Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வாழ்க்கை ! 25

ZAKIR HUSSAIN | May 10, 2011 | ,

சிலருக்கு தற்பெருமை அடிப்பதில் பி.ஹெச்.டி பட்டம் கொடுக்கலாம். இதில் பெண்களும் விதிவிலக்கல்ல. தற்பெறுமை அடிக்கும் எல்லா விசயங்களும் "நிரந்தரமல்ல" எனும் விழிப்புணர்வு இருந்து விட்டால் தற்பெறுமை தானாக ஒழிந்து விடும். எனக்கு தற்பெறுமை கிடையாது என்பதும் ஒரு தற்பெறுமைதான். இந்த ஈகோவுக்கு சாப்பாடு போட்டு வெத்திலை மடித்து தருவதற்க்கென்றே சிலர் பக்கத்தில் இருந்து கோரஸ் பாடிக்கொண்டிருப்பார்கள். ஈகோவில் டேஸ்ட் கொண்டவர்களும் எலி தன்னால் போய் கூண்டில் மாட்டிக்கொள்வது போல் போய் மாட்டிக்கொள்வார்கள்.




இந்த பெண்கள் [ சீனப்பெண்கள் ] தன் மகன் டாக்டர் என்றும் வக்கீல் என்றும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள் என பீத்தினாலும் ஒரு தாய் மட்டும் தன் மகனைப்பற்றி பீத்துவதற்க்கு ஒன்றுமில்லை என்றாலும் அந்த சாதாரண மகன் தன்னை ' கேமரன் மலை' க்கு அழைத்துபோக வந்திருக்கிறான் என்பதை பாசத்துடன் சொல்லிவிட்டு தன் மகனின் அரவணைப்பு தனக்கு இருப்பதை அழகாக உணர்த்திய விளம்பரப்படம்.

அன்புக்கு முன்னால் அனைத்தும் ஜூஜுபி என்பது – நீதி



கேமரன் மலை எப்படி இருக்கும் என்பதற்க்கு ஒரு சேம்பில் படம் மேலே இணைத்திருக்கிறேன்... [லேசா குளிருதா இந்த வெயில்ல்லெ']
===================================


உலகம் எவ்வளவுதான் மாற்றம் அடைந்தாலும் நாம் நமது வேர்களை விட்டு விலகிவிடமுடியாது என்பதை உணர்த்திய விளம்பரப்படம். இதில் உள்ள பாட்டி இப்போது உயிருடன் இல்லை. சரி இதற்க்கும் நமக்கும் [முக்கியமாக நம் ஊரை சார்ந்தவர்களுக்கும் என்ன கனெக்ஷன்.. இருக்கிறது ]

# மலேசியா / அமெரிக்கா போன்ற நாடுகளில் குடியேறிய நம் ஊர் மக்கள் தொலைத்தது...உறவினர்களுடனான அன்பை பெரியவர்கள் மட்டும் ஊரில் உள்ளவர்களைப்பற்றி நினைத்தால் அல்லது பேசினால் போதாது... வளரும் பிள்ளைகளும் தெரிந்து இருக்க வேண்டும்.இதில் சென்னையில் குடியேரியவர்களும் அடங்கும். இவர்களின் ப்ளஸ் பாயின்ட் நினைத்தால் ஊர் போய் வரலாம்..ஆனால் நினைக்கிறோமா அல்லது ஊரில் போய் சென்னையில் உள்ள வசதிகள் இல்லையே என்று 2 - 3 நாட்கள் ஊரில் தங்க யோசிக்கிறோமா என்பதை நாமே முடிவு செய்து கொள்ள வேண்டியது.


பிள்ளைகள் எல்லாம் தெரிந்து வைத்திருப்பது சப்ஜெக்ட் / கேட்ஜட் / சாஃப்ட் வேரின் எக்ஸ்டன்ஷன் / மொத்தமாக ஒரு ஸ்க்ரீனில் ஒரு பிரச்சினையை வெகு நேர்த்தியாக கையால்பவர்கள் நிஜ வாழ்க்கையில் 'பிரைல் சிக்கன் ' மாதிரி ஒடாமல் நிற்கிறார்கள்.

இதன் தாக்கம் இன்னும் 15 - 20 வருடத்தில் கடுமையாக இருக்கும். பெரிய குடும்பத்தில் பிறந்தாலும் அனாதையைபோல் வாழ்வார்கள். என்ன செய்யலாம்....ரொம்ப சிம்பிள்...குர் ஆனும் , ஹதீசும் போதும்..எல்லா நோய்க்கும் ஒரே மருந்து என்பது இதில் தான் உண்மை.

- ZAKIR HUSSAIN

25 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அசத்தல் காக்கா.... வாழ்கையை ஒரே வரியில் சொன்னவர்கள் நிறைய இருப்பார்கள் அனால் நீங்கள் சொல்லிய முதுமையின் பதுமை சூப்பர் !

சொல்லித் தெரிவதில்லை கிள்ளியெடுக்கும் உறுத்தல்கள் !

மனிதம் வாசிக்க வரிகளால் வருடி வரவேற்பவற்பதில் நீங்கள் என்றுமே முன்னே !

Meerashah Rafia said...

'நாம் காணும் பல காட்சிகளின் தொகுப்புதான் வாழ்கை' என்று என் முந்தைய கட்டுரையில் எழுதி இருந்தேன்..சகோ.ஜாகிர் அவர்கள், கண்ட காட்சிகளை கட்டுரையாகவே எழுதியுள்ளாரே!!

சீனர்கள் மற்றும் ஜப்பானியர்களின் குறும்படங்களை பார்த்தால் சிலநேரம் பலருக்கு கண்ணீர் அருவிபோல் கொட்டும்..குடும்ப பிணைப்பை ஆழமாக சொல்லக்கூடியவர்கள்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உறவினர்களின் அன்பு பற்றிய எதிர்கால எச்சரிக்கை,அதற்குரிய மருத்துவத்தையும் அது பற்றிய சில விளக்க காட்சிகளையும் மகத்துவமாக விளக்கியுள்ளார் மலேஷிய மருத்துவர் ஜாஹிர் காக்கா.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். படம் வரைந்து பாகம் குறின்னு படிக்கும் காலத்தில் கேட்டோம் .இப்ப படத்தை பார் சொந்தத்தை பேணுங்கள் என்று சொல்லும் அளவிற்கு சொந்தம் நமக்குச்சொந்தம் இல்லாமல் அன்னியமாகி புண்ணியம் அழிந்து வருகிறது. சொந்ததின் கண்ணியம் காக்க மாமறையாம் திருகுரானைத்தவிர வேறு எந்த புத்தகமும் பொதுமறையாகாது என்பதை தெள்ளத்தெளிவாக விளங்கவைத்துள்ளார் சகோ.ஜாஹிர்.எப்பொழுதும் போல் செம கலக்கல் போங்க.

Riyaz Ahamed said...

சலாம்
எதார்த்தமான நிகழ்கால நிகழ்வுகளை விளக்கி எதிர்காலத்திற்கு வழி தெரிவித்த ஜாகிருக்கு ஒரு ஓஓஓ ....குட் கண்ணா

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பின் நினைவூட்டல் கட்டுரைகள் பல தந்த சகோ. ஜாஹிருக்கு எம் வாழ்த்துக்களும், து'ஆவும்.


பெற்ற பிள்ளைகளை வெறுத்து அன்றாடம் மரணத்தை எதிர்பார்த்திருக்கும் வீட்டுப்பெரியவர்களை ஆங்காங்கே காணும் பொழுது இன்று அடிமைகள் போல் ஆன இவர்கள் இல்லாமலா அதிகாரம் செலுத்தும் அவர்கள் வந்து விட்டார்கள்? என வேதனைப்பட்டு நமக்கு நாமே கேள்வி கேட்க வேண்டியுள்ளது இன்றைய சூழ்நிலை.

இது போன்ற வேதனையான நிகழ்வுகளால் மனிதன் பள்ளியில் தன் உன்னத மார்க்கத்தை பின் வரிசையில் (சஃப்) நிற்க வைத்து விட்டு அவன் மட்டும் முன் வரிசையில் (சஃப்) தொழுது வருகிறானோ? என கேட்கச்சொல்கிறது.

பெரிய‌வ‌ர்க‌ளின் து'ஆ கிடைக்காமல் போனாலும் அவ‌ர்க‌ளின் ப‌த்வா கிடைக்காம‌ல் இருந்தாலே ந‌ம் வாழ்வின் பெரும் சாத‌னை தான்.

இஸ்லாமும் ம‌னித‌நேய‌மும் ஒட்டிப்பிற‌ந்த‌ இர‌ட்டைக்குழ‌ந்தைக‌ள் தான்.


மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

sabeer.abushahruk said...

அசத்தலான ஆக்கம்! நெகிழவைக்கும் காட்சிகள்! உருக வைக்கும் பொருள், சிந்திக்க வைக்கும் கேள்விகள் என பயனுள்ள இடுகை பக்குவப்பட்ட கைகளால்...

Unknown said...

No Words for the first video...awesome....Reality is better than anything.....

அப்துல்மாலிக் said...

இப்போதுல்ல வாழ்கை நியதியாக கூட்டுக்குடும்பத்திலிருந்து விலகி இருப்பது கட்டாயமாக்கப்பட்டுடுச்சி, குழந்தைகளும் தனிமையில் வளரும் சூழ்நிலை, இதன் மூலம் அவர்களின் தெளிவான தாய்மொழி பேச்சுக்கூட லேட்ட் ஆகுது, இது மற்ற நாட்டவரும் ஒப்புக்கொண்ட உண்மை

Shameed said...

வாழ்க்கையை படம் காட்டி விளக்கியவிதம் அருமை,

Shameed said...

எதிர் கால வாழ்கையை எளிமையாகவும் நையாண்டியாகவும் சொன்ன செய்திகள் மனதில் பக்காவாக பதிந்தது

தொலை நோக்கு பார்வை என்றால் என்ன என்பதற்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டு இந்த கட்டுரை

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Sஹமீத் காக்கா : நாம தொலை நோக்கு பற்றி பேசுகிறோம் இன்னும் இருக்கிறார்கள் சிலர் முதியவர்களை தொல்லை நோக்குப் பார்வையுடன் பார்ப்பதுதான் வேதனையான விஷயமே !

Yasir said...

லண்டனின் அழகிய காலைப்பொழுதில் உங்கள் ஆக்கத்தையும் இணைக்கப்பட்ட அன்பையும்,அரவணைக்கும் பண்பையும் உணர்த்தும் வீடியோவையும் பார்க்கும் போது கேமரன் மலைக்கே சென்ற உணர்வை ஏற்படுத்தியது

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

மிக அருமை ஜாஹிர் காக்கா.. மனதை தொட்ட காணொளி. நீங்கள் சொன்ன இறுதி வரியே எல்லா துயரங்களுக்கும் தீர்வு.

பெரியவர்களை அதிகம் நேசிப்பவர்கள் எந்த நாட்டினர் என்பதை சொல்லுங்கள் ஜாஹிர் காக்கா..

ZAKIR HUSSAIN said...

Dear Abu Ibrahim,

is that possible to make the cameron highland tea estate photo a little bigger than that? may be 4R size

Zakir Hussain

ZAKIR HUSSAIN said...

//பெரியவர்களை அதிகம் நேசிப்பவர்கள் எந்த நாட்டினர் என்பதை சொல்லுங்கள் ஜாஹிர் காக்கா.. //

To Bro Thajudeen,

வ அலைக்கும் சலாம்

நான் பார்த்த வரையில் எல்லா நாட்டினரும். யாருக்கு எதிர்காலத்தின் மீது நம்பிக்கையும், இறைவன் மீது பயமும் இருக்கிறதோ நிச்சயம் பெரியவரகளை மதிப்பார்கள்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

கேமரன் ஆட்சி செய்யும் நாட்டில் பயணத்தில் உள்ள சகோதரர் யாசிரே, பயனம் எப்படி இருந்தது?

sabeer.abushahruk said...

//is that possible to make the cameron highland tea estate photo a little bigger than that? may be 4R size//

ப்பூ... இவ்வளவுதானா? ஜாயிரு, நீ ஒன்னும் ரொம்ப ஃப்லிம் காட்டாதே. இதேமாதிரி காட்சிகள் எங்க கல்ஃப(gulf)லேயும் இருக்கு.

என்ன ஒன்னு, நீ பச்சை பசேலென்று காட்டுரே, இங்கே மஞ்சள் மணலா யிருக்கும் அவ்ளோவ்தான். வேனுன்னா அ. நி. யிடம் சொல்லி நாங்களும் ஃபிலிம் காட்டவா?

ZAKIR HUSSAIN said...

Yes...Shahul sent me Desert area photos...when i saw the photo i felt the same "dehydration" when we were on the way to Jummah in Riyadh Highway...unforgettable heat lah!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

காக்கா மற்றொரு பதிவில் புகப்படங்களைப் பேச வைப்போமா ? அவைகளின் காட்சிகளும் அதனைக் கட்சியாக வடித்தெடுத்த விதமும் பேசினால் எப்படியிருக்கும் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//பெரியவர்களை அதிகம் நேசிப்பவர்கள் எந்த நாட்டினர் என்பதை சொல்லுங்கள் ஜாஹிர் காக்கா.. //

ஜஹபர் சொல்கிறேன்,
எனக்கு தெரிந்தவரை ஜப்பானில் தான் அதிக அன்பும் அரவணைப்பும், அதனால் ஆயுளும் அதிகம்
அங்கே மதத்தை விட மனிதத்துக்கே முக்கியத்துவம் அதிகம்.

crown said...

M.H. ஜஹபர் சாதிக் சொன்னது…
//பெரியவர்களை அதிகம் நேசிப்பவர்கள் எந்த நாட்டினர் என்பதை சொல்லுங்கள் ஜாஹிர் காக்கா.. //

ஜஹபர் சொல்கிறேன்,
எனக்கு தெரிந்தவரை ஜப்பானில் தான் அதிக அன்பும் அரவணைப்பும், அதனால் ஆயுளும் அதிகம்
அங்கே மதத்தை விட மனிதத்துக்கே முக்கியத்துவம் அதிகம்.
-----------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். சரியாக சொன்னீர்கள் நானும் இதை பதியலாம்னு இருந்தேன். ஜப்பானியரிகளின் உயரம் குள்ளம்.உள்ளம் உயரம்.அதானால் மனித துயரம் சிறிது,இயற்கையினால் துயரம்பெறிது. நாம் நல்லவர்களாக இருப்போம். நடப்பது நடக்கட்டும்.அல்லாஹ் பாதுகாப்பான்.

ZAKIR HUSSAIN said...

அன்புடன் கருத்தை பதிந்த என் பாசமிகு சகோதரர்கள் அபுஇப்ராஹிம், தாஜுதீன் , அப்துல் மாலிக் , சாகுல் , மீராஷா, ஜஹபர் சாதிக் , கிரவுன் , ஹார்மி, யாசிர், அனைவருக்கும் நன்றி.

சபீருக்கும் , ரியாஷுக்கும் நன்றி என எழுதினால் எனக்கே நான் எழுதிக்கொள்வதுபோல் தெரிகிறது...[ அந்த அளவுக்கு என் வாழ்க்கையில் ஒன்றிப்போனவர்கள் இருவரும்...சாகுலும் ஏறக்குறைய அப்படித்தான் என்றாலும் என்னைவிட வயதில் சிறியவராய் இருப்பதால் ஒரு ஒப்புக்கு நன்றி]

Anonymous said...

ZAKIR HUSSAIN சொன்னது... :

அன்புடன் கருத்தை பதிந்த என் பாசமிகு சகோதரர்கள் அபுஇப்ராஹிம், தாஜுதீன் , அப்துல் மாலிக் , சாகுல் , மீராஷா, ஜஹபர் சாதிக் , கிரவுன் , ஹார்மி, யாசிர், அனைவருக்கும் நன்றி.

சபீருக்கும் , ரியாஷுக்கும் நன்றி என எழுதினால் எனக்கே நான் எழுதிக்கொள்வதுபோல் தெரிகிறது...[ அந்த அளவுக்கு என் வாழ்க்கையில் ஒன்றிப்போனவர்கள் இருவரும்...சாகுலும் ஏறக்குறைய அப்படித்தான் என்றாலும் என்னைவிட வயதில் சிறியவராய் இருப்பதால் ஒரு ஒப்புக்கு நன்றி]

Thursday, May 12, 2011 7:06:00 AM அன்று

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு