நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பத்து ஆயிரம் அடி வாங்கிவிட்ட அதிரைநிருபர் ! 21

தாஜுதீன் (THAJUDEEN ) | ஞாயிறு, ஜூலை 25, 2010 | , , ,


அன்பான அதிரைநிருபர் வாசக சகோதர சகோதரிகளுக்கு முதலில் அஸ்ஸலாமு அலைக்கும். அல்லாஹ்வின் உதவியாலும் உங்களின் ஆதரவு,                ஒத்துழைப்பு, பங்களிப்பு ஆலோசனைகளினாலும்        நம் அதிரைநிருபர் வலைப்பூ மிகச் சிறப்பாக இணையக்கடலில் மிதந்து நம் அதிரை மக்களின் இதயத்தில் இடம்பிடித்து வருகிறது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

அதிரைநிருபர் ஆரம்பித்து ஒரு மாதம் கூட முடியாவிட்டாலும் நாளுக்கு நாள் வருகையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதில் நம் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி. "இணையத்தில் மூலம் நம் அதிரை மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்த நம்மால் ஏன் முடியாதா?" என்று கேள்வியுடன் பிரச்சினைகள் தூண்டாத நல்ல செய்திகளை மட்டும் நம் மக்களிடம் பகிர்ந்துக் கொண்டு ஒற்றுமையை ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது நம் அதிரைநிருபர். இன்று அதிரைநிருபர் 10000 செல்ல அடிகள் வாங்கியுள்ளது, மிக்க மகிழ்ச்சி.

நேற்று டெம்லெட் இலவசமாக வழங்கிய சகோதரர் ஒரு JAVA SCRIPTயை தூக்கிவிட்டார் அதனால் அதிரைநிருபரின் உருவத்தில் சிறிய மாற்ற இருந்தது, அல்லாஹ்வின் உதவியால் இப்போது சரி செய்யப்பட்டுள்ளாது.

நம் அதிரைநிருபர் எந்த சர்ச்சையான செய்திகளை பதிவு செய்யாது, அப்படி பதியும் செய்திகள் சர்ச்சையானது என்று தெரிந்தாலோ அல்லது வாசகர்கள் தெரியப்படுத்தினாலோ நிச்சயம் உடனே நீக்கப்படும் என்பதை உங்கள் அனைவருக்கு தெரிவித்துக்கொள்கிறோம். அதிரைநிருபருக்கு என்று புதிய மடல் முகவரி தொடங்கப்பட்டுள்ளது,  adirainirubar@gmail.com  நீங்கள் அனைவரும் இதில் தொடர்ப்பு கொள்ளலாம்.

மீண்டும் அனைவருக்கும் நினைவு படுத்த விரும்புகிறோம், நம் அதிரைநிருபர் வலைப்பூ எந்த அதிரை வலைப்பூவுடன் போட்டி போடவில்லை போட்டி போட வேண்டிய அவசியமும் இல்லை. மற்ற வலைப்பூக்கள் நடத்துபவர்களும் நம் சகோதரர்கள் என்ற எண்ணம் எப்போதும் அதிரைநிருபருக்கு உள்ளது என்பதை நம்முடை அதிரைமணமே சாட்சி.

இனிவரும நாட்களில் நிறைய நல்ல பல தகவல்கள் வெளிவர இருக்கிறது. ரமலான் மாதம் வருகிறது வழக்கம் போல் தன் எழுத்துக்களால் நம் அனைவரையும் நல்ல சிந்தனையின் பக்கம் திரும்ப செய்யும் நம் சகோதரர்களின் நல்ல கட்டுரைகள் வெளிவரும் என்று நாம் எதிர்ப்பார்கலாம்.

ஊரிலும், வெளிநாடுகளிலும், குடும்பங்களையும், நண்பர்களையும் விட்டு பிரிந்துள்ள நம் அனைத்து அதிரை சகோதர சகோதரிகளுக்கு நல்ல செய்திகளை தந்து, நல்ல கருத்து பரிமாற்றத்துடனும் ஒற்றுமையுடனும் நல்ல மனநிம்மதியை ஏற்படுத்த அதிரைநிருபர் வலைப்பூ முயற்சி செய்யும்.  இன்ஷா அல்லாஹ்.

அதிரைநிருபர் வலைப்பூவுக்கு ஆதரவும்,ஒத்துழைப்பும், ஆலோசனைகளும் வழங்கிவரும் நம் அனைத்து அதிரையின் அன்பானவர்களுக்கும் (பெயர்கள் குறிப்பிடவில்லை) மிக்க நன்றி. எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும், நல்ல ஈமானையும் தந்தருவானாக என்று பிராத்தனை செய்தவனாக விடைப்பெறுகிறேன்.

தொடர்ந்து இணைந்திருங்கள்...

அன்புடன் தாஜுதீன்.

25.07.10

21 Responses So Far:

அப்துல்மாலிக் சொன்னது…

வாழ்த்துக்கள் சகோ
மென்மேலும் நல்ல தகவல் திரட்டியாக செயல்பட்டு நம்மூர் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்பது என் அவா

ஒரு சில ஏரியாவுக்காக அல்லாமல் ஊருக்காக ஒற்றுமையை மனதில் கருதி செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

Yasir சொன்னது…

வாழ்த்துக்கள் தாஜீதீன்...அதிரை நிருபர் விரைவில் ஒரு கோடி அடிகள் வாங்கி...அதிரையின் நம்பர் ஒன் என்ற ஒற்றுமை இணையமாக உருவேடுக்கும் காலம் வெகு விரைவில் இல்லை

Yasir சொன்னது…

"FIRST IMPRESSION IS THE BEST IMPRESSION"-- ADIRAI NIRUBAR GOT THIS IMAGE WITH ITS VISITORS AND WELL WISHERS ALREADY...KEEP THE GOOD WORK GOING MR.ADIRAI NIRUBAR

shahulhameed சொன்னது…

இத்துடன் பத்து ஆய்ரத்தி மூன்று அப்துல் மாலிக்கும் யாசிரும் முந்திகொண்டுவிடார்கள்

shahulhameed சொன்னது…

25/07/10 6:24 PM
வாழ்த்துக்கள் தாஜீதீன்...அதிரை நிருபர் விரைவில் ஒரு கோடி அடிகள் வாங்கி...அதிரையின் நம்பர் ஒன் என்ற ஒற்றுமை இணையமாக உருவேடுக்கும் காலம் வெகு விரைவில் இல்லை

ஒரு கோடி ஒன்னு நாங்க அடிச்சிருவோம்லே

அபுஇபுறாஹிம் சொன்னது…

பேட்டிங் ஆர்டர் சரியா(க) இருந்ததால்தான் இப்படி ஸ்கோர் எட்ட முடிந்தது.. ஆடுகளத்தில் தரமானமவர்கள் இருக்கிறார்கள் இன்னும் வளரவேண்டும் தொடர வேண்டும் இன்ஷா அல்லாஹ்..

வாழ்துக்கள் !

crown சொன்னது…

சகோ.சாகுல் பவுலிங் போட்ட கொஞ்சம் கொல நடுங்குதுங்க!
-------------------------------------------------
பேட்டிங் ஆர்டர் சரியா(க) இருந்ததால்தான் இப்படி ஸ்கோர் எட்ட முடிந்தது.. ஆடுகளத்தில் தரமானமவர்கள் இருக்கிறார்கள் இன்னும் வளரவேண்டும் தொடர வேண்டும் இன்ஷா அல்லாஹ்..

வாழ்துக்கள் !

shahulhameed சொன்னது…

crown says
சகோ.சாகுல் பவுலிங் போட்ட கொஞ்சம் கொல நடுங்குதுங்க!


சகோ crown பயப்பட வேண்டாம் நாம் போடும் பவுலிங் நம் சமுதாயம் முன்னேர வேண்டிதான்

crown சொன்னது…

சகோ crown பயப்பட வேண்டாம் நாம் போடும் பவுலிங் நம் சமுதாயம் முன்னேர வேண்டிதான்
---------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.அப்ப சிக்ஸர்தான்.

அபுஇபுறாஹிம் சொன்னது…

க்ரவ்ன்(னு) நீ அப்படி சிக்ஸர் அடித்த பந்தை பிடிக்க எல்லா முஹல்லா(தெரு)விலிருந்தும் ஒத்துமையா வருவார்கள்னு நினைக்கிறேன் (இன்ஷா அல்லாஹ்)

crown சொன்னது…

க்ரவ்ன்(னு) நீ அப்படி சிக்ஸர் அடித்த பந்தை பிடிக்க எல்லா முஹல்லா(தெரு)விலிருந்தும் ஒத்துமையா வருவார்கள்னு நினைக்கிறேன் (இன்ஷா அல்லாஹ்)
--------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் அட பாவிங்களா ஒரு மனுசன அவுட்டாக்க எல்லாரையும் திரட்டிக்கிட்டு வருவீங்களா?.சரி,சரி நான் வீழ்ந்தாலும் சமுதாயம் வாழ்ந்தா சரி.அல்லாஹ் அக்பர்.

உன்னைப்போல் ஒருவன் சொன்னது…

ஆயிரம் அடிவாங்கிய அபூர்வ சிந்தாமனி

அப்புரம் அடிஅடியாய் வாங்கிய செந்தில் உபயம் கவுன்டமணி

எப்போழுதும் வடிவேலுக்கு இலவசமாய்
கொடுக்கும் அம்முணிகள்

இப்பொழுது அதிரை அனானிகள்

உண்மையை உரக்கச்சொன்னால் நிரப்பமாய் அடிவாங்குவாய் நீ!!

harmys சொன்னது…

உண்மையை உரக்கச்சொன்னால் நிரப்பமாய் அடிவாங்குவாய் நீ!!


super halid kaka

அபுஇபுறாஹிம் சொன்னது…

உ.ஒ. : அடிமேல் அடிவைத்து முன்னேறனும்தானே !

Zakir Hussain சொன்னது…

Wish you all the best to Bro Taj & all the contributors & commentators.

Zakir Hussain

அதிரைநிருபர் 1 சொன்னது…

வாங்க அன்பு சகோதரர்கள் மாலிக்,யாசிர், சாஹுல், அபுஇபுறாஹிம்,தஸ்தகீர்,இர்ஷாத்,ஹாலித், அப்துல் ரஹ்மான்,ஜாஹிர் ஹுசைன் மற்றும் அதிரைநிருபரை பார்வையிட்டுக்கொண்டிருக்கு அனைவரும்.

உங்கள் அனைவரின் வருகைக்கு நன்றி.

நிச்சயம் உன்மையை உரக்க சொல்லி நிறைய செல்ல அடிகள் மட்டும் வாங்கலாம். அடி மேல் அடி வைத்து நிதானமாக இந்த இணையக்கடலில் மிதந்து ஒற்றுமை என்னும் கரையை சென்றடையலாம். இன்ஷா அல்லாஹ்.

யாருடைய மனதையும் பாதிக்காத நகைச்சுவை உணர்வுள்ள பின்னூட்டங்களும், நல்ல சிந்தனையை தூண்டும் கருத்து பின்னூட்டங்களும் தான் நம் அதிரைநிருபரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்கள்.

அதிரை அஹ்மது சொன்னது…

Wonderful! Gorgeous! Your innate intention of UNITY is welcome!

ahamed சொன்னது…

"Congratulations on your success. This is the beginning of your path. We are here to stand by your side every step of the way ..."

Ahamed sulthan

mohamed சொன்னது…

மாஷாஅல்லாஹ் மேலும் மேலும் வழர எங்கலுடய துவா எப்போதும் உண்டு

முகம்மது புஹாரி தமாம்

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+