Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

"எமக்குத் தொழில், பிச்சையெடுத்தல்!" 16

தாஜுதீன் (THAJUDEEN ) | July 13, 2010 | , ,


"யாசகம் கேட்பவன் குதிரை மீது ஏறி வந்து கேட்டாலும், அவனுக்குக் கொடுங்கள்" என்பதும், "மேற்கை (அதாவது கொடுக்கும் கை),                            கீழ்க்கையை (வாங்கும் கையை)விடச் சிறந்தது" என்பதெல்லாம் இஸ்லாத்தின் உபதேசம். அதாவது, தர்மம் செய்வதை ஆர்வமூட்டி மறுமைப் பேற்றை அடையக் கூறுகின்றது இஸ்லாம். உண்மை இவ்வாறிருக்க, நமதூரில் நிலவும் சூழல், நம்மைச் சடைவடையச் செய்வதால்தான் இந்தத் தலைப்பு.

இப்போதெல்லாம், நமதூரில் குடிகொண்டுள்ள பிச்சைக்காரர்கள் பின்பற்றும் Strategy நம் சிந்தனையைக் கிளரிவிடுகின்றது. நல்ல உடல் வலிமையுடன் இருக்கும் எத்தனையோ பேர் நம் வீடுகளுக்கு வந்து பிச்சை கேட்பதைக் காணும்போது, 'இது ஒரு Lucrative business போலும்' என்று எண்ணத் தோன்றுகிறது.

முன்பெல்லாம் பிச்சைக்காரர்கள் தனித்தனியாக வருவார்கள். ஆனால், இப்போது மூன்று நான்கு பேர் ஒன்றாக வருகிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் உறவினர் என்றா எண்ணுகின்றீர்கள்? இல்லை. எங்கிருந்தெல்லாமோ வந்து, இங்குவந்து இணைந்து கொண்டவர்கள். மூவரும் அல்லது நால்வரும் at a time நம் வீடு, எதிர் வீடு, அடுத்த வீடு, அதற்கு எதிர்த்த நமது பக்கத்து வீடு ஆகியவற்றின் கதவைத் தட்டுகின்றார்கள். அத்தனை வீட்டிலிருந்தும் காசு வரும்போது, "நாங்கள் மூனு பேர் அல்லது நாலு பேர்" என்கிறார்கள். நாலு வீட்டுக் கலெக்ஷனையும் வாங்கிக்கொண்டு, அவர்களுக்குள் பிரித்துக் கொள்கிறார்கள்.

இன்னும் சில பிச்சைக்காரர்கள், நமக்குக் கடன் கொடுத்த கடன்காரர்கள் போல் நம் வீட்டுக் கதவை உடைக்கிறார்கள்! யாரோ எவரோ என்று அவசரமாக வந்து கதவைத் திறந்து பார்த்தால், நிற்பவர் பிச்சைக்காரர்! வீட்டுக்காரரின் முகத்தில் கோபம் கொப்பளிக்கிறது; பிச்சைக்காரர் பல்லை இளிக்கிறார்.

நான் பார்த்திருக்கிறேன், பிச்சைக்காரர் ஒருவர் பேருந்து நிலையத்தில் நிற்கிறார்; தொழுகை நேரத்தில் அவரே பள்ளிவாசலுக்கு வெளியேயும் நிற்கிறார்; அவரே ஒவ்வொரு வீட்டுக்கும் வருகின்றார்; அவரே வழியில் போவோர் வருவோரையும் விடுவதில்லை!

ஒரு பிச்சைக்காரன் இருக்கிறான். உண்மையில் அவன் குயவன். தலையில் முண்டாசைக் கட்டிக்கொண்டு, "அல்லா! ரசூலுல்லா!" என்று நம் வீடுகளுக்கு வந்து பிச்சை கேட்கிறான். அதே ஆளை, நொண்டி நொண்டி நடந்து, கடைத் தெருவில் பிச்சை கேட்கவும் பார்க்கலாம்.

சில பிச்சைக்காரர்களுக்கு நிரம்ப தைரியம்; கதவு திறந்திருந்தால், உரிமையோடு வீட்டுக்குள்ளேயே வந்துவிடுகின்றார்கள்! அவர்கள் தம் உரிமையை நிலைநாட்டு கின்றார்களாம்! ஒரு ரூபாய் கொடுத்தால், நம்மை ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். இவர்கள் 'பஞ்சத்துக்கு ஆண்டிகளல்லர்; பரம்பரை ஆண்டிகள்'.

இன்னும் சில smart பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். கொடுத்த காசை வாங்கிக்கொண்டு, "பவலக்கி வாரேன், சாப்பாடு தாங்கோ" என்று பல்லை இளிக்கிறார்கள். இன்னும் சிலர் காசை வாங்கிய பின்னர், சட்டை வேட்டி வேண்டும் என்று கேட்கிறார்கள்.

சில நேரங்களில் இவர்களுடைய systematic begging பற்றி அறியும்போது, நமக்கே ஆச்சரியம் உண்டாகிறது. முதலில் நடுத்தெரு. அதற்கடுத்து செக்கடித்தெரு. அதற்கடுத்துப் புதுமனைத்தெரு. அதற்கடுத்து CMP Line. அதன் பின் வண்டிப்பேட்டைக்குச் சென்று பஸ்ஸைப் பிடித்துவிடுகிறார்கள்! இவர்கள், ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் ஊரை இலக்காக்குபவர்கள்.

சில வேளைகளில் நம்மிடம் சில்லரை இல்லாதபோது, "மாஃப் செய்ங்க" என்று சொன்னால், தயங்காமல் இவர்கள் கேட்பது, "நோட்டைத் தாங்கோ, சில்லரை தாறேன்." நமக்குக் கோபம் வருமா? சிரிப்பு வருமா?

ஒரு ரூபாயைக் கொடுக்கும் நாம், என்றாவது 50 பைசாதான் சில்லரை இருக்கிறது என்று கொடுத்தால், அதை வாங்காமல், வீசிவிட்டுப் போய்விடுகிறார்கள்! அவர்களுக்கு 50 பைசா காசில்லையாம்! "கடைத்தெருவில் 50 பைசாதானே போடுகிறார்கள்" என்று நாம் கேட்டால், "அது கடைத்தெரு; இது வீடு" என்று நமக்கு விளக்கம் தருகிறார்கள்!

ஒரு பக்கீர்சா மேளம் தட்டிக்கொண்டு வருகின்றார். தன் தொழிலை முடித்துக்கொண்டு, மேளத்தை ஒரு பையில் போட்டுக்கொண்டு, gentleman போல் பஸ்ஸைப் பிடித்துப் பயணம் புறப்படுகின்றார். எந்தக் குறையும் இல்லாத இவரைப் பார்த்து, "ஏங்க, நீங்கள்லாம் ஒழச்சு சாப்பிடக் கூடாதா?" என்று கேட்டால், முறைத்துப் பார்க்கிறார் நம்மை. அடுத்த தடவை நம் வீட்டு வாசலுக்கு வந்து, நமக்கு எரிச்சலை ஊட்டும் அளவுக்கு மேளத்தை வேகமாகத் தட்டுகின்றார். அவருக்குத் தெரியும், இங்கு தனக்குக் காசு கிடைக்காது என்று. அதனால் நம்மைப் பழிக்குப்பழி வாங்குகிறாராம்.

சில பிச்சைக்காரர்கள், தமது 'தொழிலை' முடித்துக்கொண்டு ஒதுங்குமிடம், சாராயக் கடை என்றும், கஞ்சா அடிக்குமிடம் என்றும் சிலர் சொல்லக் கேட்டுள்ளேன்.

இடையில் ஒரு தகவல்: சென்னை மண்ணடியில் ஒரு தாயும் மகளும் போவோர் வருவோரிடமெல்லாம் பிச்சை வாங்கிக் குவிக்கும் காசில், வட்டித் தொழில் செய்வதாகக் கேள்வியுற்றேன்! நானே கிழவி ஒருத்தியை சுமார் நாற்பது ஆண்டுகளாக அங்கப்ப நாயக்கன் தெருவில் 'பிச்சைத் தொழில்' செய்து 'பிழைப்பு' நடத்தி வருவதை அறிவேன். நம்மூரில் வசூலாகும் பெருந்தொகையைக் கொண்டு, நம்மூருக்கு வரும் பிச்சைக்காரர்கள் என்னவெல்லாம் செய்கிறார்களோ?

நமது பலவீனத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்களா? அல்லது, நமது இரக்க உணர்வு நம்மை நன்மையடையச் செய்கின்றதா? பிச்சைக்காரர்களின் முடிபு, "Adirampattinam is the proper place for begging." அதனால்தான், மிகப் பெருமையோடு இவர்கள் சொல்வதாக நம்மால் உணர முடிகிறது:

 அதிரை அஹ்மது

16 Responses So Far:

தாஜுதீன் (THAJUDEEN ) said...

ரமலான் மாதம் வரப்போகும் இவ்வேலையில், இந்தக் கட்டுரை நம்மை சிந்திக்க வைக்கிறது.

ஜக்காத்தை முறையாக குடுப்பதற்கு ஒரு எச்சரிக்கையாக இந்த கட்டுரையை நான் கருதுகிறேன்.

இக்கட்டுரையை அதிரை நிருபருக்கு அனுப்பிவைத்த அஹ்மது மாமாவுக்கு நன்றி.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும் சாச்சா சரியான ஆக்கம் சபாஸ்.இந்த பிச்சைகாரர்களின் கற்பனையும்,லாகவமான பேச்சும் படிததவர்களே இவர்களிடம் பிச்சை வாங்கனும்.யாசகம் கேட்பவரின் வாசகங்களை கவனித்து தொகுத்து அமைந்த இந்த கட்டுரையை எழுதிய உங்களிடம் நாங்கள் எல்லாம் எழுத்துப்பிச்சை எடுக்கனும்(ஹஹஹஹஹ)

Yasir said...

”பிச்”சை காரர்களின் “ரிச் “ ஆன வாழ்க்கைப்பற்றி தகுந்த நேரத்தில் எழுதிய சகோ.அஹமது அவர்களுக்கு வாழ்த்துக்கள்...டெல்லியில் இப்பொழுது மாஸ்டர் டிகிரி படித்தவர்களும் அதை தூக்கி முதுகு பின்னாடி வைத்துவிட்டு சிக்னலில் நின்று பிச்சை எடுப்பதாக தகவல்..அந்த அளவிற்க்கு காக்கா சொல்வது போல் ...இது ஒரு “Lucrative business ”ஆக உள்ளது...இப்படியே போய்க்கொண்டு இருந்தால் உழைப்பவர்கள் குறைந்து...பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்....ஜாஹிர் நானா..உங்கள் ஸ்டையிலில் இந்த கட்டுரைக்கு ஜோக்கான காமெண்ட் ஒன்றை எழுத்துங்கள்..சாஹுல் காக்கா நீங்களும் தான்

Shameed said...

யாரும் எதிர் பார்க்காத ஓர் மேட்டார் பல வருசங்களாக நோட்டமிட்டு எழுதப்பட்ட ஒரு நல்ல ஆக்கம் மேலும் இஸ்லாம் அதன் நெறிமுறைகளை தர்மம் செய்வதை எப்படிஎல்லாம் சொல்லிவுள்ளது என்பதை அஹ்மத் காகா அவருகே உரிய பாணியில் அழகாக சொல்லிவுள்ளர்கள் ,

ஒரு விஷயம் மற்றும் நெருடலாக உள்ளது (முதலில் நடுத்தெரு. அதற்கடுத்து செக்கடித்தெரு. அதற்கடுத்துப் புதுமனைத்தெரு. அதற்கடுத்து CMP Line. அதன் பின் வண்டிப்பேட்டைக்குச் சென்று பஸ்ஸைப் பிடித்துவிடுகிறார்கள்! )

பிச்சை எடுகவருபவர்கள் மொத்த ஊரைவும் ஆட்டோவை விட வேகமா ரவுண்டு கட்டி பிச்சை எடுத்து விட்டு காலையில் வந்த ஓசி ரயிலை பிடிக்க ஒருமணி நேரம் முன்பே வந்து கடல் காற்றை (அதுவும் ஓசி )வாங்கிவிட்டு வந்த வழியாக செல்கின்றனர்

அப்துல்மாலிக் said...

நல்ல பகிர்வு

இதை தடுப்பதற்கு வழிவகைகளை முதலில் ஆராய வேண்டும். கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் காசு தர்மத்தின் மூலம் நேர்மையான வழியில் செலவிடப்படவேண்டும். இதை தடுப்பதின் மூலம் உழைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நடக்குமா???
-அப்துல் மாலிக்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//பிச்சை எடுகவருபவர்கள் மொத்த ஊரைவும் ஆட்டோவை விட வேகமா ரவுண்டு கட்டி பிச்சை எடுத்து விட்டு காலையில் வந்த ஓசி ரயிலை பிடிக்க ஒருமணி நேரம் முன்பே வந்து கடல் காற்றை (அதுவும் ஓசி )வாங்கிவிட்டு வந்த வழியாக செல்கின்றனர்//

பிச்சை எடுப்பது தவறாக இருந்தாலும். சில பிச்சைக்காரர்களிடம் இருக்கும் வேகம், விடாமுயற்சி, கலைத்திறமை போன்றவைகளைப் பார்த்து ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை.

கல்லூரியில் படிக்கும் போது பாடத்தில் பிச்சைகார்களின் trickக்கான விடா முயற்சியை Marketing வேலையுடன் ஒப்பிட்டு உதாரணமாக எங்கள் விரிவுரையாளர் கூறியது இன்னும் ஞாபகத்தில் உள்ளது.

இன்றைய காலகட்டத்தில் Marketingகில் இருக்கும் என்னைப் போன்றவர்கள், Sales முடிந்த பிறகு cheque & பணம் வசூலிக்கப்படும் பாடு பிச்சைக்காரர்கள் படும் பாடைவிட கொஞ்சம் அதிகம் தான், நல்ல அனுபவம் :( :(

chinnakaka said...

பிச்சைகாரர்களைப்பற்றிய ஆய்வு ஆச்சரியமூட்டுகிறது! எனக்கு தெறிந்த ஒரு யாசகர் (தமிழ்) அவருடைய ஒரு வார தொழிலைபற்றி கூறியது வியப்பும் ஆச்சரியத்தையும் உண்டாக்கியது அதாவது அவருடைய சொந்த ஊர் காரைக்குடி அருகில் இருக்கும் புது வலசையாம் ஞயிற்றுக்கிழமை காரைக்குடியில் தொடங்கும் அவரது பயணம் சனிக்கிழமை புது வலசையில் முடிவு பெறுவதாகவும் சொன்னார் அத்தனை தூரமும் ரயில் பயணம் தானம் திங்கள் அறந்தாங்கி, செவ்வாய் பட்டுக்கோட்டை, புதன் முத்துப்பேட்டை,வியாழன் அதிரை. வெள்ளி பேராவூரனி,சனிக்கிழமை சொந்தவூர் இப்படியாக சொன்ன இவர் முக்கியமாக சொன்னது ரயில் எந்தந்த ஊருக்கு எத்தனை மணிக்கு வரும் எங்கு கிராசிங் என்பதை சொன்ன அவர் என்னைப்பற்றி விசாரித்தார் அதிரை என்றவுடன் எந்த தெரு என்றார் தெரு பெயரை சொன்னவுடன் வீட்டை விசாரித்தார் வீட்டை சொன்னவுடன் என் வாப்பவிலிருந்து எனது கடைசி மகன் வரையும் அத்தனை பேரையும் பற்றி சொல்லியது வியப்பூட்டியது! மேலும் எனது தந்தையின் பட்டுக்கோட்டை வியாபரத்தை பற்றி சொல்லியும் ஆச்சரியப்படவைத்தார்.
எனது தந்தையிடம் வியப்புடன் அவரைப்பற்றி விசாரித்தேன் அவர் முஸ்லீம் என்றும் ஊருக்கு ஊர் தன்னுடைய வேசத்தை மாற்றிக்கொள்வாராம், மேலும் அதிர்ச்சி அளித்த விசயம் தான் பிள்ளைகளால் வீட்டை விட்டு விரட்டப்பட்டவராம் கிட்ட தட்ட அவருக்கு 80 வயது இருக்கும் அதற்கு பிறகு இது வரை அவரை பார்க்க முடியவில்லை

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இது விழி பிதுங்க வைக்கும் ஆராய்ச்சிக் கட்டுரை, நீண்ட நாள் பாதிப்பு "எமக்குத் தொழில் பிச்சையெடுத்தல்" தலைப்பிட்டு பி(ட்)ச்சு உதறீட்டிங்க

சில பிச்சைக்காரர்கள் வீட்டில் எங்கே சில்லரைகள் வைக்கப் பட்டிருக்கும் என்பதை நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள் "சமீபத்தில் ஊரில் இருக்கும் போது வீட்டு வாசல் படியேறி மூன்று பேர் வந்து நின்றார்கள் அவர்களைப் பார்த்ததும் உடனே சில்லரை இல்லை போயிட்டு வாங்கன்னு சொல்லிட்டு வாசலில் அமர்ந்தேன் அதுக்கு அந்த மூவரில் ஒரு பெண் என்ன வாப்பா அந்த ஜன்னல் ஓரத்தில காசு வச்சிருக்காங்க அத எடுதாங்கன்னு சொல்லிட்டு விரு விருன்னு படியேறிவந்து அந்த ஜன்னலில் கைவிட்டு எடுத்ததை கண்டு அதிர்ந்து விட்டேன் !!!"

Shameed said...

நான் முன்பு துபாய்யில் இருந்த போது பார் துபாயில் இருந்து டேர துபாய் வருவதற்கு பிரிட்டிஷ் பேங்க் வழியாக வந்து கொண்டிருந்தேன் ஓர் கால் முடியாத ஒருவர் பாய் பாய் என்று (ஹிந்தியில் ) ரொம்ப கெஞ்சி பணம் கேட்டார் நான் ஏதோ நினைப்பில் வேகமாக வந்துவிட்டேன் ,வந்து போட்டில் உட்காந்ததும் அந்த பணம் கேட்டகுரல் நினைப்பு வந்தது மனது கஷ்டமாக இருந்தது அவருக்கு பணம் கொடுக்கலாம் என்று உடனே போட்டை விட்டு இறங்கி அந்த பிச்சைகாரர் இருத்த இடத்தை நோக்கி போய் பார்த்தல் அங்கு ஆல் இல்லை இது நடந்து 15 அல்லது 18 வருடம் இருக்கும் , அவருக்கு பணம் கொடுக்காமல் போனது இன்று வரை என் மனதை உறுத்திகொண்டுள்ளது .

SHAHULHAMEED

Adirai khalid said...

விடையை தலைப்பில் சில வரிகளில் கொடுத்து விட்டு, நமக்கு எழும் கேள்விகளை அன்றாடம் சந்திக்கும் சிறு சிறு பிரச்சனைகளை மிக அழகாக நகர்த்தப் பட்டிருகின்றது.

கையேந்தும் சமுதாயத்தை நாம் தான் ஏற்படுத்தி காட்டிருகின்றோம். நாம் ஊர் போன்ற பகுதிகளில் அரசின் கவனக் குறைவு அதிகம், பிரமான மற்றும் மேற்குடி சமுதாய மக்கள் வாழும் இடங்களில் பிச்சைகார ஒழிப்பை அரசே காவல் துறைமுலம் முன்னின்று நடத்திவருகின்றது.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஜகாத்தில் சிறந்தது தன் குடும்பத்தில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் பல இடர்களையும், இன்னல்களையும் சமாளித்து வாய்விட்டு யாரிடமும் சொல்லாமல் மிகுந்த சிரமத்தில் தன் வாழ்க்கை சக்கரைத்தை ஓட்டி வரும் நபர்களுக்கு/குடும்பகளுக்கு பொருளாதார வசதிபடைத்தவர்கள் தாமாகவே முன்வந்து இது போன்றோர்களை இனம் கண்டு அவர்கள் வீடு சென்று கொடுத்து உதவுவதே சாலச்சிறந்ததும் மேன்மையானதாகவும் இருக்கும்.

வருடத்தில் நாம் நம் பொருளாதாரத்தை முறையே கணக்கிட்டு வீட்டு வாசலுக்கு எங்கிருந்தோ பல வேசமிட்டு வரும் அந்நியர்களுக்கு/முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பங்கிட்டு கொடுத்து வருவதில் நம் சமுதாயத்தின் ஏழ்மை ஒரு போதும் ஒழியப்போவதில்லை அதனால் எவ்வித பயனும் கிடைக்கப்போவதில்லை.

நேரடியாக சென்று கொடுக்க இயலாதவர்கள், அதற்கு (வாங்க/கொடுக்க) வெட்கப்படும் நபர்கள் உரிய நபரின் பெயர் குறிப்பிட்டு நம்மூரின் பொது ஸ்தாபனமான பைத்துல் மால் மூலம் கொடுத்து இம்மை, மறுமைக்கான எல்லா நன்மைகளையும், பலன்களையும் அடைந்து கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்.


முன்பெல்லாம் பிச்சைக்காரர்களைப்பார்த்தால் இனம் புரியாத இரக்கம் தானாகவே வரும். ஆனால் இன்று அவ்வாறு வருவதில்லை. மாறாக அவர்களின் நடவடிக்கைகள் எரிச்சலைத்தான் வரவைக்கின்றது. இதில் நாம் மிகுந்த கவனம் செலுத்தி இது போன்ற போலிப்பிச்சைக்காரர்களை இனம் கண்டு அவர்களுக்கு உதவக்கூடாது.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

வாங்க அன்பு சகோதரர்களே.

உங்கள் அனைவரின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

// Naina Mohamed கூறியது... முன்பெல்லாம் பிச்சைக்காரர்களைப்பார்த்தால் இனம் புரியாத இரக்கம் தானாகவே வரும். ஆனால் இன்று அவ்வாறு வருவதில்லை. மாறாக அவர்களின் நடவடிக்கைகள் எரிச்சலைத்தான் வரவைக்கின்றது. இதில் நாம் மிகுந்த கவனம் செலுத்தி இது போன்ற போலிப்பிச்சைக்காரர்களை இனம் கண்டு அவர்களுக்கு உதவக்கூடாது.//

சரியாக சொல்லப்பட்ட கருத்து.

// மு.அ. ஹாலித் கூறியது... பிரமான மற்றும் மேற்குடி சமுதாய மக்கள் வாழும் இடங்களில் பிச்சைகார ஒழிப்பை அரசே காவல் துறைமுலம் முன்னின்று நடத்திவருகின்றது.//

நம்முரில் இது இவைகளை தடுக்க சமூக அமைப்புகள் பிரச்சாரம் செய்தால், சிலருக்கு பிச்சை எடுப்பவர்களுக்கு கொஞ்சமாவது அச்சம் ஏற்படுத்திலாமே.

Yasir said...

//அதற்கு (வாங்க/கொடுக்க) வெட்கப்படும் நபர்கள் உரிய நபரின் பெயர் குறிப்பிட்டு//சகோ.நெய்னாவின் கருத்துடன் நானும் உடன் படுகிறேன்...எத்தனையோ ஏழைகள் கை நீட்டி வாங்க வெட்கப் பட்டு கொண்டு வீட்டில் இருந்து வெதும்பி கொண்டு இருக்கீறார்கள்..நம்முடைய உதவிகள் அவர்களுக்கு தான் போய் சேர வேண்டும்...சட சட நோட்டுக்கட்டை கையில் வைத்துக்கொண்டு நோன்பு 27 லாம் கிழமை கண்டவர்களுக்கேல்லாம் கொடுத்து பகட்டு காண்டும் அறிவு ஜீவிகள்..இதை மாதிரி ஜீவன்களை அறிந்து உதவ வேண்டும்...உங்களின் செல்வம் & சுகமும் இதனால் மட்டுமே கூடும்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//சட சட நோட்டுக்கட்டை கையில் வைத்துக்கொண்டு நோன்பு 27 லாம் கிழமை கண்டவர்களுக்கேல்லாம் கொடுத்து பகட்டு காண்டும் அறிவு ஜீவிகள்..இதை மாதிரி ஜீவன்களை அறிந்து உதவ வேண்டும்...உங்களின் செல்வம் & சுகமும் இதனால் மட்டுமே கூடும்
//

அல்லாஹ்வுக்காக ஜக்காத் கொடுப்பவர்கள் இம்மையிலும், மறுமையிலும் உண்மையான பணக்காரர்கள் தான்.

Unknown said...

by yousuf
தேவைக்கு அதிகமாக பிச்சை எடுப்பவர் கியாமநாளில் முகதில் சதையில்லாமால் எழுப்பப்படுவான் (Hdhis)

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு