.. ஆலோசனைகள் உங்களுக்கில்லை நம் அதிரை நிரூபருக்குத்தான் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.. என்னுடைய வெளிப்படையான பல கருத்துக்கள் தள நிருவாகிகளால் பல சமயங்களில் பாராட்டப்பட்டிருக்கின்றன.. இனி தேவையில்லைஎன்றால் அவர்களே கூறட்டும்..

நிற்க..
சிறு உதாரணத்திற்கு இந்த சுட்டியையும் பார்க்க..
http://adirainirubar.blogspot.com/2010/12/logo.html?showComment=1293872018309#c8027336033477266788
(வெளிப்படையான கருத்துகளை வரவேற்பது நிரூபரில் ஒரு தனிச்சிறப்பாக இருந்து வந்தது நிருபர் பயணத்தில் ஆரம்பம் முதல் பயணிக்கும் உங்களுக்கு நான் சொல்ல தேவைப்படாது என எண்ணுகின்றேன்)

ZAKIR HUSSAIN said...

To Brother Yasir & Brother Meerasha...Just leave it, this is my humble request.

sabeer.abushahruk said...

தம்பி மீராஷா,

தம்பி யாசிர், அதிரை நிருபரின் நிர்வாகக் குழுமத்தில் ஒரு ஸ்திரமான உறுப்பினர் என்பதை தங்களுக்குத் தெரியப் படுத்திக் கொள்கிறேன்.

"இதை அறிவிக்க நீங்கள் யார்?" என்று நீங்கள் கேட்கப்போகும் கேள்விக்கு என் பதில்,"நான் அதிரை நிருபரின் கவிதைப் பிரிவுக்கு எடிட்டர்"

மேற்கண்ட இரண்டு கருத்துக்களையும் மறுக்காதவரை, அதிரை நிருபர் ஆமோதிக்கிறது என்றே கொள்வோமே.

zakir, i am not arguing, but informing bro Meerasha as above.

sabeer.abushahruk said...

வாசித்த விழிகளுக்கும்
சில வரிகளிட்ட விரல்களுக்கும்
நன்றி!

(க்யூட் ஏற்புரை உபயம்: தம்பி என் ஷஃபாத்)

Meerashah Rafia said...

Bro.ZAKIR HUSSAIN சொன்னது…
//To Brother Yasir & Brother Meerasha...Just leave it, this is my humble request.//

நன்றி சகோ.Zakir Hussain.
-ve பின்னூட்டங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலை மக்கள் மனதில் உருவாகவேண்டும் என்ற ஆசையுடன் தங்கள் வேண்டுகோளுக்கினங்க நான் கட்டுப்பட்டு கைவிடுகின்றேன்..ஜஜாகல்லாஹ் ஹைர்..

KALAM SHAICK ABDUL KADER said...
This comment has been removed by the author.
KALAM SHAICK ABDUL KADER said...

காணுதற்குக் கண்ணிருத்தல் போலே - நல்லறம்
பேணுதற்கு மனிதநேயத் தாலே
பூணுதற்கு நல்லொழுக்கம் அணியாம் - என்றும்
பொதுநலத்துக் குதவிடுவோன் மணியாம்
மனிதநேயம் தனைவளர்த்தல் சிறப்பு - அறத்தின்
மாண்புணர்ந்து பெருக்குதல் நல் பொறுப்பு
ஏந்துபுகழ் நிலைத்தலே நம் இருப்பு! - பிறரை
இழிவு செய்யும் மடமைக்கு நம் மறுப்பு!
கவிதை செய நல்லுணர்வே தூண்டும்! - புதுமை
கருத்துணர்த்தும் முறைமையிலே வேண்டும்!
செவிக்கு விருந் தளிப்பதிலே உண்மை - கூடச்
சிறப்பிருந்தால் சிந்தை சேரும் தண்மை.

Yasir said...

ஜாஹிர் காக்கா இக்கருத்து மட்டும் பிலீஸ்
சகோ.மீராஷா தங்கள் கருத்தில் ஒரு வித மான”தொனி” இருப்பதாக உணர்ந்ததால்தான் எழுதினேன் அதனை // நம் அதிரை நிரூபருக்குத்தான் // நீங்கள் எழுதிய பிறகு அந்த எண்ணம் என்னிடமிருந்து அகன்று விட்டது....தொடர்ந்து உங்கள் கருத்துகளை எழுதுங்கள்

Unknown said...

இணைய தளங்களில் நேர்மையான கருத்துக்கள் முக்கியமா? கருத்து சொல்லுபவன் முக்கியமா? அப்படி என்றால் கருத்து சுதந்திரம் என்றால் என்ன என்பதை அதிரைகாரன், மீராசா போன்றவர்கள் விளக்குவார்களா?
இவன் யார் அவன் யார் என்று தேடி நான் முந்தைய பதிவுகளில் கேட்ட நியாயமான கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை. நியாயமான கருத்து சொல்லும் இவன் நிச்சயம் அவனாகத் தான் இருப்பான் என்று கருத்தை கருத்தால் சந்திக்க பயம் கொண்டு. நீ யார்? அலைபேசி எண், வீட்டு முகவரி தரமுடியுமா? என்று மீண்டும் மீண்டும் பல வழிகளில் கேட்டு திரிவது காமெடி என்று நியாயத்தை விரும்பும் மக்களுக்கு கோபம் வருவைதை விட சிரிப்பு தான் வருகிறது.

ஊரில் நடைபெற்று வரும் அநீதிக்கு எதிரான இந்த இணைய தளத்தில் வெளியான சீரியஸான செய்திகளை, திட்டமிட்டு ஒரு சில சகோதரர்கள் வேண்டுமென்றே திசை திருப்பி அவைகளை காமெடி செய்திகளாக்கி வெற்றி கொண்டோம் என்று மார்த்தட்டி கொள்ளலாம். ஆனால், ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கு இழைப்பட்டுள்ள அநீதிக்கு துணை நின்றவர்களுக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அதற்கான தண்டனையையை இவ்வுலகில் தராவிட்டாலும் மறுவுலகில் நிச்சயம் கொடுப்பான.

Unknown said...

meerashah சொன்னது…

//ஆனால் அதே ச‌ம‌யம் தாங்க‌ள் ந‌ட‌த்தும் இணைய‌ த‌ள‌த்தில்..//
எந்த தளத்தையும் நான் நடத்தவில்லை.. //

இணைய‌ த‌ள‌ம் ந‌ட‌த்துவதாக‌ சொன்ன‌து த‌ங்க‌ளை அல்ல‌. அ.எ ந‌ட‌த்தும் ச‌கோத‌ர‌ர்க‌ளையே. அபூசுஹைமா அவ‌ர்க‌ளும், அதிரைக்கார‌ர் அவ‌ர்க‌ளும் தான் இத‌ற்கு ப‌தில் த‌ர‌வேண்டும். ஒரு சார்பு செய்தியை வெளியிடுவ‌து ம‌ட்டுமே நியாயம் அத‌ற்கு ப‌தில் கொடுப்ப‌தை போட‌வும் மாட்டோம், யாரும் அத‌ற்கு ப‌தில் கொடுக்க அனும‌திக்க‌வும் மாட்டோம் என்று கூறுவ‌து போல்தான் இவ‌ர்க‌ளுடைய‌ செய‌ல்க‌ள் அமைந்திருக்கிற‌து.

வாயில் சிக‌ரெட் வைத்து ஊதிக்கொண்டும், சீர‌ழிக்கும் சினிமாவையும் சீரிய‌லையும் பார்த்துக்கொண்டு அல்லாஹ்வுக்கும் அவ‌ன் ற‌ஸூலுக்கும் ஆத‌ர‌வாக‌ எழுதுவதாக‌ என்னிக்கொண்டு எழுத‌ நினைப்ப‌வ‌ர்க‌ளின் எழுத்துக்க‌ளும் க‌ருத்துக்க‌ளும் ஷைத்தானுக்கு ஆத‌ர‌வாக‌த்தான் முடியும் என்ப‌தை அவ‌ர்க‌ளின் செய‌ல்க‌ளே எடுத்துக்காட்டாக‌ இருக்கிறது.

அதுசரி..இவ்ளோ அழகா கேள்வி கேட்குகிறீர்களே உங்கள் மின்னஞ்சலையும் சேர்த்துதானே 5 நாட்களுக்குமுன் பின்னூட்ட நீக்கத்தை பற்றி எழுதிருந்தேன்..பதிலே காணோமே!! Don't worry I am not going to ask 'r u double standard'.. Just leave it..Wasalaam..

Double standard யார் என்ப‌தை ஊரில் உள்ள‌ அனைவ‌ரும் அறிவார்க‌ள். உங்க‌ளுக்கு அது தெறிய‌வில்லை என்றால் " You are out of touch from reality"
உங்க‌ளுக்கு அது தெறிய‌வில்லை என்றால் ஒரு ஹ‌தீதின்ப‌டி த‌ங்க‌ளை யார் என்று தெறிந்து கொள்ள‌ அடுத்த‌வ‌ர்க‌ளிட‌ம் விசாரிப்ப‌து மேல்.

Unknown said...

PLEASE DISSEMINATE THIS MESSAGE:-

What was the motive behind the producer of controversial film? When he contacted Rueters by phone he said
1. “ I am ISRAELI JEW living in the US. This movie is funded by wealthy ISRAELI Real estate developers”.
2. Now the truth is he is not a Jew and he is not from Israel. He said the fund came from His wife’s family in Egypt.
So what is the truth?. If second statement is true then This filthy guy wanted to stroke a war between Jews and Muslims in general and Between Israel and Muslim Countries in particular.
He has a very broad hidden agenda to massacre Jews. SO IT IS DUTY OF JEWS, JEWISH ORGANISATIONS AND ISRAEL TO BRING HIM TO JUSTICE. IT IS DUTY OF THE US TO PUNISH HIM FOR ANTISEMITIC HATE AGENDA.
IT IS DUTY OF ISRAELI GOVERNMENT TO PUNISH NAKOULA BASILE AND HIS SON FOR PRODUCING SUCH FILM WITH HIDDEN AGENDA TO KILL MANY JEWS AND BRING MORE HATRED TOWARDS JEWS.

Please share this message, INSTEAD OF WE PROTESTING AND NOT ACHIEVING THE REAL OBJECT, LET JEWS AND THEIR GOVERNMENT WORK ON BEHALF OF US.

U.ABOOBACKER (MK) said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அதிரைக்காரர் பலருக்கு பின்னூட்டமிடுபவர் யார் என்று தெரியாததால் அவர் அனாமத் பேர்வழியாகிவிடுவாரா? பெயர், விலாசம், ஊரில் விளிக்கும் பெயருடன் எழுதும் என்னைப் பற்றி அதிரைக்காரனுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் தம்பி அபூசுஹைமா மற்றும் இந்த தள நிர்வாகிகளுக்கு தெரியும். பின்னூட்டமிடுவர் யாராக இருந்தால் என்ன? அவர்கள் சொல்லும் கருத்தில் நியாயம் இருக்கிறதா அவதூறு இருக்கிறதா என்று மட்டும் பார்க்க வேண்டும். சம்சுல் இஸ்லாம் சங்கம் சம்பந்தப்பட்ட முந்தைய பதிவில் கருத்திட்ட இரு சகோதரர்களின் பின்னூட்டத்திற்கு பதில் சொல்ல இயலாமல் அனாமத், போலி என்று திசை திருப்புகிறார்கள். அவர்கள் யார் என்பதை அறிந்து கொள்வதில் மிகவும் சிரத்தை எடுப்பது அறிய முடிகிறது.

சும்சுல் இஸ்லாம் சங்கத்தில் தவறான செயலுக்கு எதிராக கருத்திடும் சகோதரர்களுக்கும், ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பயானுக்கு வீடு தர முன்வரும் சகோதரர்களுக்கும் போன் செய்து மிரட்டி தரக்குறைவாக பேசுகிறார்கள். அவர்களின் மிரட்டலுக்கு பனியாத சகோதரர்களின் தந்தை, மாமனார், சம்பந்தி போன்றவர்களிடம் சொல்லி குடும்பங்களில் குழப்பதை ஏற்படுத்தும் ஈனச் செயலை செய்கின்றார்கள். அதுவும், சமுதாய நலனில் அக்கரை உள்ளவர்கள் என்று சொல்லப்படுபவர்களால் செய்யப்படுவது தான் வேதனை.

இவைகளை ஆதாரத்துடன் எனக்கு தெரியவந்தும் வாய் மூடி இருப்பது குறித்து அல்லாஹ் மறுமையில் என்னிடம் விசாரிப்பானே என்ற பயம் தான் 'SILENT READER' ஆக இருந்த என்னையும் எழுத தூண்டியது.
பொது வலைதளங்களில் தன் அறிக்கைகளை வெளியிட்டு இளைஞர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாத சம்சுல் இஸ்லாம் சங்கத்தினர், கண்மூடித்தனமாக தங்களை ஆதரிப்பவர்கள் மூலம் பலருக்கு மின்அஞ்சல் அனுப்புகிறார்கள். சுமூகமாக பிரச்சினைகளை தீர்க்கும் சாத்தியக்கூறுகளை சிந்திப்பதாக தெரியவில்லை. சமூக ஒழுக்கங்களுக்கு, நேர்மையானவர்களைக் கொண்ட சங்கம் போன்ற அமைப்பு தேவை என்பதை மறுப்பதற்கில்லை. என்றாலும், ஒரு சிலரின் அரசியல் விளையாட்டுக்கு உடன்படும்போது அனைத்து மக்களும் கட்டுப்படுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இதுவரை எடுத்த முடிவுகள் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் அனைத்து நிர்வாகிகள், உறுப்பினர்களில் பெரும்பான்மை முடிவாக இல்லாமல், ஒரு சிலரின் காழ்ப்புணர்ச்சியினை தீர்த்துக்கொள்ள எடுத்த அரசியல் தான் என்பதை அறியலாம். அறியாமை காலம் முதல் இன்று வரை அதிகாரவர்க்கதினருக்கு அஞ்சாமல், அல்லாஹ்வுக்கு மட்டும் அஞ்சும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும் என்பதை குர்ஆன் ஹதீஸ் மூலம் அறியலாம். அவர்களை எந்த சக்தியாலும் பணிய வைக்க முடியாது.

எனவே எதிர்ப்பவர்களும் நம் சகோதரர்கள்தான் என்பதால் சங்பரிவார்கள் சொல்வதைபோல பயங்கரவாதிகள் என்று அவதூறு பரப்பாமல் நல்ல தீர்வு ஏற்பட வழிவகுக்க வேண்டும். பிரச்சினைகளை இரு தரப்பினரும் ஏற்று கொள்ளும் சகோதரர்களை கொண்ட சமாதானக்குழு அமைத்து முதலில் சம்சுல் இஸ்லாம் சங்கம், சித்தீக் பள்ளி, ஹைதர் அலி ஆலிம் ஆகியோர்களுக்கிடையே சமரசம் செய்து வைத்து ஊர் ஒற்றுமைக்கு வழிவகுக்க வேண்டும். சித்தீக் பள்ளி சொத்து பிரச்சினையை சங்கங்களோ அல்லது ஆலிம்களோ தீர்க்க இயலாத சூழ்நிலை நிலவுவதால், நீதிமன்றத்திற்கு சென்று நம் சமுதாய பொருளாதாரத்தை வீணடிக்கும் நிலைதான் உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் அல்லாஹ்வின் தண்டனைக்கு அஞ்சி முடிவு எடுத்தால், ஈருலகிலும் கண்ணியம் கிடைக்கும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழியை கொடுப்பானாக.

வஸ்ஸலாம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு