துபாய் : துபாயில் சென்னை பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற அஞ்சல் வழிக் கல்வி மையமாக செயல்பட்டு வந்தது கேம்பஸ் எஜுகேஷனல் இன்ஸ்டிடியூட்.
இக்கல்வி மையத்தில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்பில் அமீரகத்தில் பணி புரிந்து வரும் பலர் சேர்ந்து பயின்று வருகின்றனர்.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் எம்.பி.ஏ. படிப்பு சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் இந்தியாவைச் சேர்ந்த பலர் குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலோர் சேர்ந்தனர். இவர்கள் அனைவரும் இப்படிப்பினைப் படித்தால் பணியிடத்தில் பதவி உயர்வு வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்ற எண்ணத்தில் பயின்று வருகின்றனர்.
இவர்களது எண்ணத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பல்கலைக்கழகத்தின் தேர்வு நடத்திட தற்பொழுது அனுமதி கிடைக்கப்பெறவில்லை. இதற்கு காரணம் இந்நிறுவனத்தை நடத்தி வரும் கேரளாவைச் சேர்ந்த நந்தகுமார் பல்கலைக்கு சுமார் முப்பது இலட்சத்திற்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது. எனினும் மாணவர்களிடம் முறையாக கட்டணம் வசூலித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்பிரச்சனையில் தங்களுக்கு உதவிட சமீபத்தில் துபாய் வருகை புரிந்த வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மானிடம் புகார் அளித்தனர். அவர் உடனடியாக இப்பிரச்சனையினை தீர்க்க இந்திய கன்சல் ஜெனரலுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதனைத் தொடர்ந்து இந்திய கன்சல் அலுவலகம் சென்னைப் பல்கலை துணைவேந்தருக்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பியுள்ளது.
விரைவில் இப்பிரச்சனை குறித்து ஆராய சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துபாய் வருகை தர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் தங்களது வியர்வை சிந்தி உழைத்த பணத்தை ஏமாற்றி விட்டதை அறிந்த பலர் வேதனையில் உள்ளனர். யார் தங்களது பிரச்சனையினை தீர்த்து வைப்பர் என்ற எதிர்பார்ப்பில் மாணவர்கள் இருந்து வருகின்றனர்.
அமீரகத்தில் தமிழக பல்கலைக்கழகத்தின் கல்வி மையங்களை தமிழர்களைவிட மலையாளிகள் மட்டுமே அதிகம் நடத்தி வருகின்றனர். இதற்கு பின் உள்ள மர்மம் என்ன என்பது புதிராகவே உள்ளது.
தமிழக அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு மாணவர்கள் உடனடியாக தேர்வுகளை எழுதி தங்களது படிப்புகளை நிறைவு செய்து பட்டம் பெறத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். மிகுந்த மனவேதனையில் இருக்கும் இவர்களது பிரச்சனையினைத் தீர்க்க தமிழக அரசு முன்வருமா ?
தகவல்: MUDUVAI HIDAYATH
நன்றி: http://www.mudukulathur.com/mudseithiview.asp?id=1481
6 Responses So Far:
பொய் + பித்தலாட்டம் + A மாற்று = மலையாளி
நம்ம ஊர் சகோதரர்களும் படித்தாக கேள்விப்பட்டேன், முழு விபரங்கள் தெரியவில்லை.
ஏதோ மர்மம் இருக்கு.
அமெரிக்காவில் மலையாளிகள் குறைவு. சிந்தித்து ஆராய்ந்ததில் ஒரு புது விபரம் அறிய முடிந்தது. அதாவது, இங்கு கிரிடிட் கார்ட் சிஸ்டம் அதிகம். மற்ற நாடுகளைப்போல் அவ்வளவு எளிதாக கிரிடிட் கார்டுக்கு பணம் எடுத்திட முடியாது.அவ்வாறு பணம் எளியாத சுருட்டிக்கொண்டு போக முடியாததால் (கொ)மலையாளிகள் குறைவு.உடனே கவனதில் கொண்டு நடவடிக்கையை முடக்கிவிட்ட சகோ.அப்துர்ரஹ்மான் M.P அவர்களுக்கு எமது பாராட்டும் துஆவும் உரித்தாகுக.
சகோதரர் தஸ்தகீர், இது ஒரு பெரிய ஊழலாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அரசு அதிகாரிகள் தலையிட்டுருப்பதால் விரைவில் தீர்வு எட்டும் என்று நம்பலாம்.
இருந்தாலும் எல்லா மலையாளி சகோதரர்களையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க வேண்டாம். எத்தனையோ நல்ல உதவி செய்யும் குணமுள்ள மலையாளி சகோதரர்கள் இருக்கிறார்கள், சில நம்ம தமிழ்நாட்டு சகோதரர்களைவிட அவர்கள் எவ்வளவோ மேல் என்று சொல்லும் அளவுக்கு.
ஒரு சில விஷமிகள் செய்யும் தவறுகளுக்காக ஒரு சமுதாயத்தை அந்த தவறுடன் ஒப்பிட்டு பேசுவது சரியானது அல்ல என்பது என் கருத்து.
அடப்பாவிங்களா படிப்புலேயிமா, வேலைபபழுவுக்கு மத்தியில் படிப்பது எவ்வளவு கஷ்டம் என்பது அனுபவித்துப்பார்த்தால்தான் தெரியும், அந்த கஷ்டத்துலேயும் இப்படி ஒரு மோசடி.
துபாயில் மேல் படிப்பு படிக்க விரும்புபவர்கள் விஸ்டம் இன்ஸ்டியூட் ல் சேர்ந்து படிக்கலாம், இது முழுமுதற்கொண்டு தமிழ் (ராஜா முகம்மது) ஆள் மூலம் நடைப்பெருகிறது. பெரும்பாலான மக்கள் பயனடைகிறார்கள். என் கூட வேலைப்பார்க்கும் ஆள் சூடானி கூட சிக்கிம் யுனிவர்சிடியில் m.b.a. படிக்கிறார்.
தகவலுக்கு நன்றி சகோதரர் மாலிக்
தமிழ் நாட்டு Universityல் M phil படிப்பதற்கு இங்கு ஏதாவது நல்ல Institute Dubaiல் இருக்கா என்று யாருக்காவது தெரியுமா?
Post a Comment