Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

+2 தேர்வு முடிவுகள் 6

அதிரைநிருபர் | May 09, 2011 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்.

2010-2011ம் ஆண்டுக்கான +2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நா‌ட்டி‌ல் கட‌ந்த மார்ச் மாதம் நட‌ந்த ‌பிளஸ் 2 தேர்வை 7.75 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதின‌ர். இதி ‌‌ல், மாணவர்கள் 3 லட்சத்து 36 ஆயிரம் பேரும், மாணவிகள் 3 லட்சத்து 63 ஆயிரம் பேரும், தனித் தேர்வர்கள் 57 ஆயிரம் பேரும் அடங்குவர்.

இந்நிலையில் ‌பிள‌ஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9 ம‌ணி‌க்கு அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி வெ‌ளி‌‌யி‌ட்டார்.

இதி்‌‌ல் ஓசூரை சே‌ர்‌‌ந்த மாண‌வி ரேகா 1190 ம‌தி‌ப்பெ‌ண் பெற்று தமிழகத்திலேயே முதலிடத்தை பெற்று உள்ளார்.

க‌ள்ள‌க்கு‌றி‌ச்‌சி பார‌தி மெ‌ட்‌ரிகுலேச‌ன் மாணவ‌ன் வே‌ல்முருக‌ன் 1187 ம‌தி‌ப்பெ‌ண் பெ‌ற்று 2வது இட‌த்தை பெ‌ற்று‌ள்ளா‌ர்.

1186 ம‌தி‌ப்பெ‌ண்க‌ள் பெ‌ற்ற 4 பே‌ர் 3வது இட‌த்தை ‌பிடி‌த்து‌ள்ளன‌ர். நெல்லை எஸ்.ஜெ.எஸ்.எஸ்.ஜெ பள்ளி மாணவி வித்ய சகுந்தலா, பெரியகுளம் ரகுநாதன், நாமக்கல் சிந்துகவி, ஓசூர் பி.எஸ்.ரேகாவும் 3வது இடத்தை பிடி‌‌த்து‌ள்ளன‌ர்.

நம் அதிரையில் உள்ள பள்ளிகளின் தேர்வு முடிவுகள் உங்கள் பார்வைக்காக.



வழக்கம் போல் நம்மூர் பள்ளி மாணவ மாணவியரும் 1000 மார்க்குகளுக்கு மேல் வாங்கி சாதனை படைத்துள்ளார்கள்.

வெற்றிபெற்ற மாணவ செல்வங்களுக்கு நம் அதிரைநிருபர் குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் நிறைய படித்து பெற்றோர்களுக்கும், சமுதாயத்துக்கும், நம் நாட்டிற்கும் நற்பெயர் பெற்றுத்தர வல்ல இறைவனிடம் து ஆ செய்கிறோம்.

நன்றி: Media Magic Adirai, SIS computer Adirai, Thatstamil.
-- அதிரைநிருபர் குழு

6 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !

மேலும் வெற்றிகள் தொடர்ந்திட எங்கள் துஆ என்றும்... !

தமிழகத்திலேயே முதலிடம் பெற்ற மாணவிக்கும் நமது கா.மு.மே.பள்ளியில் (பெண்கள்) முதலிடம் பிடித்த மாணவிக்கும் 47 மதிப்பெண்கள் வித்தியாசம் மட்டுமே ! வரும் வருடங்களில் இதனையும் தாண்டி முதலிடம் என்ற எங்கள் கனவை நினைவாக்க இளம் மாணவ மாணவிகளை வேண்டுகிறோம் !

அனைத்து மாணவர்களின் பெற்றோர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்...

Yasir said...

மாஷா அல்லாஹ் ..அனைவருக்கும் துவாக்கள் வாழ்த்துக்கள் ...பெண்களின் மதிப்பெண்கள் புருவத்தை உயர்த்த வைத்தது ...பெண்களின் முன்னேற்றம் சமுதாயத்தின் முன்னேற்றம்....இந்த சகோதரிகளில் ஒருவரை நமதூர் மருத்துவராக உருவாக்க முயற்ச்சி செய்யவேண்டும்....

sabeer.abushahruk said...

லாரல் பள்ளியிலும் நம்மூர் பிள்ளைகள் அதிகம் படிப்பதால் அந்த ரிஸல்ட்டையும் பதிந்தால் தேவலாம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//லாரல் பள்ளியிலும் நம்மூர் பிள்ளைகள் அதிகம் படிப்பதால் அந்த ரிஸல்ட்டையும் பதிந்தால் தேவலாம். //

விரிவான அதோடு விரைவான தகவல்கள் இதுவரை கிடைத்திருக்கவில்லை, சீக்கிரம் வரும் பட்சத்தில் அப்படியே இங்கே பதிந்திடலாம் இன்ஷா அல்லாஹ் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

காதிர் முகைதீன் கல்வி ஸ்தாபனங்கள் முன்னனி!
இமாம் ஷாஃபி பள்ளியின் தரம் குறைவாக தெரிகிறதே!

அடுத்தாண்டு இதே இடத்தில் நம்மூரு நம்மவர்களின் மாண(வி)வர்கள் மாநிலத்திலேயே முதலிடத்தில் வந்த செய்தி, களம் அமைத்து கலைகட்ட துஆ செய்வோம்.இன்ஷா அல்லாஹ் ஆமீன்.
அதுவரை விழிப்புணர்வு கொடுப்போம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

பிளஸ் 2 தேர்வில் வெற்றிப்பெற்ற அதிரை சகோதரர் சகோதரிகள் அனைவருக்கும் என் அன்பார்ந்த பாராட்டுக்கள்.

முதல் மூன்று பதிப்பெண்கள் எடுத்த சகோதரிகளும் சகோதரர்களும் ஊருக்கும் நம் சமுதாயத்துக்கும் பயன் தரும்விதமான மேல் படிப்புகளை எடுக்குமாறு மிக அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அடுத்த 5 ஆண்டுகள் டாக்டராகவோ, அல்லது ஆளுமைதுறையிலோ இன்று வெற்றிப்பெற்றவர்கள் வருகாவர்கள் என்ற நம்பிக்கை இவர்களின் மதிப்பெண்களை பார்த்தவுடன் தெரிகிறது.

பெற்றோருக்கும், சமுதாயத்துக்கும் நம் ஊருக்கும் நற்பெயர் தேடித்தந்த இந்த மாணவ செல்வங்களை மீண்டும் ஒரு முறை பாராட்டியே ஆகவேண்டும்.

வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் மார்க்க அடிப்படையில் நம் கல்வியையும், செல்வத்தையும் தேட உதவி செய்வானாக...

அல்லாஹ் போதுமானவன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு