மனிதனைத் தவிர உயிரினங்கள் அனைத்தும் உணவை உயிர்வாழ்வதற்கான ஆதாரப் பழக்கமாக மட்டுமே கொண்டுள்ளன. ஆனால் மனிதன் மட்டுமே சுவைக்காகவும், சுகத்துக்காகவும் உணவருந்தும் பழக்கம் உள்ளவனாக இருக்கிறான்.
இந்த பழக்கம் நவீன உலகில் இந்தியா போன்ற வளரும் நாடுகளை பெரும் சந்தையாக்கி இருப்பதால், சுவையின் பெயரால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வினோதப் பண்டங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரித்து இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாக பிரபலமாகி வரும் அஜினோமோட்டோ என்ற உப்பும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். முன்பு சென்னை போன்ற மாநகரங்களில் மட்டும் பிரபலமாக இருந்த மோனோ சோடியம் குளூட்டமேட் (Mono sodium glutamate) என்ற வேதிப்பெயரைக் கொண்ட இந்த விநோத உப்பு, தற்போது கிராமப்புற வீடுகளின் சமையலறைக் குள்ளும் புகுந்துவிட்டது.
கண்ணைக் கவரும் வண்ணங்களில், வித்தியாசமான நறுமணத்துடன் சந்தைக்கு வரும் எந்த பொருளாக இருந்தாலும் அவற்றை வாங்கிக் குவிக்கும் நமது மக்கள், அஜினோ மோட்டோவுக்கும் அடிமையாக இருப்பதில் வியப்பில்லை.
பிரியாணி, ஃபிரைடு ரைஸ், சாம்பார், ரசம் போன்ற எதுவாக இருந்தாலும், ஒரு ஸ்பூன் அஜினோ மோட்டோ சேருங்கள்.. சாப்பிட அடம்பிடிக்கும் உங்கள் குழந்தைகள் எப்படி சாப்பிடுகிறார்கள் என்று பாருங்கள் என்ற விளம்பரங்களுடன் சந்தையில் அறிமுகப் படுத்தப்பட்ட இந்த அஜினோமோட்டோ விற்பனை, இப்போது பெட்டிக்கடைகள் வரை சக்கைப்போடு போடுகிறது.
அஜினோமோட்டோ கலந்த உணவை உண்டால், குழந்தைகளுக்கு ஆபத்து. தினமும் மூன்று கிராமுக்கு மேல் அஜினோமோட்டோ கலந்த உணவை உண்டால் பெரியவர்களுக்குக்கூட கழுத்துப் பிடிப்பு, தலைவலி, நெஞ்வலி, தலைச்சுற்றல், மூச்சுத் திணறல் வர வாய்ப்பு உள்ளது என்ற சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டது. அப்போதுதான் அஜினோ மோட்டோவின் இன்னொரு முகம் பொதுமக்களுக்கு தெரியத் தொடங்கியது.
அஜினோமோட்டோ தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், ஏஜெண்டுகள், அஜினோ மோட்டோவைப் பயன் படுத்தும் ஹோட்டல்கள், ரெஸ்டாரெண்டுகள் என அனைவருக்கும் சென்னை மாநகராட்சி இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியது. பின்னர் இதுகுறித்து கீழ்க்கண்ட விளக்கத்தை அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் அளித்தனர்.
எங்கள் நிறுவனம் கண்டுபிடித்த இந்த சோடியம் குளுட்மேட் தொண்ணூற்று எட்டு ஆண்டுகளாக இருபத்து மூன்று நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. அஜினோமோட்டோ என்ற பெயரில் இதனை விற்பனை செய்து வருகிறோம். வேறு பல நிறுவனங்களும் வெவ்வேறு பெயர்களில் இதனை விற்பனை செய்து வருகின்றன.
சீன, ஜப்பானிய, ஸ்பானிய, பிரெஞ்ச் மற்றும் மேற்கத்திய உணவு வகைகளிலும் அஜினோ மோட்டோ பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாங்கள் தாய்லாந்தில் இருந்து இதை இறக்குமதி செய்து சென்னையில் பேக் சேய்து இந்தியா முழுவதும் விற்கிறோம்.
அஜினோமோட்டோவால் தலைவலி, வாந்தி, உடல் அசதி, கழுத்துப்பிடிப்பு, மூச்சுத் திணறல் வரும் என்ற தவறான தகவல் ஆரம்பத்தில் அமெரிக்காவில் உலா வந்தது. அதன்பிறகு நடந்த ஆய்வில் அது தவறான கூற்று எனத் தெரிய வந்தது. அஜினோமோட்டோவால் எந்த ஆபத்தும் இல்லை என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து ஆராய்ச்சிக் கழகம் சான்றிதழ் அளித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு இது பாதுகாப்பானது என அங்கீகரித்துள்ளது. சில நிபந்தனைகளுடன் இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளது.
மேலும் சோடியம் குளுட்மேட் என்பது ஒரு அமினோ அமிலம். இது நம் உடலில் உள்ள புரதத்தில் இயற்கையாகவே உள்ளது. நாங்கள் ஆண்டுக்குப் பதினெட்டு லட்சம் டன் சோடியம் குளுட்மேட்டை உற்பத்தி செய்து, அதை எழுபதாயிரம் கோடி டாலருக்கு விற்று வருகிறோம். இதே அளவுக்கு கலப்பட சோடியம் குளுட்மேட் விற்பனையும் நடைபெறுகிறது. கடைகளில் கலப்படமாக சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் சோடியம் குளுட்மேட், உண்மையிலேயே ஆபத்தானது. இந்த கலப்பட சோடியம் குளுட்மேட்டை தடுத்தாலே தற்போது எழுந்துள்ள சர்ச்சை ஓய்ந்துவிடும் என்று அவர்கள் விளக்கம் கூறியிருந்தனர்.
போலி உணவுப் பொருட்களையும் மாத்திரை மருந்துகளையும் கண்டறிவதே குதிரைக்கொம்பாக இருக்கும்போது, போலி வேதிப் பொருட்களை கண்டறிவது சுலபமான வேலையா என்ன ?
விஷத்தன்மை
இந்த அஜினோமோட்டோவின் விஷத்தன்மை பற்றி இருவேறு கருத்துகள் இருந்தபோதிலும் பல மருத்துவ ஆராய்ச்சிகள் மனிதர்களுக்கு அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு இது பலவித ஆபத்துகளை உருவாக்கும் என்று நிரூபித்துள்ளன. கருவுற்ற எலிகளுக்கு அஜினோமோட்டோ கலந்த உணவைத் தொடர்ந்து கொடுத்து வந்தால் அவற்றின் குட்டிகளுக்கு மூளைப் பகுதியில் உள்ள செல்கள், அளவில் சுருங்கியிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
அஜினோமோட்டோ கலந்த உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடும் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் சுரப்பது வெகுவாக குறையும். இதனால் உடல் வளர்ச்சி தடைப்பட்டு உயரம் குறைகிறது. மேலும் இந்த வேதிப் பொருள் மூளையில் ஆர்குவேட் நுக்ளியஸ் என்னும் பகுதியைப் பாதிப்பதால் உடல் எடை தாறுமாறாக அதிகரிக்கும்.
மூளை மட்டுமின்றி இரைப்பை, சிறுகுடல், கல்லீரல் போன்ற உறுப்புகளிலும் அழற்சியையும், சிறு ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகளுக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாத வயிற்றுவலி அடிக்கடி ஏற்படும். ஒவ்வாமை உள்ள ஒரு சிலருக்கு இந்த வேதிப் பொருள் கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே மார்பில் எரிச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டு, உடல் வியர்க்க ஆரம்பித்துவிடும். இந்த நோய்க் குறிகளுக்கு சைனா உணவக நோய் என்று தனிப் பெயரே சூட்டப் பட்டுள்ளது.
ஜீரோ ஏடேட் ஹைட்ரோ ஜெனடேட்
அஜினோ மோட்டேவைப் போன்றே பாஸ்ட் புட் கடைகளிலும், ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் பயன்படுத்தப்படும் ஜீரோ ஏடேட் ஹைட்ரோ ஜெனடேட் என்ற எண்ணெயும், பல்வேறு ஆபத்துக்களை உருவாக்கும் குணம் கொண்டது என்ற தகவல்களையும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஜீரோ ஏடேட் ஹைட்ரோ ஜெனடேட் என்ற எண்ணெய் பசு, எருது, பன்றி போன்ற பல விலங்குகளின் கொழுப்பிலிருந்து தயாரிக்கப் படுவதாகும். இதில் உடலுக்குத் தேவையற்ற ஒருவித கொழுப்பு இருக்கிறது. பாக்கெட்டுகளில் கிடைக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ், பீட்ஸா, சாக்லெட், துரித உணவுகள் போன்றவை இந்த எண்ணெயில்தான் தயாரிக்கப்படுகின்றன. இந்த எண்ணெயைப் பலமுறை திரும்பத் திரும்ப பயன்படுத்தினாலும் உணவின் மணம் மாறாது பதினெட்டு மாதம் வரை உணவுப் பொருள் கெட்டுப் போகாது. மெக்டொனால்ட், பீட்ஸா கார்னர்களில் கிடைக்கும் ஸ்னாக்ஸ் பொருட்கள் நாம் வீட்டுத் தயாரிப்பை விட சுவையுடன் இருப்பது போல தோன்றுவதற்கு இந்த எண்ணெய்தான் காரணம். ஆனால் இந்த எண்ணெயைப் பயன்படுத்தினால் உடலில் வேண்டாத கொழுப்பு சேர்ந்து இருதய நோய், புற்றுநோய், உடல் பருமன் எல்லாம் வந்துவிடும் என்கிறார்கள். இது குறித்து எச்சரிக்கும் மருத்துவ ஆய்வாளர்கள்.
புதிது புதிதாக கண்டுபிடித்து சுற்றுச் சூழலிலும், உணவிலும் கலக்கும் பெரும்பாலான வேதிப் பொருட்களை நமது கல்லீரலில் செயல்படும் பி 450 என்னும் நொதிப் பொருட்கள் விஷ முறிவு செய்து நம்மைக் காப்பாற்றுகின்றன. ஆயினும் சில வகையான நச்சுப் பொருட்களை வெளியேற்ற முடியாமல் இந்த பி 450 நொதிகள் திணறுகின்றன. குறிப்பாகச் செயற்கை நிறமிகளும் அஜினோ மோட்டோ போன்ற சுவையூட்டிகளும் பி 450 நொதிகளைச் செயலிழக்கச் செய்கின்றன.
சோடியம் குளுட்மேட்டை உணவில் கலந்து சாப்பிடுவதால் தலைவலி, வாந்தி வருவதாக எழுபதுகளின் ஆரம்பத்தில் அமெரிக்க டாக்டர்கள் கண்டுபிடித்து எச்சரித்தனர். ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கக் கூடாது என்ற அமெரிக்க அரசு தடை விதித்தது.
இந்த நிலையில், அஜினோமோட்டோ நிறுவனம் 6 ஆண்டுகளுக்கு முன் அமர்க்களமாக இந்த சோடியம் குளுட்மேட்டை இந்தியாவில் அறிமுகம் செய்தது. பால், பால் சேர்க்கப்பட்ட பொருள்கள், மினரல் வாட்டர், ஐஸ்கிரீம், காபி, டீ போன்றவற்றில் இதைக் கலக்கக்கூடாது என்ற நிபந்தனையோடுதான் அஜினோமோட்டோ நிறுவனம் இங்கு அடியெடுத்து வைக்க இந்திய அரசு அனுமதியளித்தது. ஆனால், இந்திய உணவுப் பொருள் கலப்பட தடுப்புச் சட்டத்திற்கு எதிராக இந்த பொருள் விளம்பரப்படுத்தப்பட்டு, தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவதாக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.
பரவலான விளம்பரங்கள் மூலமும் வீடு வீடாக சென்று விற்பனை செய்வதாலும் தற்போது பலரும் இந்த நச்சுப் பொருளை சமையலில் ஒரு சுவையூட்டியாகச் சேர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். பெரிய உணவகங்களில் வழங்கப்படும் சூப்களிலும் பிரியாணி வகைகளிலும், துரித உணவகங்களில் வறுத்து வழங்கப்படும் எல்லா உணவுப் பண்டங்களிலும் இந்த அஜினோமோட்டோ சேர்க்கப்படுகிறது. விருந்துணவு தயாரிக்கும் பல சமையல் நிபுணர்கள் டேஸ்ட் பவுடர் என்று பெயரிட்டு சமையல் பொருட்களின் பட்டியலில் இதையும் சேர்த்து வாங்குகின்றனர்.
இதனால்தான் திருமணம் போன்ற விருந்து நிகழ்ச்சிகளில் உணவு உண்போர் உடனடியாக வயிற்று உபாதையால் அவதிப்படுகிறார்கள்.
மேலை நாடுகளில் உணவுப் பொட்டலங்களின் அட்டைப் பெட்டியில் அஜினோமோட்டோ கலந்திருப்பதை வெளிப்படையாக எழுத வேண்டும் என்று விதி இருக்கிறது.
ஆனால் நமது நாட்டில் குழந்தைகளைக் கவரும் வகையில் பல வண்ணப் பாக்கெட்டுகளில் நொறுக்குத் தீனிகளை விற்பவர்கள் அவற்றில் அஜினோமோட்டோ கலந்திருப்பதை மறைத்து அஞீஞீஞுஞீ ஞூடூச்திணிதணூண் என்று மக்களுக்குப் புரியாத சங்கேத மொழியில் எழுதி ஏமாற்றுகிறார்கள்.
குழந்தைகளை மையமாக வைத்துத் தயாரிக்கப்படும் ரெடிமேட் நொறுக்குத் தீனிகளாக மேகி, லேய்ஸ், குர்குர்ரே என்பதிலிருந்து இன்று பலவகை துரித உணவுகள், வீட்டுச் சமையல் அறைகள் வரை புகுந்துவிட்ட இந்த அஜினோமோட்டோ தன் கரங்களை இன்னும் அகலமாக நீட்டிக்கொண்டிருப்பது அதன் ஆக்கிரமிப்புத் தன்மையையே காட்டுகிறது.
சாப்பாட்டில் அதிகம் பிரியமில்லாத நோஞ்சான் குழந்தைகளுக்குப் பல பெற்றோர்கள் இந்த அஜினோமோட்டோ கலந்த நொறுக்குத் தீனி பொட்டலங்களை வாங்கிக் கொடுப்பர். இந்தக் குழந்தைகளும் வீட்டு உணவைவிட இந்தப் பொட்டலத் தீனிகளை அளவுக்கு அதிகமாக விரும்பித் தின்பர். குழந்தை இதையாவது சாப்பிடுகிறதே என்று ஆசை ஆசையாக பலரும் அதை வாங்கிக்கொடுப்பர்.
சில மாதங்கள், வருடங்கள் கழித்து இந்த நோஞ்சான் எக்கச்சக்கமாக சதை போட்டு ஊளைச் சதையுடன் தோன்றுவான் என்பதே உண்மை. பசியை கண்ட்ரோல் செய்யும் உடலின் இயற்கையான நொதிப் பொருட்கள் அஜினோமோட்டோ வால் செயல்படாத தன்மை ஏற்படும்போது, அஜினோமோட்டோவைத் தொடர்ந்து உண்ணும் சிறுவர்கள் சில காலம் கழித்துக் கண்டதை உண்ண ஆரம்பிப்பார்கள். பசிக்கும் நேரத்தில் அளவுக்கு அதிகமாக இப்படி உண்டதால்தான் இவர்கள் காலப்போக்கில் நடக்க முடியாத அளவுக்கு குண்டாக மாறிவிடுகிறார்கள்.
பிறப்புக் கோளாறு, உறுப்புகளில் வளர்ச்சியற்றத் தன்மை, தலைவலி, வாந்தி, வயிற்றுவலி, செரிமானச் சிக்கல், கெட்ட கனவு, தூங்குவதில் சிக்கல், சோம்பல், மிதமாகும் இதயத்துடிப்பு, முடிகொட்டுதல், ஆஸ்துமா, பக்கவாதம், அல்சிமர்ஸ் என்ற முதுமை நோய் மற்றும் சர்க்கரை நோய் என அஜினோமோட்டோ அள்ளி வழங்கும் நோய்களை சர்வதேச மருத்துவ ஆய்வாளர்கள் அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.
பெற்றோர்களே ! குழந்தைகளே இயற்கையான உப்பு நம்மிடம் இருக்க இந்த அஜினோமோட்டோ என்ற ஆபத்து தேவையா?
தயவு செய்து சிந்தித்துப் பாருங்களேன்..
தகவல்: மு.செ.மு. நெய்னா முகம்மது
7 Responses So Far:
அதிரையிலும் இப்போ சில கடைகளில் ரொட்டி, தோசை, இட்லி தோசை விற்பது குறைவு. நூடுல்ஸும் பிஜ்சாவும் விற்கிறார்கள் போஸ்டாபிஸ் பக்க உள்ள சில கடைகளில்.
அதிரை ஹோட்டல்களில் அஜ்னோமோட்டோ உணவுப் பொருட்களில் போடுகிறார்களா என்று தெரியவில்லை.
நல்ல விழுப்புணர்வு செய்தி.
அது சரி கனவா BBQவில் அஜ்னோமோட்டோ சேர்ப்பீங்களா சகோதரர் சாஹுல்?
அஜ்னோமோட்டோ கனவா BBQவுல சேர்த்தா? நல்லதா சேர்க்காட்டி நல்லதா? என்று அந்த அக்டோபஸ்கிட்டா யாராச்சும் கேளுங்கப்பா....
உடல் எடை தாறுமாறாக அதிகரிக்கும்.(அஜ்னோ)-மோட்டோ(குண்டு வாகு)
இப்போதான் கனவா சமையலே ஆரப்பிச்சுருக்கு அதுக்குள்ளேவா, இப்படி ஒரு சிக்கல் சரி என்ன பன்றது ருசியா சாப்பிடனுமே ! என்ன MSM(N) ருசிக்கலாம்னு பார்த்தா ரசிக்க வச்சுட்டியே(மா)! மற்றுமொரு MSM-முத்திரை(குத்துவாங்க) இங்கே.
/// உடல் எடை தாறுமாறாக அதிகரிக்கும்.(அஜ்னோ)-மோட்டோ(குண்டு வாகு) ///
எடையுடன் ருசியும் அதிகமாமே !, எடைக்கு எடை வாங்குகிறவங்களுக்கு இந்த அஜினமோட்டோ நல்லது(போலும்) ! அரசியல் பிரவேசம்னு எண்ணமிருந்தால் அதிகமாக சாப்பிடலாமுங்கோ !
சிறுவயதில் ஒரு மலேசியா சபுராளி வீட்டு கல்யாணத்தில் அஜினோ மோட்டோ-வை சீனி என்று நினைத்து தின்றுவிட்டு அந்நாள் முழுவது அரை மயக்கதில் இருந்த ஞாபகம் வருகிறது..அந்த அளவிற்க்கு கொடுரமானது இந்த மோட்டோ...ஆஜ் நோ மோட்டோ
அஜீரணகோளாறு மோட்டாவா வயத்துக்கு சரியில்லை நானும் ரால் பிரைக்கு போட்டுட்டு இப்ப அவதிப்படுறேன்.செய்தியைப்படிச்சதிலிருந்து மேலும் வயத்த கலக்குது.
Post a Comment