Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பிறப்பது! இறப்பது! எதற்காக? குறுந்தொடர் - 2 10

அதிரைநிருபர் பதிப்பகம் | September 25, 2012 | , , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) - (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தாங்கள் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!).

ஆந்திராவைச் சேர்ந்த சினிமா டைரக்டரின் மகன் இஸ்லாத்திற்கு வந்த அனுபவத்தை ஒரு பயான் நிகழ்ச்சியில் பேசியிருந்தார். சில வருடங்களுக்கு முன் அவர் பேசிய சிடியை கேட்க வாய்ப்பு கிடைத்தது. அவரின் அனுபவத்தை முதல் அத்தியாயத்தில் விளக்கியிருந்தேன். இப்பொழுது இந்த அத்தியாத்தில் தொடர்ந்து அவர் பேச்சைக் கேட்போம் வாருங்கள்.

என் அப்பாவிடம் உங்கள் பெயர் இல்லாமல் வாழ்ந்து காட்டுவேன் என்று சொன்ன வார்த்தை : அல்லாஹூத்தஆலா என் வாழ்க்கையை மாற்ற ஆரம்பித்து விட்டான். என்ன செய்வது , எப்படி வாழ்வது  பிச்சையா எடுக்கறது. என் கனவு பெரிய ஸ்டார். இப்ப என்ன செய்ய?, ஒரு நாளைக்கு 10ஆயிரம் செலவு செய்யும் வழியை கற்று வைத்திருந்தேன். சம்பாரிக்க இல்லை, செலவு பண்றதுக்கு. ''அப்ப வாழ்வது எப்படி'' என்று தெரியவில்லை. வி கே நாட் பேக்.

சின்ன வயதில் விளையாட்டாக கற்றுக் கொண்டது வாட்ச் தொழில். வீட்டில் வாட்ச் நின்று விட்டால் நானே பிரித்துப் பார்த்து கற்றுக்கொண்டேன். மனதில் ஒரு நம்பிக்கை வந்து விட்டது. ''என்னை படைத்த இறைவன் பட்டினியாக போட மாட்டான்'' என்று வாட்ச் ரிப்பேரிங் வேலை தேட ஆரம்பித்தேன். 

அப்பொழுதுதான் ஒரு உண்மையான முஸ்லிமை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் என்னடான்னா தொழுகிறவர், அவரிடம் வேலைக்குச் சேர்ந்து அரைநாள் வேலை செய்து ''8 ரூபாய் சம்பளம் கிடைத்தது''. ''என்னை படைச்ச இறைவன் இதே தொழிலாக்கி விட்டான்'' என்று நினைத்துக் கொண்டேன். ஏன்னா செஞ்ச வேலை எல்லாம் முடிந்து விட்டது. அல்ஹம்துலில்லாஹ்!, அப்பொழுது அல்லாஹ் என்று சொல்ல மாட்டேன் தேவுடா (கிரியேட்டர்) என்று சொல்வேன். கிரியேட்டர் ஒருவர் இருக்கிறார் என்று நம்பினேன்.

தொழ போகும்போது என்னை அனுப்ப மாட்டார். லஞ்ச்க்கு போய்ட்டு வந்தா பிறகு வெளியே போக முடியாது.  நான் செயின் ஸ்மோக்கர், அதற்குக் கூட விட மாட்டார். ''நீங்கள் எல்லாம் போறீங்க'' என்னை ஏன்? விட மாட்டேன்கிறீர்கள். நாங்கள் ''அஸர் தொழப் போறோம், மஃரிபு தொழப் போறோம்''. என்று சொன்னார்கள் என்னடா? போறீங்க!, என்னா  தொழுகை? காட்டுங்கள்! என்றேன். பாய் கடையிலே பள்ளிவாசல்  இருக்கிறது (மதராஸ் ஃபேரிஸில்). அங்கே போய் பார்த்தேன் அங்கே எதுமே இல்லை, ஒரு விக்ரகம் கூட இல்லை. ஆஹா!  கரெக்ட் ஓ நிராகாரயா நமஹா! கரெக்ட்.

அந்த விக்ரக ஆராதானை வழிபாடு இல்லாத சமுதாயம் இதுதான். பிரம்ம ரிஷிகளுக்கு தாடி இருந்தது. முஸ்லிம்களும் தாடி வைக்கிறோம். இந்துயிஸத்தில் எல்லா ரிஷிகளுக்கும் தாடி இருக்கனும். தாடி இல்லைனா அவன் ரிஷி இல்லை, இல்லையா? அப்ப இஸ்லாம் ஈஸ் ய ட்ரூ ரிலிஜன் என்று நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். என்ன ''லாஇலாஹ இல்லல்லாஹ்'' (இல்லை எவனும் அல்லாஹ்வைத் தவிர), 'வாவ்! கரெக்ட்டய்யா கரெக்ட்', ஆண்டவன் ஒருவன் அவனைத் தவிர எவரும் இல்லை என்று இஸ்லாம் சொல்லுது, இந்துயிஸம் கூட சொல்லுது, அப்ப இஸ்லாம்தான் உண்மையான ரிலீஜன்''என்று இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். அப்ப எனக்கு பாட்சா என்று பெயர் வைத்துக் கொண்டேன். அப்ப நான் முழுசா உள்ளே போகவில்லை காரணம் ''இஸ்லாம் என்னவென்று தெளிவாக சொல்கிறவர்கள்''  சமுதாயத்தில் ரொம்ப கம்மி. இது ''பரிதாபமான சுச்சுவேஷன்''. நான் இஸ்லாத்திற்கு வருவதற்கு என்னோட சிந்தனையும்,  அல்லாஹ்வுடைய ரஹ்மத் தான் காரணம். அல்லாஹ் நேர்வழி போகிறவர்களுக்கு, நேர்வழி தருகிறான். தீய வழி போக விரும்புகிறவர்களை அவர்கள் வழியிலேயே விட்டு விடுகிறான். நீங்கள் விரும்பும் வழிகளை தேர்ந்தெடுக்க சுலபமாக்கி வைத்திருக்கிறான். வெற்றியடைய விரும்பும் மனிதனுக்கும் வழிகளை சுலபமாக்கித் தருகிறான்.

ஆனால் நான் இன்னைக்கு இஸ்லாத்திற்கு வருவதற்கு காரணம் இந்து வேதாஸ் மேலும் என் தாயார் வளர்த்த பண்பாடுதான் இஸ்லாத்திற்கு வந்தது. வந்த பிறகு என்னடான்னா நிறைய தியாகங்கள் நான் செய்ய வேண்டி இருந்தது. யாரை கட்டிக்கலாம் என்று இருந்தேனோ ''அந்த பெண் நீ பெரிய நடிகனாகி, டைரக்டராகி விடுவாய் என்று நினைத்தேன் இப்பொழுது வாட்ச் ரிப்பேர் தொழில் செய்கிறேன் என்று சொல்கிறாய் மேலும் இஸ்லாம் என்று மதம் மாற சொல்கிறாய்'' என்று சொன்னது. 

''மதம் மாறுகிறது இல்லைங்க இஸ்லாம்''. திஸ் இஸ் ட்ரூ. ''நோ படி கேன் சேஞ்ச் தி ரிலீஜன்'' எல்லா மனிதர்களும் இஸ்லாத்தில்தான் பிறந்திருக்கிறார்கள். அவர்களின் பெற்றோர்களால் தவறான பாதையில் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். யாரும் மதம் மாறவில்லை, மதம் மாறுகிறார்கள் என்று சொல்வதே தவறு ''ரிவெர்டெடு முஸ்லிம்''. ''வி ஆர் ரிவெர்டெடு அவர் ஸெல்வ்ஸ் (Ourselves)'' நாம், நம்மை திருத்திக் கொண்டோம். ஆண்டவன் அல்லாஹூதஆலா இஸ்லாத்தில்தான் படைத்திருக்கிறான். எங்கள் தாயார் என்னை இந்துவாக்கினீர்கள். நான் திருந்திக்கொண்டேன் அவ்வளவுதான். 'திஸ் இஸ் ட்ரூ'. ''வி ஆர் ஆல் ரிவெர்டெடு முஸ்லிம்ஸ்''. இன்னைக்கு இருக்கிற எல்லா முஸ்லிம்களும் முஸ்லிம் தாய் வயிற்றில் பிறந்ததற்காக முஸ்லிம் என்று சொல்லக்கூடாது. ஏன் என்றால் ''முஹம்மது நபி(ஸல்) அவர்கள் உலகத்தில் ஒரு சமுதாயத்தில் பிறக்கும் குழந்தைகள், நான் என் தாய்மார்கள் மார்க்கத்தில் இறக்கிறேன் என்று நினைப்பது ரொம்ப தவறு, உண்மையான மார்க்கத்தை அறியாமல் தாயின் மார்க்கத்திலேயே இறந்து விட்டால் அவர்கள் யஹூதி, நஸராக்களோடு சேர்ந்து எழுப்பப்படுவார்கள்'' என்று சொன்னார்கள். உடனே 'ஸஹாபாக்கள் யாரஸூலுல்லாஹ் அந்த சமுதாயம் எது என்று கேட்கிறார்கள்' ''நமது சமுதாயம்தான்'' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

எல்லா முஸ்லிமும் நாம் சுன்னா என்று சொல்வதற்குக் காரணம் என்ன? நாம் குர்ஆனை கேட்கனும், அல்லாஹ் என்ன சொல்லியிருக்கிறான் என்று தெரிஞ்சுக்கனும். நபி(ஸல்) அவர்கள் நமக்கு காட்டித் தந்த வழியை பின்பற்றனும். இதுதான் உண்மை. இன்னைக்கு நாம் குர்ஆனை ஓதுகிறோம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை?

ஒன்னா? இரண்டா? ''10 தடவை, 20 தடவை, 30 தடவை ஓதி முடித்து விட்டேன் சார்'' என்று சொல்கிறார்கள். ''குர்ஆனின் விளக்கம் எத்தனை தடவை படித்திருக்கிறாய்'' என்று கேட்டால். 'யாரும் படிக்கச் சொல்லவில்லை அதனால் படிக்கவில்லை' என்று பதில் வருகிறது.

குர்ஆனில் அல்லாஹூதஆலா என்ன சொல்கிறான் என்று பாருங்கள் ஸூரா யூசுப்பில், மிக அழகாகச் சொல்கிறான் சின்ன பிள்ளைக்கு தாயார் புரிய வைப்பது போல் இந்த குர்ஆனின் வசனங்கள் மிகத் தெளிவாக இருக்கிறது. யார் படித்தாலும் புரிந்து கொள்ளலாம். நிச்சயமாக இந்த குர்ஆனை அரபி மொழியில் ஏன் இறக்கினேன் என்றால் மக்கள் புரிந்து கொள்வதற்காக என்று அல்லாஹூதஆலா சொல்கிறான். ஆனால் அரபி மாநகரத்தில் இருக்கும் அரபி நபிக்காக, நபியின் மொழியான அரபி மொழியில் அனுப்பியிருக்கிறான் என்று குர்ஆன் சொல்கிறது. 

இங்குள்ள தமிழ் சமுதாய முஸ்லிம்கள் தமிழ் விளக்கம் படிக்க வேண்டும்.  அப்பொழுதுதான் நாம் எப்படி செயல்பட வேண்டும் என்று தெரியும். இப்ப பாருங்க 'இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட, இஸ்லாத்தில் பிறந்தோம் என்று நினைக்கிற'  நாம்  இஸ்லாத்தை சரியாக புரிந்து கொள்ளாத காரணத்தால் மற்றவர்களுக்கு எப்படி எடுத்து சொல்வது என்று நமக்குத் தெரியாது. இதுதான் இஸ்லாமியர்களின் பரிதாப நிலை. அல்ஹம்துலில்லாஹ்! உங்களைப் பற்றி சொல்லவில்லை. மதராஸில் அதிகமான பேர் இப்படித்தான் இருக்கிறார்கள். இங்கெல்லாம் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறீர்கள் சந்தோஷமான விஷயம்.'நிறைய பிரிவுகள்'நிறைய போரட்டங்கள்' முஸ்லிம்களுக்குள்ளேயே!. காரணம் குர்ஆனை சரியாக புரிந்து கொள்ளவில்லை.

தெரியாதவர்கள் குர்ஆனின் விளக்கத்தைப் படியுங்கள். குர்ஆன் தமிழ், தெலுங்கு, உருது, ஆங்கிலம் என்று அனைத்து மொழியிலும் வந்து விட்டது. உலகத்தில்  177 மொழியில் குர்ஆன் விளக்கம் வந்துள்ளது. உலகத்தில் அல்லாஹூதஆலா நமக்காக மிக இலகுவாக்கியிருக்கிறான்.
இன்ஷாஅல்லாஹ் வளரும் ...
அலாவுதீன் S.

10 Responses So Far:

Ebrahim Ansari said...

//''மதம் மாறுகிறது இல்லைங்க இஸ்லாம்''. திஸ் இஸ் ட்ரூ. ''நோ படி கேன் சேஞ்ச் தி ரிலீஜன்'' எல்லா மனிதர்களும் இஸ்லாத்தில்தான் பிறந்திருக்கிறார்கள். அவர்களின் பெற்றோர்களால் தவறான பாதையில் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். யாரும் மதம் மாறவில்லை, மதம் மாறுகிறார்கள் என்று சொல்வதே தவறு ''ரிவெர்டெடு முஸ்லிம்''. ''வி ஆர் ரிவெர்டெடு அவர் ஸெல்வ்ஸ் (Ourselves)'' நாம், நம்மை திருத்திக் கொண்டோம். //

சகோதரர் அலாவுதீன் அவர்களே! மேற்கண்ட வரிகள் இந்த ஆக்கத்தின் இதயம். நாம் சொல்ல நினைக்கிற கருத்துக்களின் ஒட்டுமொத்த சாரம். மிகப்பெரும் பாராட்டுக்கு உரியவர் நீங்கள். மாஷா அல்லாஹ்.

Iqbal M. Salih said...

சலாம் அலாஉதீன்,

நீ சொல்வதுபோல் நிறைய பேர் இங்கேகூட, குர்ஆனை இத்தனைமுறை ஓதிமுடித்துவிட்டேன் எனச்சொல்கிறார்களே தவிர, குர்ஆனின் விளக்கம் படித்தார்களா என்றால் "இல்லை"!

இதனை நாம் முடிந்தவரை எத்திவைக்க வேண்டும்.

KALAM SHAICK ABDUL KADER said...

நாடிப் பிடித்து நாடி வந்து ஏற்றுக்கொண்ட அப்பெரியவரின் பேருரையைத் தேடிப் பிடித்துத் தெளிவாகத் திரட்டித் தந்த அன்புச் சகோதரர் அலாவுதீன் அவர்கட்கு “ஜஸாக்கல்லாஹ் கைரன்”.

தமீம் said...
This comment has been removed by the author.
தமீம் said...

சகோ. அலாவுதீன் அவர்களின் ஆக்கம் மிகவும் பயனுல்லவை. இது மாதிரி கருத்துகலை தந்து நம்மவர்கல் விலங்கி குரான் ஓதவும் ஏதுவாக இருக்கும்

sabeer.abushahruk said...

எந்தவித கஷ்டமுமின்றி பிறப்பிலேயே இஸ்லாமியனாக பிறக்க வாய்த்துவிட்டதால் நமக்கெல்லாம் நம் மார்க்கத்தை ஊன்றிப்படிக்க ஆர்வமில்லாமல் போய்விட்டதுபோலும்.

வருபவர்கள், அறிய வேண்டி எல்லாம் விளங்கிக்கொள்வதால் நம்மைவிட மார்க்கத்தில் பிடிப்பாகத்தான் இருக்கிறார்கள்.

Shameed said...

//தெரியாதவர்கள் குர்ஆனின் விளக்கத்தைப் படியுங்கள். குர்ஆன் தமிழ், தெலுங்கு, உருது, ஆங்கிலம் என்று அனைத்து மொழியிலும் வந்து விட்டது. உலகத்தில் 177 மொழியில் குர்ஆன் விளக்கம் வந்துள்ளது. உலகத்தில் அல்லாஹூதஆலா நமக்காக மிக இலகுவாக்கியிருக்கிறான்.//

தமிழ் குர்ஆன் இணையத்திலும் இலகுவாக படித்துக்கொள்ளலாம்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல்ல படிப்பினைத் தொகுப்பு.
ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா.
இன்சா அல்லாஹ் குர்'ஆனை ஓதுவோம், அர்த்தம் புரிந்தும்!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

// 'இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட, இஸ்லாத்தில் பிறந்தோம் என்று நினைக்கிற' நாம் இஸ்லாத்தை சரியாக புரிந்து கொள்ளாத காரணத்தால் மற்றவர்களுக்கு எப்படி எடுத்து சொல்வது என்று நமக்குத் தெரியாது. இதுதான் இஸ்லாமியர்களின் பரிதாப நிலை. //

அஸ்ஸலாமு அலைக்கும், அலாவுதீன் காக்கா,

முற்றிலும் உண்மை காக்கா.. காரணம் குர்ஆனை சரியாக புரிந்து கொள்ளவில்லை.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி!

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு