Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஒரு பெண்ணின் வரிகளில்/பார்வையில் ஹிஜாபின் மகிமை 6

தாஜுதீன் (THAJUDEEN ) | July 26, 2010 | , , , ,

ஹிஜாப் தரும் சுதந்திரம்!















என்ன பார்க்கிறாய்?
என்னைப் பார்க்கும்போது
என்னில் என்ன பார்க்கிறாய்?
                                                                                                             
நான் சுதந்திரப் பறவையா?
கட்டுக்கோப்புக்குள் அடங்கியவளா?
இயந்திர உலகில் மாட்டியவளா?

கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய்
கண்ணாடியாக என் மேனி தெரியாததாலோ?
கட்டுக்கோப்புடன் நானிருப்பதாலோ?



நாகரீகம் அறியாதவளாக
பிணைக்கப்பட்ட கைதியாக
நான் தெரிகிறேனோ உனக்கு?



எனக்கென்று சொந்தக் குரல்
எனக்கென்று சுயசிந்தனை இல்லை என்கிறாய்
வேண்டாவெறுப்பாக மூடிக்கொள்கிறேன் என்கிறாய்



மூடி மறைத்தால் - கூண்டு கிளியா?
முடியை மறைத்தால் - அநாகரீகமா?
காட்ட மறுத்தால் - திணிப்பா?

சிறு வட்டத்தில் அடைப்பட்டவளென்று எண்ணி
பரிதாபத்தோடும், எரிச்சலோடும் பார்க்கின்றாய்
'சுதந்திரத்தின்' பொருள் அறியாமலேயே

கவலையும், துயரமும்
கோபமும், வேதனையும் எனக்கு
கண்களின் ஓரம் கண்ணீரும் இருக்கு

கண்ணீரின் காரணம்
நீ என்னை ஒதுக்குவதாலும்
உன் கேலிக் கூத்தாலும் அல்ல
நீ உனையே ஒதுக்குவதால்
உனை நீயே ஏமாற்றிக் கொள்வதால்
இறுதி நாளில் பாவியாக நிற்கப் போவதால்



அடுத்தவர் கண்களுக்கு நான் அழகாக
காட்சிப் பொருளாக
வடிவமான சிலையாக இல்லாமலிருக்கலாம்



இஸ்லாம் எனக்களித்த சட்டத்தை மதிக்க விரும்புகிறேன்
அக அழகே முக அழகு என்னில் சொல்கிறேன்
ஆதிக்கம் இல்லாமல் என்னையே ஆள்கிறேன்



அமைதியில் என் அழகும்
பொறுமையில் என் மென்மையும்
ஒழுக்கத்தில் என் பெண்மையும் காணலாம்



மன வலிமை
சரியான முடிவெடுக்கும் திறன்
சிந்திப்பதை செயல்படுத்தும் பக்குவம் உண்டு



வாழ வழியில்லாமல் வறுமை விரட்டும்போதும்
உழைப்புக்கு ஊதியம் மறுக்கும் போதும்
குட்டைப் பாவாடையும், இறுக்கும் மேலாடையும்
கைகொடுக்கும் என்றாலும் வேண்டாம் என்பேன்



கிடைப்பது எனக்கு மதிப்பும், மரியாதையும்
கீழ்த்தர பார்வை என் மீது பட்டதில்லை
அந்நிய கைகள் எனைத் தொட நினைத்ததில்லை



அந்நிய மோகத்திற்கு அடிமைப்படவுமில்லை
ஆண்களின் உணர்வை சீண்டவுமில்லை
கண்களால் கற்பழிப்பவன் என் கண்ணில் பட்டதில்லை



உண்மையில் நானே சுதந்திரப் பறவை
விண்ணில் பறக்கும் என் சிறகே 'ஹிஜாப்'
அபயத்தை அளிக்கும் கவசமே 'அபாயா'
அணிந்துக் கொண்டு பறப்போம் சுதந்திரமாக!!






தகவல்: அப்துல் மாலிக், துபாய்.

6 Responses So Far:

Yasir said...

//சிறு வட்டத்தில் அடைப்பட்டவளென்று எண்ணி
பரிதாபத்தோடும், எரிச்சலோடும் பார்க்கின்றாய்
'சுதந்திரத்தின்' பொருள் அறியாமலேயே// சரியாக சொன்னீர்கள் சகோதரி...

அப்துல்மாலிக் said...

ஹிஜாப் பற்றி விமர்சிப்பவர்களுக்கு ஒரு பெரிய மூக்குடைப்பு

நன்றி சகோ பகிர்வுக்கு

Adirai khalid said...

இஸ்லாத்திற்கு எதிரான
பெண் அடிமைத்தனம் என்று
வாய்கிளிய பேசும் போலி பெண்
விடுதலை விரும்பிகளுக்கு சகோதரி ஜெசீலா வரிக்கு வரி தரும் சாட்டையடி

முக்கியமாக இந்தப் பதிவை அனைத்து ஊடகங்களுக்கும்
வலைத்தலங்களுக்கும் கொண்டுசெல்லவேண்டும்

///வாழ வழியில்லாமல் வறுமை விரட்டும்போதும்
உழைப்புக்கு ஊதியம் மறுக்கும் போதும்
குட்டைப் பாவாடையும், இறுக்கும் மேலாடையும்
கைகொடுக்கும் என்றாலும் வேண்டாம் என்பேன் ///

உண்மை சகோதரி நம் கண்முன் நடப்பவை

///அந்நிய மோகத்திற்கு அடிமைப்படவுமில்லை
ஆண்களின் உணர்வை சீண்டவுமில்லை
கண்களால் கற்பழிப்பவன் என் கண்ணில் பட்டதில்லை////

நியாமான வரிகள்

///மூடி மறைத்தால் - கூண்டு கிளியா?
முடியை மறைத்தால் - அநாகரீகமா?
காட்ட மறுத்தால் - திணிப்பா?/// வீரம் நிரைந்த வரிகள்

///இஸ்லாம் எனக்களித்த சட்டத்தை மதிக்க விரும்புகிறேன்
அக அழகே முக அழகு என்னில் சொல்கிறேன்
ஆதிக்கம் இல்லாமல் என்னையே ஆள்கிறேன்///

அழகான ஆழுமை வாழ்த்துக்கள்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

பத்தாம் வகுப்பில் முதல் இடம்பிடித்த சகோதரி ஜாஸ்மினின் புகைப்படம் ஹிஜாப் தோற்றத்துடன் இணையங்களிலும் பத்திரிக்கைகளிலும் வந்ததும் (போலி) நார்த்திகர்களுக்கு அது பொருக்கவில்லை, என்னாமா விமச்சிக்கிறார்கள் இஸ்லாத்தை கண்மூடித்தனமாக.

ஹிஜாப் பெண்களின் சுதந்திரத்துக்கு தடையில்லை என்று எடுத்துரைக்கும் இந்த கவிதையை படித்தாவது திருந்தட்டும் இஸ்லாத்தை பற்றி விமர்சிக்கும் (பகுத்தறிவு?) மேதைகள்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

Very Nice article as a poem regarding freedom of "Burkha" wirtten by sister Jaseela. Insha-allah such kind of article should come every day by various writters. Keep it up. I wish you all the best by the grace of Almighty Allah.

Shameed said...

திருமதி. ஜெஸிலா, துபாய்

ஒரு ஆண் ஹிஜாப் பற்றி சொல்வதை (எழுதுவதை ) விட அதை அணிந்து அதன் பாதுகாப்பு அறிந்த பெண்கள் எழுதும் போது சிறப்பாக இருந்தது
இன்னும் நிறைய எழுதுங்கள்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு