அதிகம் கருத்துகளால் கதகதப்பான விவாதங்களெல்லாம் நடந்தேறியிருக்கிறது இதுவரை. இனி நம்ம மூன்றாம் கண்ணால் எழுதிய ஸாரி, எடுத்தவைகளின் முத்தாய்ப்பான பதிவுகளை ஏன் இன்னும் பதியவில்லை என்று இரண்டிரண்டாக ஏராளமான கண்கள் தேடிக் கொண்டிருக்கின்றன என்பதை இதுவரை விட்ட ராக்கெட்டிலிருந்து தகவல் வந்து கொண்டிருக்கிறது.
அதை எப்படி புறக்கனிக்க முடியும், எடுத்த படங்களை பதிய தவறினால், ஏன் இன்னும் பதியவில்லை ? அங்கே பதிவு போடுறது இல்லையா ? அப்படின்னா டேர்ம் சரியில்லையா ? அவுங்கல்லாம் அப்புடித்தான் ! நம்பாதியா ஹாக்கா, வாங்க ஹாக்கா.... இப்புடியெல்லாம் காதுல விழுற மாதிரி பிரம்மையா இருக்கு. இதுக்குமேல் சும்மா இருந்தா சரியா வராது எடு கேமராவை போடு போட்டோவைன்னு வந்துட்டேன்.
மழை வருமா வாராதான்னு ஊரில் பட்டிமன்றமே வைக்காலம்
இப்புடியே போய் லெஃப்ட்டுல திரும்புனா சித்திக் பள்ளி வரும்ன்னு யாரைக்கேட்டாலும் சொல்லுவாங்க !!
இன்டெர்நெட் வருகை அதில் மின்னஞ்சல் கடுதாசிகள் வந்ததுலே வெளிநாடு வாழ் குறிப்பாக வளைகுடா வாழ் அதிரையர்களின் மெயில் பாக்ஸ் அடிக்கடி நிறம்புகிறது. ஆனால் அன்றைய கடிதப் போக்குவரத்தின் ராக்கெட்டான மரியாதைக்குரிய தோனகானா அவர்களின் மெயில் பாக்ஸ் இதுவரை ஃபுல் ஆகாமலே இருக்கு. அவசியம் நம் அனைவராலும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு வி.ஐ.பி.இவர்கள்.
மேலே புறாக்களின் பார்கிங் ஏரியா, கிழே ஆட்டோக்களின் பார்கிங் ஏரியா !
உள்ளே வெளியே நடப்பவைகள் யாவுமே யதார்த்தமே !
நல்லா பார்த்துக் கொள்ளுங்கள் இதுதான் யானை விழுந்தான் குளம். இப்போ இங்கே குப்பை விழுந்து விழுந்து குப்பை விழுந்தான் குளமா போச்சி இனி இந்தப் பக்கம் டைனேசர் வந்தா கூட இதில் விழாது
இந்த இடத்தை நிறையை பேர் மறந்துட்டு ஊருக்குள்ளே ஆட்டம் போடுறாங்க !!
Sஹமீது
20 Responses So Far:
இந்தப் படங்களைச் சுட்டவர் (குறிப்பாக 1,4,8,10) கேமரா கையாளத் தெரிந்தவர் என்பதை நிரூபிக்கும் படங்கள்.
நடுத்தெரு (மட்டும்?) சுத்தமாக இருப்பது போல் தெரிகிறது.
மூன்றாம் கண் புகைப்படம் எடுக்கின்றது..ஞானக்கண் அதற்க்கான “சூப்பர் டூப்பர் “ கருத்துக்களை அள்ளிவீசுகிறது....அசத்திட்டீய காக்கா
நமது கட்டுரை தயாராகிரது அதர்க்கு ஏற்ற படங்களய் இருக்கிறது அல்ஹம்துலில்லஹ். படம் ட்றயலாய் இருக்கட்டும் விசயத்தை அடுத்து பார்ப்போம்
பச்ச கலரு ஜிங்குச்சான் நுன்னு ஒரு வீடு இருக்குது பாருங்கோ அதிரை சித்தீக்கின் வீடு
சூப்பரப்போய்!!!!!!!!!!!!!!!!!
தோனா கானா வின் சட்டை தைக்க எத்தனை மீட்டர் துனி வேனுங்கோ
தோனா கானா கேட்ட கேள்வி அவரை போட்டோ எடுத்தபோது என்ன தம்பி எல்லோரும் போட்டோ எடுக்கின்றபோது பளிச்சுன்னு பிளாஸ் அடிக்கும் நீங்க போட்டோ எடுத்தப்போ அப்படி ஒன்னையும் காணோமே படம் தெளிவா இருக்குமா?
//தோனா கானா கேட்ட கேள்வி அவரை போட்டோ எடுத்தபோது என்ன தம்பி எல்லோரும் போட்டோ எடுக்கின்றபோது பளிச்சுன்னு பிளாஸ் அடிக்கும் நீங்க போட்டோ எடுத்தப்போ அப்படி ஒன்னையும் காணோமே படம் தெளிவா இருக்குமா?//
தோனா கானாவின் வாழ்விலும் “பளிச்சுன்னு” ஒளி வீச வேண்டும்; அதனால் கை கடுதாசி அனுப்புவோம் அவரிடம் மீண்டும்!
இறுதிப் புகலிடம் பற்றிய இறுதிப் புகைப்படம் மனதைச் சுட்டது; அங்கு எழுதிய வரிகள் உணர்வைத் தட்டியது!
அற்புதம்! அருமை! எனக்கு மிகவும் பெருமை.
முதல் படம் இயற்கையை மனதுக்குள் கொண்டுபோய் குடிவைத்து விட்டது.
மரியாதைக்குரிய தோனகானா இந்தியாவின் ஏதோ ஒரு சாதாரண ஊரில் கஷ்டமான சூழ்நிலையில் வாழும் மனிதர். இந்தியாவில் நடக்கும் அரசியல்வாதிகளின் பணசுருட்டல்கள் "டிஜிட்' டுக்குள் அடங்கமாட்டேன் என்று அடம்பிடிக்கிறது.
எங்கே போகிறது உலகம்????
கடைசி புகைப்படம் புகைப்பட கலையின் மொழியில் "Centre of Attraction" ஆக எமக்கு அமைந்தது..
மரத்தை ஒட்டியுள்ள இடப்புற சுவர்- தீமை செய்பவர்களாக வாழ்வில் பல தீமைகளில் அடிபட்டவர்கள் போலும்,
வலப்புற சுவர் பல நன்மைகள் செய்து தூய்மையாக வாழ்ந்தவர்கள் போலும் இறுதி நாளில் நன்மை தீமையை பிரித்து சுவர்க்கம்,நரகம் கொடுக்கப்படும் என்பதுபோல் மையத்தாங்கரையை மையமாக வைத்து அமைந்துள்ளதுபோல் என் மனதில் தோன்றியது..
ஆரம்பம் ஆவதும் மண்ணுக்குள்ளே
மனிதன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே
ஆராய்ந்து பார் மன கண்ணுக்குள்ளே ...!
ஆத்திரம் கொல்லாதே நெஞ்சுக்குள்ளே ..!
பலபேர் அடங்கிய மைய வாடி அமைதியாய்
தெரிகிறது ..!ஒருவர் அடங்கிய மைய அடக்கஸ்தலத்திற்கு
விளம்பரமா..!கொடுமைடா சாமி ...!
ஊருக்குள் ஓர்
உலாப் போனதுபோன்ற
உணர்வைத் தருகின்றன
புகைப்படங்கள்1
வாழ்த்துகள் ஹமீது
//மரத்தை ஒட்டியுள்ள இடப்புற சுவர்- தீமை செய்பவர்களாக வாழ்வில் பல தீமைகளில் அடிபட்டவர்கள் போலும்,
வலப்புற சுவர் பல நன்மைகள் செய்து தூய்மையாக வாழ்ந்தவர்கள் போலும் இறுதி நாளில் நன்மை தீமையை பிரித்து சுவர்க்கம்,நரகம் கொடுக்கப்படும் என்பதுபோல் மையத்தாங்கரையை மையமாக வைத்து அமைந்துள்ளதுபோல் என் மனதில் தோன்றியது..//
பச்சப்புள்ள இப்பிடீலாம் தத்துவார்த்தமா யோசிக்கலாமா?:)
//பச்சப்புள்ள இப்பிடீலாம் தத்துவார்த்தமா யோசிக்கலாமா?:) //
அதானே..! “தீர்ப்புநாளின் அதிபதி” அல்லாஹ் என்று ஐவேளையும் அறுதியிட்டு உறுதியுடன் உரத்துக் கூறுகின்ற நாம், சட்டுபுட்டுன்னு சுவர்க்கவாசி/நரகவாசி என்றெல்லாம் தீர்ப்பு வழங்குவதும், சமீபகாலமாக அவர் காஃபிர், இவர் முனாஃபிக் என்றெல்லாம் இயக்கவாதிகள் தீர்ப்பு வழங்குவதும் தகுமா?
கலர் Fபுல்!
1.எந்த ஊருன்னு தெரியாத இடம். வானமே எல்லை!
2. இப்புடீ இன்னும் போனால் சித்தீக் பள்ளி மட்டுமல்ல. 'சம்சுல் இஸ்லாம் சங்கம்' கூட வருமே!
3. தொலைபேசியின் வளர்ச்சி, தொ.க.வுக்கு வீழ்ச்சி,(அந்த பெரியவருக்கு நாயன் நல்லருள் புரியட்டுமாக!)
4.இங்கேந்து பார்த்தால் கடலும் தெரியும், அன்று ஓடின ரயிலின் தடமும் தெரியும்.
5.தலைமை இடத்திலெ கூட யதார்த்தமாய் நாய் என்றால் மற்ற இடத்திலும் இதன் தொந்தரவு நிச்சயம் இருக்குமே!
6.சேர்மன் வாடிக்கு மட்டும் பிளாஸ்டிக் பை விதி விலக்கோ!
7.யானை(யாண்) மாடாகி குப்பை மேடாகி அவலம் தருவது யார் செய்த பாவமோ!
8.நடுத்தெரு, நடந்த தெரு, வண்ணமாய் வாழ்ந்த வண்ணமாய் குளிரும் தெரு, நாணயம் என்று அன்று சொன்ன நல்ல தெரு.
9,அறிவிப்பு பலகையில் பெரிய ஜும்மா பள்ளி மற்றும் செடியன் குளம் செல்லும் வழி என் மாற்றம் செய்தால் ஊர் கெளரவம் காப்பாற்றப்படுமே!
10.சேர வேண்டிய இடத்தையும் அது எப்பவும் நடக்கலாம் என்பதை உணர்ந்தால் சின்டுமுடிந்து ஊரெ ரெண்டுபடுத்துற (நானா-நீனா) விளையாட்டெல்லாம் இருக்காதே!
-------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஹமீது காக்கா பளிச் பளிச்சென்று படத்தை காட்டி கடைசியில் பயப்பட வச்சிட்டீங்களே!
நல்ல வேலை அறிவிப்பு பலகையை வைத்தார்களே! இல்லை என்றால் நேர் ரோட்டில் உள்ள பச்சை கலர் புல் வீட்டிற்கு நேர்த்தி கடனோடு பக்தர்கள் படை எடுத்திடுவாங்க,
இந்த போட்டோக்களை கிளிக்கயபோது கூட இருந்து உதவி செய்த சகோ தாஜுதீன்னுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்
M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)
விமர்சனம் ரசித்தேன்
லெ.மு.செ.அபுபக்கர்
விமர்சனம் சிரித்தேன்
ஹமீத் காக்கா..
அஸ்ஸலாமு அலைக்கும்
ஊரில் உள்ளவைகளை உங்கள் புகைப்படங்களில் பார்ப்பத்து ரசிப்பதில் என்றுமே பேராணந்தம்.
ஊரில் இருக்கும் போது எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்தீர்களே. கரண்டை போட்டோ எடுத்தீர்களா? :) விமர்சனம் செய்யத்தான் கேட்கிறேன்.
காரணம் கூடங்குளம் பிரச்சினை ஆரம்பித்தவுடன் ஊரில் நாள் ஒன்றுக்கு 10 மணி நேரம் தான் கரண்ட் உள்ளது. இராண்டு நாட்களாக படு மோசம்...
அருமை அருமை.. ஊருக்குள்ளே ஒரு உலா வந்த சந்தோஷம் நன்றி சகோ பகிர்வுக்கு
Post a Comment