Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையின் ஆட்டோ விளம்பரங்கள் - ஓர் அலசல் 26

அதிரைநிருபர் | July 29, 2010 | , ,

எண்பதுகளில் சஊதியின் தலைநகர் ரியாதில் இருந்தபோது, நாங்கள் அமைத்த ஒரு சிறு அமைப்பான அதிரை நலச் சங்கத்திற்கு ஊரிலிருந்து விண்ணப்பம் ஒன்று வந்தது           - கீழத் தெருவைச் சேர்ந்த  அஹ்மது முஹிதீன் என்ற இளங்குருத்துக்குக் கண் பார்வை இழந்து போய்க்கொண்டிருப்பதாக. கமால் ஹுசைன், ஷரபுத்தீன் ஆகியோரின் தங்குமிடத்தில் ஒன்றுகூடினோம். அன்றையச் சூழ்நிலையில் பத்தாயிரம் சேர்ந்தது. உடனே அதை அனுப்பி, மேல்மருத்துவம் செய்யக் கோரினோம். பணத்தைப் பெற்றுக்கொண்டோர் செய்தார்கள் போலும். இறைவனின் நாட்டம் வேறு விதமாக இருந்துள்ளது; அச்சகோதரர் குணம் பெறவில்லை; கண் பார்வை அற்றவராகிவிட்டார்!

அவர்தான், நம்மூரின் ஆட்டோ விளம்பர மன்னன், 'அதிரையின் அற்புதம்', கீழத்தெரு அஹ்மது! இவருடைய கணீர்க்குரலை அதிரையின் தெருக்களில் கேட்கும்போது, காது கொடுத்துக் கேட்கவேண்டும் போல் இருக்கின்றது.

அதிரை பைத்துல்மாலின் நிரந்தர அறிவிப்பாளர் இவர். இவருக்கு பைத்துல்மால், 'வாழ்நாள் சாதனையாளர் விருது' இதுவரை கொடுத்திருப்பார்கள் என்றே நம்புகின்றேன்; எனக்குத் தெரியாது; கொடுத்திராவிட்டால், இனியாவது கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றேன். எழுதிக் கொடுக்கும் விளம்பரத்தை வாசிக்கக் கேட்டு, அப்படியே மனத்தில் பதிய வைத்து, அட்சரம் மாறாமல் அதையே தனது கணீர்க் குரலில் ஊர் மக்கள் கேட்க உரத்துக் கூறுவார்.

பேரூராட்சியின் அடாவடி விளம்பரங்களும் இவர் மூலமே கொடுக்கப்படுகின்றன. வீட்டுவரி, தண்ணீர்வரி, சொத்துவரி என்று அதிரையின் குறிப்பிட்ட சில தெருவாசிகளிடமிருந்து மட்டும் கறக்கும் பணம் எங்கே செல்கின்றது என்று நமக்குத் தெரியாது. இதில், கொடுத்தவர்களே மீண்டும் கொடுக்கும் அப்பாவித்தனம் வேறு. மனிதர்களின் மறதியைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் அலுவலர்களின் அடாவடித் தனம்!

ஒரு முறை என் வீட்டுக்கு இருவர் வந்து வீட்டுவரி கேட்டார்கள். கொடுத்ததும் கொடுக்காததும் எனக்குத் தெரியாது. அதனால், "லிஸ்ட்டைப் பார்த்து, எவ்வளவு என்று சொல்லுங்கள்" என்றேன். "போன தடவை எவ்வளவு கொடுத்தீர்களோ, அதுதான்" என்றார் வந்தவர் கூலாக. "அது எனக்குத் தெரியாது; கையிலிருக்கும் பட்டியலைப் பார்த்துச் சொல்லுங்கள்" என்றேன். தன் கையிலிருந்த பட்டியலில் தேடுவதுபோல் பாசாங்கு செய்துவிட்டு, இடையில் நான், "ஏன், இல்லையா?" என்று கேட்டபோது, "உங்க கீழ்புரம் லிஸ்ட் கொண்டுவரலீங்கோ" என்றார் அந்த 'அதிகாரி'. "பின்னே என்ன சிரைக்கவா வந்தாய்?" என்று கேட்கத் தோன்றியது; ஆனால், கேட்கவில்லை. அசடு வழியத் திரும்பிச் சென்றனர். வெளியில் சென்றிருந்த என் இல்லாள் திரும்பி வந்தபோது, நடந்ததைக் கூறினேன். "அதுதான் கட்டிவிட்டோமே!" என்று கூறி, பணம் கட்டிய ரசீதை எடுத்துக் காட்டினாள்.

சரி; இனி மற்ற ஆட்டோ விளம்பரங்களுக்கு வருவோம். அஹ்மதின் விளம்பரங்களுள் பெரும்பாலானவை, 'கமர்ஷியல்' விளம்பரங்கள்தாம். "லைலாத்தி, லைலாத்தி" - இது அடிக்கடிக் கேட்கும் விளம்பரம். 'சல்மான்ஸ்', 'லுக்மான்ஸ்' என்று கூறி, "உங்களுக்குப் பிடித்த வண்ண வண்ண ஆடைகளை வாங்கிச் செல்லுங்கள்" என்று அறிவிப்பார் அஹ்மது. "இலவசம், இலவசம், இலவசம்!" என்று கூறி, மக்களின் கவனத்தை ஈர்ப்பார். அதற்குப் பின்னணியில் செலவு இருக்கும்; அது வேறு கதை. இன்று காலை (29-07-2010) ஒரு புதிய அறிவிப்பு: "தமீம் இறைச்சிக் கடை!" இன்று முதல், நோன்பு 27 வரை சிறப்புத் தள்ளுபடியில் இறைச்சி விற்பனையாம். ஏற்கனவே 'கொலஸ்ட்ரால்', BP என்று நோய்கள் கூடி இருக்கும்போது, இறைச்சி விற்பனையில் 'ப்ரமோஷன்' வேறா?

மக்களுக்குப் பயனுள்ள விளம்பரங்கள் ஒரு சில. ஆனால், அவற்றை மக்கள் எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று நமக்குத் தெரியாது. 'ஷிஃபா' மருத்துவமனையின் சிறப்புச் சிகிச்சை அறிவிப்புகள், மாணவ மாணவிகளின் பள்ளிச் சீருடைகள் தயாரிப்பு, கல்வி நிறுவனங்களின் அறிவிப்பு முதலானவை.

விளம்பர அறிவிப்புகளுள், வட்டியை ஆதாரமாகக் கொண்ட வங்கிகள், இன்ஸ்யூரென்ஸ், மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் போன்றவையும் அடங்கும். "MGR ஐஸ்கிரீம்" வண்டி தவறாமல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வந்து, பிள்ளைகளை அடம்பிடிக்க வைக்கும்.

வேண்டுமென்றே மக்களின் வெறுப்பைத் தேடிக்கொள்வதற்காக, மாற்று மத அன்பர்கள் சிலர் அம்பாசிடர் கார்களில் இடையிடையே நம் பகுதிக்குள் வந்து, தம்மைச் சார்ந்தோரின் மரண அறிவிப்புகளைச் செய்கின்றனர். இதில், நம்மூரின் சுற்றுவட்டாரங்கள், பட்டுக்கோட்டை போன்ற இடங்களின் மாற்று மத அன்பர்கள் வந்து தொல்லை கொடுக்கின்றார்கள். தேவையற்ற இத்தகைய அறிவிப்புகள் அத்துமீறல்கள் என்பதை 'பேரூராட்சியின் ஆளுநர்கள்' சிந்திப்பார்களா?

நமதூர் ஆட்டோ விளம்பர நிலவரத்தை விரைவாக அலச நினைத்தபோது, எனது சிந்தனையில் வந்தவை இவைதாம். இதில், யாரையும் சாடுவதோ, அளவுக்கு மீறிப் புகழ்வதோ எனது நோக்கமன்று. பின்னூட்டமிடுபவர்களின் மனப்பாசறைகளில் இன்னும் ஏராளம் இருக்கலாம். பகிர்ந்துகொள்ளுங்கள், பார்ப்போம்.

-அதிரை அஹ்மது


29.07.10

26 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சமீபத்தில் ஊரில் இருக்கும்போது ஜும்மா தொழுதுவிட்டு பள்ளியிலிருந்து வெளியான உடன் வேடிக்கையான விளம்பரம் உங்கள் குழந்தைகள் ஆங்கியருக்கு நிரகாக ஆங்கிலம் பேச வேண்டுமா அதற்கான அரிய வாய்ப்பு என்று "ஒரு புதிய பள்ளிகூடத்தின் பெயரைச் சொல்லி" குறைந்த கட்டணத்தில் சேருங்கள் என்று நீண்டது ! ம்ம்ஹும் நானும்தான் வெதும்பி கொண்டேன் இப்படி முப்பது ஐந்து வருசத்து முன்னாடி ஆட்டோவில் வந்திருந்தா எங்க அப்பாவும் என்னையே இங்கே சேர்த்து விட்டிருப்பாங்களேன்னு ! :)

Yasir said...

அல்லாஹ் இவருக்கு கண்ணை பறித்தாலும்..கனீரன்ற குரலை கொடுத்து இருக்கிறான்...வல்லவனுக்குதான் தெரியும் ..யாருக்கு எப்படி ரிஜ்க் கொடுப்பதேன்று
12000 வது அடியை அடித்ததும் நான் தான் சாவன்னா காக்கா

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இங்கே இவ்ளோ அடி அடிச்சுட்டு ஊருக்குதானே போறீங்க ! அங்கே(யும்) கொசுக்களையும் கொஞ்சம் அடிங்க(மா) யாசிர் ! with smile :)

Yasir said...

என்னுடைய காக்கா ( ரபீக்-ஷார்ஜா ) நமது அதிரை நிருபரை தொடர்ந்து படிப்பதாகவும்..சாவன்னா காக்காவிற்க்கு..அவர்களின் சலாத்தினையும் தெரிவித்தார்கள்

Yasir said...

கொசுவை நினைத்தால் தான் காக்கா கொழையேல்லாம் நடுங்குது...சாமளிப்போம் ...டெய்லி பேட் மிட்டன் கேம்தான் ( கொசு அடிக்கும் கருவி )

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இப்போவுள்ள கொசுவெல்லா Phd படிச்சுட்டு வந்திருக்குங்க ! எங்கே எப்படி யரிடம் ஆற அமர உட்கார்ந்து குடிக்கலாம்னு தெள்ளத் தெளிவா இருக்குது(ங்க) வலைக்குள் சிக்காத விருந்தாளிங்களாக !

அப்துல்மாலிக் said...

//அபுஇபுறாஹிம் says
29/07/10 5:59 PM

இங்கே இவ்ளோ அடி அடிச்சுட்டு ஊருக்குதானே போறீங்க !//

யாஸிர் பாய் மறக்காம தமீம் கரிக்கடையிலே கரி வாங்கி சாப்பிடுங்க... ப்ரமோஷன் போய்ட்டு இருக்காம்

அப்துல்மாலிக் said...

ஆட்டோ விளம்பரங்கள் போய் இப்போ மொபைல் பயான் நடக்கிறதாம். வாரம் இருமுறை அந்ததந்த தெருமுனைகளின் ஆட்டோவில் வந்து தெருமுனை பயான் நடைப்பெறுகிறதாம், உண்மையாகவே அதை விரும்புகிறவர்கள் தத்தமது வாசல் படிகளில் உக்காந்து பயான் கேட்டு பயன் படுகிறார்கள்..

Adirai khalid said...

சகோ. அஹமத் அவர்கள் மாற்று திறனாளிகளுக்கு ஓர் முன்மாதிரி

சுயமாக தொழில் செய்து, வாழ்க்கையை இறைவன் தனக்கு வழங்கி இருக்கும் அருட்கொடையால் சகோதார் அவர்கள் தன் வாழ்விற்காக யாரிடமும் கையேந்தாமல், மேலும் அரசிடமும் எந்த சலுகைகளும் பெறாமல் நகர்த்த மூடியும் என்று நிருபித்து கொண்டிருக்கின்றார்

இவர்களைகண்டு இன்றைய இளைஞர்கள் வெட்கப்பட வேண்டும். எதிர்கால சமுதாயம் சுயமாக சிந்தித்து செயல்படுவது மிக அவசியம், எல்லா வெற்றிக்கும் முயற்சியே போர்வாள் .,

தோல்வி கூட வெற்றியின் முதல்படிதான்

ஒவ்வொருவரிடமும் ஒழிந்து கிடக்கும் திறமைகளை எப்படி வெளிக்கொணர்வது, என்பதினை சகோ, அஹமத் அவர்களின் வாழ்விலிருந்து கற்றுகொள்ளவேண்டும்.

அஹமது மாமா அவர்களின் எழுத்திலிருந்து தோண்டத்தோண்ட புதையலாகவே வருகின்றது ., யாரும் நினைக்கமுடியாத அல்லது எழுதமுடியாதவைகளை மாமா அவர்கள் எழுத்திலிருந்து காணமுடிகின்றது . இவைதான் அல்லாஹ் அஹமது மாமா அவர்களுக்கு தந்த அறிய அன்பளிப்பு . அதை என்னைபோன்ற சாதாரண வாசகனுக்கும் பகிர்தமைக்கு மிக்க நன்றி.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அட உ.ஒ: உன் கருத்தோடு நானும் ஒத்துப் போகிறேன் ! - இங்கே மாமா(வின்) கட்டுரையின் இருதியில் //பின்னூட்டமிடுபவர்களின் மனப்பாசறைகளில் இன்னும் ஏராளம் இருக்கலாம். பகிர்ந்துகொள்ளுங்கள், பார்ப்போம்.// இதேபோல் குதிரை வண்டி பின்னாடி ஓடி நோட்டீஸ் எடுத்தது அவர்களி அறிவித்துச் சென்றதை அப்படியே பின்னொலிப்பது சந்துளூடே ஓடிக் கொண்டு இதெல்லாம் ஞாபகம் வரலையா !?

Shameed said...

அஹ்மத் காகா வின் ஆக்கங்கள் வித்தியாசமான திசைகளில் பயணிக்கின்றன அருமை. கீழத்தெரு அஹ்மது! காகாவின் ஜலிலா ஜுவலறி என்பதும் மனதை விட்டு நீங்கதா விளம்பரங்களில் ஒன்று

Shameed said...

29/07/10 6:05 PM
என்னுடைய காக்கா ( ரபீக்-ஷார்ஜா ) நமது அதிரை நிருபரை தொடர்ந்து படிப்பதாகவும்..சாவன்னா காக்காவிற்க்கு..அவர்களின் சலாத்தினையும் தெரிவித்தார்கள்

பாலிய நண்பன் ரபீக்குக்கு என் சலாம் சொல்லவும் ,அதிரை நிருபரை படிபதுடன் நின்று விடாமல் பின்னுட்டம் மற்றும் கட்டுரைகள் எழுத முயற்சி செய்ய சொல்லவும்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சகோதரர் அஹ்மத் முஹிதீன் அவர்களை அதிரையில் சந்தித்து பேசினேன், கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளி வாசல் திறப்புவிழா விளம்பரம் செய்து வந்தார்கள், உதவிகள் செய்வதற்கு அரசாங்கமோ அல்லது வேறு எந்த அமைப்போ பார்வையாற்றவர்களுக்காக அதிரையில் இல்லை என்று ஆதங்கப்பட்டுக்கொண்டார்கள்.

அழகிய தமிழ் நடையில் பேசும் அஹ்மத் முஹிதீன் அவர்களின் குரல் போன்று வேறு யாருடை குரலையும் நான் இதுவரை கேட்டது இல்லை. அல்லாஹ் போதுமானவன்.

Shameed said...

12000 வது அடியை அடித்ததும் நான் தான் சாவன்னா காக்கா

எண்ணமா அடிகிறாங்க ,எனக்கும் ஒரு சான்ஸ் கொடுங்கப்ப

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சரியா சொன்னீங்க சாஹுல் காக்கா, இன்றைக்கு ஜலீலா ஜுவல்லரி, சல்மான் பேக்கரி போன்ற கடைகள் அதிரை மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருப்பது நம் அஹம்து முஹிதீன் அவர்களின் கணீர் குரலால் தான்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கா.மு.மே.பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது மக்கள் தொச்கை கணக்கெடுப்புக்காக நாங்கள் (மாணவர்கள்) தெருவாரியாக சென்று எடுத்து வந்தோம் அப்போது தக்வா பள்ளிக்கும் காவன்னா கடைக்கும் இடையில் நின்ற அ.மு. அடித்த கமெண்ட் என் நினைவுக்கு வருகிறது, என்னப்பா படிக்கிற வேலைய உட்டுட்டு இப்புடி வுடு வுடா போறீங்களே, மக்கள் தொகைய எடுப்பதற்கு பதிலா மக்களிடம் எவ்வளவு தொகை இருக்குன்னு எடுத்தா நால்லாயிருக்கம்னு" சொன்னது(தான்)

Shameed said...
This comment has been removed by a blog administrator.
மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நம்ம ஊரில் இப்பொழுதெல்லாம் எதற்கெடுத்தாலும் ஆட்டோ, வேன் அல்லது அம்பாசிடர் காரில் ஒலிபெருக்கி கட்டிக்கொண்டு கட்டுப்பாடு ஏதும் இல்லாமல் கண்டதெற்கெல்லாம் விளம்பரம் செய்து பொது மக்களுக்கு பெரும் இடையூறாகவும், எரிச்சலையும் ஏற்படுத்தி வருகிறார்கள். இன்னும் கொஞ்சம் விட்டால் பழைய இரும்பு, பித்தளைக்கு நிலக்கடலை தருபவர் கூட மைக்கில் விளம்பரம் செய்து விற்பனை செய்வார் போல் தெரிகிறது. பள்ளிகளில் தொழுகை நடக்கும் நேரம் கூட அவர்கள் கொஞ்சமும் மரியாதை கொடுப்பதில்லை அதை பொருட்படுத்துவதுமில்லை. ஒரு நேரத்தில் (கொளதியா) பைத்து சபா அடிப்பவர்கள் கூட பள்ளி எல்லை வந்து விட்டால் மொளன ஊர்வலம் போல் சென்று எல்லைத்தாண்டியதும் "ஆரிராரி ராரி ரோஜன் கண்மணியே, ஆரிராரி, ராரி ரோஜன் நபி மணியே" என்று ஆரம்பிப்பார்கள். (தயவு செய்து யாரும் அதற்கு என்னிடம் அர்த்தம் கேட்காதீர்கள். வேண்டுமென்றால் சம்மந்தப்பட்டவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்).

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நம்பகத் தன்மையுடைய அறிவிப்புகள்னு வருமேயானால் பள்ளிவாசல் மைக்கில் அறிவிக்கும் அறிவுப்புகள்(தான்) அது மரணச் செய்தியாக இருந்தாலும் அல்லது எச்சரிக்கையாக இருந்தாலும் அல்லது வேண்டுகோளாக இருந்தாலும் ஆனால் இந்த குதிரை வண்டி, ஆட்டோ, அம்ப்ஸ்டர் அறிவிப்புகள் எந்த அளவுக்கு ஊர்மக்கள் மனதைத் தொட்டதா அலல்து சப்த இரைச்சல் சுட்டதா ?

கட்டுரையில் சொன்னதுபோல் மாற்றுத் திறனாளியான சகோதரரின் திறமை, முயற்சி, தான்னம்பிக்கை, வியக்கவைக்கும் நினைவாற்றல் என்றும் பாராட்டுகுரியதே !

Anonymous said...

வேண்டுமென்றே மக்களின் வெறுப்பைத் தேடிக்கொள்வதற்காக, மாற்று மத அன்பர்கள் சிலர் அம்பாசிடர் கார்களில் இடையிடையே நம் பகுதிக்குள் வந்து, தம்மைச் சார்ந்தோரின் மரண அறிவிப்புகளைச் செய்கின்றனர். இதில், நம்மூரின் சுற்றுவட்டாரங்கள், பட்டுக்கோட்டை போன்ற இடங்களின் மாற்று மத அன்பர்கள் வந்து தொல்லை கொடுக்கின்றார்கள். தேவையற்ற இத்தகைய அறிவிப்புகள் அத்துமீறல்கள் என்பதை 'பேரூராட்சியின் ஆளுநர்கள்' சிந்திப்பார்களா?

அஹ்மத் காக்கா அஸ்ஸலாமு அலைக்கும்,

வெளியூர் மாற்றுமத அன்பர்கள் நமதூரில் வந்து மரண அறிவிப்பு செய்வதில் என்னை பொறுத்தவரை தவறில்லை, ஏனென்றால் நமதூர் வியாபாரிகள், பட்டுக்கோட்டையில் தொழில் துறையில் இருக்கும் நமதூரை சார்ந்தவர்கள், நம்மை சுற்றிருக்கும் கிராம மக்களிடம் நெருங்கி பழகிக் கொண்டிருக்கிறார்கள். நானும் பட்டுக்கோட்டையில் இருக்கும் போது இதுமாதிரி அறிவிப்புகளில் ஒரு சில நான் அறிந்தவர்கள். மாற்றுமத நண்பர்களின் மரண துக்கங்களில் பங்குகொள்ளும்போது அவர்களின் நட்பில் நெருக்கம் ஏற்படுகிறதை நான் உணர்ந்திருக்கிறேன். மேலும் மரண துக்கங்களில் பங்கெடுப்பதின் அவசியத்தை , நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு யூதனின் மையத்திற்கு எழுந்து நின்றதை எடுத்துக் காட்டி கூறும்போது ஆச்சரியத்துடன் அவர்களின் மனங்கள் நெகிழ்வதை கண்டிருக்கிறேன். நம்மில் பலர் தொடர்ச்சியாக வெளி நாட்டிலேயே இருந்து விட்டு, இப்போது ஊரில் இருப்பதாலும், மாற்று மத நண்பர்கள் அதிகம் இல்லாததாலும் இது போன்ற அறிவிப்புகள் எரிச்சலை ஏற்படுத்துவது இயல்பே.

--
ஷரபுத்தீன் நூஹு
1 925 548 3696

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.தன்னுடைய கனீர் குரலால் எல்லாரையும் (வி)திரும்பி பார்க்க வைத்தவர்.இவரின் வெண்கலக்குரலே அவருக்கு இப்படி ஒரு விளம்பரத்தைத்தேடித்தந்துள்ளது.கூப்பிடு அஹமது முஹிதீனை விளம்பரம் செய்ய என்று சொல்லும் அளவிற்கு.சாச்சாவின் மற்றுமொரு முத்தான ஆக்கம்.(தனக்கென விளம்பரம் தேடிக்கொள்ளாதவார்கள்)

Unknown said...

செய்திக்குப் பொருத்தமான படம் போட்டு அசத்திவிட்டீர்கள்! எழுத்துகள் கலரில் இருப்பதைவிட, கறுப்பாக இருந்தால், படிப்பதற்கு நன்றாயிருக்கும்.

Shameed said...

எழுத்தில் கரு இருப்பதால் எழுதியதை கலரில் போட்டுவிட்டார்கள் அஹ்மத் காகா

Shameed said...

இப்போது இரண்டுமே கரு மற்றும் கறுப்பில் உள்ளது

crown said...

இப்போது இரண்டுமே கரு மற்றும் கறுப்பில் உள்ளது.
------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் .இருவிழிபொல் கரு,கருவென்றிருபதால் நல்லா பார்க முடிகிறது இந்த இருவிழியில் கருப்பகுதி குருத்து பாதித்த மனிதர் பற்றிய செய்தி.அதனால் தான் கருத்திட்டேன் நம்மை திரும்பி பார்க வைத்தவர் என்று.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எல்லாமே கரு கறுன்னுதான் இருக்கு நேசிப்பவர்களின் கருத்துக் குவியலாக.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு