Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எங்கே சுகாதாரம்! - கை கழுவிட வேண்டியதுதான் 19

தாஜுதீன் (THAJUDEEN ) | July 10, 2010 | , , ,

நம்மூரில் சுகாதார முகாம் ஷிஃபா மருத்துவமனையில் நடைப்பெற்றுவரும் இவ்வேலையில் இந்த கட்டுரை பயனுள்ளதாக இருக்கும்.                                                 

நாம் உட்கொள்ளும் உணவு, நாம் நம் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும் முறை, உடற்பயிற்சி, போன்ற அனைத்தும் நம் உடலை ஆரோக்கியமாக பேணிக்காப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.                                  பெரும்பாலான நோய்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளாததினால் ஏற்படுகிறது.

தலையை (சிரசு) சுத்தம் செய்தல்
வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை ஷாம்பு அல்லது சீக்காய் உபயோகப்படுத்தி தலைக்கு குளிக்கலாம்.

கண், காது மற்றும் மூக்கை சுத்தம் செய்தல்
சுத்தமான தண்ணீரை கொண்டு தினமும் கண்களை (கழுவவேண்டும்) சுத்தம் செய்ய வேண்டும்.

காதுகளில் குறும்பி (வாக்ஸ்) எனப்படும் பொருள் உருவாகி காற்று செல்லும் வழியினை அடைக்கிறது. இது வலியை ஏற்படுத்தும். எனவே காதுகளை பஞ்சு கொண்டு வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்.

மூக்கில் காணப்படும் சளி போன்ற திரவம் காய்வதினால் ஏற்படும் பொருள் மூக்கு துவாரத்தை அடைத்துக் கொள்ளும். எனேவ தேவைப்படும் போதெல்லாம் மூக்கினை சுத்தம் செய்ய வேண்டும். சிறுபிள்ளைகளுக்கு சளி மற்றும் ஜலதோஷம் ஏற்படும் போது மென்மையான துணியினைப் பயன்படுத்தி மூக்கினை சுத்தம் செய்ய வேண்டும்.

வாயினை சுத்தம் செய்தல்
மென்மையான பல்பொடி மற்றும் பேஸ்ட் போன்றவை பற்களை சுத்தம் செய்வதற்கு உகந்தவைகள். தினமும் காலை எழுந்த உடன் மற்றும் இரவு உறங்கச் செல்லும் முன் என இரண்டு வேலை பற்களை சுத்தம் செய்யவும். கரித்தூள், உப்பு, கரட்டுத்தன்மை கொண்ட பற்பொடி இதுபோன்ற பிற பொருட்களை கொண்டு பற்களை சுத்தம் செய்யும்போது பற்களின் வெளிப்படலத்தில் கீறல்கள் ஏற்படுத்தும்.

எந்தவொரு உணவுபொருளையும் உட்கொண்ட பின்னர் சுத்தமான தண்ணீரைக் கொண்டு வாயினை கழுவவேண்டும். இவ்வாறு செய்வது, உணவுப் பொருள் பற்களின் இடையில் படிந்து துர்நாற்றத்தை ஏற்படுத்துவது, பல்ஈறுகளை கெடுப்பது மற்றும் பல்சொத்தை (அ) பற்சிதைவு ஏற்படுவது போன்றவற்றை தடுக்கிறது.

சத்தான உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். இனிப்புப் பொருட்கள், சாக்லேட், ஐஸ்கிரீம் மற்றும் கேக் போன்ற உணவுகளை குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும்.

பற்சிதைவிற்கான அறிகுறிகள் காணும்போது பல்மருத்துவரை உடனடியாக சந்தித்து ஆலோசிக்க வேண்டும்.

முறையாக மற்றும் சரியாக பல் துலக்கும் முறைகள் பற்களில் கறை படிவதை தடுக்க உதவுகிறது. பற்களை சுத்தம் செய்ய பல்மருத்துவரை அணுகவும்.

தோல் பராமரிப்பு
தோல் உடலை முழுவதும் மூடியுள்ளது. இது உடல் உறுப்புகளை பாதுகாக்கிறது மற்றும் உடல் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

தோல் உடலில் உள்ள கழிவுப் பொருட்களை வியர்வையாக வெளியேற்ற உதவுகிறது. தோலில் குறைபாடு இருப்பின் வியர்வை சுரப்பிகள் அடைபடுகிறது. இதன் விளைவாக புண்கள் (சோர்ஸ்) மற்றும் பருக்கள் (அக்கி) போன்றவைகள் ஏற்படுகின்றன.

தோலை சுத்தமாக வைத்துக் கொள்ள தினமும் சுத்தமான தண்ணீர் மற்றும் சோப்பினை கொண்டு குளிக்க வேண்டும்.

கைகளைக் கழுவுதல்
உணவு உட்கொள்வது, மலம் கழித்தபின் மலவாயினை சுத்தம் செய்வது, மூக்கினை சுத்தம் செய்வது, மாட்டுச்சாணம் அள்ளுவது போன்ற எல்லா செயல்களையும் நாம் கைகளைக் கொண்டு செய்கிறோம். இதுபோன்று செய்யும் போது, பல நோய்களை ஏற்படுத்தும் கிருமிகள் நகங்களின் கீழ் மற்றும் தோலின் மேற்பரப்பில் தங்கியிருக்கும். இதுபோன்ற செயல்களுக்குப் பின், மிகமுக்கியமாக சமைப்பதற்கு முன், கைகளை (கை மணிக்கட்டிற்கு மேல், விரல் இடுக்குகள் மற்றும் நகச்சந்துகள்) சோப்பு கொண்டு கழுவுவது, பல நோய்கள் ஏற்படுவதை தடுத்து நிறுத்த உதவுகிறது.

நகங்களை முறையாக வெட்ட வேண்டும். நகங்களை கடிப்பது மற்றும் மூக்கை நோண்டுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

பிள்ளைகள் மண்ணில் விளையாடுவர் எனவே உணவிற்கு முன் கைகளைக் கழுவ கற்பிக்க வேண்டும்.

இரத்தம், மலம், சிறுநீர் மற்றும் வாந்தி போன்றவற்றை தொடுவதை தவிர்க்கவும்.

மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது சுத்தம் செய்தல்
மலம் மற்றும் சிறுநீர் கழித்தபின் உறுப்புகளை சுத்தமான நீரைக் கொண்டு முன்னிருந்து பின்னாக சுத்தம் செய்தல் வேண்டும். கைகளை சோப்பினை கொண்டு கழுவ மறந்து விடக்கூடாது. கழிவறை, குளியலறை மற்றும் சுற்றுப்புறத்தை துப்புரவாக வைத்துக் கொள்ளவும். திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்க்கவும்.

உணவு மற்றும் சமையலின் போது சுகாதாரம்
சமையல் செய்யும் போது சுகாதாரமான முறையில் சமைப்பதினால் உணவு மாசுபடுதல், உணவு நச்சுப்படுதல், மற்றும் நோய் பரவுதல் போன்றவற்றை தடுத்து நிறுத்தலாம்.

சமைக்கும் பகுதி மற்றும் சமையல் சாமான்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அழுகின மற்றும் கெட்டுப் போன உணவுகளை உட்கொள்வதை தவிர்க்கவும்.

சமைப்பதற்கு முன்பு மற்றும் பரிமாறும் முன்பு கைகளைக் கழுவ வேண்டும்.

காய்கரி போன்ற உணவுப் பொருட்களை சமைப்பதற்கு முன் நன்கு கழுவவேண்டும்.

உணவுப் பொருட்களை சரியான முறையில் சேமித்து வைக்க வேண்டும்.

உணவுப் பொருட்களை வாங்கும்முன் எந்த நாள்வரை அந்த பொருளினைப் பயன்படுத்தலாம் என்ற விவரத்தை பார்த்து வாங்கவும் (பெஸ்ட் பிபோர் என்று அட்டையில் குறிப்பிடப்படும் தேதி).

சமையலறைக் கழிவுகளை சரியான முறையில் அப்புறப்படுத்தவும்.

மருத்துவ சுகாதாரம் (அ) நலன்
காயம் ஏற்பட்டால், சரியான சுத்தமான பேன்டேஜ் /துணியினை உபயோகித்துப் பராமரிக்க வேண்டும்.

மருந்துகளை வாங்கும் போது அம்மருந்து செயல் இழக்கும் தேதி என்ன என்பதனை பார்த்து வாங்க வேண்டும்.

தேவையற்ற மருந்துகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.

மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகளை உட்கொள்ளக்கூடாது.

தொடரும் மருத்துவம் மற்றும் சுகாதார செய்திகள்.

-- அபுஇபுறாஹிம்

ஜூலை 09.07.2010

19 Responses So Far:

Yasir said...

//எனவே காதுகளை பஞ்சு கொண்டு வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்.// சமிபத்தில் நான் படித்த செய்திகளின்படி குளித்தவுடன் காதை பஞ்சு வைத்து சுத்தம் செய்பவர்களுக்கு..வருங்காலத்தில் காதுவலி வரக்கூடிய வாய்ப்புகள் அதிகமாம்..வாரம் ஒருமுறை பஞ்சு உபோயிகிப்பவர்களும் தரமான பிராண்ட் பஞ்சுகளை வாங்குகள்...no compromise on health matters

crown said...

சுத்தம் செய்வதை உலகுக்கு சத்தமாகச் சொன்ன மார்கம் இஸ்லாம்.சுத்தமில்லாதைவை நஜீஸின்னும் ஒவ்வொருமுறையும் தொழப்போகும் போதும் ஒளூ என்னும் சுத்தத்தின் அச்சாரம் அவசியம் என்பதை வழிப்படுத்திவைத்ததும் இஸ்லாமே ,மேலும் குளிப்பின் கடமை போன்ற இன்ன பிற கடமையை வகுத்துச்சொன்னதும் இஸ்லாமே.காலில் செருப்பில்லாமல் செல்வதை கூட பகுத்துச் சொன்னது இஸ்லாமே! இன்னும் சொல்லிக்கொண்டு போகலாம்....இதை முறையாகச்செய்தாலே இன்சா அல்லாஹ் சுகாதாரம் நிலைத்து நிற்கும்.

crown said...

//எனவே காதுகளை பஞ்சு கொண்டு வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்.// சமிபத்தில் நான் படித்த செய்திகளின்படி குளித்தவுடன் காதை பஞ்சு வைத்து சுத்தம் செய்பவர்களுக்கு..வருங்காலத்தில் காதுவலி வரக்கூடிய வாய்ப்புகள் அதிகமாம்..வாரம் ஒருமுறை பஞ்சு உபோயிகிப்பவர்களும் தரமான பிராண்ட் பஞ்சுகளை வாங்குகள்...no compromise on health matters
-----------------------------------
இது முற்றிலும் சரியான தகவல் காதுபற்றி காதில் விழுந்ததும் கண் கொண்டு பார்த்து படித்ததும் இங்கு பதிகிறேன்.(சாகுல் ஹமீது அவர்கள் எதாவது சொல்லட்டும் என்பதற்காக இத்தனை பில்டாப் கண்டுக்காதிங்க)

Adirai khalid said...

மேல் குறிப்பிட்ட கட்டுரை மேல்தட்டு மக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டியவை

இஸ்லாம் ஒன்றே அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய
வழிமுறைகளை நமக்கு கற்று தந்துள்ளது
சுத்தம் இஸ்லாத்தில் ஒர் அங்கம், சுகாதாரம்,
நபி ஸல் அவர்களின் எளிமையான வாழ்க்கை
அரவனைப்பு, அன்டைவீட்டாருடன் அனுசரித்து
நடத்தல் நம் சமுதாயத்தில் ஆற்ற
வேண்டிய கடமைகளில் முக்கியமானது ஆகும்

சகோதர் க்ரொவ்ன் கூருவதை நானும் வழிமொழிகிரேன்

Zakir Hussain said...

காது / பஞ்சு சமாச்சாரம் உண்மைதான் என்பதற்க்கு நானே உதாரணம் , ஒருதடவை இதுபோன்ற பிரச்சினையில் காது வலி ஏற்பட்டு டாக்டரிடம் காண்பித்ததில் அந்த டாக்டர் நான் செய்த தவற்றுக்காக கம்பு எடுத்து அடிக்காத குறைதான்.இதில் சில பேர் ஆணி, ஸ்க்ரூ டிரைவர், பேப்பர் கிலிப் எல்லாவற்றையும் காதுக்குள் அனுப்பி ஏதோ ரயில் இஞ்ஜின் ரிப்பேர் பார்க்கிறமாதிரி குடைவார்கள். முன்பு கோழி இறகை வைத்து குடையும் சில பேரின் முகபாவத்தை போட்டோ எடுத்து வெள்ளைக்காரர்கள் நேசனல் ஜியாகிரபி சேனனில் நிறைய காசு பார்த்துவிட்டார்கள்l.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சகோதரர்கள் யாசிர், கிரவுன், ஹாலித், ஜாஹின் உங்கள் அனைவரின் வருக்கைக்கும் நன்றி.

நபிகளாரின் வழி முறைகளை சரியாக கடைப்பிடித்தால் எந்த நோய்யும் நம்மை தீண்டாது என்பது மறுக்க முடியாத உண்மை.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//Zakir Hussain கூறியது... இதில் சில பேர் ஆணி, ஸ்க்ரூ டிரைவர், பேப்பர் கிலிப் எல்லாவற்றையும் காதுக்குள் அனுப்பி ஏதோ ரயில் இஞ்ஜின் ரிப்பேர் பார்க்கிறமாதிரி குடைவார்கள்.//

சில பேர் கார் சாவி, ரெனால்ஸ் பேனா மூடி இன்னும் சில டூல்ஸ்களை விட்டு ரிப்பேர் செய்கிறார்கள் தன் காதுகளை.

Yasir said...

//காதுக்குள் அனுப்பி ஏதோ ரயில் இஞ்ஜின் ரிப்பேர் பார்க்கிறமாதிரி குடைவார்கள்//
முத்துப்பேட்டை வாசனை உங்கள் எழுத்துக்களில் உள்ளதே நானா...
என்னை போல் முத்துப்பேட்டை தொடர்ப்பு உங்களுக்கு உள்ளதா ??

abs said...

பரவா இல்லை சிபா மருதுவமனை விலிதிருக்கு இனிமேல் அவர்ஹல் நல்லபடி நிர்வஹிப்பர்
என்ற என்னம் உதிக்குது ,சஹொதரர் தஜுடின் தீன் எசுடேட் நல்ல பொடுனலவாதி அவரிடம்
அரை மனினெரம் பேசினால் 20 நிமிசம் சிபா,இமாம் சாபி,பட்ரியும்,ஊர் நலம் பட்ரியும் பேசுவார்,அல்லாஹ் அவருக்கு அதன் கூலியெஐ மருமைஇல் கொடுப்பான்

அஜ.தஜுடின்

தஜுடின் தீன் எசுடேட்
அதோடு இப்ப அடிரை மனம் தஜுதீன்
thajudeen கலின் பனி மென் மேலும் சிரக்கட்டும்

Zakir Hussain said...

To Bro. Yasir

ஆம்..முத்துப்பேட்டையிலும் எனக்கு சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள்.ஆனாலும் எழுத்தில் தெரிந்த விசயத்துக்கும் நான் புதுக்கல்லூரியில் படிக்கும்போது கிரேஸி மோகனின் தொடர் ஜுனியர் விகடனில் வந்ததற்க்கும் தொடர்பு இருக்கிறது...மற்றபடி நான், என் எழுத்தும் என் பேச்சுமாதிரி இருக்கிறது என சபீர் சொன்னான்.

மற்றும் உங்கள் வாப்பாவிடம் பேசிக்கொண்டிருந்த அந்த காலங்களும் [ நோன்பு காலங்களில், பள்ளிவாசலில்] இப்படியெல்லாம் எழுத தூண்டியிருக்கலாம்!!!

Yasir said...

எங்க வாப்பாவை உங்களுக்கு தெரியுமா !!!? இங்கே எழுத முடியாவிட்டால்..உங்கள குடும்ப பின்ணனி பற்றி கொஞ்சம் அறிய தாருங்கள் நானா.mail :mdyasir@msn.com..என்னை உங்களுக்கு தெரியுமா...உங்கள் புகைப்படத்தை பார்த்து என்னால் அந்த அளவிற்க்கு யுகிக்க முடியவில்லை நானா

தாஜுதீன் (THAJUDEEN ) said...

// adirampattinam கூறியது...
பரவா இல்லை சிபா மருதுவமனை விலிதிருக்கு இனிமேல் அவர்ஹல் நல்லபடி நிர்வஹிப்பர்...........///

adirampattinam என்ற பெயரில் பின்னூட்டமிட்ட தம்பி 'சாஹுல்', இப்படி தமிழில் எழுதுவதுக்கு பதில் ஆங்கிலத்தில் எழுதியிருந்தாவது புரிந்திருக்கும்.
உங்களைப் பற்றி எனக்கு தெரிந்ததால் ஒரு வேண்டுகோள், தயவு செய்து இப்படி எழுதாதீர்கள். பிலீஸ்...

abs said...

உங்களை போல் பிளாகரில் தமிழ்
எழுதி அனுபவம் இல்லை,
அவசர கோனத்தில் தட்டியது,அதர்காஹ
ஆங்கிலம் அத்து படி என்றும் கூர முடியாது.
எம்மை போன்றோரின் குறை தமிழால் தங்கல்
தலம் குண்டும் குலியுமா தெரியல,
அலஹா இருக்கு வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள்
அழகிய எழுத்து பணி,

Shameed said...

அதிரை ஷிஃபா மருத்துவமனையில் நடைப்பெறும் இலவச மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடக்கும்போது எங்கே சுகாதாரம்! என்ற காட்டுரை வெளிவந்தது
வெயில் காலத்தில் நொங்கு குடித்தது போன்று ஓர் உணர்வை உண்டாகி விட்டது

இரண்டு நாட்களாக கொஞ்சம் பிஸி (இஞ்ஜின் ரிப்பேர் இல்லை) பின்னுட்டம் இட தாமதம்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//shahulhameed கூறியது... வெயில் காலத்தில் நொங்கு குடித்தது போன்று ஓர் உணர்வை உண்டாகி விட்டது//

வளைகுடாவில் fresh நொங்கு கிடைப்பதில்லை சாஹுல் காக்கா :)

வருகைக்கு மிக்க நன்றி

Shameed said...

வளைகுடாவில் fresh நொங்கு கிடைப்பதில்லை சாஹுல் காக்கா

இங்கு தம்மாமில் கேரளா fresh நொங்கு கிடைகின்றது எப்போதாவது நொங்கை சவடிகளைவது உண்டு

chinnakaka said...

அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் எழுத்துப்பனி தொடர வாழ்த்துக்கள் மிக அருமையான கட்டுரைகள் வந்து கொண்டிருக்கின்றன மேலும் ஜாஹிர், நெய்னா இவர்களுடைய கட்டுரைகள் வியப்பூட்டுகின்றன மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
என்ரென்றும் அன்புடன்
சின்ன காக்கா

தாஜுதீன் (THAJUDEEN ) said...

வாங்க சின்னகாக்கா, வருகைக்கு நன்றி.

நல்ல வாழ்த்துதலுடன் வந்துள்ள உங்களின் prfile தெரியும்படி செய்தால் எமக்கு நீங்கள் யார் என்று தெரிந்துக்கொள்ள வசதியாக இருக்கும். செய்வீர்களா?

Zakir Hussain said...

Thanx Chinna kaka for your comment;

Zakir Hussain

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு