தொடர் - 1
“யா அத்தஹாக்! (சிரிப்பழகரே!)”
அப்படித்தான் அவர் அன்புடன் அழைக்கப்பட்டார்.
அழைத்தவர் வேறு யாருமல்லர்! நம் அன்னை ஆயிஷா அவர்கள்!
ஆம்!. அந்தச் செல்லப்பெயர் முற்றிலும் அவருக்குப் பொருந்திப்போனது. அவர் வீட்டுக்கு வரும்போதெல்லாம் குதூகலமும் கூடவே வந்துவிடும். எப்போதும் மகிழ்ச்சி நிறைந்தவராக, மகிழ்ச்சியை மட்டுமே மற்றவர்க்கு அளிக்க விரும்பியவராக, துன்பங்களைத் தூக்கி எறிந்தவராக, வாழ்வின் எல்லாச் சூழல்களிலும் துடிப்பும் முகமலர்ச்சியும் நிறைந்தவராக, நிலையான மகிழ்ச்சி எனும் சுவனச்சோலையின் இலக்கினை நோக்கி, உலக மாந்தரைக் கூவிஅழைத்தவராகவே அவர் முற்றிலும் தோன்றினார்.
அவர் இந்த அகிலங்களுக்கே அருட்கொடையானவர்! நமக்கு அவர் உயிரானவர். இல்லை; உயிரைவிடவும் மேலானவர்!
அவர்தாம் நம் இனிய தலைவர் நபிகள் நாயகம், நற்குணங்களின் தாயகம், முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்!
அழைத்தவர் வேறு யாருமல்லர்! நம் அன்னை ஆயிஷா அவர்கள்!
ஆம்!. அந்தச் செல்லப்பெயர் முற்றிலும் அவருக்குப் பொருந்திப்போனது. அவர் வீட்டுக்கு வரும்போதெல்லாம் குதூகலமும் கூடவே வந்துவிடும். எப்போதும் மகிழ்ச்சி நிறைந்தவராக, மகிழ்ச்சியை மட்டுமே மற்றவர்க்கு அளிக்க விரும்பியவராக, துன்பங்களைத் தூக்கி எறிந்தவராக, வாழ்வின் எல்லாச் சூழல்களிலும் துடிப்பும் முகமலர்ச்சியும் நிறைந்தவராக, நிலையான மகிழ்ச்சி எனும் சுவனச்சோலையின் இலக்கினை நோக்கி, உலக மாந்தரைக் கூவிஅழைத்தவராகவே அவர் முற்றிலும் தோன்றினார்.
அவர் இந்த அகிலங்களுக்கே அருட்கொடையானவர்! நமக்கு அவர் உயிரானவர். இல்லை; உயிரைவிடவும் மேலானவர்!
அவர்தாம் நம் இனிய தலைவர் நபிகள் நாயகம், நற்குணங்களின் தாயகம், முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்!
ஜரீர் இப்னு சமூரா (ரலி) அறிவிக்கின்றார்:
“நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நாளிலிருந்து, என் ஒவ்வொரு சந்திப்பிலும் நபியவர்களைப் புன்னகை பூத்த, மலர்ச்சியான முகம் உடையவர்களாகவே நான் கண்டிருக்கிறேன்.”
நகைச்சுவையின் வரையறை:
வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அழகிய முன்மாதிரியாக வாழ்ந்து காட்டிய அண்ணல் அவர்கள் நகைச்சுவையின் இலக்கணத்தையும் அதன் எல்லையையும்கூட சரியாக வரையறுத்துக் காட்டினார்கள்.
“யா ஹுமைரா!” (சின்னச் சிவப்பழகே!) என்று செல்லமாக அழைக்கப்படும்போதெல்லாம், சிரித்துக்கொண்டே, “அல்லாஹ்வின் தூதரே, நீங்கள் வேடிக்கையாகவே பேசுகிறீர்கள்!” என்ற மூஃமின்களின் அன்னை ஆய்ஷா அவர்களை நோக்கி, “நான் நகைச்சுவையாகப் பேசினாலும் அதில் உண்மை மட்டுமே இருக்கும்” என்று இயம்பினார்கள்.
இதன் விளக்கமாவது, நாயகம் அனுமதித்த நகைச்சுவை என்பது மிகையாக ஜோடனை செய்யப்பட்டதாகவோ அல்லது சகமனிதனின் கண்ணியத்தைக் குலைப்பதாகவோ இருக்கக்கூடாது என்பதாம்!
“நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நாளிலிருந்து, என் ஒவ்வொரு சந்திப்பிலும் நபியவர்களைப் புன்னகை பூத்த, மலர்ச்சியான முகம் உடையவர்களாகவே நான் கண்டிருக்கிறேன்.”
நகைச்சுவையின் வரையறை:
வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அழகிய முன்மாதிரியாக வாழ்ந்து காட்டிய அண்ணல் அவர்கள் நகைச்சுவையின் இலக்கணத்தையும் அதன் எல்லையையும்கூட சரியாக வரையறுத்துக் காட்டினார்கள்.
“யா ஹுமைரா!” (சின்னச் சிவப்பழகே!) என்று செல்லமாக அழைக்கப்படும்போதெல்லாம், சிரித்துக்கொண்டே, “அல்லாஹ்வின் தூதரே, நீங்கள் வேடிக்கையாகவே பேசுகிறீர்கள்!” என்ற மூஃமின்களின் அன்னை ஆய்ஷா அவர்களை நோக்கி, “நான் நகைச்சுவையாகப் பேசினாலும் அதில் உண்மை மட்டுமே இருக்கும்” என்று இயம்பினார்கள்.
இதன் விளக்கமாவது, நாயகம் அனுமதித்த நகைச்சுவை என்பது மிகையாக ஜோடனை செய்யப்பட்டதாகவோ அல்லது சகமனிதனின் கண்ணியத்தைக் குலைப்பதாகவோ இருக்கக்கூடாது என்பதாம்!
(இன்றைய ஆங்கில எழுத்தாளனும் அல்லாஹ்வின் தூதரின் கூற்றை இவ்வாறு வழிமொழிகின்றான்: "There is more logic in humor than in anything else. Because, you see; humor is truth. ~Victor Borge, London Times.")
இன்னும் தெளிவாகச்சொல்வதென்றால், தமாஷ் என்ற பேரில், அடுத்தவனைச் சிரிக்கவைப்பதற்காகச் சின்ன விஷயத்தை மிகைப்படுத்தி, மெருகூட்டி, பொய் கலந்துபேசி, மற்றவர் மனம்தனை நோகடிப்பதை நபியவர்கள் வெறுத்தார்கள். மேலும், “பிறரைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய் சொன்னவன் அழிந்தான்” என்றார்கள் (திர்மிதீ).
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
இக்பால் M. ஸாலிஹ்
35 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
மாஷா அல்லாஹ் !
காந்த வரிகள்... ஒரு கட்டுரையே கவிதைக்கு ஈடான எழுத்தழகு !
முதல் தொடரே அற்புதம் !
இன்னும் நபிகளாரின் வாழ்வில் நிகழ்ந்தவைகளை வாசிக்க ஆவலாக இருக்கிறோம், இன்ஷா அல்லாஹ் !
வெற்றிகரமாக தொடர வாழ்த்துகிறேன் ! சகோதரரே.
எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக.
முதல் பாகமே முகத்தில் மலர்ச்சியையும்,மனதில் மகிழ்ச்சியையும் உண்டாக்கி உள்ளது...நம் உயிரைவிட மேலான நபி(ஸல்) அவர்களை வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பை உங்கள் தொடர் தாரளமாக தரும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து காத்திருப்போம்...உங்களை வரவேற்க்கின்றோம் இக்பால் காக்கா
அஸ்ஸலாமுஅலைக்கும். முதல் தொடரே முத்தான தொடராக ஆரம்பித்துள்ள சகோ.இக்பால் எழுத்தின் மூலம் நம்மை அவரின் பால் இழுத்துள்ளார். இவரின் நடவடிக்கையே மிக எளிதாக இருக்கும். மெல்லியப்புன்னகையுடன் தான் எப்பொழுதும் இருப்பார். நகைச்சுவையில் இவரின் நகைச்சுவை ஒருவகை! கிளாசிக். நல்ல யோசிக்க வைக்கும் , நேசிக்க வைக்கும் தொடர், வாழ்துக்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்
நீண்ட நாட்களுக்குப்பின் ஊரில் சந்தித்து ஓர் இரவு நடுநிஷி வரை பேசிக்கொண்டு இருந்ததில் சந்தோசம் இப்போ அதிரை நிருபர் மூலம் நபிமணியும் நகைச்சுவையும்..! என்ற கட்டுரை மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி
ஜனாப். இக்பால். எம். ஸாலிஹ் அவர்களை வரவேற்கிறேன். நல்ல தொடக்கம். வாழ்த்துக்கள்.
நண்பா,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
நீ இந்தியாவிலிருந்து கலிஃபோர்னியா செல்லும் வழி அஜ்மானில் என் வீட்டிலிருந்த அந்த ஒருசில மணித்தியாலங்களில் என்னிடமும் அதிரை நிருபரின் நெறியாளர் அபு இபுறாஹீமிடமும், நம் கண்மணி நபி (ஸல்) அவர்களின் நகச்சுவை உணர்வுபற்றி நீ சிலாகித்துச் சொன்னபோது எனக்கும் ரொம்ப ஆச்சரியமாக இருந்தது; கேட்கக் கேட்க ஆனந்தமாகவும் இருந்தது.
எங்களுடன் பகிர்ந்ததை அதிரை நிருபரின் வாசகர்களுடனும் பகிர்ந்துகொள்ள நாங்கள் வேண்டியதற்கிணங்கி இந்தத் தொடரைத் தொடங்கி யிருக்கும் உனக்கு அல்லாஹ் ஆரோக்கியத்தையும் கால அவகாசத்தையும் தந்தருள என் து ஆ.
நாங்கள் நடத்திய “தேன் துளி” கையெழுத்துப் பத்திரிகைக்குப் போட்டியாக நீ துவங்கிய “தேடல்” பத்திரிகையிலேயே உன்னுடைய எழுத்தின் ஆழமும் வீச்சும் கண்டு வியந்த எங்களுக்கு (எங்கள் = நான் + ஜாகிர்) எதிர்பார்ப்பைக் கூட்டிவிட்டிருக்கிறது இந்தத் தொடர்.
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா – டா.
அதி.அழகு அவர்களின் இளவல் இக்பால் காக்காவின் தொடரின் தொடக்கமே எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கண்மணி நாயகம் ஸல்...என்றாலே அச்சமூட்டி எச்சரிக்கை செய்தவர் மட்டுமே என்பதாக பிறமதத்தினர் மட்டுமின்றி முஸ்லிம்களே நினைத்துக்கொண்டிருக்கும் நிலையில் முஃமீன்களின் அன்னையின் அற்புத அழைப்புடன் தொடங்கியுள்ளமை வாசகர்களை வாரியிழுக்கும். வாழ்த்துகள் காக்கா.
நகைச்சுவை Vs ஏளனம்
சுவையாக இருக்க வேண்டிய நகைச்சுவை, பல நேரங்களில் கசப்பூட்டும் ஏளனமாக மாறிவிடுகிறது. பொய்யும் சேர்ந்து கொள்ள, கசப்பு கூடிவிடுகிறது.
எல்லா விஷயங்களிலும் முன்மாதிரி எம் உயிரின் மேலான நபி முஹம்மத்(ஸல்) அவர்கள்!!
அன்புடன்,
என்.ஷஃபாத்
ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா:
அட ! //அதி.அழகு அவர்களின் இளவல் இக்பால் காக்காவின் // அப்படியே அழைக்கலாமே ! :)
வர்ணனைக்கு ஏற்றர்போல் //காந்த வரிகள்... ஒரு கட்டுரையே கவிதைக்கு ஈடான எழுத்தழகு !// அருமை !
பதிவுக்குண்டான கலந்துரையாடலிலேயே அறிந்து கொண்டோம் எவ்வளவு பொழிவுடன் மிளிரும் என்று ஆர்வமாக காத்திருந்தற்கேற்றார்போல் தொடக்கமே அற்புதமாக அமைந்திருக்கிறது.
வெற்றிகரமாக தொடர... வாழ்த்துகிறோம் இன்ஷா அல்லாஹ்...
அதிரைக்காரன்,
உங்களைப்போல்தான் நானும். நபிகள் என்றாலே அச்சமூட்டி எச்சரிப்பது நினைவுக்கு வந்து பயமாக இருக்கும். நகைச்சுவையா என்று ஆச்சரியப்பட்டுப்போனே.
இக்பாலுடன் இந்தத் தொடருக்கான உரையாடல்கள் பலநாட்கள் நடந்தன. எழுத நேரமில்லையெனில் ஃபோனிலேயே சொல் நான் பதிவு செய்து எழுதிக்கொள்கிறேன் என்றெல்லாம் அவனை வற்புருத்திதான் 3 மாத முயற்சிக்குப்பின் துவங்கியிருக்கிறான்.
எனக்குத் தெரிந்து, அதிக காலம் உரையாடல் நிலையிலேயே இருந்து எழுதப்பட்டவை இரண்டு தொடர்கள்: ஒன்று "சகோதரியே" மற்றொன்று இந்தத் தொடர்.
இந்தத் தொடரின் எழுத்தாளன் புதுக்கல்லூரியில் நம்ம "படிக்கட்டுகள்" ஜாகிரின் செட். எனக்கு ஒரு வருடம் ஜூனியர். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புலமை மிக்கவன்.
விரைப்பான எழுத்துக்குச் சொந்தக்காரன்.
இவன் எழுதிய முதல் கவிதை:
தேடல்:
என்னை விற்று
எதையோ பெற்று
பின்
அடைந்ததை அனுபவிக்க
என்னைப் போய்
எங்கேத் தேடுவேன்?
தயவுசெய்து அறிவிப்பாளர் மற்றும் நூலின் பெயரை குறிப்பிடவும்.ஹதீஸ் எண்ணையும் குறிப்பிட்டால் தெளிவுபடுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்.
என் ஆசானின் இளவலின் பெயரை அறிவேன். நேரில் சந்தித்ததில்லை. எழுத்துகளை வாசித்ததில்லை. நான் வாசிக்க வேண்டியவர்களின் பட்டியலில் இடம்பெற்றுவிடுவார் என்பது தொட்டிருக்கும் தலைப்பையும் எழுத்து நடையையும் பார்க்கும்போது தோன்றுகிறது. வாழ்த்துகள்!
இனிய வரவாகுக! நபிமணியும் நகைச்சுவையும்!!
இறைவா! நபியைப் போல, அவர்கள் வழியில் என்றும் புன்னகை பூத்த, மலர்ச்சியான முகம் உடையவர்களாக எங்களையும் ஆக்கி வைப்பாயாக!
//தமாஷ் என்ற பேரில், அடுத்தவனைச் சிரிக்கவைப்பதற்காகச் சின்ன விஷயத்தை மிகைப்படுத்தி, மெருகூட்டி, பொய் கலந்துபேசி, மற்றவர் மனம்தனை நோகடிப்பதை நபியவர்கள் வெறுத்தார்கள்.//
பலரும் தம்மை அறியாமல் செய்யும் சிறு தவறில் ஒரு தவறு இது.
தடுத்துக்கொள்ளவேண்டிய ஒன்று..
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப்பற்றி அதிகம் கேட்டிருந்தும் இந்த தலைப்பை மிக சொற்பமாகவே கேள்விபட்டிருக்கின்றோம்.. மேலும் எதிர்பார்த்தவனாக.....
மாஷா அல்லாஹ்..
நபி(ஸல்)அவர்களின் வாழ்வில் நகைச்சுவை! நான் கேள்விப் படாத ஒன்று.. அதேபோல் நபியவர்களின் சிரிப்பழகு... மறுமையில் காண துடிக்கும் ஒன்று
//“யா ஹுமைரா!” (சின்னச் சிவப்பழகே!) // பெண் குழந்தைகளுக்கு இடும் பெயருக்கு அர்த்தம் சொல்லித்தந்தமைக்கு நன்றி
இக்கட்டுரையும் ஓர் அழகு... அதி அழகின் (இள) அழகு
To Iqbal,
Thanx for deciding to write. I hope lot of readers will benefit out of your writing. More over we never fail to write from our school days.
அஸ்ஸலாமு அலைக்கும்.
மாஷா அல்லாஹ்.
நபி(ஸல்)அவர்களின் முக மலர்ச்சியை கொண்டு வரும் புது மலர்ச்சி இது.
அது வாசகர்களாகிய எங்களுக்கு மத்தியில் ஏற்படட்டும் பெரும் புரட்ச்சி.
அன்னை ஆயிஷா அவர்களுக்கு பக்கத்தில் ( ரலி) என்ற வார்த்தையை சேர்த்தால் உயர்வானதாக இருக்கும்.
தொடர் இரண்டை படிப்பதற்கு மகிழ்ச்சியோடு இருக்க அல்லாஹ் அருள் புரிவானாக!
வாழ்த்துக்கள் சகோ. இக்பால் எம்.ஸாலிஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
"நபிமணியும் நகைச்சுவையும்" தொடராக எழுதித் தர சம்மதம் அளித்ததோடு மட்டுமல்லாது எவ்வாறு நெறியாளப்பட வேண்டும் என்ற அறிவுத்தலும் வழங்கி எங்களுக்கு ஊக்கமும், ஆலோசனை வழங்கும் சகோதரர் இக்பால் M.ஸாலிஹ் அவர்களுக்கு முதலில் ஜஸாக்கல்லாஹ் ஹைர்.
உங்களின் வருகை அதிரைநிருபரின் தரம் இன்னும் மிளிரவும், மென்மேலும் சிறக்கவும் உதவும் என்ற ஆவலில் தங்களின் தொடர் பதிவுகளை வரவேற்பதில் மகிழ்கிறோம் - அல்ஹதுலில்லாஹ்.
அன்புடன்,
அதிரைநிருபர் குழு
நல்ல அழகான தொடக்கம். வருக எம் வாழ்வில் வசந்தம் பெருக. வாழ்த்துக்கள்.
முன்பு ஒரு ரமழான் மாத தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேட்ட நகைச்சுவை ஒன்று:
ஒரு மார்க்க அறிஞரை ஏதெனும் சிக்கலான ஒரு கேள்வி கேட்டு மடக்க வேண்டும் என்றெண்ணிய சில இளைஞர் கூட்டத்திலிருந்து ஒருவன் அந்த மார்க்க அறிஞரை நோக்கி இப்படி கேள்வி ஒன்று கேட்டான்.
"சொர்க்கத்தில் எது வேண்டுமானாலும் கிடைக்குமா அலிம்சா?" அதற்கு அந்த மார்க்க அறிஞர் எது வேண்டுமானாலும் கிடைக்கக்கூடிய இடம் தான் சொர்க்கம் என்று பதிலளித்தார்.
அந்த இளைஞன் அத்துடன் விடவில்லை. மேலும் கேட்டான். சொர்க்கத்தில் புகைப்பதற்கு பீடி கிடைக்குமா? என்று.
இந்த கேள்வியால் நிலைகுலைந்து போகாமல் அந்த இளைஞர்களின் நோக்கத்தை புரிந்து கொண்ட அந்த மார்க்க அறிஞர் நிதானமாக பதிலளித்தார் இப்படி: சொர்க்கத்தில் பீடி கிடைக்கும். ஆனால் அதை பற்ற வைக்க நகரத்திற்குத்தான் செல்ல வேண்டும் என்றார்.
//அதை பற்ற வைக்க நகரத்திற்குத்தான் செல்ல வேண்டும் என்றார். //
"நரகத்திற்கு" என்பதற்கு பதிலாக 'நகரத்திற்கு" என்று சகோதரர் எம் எஸ் எம் எழுதியிருந்தாலும் அதிலும் உண்மை இருக்கிறது.
சமீபத்தில் சென்னை வந்த நான் நடக்க இடமில்லாத நடைபாதைகளையும், மெட்ரோ ரயில் கட்டுமானத்திற்காக சாலைகளை 80 % அடைத்து வைத்திருக்கும் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியின் வேலைகளை நகரங்கள் நரகங்களாகவே ஆகிவிட்டதாக தோன்றியது.
நடை பாதையில் திறந்து கிடந்த EB எலக்ட்ரிக் பாக்சில் நோட்டீஸில் எழுதியிருந்த வாசகம் " ......சொர்கத்துக்கு அழைக்கிறார்'..என் அண்ணன் சொன்ன கமென்ட்: "இப்படி எலக்ட்ரிக் சர்க்யூட் எல்லாம் காலடியில் கிடந்தால் நேரா சொர்க்கம்தான் இதுக்கு என்னத்துக்கு அழைக்கனும்?'
இன்னாமாதிரி சமாளிக்கிறாய்ங்கய்யா!!!
நெய்னா செய்த எழுத்துப் பிழையை அவரே இன்னும் கரெக்ட் பண்ணல; இவரு இந்தப் போடு போட்டு வக்காலத்து வாங்குறாரு.
இது குழுமமா...குடும்பமா?
அதிகமாக மறுமையை எண்ணி அஞ்ச வேண்டும். அதற்காக சிரிக்காமலே இருந்தால் அதுவும் இஸ்லாமிய பண்பாடு அல்ல. சில நேரம் சிரிக்கவும் வேண்டும். அவ்வாறு தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை இருந்தது
அன்பாக வளர்த்த சிட்டுக்குருவி இறந்த சோகத்தில் இருந்தவரை நகைச்சுவைப் பேச்சால் மகிழ வைத்த நபி (ஸல்)
அழகற்ற தோற்றமுள்ள காய்கறி வியாபாரியை முதுகுக்குப் பின் வந்து கட்டிப்பிடித்து அவரிடம் தமாஷாக பேசிய நபி (ஸல்).
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேச்சில் நகைச்சுவை இருந்தாலும் அதில் பொய் இருக்காது,வெளிப்படையில் நபி (ஸல்) அவர்கள் சிரித்தாலும் மனதில் மறுமை பயம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்
பிறர் மனதை புண்படுத்தக்கூடிய. அல்லது பதட்டமடையச் செய்யக்கூடிய விளையாட்டும், கேலிப்பேச்சும் கூடாது
அருமையான பதிவை தந்து இன்னும் தரவிருக்கும் சகோ இக்பால் M. ஸாலிஹ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தொடக்கமே அழகாக எழுத்து கோர்வையில் அமைத்து அனைவரையும் அடுத்த பதிவை எதிர்பார்க்க தூண்டிய விதம் நன்று அல்ஹம்துலில்லாஹ்
"சிரிப்பு" என்பது சிநேகத்திற்கான முதல் தூது. இறுக்கமான சூழ்நிலையை இணக்கமாக்க உதவுவது. மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பகிரங்க அடையாளமே சிரிப்பு. சிரிக்கத் தெரிந்த ஒரே இனம் மனித இனம் தான். ஆரோக்கியத்திற்கான பல்வேறு சுவைகளில் "நகைச்சுவை"யும் ஒன்று. "நிச்சயமாக அவனே (மனிதனை) சிரிக்க வைக்கிறான்". (அல்-குர்ஆன் 53:43).
கருத்துகளைப் பதிந்த அன்பான சகோதரர்கள் அனைவர்க்கும் நன்றி! ஜஸாக்குமுல்லாஹு கைரன்!
ஒரு வேண்டுகோள்: பின்னூட்டத்திற்காக எடுத்துக்கொள்ளும் நேரங்களைவிட, நபிகளார்மீது ஒருமுறை ஸலவாத்துச் சொன்னால், பகரமாக பத்து அருள் அல்லாஹ்வால் வழங்கப்படுகிறது(கியாரண்டியாக): முஸ்லிம் 1/288.
வாருங்கள்! இன்றிலிருந்து அதிகமதிகம் அண்ணலார்மீது ஸலவாத்துச் சொல்வோமே, இன்ஷா அல்லாஹ்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
அன்புச் சகோதரர் அவர்களுக்கு,
//ஒரு வேண்டுகோள்: பின்னூட்டத்திற்காக எடுத்துக்கொள்ளும் நேரங்களைவிட, நபிகளார்மீது ஒருமுறை ஸலவாத்துச் சொன்னால், பகரமாக பத்து அருள் அல்லாஹ்வால் வழங்கப்படுகிறது(கியாரண்டியாக): முஸ்லிம் 1/288.//
ஜஸாக்கல்லாஹ் ஹைரன்.
