'எந்த ஊருக்கு சென்றாலும் அது நம்ம ஊரைப் போல வருமா' எங்கயோ கேட்ட வரிகள் தான் இந்த கட்டுரையின் வேர். நம்ம ஊர் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம்.
காதிர் முகைதீன் கல்லூரி நம்ம ஊருக்கு முக்கிய அடையாளம் நாகப்பட்டினம் முதல் பேராவூரணி அறந்தாங்கி வரை மாணவர்கள் படித்த கல்லூரி பழமைவாய்ந்தது.அந்த வேப்ப மர சூழலும்,இயற்கையின் பசுமையும் அக் கல்லூரியின் வாயிலை அலங்கரிக்கும்.நான் அங்கே படிக்கவில்லையென்றாலும்(ஏன் படிக்கவில்லை என்றால் அதற்கு ஒரு (அ)நியாயமா ஒரு பதிவு போடனும் ஏன் வம்பு) கடல்காற்றின் சுகமும்,பாசாங்கான எங்கள் ஊரின் பேச்சு வழக்கும் வார்த்தைகளில் விவரிக்க இயலாது.
கடலை பார்த்த ரயில் நிலையம்.அந்த ரயில் நிலையத்தில் ஒரு 5 நிமிஷம் உட்கார்ந்தால் போதும் எப்பேர்ப்பட்ட கவலையும் தணியும்.அப்பேர்ப்பட்ட ரம்மியமான இயற்கை வலையில் அமைந்தது. இதை நான் பெருமையாகவே சொல்வேன். காலை 8 மணிக்கு ஒரு ரயிலும்,மாலை 4 மணிக்கு ஒரு ரயிலுமாக காரைக்குடி-மயிலாடுதுறை ஆகிய நகரங்களை இணைக்கும் ரயில்கள் எங்கள் ஊரையும் தொட்டுச் செல்லும். முன்பு காரைக்குடி- சென்னை இடையே ஒடிக்கொண்டிருந்த கம்பன் எக்ஸ்ப்ரஸ் ரயிலும் எங்கள் ஊரின் வழியே சென்று கொண்டிருந்தது.அதுக்கு மூடுவிழா நடத்தி சில வருடங்கள் ஆகி விட்டது.
சரி விஷயத்துக்கு வருவோம்.இந்த ரயில்நிலையம் வந்து படிக்காத மாணவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தளவுக்கு எங்கள் ஊர் மாணவர்களின் படிப்புக்கும், இந்த ரயில் நிலையத்துக்கும் பிணைப்பு அபரிதமானது. பல சமயங்களில் வாத்தியார்கள் முன்னிலையில் வகுப்பறையாக உருவெடுத்த பெருமை இந்த ரயில் நிலையத்தையேச் சாரும். வயதான முதியோர்களும், இளைஞர்களும் வயது வித்தியாசமின்றி வந்து போகும் இடமாக இருந்தது எனக்கு தெரிந்தவரையில் ரயில்நிலையம்தான்.
வருடா வருடம் மே அல்லது ஜூன் மாதங்களில் ரயில் நிலையத்திற்கு மிக அருகாமையில் ஐ.டி.ஐ. விளையாட்டு மைதானத்தில் மாவட்ட, மாநில அளவிளான கால்பந்து போட்டி நடக்கும்.அந்த ஒரு மாதம் முழுவதும் மாலை நேரங்களில் எங்களின் ஊரின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை என சொல்லலாம். 'நினைத்தாலே இனிக்கும்' என்கிற வார்த்தைக்கு அர்த்தம் இந்த கால்பந்து தொடர் போட்டியை குறிப்பிடலாம். அந்த தொடர் போட்டி ஆரம்பமாகும் நாளில் இருக்கும் சந்தோஷம்,அதன் நிறைவு நாளிலிருக்கும் கவலை கல்யாணம் முடிஞ்சு பத்தே நாள்'ல வெளிநாட்டுக்குப் போகிற மணமகனின் கவலைக்கு ஈடானுது. அவ்வளவு தூரம் எங்கள் மக்களோடு ஒன்றிப் போன விளையாட்டு கால்பந்து.
அவிச்ச அல்லது அவிக்காத கடலையை சாப்பிட்டுக்கிட்டு இந்த டீம் கோல் போடுமா, அந்த டீம் ஜெயிக்குமா பக்கத்தில் இருப்பவரிடம் பேசிக்கொண்டு ஆர்வத்துள்ளலில் எவ்வித கவலையும் இன்றி இருக்கும் அந்த நிமிடம் வாழ்நாள் முழுவதும் வராதா(வராது!)என்று ஏங்கிய காலமெல்லாம் உண்டு.
ஆக்கம் - அஹ்மது இர்ஷாத்
இது மீள் பதிவு...சில வரிகள் மட்டும் திருத்தப்பட்டுள்ளது.
தொடரும் அதிரையின் நல்ல செய்திகள்.....
இக்கட்டுரையை அதிரை நிருபரில் பதிய அனுமதித்த தம்பி இர்ஷாத்துக்கு நன்றி.....
புகைப்படங்களின் சொந்தக்காரர்களுக்கும் நன்றி....
15 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும்.மிக இயல்பாக எழுதப்பட்ட ஆக்கம்.அருமை எளிய நடையில் மனதை கொள்ளை கொண்டுவிட்டது.தலைப்புதான் யோசித்து(பாடல் வரியை யாசிக்காமல்)வைத்திருக்கலாம்.காரணம் மனதில் உள்ளதை அல்லாஹ் அறிவான் என்றாலும் ஒரு சர்சைக்கு(இப்பத்தான் கோயில் சர்ச்சை முடிந்தது)உள்படாதவகையில் இருந்திருக்கலாம்.( நான் விவாதத்திற்கு தூபம் போடல!)காரணம் சொர்க்கமே என்றாலும் அதற்கு மேல் நம் ஊர்??அல்லாஹ் வாக்களிக்கும் சொர்கம் வாழ்வில் எண்ணிப்பார்கமுடியா இது வரை அனுபவித்திரா மேன்மையும் ,இன்பமும் தரக்கூடியது.இதில்மறைவாக சிர்க் ஏற்படாமல் பார்துகொள்ளனும் அந்த சொர்கம் என்ற வார்தை தர்கதிற்கு வழி வகுக்கும் இதை சகோதரர் தாஜுதீன் பார்த்து களய வேண்டுகிறேன்.
பார்த்து களய வேண்டுகிறேன்.
------------------------------
களைய என்று திருத்தி படிக்கவும்
அஸ்ஸலாமு அலைக்கும்.
அதிரை வலைகுழும நேற்றைய மின்னஞ்சல் வழியாகவே 'அதிரை நிருபர்' வலைப்பூ குறித்து அறிந்தேன். தள வடிவமைப்பு நன்றாயிருக்கிறது; அது குறித்து சில எண்ணங்கள்...
* புதிய இடுகைகளை அதிரை வலைகுழுமத்தில் பகிர்ந்து கொள்வது புதிய பார்வையாளர்களை சென்றடைய உதவும்.
* தளத்தின் முகப்பில் இடுகைகளை இணையாக இரண்டிரண்டாக இப்போதிருப்பது போல் அல்லாமல் ஒன்றன் கீழ் ஒன்றாக வருமாறு மாற்றி வடிவமைக்கவும். அப்படி மாற்றி அமைக்கும்போது இடுகையின் உள்ளடக்க முன்னோட்டம்(preview) நீளவாக்கில் அதிகமாகத் தெரியும்; குறிச்சொற்களுக்கு முன்னுள்ள கிழமை, நாள் போன்றவை இடமின்மையால் விடுபடாதிருக்கும். (blog-post_14.html மற்றும் முந்தையதில் காண்க)
* தளத்தின் கீழே நடுவில் சிவப்பில் தெரியும் online காட்டியை வலது/இடது மூலைக்கு நகர்த்தவும்.
* மற்ற தளங்களைப் போல் அல்லாமல் முகப்பிலேயே எல்லா இடுகைகளும் தெரிந்து விடுவதால், வானிலைக்கு கீழே 'நம் பதிவுகள்' விவரம் இப்போது தேவையில்லை; கூடுதல் இடத்தை 'கருத்துரைகள்' பகுதிக்கு வழங்கலாம். மேற்கொண்டு பயனுள்ளவற்றை யோசித்து நிரப்பலாம்.
* முகப்பில் உள்ள 'குறிச்சொல்' தொடுப்பு குறிப்பிட்ட சொல் பயன்படுத்தப்பட்ட இடுகை(கள்)க்கு செல்லவில்லை; சரி செய்க.
* இடுகைகளுக்கு மறுமொழி அளிப்பவர்களுக்கு வசதியாக மறுமொழிகளில் சுட்டி(URL), வார்த்தைகளுக்கு பின்னால் சுட்டியை வைத்து மறைத்து எழுதுதல், எழுத்துகளில் அடர்த்தி(bold) போன்ற இன்ன பிற HTML tag பயன்படுத்த மன்சூர், இர்ஷாத் (பெயர் குறிப்பிடாதவர்கள் பொருத்தருள்க) போன்றோர் தனி இடுகை இங்கு மீண்டும் இடச்செய்யலாம்.
* எல்லாவிதமான செய்தியும் வரும் என்பதால் தள தலைப்பை 'அதிரை செய்திகள்' அல்லது வேறு creative ஆன அகர வரிசையில் முதலில் வருவது போன்ற பொருத்தமான தலைப்பிட்டால் நல்லது. (உ.ம். அதிரையின் அன்பு, அதிரையின் அவசியம், அதிரையின் ஆவல், அதிரையின் ஆசை, அ.இ, அ.ஈ....) அகர வரிசையில் முதலாவதாக வரவேண்டும் என காட்டுவதற்கே அடைப்பில் சில பயன் படுத்தியுள்ளேன், இவை பொருத்தமற்றதாகவும் இருக்கக் கூடும்! இம்மாதிரி அகர வரிசையில் முதலில் வருவது போன்ற தலைப்பிட்டால் ஒன்றுக்கு மேற்பட்ட அதிரை தளத்தை 'உலவி'யில் ஒருவர் பார்வையிடும்போது a என தட்டச்சியதும் அகர வரிசையில் முதலில் தலைப்பிட்டது முதல் விருப்பமாக தெரிய வரும், சோதித்து பார்க்க.
* 'பர பர' தளத்தில் "அஎ..ஸா அடிவாங்கும் எ..ஸா? என்றொரு பதிவு பார்த்த நினைவு. எனக்குத் தெரிந்து இரண்டுமில்லை; அனாமதேய என்பது அனைவரும் அறிந்தது, மற்றொன்று அண்ணன் எதிர்ப்பு. இரண்டும் அஎ. என்பதைக் கவனிக்க. காட்டுகள் ஏராளம், அவற்றில் சில: [வழக்கம்போல் ததஜவை விட்டு அவர் வெளியேறி விட்டால் அஎ நேரெதிர் நிலை எடுக்கலாம்]
1. மமக பொதுகூட்ட அறிவிப்பு மட்டும், நடந்து முடிந்த பின் குறித்த செய்தி எதுவும் இல்லை;
2. (நடுவு நிலை ஏமாற்றுக்காக) ததஜ கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கச் செய்தி மட்டும், நடந்து முடிந்த பின் குறித்த செய்தி எதுவும் இல்லை;
3. இதஜ கூட்ட செய்தி, பின்னர் பே(ஏ)ச்சு குறித்த இயக்க மினிட் புத்தகங்களெல்லாம் பிச்சை எடுக்குமளவுக்கான புள்ளி விவரங்கள் இட்டதைத் தொடர்ந்து சில கண்டனங்கள் யாவரும் அறிந்தது. பின்பும் தவறை உணராமல் தொடர்ச்சியான சப்பைக்கட்டுகள்... இதில் வேதனையான செய்தி, வழக்கமாக கருத்திடும் 'நடுநிலை' 'இயக்கச் சார்பற்ற' என்போர் கண்டு கொள்ளாமல் இருந்தது! எதிரியைப் பற்றியது தானே என்றதாலா? எதிரிக்கு அநியாயம் இழைக்கப் பட்டாலும் அநீதிக்கெதிராய் குரல் கொடுப்பதே முஸ்லிமின் பண்பு. முடிவாய் எல்லாவற்றையும் அல்லாஹ் முறியடித்தான். ஜூலை 4 நிகழ்வு சாதனை!
* இதஜ தலைமைக்கு எதிராய் ஒழுங்கீன குற்றசாட்டு இருந்தும் அஎ உயர்த்திப் பிடித்த காரணம் 'எதிரிக்கு எதிரி' என்பதாலே! தேசியப் புகழ் பெற்ற ஜமாத்தே இஸ்லாமியே தமிழகத்தில் மேடையேற்றி 'அழகு' பார்த்த அசிங்கமும் இவ்வாறான 'எதிரிக்கு எதிரி' மனப்பான்மையினாலே என்கிறபோது 'ஊர்ப் புகழ்' இவங்களெல்லாம் எம்மாத்திரம்?
நடுநிலை என்ற நல்லெண்ணத்தில் வழி தவறி விடக் கூடாது என்பதாலே கசந்தாலும் கடைசி இரண்டு. சத்தியத்தை தேடுவது, அடைந்து கொள்வது, பின்பற்றுவது, மிக முக்கியமாக அல்லாஹ்வுடைய பொருத்தத்தை அடைந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல, அவன் நாடியோருக்கே கிட்டும். நம் இறுதி இலக்கான சுவனம் நம் நல்ல செயல்களால் மட்டும் கிடைத்து விடாது. நம் ஓரிறை வணக்கங்கள், நல்ல செயல்கள் ஆகியவற்றை இந்த உலகத்தில் அல்லாஹ் நமக்களித்த ஏராளமான அருட்கொடையுடன் ஒப்பிட்டால் அல்லாஹ் நமக்களித்த உடலுறுப்புக்கள், நலம், ஆயுள் இவற்றில் எந்த ஒரு அருட்கொடைக்குமே நம் நன்மைகள் பத்தாது. ஒரு நபிமொழியின் கருத்துப்படி, யாரும் தன்னுடைய நல்ல செயல்களைக் கொண்டு சுவனம் புக முடியாது, அல்லாஹ் தன் அருளால் போர்த்திக்கொண்டவரைத் தவிர. அந்த நல்லோர்களில் நம்மை எல்லாம் வல்ல அல்லாஹ் சேர்த்துக் கொள்வானாக.
---
முஹம்மத் ஷாஃபி
+1 530 366-4640
வ அலைக்குமுஸ்ஸலாம். சகோதரர் தஸ்தகீர், வருகைக்கு நன்றி.
//.தலைப்புதான் யோசித்து(பாடல் வரியை யாசிக்காமல்)வைத்திருக்கலாம்//
என் மனதிலும் முதலில் தொன்றியது, செய்தியை திருத்தி பதித்துவிட்டேன். அதிரை நிருபரில் விதாண்டவாத சப்பைகட்டுகள் இல்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
தொடர்ந்து இணைந்திருங்கள்.
தம்பி இர்ஷாத் புரிந்துக் கொள்வார் என்று நம்புகிறேன்.
வாங்க அன்பு சகோதர ஷாஃபி.
தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி.
உங்களுடைய ஆலோசனைகளை ஏற்றுக்கொள்கிறேன்.
ஒற்றுமை என்ற ஒரே ஒரு எண்ண ஓட்டத்தில் மட்டும் தான் அதிரை நிருபர் செயல்படும் என்பதை இங்கு உறுதியா சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இது மிகப் பெரிய சவால் தான் என்பது நன்றா தெரியும், அல்லாஹ் துனையுடன் ஒற்றுமைக்காக மக்களின் மனதை இணையத்தின் உதவியுடன் இணைத்துவிடலாம். இது என் நம்பிக்கை. இன்ஷா அல்லாஹ்.
துஆ செய்வோம்.
சூப்பர் இர்ஷாத் ///அதன் நிறைவு நாளிலிருக்கும் கவலை கல்யாணம் முடிஞ்சு பத்தே நாள்'ல வெளிநாட்டுக்குப் போகிற மணமகனின் கவலைக்கு ஈடானுது. //...அது சரி அந்த அளவிற்க்கு பீல் பண்ணுவாங்களோ. தப்பிச்சோம் பிழைச்சோம்ண்டு ஒடிடுவாங்கன்று நினைத்தேன்..:)ரொம்ப ஆர்வம்தான் ஃபுட்பால் மேல்...
ஒரு வழக்கு மொழி உண்டு( நன்றி ஹாஜா மொய்தீன் சார் ) உலகில் சிறந்த மொழி எது என்றால் அவரவர் தாய் மொழிதான் அதுபோல் உலகில் சிறந்த ஊர் எது என்றால் அவரவர் பிறந்து வளர்ந்த ஊர்தான் .அது சரி இர்ஷாத் கட்டுரைக்காக போட்டோ வா அல்லது போட்டோ விற்காக கட்டுரையா ?
வாங்க சகோதரர்கள் யாசிர் மற்றும் சாஹுல் ஹமீத்.
அதிரையில் கால்பந்தாட்டத்தை ரசிக்காத வீடுகள் கிடையாது என்று சொல்லாம், அதான் தம்பி இர்ஷாத் எழுதியிருக்கார் என்று நினைக்கிறேன் சகோதரர் யாசிர்.
சகோதரர் சாஹுல், தம்பி இர்ஷாத்தின் கட்டுரைக்காக இந்த புகைப்படங்கள், ரொம்ப தேட முடியவில்லை.
ஒரு வார்த்தைக்காக ஹாஜா மொய்தீன் சார் (மாமா) அவர்களை இங்கு நினைவு கூறியதுக்கு மிக்க நன்றி.
Dear Bro.Thajudin
//தம்பி இர்ஷாத்தின் கட்டுரைக்காக இந்த புகைப்படங்கள், ரொம்ப தேட முடியவில்லை.//
You can get these photos downloads from my sharing in Picasa Web
Photos taken by Nizam Mohideen
http://picasaweb.google.com/zakirhussain.zakirkl/Adirampattinam11th22NdDecember2009#
Zakir Husssain
தம்பி இர்ஷாத்தின் ஆக்கம் அரபு நாட்டு வெயிலில் நாம் வறுத்தெடுக்கப்பட்டாலும் வங்கக்கடலிலிருந்து பிறந்து வரும் சாய்ங்காலத்தென்றல் காற்று நம் ரயிலடியைத்தாண்டி வந்து நுழைவுச்சீட்டின்றி விளையாட்டரங்கில் கவலைகள் மறந்து இருக்கும் நம்மை இலவசமாய் வந்து தாலாட்டிச்செல்லும் அந்த நினைவுகளை தட்டி எழுப்புகின்றது ஏனோ?
ஒவ்வொருவருக்கும் அவர் பிறந்து, வளர்ந்த மண் உன்னதமானதும், சிறப்பிற்குரியதும் தான். காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பார்கள் மற்றும் எலி வலையானாலும் தனி வலை என்பார்கள்.
அமெரிக்க வெள்ளை மாளிகையில் வீற்றிருந்தாலும் ஆப்பிரிக்க கண்டத்தின் கென்ய நாட்டு கிராமிய சூழ்நிலையை ஒபாமா எளிதில் மறந்து விடுவாரா என்ன?
சமீபத்தில் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது " நான் அமெரிக்க வெள்ளை மாளிகையில் அதிபராக பதவி ஏற்று நுழைந்த பிறகு எண்ணற்ற என் தனி சுதந்திரத்தையும், தனிமையில் இயற்கையை ரசிப்பதையும் இழந்து விட்டேன்". அந்த நாட்கள் இனி திரும்பி வருமா? என ஏங்குகின்றேன். நிச்சயம் மனிதன் தன் வாழ்வில் எவ்வித உன்னத நிலையை அடைந்தாலும் அவன் கடந்து வந்த பாதையை இடையிடையே திரும்பிப்பார்க்க கடமைப்பட்டுள்ளான்.
அன்று வெறுமனே அதிரையை சுற்றித்திரிந்த நாம் இன்று உலகப்பந்தில் எங்கெங்கோ உருண்டு கிடந்தும் அன்று அனுபவித்த சந்தோசத்தை இன்று அனுபவிக்க முடியவில்லையே ஏன்?
அருமை. இது போன்ற ஆக்கங்களை என்றும் ஏக்கத்துடன் எதிர்பார்த்தவனாய்...
வஸ்ஸலாம்.
மு.செ.மு. நெய்னா முஹம்மது
சவுதியிலிருந்து.
நன்றி சகோதரர் ஜாஹிர், சில மாதங்களுக்கு முன்பே உங்களின் ஆல்பத்திலிருந்து தான் இரண்டு புகப்படங்கள் எடுத்திருந்தேன்.
வாங்க சகோதரர் நெய்னா,
அதிரை செய்திகள் என்றால் உங்களின் ஸ்டைலே தனிதான்.
Post a Comment