Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் "கால்பந்தாட்டம்" பெரிய திரையில்? 3

தாஜுதீன் (THAJUDEEN ) | July 14, 2010 | , , ,


உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் முடிவடைந்து விட்டது, விடுமுறையில் அதிரையில் இருந்த போது உலகக் கோப்பை கால்பந்து              மோகம் நம் அதிரையையும்                விட்டுவைக்கவில்லை என்பதை அன்பு அதிரை சகோதரர்களிடம் உரையாடும் போது அறிய முடிந்தது.

உலகக் கோப்பை போட்டிகளை பெரிய திரைகளில் நடுத்தெருவில் இலவசமாக காண்பிக்கப்பட்டது, நான் கேள்விபட்டேன்(நேரில் போய் பார்க்கவில்லை), சமீபத்தில் நம் அதிரை வலைப்பூ ஒன்றில் செய்தியாகவும் புகைப்படத்துடன் படிக்க முடிந்தது.

அதிரையின் கால்பந்து வீரர்களும், கால்பந்து ரசிகர்களும் (இதில் வயதானவர்களும் விதிவிலக்கல்ல) இரவில் விழித்திருந்து போட்டிகளை கண்டு ரசித்துள்ளார்கள். இறுதிநாள் போட்டியை பெரிய திரையில் காண 150 பேர் வந்தார்கள் என்பதாக நண்பர்கள் மூலம் அறிய முடிந்தது.

இதுவரை கிடைத்த செய்திகளின் அடிப்படையில் கட்டுப்பாடுடன் பெரிய திரையில் கால்பந்தாட்டம் மட்டும் பார்த்தார்கள் என்பது உண்மை. இப்படி திரை கட்டி விளையாட்டுப் போட்டிகள் பார்ப்பதற்கு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஆட்சேபனை தெரிவித்ததாக தெரியவில்லை.

----------------------------------------------------------------------------------------------------------


விசையத்துக்கு வருகிறேன், இப்படி விளையாட்டுப் போட்டிகளை பெரிய திரை கட்டி இரவு நேரங்களில் கும்பலாக இருந்து பார்ப்பது சரியா? தவறா? என்று தெரியவில்லை. இதை ஒரு உதரணமாக எடுத்துக்கொண்டு மற்ற விளையாட்டுப் போட்டிகளுக்காக தெருவுக்கு தெரு திரைக் கட்டி திருவிழாக்கள் போல் கூத்தடிக்கும் சூழ்நிலைகள் நம் தெருக்களில் வந்துவிடுமோ என்ற பயம் சில ஆலிம்களிடம் இருப்பதாக இளம் ஆலிம் ஒருவர் கவலையுடன் என்னிடம் கூறினார்.
விளையாட்டு என்ற பொழுதுபோக்குக்காக திரை கட்டப்பட்டது போல் வரும் நாட்களில் டிவி சீரியல்களுக்காக திரைகள் கட்டப்படலாம். டிவீ சீரியல்களின் அடிமைத்தனம் எல்லாதரப்பட்ட மக்களின் சிந்தனையை மழுங்கடித்துள்ளது என்பதை நான் சொல்லி அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டியதில்லை. எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

தொழில்நுட்பத்தில் பட்டுக்கோட்டையைவிட நம் அதிரை முன்னனியில் இருப்பதை நாம் யாரும் மறுக்க முடியாது. மார்க்க அறிவு இல்லாத ஒரு காலத்தில் தொழில் நுட்பத்தை மார்க்கமல்லாத விசயங்களுக்காக பயன்படுத்தினார்கள்.  உதரணமாக பைத்து (சினிமா பாட்டு மெட்டு) சபாக்கள், இது இன்று அறவே இல்லை நம்மூரில். தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் நாம் சீரழிவுக்கு போய்விடாமல் இருக்க எச்சரிக்கையாக இருப்பது இன்றைய காலகட்டத்தில் அவசியம். அதிரையில் தொழில்நுட்பத்துறை சம்பந்தமான வியாபாரம் செய்பவர்களும் மார்க்க சிந்தனையுடன் செயல்படுவார்கள் என்று நம்புவோமாக.

வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தை பொழுதுபொக்குக்காக  மட்டும் பயன்படுத்தாமல் பொது நோக்குடன் நல்ல பயனுல்ல கல்வி சம்பந்தமான விசயங்களுக்காக பயன்படுத்தவேண்டும், மார்க்க விசையங்களுக்காவும் பயன்படுத்தவேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து.

இரவு நேரங்களில் தெருவுக்கு நடுவில் கூட்டமாக இது போன்ற பொழுது போக்கு விசையங்களில் அக்கரை செலுத்துவதை தவிர்ப்பது நல்லது என்பது என்னுடய தனிப்பட்ட கருத்து, மற்றவர்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியவில்லை.

அன்புடன் தாஜுதீன்

நன்றி: அதிரை தென்றல் வலைப்பூ for Photos.

3 Responses So Far:

அப்துல்மாலிக் said...

நான் சென்னையில் இருந்தபோது உலககோப்பை கிரிக்கெட் ஃபைனலை பெரிய திரையில் காணும் வாய்ப்பு கிடைத்தது, இங்கு கூட பெரிய ஷாப்பிங்க் மால்களில் உள்ள சினிமா தியேட்டரில் நேரலை ஒளீப்பரப்பினார்கள் டிக்கெட் விலை சாதாரணம். பெரிய திரையில் பார்த்தால் மைதானத்தில் நேரிடையாக காண்பதுபோல் அனுபவம் இருக்கும். இப்படி எப்போதாவது நடக்கும் முக்கிய விளையாட்டு சம்பந்தமான நிகழ்ச்சிக்கு மட்டும் (வரும் கிரிக்கெட் உலககோப்பை மட்டும்) பயன்படுத்தினால் போதுமானது, இல்லையேல் சகோ. தாஜுதீன் கவலைப்படுவது போல் தெருவுக்கு ஒரு சினிமா கொட்டகை வரவும் வாய்ப்புள்ளது. மிகுந்த கவனம் தேவை

Shameed said...

சகோதரர் தாஜுதீன் அவர்களே ,தங்களின் கவலை நியாயமானதுதான் இதுபோன்ற விச(ய)ங்களை ஆரம்பத்தில் தடுத்துவிட வேண்டும் இதை வைத்து பல பலான விசயங்கள் நடக்க வாய்புகள் உள்ளது

தாஜுதீன் (THAJUDEEN ) said...

வாங்க சகோதரர்கள் சாஹுல் மாலிக், உங்கள் இருவரின் வருகைக்கு நன்றி.

இது போன்ற பொழுப்போக்கு விசயங்களை தெருக்களில் கும்பலாக இருந்து பார்ப்பதை ஊக்கப்படுத்தாமல் இருப்பது அவசியம் என்ற கருத்தோட்டத்தில் எழுதினேன்.

வேலைப் பளு அதான் உடனே பதில் கருத்திட முடியவில்லை.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு