Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மக்கட்பேறில்லா மக்கட்கு ! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | September 14, 2012 | , ,

(*) பெற்றால் தான்
பிள்ளையா? - இது
தத்து எடுப்பவர்களின்
தத்துவம்.

பிள்ளை பெறாதவளும்
பெண்பிள்ளை என்பதை
ஏற்க மறுக்கும்
சமுதாயத்தின்
தத்துபித்துவம்.

(*) இன்பத்தின் விளைவாய்
விளைவது மகவு.
மகவு என்பது
மட்டுமல்ல
இன்பத்தின் அளவு.

(*) பேறு பலவகைகளுள்
"பெறுதல்" ஒருவகை.
"பெறும்" பேறில்லாதோர்
பெறும் பெயர்
கணக்கில் இடம்
பெறுதல் கடினம்.

(*) திருமணமாகி சில
திங்கள் கடந்தவுடன்,
"புழுபூச்சி உண்டா" என
விசாரிப்பவர்கள்..
அவர்களை அறியாமலேயே
இருமனங்களுக்குள்
புயலொன்றை உருவாக்கிப்
போகிறார்கள்.

(*) சூல்கொள்ளா சூழ்நிலையில்
உள்ளங்களில் அப்புயல்
சூழ்ந்து அவர்களை
சுழற்றிக் கொண்டிருக்கும்
தலைகீழாய்..

(*) நலம் விசாரிப்பவர்களின்
நலமில்லா கேள்விகளில்,
சுற்றத்தில் நிகழும்
சந்தோஷ நிகழ்வுகளில்,
உறவினர் வீடுகளில்
பிறக்கும் ஒவ்வொரு
குழந்தையின் பிறப்புகளில்

குழந்தை இன்மை
சுட்டிக்காட்டப் படும்போதெல்லாம்
மனம் உணருகின்ற வலி,
பிரசவ வலியின்
பன்மடங்காக இருக்கக்கூடும்.

(*) குத்திக் காட்டலும்
குறையை சுட்டிக்காட்டலும்
குறையின்றி செய்யும்
கொடூர சமூகம்.

(*) கருகொள்ள சில
காலம் ஆனதும்
அவர்களுக்குள்
உருகொள்ளும் உணர்வே..
உரு-கொள்ளும் உயிரையும்,
கொல்லும்!!

(*) எண்பதிலும் தந்தை
ஆன நபி
இப்றாஹீம்(அலை)இன்
மா-வரலாற்றை
மறந்தவர்கள் இவர்கள்.

(*) எண்பதில் நடந்தது
"இனிமேல் இல்லை"
என்பதிலும் நடக்கலாம்,
இறைவனின் நாட்டம்
இப்படித்தான் என்றிருப்பின்.

(*) குழந்தைப்பேறு
இல்லாதோருக்கு
குறைவின்றி
கொடுக்கப்படவேண்டியது...
மருந்துகள் அல்ல.
"இறைநம்பிக்கையும்"!!
"தன்னம்பிக்கையும்"!!

(*) இக்கைகள் வேண்டியே
இருகைகள் ஏந்திவிட,
கைகளில் தவழும்
ஓர்
கைக்குழந்தை (இன்ஷா அல்லாஹ்).

-அதிரை என்.ஷஃபாத்

13 Responses So Far:

Shameed said...

மக்கட்பேறில்லா மக்கட்கு இது ஒரு தன்னம்பிக்கையான ஆறுதல் கவிதை

sabeer.abushahruk said...

அர்த்தம் பொதிந்த கவிதை.

வாழ்த்துகள், ஷஃபாத்.

Ahamed irshad said...

அருமை... ந‌ல்லாயிருக்கு ஷ‌ஃபாத்.. என்னையும் க‌விதை எழுத‌ தூண்டுகிற‌து..

sabeer.abushahruk said...

வாசிக்கத் தகுத்யான இரண்டு கடிதங்கள் சத்தியமார்க்கம் தளத்தில்:

http://www.satyamargam.com/2023

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஓய்வு நாளென்பதால் நல்லா தூங்கிட்டேன் !

தம்பி ஷஃபாத்,

மக்கட்பேறு... தவிக்கும் உள்ளங்களின் உணர்வுகளுக்குத்தான் தெரியும், அருமை !

மழலையும் அதனைத் தொடர்ந்த சிறு பருவ குழந்தைகளின் ஆயத்தங்களை ரசித்தால், அதனை பகிர்ந்தால் அனைவரும் மிகவும் ரசிப்பார்கள் ஆனால் ஏனோ ஒரு சிலரிடம் அதுகூட பொருந்திக் கொள்ள முடியவில்லை ! கொஞ்சும் இடம் எதுவாக இருந்தால் என்ன கொஞ்சம் குழந்தை நம்முடையதுதானே ! :)

கவிக் காக்கா,

சுட்டியதை இப்போதுதான் பார்த்தேன்... அங்கே இப்படி சொல்லிவிட்டுத்தான் வந்திருக்கிறேன்...

----
//நீரூற்று ஏதுமில்லை
நிலத்திலும் ஈரமில்லை
விழியருவி பெருக்கும் நீரில்
செழிக்கிறது பாலைவனம்//

HIGH CLASS !!

உருக்கும் உணர்வு !

இரண்டு கடிதங்களுக்கும் ஸ்டாம்ப் ஒட்டாமல் விட்டார்கள் நிறையபேர் ! அதனால் முகவரி தேடுகிறது !
--------

KALAM SHAICK ABDUL KADER said...

//குழந்தை இன்மை
சுட்டிக்காட்டப் படும்போதெல்லாம்
மனம் உணருகின்ற வலி,
பிரசவ வலியின்
பன்மடங்காக இருக்கக்கூடும்.//

உள்ளத்தில் உண்டாகும் வலிகள்; உங்களின் கவிதை வரிகள்!

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். நிற்க! தமிழும் அன்பும் கற்கவைத்த கவிதை கண்ணீர்மழை! இங்கே கருத்தை கவரும் மழலை பற்றிய கவிதை மழை! இரண்டும் அஞ்சல் தலை ஓட்டாவிட்டாலும் முத்திரை பதிக்கிறது.மூத்தவர் கவிஅரசன் என்றால் சின்னவர் கவி இளவரசு! வாழ்துக்கள்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அர்த்தமும், ஆறுதலும் நிறைந்த நற்கவிதை!

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...


(*) எண்பதில் நடந்தது
"இனிமேல் இல்லை"
என்பதிலும் நடக்கலாம்
தம்பி தமிழ் இளக்கனத்தி தாங்கள் எத்தனை மார்க் வாழ்த்துக்கள்

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

\\இக்கைகள் வேண்டியே
இருகைகள் ஏந்திவிட,
கைகளில் தவழும்
ஓர்
கைக்குழந்தை //

அசத்தலான வரி(கள்) அருமையாக கவியமைத்த நண்பர் ஷஃபாத்க்கு வாழ்த்துக்கள்

அதிரை என்.ஷஃபாத் said...

வாசித்த கண்களுக்கும், சில வரிகளிட்ட விரல்களுக்கும் நன்றி!!

Yasir said...

தம்பி ஷஃபாத்தின் குழந்தை இல்லையே என்று ஏங்கும் தம்பதிகளுக்கு ஷிஃபாத் தரும் கவிதை இது

////கொடுக்கப்படவேண்டியது...
மருந்துகள் அல்ல.
"இறைநம்பிக்கையும்"!!
"தன்னம்பிக்கையும்"!!// excellent

KALAM SHAICK ABDUL KADER said...

கருவிலாக் குழந்தைப் பேறின்மையைக்
கவிதைக் குழந்தைக்கு நீயே
கருவாக்கி வனைந்த கவிபடித்து
கண்ணீர்க் கடலில் மிதக்கின்றது
“கல்ப்” எனும் கப்பலும்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு