Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளி திறப்பு விழா - நேரலை 1

தாஜுதீன் (THAJUDEEN ) | July 01, 2010 | ,

அதிரை கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளிவாசல் திறப்பு விழா நேரடி ஒலிப்பரப்பு www.beachjummahmasjid.com                                                               
என்ற பள்ளிவாசலுக்கான புதிய இணைய தளத்தில் ஒலிப்பரப்பாகிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.     
                                                                                            
இந்த புதிய இணையத்தளம் நாளை காலை முதல் செயல்படத் தொடங்கும் என்பதை இணையத்தள நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நம்முடைய வலைப்பூவும் ஒலிப்பரப்புவதற்கு அனுமதி பெற்றுள்ளோம்.

ஒலிபரப்பு நேரம் நாளை காலை 08:30 மணி முதல் ஆரம்பித்து ஜும்மா தொழுகை முடியும் வரை நடைப்பெறும்.

விழா ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்துள்ளனர் விழா கமிட்டியினர்.

தற்போது நமதூர் பெண்கள் பார்வையிடுவதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளது, எல்லாத்தெருக்களிலிருந்தும் வரும் பெண்கள் கூட்டம் கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளியை பார்வையிட வந்த வண்ணம் உள்ளனர்.

கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளி கமிட்டியுடன் சேர்ந்து இளைஞர் அமைப்புகளும், தன்னார்வ தொண்டு செய்யும் சகோதரர்களும் பெண்கள் செல்வதற்கு எந்த இடையூரும் இல்லாமல் வாகனப் போக்குவரத்தை சிறப்பாக செய்துவருகிறார்கள்.

நாளை காலை விழாவுக்கு வருபவர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்காக தனியாக வாகனங்கள் நிறுத்தும் பகுதி கடற்கரைத் தெரு குளத்துக்கு அருகில் உள்ள விளையாட்டு அரங்கில் மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழாவுக்கு வரும் சகோதரர்களின் தாகம் தீர்ப்பதற்காக தண்ணீர் பந்தல்கள் போடப்பட்டுள்ளது.

ஜும்மா தொழுகை முடிந்தவுடன் வந்த அனைவருக்கு உணவு ( நார்ஸா) வழங்க ஏற்பாடுகள் மிக சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

இரவு நேரம் என்பதால் புகைப்படங்கள் அதிகம் எடுக்க முடியவில்லை. இன்ஸா அல்லாஹ் நாளை நிறைய செய்திகளுடன் அதிக புகைப்படங்கள் நம்முடைய இணையத்தளத்தில் பதியப்படும்.

1 Responses So Far:

Shameed said...

ஆக அருமை ,அசத்தல் ,உடன் பதிந்து விபரம் தந்ததற்கு நன்றி

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு