காலம் !

கற்காலம் தொடங்கி
நெற்களம் செழித்த
பொற்காலம் வழியே
தற்காலம் வாழும் நாம்
கற்கலாம் அனைத்தும்
நிற்கலாம் நிலைத்து!

பிறந்த கால மெலாம்
இறந்த கால மாக
எதிர் கால மென்றும்
புதிர் கால மெனில்
நிகழ் கால மொன்றே
நுகர் கால மன்றோ

அன்னையின் உள்ளே
கருவறை காலம்
பூமியின் உள்ளே
மண்ணறை காலம்
கசடற கற்க
சொற்ப காலம்
கற்றபடி நிற்க
அற்ப காலம்!

இக்காலம் யாவும்
தம் கால மென்று
எக்காள மிடும்
எகத் தாளம் வேண்டாம்
முக் கால முணர்ந்ததாய்
பொய்க் கோலம் பூண்ட
அக் கால முனிகளும்
பல கால மொன்றும்
வாழ்ந் தாண் டதில்லை!


இளவேனிற் காலமும்
இலையுதிர் காலமும்
அடைமழைக் காலமும்
கடுங்கோடை காலமும்
முன்பனிக் காலமும்
வன்குளிர் காலமும்
சகித்தால் மட்டுமே
வாய்க்கும் அந்த
வசந்த காலம்!

வாய்க் கின்ற காலத்தை
துய்க் கின்றபோது
மெய் யான செயலை
செய் கால முழுதும்!

மண்ணறை முடிவின்
பின்னொரு காலம்
கைக்காலம் கழித்ததை
கணக்கிடும் காலம்

அக் காலம் வந்தால்
விடியற் கால முதல்
வாழ்ந் திருந்த காலம்வரை
பழகிக் கழித்த
உறவினரும் உற்றாரும்
தம் கோலம் கண்டு
திகி லுற்றுத் திரிவர்!

புவிக் காலம் தன்னில்
மெய்க் கோலம் கொண்டோரே
சுவனத்தில் காலத்தை
சுகமாகக் கழிப்பர்!

- சபீர் abuShahruk

20 கருத்துகள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

காலம் கண்டு - இக்
காலம் சொல்லுதே
காலமென்ற பாடம் !

பிடித்த வரிகளிள் டக்குன்னு சுட்ட வரிகள் !

//அன்னையின் உள்ளே
கருவறை காலம்
பூமியின் உள்ளே
மண்ணறை காலம்
கசடற கற்க
சொற்ப காலம்
கற்றபடி நிற்க
அற்ப காலம்!//

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

அந்த 'கலாம்' பதவிக்கு அலங்காரம்
இந்த 'கவி'(ஞர்) காலத்துக்கே அலங்காரம்
ஆக இது 'களம்' கட்டப்போகிறது
அந்தக் கிரீடத்தின் இலக்கணத்துடன்........

crown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.கற்களை கொண்டு தீ மூட்டி வாழ்ந்த கற்காலம் தொடங்கி பின் மெல்ல, மெல்ல நாகரிகம் வளர்ந்து நாகரிகத்தின் உச்சத்தில் வாழும் காலம் நம் காலம். இந்த காலத்தில் நமக்கு வேண்டியதை நாம் நம் பகுத்தறிவின் படி பெறக்கூடிய அளவில் முன்னேறி இருந்தாலும். கடந்த காலங்களை கையில் வைத்திருக்க முடியாது. அதுபோல் எதிர் காலமும் எப்படி அமையும் என்பதை வல்ல நாயன் அல்லாஹ்வைத்தவிர உணர முடியாது.ஆகவே வாழும் காலமான நிகழ் காலத்தில் பருவத்தே பயிர் செய்து, களை நீக்கி சண்டை சச்சரவு இல்லாமல் வாழ வேண்டும்.

crown சொன்னது…

நேற்றய நிகழ் காலம் இன்றைய இறந்த காலம். இன்றயை நிகழ்காலம் நாளைய இறந்த காலம்.எதிர்கால என்பது வரும் வரை நிச்சயமில்லை. அப்படி வந்தாலும் நாளைய எதிர்காலமும் பின் வரும் காலத்தின் ஒரு காலத்தின் இறந்த காலமே! அது தான் வாழ்கையின் எதார்த்தம் நிலையானது ஏதும் இல்லை. வல்ல ரப்பு அல்லாஹ்வைத்தவிர்த்து.இதில் அன்னையின் வயிற்றில் சிலகாலம் பின் புவியின் மேலே சில காலம் அதில் கற்றது கையளவு கல்லாளதது உலகளவு .இதில் எல்லாவற்றையும் கற்பதும் இயலாதது.அறிந்தவற்றைதெளிவாகத் தெரிதெம் அதன் படி நல் வழ் நடப்பதுமே பகுத்தறிவு.

crown சொன்னது…

கணினியில் சிறு கோளாறு சரி பார்த்த பின் தொடருகிறேன் அதுவரை காலம் கனியட்டும் .

அதிரைநிருபர் சொன்னது…

சிறிய தடங்கலுக்கு பிறகு பின்னூட்டமிடும் வசதி பிளாக்கார் வலைத்தளங்களில் தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது.

இப்போது பின்னூட்டமிடலாம்..

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

இன்னைக்கு என்னமோ தனிக் குடிலில் (blogger) சி.பி.ஐ. புகுந்த மாதிரியாயிடுச்சு !!! மக்கள் யாரையுமே உள்ளே விடவேயில்லை...

ஒருவழியா சென்னை சூப்பர்கிங்க்ஸ் ஃபைனலுக்கு வந்தாச்சாம்.... இனிமே வரவேண்டியது கே.கே.ஆர். கல்கத்தா வரனும் !! வருமா ?

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

பின்னூட்ட படையெடுத்து திரும்பிச் செல்லாமல் ஆங்கங்கே இளைப்பாறும் வீரர்களே ! இதே.. கூகிலானந்தா ஒரு வழிப் பாதையை திறந்து வைத்திருக்கிறார் அங்கே முட்டி மோதித்தான் நானும் உள்ளே வந்தேன்... அவய்ங்க ஆசிரமத்தில் ஏதோ நடக்குது அதான் கதவைப் பூட்டி வைப்பதும் திறப்பதும் நிகழ்கிறது... சீக்க்ரத்தில் சரியாயிடும்னு நம்புவோமாக !

ZAKIR HUSSAIN சொன்னது…

தமிழில் டைப் செய்ய "உமர் தமிழ்" பகுதியை திறந்தால் ஏதோ ரைஸ் மில்லில் நெல்லுகாயப்போட இருக்கும் பெரிய இடம் மாதிரி பெரிய ஏரியாவாக இருக்கிறது. ஆங்கிலம் / தமிழ் இரண்டுக்கும் இடையில் உள்ள வரப்பை யாரோ வெட்டிப்புடானுக...சுத்துப்பட்டி 18 பட்டிக்கும் ஆள் சொல்லிவிட்டாச்சு...வெட்டருவா , வேள்கம்போட ஆளுக வர்ராணுகளானு பார்த்துசொல்லுங்க....

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

காக்கா: இப்பததனே வயல் பக்கம் போயிட்டு வருகிறேன் நல்லாத்தானே இருக்கு வரப்பெல்லாம்... கூகிலானந்தா ஆசிரமம் கதவு மூடியதும் அங்கேயே தூங்கிட்டீங்களா ?

crown சொன்னது…

இக்காலம் யாவும்
தம் கால மென்று
எக்காள மிடும்
எகத் தாளம் வேண்டாம்
முக் கால முணர்ந்ததாய்
பொய்க் கோலம் பூண்ட
அக் கால முனிகளும்
பல கால மொன்றும்
வாழ்ந் தாண் டதில்லை!
-------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். காலம் எல்லாம் அல்லாஹ்வின் கையில் அதை மறந்து நான் தான் , எனக்கே எல்லாம் சொந்தம்.என் ஆட்சியே இங்கே என கெக்கலித்து, அகம்காரம் கொண்டிருந்தவர் எல்லாம் எங்கே? எல்லாம் அறிந்தவன் நான் இந்த உலகை காக்க வந்தவன் இப்படி கூறித்திரிந்தவரெல்லாம் எங்கே? எல்லாம் மறையக்கூடிய மாயைதான் எனவே ஆனவம் கொண்டு திரியாதீர் அல்லாஹ்வை வணங்கி அடிப்பணிந்து வாழுங்கள்.

crown சொன்னது…

இளவேனிற் காலமும்
இலையுதிர் காலமும்
அடைமழைக் காலமும்
கடுங்கோடை காலமும்
முன்பனிக் காலமும்
வன்குளிர் காலமும்
சகித்தால் மட்டுமே
வாய்க்கும் அந்த
வசந்த காலம்!
-----------------------------------------------------------------
இயற்கையில் மாறும் காலனிலை சில நேரம் நம் உடலுக்கு உகந்ததாக இருக்காது. கேடு விளைவிக்கலாம்.சில நேரம் விருப்பமானவையாக அமையலாம் இப்படி கால நிலை மாறிவரும் அந்த வேளையில் பொருமையை கடைபிடித்தால் நன்மை தரும் வசந்தம் வரும் இடு கால நிலைக்கும் நம் வாழ்வின் நிலைக்கும் பொருந்தும் உவமானம் அருமை கவிஞரே(எங்கே மர்மயோகி என்பவர் ஜால்ராவில் இதை சேர்த்தால் அது உங்கள் புரிதலின் தவரு).

crown சொன்னது…

வாய்க் கின்ற காலத்தை
துய்க் கின்றபோது
மெய் யான செயலை
செய் கால முழுதும்!

----------------------------------------------------
நன்மையை ஏவி தீமையை தடுப்பீர். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பொக்கிசமான வாழ்வில் உன்மையை நிலைனாட்டி நன்மையை பெருவீர். நமக்கு தொழுகை வைக்கப்படும்முன் நான் தொழுது நன்மை பயிர் அறுவடை செய்வோம்.

crown சொன்னது…

மண்ணறை முடிவின்
பின்னொரு காலம்
கைக்காலம் கழித்ததை
கணக்கிடும் காலம்

அக் காலம் வந்தால்
விடியற் கால முதல்
வாழ்ந் திருந்த காலம்வரை
பழகிக் கழித்த
உறவினரும் உற்றாரும்
தம் கோலம் கண்டு
திகி லுற்றுத் திரிவர்!

புவிக் காலம் தன்னில்
மெய்க் கோலம் கொண்டோரே
சுவனத்தில் காலத்தை
சுகமாகக் கழிப்பர்!
----------------------------------------------------------------

நல்ல செயலை மேன்மேலும் விதைத்து,பாவமன்னிப்பு கேட்டு சிந்தும் கண்ணீரில் மேலும் அந்த பயிர் வளர்த்து, இப்புவியில் உயிர் பிரிந்ததும் , வல்ல நாயனால் மறுபடியும் உயிர்பித்து நன்மை அருவடை செய்து சுவர்கவீடு போய் சேர முயல்வோம், நம்மையை மேலும் பயில்வோம்.சுவர்கத்தின் சாவிக்காக இறைவனைதொழுது,தொழுது கழிப்போம் இந்த புவியின் பொழுதை. அல்லாஹ் எல்லாருக்கும் சுவர்கவீடு தர அருள்வானாக ஆமின். நல்ல தொரு கவிதை தந்த கவிஞருக்கு எல்லா வளமும் அல்லாஹ் அருள்வானாக. இப்படி விழிப்புனற்வு கவிதையை மற்ற சான்றோரும் இயற்றவும்.எங்களுக்கு எழுதுங்கள் .

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

//ZAKIR HUSSAIN சொன்னது… ஆங்கிலம் / தமிழ் இரண்டுக்கும் இடையில் உள்ள வரப்பை யாரோ வெட்டிப்புடானுக...//

இது மொழி சண்டையா ஜாதி சண்டையாண்டு தெரியல ஜாஹிர் காக்கா.. பாடா படுத்துது.. இதுக்குப்போய் 18 பட்டிக்கும் சொல்லிப்புட்டியலே. இந்த செய்தியை மலையாளி கிட்ட சொல்லியனுப்புனியலா?

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்,

சபீர் காக்கா,

இரண்டு நாளா இந்த பதிவை படித்து கருத்திடலாம் என்றிருக்கும் போது, பிளாக்கர் ஸ்ரைக் பண்ணிடுச்சு.

தங்களின் கவிதையை படித்துவிட்டு கிரவுனுரையை படித்தவுடனே முழுமையாக புரிந்தது இதில் உள்ள விழிப்புணர்வு உட்கருத்துக்கள்..

இரண்டுபேருக்கும் ரொம்ப நன்றி...

sabeer.abushahruk சொன்னது…

//கிரவுனுரையை படித்தவுடனே முழுமையாக புரிந்தது இதில் உள்ள விழிப்புணர்வு உட்கருத்துக்கள்..//

அபு இபுறாஹீம்,
சுபம் போட்டுடலாம்னு நினைக்கிறேன்.

கிரவுன், மிக்க நன்றியும் கடப்பாடும் (thanks & obliged)(ஷஃபாத்தோட கவிதை எங்கே?)

ஜாகிர், வித்தியாசமானவர்கள் எவிட?

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//அபு இபுறாஹீம்,
சுபம் போட்டுடலாம்னு நினைக்கிறேன்.//

யாங் காக்கா, இருங்க யாசிர், S.ஹமீத் காக்கா, அதுல்மாலிக் இவங்களெல்லாம் இன்னும் அந்தக் காலத்தில் இருக்காங்க போல !

என்ன காகா அதுக்குள்ள சுபம் ! இன்னும் ஐஃபோன்-3லேயே இருக்கீங்களே ஐஃபோன்-4க்கு வாங்க ஐபேட்-2 இரண்டுக்கு வாங்க ! "

//(ஷஃபாத்தோட கவிதை எங்கே?)//

"காலம்" பதிவுக்கு மேல் கை-கால் வைத்தியர் இருக்கிறாரே !

அதிரைநிருபர் பதிப்பகம் சொன்னது…

Shahul சொன்னது :

ஒரே ஆள் (சபீர்) இரண்டு கட்டுரை தொடர்ந்து போட்டதால் யார் கண்ணோ பட்டு பின்னுட்ட பிரச்னை வந்து விட்டது சுத்து பட்டு எட்டு கிராமத்து கிழவிகளும் வந்து சபீருக்கு மிளகாய் சுத்தி போட ஏற்பாடு பண்ணுங்கள்.

Yasir சொன்னது…

காலம் என்ற ஒரு வார்த்தை என்ன லாவகமாக புரட்டி புரட்டி எடுத்து இருக்கிறீர்கள்...கவிதையின் ஆழமான கருத்துக்கள் மனதில் அச்சாணியாய் இறங்கின....காலம் செய்த கோலத்தால் கருத்திட தாமதம்......வாழ்த்துக்கள் காக்கா