Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ! 10

அதிரைநிருபர் பதிப்பகம் | May 27, 2011 | ,


வெள்ளிக் கிழமை காலை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன அதில் 500க்கு 496 மதிப்பெண்களுடன் 5 பேர் மாநிலத்திலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.




இதில் நம் சமுதாயத்தை சேர்ந்த முஸ்லிம் மாணவரான சதாம் உசேன் மாநிலத்திலே இரண்டாம் இடம் பெற்ற 11 பேர்களில் ஒருவராகவும், மாணவியான ஷபனா பேகம் மாநிலத்திலே மூன்றாம் இடம் பெற்ற 24 பேர்களில் ஒருவராகவும் வந்துள்ளனர். சமூக அறிவியலில் 756 பேர்கள், அறிவியலில் 3,677 பேர்கள், கணிதத்தில் 12,532 பேர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அதேபோல முதல் மூன்று இடங்களை, இத்தனை மாணவர்கள் பகிர்ந்து கொள்வதும் இதுவே முதல் முறையும் சாதனையும் ஆகும்.


இரண்டாவது இடம்
11 மாணவ-மாணவியர்கள் மாநிலத்தில் இரண்டாவதாக வந்துள்ளனர். இதில் மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் படித்த ஏ.சதாம் உசேன், இரண்டாம் இடத்தை அடைந்து நம் சமுதாயத்திற்கு பெருமையை தேடிதந்துள்ளார்.

மூன்றாவது இடம்
24 மாணவ-மாணவியர்கள் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர். இதில் பல்லாவரம் செயின்ட் தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த எம்.ஷபனா பேகம் மூன்றாம் இடத்தை அடைந்து நம் சமுதாயத்திற்கு பெருமையை தேடி தந்துள்ளார். இது கல்வியில் பின் தங்கியுள்ள நம் சமுதாயத்தை சேர்ந்த மற்ற மாணவர்களுக்கு ஓரு ஊக்கத்தையும் உத்வேகத்தையும் தந்துள்ளது.

மெட்ரிகுலேஷனில் 4 பேர் முதலிடம்
திருப்பூர் மாவட்டம் ஜெயபாரதி, ஈரோடு மாவட்டம் ஹர்ஷினி, தர்மபுரி மாவட்டம் அனிதா, செங்கல்பட்டு மாவட்டம் அனிக்ஷா ஆகியோர் தலா 493 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். 12 பேருக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. 22 பேருக்கு 3வது இடம் கிடைத்துள்ளது. மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதியவர்களில் 94.7 சதவீதம் பேர் பாஸ் செய்துள்ளனர். ஆங்கிலோ இந்தியன் பாடப் பிரிவில் தேர்வு எழுதியவர்களில் 95.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மாணவர்கள் 92.6 சதவீதம் பேரும், மாணவியர் 97.60 சதவீதம் பேரும் பாஸாகியுள்ளனர்.

2-வது இடம்
பைரோஸ் நகாத் (492) வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, முகப்பேர், பொன்னேரி.

வழக்கம் போல் அதிரை பள்ளி மாணவ மாணவியரும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்கள். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை பொருத்தே ஒவ்வொரு மாணவர்களின் வருங்கலாம் நிர்ணையிக்கப்படுகிறது என்பது எல்லோராலும் ஒத்துக்கொள்ளட்பட்ட உண்மை.

Name
School
Marks
Percentage
Al Jazeera
Imam Shafi Mtr.School
474
94.80%
Fahima Fathima
Imam Shafi Mtr.School
473
94.60%
Waseema
Imam Shafi Mtr.School
472
94.40%
Sakeera
K.M.Hsc School - Girls
482
96.40%
Nafeesa
K.M.Hsc School - Girls
481
96.20%
Malarvizhi
K.M.Hsc School - Girls
468
93.60%
Riasudeen
K.M.Hsc School - Boys
459
91.80%
Vincent
K.M.Hsc School - Boys
444
88.80%
Shaik Alavudeen
K.M.Hsc School - Boys
442
88.40%
வெற்றிபெற்ற மாணவ செல்வங்களுக்கு நம் அதிரைநிருபர்-குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் சிறப்புடன் படித்து பெற்றோர்களுக்கும், சமுதாயத்துக்கும், நம் நாட்டிற்கும் நற்பெயர் பெற்றுத்தர வல்ல இறைவனிடம் து ஆ செய்கிறோம்.
- அதிரைநிருபர் குழு

10 Responses So Far:

rasheed3m said...

Assalamu Alaikum,

Please try to check the student Nafeesas total i think its type mistak.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

அலைக்குமுஸ்ஸலாம்..

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி !

திருத்தம் பதிவுக்குள் !

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். வெற்றிபெற்ற மாணவ,மாணவிகளுக்கு வாழ்துக்கள். ஈமாம் ஸாபியில் 2ம் இடம் பெற்ற மாணவி என் காக்கா மகள் ஆவார்.அல்ஹம்துலிலாஹ்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வெற்றிப் படிகளின் தரவரிசைப் பட்டியலில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணாக்களுக்கும் அவர்களைத் தொடர்ந்து நன்மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற யாவருக்கும் எங்கள் வாழ்த்துக்களும் துஆ என்றும் இன்ஷ அல்லாஹ்...

கிரவ்ன்: காக்காவுடைய மகளார் இரண்டாமிடம் பெற்றிருப்பதும் மட்டற்ற மகிழ்ச்சி அல்ஹம்துலில்லாஹ் ! காக்காவுக்கும் மகளாருக்கும் வாழ்த்துக்களை சொல்லவும் !

sabeer.abushahruk said...

//அஸ்ஸலாமு அலைக்கும். வெற்றிபெற்ற மாணவ,மாணவிகளுக்கு வாழ்துக்கள். //

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

வெற்றிபெற்ற மாணவமணிகளுக்கு வாழ்த்துக்கள்.

மேலும் சிறப்புடன் படித்து பெற்றோர்களுக்கும், சமுதாயத்துக்கும், நம் நாட்டிற்கும் நற்பெயர் பெற்றுத்தர வல்ல இறைவனிடம் து ஆ செய்கிறேன்.

இந்த நேரத்தில் பெண் பிள்ளைகளை ஊக்கப்படுத்தி படிக்க வைத்துவரும் பெற்றோர்களை நிச்சயம் எல்லோரும் வாழ்த்தவேண்டும்.

அதிரையில் பள்ளிகளின் தேர்ச்சியில் நல்ல முன்னேற்றமடைந்துள்ளது எல்லோரும் நற்செய்தியே..

நல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ள பெண் பிள்ளைகளை டாக்டராக உருவாக்க பெற்றோர்கள் அனைவரும் நீண்ட கால குறிக்கோளுடன் தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

இமாம் ஷாஃபி பள்ளியில் இரண்டாம் இடம் பிடித்துள்ள சகோதரர் கிரவுன் அவர்களின் காக்கா மகளுக்கு வாழ்த்துக்கள்.

chinnakaka said...

அஸ்ஸலாமு அலைக்கும் வெற்றி பெற்ற அணைத்து மாணவ கண்மணிகளுக்கும் வாழ்துக்கள் மென்மேலும் பலதுறைகளிலும் வெற்றி பெற்று சாதணைகள் செய்திட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானக.

Yasir said...

மாணவமணிகளுக்கு வாழ்த்துக்களும் துவாக்களும்..

அப்துல்மாலிக் said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள், மாநில முதல் மதிப்பெண்களுக்கும் இவர்கள் பெற்ற மதிப்பெண்களுக்கு அவ்வளவு தூரமில்லை, இதுவே பெரும் முன்னேற்றமாகும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு