Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஆசிரியர்களின் தியாகம் ஆ.. சிறியதா?! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | September 09, 2012 | , , ,

இந்த
நாட்டின் முதுகெலும்பு
நீங்கள் டிசைன் செய்தது.
இளைஞர்களின் மூளை
நீங்கள் பதியம் இட்டது.

நீங்க‌ள்
அக‌ர‌ முத‌ல
ஒலித்துக்காட்டிய‌பின்
எங்க‌ள் அறிவு
நீள‌மாயும் அக‌ல‌மாயும்
ஆழ‌மாயும்
பாய்ந்து சென்ற‌து.
உங்க‌ள் கையில்
சாக்பீசும் பிர‌ம்பும்
இருந்தாலும் கூட
அதில்
எங்கள் வாழ்க்கைச் ச‌க்க‌ர‌ம்
எங்க‌ளுக்கு காட்சி தந்தன.

குரு என்னும்
சுட‌ரேந்தியாய்
நீங்க‌ள்
வெளிச்சம் த‌ந்த‌தால் தான்
உங்க‌ளுக்கு பின்னால் இருப்ப‌வ‌னின்
முக‌ம் தெரிந்த‌து.

மாதா பிதா குரு..
மாசிலா அறிவுக் குழந்தையின் கரு

வெளிச்சம்
எல்லோருக்கும்
கிடைத்ததால் தானே
எங்க‌ளுக்கு
இந்த‌ வ‌ர்ண‌ங்க‌ளும் புரிந்த‌ன‌.
இந்த‌ இருட்டும் புரிந்த‌து.

மெழுகுவர்த்தியாய்ச்
சுடரை ஒன்றன் பின் ஒன்றாய்ப்
பற்றிக் கொண்டே
படர்ந்தத் தொடர்
அறிவெனும் அணையா விளக்காய்

இருப்பினும்
ஒரு கேள்வி.
ஒரு ச‌மன்பாடு ஒன்றை எழுதி
தீர்வு எழுதி கொண்டுவ‌ர‌ச்சொன்ன‌
அந்த‌ ஹோம் ஓர்க்
இன்னும் ஹோம் ஒர்க் ஆக‌வே
இருக்கிற‌து!
மக்கள் இஸ் ஈக்குவல் டு ஜனநாயம்
என்பதே அந்த சமன்பாடு.

பொதுவான‌ ம‌க்க‌ள் ஒரு சுநாமி.
அதில்
த‌னியான‌ "ஒரு"ம‌க்க‌ள் யார்?

ஏனெனில்
நாங்க‌ள் வெளிச்ச‌ம் என்று நினைத்து
அறுப‌த்தைந்து ஆண்டுக‌ளாய்
ஜனநாயகத்தை விதைக்கிறோம்.
ம‌க‌சூல் என்று பெறுவ‌தோ
பேரிருள் தான்.

நீங்க‌ள் எழுதிக்கொண்டு வ‌ர‌ச்சொன்ன‌
தீர்வு
உங்க‌ளிட‌மாவ‌து இருக்கிற‌தா?
தெரிய‌வில்லை.
ஆச்ச‌ரிய‌மாக இருக்கிற‌து.
இந்த‌ ஆச்சரிய‌ம் தான்
"ஆசிரியர்காள் உங்கள் தியாகம்
ஆ.. சிறியதா..?!” என்றென்னை
ஆச்சரியப்பட வைத்தது;
இக்கவிதை எனும் விதையை
இங்கு விதைத்தது!

அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

13 Responses So Far:

sabeer.abushahruk said...

வெளிச்சம் வேண்டி ஜனநாயகம் விதைத்து இருட்டை மகசூல் செய்வது வித்தியாசமான எண்ணம்.

வாழ்த்துகள், கவியன்பன்.

crown said...

நாங்க‌ள் வெளிச்ச‌ம் என்று நினைத்து
அறுப‌த்தைந்து ஆண்டுக‌ளாய்
ஜனநாயகத்தை விதைக்கிறோம்.
ம‌க‌சூல் என்று பெறுவ‌தோ
பேரிருள் தான்.
----------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.ஆமாம் இருள்தான் மகசூல் ஆனால் அரசியல்வாதிகளுக்கு இந்த சனனாயகம் அதிக வசூல் தரும் மகசூல் எனவே அவர்களுக்கு என்னவோ வெளிச்சம்தான்.

அதிரை சித்திக் said...

நிழலின் அருமை வெயிலில் தெரியும்
அது போல ஆசிரியரின் அருமை
பரிட்சையில் தெரியும் ....!
கவியன்பன் காக்காவின்
கவி அறிவூட்டும் அமுதம் ...
வாழ்த்துக்கள் ...

Ebrahim Ansari said...

அற்புதமான சிந்தனைகளை அடக்கிய கவிதை. வழக்கமான பாணியில் இல்லாமல் புதுக்கவிதையாக வடித்து தந்திருக்கிறீர்கள்.

ஒரு புறம ஆசிரியர்களுக்கு புகழ்மாலை மறு புறம் இன்றைய நாட்டின் சூழலை சுட்டிக்காட்டி ஒரு சாடல். அற்புதம்.

அது என்னமோ தெரியவில்லை. நான் உணர்கிறேன். அண்மைக்காலமாக உங்கள் கவிதைகளில் ஒரு புது மெருகு . பாராட்டுக்கள்.

ZAKIR HUSSAIN said...

To Bro AbulKalam,

இப்படி தலைப்புக்குள்ளேயே தமிழில் விளையாட நீங்கள் சமீபத்தில் சகோதரர் கிரவுனிடமோ, அல்லது வாவன்னா சாரிடமோ பேசியிருக்கவேண்டும்.

அப்துல்மாலிக் said...

சற்றே மாறுபட்ட கோணத்தை அலசுகிறது இந்த வரிகள்,,,,

Yasir said...

வித்தி “ஆ” சனமான சிந்தனை ,அச்சிந்தனையை தன் மொழித்திறமையைக் கொண்டு கவியாக வரைந்த லாவகம்...சகோ.கவியன்பன் கலாம் வாழ்த்துக்கள்

Noor Mohamed said...

எங்கள் ஆசான்கள் திருவாளர்கள். புலவர் இராமதாசு, புலவர் சண்முகம் இவர்களிடம் கற்ற தமிழ் அறிவை, ஹாஜா முஹைதீன் சார் அவர்களிடம் கற்ற கணித அறிவைக் கொண்டு, கூட்டி, பெருக்கி, கவிதையாக வார்த்து வாழ்த்தும் கவியன்பன் கலாம் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

*************************************
இன்னும் ஹோம் ஒர்க் ஆக‌வே
இருக்கிற‌து!
மக்கள் இஸ் ஈக்குவல் டு ஜனநாயம்
*************************************
இன்னும் கேள்விக்குறியே!


*************************************
ஏனெனில்
நாங்க‌ள் வெளிச்ச‌ம் என்று நினைத்து
அறுப‌த்தைந்து ஆண்டுக‌ளாய்
ஜனநாயகத்தை விதைக்கிறோம்.
ம‌க‌சூல் என்று பெறுவ‌தோ
பேரிருள் தான்.
*************************************
தன்னையும், தன் குடும்பத்தையும்
பற்றி மட்டுமே அக்கரை உள்ள
அரசியல் வியாதிகள்
இருக்கும் வரை இருட்டுதான்!

''வல்ல அல்லாஹ்வின் ஆட்சி
ஏற்படும்பொழுது
வெளிச்சத்தைக் காண முடியும்!''

'நல்லாசிரியரின் நற்குணத்தில்
ஆரம்பித்து
நல்ல ஜனநாயகம்
தேவை' என்பதை விளக்கும்
நல்லதொரு கவிதை!

அன்புச்சகோதரர்: அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

Shameed said...

உங்களிடம் கனரக கவிதையும் உண்டு
இலகுரக கவிதையும் உண்டு

இந்தக்கவிதை இலகுரகத்தை சார்ந்த கவிதை காரணம் படிக்க மிக இலகுவாக இருந்தது

Vavanna (உமர்தம்பிஅண்ணன்) said...

புல் புல் கலாம்,
MOUTHFUL SALAM !
ஹோம் ஒர்க், இன்னும் ஹோம் ஒர்க்காகவே இருப்பதால்தான்,
அமீரகத்தில் பொருள் ஈட்டிக் கொண்டிருந்தும் ஹோம் சிக் இன்னும் ஹோம் சிக் காகவே இருந்து குத்திக் கொண்டிருக்கிறது!
வா..

KALAM SHAICK ABDUL KADER said...

வாழ்த்திய அனைவர்க்கும் நன்றி ஜஸாக்கல்லாஹ் கைரன். பதிவு செய்த அண்பு நெறியாளறர்அவர்கட்கும் நன்றி ஜஸாக்கல்லாஹ்கைரன். பெருகி வரும் உங்களின் பேராதரவே மெருகூட்டியது இப்படைப்பின் அருமைக்கு

KALAM SHAICK ABDUL KADER said...

வாழ்த்திய அனைவர்க்கும் நன்றி ஜஸாக்கல்லாஹ் கைரன். பதிவு செய்த அண்பு நெறியாளறர்அவர்கட்கும் நன்றி ஜஸாக்கல்லாஹ்கைரன். பெருகி வரும் உங்களின் பேராதரவே மெருகூட்டியது இப்படைப்பின் அருமைக்கு

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு