ஓடி விளையாடு வாப்பா
ஒளிந்து விளையாடாதே வாப்பா !
கூடி விளையாடு வாப்பா
கூவி விளையாடாதே வாப்பா !
ஆரோக்கியம் தேடியாடு வாப்பா
அவசரத்தில் ஓடியாடாதே வாப்பா !
மாலை க்காக காத்திரு வாப்பா
மாலை தவறி மாற்றிடாதே வாப்பா !
காணவந்த கார்மேகம்
கனமழைப் பொழியுமுன்
வீட்டுக்கு
ஓடி வந்திடு வாப்பா
இடியிடிக்கும் பயம்போக
எனை
இருக்கி அனைத்திடு வாப்பா
மின்னல் வெட்டி
மின்வெட்டு வருமுன்
மெழுகுவர்த்தி ஏற்று வாப்பா
மெல்லிய வெளிச்சத்தில்
கொஞ்ச நேரம்
மழையை ரசிப்போம் வாப்பா
இப்படிக்கு,
விளையாட இடம் தேடும்!
குழந்தை… !
பட்டைதீட்டிய வரிகள் : அபுசாரூக்
எட்டிப் பிடித்த வரிகள் : அபுஇறாஹிம்
புகைப்படம் : அபுமஹ்மூத்
14 Responses So Far:
இந்த இருட்குடை
இறைவனின் அருட்கொடை!
இனி
மின்னலும் இடியும் துவங்கும்
சன்னமாய் மழையும் பொழியும்
வானவில் இல்லாததொன்றுதான் குறை
என்ன செய்ய
அஸ்தமனங்களின்போழ்து
வானவில் பிரசவிக்கும் அளவுக்குத்
தெம்பிருப்பதில்லை சூரியனுக்கு.
இந்த இனிய மாலை பொழுதில் மேகம் என்றும் பார்க்காமலும்,இடி என்றும் பார்க்காமலும், மின்னலும் என்றும் பார்க்காமலும் சகோதரர்கள் தன்னுடைய விளையாட்டில் ஆர்வம் காட்டுகின்றனர்.
அலைகள் ஓய்வதில்லை அதைப்போல் இவர்களுடைய விளையாட்டுக்களும் ஓய்வதில்லை என்று சொல்லாமல் இவர்கள் தன்னுடைய செயல்களில் காட்டுகின்றனர். வாம்மா மின்னலே வா என்று சொல்வார்கள் அதைப்போல் வாம்மா மின்னலே வா என்று கூப்பிட்டு விட்டு இவர்கள் மின்னலோடனும்,இடியிடனும் போட்டி போட்டு விளையாண்டுக்கொண்டு இருக்கிறார்கள். மழை பொழிகிறதோ இல்லையோ இவர்களுடைய விளையாட்டு பொழிகிறது.
”பாடி பில்ட் அப்” வேண்டும்-அதற்கு
பாடிப் பாடி விளையாட வேண்டும்
தேடினாலும் தெவிட்டாத கவியோட்டம்
வாடிவிடாத பாமலர்க் கூட்டம்!
மேகம் கருத்தாலும்
வேகம் சுருங்காமல்
வாலிபால் விளையாடும்
வாலிபர்காள்!
படிப்பிலும் வேகம் வேண்டும்
துடிப்புடன் முன்னேற வேண்டும்
பட்டைத் தீட்டிய வரிகட்கும்
எட்டிப் பிடித்த வரிகட்கும்
விடை தாருங்கள் வாப்பா
தடை தகருங்கள் அப்பால்!
எல்லைக் கோட்டைத் தாண்டாதீர்கள்
சொல்லைக் கேட்டுச் செல்லுங்கள்
வெல்லும் விளையாட்டிற்குப் பயிற்சி;
வெல்லும் வாழ்க்கைக்கு முயற்சி
தட்டுங்கள்;
எட்டுங்கள்;
பிடியுங்கள்;
முடியுங்கள்!
வாப்பாவுக்கு பாப்பாவின் பாட்டு ரொம்ப "டாப்பா" இருக்கப்பா.
வாழ்த்துப்பா!
வாப்பாக்கள் பிள்ளைக்கு பாட்டு பாடிய காலம் போய் இப்போது பிள்ளைகள்
வாப்பாவிற்கு பாட்டு பாடும் காலம் வந்து விட்டது
எது எப்படியோ பாட்டு டாப்
மூவர் கூட்டணியில் ஒரு புதிய படைப்பு. பாப்பா பாட்டு பாரதி பாடினார். இப்போது வாப்பாப் பாட்டு வந்திருக்கிறது. விரைவில் அப்பாப்பாட்டும் எதிர்பார்க்கலாமா?
ஆக்கம் படைத்தோரின் பெயர்களை அபூ சேர்த்து கலக்கலாக கலந்திருப்பது சிறப்பு.
கலக்கிட்டீங்க.
அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட கண் கொள்ளா காட்சியினை ரசித்தேன்.
கருமேகத்தையும் பொருட் படுத்தாமல் விளையாடும் கால் பந்தாட்ட வீரர்களை பார்த்து வியந்தேன்.
எழுத்து ஓவியத்தை படித்து படித்து சிரித்தேன்.
எங்கள் செட்டில் உள்ள ஒரு நபர் மட்டும் இதுவரையிலும் விளையாட்டை விடாமல் விளையாடி கொண்டு இருக்கிறார் . வெள்ளை டி சர்ட் அணிந்து இருக்கும் ஜமால் முஹம்மது இவர் சவூதி, ஜப்பான் சென்று பல வருடங்கள் கழித்து வந்தாலும் கால் பந்தாட்டத்தை மறக்க வில்லை என்பது குறிப்பிட தக்கது.
பட்டைதீட்டிய வரிகள் : அபுசாரூக்
எட்டிப் பிடித்த வரிகள் : அபுஇறாஹிம்
புகைப்படம் : அபுமஹ்மூத்
இடியும் .மின்னலும் ,மழையும் ஓன்று சேர்ந்தது போல்.புயல் அடிக்கின்றன .
அஸ்ஸலாமு அழைக்கும்
கண்களுக்கு விருந்தாக அமைந்த இக்காட்சி நானும் அந்த இரு அணியில் இருப்பேனா அல்லது ஓரமாக (வேறு அணியுடன்) அமர்ந்து ரசித்திருப்பேனா என்ற ஏக்கத்தை வரவைத்தது
அருமையான கிளிக் வான்வின்னை பிளப்பது போல் பந்தின் தோற்றம், அதற்க்கு மேல் கவிகாக்காவின் கவர்ந்திழுக்கும் கவி வரிகள்... ஆஹா எக்சலன்ட்
\\எங்கள் செட்டில் உள்ள ஒரு நபர் மட்டும் இதுவரையிலும் விளையாட்டை விடாமல் விளையாடி கொண்டு இருக்கிறார் .//
அவ்வருசையில் சாமியுல்லாஹ் காக்கா அஹ்மத் மொய்தீன் காக்கா என்று ஏராளமானோர் இன்னும் நன்கு விளையாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்
மற்றும் நமதூர் பாசத்துக்குரிய (நடுத்தெரு) நண்பர் அஹ்மத் ஜூபைர் அவர்களும் விளையாடி கொண்டிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீர் கொண்ட கருண்ட மேகங்களும்,அதற்க்கு பவர் கொடுத்து இருக்கும் கவிக்காக்காவின் கவிவரிகளும் இடி மின்னலுடன் கூடிய மகிழ்ச்சியை மனதில் விதைத்தது....
லெ.மு.செ.அபுபக்கர் சொன்னது
//கருமேகத்தையும் பொருட் படுத்தாமல் விளையாடும் கால் பந்தாட்ட வீரர்களை பார்த்து வியந்தேன்.//
வாலிபாலை எப்போ கால் பந்தா மாத்துனாங்க லெ.மு.செ
//வாலிபாலை எப்போ கால் பந்தா மாத்துனாங்க// விடுங்க காக்கா..ரெண்டுலேயும் பந்துதானே உதை / அடி வாங்குது..
The clouds?
Or they
crowds of crows
scrambled the rows
darkened like
bride's eye brows!
Kavikakka
Your "row" kavi lines pushing me to tell "wow"
My eyebrow heightened after reading your kavithai
Post a Comment