அவ்வறே செய்வோம் இன்ஷா அல்லாஹ்.
ஆர்வத்துடன் (தலைப்புதான் ஆர்வத்துக்கு காரணம்)எதிர்பார்த்த இத்தொடரின் ஆரம்பமே இன்னும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
அவனே சிரிக்க வைக்கிறான். அழவும் வைக்கிறான். அவனே மரணிக்கச் செய்கிறான். உயிர்ப்பிக்கவும் செய்கிறான். (அல்குர்ஆன் 53:43)
/// “யா ஹுமைரா!” (சின்னச் சிவப்பழகே!) என்று செல்லமாக அழைக்கப்படும்போதெல்லாம், சிரித்துக்கொண்டே, “அல்லாஹ்வின் தூதரே, நீங்கள் வேடிக்கையாகவே பேசுகிறீர்கள்!” என்ற மூஃமின்களின் அன்னை ஆய்ஷா அவர்களை நோக்கி, “நான் நகைச்சுவையாகப் பேசினாலும் அதில் உண்மை மட்டுமே இருக்கும்” என்று இயம்பினார்கள். ///
****** இந்த ஹதீஸின் ஆதார நூல், எண் குறிப்பிடவும்.*******
*********************************
''நபிமணியும் நகைச்சுவையும்..!'' தொடரை தொடங்கியிருக்கும் ''சகோதரர் இக்பாலுக்கு வாழ்த்துக்கள்!''
தொடரில் வரும் ''ஹதீஸ்களின் ஆதார நூல்கள், எண்களை'' அவசியம் குறிப்பிடவும்.
Assalamu Alaikkum my dearest brother Iqbal,
Very happy to see your posting in AN. I do remember the days we all were together and share our views and vision about our religion and the noble life of our holy prophet.
I am not going to appreciate you for the first episode. Honestly speaking I was disappointed to read this first part, because I know very well you have a lot more of information about the life of our holy prophet.
I wish this is the best possible opportunity for you to share what all you know and what all you have read about our religion and the life of our holy prophet.
I think you break your silence after quite a long time since your "Thedal". I know you have the knowledge and wisdom enough to share with us.
Please carry on your work and make record of your search for wisdom.
Wassalam.
N.A.Shahul Hameed (Veliyoor Waasi)
//Veliyoor Waasi//
என்னா தெகிரியம்! எம்பூட்டு தெனாவட்டு! ஒழுங்கு மருவாதியா தொடர்ந்து பதுங்கியே இருக்கவும். இப்ப மட்டும் எதுக்கு தல காட்டணும்?
நீங்க மட்டுமா வெளியூரிலிருந்து வாசிக்கிறிய? நானும்தான் வெளியூர் அஜ்மானிலிருந்து வாசிக்கிறேன். எழுதறவனே வெளியூர் யூ எஸ்ஸிலிருந்துதானே எழுதறான்.
நெம்ப சொல்லிப்புடுவேன்... சலவாத்து வீணாகுதேன்னு பார்க்கிறேன்.
N.A.Shahul Hameed (Veliyoor Waasi)
சில "விளங்காத"வர்கள் பேசிய பேச்சு பலரையும் மன வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும் பல வெளிஊர் வாசிகளும் நம் உள்ளூர் வாசிகளுக்கு கல்வி எனும் அறிவை புகட்டியவர்கள் அவர்களும் முஸ்லிம்கள்தான்
அண்ணன் ஷாகுல் ஹமீது அவர்களுக்கு இந்த விளங்கதவர்களின் பேச்சு உங்களை போன்றோருக்கு மன உளைச்சலை ஏற்ப்படுத்தி இருந்தால் அதற்காக நாங்கள் உங்களிடம் மன்னிப்பு கோர தயாராக உள்ளோம்
அதிரை அதி. அழகு அவர்களின் தம்பி அதியழகாய்த் துவங்கியிருக்கும் இத்தொடர் எல்லார்க்கும் பயனளிக்கும் என்று நம்புகின்றேன். இதுவரை எவரும் சிந்திக்காத- சொல்ல நினைக்காத ஓர் அற்புதமானத் தொடராக அமையும் என்றும் நம்புகின்றேன். காரணம். சகோதரர் அதிரைக்காரன் ஜமாலுதீன் சொன்னது போல், நம் கண்மணி நபிகளார் (ஸல்) அவர்கட்கு நகைச்சுவை உணர்வே இல்லை என்பது போல் பரப்பப்பட்டு வரும் பொய்யான பரப்புரைகட்கு இடையில் இப்படிப்பட்ட ஆக்கம் காலத்தின் தேவை என்றும் நம்புகின்றேன்.
ஜஸாக்கல்லாஹ் கைரன்
ஸல்லல்லாஹூ அலா முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம்
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
மாஷா அல்லாஹ்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப்பற்றி அதிகம் கேட்டிருந்தும் இந்த தலைப்பை மிக சொற்பமாகவே கேள்விபட்டிருக்கின்றோம்,இன்ஷா அல்லாஹ் வெற்றிகரமாக தொடர வாழ்த்துகள்!...
மான் அ ஷேக்
இணைப்புகளும் ஆதாரங்களும்:
அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்களிடத்தில் தமாஷ் செய்கிறீர்களே? என்று கேட்டதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நான் உண்மையைத் தவிர வேறெதையும் சொல்லவில்லையே! என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி 1913)
மற்றவர்களைப் பயமுறுத்தியோ, ஏமாற்றியோ, கேலி செய்தோ நமது நகைச்சுவைகள் இருக்கக்கூடாது.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரும் வேண்டுமென்றோ அல்லது விளையாட்டாகவோ தனது நண்பரின் பொருளை எடுத்துக் கொள்ள வேண்டாம். தனது நண்பரின் கைத்தடியைக் கண்டாலும் அதை நண்பரிடத்தில் ஒப்படைத்து விடட்டும். (அறிவிப்பவர்: யஸீத் பின் ஸயீத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத் 17261).
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் அவர்களின் தோழர்கள் ஒரு பயணத்தில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களில் ஒருவர் உறங்கி விட்டார். வேறு சிலர் (அவரது) அம்புகளுக்கு அருகில் சென்று அதை எடுத்து வைத்துக் கொண்டார்கள். அம்மனிதர் உறங்கி எழுந்தவுடன் (அம்பு காணாமல் போனதைக் கண்டு) திடுக்குற்றார். (இதைப் பார்த்த) கூட்டம் சிரித்து விட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஏன் நீங்கள் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், இவரது அம்புகளை நாங்கள் எடுத்து (மறைத்து) வைத்துக் கொண்டோம். அவர் விழித்தவுடன் திடுக்குற்றார் என்று கூறினார்கள். ஒரு முஸ்லிமை திடுக்குறச் செய்வது எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அபீ லைலா, நூல்: அஹ்மத் 21986).
ஜரீர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: "நான் இஸ்லாத்தைத் தழுவியதிலிருந்து (நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்திக்க அனுமதி கேட்ட சமயத்திலும்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னைத் தடுத்ததில்லை. புன்முறுவலுடன் (சிரித்தவர்களாகவே) அல்லாமல் வேறு விதமாக அவர்கள் என் முகத்தைப் பார்த்ததில்லை." நூல்: புகாரி 6089)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: எவன் ஒரு கூட்டத்தினரைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய்யான செய்தியைக் கூறுகிறானோ அவனுக்குக் கேடு தான். அவனுக்கு கேடு தான். (அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதா (ரலி) நூல்: திர்மிதி 2237)
மாஷா அல்லாஹ் !
தெளிந்த நீரோடையில் அடியில் இருக்கும் ஆதாரங்கள் பளிச்சிடுகிறது !
ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா...
அஸ்ஸலாமு அலைக்கும்
நபிமணியும் நகைச்சுவையும் பாகம் இரண்டினை ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம்
அருமையான துவக்கம் இக்பால். அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் உன் மூலம் பல நல்லாக்கங்களை தர இறைஞ்சுகின்றேன். ஆமீன்.
Post a Comment