Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நமக்குள் எழும் விடை தெரியா சில கேள்விகள் 20

தாஜுதீன் (THAJUDEEN ) | July 07, 2010 | , ,

அன்பு சகோதரர் M.S.M.நெய்னா முகம்மது அவர்களின் கட்டுரைகள் நம்மை கவர்ந்தவை, இந்த கட்டுரையை வெளியிடுவதில் மகிழ்ச்சி.                                                       

வசதி வாய்ப்புகளும், அத்தியாவசிய தேவைகளும், அறிவியலின் நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளும், அதன் பயன்பாடுகளும்,    மருத்துவ உலகம் மனிதனின் வாழ்நாளை நீடிப்பதற்காக அது எடுத்துக்கொண்ட  ஆராய்ச்சிகளும்,    சிரமங்களும், சவால்களும் அதன் வெளிப்பாடும், பயன்பாடும் அதிகம் இல்லாத அக்கால மனிதர்களின் வாழ்வில் ஏற்பட்ட மனநிறைவும், அமைதியும், சந்தோசமும் விஞ்ஞான வளர்ச்சிகளெல்லாம் விண்ணை முட்டும் அளவுக்கு முன்னேறி இருக்கும் நவீன கணிப்பொறி காலமாக திகழும் நாம் வாழும் இக்காலத்தில் இருப்பதாக தெரியவில்லையே ஏன்?

கிட்டத்தட்ட 80 அல்லது 90 வயதான நடமாடும் பெரியவர்களை ஒரு காலத்தில் அதிகம் பார்த்த நாம் இன்று அதுபோல் அதிகம் பார்க்க முடிவதில்லையே ஏன்?

குளங்களில் மழைகாலத்தில் நிரம்பும் நீர் தேக்கம் இடையில் வரும் கோடைகாலத்தைதாண்டி அடுத்து வரும் மழை காலம் வரை கொஞ்சமேனும் தேங்கி இருந்தது போல் இன்று இருப்பதில்லையே ஏன்?

எவ்வளவோ தூரமான சொந்த,பந்தங்களை (தூரத்துச்சொந்தம்) ஏதேதோ சொல்லி இழுத்துப்போட்டு சொந்தம் கொண்டாடிய மனிதர்கள் அதிகம் இருந்த அக்காலத்தில் இன்று நெருங்கிய சொந்தங்கள் கூட யாரோ/எவரோ, ஏனோ/தானோ என்று எவ்வித இணைப்பும், பிணைப்பும் இல்லாமல் இருந்து வருவது ஏன்?

அன்று பெரியவர்களுக்கு மட்டுமே வந்து அவர்களை கொஞ்ச காலம் படாதபாடு படுத்தி இறுதியில் மரணப்படுக்கையில் படுக்க வைத்த கொடிய நோய்களாம் புற்று நோய், காசநோய், சர்க்கரை நோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் இன்று வாலிபர்களையும், சின்னஞ்சிறார்களையும் கூட விட்டு வைக்காமல் வாட்டி வதக்கி வருவது ஏன்?

மார்க்க விசயமாக இருந்தாலும் சரி, உலக விசயமாக இருந்தாலும் சரி எத்தனையோ விழிப்புணர்வு இயக்கங்களும், கொள்கை கொண்ட இயக்கங்களும், மறுமலர்ச்சி இயக்கங்களும் இன்று தெரு தோறும், ஊர் தோறும் இயங்கி வந்தாலும் அன்று விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்து வந்த இயக்கங்களால் மக்களுக்கு ஏற்படாது இருந்த குழப்பங்களும், சண்டை சச்சரவுகளும், நீயா? நானா? போட்டிகளும் இன்று எல்லா இடங்களிலும் மலிந்து காணப்படுவது ஏன்?

குறைந்த வருவாயில் அதிகமான தேவைகளை நிறைவேற்றிக்கொண்ட அக்கால மனிதர்கள் இன்று அதிகமான வருவாய் இருந்தும் குறைவான தேவைகளையே நிறைவேற்றக்கூடியவர்களாக இருந்து வருவது ஏன்?

எத்தனையோ லட்சோப லட்சம் வருடங்களுக்கு முன் இறைவனால் உருவாக்கப்பட்ட இப்பூமிப்பந்தின் தென் கோடியில் இருக்கும் பனிப்போர்வை போர்த்திய பிரதேசமாம் அண்டார்டிக்கா உலக வெப்பமயமாதல் மூலம் சமீப காலத்தில் மட்டும் உருகி வருவதன் காரணம் என்ன?

பலகோடி வருடங்கள் சூரியனின் கதிர்களை தன்னகத்தே ஈர்த்துக்கொண்டு அதை அப்படியே கிரகித்து வரும் உலகம் இன்று மட்டும் அதன் வெப்பம் அதிகரித்து உலகை பயமுறுத்தி வருவது ஏன்?

தன் சொத்தின் மதிப்பு உலக பண மதிப்பில் எத்தனை பூஜ்ஜியங்கள் இருக்கும் என்று கூட யூகிக்க முடியாத அளவுக்கு பெரும் செல்வங்களைக்கொண்டு வாழ்ந்து வரும் பணக்காரர்கள் மத்தியில் ஒரு பூஜ்ஜியம் கூட இல்லாமல் அதற்காக அன்றாடம் அல்லோலப்படும் கோடான,கோடி மக்கள் இன்று உலகமெங்கும் இருந்து வருவது ஏன்?

எதிர்பாராமல் வந்து பேரழிவை ஏற்படுத்தும் இயற்கை சீற்றங்களாலும், ஆங்காங்கே நடக்கும் விமானம், ரயில் மற்றும் தரை வழி வாகன விபத்துக்களால் மக்கள் அன்றாடம் கொத்துக்கொத்தாக கொல்லப்படுவது ஏன்?

கிராம வாழ்க்கை மற்றும் அதன் இயற்கையை அனுபவிக்க மறந்து நகரத்தின் மேல் தீராத மோகம் கொண்டு சுகாதாரம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அங்கு மட்டும் மக்கள் குவிந்து வருவது ஏன்?

பசுமையான வயல்வெளிகளும், அதன் மேல் படர்ந்திருக்கும் வெண் கொக்குகளும் இன்று தரிசு நிலமாய் ஆகி அதன் மேல் இன்று வணிக நிறுவங்களும், குடியிருப்புகளும் அதிகம் கட்டப்பட்டு வருவது ஏன்? வயல் வெளியில் மட்டுமே விளைவிக்க முடியும் நெல்மணியை தொழிற்சாலையில் இயந்திரம் கொண்டு உற்பத்தி செய்து மனிதனின் உணவுத்தேவையை நிறைவேற்ற முடியுமா?

பல நல்ல, நல்ல திட்டங்களை மக்களுக்காக அவர்களின் நலன்களுக்காக பொது நல நோக்கில் போட்டி போட்டுக்கொண்டு நிரைவேற்றி சரித்திரத்திலும் இடம் பிடித்து எல்லோராலும் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பல நல்ல அரசியல் தலைவர்கள் இன்று இல்லாமல் போனது ஏன்?

அன்று ஆடம்பரப்பொருளாக தூரம் வைத்து பார்த்து பேசப்பட்ட கார், இரு சக்கர வாகனம், தொலைக்காட்சி, தொலைபேசி, மின் அடுப்பு, மின் சமைப்பான், கேஸ் அடுப்பு மற்றும் குளிர்சாதனப்பெட்டி போன்ற பொருட்கள் எல்லாம் அன்றாடம் பயன்படுத்தாமல் அக்கால மனிதர்களின் வாழ்க்கை சுமூகமாக நகரத்தான் செய்தது. ஆனால் இன்று இவைகளெல்லாம் அத்தியாவசியப்பொருட்களாக மாறி அது இல்லாமல் வாழ்க்கை சக்கரத்தை நகர்த்த முடியாது என்று ஆகிப்போனது ஏன்?

இயற்கையாய் உருவாகி மனிதனுக்கு பயன் தரும் காய்கறிகளும், பழவர்க்கமும், விலங்குகளும் இன்று மரபணு மூலம் உருவாக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர முயற்சிப்பது ஏன்?

ஒரு பக்கம் நவீன ஆயுதங்கள் மூலம் போர் என்று சொல்லி பொது ஜனங்களை கொத்து, கொத்தாக கொன்று குவித்து மறுபக்கம் விமானங்கள் மூலம் மனிதாபிமான அடிப்படை என்று சொல்லி உதவிப்பொருட்களை அனுப்பி வைப்பது ஏன்?

குடி குடியைக்கெடுக்கும், குடிப்பழக்கம் வீட்டுக்கும் கேடு நாட்டுக்கும் கேடு என்றெல்லாம் ஊருக்கு உபதேசம் உரக்கச்சொல்லி விட்டு கள்ளச்சாராயத்தை ஒழிக்கிறோம் என்று சொல்லி மதுக்கடைகளை அரசே ஏற்று முன்னின்று நடத்தி பொது மக்களுக்கு விநியோகித்து வருவது ஏன்?

பத்தாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கின்றது என்பதற்காக ஒரு லட்சம் பேருக்கு தன் விளைநிலம் மூலம் பயிர்களை விளைவித்துக்கொடுத்து அவர்களின் உணவுத்தேவையை பூர்த்தி செய்யும் விவசாய நிலங்களை அழித்து அதன் மேல் பெரும் தொழிற்சாலைகளை கட்டி வருவது ஏன்?

உலகில் வாகன உற்பத்தியை அதிகரித்து அதன் சந்தை மூலம் அதிக லாபம் ஈட்டி, அவ்வாகனத்தை நடுத்தர மனிதனும், பாமரனும் பயன்படுத்தும் வண்ணம் எல்லா வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்து அதை இயக்குவதற்கு தேவையான எரிபொருளைப்பெற பெட்ரோலிய உற்பத்தி மூலம் உலகப்பந்தை துளையிட்டு உறிஞ்சி எடுத்து பிறகு உலகம் வெப்பமயமாகி வருகிறது என்று கூக்குரலிட்டு கூட்டம் போடுவது ஏன்?

இவை யாவும் நம்மைப்படைத்த இறைவனுக்கே வெளிச்சம்.

என்னுள் தோன்றிய இக்கேள்விக்கணைகள் சரியா? அல்லது தவறா? என்று தெரியவில்லை. அவ்வப்பொழுது தோன்றும் இது போன்ற கேள்விகள் உங்களுக்கும் தோன்றி இருப்பின் நீங்கள் பின்னூட்டம் மூலமாகவோ அல்லது தனிக்கட்டுரை மூலமாகவோ பகிர்ந்து கொள்ளலாம்.

இன்னும் தொடரும் விடைதெரியா நம் கேள்விகள் இன்ஷா அல்லாஹ்.

வஸ்ஸலாம்..

மு.செ.மு. நெய்னா முஹம்மது

சவுதியிலிருந்து.
ஜூலை 07.07.2010

20 Responses So Far:

Shameed said...

நெய்னா முகம்மது அவர்களின் கட்டுரை எப்பொதும் தனி முத்திரைதான் (அக்மார்க் ) பல ஏன்கள் கேட்டு நம்மை ஏனோ சித்திக்க வைத்துவிட்டார் ஆமா ஏன் இதுவரை யாரும் பின்னுடம் இடவில்லையோ ஏன் ஏன் ஏன் ?
ஏதோ நம்மால் முடிந்த ஏன் களை போட்டாச்சு

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//நெய்னா முகம்மது அவர்களின் கட்டுரை எப்பொதும் தனி முத்திரைதான் (அக்மார்க் )//

சரியாக சொன்னீர்கள் சாஹூல் காக்கா. இந்த எல்லா கேள்விகளுக்கும்
யாராவது ஒரு நல்ல கட்டுரையை பதிலாக தந்தால் நன்றாக இருக்கும்.

Yasir said...

//நமக்குள் எழும் விடை தெரியா சில கேள்விகள்//சகோ.நெய்னா முஹம்மதுவின்..இந்த விடை தெரியாத கேள்விகளுக்கு விடை தேட முயற்ச்சி செய்தால் நம் ஆயுட்காலம் முழுவதும் தேடிக்கொண்டே இருக்கலாம்...அருமையான சிந்தனை சகோதரே...நானும் உங்களின் சில கேள்விகளுக்கு விடை தேட கிளம்பிவிட்டேன்

இப்னு அப்துல் ரஜாக் said...

நச்சென்ற வார்த்தைகள் நெயனாவின் பாணி தனி

Unknown said...
This comment has been removed by the author.
அன்புடன் மலிக்கா said...

ஏன் என்ற கேள்விகளின் வினாவால் விடைகள் தேடிப்புறப்படும்போது சிலவைகளுக்கு கிடைக்கலாம்
சிலவைகளுக்கு கிடைக்காமல் போகலாம்.

ஆனாலும் கேள்விகள் பிறக்கப்பிறக்க பதில்களைத்தேடும் படலம் தொடரும். அப்போது நிறைய படிப்பினைகள் கிடைக்கும்.

இதிலுள்ள சில கேள்விகளுக்குக்கூட
பதிலிருக்கு ஆனால் அதையாரும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்குமா? அதுவும் கேள்விதான்.

காலம்போகிற போக்கிற்கு மனிதன் போக நினைக்கும்போது. அது பலநேரம் பலவிளைவுகளை சந்திக்கும்படியாகிறது.அதில் பல நல்லவைகளையும் இழக்கும்படியாகிறது.

பலதை இழந்து சிலதை பெறுவது தற்காலத்தின் கட்டாயம்.

நல்லதொரு கட்டுரை வாழ்த்துக்கள்

Zakir Hussain said...

சகோ: நெய்னா....உங்கள் எழுத்தில் சமூக அக்கரை இப்படி ஆழமாக வெளிப்பட்டிருப்பது கண்டு நிச்சயம் நம் ஊர் பெருமைகொள்ளவேண்டும். என்னை பொருத்தவரை சமீபத்தில் படித்த மிகச்சிறந்த ஆக்கங்களில் இது நிச்சயம் உண்டு.

சகோ: தாஜுதீன் வலைப்பூவில் இந்த் அளவு தரமான ஆர்டிக்கிள் வருவதன் மூலம் இந்த வலைப்பூ "ரீடர் டைஜஸ்ட்" தரத்துக்கு உயர்ந்து இருக்கிறது.

வாழ்த்துக்கள்

ZAKIR HUSSAIN

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சகோதரர்கள் Yasir,'ஒருவனின்' அடிமை, harmys , Zakir Hussain,
சகோதரி அன்புடன் மலிக்கா.
உங்கள் அனைவரின் வருகைக்கு மிக்க நன்றி.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//இதிலுள்ள சில கேள்விகளுக்குக்கூட
பதிலிருக்கு ஆனால் அதையாரும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்குமா? அதுவும் கேள்விதான்.//

சரியாக சொன்னீர்கள் சகோதரி மலிக்கா.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//சகோ: தாஜுதீன் வலைப்பூவில் இந்த அளவு தரமான ஆர்டிக்கிள் வருவதன் மூலம் இந்த வலைப்பூ "ரீடர் டைஜஸ்ட்" தரத்துக்கு உயர்ந்து இருக்கிறது//

தங்களின் ஊக்கத்திற்கும், அன்புக்கும் வாழ்த்துதலுக்கும் மிக்க நன்றி சகோதரர் ஜாஹிர்.

உங்களைப் போன்றவர்களின் பாராட்டுக்கள் என்னை இன்னும் நன்றாக செய்ய தூண்டுகிறது. தொடர்ந்து அதிரை நிருபருடன் இணைந்திருங்கள்.

சகோதரர் நெய்னா முகம்மது அவர்கள் தன் கட்டுரை சம்பந்தமாக விரைவில் பதில் அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சகோதரர் ஹாலித் உங்களின் வருகைக்கு மிக்க நன்றி, தொடர்ந்து இணைந்திருங்கள்.
சகோதரர் ஹாலித் அவர்களின் பதில்கள் அருமை, மற்ற சகோதரர்களிடமிருந்து இது போன்று வித்யாசமான பதில்கள் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

இந்த கட்டுரையை படிக்கப் படிக்க நிறைய பதில்கள் வரும், நமக்கு நிறைய படிப்பினைகள் உள்ளது என்பது மட்டும் உறுதி

Shameed said...

கிட்டத்தட்ட 80 அல்லது 90 வயதான நடமாடும் பெரியவர்களை ஒரு காலத்தில் அதிகம் பார்த்த நாம் இன்று அதுபோல் அதிகம் பார்க்க முடிவதில்லையே ஏன்?
+++++++++++++++++++++++++++++++++++
அன்று இயற்கை உரங்களை இட்டு உணவு உற்பத்தி செய்தார்கள் 90 வயதுக்கும் மேல் வாழ்தார்கள்

அப்பாடா இபோதைக்கு இது ஒன்றுகுதாம்பா பதில் தெரிந்தது (ரூம் போட்டு யோசித்துவிட்டு மீதிக்கு பதில் சொல்வோமுளோ )

crown said...

ஏன் என்ற கேள்வி கேட்காமல் நைனா இருப்பதில்லை,அவர் கேட்கும் திறனுக்கு திரானியாய் பதில் சொல்ல முடிவதில்லை.அன்று இருந்த பல சிறப்புகள் இன்று ஏன் யில்லை?(இதுவும் கேள்வியின் சாரமே)!இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்ட நைனாதான் பதில் சொல்ல வேண்டும் என வேண்டும் நண்பன்.(சகோ.ஹாலிது அடக்கத்தின் காரணமாய் உலறல் என்று சொல்லிகொண்டாலும் சொன்ன பதில் பளிச்)இன்னும் சொல்ல முடியும் நேரம்தான் போதவில்லை.

Unknown said...

நண்பன் நைனா வுக்கு
அன்புள்ள நண்பன் நைனா அஸ்ஸலாமு அலைக்கும்
உனக்கு தோன்றிய கேள்விகள் அணைத்தும பல வருடங்கலஹா என்னுள் பல சமயம் எழுவதுண்டு .....
நான் குரான் தர்ஜுமா படிக்கும்போது ஒரு இறை வசனம் இன்றுவரை என் மனதிற்குள் அடிக்கடிவந்து நம் கேள்விகளுக்கு பதில் சொல்வது போல் உள்ளது . என் புரிதுணர்வு தவராஹா இருப்பின் விளக்கம் தெரிந்தவர்கள் விளக்கவும் ..

அந்த இறை வசனம் ....

"இந்த உலஹம் தன அருஹுகளிருந்து குறைந்து வருவதை நீங்கள் கவனிக்கவில்லையா "......

இந்த மானிட சமுதாயம் தனுடைய இயற்கை சார்ந்த அடயலங்களிருந்து விரும்பியோ விரும்பாமலோ விளஹி சென்றுகொண்டிருக்கிறது .
ஒரு நாள் வரும் .. அப்பொழுது இப்போ இயங்கும் செயற்கையான விஷயங்கள் யாவும் தனுடைய அலைவரிசயிளிருந்து விலகும் .....
அப்பொழுது மானிட சமுதாயம் இயற்கை சார்ந்த விசயங்களை தொலைத்து பல ஆயிரம் ஆண்டுகள் கழிந்திருக்கும் ...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

வாங்க நெய்னா முகம்மது மற்றும் என்னுடைய நண்பர்களே கிரவுன், harmys(சீனியர் இர்ஷாத்). உங்கள் இருவரின் வருகைக்கு நன்றி.

சகோதரர் harmys, சரியான பதில்கள் இறைவசனங்களில் உள்ளது என்பதை நாம் யாரும் மறுக்க முடியாது.

தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பர்களே...

அபு இஸ்மாயில் said...

என்ன நண்பா நெய்னா அஸ்ஸலாமு அழைக்கும் நல்ல சொகமா ஈகிரியால படிக்கிற காலத்தில் இருந்து கேள்வி கேட்டு இப்படி கேள்வி குறியா வளர்ந்து நிக்கிரிகளே பதில யோசிக்க தொடங்ங்க?
//எவ்வளவோ தூரமான சொந்த,பந்தங்களை (தூரத்துச்சொந்தம்) ஏதேதோ சொல்லி இழுத்துப்போட்டு சொந்தம் கொண்டாடிய மனிதர்கள் அதிகம் இருந்த அக்காலத்தில் இன்று நெருங்கிய சொந்தங்கள் கூட யாரோ/எவரோ, ஏனோ/தானோ என்று எவ்வித இணைப்பும், பிணைப்பும் இல்லாமல் இருந்து வருவது ஏன்?//
என்ன செய்ய அந்த காலத்தில் எல்லோரும் உள்ளுரூ சம்பாத்தியம் இப்ப எல்லோரும் வெளிநாட்டுக்கு போயிட்டோம் கிடைக்கிற ஒரு மாச லீவுல பொண்டாட்டி பிள்ளைகளோடவும் ஆஸ்பத்திரிக்கு போகவும்தான் நேரம் சரியா இருக்குது போங்க. இப்படி எழுதியாவது மனதை தேத்திகுவோம்.
நல்ல கட்டுரை நண்பா வாழ்த்துக்கள்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

உங்கள் அனைவருக்கும் என் இனிய அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

விடைதெரியா என் முன்னூட்டக்கேள்விகளுக்கு பின்னூட்டம் மூலம் இங்கு முடிந்தவரை பதிலளித்து உற்சாகப்படுத்திய எனதருமை சகோதரர்கள், நண்பர்கள் சாஹூல் காக்கா, யாசிர், தாஜுத்தீன், ஒருவனின் அடிமை, க்ரவுன் தஸ்தகீர், அப்துல் ரஹ்மான் (சீனியர் இர்ஷாத்), அபு இஸ்மாயில், உளரல் என்று கூறி உண்மையை போட்டு உடைத்த சகோ. மு.அ. ஹாலித், அன்புடன் மல்லிக்கா மற்றும் ஜாக்கிர் ஹுசைனுக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் உங்கள் யாவரின் ஈருலக நல்வாழ்விற்காக என் து'ஆவும் சென்றடையட்டுமாக....

இங்கு வண்டி, வண்டியாக கேள்விகளை கேட்டிருக்கின்றேன். பதிலை முடிந்தளவுக்கு ஒரு ஆட்டோவிலாவது அனுப்ப முயற்சி செய்யுங்கள். நானும் முயற்சிக்கின்றேன்....

இப்படிக்கு,

மு.செ.மு. நெய்னா முஹமது.

Adirai khalid said...

நெய்நாவின் கேள்விகளும்
மு அ வின் உளறல்களும் -2

மு.செ.மு. நெய்னா முஹம்மது said....

///அன்று பெரியவர்களுக்கு மட்டுமே வந்து அவர்களை கொஞ்ச காலம் படாதபாடு படுத்தி இறுதியில் மரணப்படுக்கையில் படுக்க வைத்த கொடிய நோய்களாம் புற்று நோய், காசநோய், சர்க்கரை நோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் இன்று வாலிபர்களையும், சின்னஞ்சிறார்களையும் கூட விட்டு வைக்காமல் வாட்டி வதக்கி வருவது ஏன்?////

மு அ ஹாலித் உளறியது
இப்போவெல்லாம் ரொம்பதான் (சாப்பாட்டுல, உறவு முறையிலே) கெமிஸ்ட்ரி சேர்ந்து நல்லா ஒர்கவுட் ஆகுதே!

....


மு.செ.மு. நெய்னா முஹம்மது said....

////மார்க்க விசயமாக இருந்தாலும் சரி, உலக விசயமாக இருந்தாலும் சரி எத்தனையோ விழிப்புணர்வு இயக்கங்களும், கொள்கை கொண்ட இயக்கங்களும், மறுமலர்ச்சி இயக்கங்களும் இன்று தெரு தோறும், ஊர் தோறும் இயங்கி வந்தாலும் அன்று விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்து வந்த இயக்கங்களால் மக்களுக்கு ஏற்படாது இருந்த குழப்பங்களும், சண்டை சச்சரவுகளும், நீயா? நானா? போட்டிகளும் இன்று எல்லா இடங்களிலும் மலிந்து காணப்படுவது ஏன்?///

மு அ ஹாலித் உளறியது
அன்று முன்னோர்கள் கற்றலில் கண்டது இருண்டகலாம், இன்று ஒவ்வொருவரும் விளித்துகொள்ளும் ஹய் டெக் நேரம்,
அன்று தாய் வழி அப்பாக்கள் தான் தலைவர்!
இன்று கொள்கை வழி தலைவர்தான் அப்பாக்கள் !
அன்று முகம்மது நபி (ஸல்) அவர்கள் மட்டுமே ஒரு தலைவர் என்று கருதப்பட்டார்கள் இன்று அந்த நபிவழியை ஆதரிப்பவரும் மற்றும் நபிவழியை எதிர்பவர்களும் அவரவர்களுக்கு அவர்களாகவே தலைவர்களாக சித்தரிக்க படுகின்றனர் -உண்மைய இல்லையா



மு.செ.மு. நெய்னா முஹம்மது said....

குறைந்த வருவாயில் அதிகமான தேவைகளை நிறைவேற்றிக்கொண்ட அக்கால மனிதர்கள் இன்று அதிகமான வருவாய் இருந்தும் குறைவான தேவைகளையே நிறைவேற்றக்கூடியவர்களாக இருந்து வருவது ஏன்?

மு அ ஹாலித் உளறியது
அன்று தேவைகள் கட்டுக்குள் இருந்தது.. இன்று அந்த தேவைகள் ஆடம்பரம், அத்தியாவசியம் என்று பாரபட்சம் இல்லாமல் கட்டுப்பாடற்ற காட்டாறுபோல் திசை தொரியாமல் திண்டாடுகிறது.


மு.செ.மு. நெய்னா முஹம்மது said....

எத்தனையோ லட்சோப லட்சம் வருடங்களுக்கு முன் இறைவனால் உருவாக்கப்பட்ட இப்பூமிப்பந்தின் தென் கோடியில் இருக்கும் பனிப்போர்வை போர்த்திய பிரதேசமாம் அண்டார்டிக்கா உலக வெப்பமயமாதல் மூலம் சமீப காலத்தில் மட்டும் உருகி வருவதன் காரணம் என்ன? பலகோடி வருடங்கள் சூரியனின் கதிர்களை தன்னகத்தே ஈர்த்துக்கொண்டு அதை அப்படியே கிரகித்து வரும் உலகம் இன்று மட்டும் அதன் வெப்பம் அதிகரித்து உலகை பயமுறுத்தி வருவது ஏன்?//
மு அ ஹாலித் உளறியது
இது என்ன ஆச்சிரியம் மக்கள் தொகைபெருக்கத்திர்க்கு ஏற்ப்ப வாய்வு (gas trouble) தொல்லையும் கூடத்தானே செய்யும் ! பின்பு காற்று மண்டலம் சூடாகும் இரும்பே உருகும்போது பனிமலையும் கரையாத என்ன

நெய்னா கொஞ்சம் அவசரமா வருது போய்ட்டு வரேன் .....
உளரல் தொடரும்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

// மு.அ. ஹாலித் கூறியது...

அன்று முகம்மது நபி (ஸல்) அவர்கள் மட்டுமே ஒரு தலைவர் என்று கருதப்பட்டார்கள் இன்று அந்த நபிவழியை ஆதரிப்பவரும் மற்றும் நபிவழியை எதிர்பவர்களும் அவரவர்களுக்கு அவர்களாகவே தலைவர்களாக சித்தரிக்க படுகின்றனர் -உண்மைய இல்லையா //

உண்மை தான்.

இதில் ஆள் ஆளுக்கு தீர்ப்பு கூறிவருகிறார்கள், நாங்கள் தான் உண்மையாளர்கள் மற்றவர்கள் எல்லாம் வழி கேட்டவர்கள் என்று. இது தினமும் நம் காதுகளில் வந்து செல்கிறது...

அனைவரும் திருந்தி வரட்டு பிடிவாதங்களை தூக்கி வீசிவிட்டு ஒற்றுமை என்னும் கயிறை பிடிக்க எப்போது வரப் போகிறார்களோ?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு