அந்தரத் தோரணம் வானவில்
.. அழகை இறைத்தவன் யார்? - பிறைச்
சந்திரன் கூடவே தாரகை
.. சமைத்து மறைத்தவன் யார்?
வண்ணத்துப் பூச்சிகளில் வரிகளை
.. வகையாய் நெய்தவன் யார்? - எழில்
எண்ணற்றப் பூவினங்கள் மணங்களை
.. எழுப்பச் செய்தவன் யார்?
பகலும் இரவும் மாறிவர
.. பூமியைச் சுழற்றுபவன் யார்? - வாழ்வில்
சுகமும் துயரும் மாறிவரச்
.. சோதனை வழங்குபவன் யார்?
மாமறையை வழங்கி போதனைக்கு
.. மாநபியைத் தந்தவன் யார்? - அதனை
தேமதுர நடையில் ஓதுவோர்க்குத்
.. தேர்ச்சிகளைத் தந்தவன் யார்?
ஓடை களில்நீர் உருண்டெழுந்தால்
.. ஓசைகளை அமைத்தவன் யார்? - சிறு
காடைக் குருவிச் சிறகடிக்கக்
.. காற்றைச் சமைத்தவன் யார்?
சொற்களிட் பொருளைப் புகுத்திச்
.. சுவையறிவுப் படைப்பவன் யார்? - பசும்
புற்களில் உறங்கும் பனியை
.. பகலவனால் துடைப்பவன் யார்?
அணிஅணி யாக மரங்களை
..அழகுற வைத்தவன் யார்? - அவற்றுள்
பிணிகளைப் போக்கும் மருந்தினைப்
.. பிழையறத் தைத்தவன் யார்?
தூணின்றி வானை உயரத்
...தூக்கி வைத்த இறைவன் - எவனோ
வீணின்றி வாழ்வை உனக்கு
..வாய்ப்பாய்த் தந்த அவன்தான்
-------
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
.. அழகை இறைத்தவன் யார்? - பிறைச்
சந்திரன் கூடவே தாரகை
.. சமைத்து மறைத்தவன் யார்?
வண்ணத்துப் பூச்சிகளில் வரிகளை
.. வகையாய் நெய்தவன் யார்? - எழில்
எண்ணற்றப் பூவினங்கள் மணங்களை
.. எழுப்பச் செய்தவன் யார்?
பகலும் இரவும் மாறிவர
.. பூமியைச் சுழற்றுபவன் யார்? - வாழ்வில்
சுகமும் துயரும் மாறிவரச்
.. சோதனை வழங்குபவன் யார்?
மாமறையை வழங்கி போதனைக்கு
.. மாநபியைத் தந்தவன் யார்? - அதனை
தேமதுர நடையில் ஓதுவோர்க்குத்
.. தேர்ச்சிகளைத் தந்தவன் யார்?
ஓடை களில்நீர் உருண்டெழுந்தால்
.. ஓசைகளை அமைத்தவன் யார்? - சிறு
காடைக் குருவிச் சிறகடிக்கக்
.. காற்றைச் சமைத்தவன் யார்?
சொற்களிட் பொருளைப் புகுத்திச்
.. சுவையறிவுப் படைப்பவன் யார்? - பசும்
புற்களில் உறங்கும் பனியை
.. பகலவனால் துடைப்பவன் யார்?
அணிஅணி யாக மரங்களை
..அழகுற வைத்தவன் யார்? - அவற்றுள்
பிணிகளைப் போக்கும் மருந்தினைப்
.. பிழையறத் தைத்தவன் யார்?
தூணின்றி வானை உயரத்
...தூக்கி வைத்த இறைவன் - எவனோ
வீணின்றி வாழ்வை உனக்கு
..வாய்ப்பாய்த் தந்த அவன்தான்
-------
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
17 Responses So Far:
//ஓடை களில்நீர் உருண்டெழுந்தால்
.. ஓசைகளை அமைத்தவன் யார்? - சிறு
காடைக் குருவிச் சிறகடிக்கக்
.. காற்றைச் சமைத்தவன் யார்?//
pretty nice verses! Elegantly compiled poetry!
Baarakallahu feekum.
நல்ல சிந்தனைகள் - வார்த்தைகளின் பிரயோகம்- உயர்வான கருத்துக்கள்- உன்னத கவிதை. பாராட்டுகள் கவியன்பன் அவர்களே!
//வீணின்றி வாழ்வை உனக்கு
..வாய்ப்பாய்த் தந்த அவன்தான்//
இனிமேலாவது இறைவனை குறை காணும் மனப்பக்குவம் மாறட்டும்.
உங்களுக்கு இந்த தமிழை அழகாக சொல்ல வரம் தந்த இறைவனுக்கே எல்லாப்புகழும்.
// தூணின்றி வானை உயரத்
...தூக்கி வைத்த இறைவன் //
கவி வரிகளின் அறிவியல் வரிகள்
மாஷா அல்லாஹ்...தமிழ் கவியன்பன் அவர்களினால் பட்டைத்தீட்டப்பட்டு,உயர்ந்த கருத்துக்களை கொண்டு,எல்லாம் வல்ல இறைவனை புகழ்ந்து மின்னுகின்றது....வாழ்த்துக்கள் கவியன்பரே
அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்)
மாஷா அல்லாஹ்!
வல்ல அல்லாஹ்வின் சக்தியை புகழ்ந்து அழகிய கவிதையாக்கிய சகோதரர் கவியன்பன் அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
மாஷா அல்லாஹ் !
சகோதரர் CROWN கருத்திலிருந்த எழுத்துப் பிழை சரிசெய்த பின்னர் பதியப்படுகிறது....
அந்தரத் தோரணம் வானவில்
.. அழகை இறைத்தவன் யார்? - பிறைச்
சந்திரன் கூடவே தாரகை
.. சமைத்து மறைத்தவன் யார்?
--------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.
அந்த தோரணம் வர காரணம் அல்லாஹ் ஒருவனே!
அவனே படைப்பவன்!அழிப்பவன்!
தூரிகை இல்லாமல் தாரகை சமைத்தவனும் அவனே!
எல்லாப்புகழும் அல்லாஹுக்கே!
அருமையான வார்தை கோர்ப்பு!
கவிதையில் அழகியலின் அணிவகுப்பு! வாழ்துக்கள். கவிஞானியே!
அஸ்ஸலாமுஅலைக்கும். அவசரகோலத்தில் "ப்"விடுபட்டிருந்தது. நிர்வாகி சரிசெய்ததும். இ"ப்"பதான் கவனித்தேன். அந்த "ப்"தந்த த"ப்"பை! நன்றி!
இந்தக் கவிதையில் பாத்தி கட்டி பயிர் வளர்க்கும் நேர்த்தியும்; பார்த்து பார்த்து விதை விதைக்கும் வித்தையும்; கோர்த்து கோர்த்து மாலை முடியும் திறனும் என கவிஞரின் முழுத்திறமையும் மிளிர்கிறது.
வாழ்த்துகள் கவியன்பன்.
அல்லாஹ்வின் வியத்தகு
வல்லமையை வீரியமாய்
உள்ளபடியே அழகுக் கவியால்
சொல்லிய அருமை கலாம் காக்கா!
அஸ்ஸலாமு அலைக்கும்:
தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமைப்பெற்ற அன்புத்தம்பி இக்பால் அவர்களின் வாழ்த்துக்கு “ஜஸாக்கல்லாஹ் கைரன்” எனும் துஆவுடன் நன்றி
டாக்டர் இப்ராஹிம் அன்சாரி காக்கா அவர்களின் பாராட்டை, என் தமிழ்ப்பேராசிரியர் அவர்களின் பாராட்டாக ஏற்கின்றேன்;நன்றி நவில்கின்றேன்” ஜஸாக்கல்லாஹ் கைரன்”
உளவியல் மருத்துவர் ஜாஹிர் ஹூசைன் அவர்கள் என்னுள்ளத்தினுள்ளே சென்று கவிதையின் முத்தாய்ப்பானதை எப்படியும் கண்டுபிடித்து விடுகின்றார்கள், வழக்கம் போல், ஆம், “வாழ்வும் வாய்ப்பும்” தந்தவன் யார் என்பதை மறந்து விட்டோம் என்பதே என் கவிதையின் கரு என்பதைச் சரியாகக் கணித்த மேதை அன்புத் தம்பி ஜாஹிர்க்கு மிக்க நன்றி; ஜஸாக்கல்லாஹ் கைரன்.
காமிரா கலைஞர் அன்புச் சகோதரர் ஹமீத் அவர்களின் அறிவியல் கண்ணில் என்றன் கவிதை வரிகள் வென்றெடுக்கப்பட்டன என்று அறிந்து மிக்க மகிழ்ச்சி;நன்றியால் நெகிழ்ச்சி;அல்லாஹ்வுக்கே புகழ்ச்சி. ஜஸாக்கல்லாஹ் கைரன்.
கல்வியாளர்- முதல் மாணவர் யாசிர் அவர்கள் பயின்ற அதே பள்ளியிற்றான் அடியேனும் தமிழ்ப்பால் குடித்தேன். ஜஸாக்கல்லாஹ் கைரன்.
அன்புச் சகோதரி அமீனா அவர்கட்கு வ அலைக்கும் சலாம்,
அதிரை வலைத்தளங்களில் வாசகிகளும் உளர் என்பதை நேற்று என் உறவினர் வீட்டுப் பெண் என் கவிதையைத் தொடர்ந்து படிப்பதாக என்னிடம் நேரில் சொன்னதும், இன்று உங்களின் இடுகைக் கண்டதும் உண்மை என்று தெளிவாகப் பட்டது. அல்ஹம்துலில்லாஹ். அன்புச் சகோதரிக்கு என் துஆ ஜஸாக்கல்லாஹ் கைரன்.
மார்க்கத்துறை ஆய்வாளர் அன்புச் சகோதரர் அலாவுதீன், வ அலைக்கும் சலாம், என்னால் இயன்ற அளவுக்கு இறைநம்பிக்கையை இனிய கவிதை வழியாக எடுத்தியம்புகின்றேன்; உங்கள் அளவுக்கு ஆதாரத்துடன் குர் ஆன் ஹதீஸ்களை ஆக்கதில் எழுதும் ஆற்றலை அல்லாஹ் எனக்கும் வழங்கிட துஆச் செய்யுங்கள்; ஜஸாக்கல்லாஹ் கைரன்.
மகுடக்கவிஞர் -க்ரவுன், வ அலைக்கும் சலாம், ஒற்றுப்பிழைகளில் உழல்பவனே அடியேனும்; கற்றுக்குட்டியாக இருக்கும் அடியேன் என் ஆசான்களின் பாடம் கேட்டு “வீட்டுப்பாடம்” எழுதும் வேலைதான் இக்கவிதைகள்; குறிப்பாக, உங்கள் சாச்சா , என் ஆசான் அதிரை அஹ்மத் காக்கா அவர்களிடம் ஒற்றுப்பிழைத் திருத்தம் பற்றிக் கேட்டுத் திருத்திக் கொள்கின்றேன்; அவர்களும் “பரந்தாராமனார்” என்பாரின் “நல்ல தமிழ் எழுதுவோம்” எனும் நூலை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். உங்களின் வழக்கமான வார்த்தைக் கோர்வைகள் என் கவிதைக்கு மகுடம் சூட்டுகின்றன; ஜஸாக்கல்லாஹ் கைரன்.
கவிவேந்தர் சபீர் அவர்களின் கடுதாசிக் கண்டதன் பின்னரே இந்த நடுநிசியிலும் உடன் ஏற்புரை இடுதல் என் கடன் என்று என் மனம் கூறுகின்றது. உண்மையில், இக்கவிதை உங்களை மிகவும் ஈர்க்கும் என்றும் இக்கவிதையை நீங்கள் குறிப்பிட்டது போல் விதைத்த பொழுதினிலே என் உள்ளம் சொன்னது; நீங்களும் அன்பு நெறியாளர் அபு இப்றாஹிம் அவர்களும் இக்கவிதை விரைவாகப் பதியப்பட வேண்டும் என்று மிகவும் ஆர்வம் காட்டியதும் என் கவிதைக் குழந்தைக்குக் கிட்டிய மாபெரும் அன்பளிப்பாக உங்கள் இருவரின் மின்மடல் கண்டதும் ஏற்றுக் கொண்டேன்; மேலும், இங்கு இடுகையிலும் உங்களின் ஆழமான உண்மையான கருத்தை வெளியிட்டு என்னையும் என் கவிதைக் குழந்தையையும் பாராட்டி இருக்கின்றீர்கள்; பாவலனுக்குத் தான் தெரியும் பாவலனின் திறமையும் ஈடுபாடும் என்பதால் உள்ளதை அப்படியே எழுதி விட்டீர்கள்; கவிஞன் மற்றொரு கவிஞனின் கண்ணாடி என்பதும் உண்மையானது உங்களின் அப்பட்டமான உண்மைக்கண்டுபிடிப்பான இவ்விடுகையின் கருத்துரை வழியாக. ஜஸாக்கல்லாஹ் கரைன் உங்கட்கும் அன்பு நெறியாளர் அவர்கட்கும், இன்ஷா அல்லாஹ் இன்னும் சிறப்பான கவிதைகளைத் தொடர்ந்து படைப்பேன் உங்களின் மேலான அதிரை நிருபர் எனும் பல்கலைக் கழகத்திற்காக.
அழகு முகமும் பழகும் பண்பும் மிக்க இலண்டன் வாழ் இளவல்-கவிஞர் ஜெஹபர் சாதிக் அஸ்ஸலாமு அலைக்கும். உங்களின் பாராட்டுக் கவிதைக்கு மிக்க நன்றி ஜஸாக்கல்லாஹ் கைர்ன்
அஸ்ஸலாமு அலைக்கும்.
கவியன்பர் கலாம் காக்கா. மின் வெட்டு காரணமாக உடனுக்கு உடன் பதில் கொடுக்க முடியவில்லை.
32 . வரிகளுக்கு ஒட்டறை வரியில் பதில் சொல்லுவதாக இருந்தால்.
அல்லாஹ் ஒருவனே!
வ அலைக்கும் சலாம், லெ.மு.செ. அபூபக்கர் (இப்பெயரில் எனக்குப் பிரியம் உண்டு; என் மருமகனார்ப் பெயரும் அபூபக்கர்). மின்வெட்டு இல்லாத நேரம் வரை காத்திருந்து என் பாட்டுக்கு மறுமொழி இடுகையினை மறக்காமல் இடுகின்ற உங்களின் அழகிய பண்புக்கு “ஜஸாக்கல்லாஹ் கைரன்” நன்றி. இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம்; நேரில்- ஊரில்- ஹஜ்ஜூப் பெருநாள் விடுப்பில்.
Post a Comment