இந்திய வல்லுநர்களால் உருவாக்கப்பட்டு, செனற ஜூலை 14 வெளியாகியுள்ளது எபிக் வெப் பிரவுசர்.
இதுவரை வெளிநாடுகளில் உருவான பிரவுசர்களை மட்டுமே பயன்படுத்தி வந்த நாம், இனி பெருமையுடன் இந்த இந்திய பிரவுசரைப் பயன்படுத்தலாம். இது இந்தியர்களுக்கு மட்டுமல்ல. உலகில் இணையத்தில் உலா வரும் எவரும் இதனைப் பயன்படுத்தலாம்.
பெங்களூரைச் சேர்ந்த ஹிடன் ரெப்ளெக்ஸ் (Hidden Reflex) என்ற நிறுவனம் இதனை மொஸில்லாவின் கட்டமைப்பில் உருவாக்கியுள்ளது. இதனை http://www.epicbrowser.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். இதனை இன்ஸ்டால் செய்தவுடன், இதன் பளிச்சிடும் வண்ணங்கள் நம்மை வரவேற்கின்றன. அழகான மயில் ஒன்று தோகை விரித்து ஆடும் காட்சி கிடைக்கிறது. இந்த பின்னணித் தோற்றத்தினை, இந்த தளம் தரும் தீம்களைப் பயன்படுத்தித் தாராளமாக, நமக்குப் பிடித்த வகையில் மாற்றிக் கொள்ளலாம். இதன் இடது ஓரத்தில் உள்ள கட்டத்தில், ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களுக்கான நேரடி வாயில் கிடைக்கிறது. நாம் அடிக்கடி பயன்படுத்தும் பலவற்றிற்கான விட்ஜெட்டுகள் தரப்பட்டுள்ளன. கிளிக் செய்தால், நேராக அந்த தளங்களுக்குச் செல்கிறோம். இந்த தளங்கள் நமக்கு அசாத்திய வேகத்தில் தரப்படுகின்றன. பிரவுசரில் இருந்தவாறே, நம் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களைத் தேடிப் பெறலாம்.
இந்த பிரவுசரின் மிகச் சிறந்த அம்சம் இதனுடன் சேர்த்துத் தரப்படும் ஆண்ட்டி வைரஸ் பாதுகாப்பு ஆகும். இந்த பிரவுசர் மூலம் எந்த பைலை டவுண்லோட் செய்தாலும், அது வைரஸ் சோதனைக்கென ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே, இறக்கம் செய்யப்படுகிறது. வைரஸ்கள் இருந்தால் அவற்றை அழிக்கிறது. அதே போல நாம் திறக்க இருக்கும் இணைய தளங்கள் வைரஸ் மற்றும் மால்வேர் தொகுப்புகளைப் பரப்பும் வகையுடை யதாய் இருந்தால், எச்சரிக்கை கொடுத்துத் திறக்காது. மேலும் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடும் வசதியினையும் இந்த பிரவுசர் அளிக்கிறது. இத்தகைய பாதுகாப்புடன் வடிவமைக்கப் பட்டிருக்கும் உலகின் முதல் பிரவுசர் இது எனக் கூறலாம்.
அடுத்ததாக, இண்டிக் டூல் மூலம், இதில் இந்திய மொழிகளைக் கையாளும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தமிழ் உட்பட 12 மொழிகளில் இதனைப் பயன்படுத்தலாம். இதில் தரப்படும் கட்டத்தில் கிரிக்கெட், டிவி உட்பட பல செய்திகளுக்கான தொடர்புகள் தரப்பட்டுள்ளன. லேட்டஸ்ட் சினிமா பாடல்கள், கிரிக்கெட் ஸ்கோர், மாநில மொழிகளில் செய்திகள், லைவ் டிவி, பங்குச் சந்தை தகவல்கள், நிகழ்ச்சிகள், வீடியோ காட்சிகள், தினந்தோறும் ஜோக் மற்றும் skins, maps, jobs, news, gmail, yahoo, games எனப் பலவகைகளில் இந்த தளம் அசத்துகிறது. இந்த பிரவுசரிலேயே ஒரு சிறிய விண்டோவில் யு–ட்யூப் தளத்தினை இயக்கி வீடியோ கிளிப்களைப் பார்க்கலாம்.
இவற்றுடன் ஒரு இலவச வேர்ட் ப்ராசசர், வீடியோ சைட் பார் மற்றும் கம்ப்யூட்டர் பிரவுசர் தரப்பட்டுள்ளன. பிரவுசரில் இருந்தே உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களையும் போல்டர்களையும் கையாள முடியும்.
இணைய தளப் பெயர்கள் பெரிதாகக் காட்டப்படுவதால், பெயர்களில் சிறிய அளவில் மாற்றம் செய்யப்பட்டு, பிஷ்ஷிங் புரோகிராம்களை அனுப்பும் தளங்களை எளிதில் அடையாளம் காண முடியும்.
நம் தனிப்பட்ட தகவல்கள் பதிந்திருந்தால் ஒரே ஒரு கிளிக் செய்து அவற்றை அழிக்க முடியும். பிரைவேட் பிரவுசிங் மேற்கொள்ளவும் ஒரே ஒரு கிளிக் போதும்.
மொஸில்லா கட்டமைப்பில் இந்த பிரவுசர் அமைக்கப்பட்டிருப்பதால், அதிவேகத்தில் தளங்கள் இறக்கப் பட்டுக் காட்டப்படுகின்றன. பைல்கள் டவுண்லோட் செய்யப்படுகின்றன. 1,500க்கும் மேற்பட்ட இந்திய தீம்கள் மற்றும் வால்பேப்பர்கள் தரப்பட்டுள்ளன. பயர்பாக்ஸ் பிரவுசரின் அனைத்து ஆட் ஆன் தொகுப்புகளும் இதிலும் செயல்படுகின்றன. ஏறத்தாழ 1,500 அப்ளிகேஷன்களுக்கு மேல் இந்த பிரவுசரின் ஆன்லைன் காலரியில் தரப்படுகிறது. இலவசமாக இவற்றைப் பயன்படுத்தலாம்.
பன்னாட்டளவில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6னைப் பயன்படுத்தக்கூடாது என்ற தகவல் முனைப்போடு வைக்கப்படும் நிலையில், இந்தியாவில் இன்னும் பெரும்பாலானவர்களால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 பயன்படுத்தப் படுகிறது. அவர்கள் இனிமேலாவது இந்த இந்திய பிரவுசரைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.
இந்த பிரவுசரைத் தயாரித்த தலைமைப் பொறியாளர் பரத்வாஜ் கூறுகையில், வைரஸ் உள்ளதா என ஸ்கேன் செய்வது , நம் பங்குகள் எந்நிலையில் மார்க்கட்டில் உள்ளன என்று காட்டுவது 12 இந்திய மொழிகளில் இதனைப் பயன்படுத்துவது, பயணத்திற்கான டிக்கெட்களைப் பதிவு செய்வது போன்ற வேலைகளையும் இதன் மூலம் மேற்கொள்ள லாம் என்று கூறி உள்ளார்.
சீனாவில் தயாரிக்கப்பட்ட மேக்ஸ்தான் என்ற பிரவுசர் அந்த நாட்டில் பிரபலமாயுள்ளது. மற்ற நாடுகளில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் எபிக் பிரவுசர் மற்ற நாடுகளில், குறிப்பாக இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்களால் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.
Be a proud of an Indian
தகவல்: சம்சுதீன் (ஜம் ஜம்), அப்துல் மாலிக், மு செ மு நெய்னா முகம்மது.
15 Responses So Far:
சாஹுல் காக்கா 13000 அடி நான் அடித்துவிட்டேன், முடிஞ்சா 14000 வது அடி அடிக்க முயற்சி செய்யுங்கள். :-)
சாஹுல் காக்கா 13000 அடி நான் அடித்துவிட்டேன், முடிஞ்சா 14000 வது அடி அடிக்க முயற்சி செய்யுங்கள்.
-----------------------------------------------
அஸ்ஸலாமு அலைகும்.தம்பி(குட்டி)13000 அடிச்சா காக்கா(தாய்)14000 அடிப்பது கடினமா?
அஸ்ஸலாமு அலைக்கும்.எங்கே மந்தரமொழியில் மயக்கும் சகோ.ஹாலிதை கானோம்.கங்காரு பார்க்க போய்ட்டாரா?இல்லானா சிட்னி கிரிகெட் கிரவுன்ட்ல கிரிகெட் விளையாட சென்று விட்டாரா?யாராச்சம் கண்டா இங்க சொஞ்சம் வந்துட்டு போகச்சொல்ளுங்கள்.
இந்த வலையோடி(யின்) சோதனையான நேரம் போலும் நம் பார்வைக்கு(ம்) வந்திருக்கிறது நம் வலை மேய்ச்சலுக்கு(ம்) இழுத்துப் பார்ப்போம்... ஒத்துவந்தால் ஓட்டிகிட்டே இருப்போம் இல்லாட்டி கழட்டி விட்டுட வேண்டியதுதானே..
நன்றாக உள்ளது .. பயன்படுத்தலாம்
- Mohamed Jahangir
தாஜுதீன் says
சாஹுல் காக்கா 13000 அடி நான் அடித்துவிட்டேன், முடிஞ்சா 14000 வது அடி அடிக்க முயற்சி செய்யுங்கள். :-)
இதுஎல்லாம் மெயில் போட்டு சொல்லணும் இப்படி பப்ளிக்க சொன்ன நடக்குமா. நம்ம CROWN வெள்ளை கைலிய மடிச்சி கட்சலை கட்டிகிட்டு 14000 ஆயிரம் அடி யை அடிக்க ரெடியா நிக்கிறது இங்கு இருந்து பார்த்தலே தெரிகின்றது
அபுஇபுறாஹிம் says
இந்த வலையோடி(யின்) சோதனையான நேரம் போலும் நம் பார்வைக்கு(ம்) வந்திருக்கிறது நம் வலை மேய்ச்சலுக்கு(ம்) இழுத்துப் பார்ப்போம்... ஒத்துவந்தால் ஓட்டிகிட்டே இருப்போம் இல்லாட்டி கழட்டி விட்டுட வேண்டியதுதானே..
புரியவில்லை
அட என்ன சாஹுல் கனவா நெனப்புலேருந்து இன்னும் நீங்க வரலையா ? சரி விடுங்க என்னா புதுசா குதிரை வண்டி வந்திருக்கு அதான் நாம் போர போக்கில ஓடுதான்னு பார்க்கனும்னு சொன்னேன் சரியா ஓடினா ஓட்டிகிட்டே இருக்கலாம் இல்லேன்னா இருக்கவே இருக்கு கூகில் குரோம், அதான் எxஸ்ப்லோரர்.
அதிருகட்டும் இங்கே துபாயில இன்னொரு புதிய டாபிக் இன்னையிலேருந்து தெரியுமா ? இந்த ப்ளாக்பெர்ரின்னு ஒன்னு வந்தாலும் வந்துச்சு என்னா பாடு படுத்திச்சு (ஒரே சலைகை சலுகையா கொடுத்து எல்லோர் கையிலும் இப்போ இருக்கு) என்னமோ தெரியலை ஞானம் வந்ததுபோல் வரும் அக்டோபர் மாசத்த்லேருந்து அதற்கு இங்கே தடையாம் !
அபுஇபுறாஹிம் says
அதிருகட்டும் இங்கே துபாயில இன்னொரு புதிய டாபிக் இன்னையிலேருந்து தெரியுமா ? இந்த ப்ளாக்பெர்ரின்னு ஒன்னு வந்தாலும் வந்துச்சு என்னா பாடு படுத்திச்சு
ஆகா ப்ளாக்பெர்ரி கைக்கு அடக்கமா இருக்குமே கலரும் கூட சூப்பர இருக்குமே கருப்பா ப்ருவுன் கலரா என்று சொல்லமுடியாத கலரில் இருக்குமே அதையா தடை பண்றாங்க இதுஎனக்கு ரொம்ப பிடிக்கும் இதில் ஐஸ் கிரீம் வருது பிரஷ் பழமாவும் வருது எனக்கு இரண்டும் பிடிக்கும்
அட இங்கபாரு(ங்கப்பா) ஐஸ்கிரீமுக்கும் ஃபிரஷ் பழங்களும்தான் சாப்பிட்டுகிட்டு இருந்தீங்களா ! இதனால் ஏற்படும் அதிர்வலைகள் 8லிருந்து 9மடங்கு அதிகம மற்ற கைபேசிகளோடு ஒப்பிட்டு பார்க்கும்போது உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, உறவுகளின் விரிசலுக்கும் அதைவிட நாடுகளின் பாதுகாப்புக்கும் குந்தகம் விலைவிக்கும் இந்த கையடக்க கரையான் தான் புடிக்குமா ! :)
அஸ்ஸலாமு அலைக்கும் ப்ளாக்பெர்ரி இனிblock பெர்ரி? ,இப்படி எல்லாரும் பறி,பறின்னு பறிச்சா இப்படிதான் விக்கிறவங்க ராபரியா இருந்திருக்கும்,அதனால இழு பறி யில்லாம ,ஹரிபறில பிளாக் பன்னிட்டாங்க போல.சரி,சரி நம்ம அடுத்தவிசயத்துக்குப்போவோம்.
அட க்ரவுன்(னு) நீ சொன்ன மாதிரி சரியான ரோபரிதாம்மா இது ! ஆனா நீ போட்டியே சரியான "ரீ" இதுதான் உன்னோட ஸ்பெசாலிட்டி..
ஓ நீங்க கை பேசிய சொல்றிங்க நான் நாக்கு பேசிய சொல்லிடனா சரி விடுங்க
அப்படி இப்படினு 14000அடியை நம்ம போட்டு தள்ளியாச்சி
//அப்படி இப்படினு 14000அடியை நம்ம போட்டு தள்ளியாச்சி//
ஆஹா நல்ல சைலண்டா வெயிட் பண்ணி 14000 அடி அடிச்சிருக்கீங்களா? 15000 அடி யார் அடிக்கபோறங்கண்டு பார்ப்போம்.
Post a Comment