Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வேவ்ரைடர் விமானம் ! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | September 28, 2012 | , , , , , ,


ஒலியை விட ஆறு மடங்கு விரைவாக (காற்றில் ஒலியின் வேகம் வினாடிக்கு 343 மீட்டர் ஆகும்) பறக்கக்கூடிய ஒரு விமானத்தை உருவாக்கி  அதற்கு (முந்தைய கண்டுபிடிப்பு சூப்பர் சானிக்) இப்போ ஹைபர்சானிக் விமானம் (சூப்பர் மார்க்கெட், ஹைப்பர் மார்க்கெட் என்பது போல்தான்)   என்று பெயரும் வைத்து பரிசோதனை செய்தபோது அது பசிஃபிக் பெருங்கடலில் விழுந்து விட்டது (ஹைபர்சானி(பி)க் பசியால் விழுந்ததா?). அங்கே விழுந்தது விமானம் மட்டும் அல்ல அதனோடு ஒரு பெரும் தொகை டாலரும்தான்.


அமெரிக்க படையினரின் பயன்பாட்டுக்காக சோதிக்கப்பட்ட அந்த வேவ்ரைடர் விமானத்தால் ஒலியை விட ஆறு மடங்கு வேகத்தை எட்ட முடியவில்லை. அப்படி எட்டியிருந்தால் அரை மணி நேரத்திற்கு பிறகு சாகடிக்கப்பட வேண்டிய அப்பாவிகள் அரை மணி  நேரத்திற்கு முன்பாகவே அமெரிக்கா படைகளால்  சாகடிக்கப்படுவார்கள்.

வேவ்ரைடர் விமானத் திட்டத்தில் இரண்டாவது முறையாக ஏற்பட்ட தோல்வி.  கடந்த ஆண்டும் இதே போன்று ஒரு சோதனை முயற்சியும் தோல்வியடைந்தது. இந்த வேவ்ரைடர் விமானம் புறப்பட்ட 31 விநாடிகளில் அதுவும்  பசிஃபிக் கடலுக்குள் விழுந்து விட்டது (இது பசிஃபிக் கடலா அல்லது பசி(யுடனிரு)க்கும் கடலா?).

பி-52 போர் (இந்த விமானம் gulf-war நடந்தபோது அதிக அளவு பயன்படுத்தப்பட்ட விமானம் நீண்ட தூரம் பறந்து சென்று குண்டு வீசக்கூடிய திறன் படைத்த விமானம். B50, B52 இப்படி 'B'யில் ஆரம்பிக்கும் விமானங்கள் குண்டு வீசக்கூடிய விமானங்கள். F15, F16 என்று 'F'யில் ஆரம்பிக்கும் விமானங்கள்  வானில் சண்டை போட கூடிய விமானங்கள்). விமானத்தில் இறக்கையில் இணைக்கப்பட்ட இந்த வேவ்ரைடர் 50,000 அடி உயரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு வானில் இருந்து ஒரு ராக்கெட் உதவியுடன்  வானில் உந்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டது.


அவ்வாறு உந்தப்படும் வேவ்ரைடர் பின்னர், மணிக்கு 3,600 கிலோ மீட்டர் என்ற  வேகத்தில் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த வேகத்தை எட்ட முடியாமல்  கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்து நொறுங்கியது. அடுத்த தலைமுறை மனிதர்களை கொன்று குவிக்க  இது போன்ற வேகம் கூடிய  ஏவுகணைகளை தயாரிக்க இந்த அளவுக்கு   ஹைபர்சானிக் வேகம் தேவை என்று அமெரிக்க படைகளும் அமெரிக்க அரசும் இணைந்து பலகோடி  டாலர் செலவு செய்து வருகின்றது. அதிவேக உயர்  தொழில் நுட்பத்துக்காக அமெரிக்க இரண்டு பில்லியன் டாலர்களை செலவழித்ததாக் சொல்லப்படுகின்றது. 

இந்தத் திட்டத்தை (அப்பாவி மக்களை கொல்ல) அமெரிக்கா எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது என்பது அதற்கான செலவை பார்த்தாலே விளங்கும்.  இதே  தொழில் நுட்பத்தில் பயணிகள் விமானம் செய்தால் நியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு ஒருமணி நேரத்தில் சென்றடையலாம்.  இவற்றினால் தொடர்ந்த தோல்விகளைப் பார்த்தால் இவை இறைவனின் படைப்புகளுக்கு பொருத்தம் இல்லாத அழித்தொழிப்புக்கும் அச்சுறுத்தலுக்கும் எதிரான மக்களின் மனக்குமுறலால் என்றே கணிக்க வேண்டி இருக்கிறது.
மற்ற நாடுகளில் இரசாயண ஆயுதம் இருக்கிறது, தடை செய்யப்பட அணு ஆயுதம் இருக்கிறது என்று வலியச் சண்டைக்கு போகும் அமெரிக்கா இப்படி மனித இனத்தை  அழிக்கும் ஆயுதம் வைத்திருக்க இறைவன் மட்டும் அவ்வளவு சுலபமாக விட்டு விடுவானா?   

இன்னும் பல ஆயிரம் டாலர்களை இந்த முயற்சியில் இழக்க, உலகைப் படைத்தவனும் அவனால் படைக்கப்பட்ட அந்த பசிபிக் கடலும் துணை நிற்குமாக !

முக்கிய குறிப்பு :) இந்த பதிவில் பதியப்பட்டிருக்கும் படங்கள் இணையத்தில் எடுக்கப்பட்டது, இதெற்கென்று தனியாக சேட்டிலைட் விட்டோ, தனி விமானத்திலோ, ஆள் நடமாட்டமில்லாத இடத்திலிருந்தோ, எடுக்கப்பட்டது அல்ல, இதனை காரணம் காட்டி வேவு பிரிவு, பத்திரிகைகாரர்களின் கதவு தட்டி கூப்பிட்டு 'வாங்க வாங்க' வந்து பாருங்க என்று கடை விரிக்க மாட்டார்கள். ஒருவேளை இந்த ஆர்டிகல் தமிழில் இருப்பதால் தமிழ்நாட்டின் வேவு பிரிவுக் காரங்கதான் இதுக்கும் ஒரு கற்பனைக் கதை வைத்திருந்தால் பத்திரிக்கை, தொலைக்காட்சி காரங்களுக்கு தீனியாக இருக்கும்.

Sஹமீது

12 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...


விஞ்ஞானியாக்காவின் உயர்ந்த தகவல்கள்!

இது போன்ற அதிநுட்பமான அமெரிக்க கண்டுபிடிப்புகள் எதிர்காலத்தில் தன்னையே அமெரிக்கா அழித்துக் கொள்ள ஆயத்தமாகிறது என்றே தெரிகிறது.

மனித நேயமற்ற ஊடகத்துக்கு ஒரு குட்டு "GOOD"

sabeer.abushahruk said...

செம ஸ்பீடு
போலாம் ரை ரைட்.

Ebrahim Ansari said...

முந்தைய குறிப்புகளைவிட முக்கியக் குறிப்பு சரியான அடி மட்டுமல்ல இடி.

புரிந்தால் சரி.

Shameed said...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

//மனித நேயமற்ற ஊடகத்துக்கு ஒரு குட்டு "GOOD" //

சூப்பர் கமெண்ட்


---------------------------------------------------------------------

sabeer.abushahruk சொன்னது…

//செம ஸ்பீடு
போலாம் ரை ரைட். //


விமானத்தை கண்டுபிடித்தது ரைட் பிரதர்ஸ் என்பதால் இந்த விமானத்திற்கும் ரைட் போட்டுவிடீர்களா ?


--------------------------------------------------------------------

Ebrahim Ansari சொன்னது…

//முந்தைய குறிப்புகளைவிட முக்கியக் குறிப்பு சரியான அடி மட்டுமல்ல இடி.

புரிந்தால் சரி. //

என்னதான் அடியா இருந்தாலும் மாட்டுக்கறி அடியை மிஞ்ச முடியாது மாமா

Ebrahim Ansari said...

http://www.khaleejtimes.com/services/slideshow/film2_28092012.jpg

ALLAH IS GREAT.

ZAKIR HUSSAIN said...

இப்போதுதான் சமீபத்தில் இந்த விமானம் சம்பந்தமாக ஒரு சின்ன தகவல் பார்த்ததாக [டெலிவிசனில்] ஞாபகம். அதற்க்குள் இவ்வளவு தெளிவான விளக்கம் சாகுல் தந்தது...விமானத்தின் வேகம் மாதிரி.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
//// இன்னும் பல ஆயிரம் டாலர்களை இந்த முயற்சியில் இழக்க, உலகைப் படைத்தவனும் அவனால் படைக்கப்பட்ட அந்த பசிபிக் கடலும் துணை நிற்குமாக ! ////

//// வலியச் சண்டைக்கு போகும் அமெரிக்கா இப்படி மனித இனத்தை அழிக்கும் ஆயுதம் வைத்திருக்க இறைவன் மட்டும் அவ்வளவு சுலபமாக விட்டு விடுவானா? //// ******************************************************************

அல்லாஹூஅக்பர்! உண்மை!

சகோ. ஹமீது --- செம ஸ்பீடு!

KALAM SHAICK ABDUL KADER said...

//மற்ற நாடுகளில் இரசாயண ஆயுதம் இருக்கிறது, தடை செய்யப்பட அணு ஆயுதம் இருக்கிறது என்று வலியச் சண்டைக்கு போகும் அமெரிக்கா இப்படி மனித இனத்தை அழிக்கும் ஆயுதம் வைத்திருக்க இறைவன் மட்டும் அவ்வளவு சுலபமாக விட்டு விடுவானா? //

விரைவாகப் போய் அமெரிக்காவின் செவிகட்குள் விழுமா, இச்செய்தி?

ஏங்குகின்றோம், இறைவா!

எப்படி இப்படி அடியும் இடியும் கொடுக்கும் ஆற்றல் உங்களிடம் வந்தது?
அதிரை நிருபர் எனும் பல்கலைக்கழகம் அறிவும் துணிவும் மிக்கவர்களையே படைப்பாளர்களாகக் கொண்டுள்ளதை எண்ணிப் பார்த்தால், இத்தளத்தில் அடியேனும் ஒரு பங்களிப்பாளானாக இருப்பதை அடிக்கடி நினைவு படுத்திக் கொண்டு, அல்லாஹ்வுக்கு நன்றி கூறுகின்றேன், அல் ஹம்துலில்லாஹ்!

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அழைக்கும்.

ஹமீது காக்கா.வேவ்ரைடரை செம சூப்பரா ஓட்டி இருக்கிறீங்க எந்த நாட்டில் ட்ரைநீங் எடுத்தீங்க?

அப்படியே கொஞ்சம் வெள்ளை மாளிகை வரையிலும் ஓட்டி இருந்தால் அங்கு உள்ளவர்கள் உன்னிப்பாக பார்த்து இருப்பார்களே!

Yasir said...

"வேவ்” ரைடர் விமானத்தைபற்றி
“வாவ்” ரைட்டிங்
வாழ்த்துக்கள் காக்கா

அப்துல்மாலிக் said...

நல்ல பகிர்வு,

செலவுகள் சாக்கிரதை..

இந்த செலவுக்கு நாட்டில் ஏழ்மையில் இருக்கும் எவ்வளவோ மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் செய்யலாம், இவங்க வவுத்தெரிச்சல் சும்மா விடாது...........

KALAM SHAICK ABDUL KADER said...

சாவுகட்கு மட்டும்
வேவு பார்க்கப் போய்
காவு கொண்டது டோய்
யாவும் “அவன்” செயல்
பாவம் சும்மா விடாது
சாபம் சாம்பலாக்கும்
சர்வாதிகாரக் கும்பலுக்கும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு