லாஜிக் நேரம் !

யோசிக்கிறார் யோகராஜ்....

கோட்டையில் - அம்மா

கிழக்கே (கொல்கத்தா) - அக்கா

மத்தியில் - மேடம்

தலைநகரில் - ஆண்ட்டி

உச்சியில் - பாட்டி(ல்)

வீட்டில் (எப்பவுமே) - மனைவி ராஜ்ஜியம்


பிறகு ஏன் ஆணாதிக்கம் என்று கம்ப்ளைண்ட் பன்றாங்க!? !

ரோசனை சொல்லுங்க..


- Rafia

11 கருத்துகள்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

நாலா பக்கமும்,வீட்டுக்குள்ளேயும் அவங்க வந்தாச்சுலோ இனியும் யாரு சொல்றது. இனியும் அப்படியொரு பேச்சு வந்தால் மேல் முறையீடுதான்.(ஆணுரிமை வேண்டும், சம உரிமையாவது வேண்டுமென்று தூக்க வேன்டியது தான் கொடியை)அப்பரமும் நீதி கிடைப்பது எட்டாக்கனி,காரணம் மத்தியிலும் ஆதிக்கம் இடிக்குமே!

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

அதானே ! ஆண்பாவம் பொல்லாததுன்னு மு.க.(வும்) சொல்லச்சச் சொன்னார் !

(திஹார்) சிறையில் இடம் வேனாம் வேனாம்னு சொல்லியும் கிடைச்சுடுச்சு இனிமே தலைமையை டெல்லிக்கு மாத்திடலாம்னு யோசிக்கிறாங்காலாம் !

அப்துல்மாலிக் சொன்னது…

//பிறகு ஏன் ஆணாதிக்கம் என்று கம்ப்ளைண்ட் பன்றாங்க!? !//


விடுங்க பாஸ் இப்படி சொல்லியே பழக்கப்படுத்திக்கிட்டாய்ங்க... ஜஹபர் பாய் சொன்னது போல் கொடிய தூக்கிடவேண்டியதுதான்

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

ஆணாதிக்கம் என்று சொல்லிதிரிபும் ஒரிஜினல் பெரியா(ர்) கொள்கையாளர்கள் ஆட்சிக்கு ஆப்பு என்னவோ உண்மை தானே !

Yasir சொன்னது…

நாட்டில் பெண்ணாதிக்கம்...வீட்டில் வல்லரசு ஆதிக்கம்....இந்த ஆதிக்கங்களில் அடங்கி நடந்தால் ஆண்கள் அமைதி பெறலாம்...அதான் அறிவுடமையும் கூட ....கொடிபிடித்துகொண்டு யாரும் கிளம்பி விடாதீர்கள்..சோற்றுக்கு திண்டாட்டம்தான்:)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

//ஏன் ஆணாதிக்கம் என்று கம்ப்ளைண்ட் பன்றாங்க!? !//
சொச்சமாகவாவது இருக்கும் ஆணின் ஆதிக்கம் முழுவதும் பெறுவதற்கான தீவிரவாதிகளின் ரகசிய திட்டமாகவும் இருக்கலாம்.

நம்ம செய்ற பொழப்பையும் கையகப்படுத்துவதறகான சதியாகவும் இருக்கலாம்.

நீங்க தான் எல்லாம் என்று சொல்லிக்கொண்டே எதையுமே தானே செய்யும் மயில்களாகவும் இருக்கலாம்.

பேருக்காவது ஆணாதிக்கம் தாங்க முடியலைடா என்று சொல்லிக் கொண்டே இருந்தால் தான் இப்போது இருக்கிற அதிகப்படியான உரிமைகளையும் தக்க வைக்க முடியுமென்ற என்ற உள் நோக்கமாகவும் இருக்கலாம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

கொடி பிடிக்க பொடி போட்டு எழுதலாம் இருந்தாலும் நெடி ஏறிடுமோன்னு தயக்கமா இருக்கே !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

// நெடி ஏறிடுமோன்னு தயக்கமா இருக்கே!//
தயக்கம் தான் அங்குட்டு ஆதிக்க நெடி ஏறிடுச்சு!

crown சொன்னது…

அபுஇபுறாஹீம் சொன்னது…

கொடி பிடிக்க பொடி போட்டு எழுதலாம் இருந்தாலும் நெடி ஏறிடுமோன்னு தயக்கமா இருக்கே !
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.
பிறகு வெடி வைய்(ப் -wife)பாங்க வீட்ல பின் ஒரே வேட்டுதான்(வெடிக்கு மறு பெயர் வேட்டு என்பது அறிவது) நம் நிலைமை கேட்டுக்கு வெளியேதான்.தயவுசெய்து போட்டு கொடுத்துறாதியோ பின் சகோ.யாசிர் சொன்னமாதிரி சாப்பாடுக்குத்திண்டாட்டம் தான்(எல்லா சாப்பாடும்தான்)பந்திக்கு கத்திரி.கத்திரி வெயில் போல் நம் மேல் காயும் பின் எல்லாத்துக்கும் காய வேண்டியதுதான்.கத்திரி போடுவது நம் வீட்டி
ஸ்திரி! திறித்து விடவும் வீட்டுக்கு அக்கம் பக்கம் ஆளும் இருக்கும். திரி கொழுந்து விட்டு எரிந்தால் ராத்திரி நம் பாடு தெருவில் தான்.ஆகவே தயவு செய்து பொடி வைக்கிறேன் பேசுறேன் எழுதுறேன்னு கிளம்புறத விட்டு வழக்கமாய் குனிந்து போகவும் அதுவே விவேகம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

கிரவ்ன்(னு): சரி(டா)ப்பா ! கொடி யிலும் பொடி யிலும் "டி" இருப்பதால் அமைதியாயிட்டேன்...

ஒன்னே ஒன்னு மட்டு சொல்லிடுறேண்(டா)ப்பா, கொடி(யிடை)யால் எப்பிரச்சினையும் வேண்டாமென்று தம்பியே சொல்லிட்டான் அண்ணாவும் அமைதியாயிட்டாராம் !

Shameed சொன்னது…

//பிறகு ஏன் ஆணாதிக்கம் என்று கம்ப்ளைண்ட் பன்றாங்க//


இத சொல்லி சொல்லியோ நம்மளை அமுக்கி வச்சிடாங்க!!!