Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சூடு நம் ஆரோக்கியத்தோடு ஆட்டம் போடுகிறது! 15

தாஜுதீன் (THAJUDEEN ) | July 21, 2010 | , , ,

ஸ்ஸ்ss எப்பாaa என்னாaa சூடு... கடுப்பா வருது.... இன்னைக்கி சூடும் ரொம்ப ஜாஸ்தி...  Oh my GOD its too hot.                                                                              
இப்படி அலுவலகத்திலும் தங்குமிடத்திலும் முனுமுனுப்பது அன்றாடம் நம் காதில் கேட்கிறது.

வளைகுடா வேலையினுடே வெப்பம் / சூடு / அனல் எப்படி நம் ஆரோக்கியத்தோடு ஆட்டம் போடுகிறது !

பெரும்பாலனவர்கள் சவுகரியமாக உணர்வது காற்றின் அழுத்தம் 20˚Cலிருந்து 27˚Cக்குள் இருக்கும் வரைதான் அதே நேரத்தில் 35% முதல் 60% வரை காற்றழுத்தம் அல்லது வெப்பம் உயர்வதை உணரும்போது நாம் அசவுகரியத்தில் நெளிகிறோம், நம் உடலின் தனித்தனி அலுவல்களை செய்துவந்த செயலகங்கள் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து கொண்டு முரண்டு பிடிக்க ஆரம்பிக்கும் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டும் கொள்ளும் இங்கே தான் நம் உடம்பில் என்னன்னவோ தில்லு முல்லுகள் நடக்கிறது.

சூட்டு சுளுக்குகள் அல்லது தசை இழுப்பு (ஹெஅட் cரம்ப்ச்)

யாரெல்லாம் அதிக சூடான சூழலில் வேலை செய்கிறார்களோ அல்லது முறையாக கற்றுக் கொள்ளாமல் உடல் பயிற்சியில் ஈடுபடுவர்களுக்குதான் வலியுடன் சூட்டுச் சுளுக்கு குடிவந்துவிடும். ஆக மணிகட்டு, கால்கள், மூட்டு, தொடைகள் வலிகொண்டு வதைப்படும் அதோடு அதிக குளிந்த தண்ணீர் அல்லது குளிர் பாணங்களை உடனடியாக குடிப்பதனால் மணச்சோர்வும் அயர்ச்சியும் ஏற்படும் இவைகள் அதிக நேரம் நீடிப்பதில்லை. இப்படியொரு சூழலில் சிக்கித் தவிக்கும்போது அவசர சிகிச்சையாக உடனடியாக குளிர்ந்த இடர்த்திற்கு இடம் பெயர வேண்டும். அதிக அளவு குடிதண்ணீரைக் குடிக்க வேண்டும், கைகளைக் கொண்டு அந்த இடத்தில் அழுத்தம் கொடுத்து மஸாஜ் செய்வதினால் இப்படியான இழுப்பிலிருந்து சற்று விடுபடலாம்.

வெப்பம் / சூட்டினால் சோர்வு

சூட்டினால் ஏற்படும் சோர்வு பொதுவானதுதான், இந்த மாதிரியான சோர்வு இரத்த ஓட்டத்தின் நேரலை மூலை மற்றும் இருதயம் இவைகளுக்குச் செல்லும் வழையினூடே தட்டுத் தடுமாறி ஓடினால், உடல் தளர்வு, தலைவலி ஏற்படுகிறது அதோடு பசியின்மை, எதிலும் நாட்டமின்மை, வாந்தி வருவது போன்ற உணர்வு உண்டாகும். இந்த நிலையில்தான் பயமேற்படுகிறது என்னமோ நமக்கு நடக்கிறது என்ற அச்சமேற்படுகிறது. இப்படி நிகழும்போது தலை கவிழ்த்து அமைதியாக அமர்ந்தால் மூலைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் சீராகும் தடுமாற்றம் சீரடையும், முடிந்தவரை குளிரான அல்லது நேரடி வெயில்விழாத நிழல்தேடிச் சொல்லவேண்டும், அமைதியாக மூச்சு விடவேண்டும், உடுத்தியிருக்கும் ஆடைகளின் இருக்கத்தை தளர்த்திட வேண்டும்.



இப்படியெல்லாம் சமீபத்தில் சந்திக்க நேர்ந்த மருத்துவ நண்பரின் அறிவுரை நீண்டது. ஆனா இப்போ என்னோட கேள்வி என்னவென்றால்… நீங்க(ளும்) சூடானால் என்ன என்ன செய்வீர்கள் ?

குறிப்பு : பக்கத்து மாநிலத்தில் (ச்)சூடு என்றால் கோபமென்றும் பொருள் கொள்வார்களாம் :) !

தொடரும்....

21.07.2010

15 Responses So Far:

mohamedali jinnah said...

இந்த கட்டுரை படித்து சூட்டினை குளிர் ஆக்கிவிடுவேன்

mohamedali jinnah said...

நீங்க(ளும்) சூடானால் என்ன என்ன செய்வீர்கள் ?

இந்த கட்டுரை படித்து சூட்டினை குளிர் ஆக்கிவிடுவேன்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

வாங்க சகோதரர் முகம்மது அலி, தங்களின் வருகைக்கு நன்றி.

crown said...

அஸ்ஸலாமு அலைகும்.சுட சுட( நல்லா குளிரா...)சில வகை உணவு(இன்னும் சொன்னால் அதுவே தனி கட்டுரை போல் ஆகிவிடும் ஆக இதை மட்டும் தருகிறேன்.குறிப்பு:இந்த சூடே தாங்க முடியலையே நாளை மறுமையில் தீமை செய்பவர்களுக்கு அல்லாஹ்வின் தண்டனையான நரக நெருப்பு!!!!( நினைக்கவே பயமா இருக்கு) அல்லாஹ் எல்லாரையும் நரக நெருப்பிலிருந்து காப்பானாக ஆமீன்)கோடை காலத்தில் உடலின் தண்ணீர் அளவை சரியான அளவில் காத்துக் கொள்வது மிகவும் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வெறும் தண்ணீர் இந்த பணியைச் செய்து விட முடியாது. அதற்கு உதவியாக முதலில் வருவது காய்கறிகள்.
காய்கறிகளில் ஏராளமான நீர்ச்சத்து உண்டு. முடிந்த அளவு காய்கறிகளை பச்சையாகவோ, கொஞ்சமாய் வேக வைத்தோ உண்பது மிகவும் சிறந்தது. அதிகமாய் வேகவைத்தோ, பொரித்தோ உண்பதில் எந்த விதமான பயன்களும் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
பழங்கள் உண்பது கோடைக்காலத்துக்கு மிகவும் அவசியமானது. நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் உடலின் தண்ணீர் தேவையை நிவர்த்தி செய்வதுடன், உடலின் வெப்பத்தையும் கட்டுப்படுத்துகிறது.
காய்கறிகளும், பழங்களும் அதிகம் உண்பது உடலின் தண்ணீர் தேவையையும், குளிர் தேவையையும் நிறைவேற்றுவதுடன், அவற்றிலிருக்கும் வைட்டமின்கள், மினரல், விஷ எதிர்ப்பு தன்மை, நார்ச்சத்து இவையெல்லாம் கோடையில் நோய் வராமலும் நம்மைக் காத்துக் கொள்கின்றன.

வெங்காயம் நிறைய சாப்பிடுங்கள். வெயில் காலத்தில் உடலில் ஏற்படும் வெப்ப அரிப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்க வெங்காயத்திலுள்ள குவர்சடின் எனும் வேதியல் பொருள் உதவும்.
தர்பூசணி சாப்பிடுங்கள். தர்பூசணியில் 90 விழுக்காடு தண்ணீரே இருப்பதால், உடலின் தண்ணீர் தேவைக்கு சிறந்தது தர்பூசணி. தர்பூசணியை விட அதிக தண்ணீர் சத்துள்ள ஒரு காய்கறி உண்டு அது என்ன தெரியுமா ? வெள்ளரிக்காய் ! வெள்ளரிக்காயை அதிகமாய் உட்கொள்ளுங்கள் உடலுக்கு மிகவும் நல்லது.
உடலின் வெப்பம் வெளியேற வேண்டியதும், உடல் குளிர வேண்டியதும் கோடை காலத்தின் தேவைகளில் ஒன்று. அதற்கு கொஞ்சம் கொஞ்சமாக உண்ணும் கார்போஹைட்ரேட் அடங்கிய உணவுப் பொருட்கள் உதவும். குறிப்பாக வேக வைத்த உருளைக்கிழங்கு, பீன்ஸ், பீட்டா ரொட்டி, அரிசி இவை.
அப்படியே வாழைப்பழம் சாப்பிடுவது கூட கோடைகாலத்தில் உடலை நலமுடன் வைத்திருக்கும் என்கிறார் இங்கிலாந்து மருத்துவர் டாக்டர் டாயில்.
காய்கறிகளினால் சூப் தயாரித்து அதைக் குளிர வைத்து உண்பது கோடைக்குச் சிறந்தது என்கிறார் அமெரிக்காவின் மருத்துவர் மூர்ஸ். கூடவே காய்கறி சாலட் இருந்தால் மிகவும் நல்லது !
சுத்தமான தண்ணீர் குடிக்க வேண்டும். மிக முக்கியமாய் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் பாட்டில் குளிர்சாதனங்கள், மற்றும் தற்போது புற்றீசலாய் கிளம்பியிருக்கும் “எனர்ஜி டிரிங்” சமாச்சாரங்கள்.
குளிர்சாதனப் பொருட்கள், பாட்டில்களில் கிடைக்கும் பழச்சாறுகள், இவையெல்லாம் உடலில் தேவையற்ற கலோரிகளைச் சேர்ப்பதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை. உங்கள் பணத்தையும் உடல்நலனையும் அழிப்பதற்காக வண்ண வண்ண பாட்டில்களில் கண்ணைக் கவரும் விளம்பரங்களோடு வரும் பானங்களை தவிருங்கள். தண்ணீர் நிறைய அருந்துதலே சிறப்பானது.
கோடையில் தண்ணீர் மூலமாக நோய்கள் விரைவில் பரவும் என்பதால் எப்போதும் கையுடன் ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்துச் செல்வதே பாதுகாப்பானது.
சோயாபீன்களை கோடைகாலத்தில் சூடாய் இருக்கிறதே என்பதற்காக தெருவில் செல்லும் குச்சி ஐஸ் போன்ற வகையறாக்களை உள்ளே தள்ளாதீர்கள். அது உடலின் வெப்பத்தை அதிகரிப்பதுடன் நோய்களையும் தந்து செல்கிறது.
நன்றாகப் பொரித்த உணவு வகைகளை ஒதுக்குங்கள். சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், சிக்கன் ஃபிரை வகையறாக்களை முழுவதுமாய் ஒதுக்குங்கள். மூன்று வேளை மூக்கு முட்ட உண்பதை விட நான்கைந்து தடவைகளாக கொஞ்சம் கொஞ்சமாய் உண்பதே கோடையில் சிறப்பானது.
‘ஐஸ் காபி’, ‘ஐஸ் டீ’ போன்ற பானங்கள் கோடை காலத்துக்கு உகந்ததல்ல. அவை எந்தக் காலத்துக்கும் உகந்ததல்ல என்பது வேறு விஷயம். எனவே அவற்றை விட்டு தள்ளியே நிற்பதே நல்லது. இருக்கவே இருக்கிறதே இளநீர், மோர், எலுமிச்சை பழச் சாறு போன்றவை !
உணவுப் பழக்கத்தில் ஒழுங்கைக் கடைபிடித்தாலே கோடையில் வாடாமல் தப்பிக்கலாம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி க்ரவுன்(னு): எழுதுன்னு சொன்னா எதெல்லாம் சாப்பிட்டுகிட்டு இருக்கிறோமோ அதெல்லா வேண்டாம்னா எப்புடி ?

Yasir said...

கட்டுரைக்கு ஏற்ற சரியான படம்...இந்த சூட்ல எல்லோரும் பப்படம்...யாரிடம் போய் எது கேட்டாலும் சூடாகுங்றானுக-சூட்டினால்....சரியான நேரத்தில் எழுதப்பட்ட கூலான :( ஆக்கம்

Yasir said...

crown..அருமையான அறிவுரைகள்...இதை தனி ஆக்கமாக இன்னும் கொஞ்சம் சேர்த்து..அதிரை நிருபர் வெளியிடலாமே...இது என்னுடைய தனிப்பட்ட கருத்து

crown said...

தம்பி க்ரவுன்(னு): எழுதுன்னு சொன்னா எதெல்லாம் சாப்பிட்டுகிட்டு இருக்கிறோமோ அதெல்லா வேண்டாம்னா எப்புடி ?
-----------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா என்ன எழுதினாலும் ரெண்டே வரியில தூக்கி சாப்பிட்டிருயல எப்படி?(இதுலயும் சாப்பாடு சேர்த்துட்டேன்).

அப்துல்மாலிக் said...

ஸ்ஸ்ss எப்பாaa என்னாaa சூடு... கடுப்பா வருது.... இன்னைக்கி சூடும் ரொம்ப ஜாஸ்தி...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//(இதுலயும் சாப்பாடு சேர்த்துட்டேன்).//
மெய்யாலுமே சாப்பிட்டு விட்டுதான் எழுதினேன் ! :)

தனிப் பதிவா எழுது, உன்னோட எழுத்து அழகா குண்டு குண்டா பார்க்கிறது நல்லாதான் இருக்கும் எனக்கு தெரியுமே :))

Shameed said...

கட்டுரை 29 வரியில் 29˚C யில் கூலாக அருமையாக இருந்தது .அதற்கு பின்னுட்டம் தான் 40 வரியில் 40˚C யில் ஹாட்டாக (CROWN ) இருந்தது

crown said...

அஸ்ஸலாமு அலைகும் இப்ப ஹாட் டாப்பிக் இந்த கோடை வெயில் பற்றிதான்.ஆனாலும் சகோ.சாகு(கூ)ல்இப்படி கொட்டுவார்ன்னு நினைக்கல!(40˚C யில் ஹாட்டாக) இருந்தது. நான் கூலாகத்தேனே எழுதினேன்??? ஏன் இந்த ஸொட்டு??????????

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஆரோக்கியம் சம்மந்தமான இங்கு சகோ. தஸ்தகீரின் (கிரவுன்) அறிவுரையை முற்றிலும் நாம் பின்பற்றி வருவோமேயானால் மக்கள் நாளாக, நாளாக ஆரோக்கியம் அடைந்து நோய்,நொடியில்லாமல் வெளியில் கவலையின்றி சுற்றித்திரிவது அதிகரித்து விட்டால் (இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக அதிகரிக்க வேண்டும்) மக்கள் மருத்துவமனை நோக்கி அலைகடலென படையெடுத்து வருவது படிப்படியாக குறைந்து மருத்துவ, மருந்து சம்மந்தமான தொழில் பெரும் பாதிப்படைந்து பிறகு மருத்துவ உலகம் அரசுக்கு பெரும் போராட்டம் மூலம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி கோரிக்கையும் வைக்கலாம் இப்படி " நாளாக, நாளாக மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனை வருவது குறைந்து விட்டது. அதனால் எங்கள் தொழில் பெரிதும் பாதிப்படைந்து நலிவுற்றுள்ளது. இதனால் எங்களுக்கு அரசு வேறு ஒரு மாற்றுத்தொழிலை அமைத்து தர வேண்டும். இல்லையேல் புதிய‌ வைர‌ஸ் கிருமிக‌ளை அர‌சே முன்னின்று க‌ண்டுபிடித்து அதை ம‌க்க‌ள் ம‌த்தியில் ப‌ர‌வ‌ச்செய்து அத‌ன் மூல‌ம் ம‌க்க‌ள் எங்க‌ள் ம‌ருத்துவ‌ம‌னைக‌ளுக்கு முன்பு போல் ப‌டையெடுத்து வ‌ர‌ வேண்டும். அத‌ன் மூல‌ம் ந‌லிவ‌டைந்த‌ எங்க‌ள் தொழில் வ‌ள‌ம் பெற‌ வேண்டும். அத‌ற்கு அர‌சு உரிய‌ ஆவ‌ண‌ செய்ய‌ வேண்டும் என‌ ம‌ருத்துவ‌ ச‌ங்கங்களின் சார்பாக‌ இங்கு முத‌ல்வ‌ருக்கு எங்க‌ள் ப‌ணிவான‌ கோரிக்கைக‌ளை வைக்கின்றோம். எங்க‌ள் கோரிக்கைக‌ள் நிறைவேற்ற‌ப்ப‌டுமாயின் வரும் ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்த‌லில் எங்க‌ளின் வாக்குக‌ள் அனைத்தும் உங்க‌ளுக்கே என‌ அன்புட‌ன் தெரிவித்துக்கொள்கின்றோம். இப்ப‌டிக்கு ம‌ருத்துவ‌ ச‌ங்க‌ம். என்று ஒரு கோரிக்கையை அர‌சுக்கு வைத்தாலும் ஆச்ச‌ரிய‌ப்ப‌டுவ‌த‌ற்கில்லை இன்றைய‌ சூழ்நிலையில்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அட NM : சூட்டிலும் இப்படியொரு சொட்டா ! SO COOL !!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஐயா க்ரவ்ன் அவர்களே !

மருத்துவ(ர்களின்) சங்க பிரதிநிதி NM அவர்களின் வேண்டுகோளை கவனத்தில் கொண்டு, இப்படியெல்லாம் மருத்துவர்களின் நலனுக்கு ஆதவாக போராட்டம் வெடிக்க வழிசெயாதீர் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

குறிப்பு : மர்த்துவர்களின் மருந்துச் சீட்டு எழுத்துகளுக்கு ஒருங்குறி (UNICODE) கண்டரிவதற்கு ஆவணசெய்தால் நல்லது.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு