(*)வகுப்பென்னும் வயிற்றுக்குள்
குழந்தைகள் சுமக்கும்
அன்னையர் ..
ஆசிரியர்கள்.
(*) மாதா பிதா
வரிசையில்
மூன்றாவதாய் குரு..
முதலிருவரின்
மொத்தமாய் ஒரு உரு..
(*) அறிவியலின் முன்னேற்றத்தில்
இன்று
ஆன்லைனில் கற்றல்
சாத்தியம், ஆயினும்
ஆசானிடம் கற்றல்
அலாதி.
துவளும் நேரத்தில்
தோளில் மெல்ல
தட்டி கொடுக்குமா
எந்தத் தளமும் ?
(*) சிகரம் தொட்ட
எவருக்கும், வெற்றியின்
அகரம் சொல்லியவர்கள்
ஆசிரியர்கள்.
(*) சமீப காலங்களில்,
பாலியல் தொல்லைதரும்
பயிற்றுவிப்பாளர்கள்,
தற்கொலை செய்துகொள்ளும்
தளிர்கள்!!
எங்கே போனது
தன்னலமற்ற அன்பும்
தன்னை நம்பிய
தெம்பும்?
(*) மொழியொடு கணிதம்..
முறையாய் அறிவியல்..
சரித்திரம்... சமூகம்...
படித்திடும் பிள்ளை..
புத்தகம் தாண்டியது
ஆசிரிய-மாணவ
பந்தத்தின் எல்லை.
(*) 'உடையார்முன் இல்லார்போல்'
என்னும் உவமைக்கு
இலக்கணமாய்
அது இன்று இல்லை
அது தானே தொல்லை.
(*) பால்பிரிவு தாண்டியது
கல்வி,
படிப்பிற்கு முந்தையது
பணிவு.
வகுப்புகளைக் கடந்தது
வழிநடத்தல்.
மதிபெண்களைவிட
மதிக்கத் தக்கது
பண்பு
-என்னும்
நிதர்சனத்தை
கற்பிப்போரும் கற்போரும்
கைவிட்ட
நிலை..
அது தீமை
சமைக்கப்படும் உலை.
(*) வளமான உலகம்
நலமான பள்ளியில்
துவங்கட்டும்..
கண்ணியமும் கனிவும்
கற்பிப்போரிடமும்
பணிவும், படிப்பில் உறுதியும்
கற்போரிடமும்
துலங்கட்டும்.
~அதிரை என்.ஷஃபாத்
எனது மதிப்பிற்குரிய ஆசிரியப் பெருந்தகைகளுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.
17 Responses So Far:
/// மாதா பிதா
வரிசையில்
மூன்றாவதாய் குரு..
முதலிருவரின்
மொத்தமாய் ஒரு உரு.. ///
//எங்கே போனது
தன்னலமற்ற அன்பும்
தன்னை நம்பிய
தெம்பும்?//
WOOOWWW !!!
//(*) சிகரம் தொட்ட
எவருக்கும், வெற்றியின்
அகரம் சொல்லியவர்கள்
ஆசிரியர்கள்.//
உண்மை...!
//துவளும் நேரத்தில்
தோளில் மெல்ல
தட்டி கொடுக்குமா
எந்தத் தளமும் ?// நறுக்கென்றும் நச்சென்றும் இருக்கிறது. பாராட்டுக்கள்.
குட்டிக்குட்டி வரிகளாக இருந்தாலும் மனதில் வந்து குந்திக்கொ(ல்)ள்கிறது உங்கள் கவிதை...கவிதை அருமை அதற்க்கான நீங்கள் எடுத்துக்கொண்ட “விதையும்” அருமை
To Brother அதிரை என்.ஷஃபாத்,
//மாதா பிதா
வரிசையில்
மூன்றாவதாய் குரு..
முதலிருவரின்
மொத்தமாய் ஒரு உரு..//
கிளாசிக் வரிகள். ஏதாவது கவிதையரங்கில் வாசிக்கப்பட்டிருந்தால் கேட்கப்போகும் கைதட்டலை இப்போதே என்னால் உணர முடிகிறது.
//வளமான உலகம்
நலமான பள்ளியில்
துவங்கட்டும்..
//
இந்த மூன்று வரிகளுக்குள் நல்ல உலகம் அடங்கிவிட்டது
அழகான கவிதை. அருமையான எண்ணம். தரமான எழுத்து. நியாயமான கவலை.
//கற்பிப்போரும் கற்போரும் (நற்பண்புகளை)
கைவிட்ட
நிலை..
அது தீமை
சமைக்கப்படும் உலை.//
உண்மை.
வாழ்த்துகள் ஷஃபாத்.
ஆசிரியர் தினத்தில் நல்ல கவிதை
பால் பிடிவு தான்டியது கள்வி
படிப்பிற்கு முந்தயது பணிவு
எழுத்தில் நல்ல கணிவு
பால் பிடிவு தான்டியது கள்வி
படிப்பிற்கு முந்தயது பணிவு
எழுத்தில் நல்ல கணிவு
எங்கே போனது
தன்னலமற்ற அன்பும்
தன்னை நம்பிய
தெம்பும்?
---------------
தம்பி ஷஃபாதின் எல்லாரையும் யோசிக்க வாய்த்த வரிகள் ....!
also please read this to
http://adirainirubar.blogspot.com/2011/05/blog-post_11.html
வாசித்த எல்லோருக்கும் என் நன்றி!!
நாளுக்கேற்ற நல்ல கவிதை!
ஷபாஷ் ஷஃபாத்
வாசிக்கவும்; ஆசிரியர்களை
நேசிக்கவும் வைத்த கவிதை
அஸ்ஸலாமு அலைக்கும். தம்பி சபாத் ஆசிரியர்களுக்கு நடத்திய பாடம் நல்லா இருக்கு! நாம் என்றும் ஓர் கட்சிதான் தம்பி! வாழ்த்துக்கள்.
Post a Comment