நடந்து முடிந்த உலக்கோப்பை கால்பந்துப்போட்டியின் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் மோதிய இரண்டு அணிகளில் கடைசியாக வென்று உலகக்கோப்பையை தட்டிச்சென்ற ஸ்பைன் அணியை விட இன்று உலகில் பிரபல்யமாக பேசப்பட்டு வரும் ஜெர்மனிய மியூசியத்தில் உள்ள ஆக்டோபஸ் என்னும் கடல் பிராணி (அதாங்கெ நம்மூரு கடைத்தெருவுலெ விற்கும் கணவா மாதிரி இருக்குமே அதே தான்).
காரணம் அந்த ஆக்டோபஸ் கடல் பிராணியானது இன்று நடக்கும் உலக கால்பந்து ஆட்டத்தில் மோதும் இரண்டு அணிகளில் எந்த அணி வெற்றி பெரும் என்று கண்ணாடிப்பெட்டிக்குள் இறக்கி வைக்கப்பட்டுள்ள அவ்விரு நாட்டின் கொடிகளில் அது எதை தன் கால்களால் (கால் எது? கை எது? என்று நம்மால் துல்லியமாக சொல்ல முடியாத கன்ஃபூஸ் ஆன ஒரு பிராணி) எந்த நாட்டுக்கொடியைப் பற்றிப்பிடிக்கின்றதோ அந்த நாடு அன்று வெற்றி பெரும் என்பதே. அது போல் அரையிறுதி ஆட்டங்களில் பார்க்கப்பட்டு அதன் முடியும் துல்லியமானதாக கருதப்பட்டது.
அப்படி துல்லியமாக தன் கணிப்பை உலகுக்கு கூறிய அந்த ஆக்டோபஸுக்கு தான் பெருங்கடலில் எட்டுத்திசைகளிலும் சுற்றித்திரிந்து தனக்கு இஷ்டப்பட்டதை வேட்டையாடி உண்டு மகிழ்ந்து வந்த சமயம் நாம் அப்பக்கம் சென்றால் மேலே வலை வீசி நம்மை மனிதர்கள் பிடித்துச்சென்று நம்மை மியூசியத்தில் பார்வைப்பொருளாக வைத்து காசு பார்த்து விடுவார்கள். அதனால் நம் சுதந்திரம் பறிக்கப்பட்டு நாம் தனிமைப்படுத்தப்பட்டு சிறை வைக்கப்படுவோம் எனவே அங்கு செல்வது நமக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று முன் கூட்டியே துல்லியமாக தெரியாமல் போனது ஏனோ?
இதைப்படித்ததும் யாரோ இங்கு இப்படி முணு,முணுப்பது போல் தெரிகிறது (நம்மையும் ஆக்டோபஸ் லிஸ்ட்லெ சேர்த்துடாதியெ) அது யூகித்தது நடந்ததா? இல்லையா? என்று. 130க்கும் மேல் உள்ள ஒட்டு மொத்த உலக நாடுகளின் கொடிகளை தண்ணீர்த்தொட்டியில் இறக்கி அதில் உலகக்கோப்பையை வெல்ல இருக்கும் நாடு எது என்று அதனால் துல்லியமாக கணித்துச் சொல்ல முடியுமா?
ஒரு கார்ட்டூனில் போடப்பட்ட ஒரு கருத்துப்படம் சிரிப்புடன் சிந்திக்கவும் வைக்கின்றது. ஆக்டோபஸின் துல்லியமான கணிப்பால் கிளி வைத்து ஜோசியம் பார்த்தவர்கள் அக்கிளிகளை கூண்டிலிருந்து விரட்டி அடித்து ஆக்டோபஸ்களை வைத்து ஜோசியம் பார்க்க ஆரம்பித்து பின் கிளிகளெல்லாம் வேலையின்றி வேலைவாய்ப்பு தேடி அலைவது போலும் வரையப்பட்டிருந்தது.
மரங்கொத்தி ஒன்று தரையில் அடிக்கடி குக்கு, குக்கு என்று கூவி மண்ணைக்கொத்தினால் அம்மண்ணின் அடியில் எதோ கனிம வளம் (அ) எண்ணெய் வளம் இருப்பதாக இவ்வுலகம் எண்ணிக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அடுத்த வருடம் நடக்க இருக்கின்ற ரஷ்ய நாட்டு பாராளுமன்ற தேர்தலில் யார் வென்று பிரதமராவார்? என்ற முன் கணிப்பிற்காக ஆக்டோபஸ் விரைவில் ரஷ்யா பயணிக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
அடுத்த வருடம் நடக்க இருக்கின்ற ரஷ்ய நாட்டு பாராளுமன்ற தேர்தலில் யார் வென்று பிரதமராவார்? என்ற முன் கணிப்பிற்காக ஆக்டோபஸ் விரைவில் ரஷ்யா பயணிக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
மூட நம்பிக்கைகளும் அதன் உடன் பிறப்புக்களும் உலகில் எங்கு தான் இருக்கவில்லை?
ஒரு காலத்தில் நம்மூரிலும் இறைநிராகரிப்போருக்கு நிகரான கீழ்கண்ட சில மூட நம்பிக்கைகள் நம் மக்களிடம் இருந்து வந்தன. ஆனால் அது போன்ற மூட நம்பிக்கைகள் இன்றும் நம்மூரில் இருக்கின்றனவா என்று சரியாகத்தெரியவில்லை.
1. புது வீடு குடிபுகும் பொழுது அடுப்பில் பால் பொங்கி குடிபுகுதல் நம் மார்க்கத்தில் சொல்லப்பட்ட ஒன்றா? இல்லை மாற்று மத பின்பற்றலா? என்பதை விளக்கம் உள்ளவர்கள் இங்கு பின்னூட்டத்தின் மூலம் விளக்கவும்.
2. இரவில் ஆந்தை ஆணும், பெண்ணும் சேர்ந்து கத்தினால் அப்பகுதியில் விரைவில் யாருக்கோ திருமணம் நடக்கப்போகிறது. (பரவாயில்லை ஆக்டோபஸின் முன்னோடியாக இருக்குமோ?).
3. வீட்டின் முற்றத்தில் காக்கை வந்து கா, கா என்று காத்திக்கொண்டிருந்தால் அவ்வீட்டிற்கு கடிதம் வரும். (கடிதப்போக்குவரத்து குறைந்து போன இக்காலத்தில் மின்னஞ்சல் (ஈமெயில்) தான் வரும் என்று அம்மூட நம்பிக்கை மறுமலர்ச்சி பெற்றாலும் பெறலாம்).
4. ஏதேனும் பழக்கொட்டையை பழத்துடன் விழுங்கி விட்டால் வயிற்றில் செடி முளைக்கும் என்று சொல்வார்கள். (அப்போ நிறைய பழக்கொட்டைகளை விழுங்கினால் இலவசமாக வயிற்றிற்குள் ஒரு பெரும் தோப்பையே வாங்கிவிடலாமுண்டு சொல்லுங்க).
5. இரு நபர்களின் தலையும், தலையும் ஏதேச்சையாக முட்டிக்கொண்டால் தலையில் கொம்பு முளைக்கும் என்பார்கள். எனவே இன்னொரு தடவை முட்டிக்கொண்டால் முளைக்காதாம். (என்னா டெக்னிக்கு பாத்தியளா?)
6. ஊரில் நாய் ஊலையிட்டால் சிலர் பேய் வருவதற்கு அது ஒரு சிக்னல் என்றும் சிலர் ஏதோ ஊரில் புதிய நோய் பரவ இருப்பதற்கு அது ஒரு அறிகுறி என்றும் சொல்வார்கள்.
7. மீன் சாப்பிட்டு விட்டு (உச்சி உரும நேரத்தில்) வெளியில் சென்றால் பேய் பிடிக்கும் என்பார்கள். எனவே கை மற்றும் வாயில் நல்ல மனம் வீசும் பவுடர் தடவிக்கொண்டு செல்லச்சொல்வார்கள். (இது ஏதோ பவுடர் கம்பெனியின் சித்து, மத்தா ஈக்கிமோ?)
8. வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு பாய் விரிக்கும் பொழுது தலைகீழாக (புறம் பாய்) விரித்தால் அதற்கும் ஏதோ காரணம் சொல்வார்கள்.
9. அம்மை போடும் குழந்தைகள் வீட்டின் வாயிலில் வேப்பிள்ளை தொங்கும்.
10. ஆந்தை தனியே இரவில் கத்தினாலோ அல்லது வானில் விண்மீன் எரிந்து விழக்கண்டாலோ ஊரில் யாரோ முக்கியஸ்தர் மரணிக்க இருப்பதாகவும் சொல்வார்கள்.
இப்படி இன்னும் ஏராளம் நம்மூரில் நிலவிய, நிலவி வரும் மூட நம்பிக்கைகளை அடுக்கலாம். ஆனால் பெரும்பான்மையான மூட நம்பிக்கைகள் இன்று குறைந்து விட்டன. அதை கூறி வந்த பெரியவர்களில் பெரும்பாலானோர் உலகை விட்டும் போய்ச்சேர்ந்து விட்டார்கள்.
எனவே நம் தூய மார்க்கம் இஸ்லாம் மூட நம்பிக்கைகளுக்கெல்லாம் அப்பார்ப்பட்டது. ஏதோ சைத்தானின் சூழ்ச்சியில் அப்படி நடப்பது போல் ஒரு மாயயை ஏற்படுத்தி அதை மக்கள் எவ்வாறு நம்புகிறார்கள் அல்லது மறுக்கிறார்கள் என்ற ஒரு சோதனை தான் உலகில் இவ்வாறான நிகழ்வுகள். இதனால் கண்டதேக்காட்சி; கொண்டதேக்கோலம் என்று நம்புவர்களுக்கு இறுதியில் நாசத்தை தவிர வேறொன்றும் இருக்கப்போவதில்லை.
நிச்சயமாக இஸ்லாம் எக்காலத்திற்கும் பொருந்தும் ஒரு உன்னத மார்க்கம். அறிவியலே அசந்து போகும் இஸ்லாத்தின் அறிவியல் உண்மைகளை இன்றைய விஞ்ஞான உலகம் ஏற்க மறுத்தாலும் ஒரு நாள் அதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு அது தள்ளப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை இன்ஷா அல்லாஹ்.
ஏதோ என் அறிவுக்கு எட்டியதை இங்கு எழுதியுள்ளேன். தவறுகள் இருப்பின் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்துங்கள். தெரிந்து கொள்கின்றேன்.
இன்ஷா அல்லாஹ் இன்னொரு கட்டுரையில் சந்திப்போம்.
மு.செ.மு. நெய்னா முஹம்மது
24.07.2010
24.07.2010
33 Responses So Far:
வழக்கம் போலவே அசத்தலான ஆக்கம் சகோ.நெய்னா முகம்மதுவிடமிருந்து..உங்கள் கட்டுரை முட நம்பிக்கைகளுக்கு சவுக்கடி கொடுக்கும் அதே வேலையில் நம் ஊரில் நிலவும் சில மூட நம்பிக்கைகளின் லிஸ்ட்..நமது இளமை நினைவுகளை கிளிரிவிட்டது...ஏதாவது பேசிக்கொண்டு இருக்கும் போது பல்லி கத்தினால்..அந்த காரியம் நடக்கும் என்ற மூட நம்பிக்கையும் நமது ஊரில் இருந்தது உண்டு..ஆனால் ஒட்டு வீட்டையேல்லாம் ஒழித்துவிட்டு பல்லிக்கி கெட்ட காரியம் செய்துவிட்டர்கள் நம்மவர்கள்
உலகில் மனிதர்களுக்கு அறியாமை எந்தெந்த வழிகளில்லெல்லாம் வந்து அவர்களை ஆட்சி செய்யும் என்பதற்கு இது ஓர் நல்ல உதாரணம்.
-------------------------------------அஸ்ஸலாமு அலைக்கும்.இது ஒரு கெட்ட உதாரணம்.
இரு நபர்களின் தலையும், தலையும் ஏதேச்சையாக முட்டிக்கொண்டால் தலையில் கொம்பு முளைக்கும் என்பார்கள். எனவே இன்னொரு தடவை முட்டிக்கொண்டால் முளைக்காதாம். (என்னா டெக்னிக்கு பாத்தியளா?)--------------------------
எந்த கொம்பனாலும் இவ்வளவு நியாபகம் வச்சு எழுதமுடியாது.ஒருசிலர் போல் அதில் நைனாதான் ராசா.
. ஊரில் நாய் ஊலையிட்டால் சிலர் பேய் வருவதற்கு அது ஒரு சிக்னல் என்றும் சிலர் ஏதோ ஊரில் புதிய நோய் பரவ இருப்பதற்கு அது ஒரு அறிகுறி என்றும் சொல்வார்கள்.
------------------------------------
நரி கத்தினால் பணம் வரும் என்ற (மூட) நம்பிக்கையும் இருந்தது.கை அரித்தாலும் பணம் வரும் என்ற (மூட) நம்பிக்கையும் இருந்தது.சிலரிடம் கை அழுக்கினால் அரிக்கும்., பணம் வராது சொறி தான் வரும்னு சொன்னது இப்ப ஞாபகம் வருது.
(உச்சி உரும நேரத்தில்)மண்டைமத்தி(உச்சி)உருக(தக,தகிக்க சூடு) நேரத்தில் மீன் சாப்பிட்டு வெளியே போகக்கூடாது(மச்சிக்கும்-மீன்)உச்சிக்கும் என்ன தொடர்போ போங்க நம்ம மனசங்க.மேலும் தலைப்பிள்ளை(மூத்தவர்(ன்) வெளியே தனியா போகக்கூடாது என்பதும் இந்த (மூட) நம்பிகை லிஸ்டில் உள்ளது.
வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு பாய் விரிக்கும் பொழுது தலைகீழாக (புறம் பாய்) விரித்தால் அதற்கும் ஏதோ காரணம் சொல்வார்கள்.
------------------------------------தரித்திரியம்)தரித்திரம்(கேடு,கெட்டவை)பிடிக்கும் என்பதும் ஒன்று.தொழுதுவராத,ஓதிவராதவீடுதான் அப்படி ஆகும்.இது அங்குள்ளவர்களின் இதயத்தில் சோர்வு நோயை உண்டாக்கும் என்பது என் எண்ணம்.
அம்மை போடும் குழந்தைகள் வீட்டின் வாயிலில் வேப்பிள்ளை தொங்கும்.
-----------------------------------
அம்மை என்ற சொல்லே இந்து பெண் கடவுள் அம்மன் என்ற சொல்லில் மருவி வந்தது.அப்படி அந்த நோய் வந்தால் அம்மா?வந்துட்டா(அம்மன்)என்று சொல்வழக்கு வழுக்கி இப்படி ஆகிவிட்டது.வேப்பிலை கட்டக்காரணம் அது ஒரு சிறந்த மருந்து, நோய் நிவாரணி அதில் இருந்து வரும் காற்று அம்மையை குணப்படுத்தும் என்பதும் இரு வித நம்பிக்கை.மேலும் வெளி ஆட்கள் வீட்டிற்கு வருவதை தவிர்க அவ்வாறு வருபவருக்கு ஒரு அடையாளமாக வாசலில் கட்டுவதும் அவரிகளின் வழக்கமாய் இருந்து வந்தது(வருகிறது)அதற்கும் காரணம் சொல்லப்பட்டது.வெளியெர்ந்து வர்ரவங்க சுத்தமின்மையாக அழுக்கு,வேர்வை சுமந்து கொண்டு வந்தால் அம்மா(அம்மன்)க்குப்பிடிக்காது,என்பதால் அம்மா கோபப்வடுவாலென்பதும் மூட நம்பிக்கை.எந்த நோய்யும் அசுத்தம் இருந்தால் கிருமிதொற்றும் தானே? இன்னும் அந்த வீட்டில் எண்னெய் உபயோகிக்ககூடாது பொறியல் வகைத்தவிர்கனும் என்ற நம்பிகையும் அதற்கு மருத்துவ கார்ணம் தோல் சம்பந்தப்பட்ட நோய் அம்மை என்பது இதனால் கொழுப்புசம்பந்தப்பட்ட எண்னெய் பதார்தம் தவிர்க்கனும் என்பதுதான் உன்மை காரணம்.
மிக அருமையான விழிப்புணர்வு கட்டுரை நைனாவுக்கு(மொளகா சுத்தி போடுங்க - சும்மா ஒரு டமாசுக்குச் சொன்னேன்)பாராட்டுக்கள். நைனா தம்பி காக்க,சகோ .சாகுல்,சகோ.ஹாலிது ( நம்மைப்போல் ஒருவன்)இவங்கலெல்லாம் என்னா பிடிபிடிக்க போறாங்களோ இறைவா !!! நான் எஸ் கேப். அதுவும் சகோ சாகுல் ஒருதடவ ராலில் மண் சேர்பது ஏன் என்று கேட்டார் நான் நடைமுறையில்(உண்மையும் கூட)உள்ளதைச்சொன்னேன் கற்பனைன்னு சொல்லிட்டுப்போய்ட்டார்.பிறகு ராக்கெட்பத்தி எழுதிட்டு கிரவுன் இனி ஒன்னும் சொல்ல முடியாதுன்னு இப்படி அப்ப அப்ப குமட்ல குத்துறார் அதனால எச்சரிக்கையா எழுதனுமாஈக்குது.
இந்த ஆக்டோபஸ் நம்ம ஊருக்கு வந்தா சனங்க ஆட்டோ,பஸ் புடிச்சுக்கிட்டு போய் பாப்பாங்க.
வழக்கமான M S M (N) முத்திரை ! :) மீண்டு(ம்) வருகிறேன் க்ரவுக்காக !
உள்ளங்கால் அரித்தால் விரைவில் பயணம் வரும் என்பார்கள். (உள்ளங்காலுக்கும், வெளிநாட்டு விசா வழங்கல் துறைக்கும் ஏதேனும் லின்க் இருக்குமோ?)
மளிகைக்கடைக்கு சாமான்கள் லிஸ்ட் போடும் பொழுது முதலில் மஞ்சளை எழுதுவார்கள். (கருப்பட்டியை எழுதினால் வாழ்க்கை கசந்து போய் விடுமோ?)
கண் அரித்தால் வீட்டிற்கு யாரோ விருந்தினர் வருவார்கள் என்பார்கள். (ஆனால் இப்பொழுது அது தெரிந்தால் கண் அரிக்கும் பொழுதே வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு எஸ்கேப் ஆகிவிடுவார்கள்).
வெயிலும், மழையும் ஒரே நேரத்தில் சம்பவித்தால் பூனைக்கும், நாயுக்கும் கலியாணம் என்பார்கள். (பூனையும், நாயும் இந்த தருணத்திற்காக காத்துக்கொண்டிருக்குமோ?).
இன்னும் சில ஊர்களில் சாய்ங்காலத்துக்குப்பிறகு(மாலைமணிநேரம்) அக்கம்பக்கத்து வீட்டில் தண்ணீர், உப்பு போன்ற சாமான்கள் கடனாக பெற முடியாது.
இன்னும் வழுப்பம் மேட்டரு இருக்குதுங்கெ....ஞாபகம் உள்ளவங்கெ இங்கே எழுதுங்கெ...
crown said...
////இந்த ஆக்டோபஸ் நம்ம ஊருக்கு வந்தா சனங்க ஆட்டோ,பஸ் புடிச்சுக்கிட்டு போய் பாப்பாங்க///.
இதுதான் நிதர்சனமான உண்மை..
சகோ. நெய்னா அவர்கள் கூறும் மூட நம்பிக்கைகள்
இன்னும் சிலரிடம் இருக்கத்தான் செய்கிறது.,
ஒரு தெருமூலையில் உட்கார்ந்து கிளிஜோசியத்தையும் பண்ணாட்டு தரத்திற்க்கு கொண்டுசெல்லும் பெருமை நம் ஊடகங்களுக்குண்டான தனி சிறப்பு. உண்மையில்
பரப்பப்படும் 90% செய்திகள் பொய்., அதிலும் கால்பந்தாட்ட நேரத்தில் வேடிக்கையாக பரப்பப்பட்ட இந்த ஆக்டபஸ் மேஜிக்கிற்கு மேலைநாட்டில் கூட எந்த வரவேற்ப்பும் இல்லை. இதுக்காக நாம் கவலைப்பட தேவையில்லை
தாஜுதீன் சொல்வதுபோல் தொடர்ந்து இணைந்திருங்கள் வாழ்த்துக்கள்
//அந்த ஆக்டோபஸ் கடல் பிராணியானது//
என்னத்தச் சொல்ல இதத்தான் அவசரத்தில் "ஆக்டோபஸ் கடல் பிரியானியானது படிச்சுபுட்டேன்"
இங்கே நிறைய எழுதாலம்னுதான் வந்தேன் ஆனா பூணை குறுக்க போய்டுச்சே ! என்ன செய்ய !?
வெத்திலையில் 3d-யுடன் கூடிய வண்ண(ம்)திரைக் காட்ட்சிகளில் திருடியவர்களை கண்டவர்களின் வாக்கு(கள்) காதில் விழுந்திருக்குமே...
1 செல்லினால் உருவாண ஆக்டோபசின் காலடியில் 6 அறிவுள்ள மனிதன்?, என்னத்த சொல்லுறது
நெய்னாவின் ஆக்கம் அருமையாக உள்ளது ,
நமதூர் மார்கெட்டிற்கு இந்த ஆக்டோபஸ் வந்து இருந்தால் அதை விற்பவரே இதை எப்படி சமைக்க வேண்டும் என்று பக்குவம் சொல்லி விற்று இருப்பார். வேடிக்கையான உலகம்
(பின் குறிப்பு கணவாய் சமைக்கும் போது பொறிஅரிசி கத்தரிக்காய் போட்டு சமைத்தால் நல்ல ருசிய இருக்கும் )
1 செல்லினால் உருவானது ஆக்டோபஸ் அல்ல. அது அமீபா
மறந்து போன பழைய நகழ்வுகளை அப்படியே கண் முன் காட்சியாக தருவதில் சகோதரர் நெய்னாவுக்கு நிகர் நெய்னா தான். நல்ல அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள்.
//பின் குறிப்பு கணவாய் சமைக்கும் போது பொறிஅரிசி கத்தரிக்காய் போட்டு சமைத்தால் நல்ல ருசிய இருக்கும்// தேங்காப்பால் புளியானத்திற்க்கும்,சோத்துக்கும் ,சாகுல் காக்கா சொன்ன கணவாய் சுண்டலுக்கும் காம்பினேசன் அருமையா இருக்கும்
இங்கபாரு(ங்கப்பா!) நான் தான் சாப்பாட்டு நெனப்புல படிச்சுட்டேன்னா இங்கே சமையலே நடக்குது... ! அது சரி மேற்சொன்ன குறிகாட்டிகிட்டே யாருடைய சமையல் குறிப்பு நல்லா இருக்குன்னு கேட்டுப் பார்ப்போமா ?
உச்சி வெயில குளிக்கலாமான்னு(ம்) கேட்கனும் !
3D எல்லாம் போய் இப்போ HD LCD LED எல்லாம் வந்தாச்சு இந்த காலத்திலுமா கனவா குறி .எப்படியோ கனவாவின் விலை ஏற்றம் மட்டும் நிச்சயம்
இனி தேர்தல் நடத்த வீண் செலவு வேண்டாம் ஒரு கனவாவை பிடித்து மன்மோகன் சிங் போட்டோ வையும் அத்துவானி போட்டோ வையும் வைத்து தேர்தலை சிம்பிளாக முடித்து விட வேண்டியதுதான்
அனைத்து செய்திச் சேனல்களில் நடு பெஞ்ச் நிச்சயம் சாஹுலுடைய ஆலோசனையேற்று(தான்)
அபுஇபுறாஹிம் says
அனைத்து செய்திச் சேனல்களில் நடு பெஞ்ச் நிச்சயம் சாஹுலுடைய ஆலோசனையேற்று(தான்)
அப்போ CROWN
கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி ஒரு வாரப் பத்திriக்கையில் படித்த ஜோக்(க்குங்க !)
"தேர்தல் ஜோதிடம் பார்க்க வந்த ஆக்டோபஸ் (சாகுலின் கனவா) ஏன் சுருண்டு விழுந்துருச்சு"
"பா.ம.க. எந்தக் கூட்டணியில் இடம் பெறும்னு கேட்டாங்களாம்"
சாஹுல் இத ஆக்கிடுவோமா (சமையலைத்தான் சொன்னேன்) !
நான் ரெடி சமையலுக்கு (கனவா BBQ செம டேஸ்ட்)
அபுஇபுறாஹிம் says
அனைத்து செய்திச் சேனல்களில் நடு பெஞ்ச் நிச்சயம் சாஹுலுடைய ஆலோசனையேற்று(தான்)
அப்போ அஸ்ஸலாமு அலைக்கும் எப்பவுமே தலையிலதான்.
------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் CROWN எப்பவுமே தலையிலதான்.
அஸ்ஸலாமு அலைக்கும் எங்கே நைனா தம்பி காக்காவ கானோம் போன இன்னிங்ஸ்(ஆக்டோபஸ்)லேயே வந்தார் திரும்பி வருவேன்னுட்டு என்னாச்சு?ஏதாச்சு?
On Jul 26 shahulhameed commented on blog post_24: “நான் ரெடி சமையலுக்கு (கனவா BBQ செம டேஸ்ட்)”
-------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நேரடியா செய்முறைக்கு வந்து விடுகிறேன்.கனவாவை நன்கு கழுவி சுத்தம் செய்துவிட்டு அதில் கொஞ்சம் மஞ்சள் தூள்,தேவையான அளவு உப்பு,கொஞ்சம் தயிர்,தேவையான அளவு மிளகாய் பொடி,கொஞ்சம் வெள்ளை மிளகு பொடி செய்தது,கொஞ்சம் எண்ணெய்(ஆலிவ் நல்லது)இஞ்சி,பூண்டு விழுது.கொஞ்சம் கரம் மசாலா கொஞ்சம் லெமென் ஜூஸெல்லாத்தையும் நன்கு கலந்து கையால் ரெண்டு,மூணூ தடவ பெரட்டி ஒரு நாற்பத்தைன்ந்து நிமிடம் அந்த கலவையை நன்கு ஊற வைக்கனும்.பிறகு பார்பிகியூ கம்பில ஒவ்வொன்னா கோத்து ஓவன் அல்லது பார்பிகியு அடுப்புல வச்சி 10 நிமிடம் கழித்து லேசா கம்பியை திருப்பி வைக்கனும் பிறகு 10 நிமிடம் கழித்து எடுத்து தேவையான அலங்காகரம் (டெர்ஸ்ஸிங்)செய்து ஒரு வெட்டு வெட்ட வேண்டியதுதான்.(சரியா சகோ.சாகுல்??? (chief))
//காக்காவ கானோம் //
தம்பி க்ரவ்ன்: அவனேதான் இவன் !
க்ரவ்ன்: அதான் சொன்னேனே பூணை குறுக்கப் போயிடுச்சுன்னு :)
Post a Comment