31.05.2010 அன்று நம் அதிரைமணம் என்ற வலைப்பூக்கள் திரட்டி அதிரை எக்ஸ்ப்ரஸ் வலைப்பூவின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஒரு புதிய முயற்சி என்று தான் அறிமுகப்படுத்தப்பட்டது, பிறகு நம் சகோதரர்களின் ஊக்கமும் கருத்துக்களும் அதிரைமணத்தை இன்னும் நல்ல முறையில் கொண்டு செல்லவேண்டும் என்ற எண்ணம் என்னுள் ஏற்பட்டது, இதைத் தொடர்ந்து நம் அதிரை தம்பி மன்சூர் அவர்களின் உதவியால் இன்று மிகச் சிறப்பான தோற்றத்தில் இணையக்கடலில் மிதந்து வருகிறது நம் அதிரைமணம். நம் அதிரைமணம் வலைப்பூ திரட்டியை உங்களின் நண்பர்களிடமும் அறிமுகம் செய்யுங்கள்.
வலைப்பூக்கள் வைத்திருக்கும் அதிரைவாசிகள் இங்கு தங்கள் வலைப்பூவை இலவசமாக சேர்த்துக் கொள்ளலாம், இங்கு சேர்கப்பட்டிருக்கும் வலைப்பூக்கள் பற்றி யாருக்கு ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம். தொடர்புக்கு tjdn77@gmail.com
அதிரைமணம் http://adiraimanam.blogspot.com/
அதிரைமணம் முந்தைய பின்னூட்டத்தில் நம் சகோதரர்கள் வேண்டுகோள் வைத்தார்கள்.
// shahulhameed said... மணக்காத மலருக்கு மதிப்பில்லை. தினமும் மணக்குமாறு பராமரித்து வாருங்கள் June 9, 2010 12:29 AM//
// Diary said... மலர்கள் மணக்க வேண்டும் என்றால் வண்டுகள் தொடர்ந்து வரவேண்டும்!!! வண்டுகள் வரவேண்டும் என்றால் புதிய யுக்தியை கையாள வேண்டும் June 10, 2010 5:24 AM!!!//
அதிரைமணத்தை இன்னும் சிறப்பாக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் ஆழமாக தோன்றியது, இதன் அடிப்படையில் அதிரைமணம் வலைப்பூக்கள் திரட்டியில் சில முயற்சிகள் செய்து சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, புதிய WIDGETS உபயோகப்படுத்தப்பட்டுள்ளது, முன்பு இருந்த WIDGETSயைவிட இப்போது உள்ள WIDGETS வலைப்பூக்களை தொகுப்பதில் அதிக நேரம் எடுப்பதில்லை. வலைப்பூக்களில் உள்ள தலைப்புகளை கிளிக் செய்தால் புதிதாக ஒரு விண்டோவில் அந்த வலைப்பூ பதிவுகளை பார்க்கலாம், முன்பு இது கிடையாது. புதிய முயற்சி தான் என்றாலும் நல்ல யுக்திகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. உங்களுக்கு பிடித்திருந்தாலும், பிடிக்காவிட்டாலும் அதிரைமணத்தில் பின்னூட்டமிடுங்கள் உங்களுடைய கருத்துக்கள் இன்னும் நம்மை சிறப்பாக இன்னும் செய்ய உதவும்.
அதிரைமணம் ஒரு வலைப்பூக்கள் திரட்டி மட்டும் தான், இது எந்த அதிரை வலைப்பூவுடன் போட்டி போடவில்லை என்பதை இங்கு உறுதியாக பதிவு செய்கிறோம்.
இன்று வலைப்பூவில் வலைப்பூக்களின் திரட்டியாக உள்ள அதிரைமணம், வருங்காலத்தில் ஒரு மிகப் பெரிய வலைப்பூக்களின் திரட்டியாக புதுமையுடன் உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது. இன்ஷா அல்லாஹ்.
அன்புடன் தாஜுதீன்
21.07.2010
11 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும் தாஜுதீன் ....
உன்னுடைய நேர்மையான எண்ணத்திற்கும் ,எழுத்திற்கும் மென்மேலும் வெற்றியும் ,வாழ்த்துகளும் தொடரும் இன்ஷா அல்லா ...
..
வாங்க சகோதரர் அப்துல் ரஹ்மான்.
தங்கள் வாழ்த்துதலுக்கு நன்றி.
நாம் எதிர் பார்த்ததை விட நல்ல மணம் (நல்லமனங்கள் ) நிறைந்துள்ளது
இதைத் தொடர்ந்து நம் அதிரை தம்பி மன்சூர் அவர்களின் உதவியால் இன்று மிகச் சிறப்பான தோற்றத்தில் இணையக்கடலில் மிதந்து வருகிறது நம் அதிரைமணம்.
--------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.காற்று நம் பக்கம் வீச ஆரம்பிச்சிடுச்சு,வாசகர் அலை ,அலையா(தலைத்தலையா)வர ஆரம்பிச்சிட்டாங்க.இந்த கடல் உப்பு கரிக்காமல் காப்பது நம் கடமை.(சகோ.சாலிகு ஓரங்க நாடக வடிவில் இதற்கு கருத்து அரங்கேற்றலாம்)
சகோ.ஹாலிதுன்னு திருத்திக்கொண்டு படிக்கவும்.
You are doing wonderful...keep it up
யாசிருக்கு பக்கத்தில் இருக்கும் யாராவது ஒரு ups அனுப்பி வையுங்கள் பவர் கட்டில் சிரமபடுவது போல் தெரிகின்றது
சாஹுல் காக்கா நேற்று சகோ யாசிரிடம் தொடர்பு கொண்டேன், மின்சார தடையால் மிகவும் சிரமமாக இருப்பதாக சொன்னார்.
முன்று நாட்களாக ஷார்ஜாவில் சில பகுதிகளில் மின்சாரமே இல்லை, ரொம்ப கஷ்டம்.
ஏன் இப்படி பவர் கட் ஆகிறது (இதை வைத்து ஒரு கட்டுரை போடலாம் )மின் உற்பத்தி பற்றி யாராவது எழுதுங்கப்பா
ஏன் இப்படி பவர் கட் ஆகிறது (இதை வைத்து ஒரு கட்டுரை போடலாம் )மின் உற்பத்தி பற்றி யாராவது எழுதுங்கப்பா
--------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். சமீபத்தில் எங்க வாப்பா சொன்னாங்க ஊரில் அடிக்கடி கரென்ட் போவதால் ஒரே புழுக்கமா இருக்குன்னு .அதற்கு நான் தமாசா சொன்னது இப்ப ஞாபகம் வருது(உண்மையும் கூட)அமெரிக்காவில் கரென்ட் போனா ஆச்சரியம்,இந்தியாவில் போன கரென்ட் வந்தா ஆச்சரியம்.(கரென் இருந்தா ஸாக்கடிக்கும்,ஆனா நம்ம ஊரில் கெரென்ட் போன ஸாக்கடிக்கும்!(கிரிகெட் பாக்க ஏழாதுல)
அஸ்ஸலாமு அலைக்கும்.காற்று நம் பக்கம் வீச ஆரம்பிச்சிடுச்சு,வாசகர் அலை ,அலையா(தலைத்தலையா)வர ஆரம்பிச்சிட்டாங்க.இந்த கடல் உப்பு கரிக்காமல் காப்பது நம் கடமை.(சகோ.சாலிகு ஓரங்க நாடக வடிவில் இதற்கு கருத்து அரங்கேற்றலாம்)
கடல் நீர் உப்பு கரிகத்தான் செய்யும் ஆனால் உலகிற்கு அது கொடுக்கும் உணவு ருசியாக இருக்கும்
Post a Comment