அறிந்தும் அறியாமலும் - அறியாத வயது நிகழ்வுகள் !

தென்னைக்கேத் தெரியாமல்
தேங்காயைத் திருடினோம்
அன்னைக்கேத் தெரியாமல்
அடுப்பங்கரையில் திருடினோம்

மாமரம் அயர்ந்தபோது
மாங்காயைத் திருடினோம்
கைக்கெட்டும் கிளையிலிருந்து
கொய்யாவையும் கொய்தோம்

சொடுக்குப் போடும் நேரத்தில்
கொடுக்காப் புளி கவர்ந்தோம்
முடுக்கு வழி புகுந்தோடி
அடுக்களைக்குள் பதுங்கினோம்

உப்பு விளையும் பாத்தியிலே
உல்லான் குருவி பிடித்தோம்
மதில்மேலே ஏறி நின்று
மாதுளம்பழம் திருடினோம்

நோன்புப் பிடித்து நாள் முழுதும்
சோம்பிப்போய்க் கிடந்தோம்
ஹிசுபு ஓதி முடித்தபின்பும்
குசும்பு செய்தே திறிந்தோம்

ரெண்டு மிதி சைக்கிளையும்
நாலு காலால் மிதித்தோம்
சாலையோர மரத்திலெல்லாம்
ஆட்டையைத்தான் போட்டோம்

பெருசுகளை கண்ணைக்குத்தி
புளியங்காயைத் திருடினோம்
பேச்சு பேச்சா இருக்கும்போதே
பேரீட்சையில் கைவைத்தோம்

பார்வையைப் பறிகொடுத்து
பார்வைகளைத் திருடினோம்
வேர்வையோடும் நாட்களிலும்
போர்வைக்குள்ளே புலம்பினோம்

காரணமே இல்லாமல்
கண்டதெல்லாம் சுட்டோம்
கவனமாக ஓதிப் படித்து
நல்லபிள்ளை யென்றானோம்

கிளித்தட்டு கிட்டிபில் போல்
விளையாட்டாத்தான் திருடினோம்
பெற்றவங்க மனம்குளிர
நல்லாபேரையும் திருடினோம்

- சபீர்

---------------------------------------------------------------------------------

பின்னூட்ட ஊர்வலம் !

தூண்டில் போட்ட கவிக் காக்கா அவர்களே ! வழக்காடு மன்றமே செல்லாமல் வழக்காடி வெற்றி வாகைச் சூடிய வரைகலை வைகறை தம்பி MSM(மீ) அவர்களே ! மற்றும் பின்னூட்ட மேடையில் அமர்ந்திருக்கும் இன்னும் வரவிருக்கும் அன்பிற்கினியவர்களே !

இன்னும் ஒருவாரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கவிருப்பதால் அதுவரை அரசியல்வாதிகள் கொடுத்த வாக்கு(றுதி)களை எண்ணிக் கொண்டிருக்கும் கழக கண்மனிகளே (அட இன்னும் நல்லா கைதட்டுங்க) !

இதென்னடா இப்படி கிளம்பிட்டாய்ங்களேன்னு உச்செல்லாம் கொட்(டாவி)ட வேனாமே !

அன்றொரு நாள் அதிரைப்படினத்தில் தென்றலும் தெம்மாங்கும் கூட்டாக வருடிய நேரமதில் நண்பர்கள் / மச்சான்ஸ் / சகோதரர்கள் என்று புடைசூழ அல்லது தனித்தோ அறிந்தும் அறியா வயதில் அறியாமல் நிகழ்ந்த நிகழ்வுகளுக்கு பின்னூட்ட ஊர்வலம் ஒன்றினை நடத்தலாமென்ற ஆலோசனையை தம்பி MSM(மீ) வைத்திருந்தார் அட ! நல்லாத்தானே இருக்குன்னு களத்தில் இறங்கியாகிவிட்டது.

சரி பின்னூட்ட ஊர்வலத்தில் அறிந்தும் அறிய வயது குசும்புகள்தான் கோஷமாக இருக்க வேண்டும், மாற்றுக் கழகக் கண்மனிகளை வசைபாடக் கூடாது, அதேநேரத்தில் நினைவுகளை அசைபோடலாம், அன்றைய பெருசுங்களுக்கு நீங்கள் வில்லன்களாக தெரிந்திருக்கலாம் அதன் பின்னர் அவர்கள் வீட்டுக்கே ஹீரோவாக சென்றிருக்கலாம் அல்லது இருந்திடலாம் இப்போதும்.

பின்னூட்ட ஊர்வலம் கலகலப்பாக இருப்பது உங்கள் கையில் இருக்கிறது அதற்காக நம்ம கைதானே என்று கைகலப்பில் இறங்கிட வேண்டாம், நமக்கு நாமே பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அவர்களின் பின்னூட்ட உடமைகளுக்கும் உட்கருத்துக்களுக்கும் அவர்களே பாதுகாப்பாகவும் பொறுப்பாகவும் இருக்கனும்.

ஊர்வலத்தை அலங்கரிப்பதில் உங்கள் எல்லோருக்கும் சொல்லியா தரனும்... ஆதலால் ஊர்வலம் செல்லும் வழியில் கல்லெரியோ அல்லது சொல்லெரியோ நடந்தால் அமைதி காத்திடவும் எல்லா வற்றையும் CCTVல் நெறியாளர் கண்கானித்துக் கொண்டிருப்பார் அசம்பாவிதமென்று அறியவந்தால் ஊர்லவத்திலிருந்து விளக்கி வைத்திடுவார் என்பதையும் அன்புடன் தெரிவித்திடவும் சொன்னார் அதையும் இங்கே சொல்லிபுட்டேன்.

- அபுஇபுறாஹீம்

29 கருத்துகள்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

ஸீ,ஸீ.டி.வி யே பார்த்தாலும்
ஏசியே எதிர்போம் எதிரியை
கல் இல்லாவிட்டாலும்
களவான்டாவது காயால் அடிப்போம்

ஊர்வலம் கொடிகட்டி பறக்க வாழ்த்துக்கள்

sabeer.abushahruk சொன்னது…

ச்சோட்டூ மீரஷா பாயிடம் ஒரு வழக்கில் தோற்றதற்கான தண்டனை ஏற்றுக்கொள்ளப்பட்டு இங்கு நிறைவேறியும் இருக்கு.

அப்பாடான்னு இருக்கு. தண்டனை கொடுத்ததன்மூலம் சின்னவயது கலாட்டக்களை நினைவுகூற வைத்தமைக்கு நன்றி!

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

அறிந்து அறியாமலும் செய்தவைகள், மறந்தும் மறவாமலும் மல்லுக் கட்டுகிறதே ! என் செய்ய !?

Meerashah Rafia சொன்னது…

நாட்டாமை சகோ . அபூ இபுராகிமின் தீர்பிபை மதித்து ஒரு மாத தவணையை ஒரு வாரத்திலே நிறைவேற்றி சகோ.சபீர் அவர்கள் எங்கள் மனதில் வெற்றி பெற்று விட்டார்.

இனி என்னுடைய அறிந்தும் அறியாமலும் இதோ இங்கே..

"நான் புடித்த தலை நோன்பும் ,
அதற்காக வீடு வீடாக ஒரு சீனிச்சோறு.

முதல் நோன்பு என்பதால் சென்னிச்சோறு கொண்டுசெல்லும்போது ஒவ்வொரு வீட்டிலும் என் கன்னத்தை கில்லி 2 ரூபாய், 5 ரூபாய் என்று குடுத்தார்கள்.
ஆனால் சீனிகுச்சி வீட்டு கொல்லைல சாயந்தரம் நாலு மணிக்கே பசி தாங்காமல் வாழைபழத்தை ஆட்டையபோட்டு ருசிச்சு சாப்பிட்டது
அதிரைநிரூபருக்குதான் முதலில் தெரியும்(இப்பொழுதுதான்).

எதிர் வீட்டில் மாங்காய் அல்லாஹ்வின் கிருபையால் கொத்துக்கொத்தாக.
எங்கள் வீட்டு ஜன்னலிலிருந்து கண்கள் களவாட கைகளும்,கால்களும் அதை தொடர்ந்தோடும்.
கிரிக்கட் விளையாடும்போது அவர்கள் வீட்டில் பந்து விழுந்தால், என்னைத்தான் சுவர் ஏரி போய் எடுக்கசொல்வார்கள்.
காரணம்!! நான் போனால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.. ஆமாம் பந்தோடு மாங்காயையும் வெற்றிவாகை சூடிக்கொண்டல்லவா வருவேன்.

இதாவது பரவா இல்லைங்க, நா ஊர்லயே இல்லாட்டி கூட அவங்க வீட்டு மரத்துல என்னி வைச்ச மாங்கா குறைஞ்சா எங்க வீட்டுக்கு வந்து நான்தான் எடுத்தேன்னு சொல்லி என் சிறுவயசு மைண்ட அப்சட் பண்ணி சேம்..சேம்.. பப்பி சேம் ஆக்குவாங்க.அந்த அளவுக்கு நான் பாபுலர்.

நானும் ஒரு வீட்டில் டியுசன் படித்தேன்/சென்றேன்..
எல்லோரும் வாசல் வழியாக டியுசனுக்கு செல்வார்கள். நான் மட்டும் கொல்லைவலியா செல்வேன்.. ஏன் தெரியுமா?!!
அவங்க வீட்டு கொல்லைலதான நெல்லிக்காய் மரமும், நார்த்தங்காய் மரமும் இருக்கு!!
வீட்டுக்கு வந்ததும் தினம் தினம் ஊறுகாய்..இஸ்....ஸ் ...இப்பவே நாக்கு ஊருது.

ஜாக்கிரதை
சலாவுதீன் கொண்டுவரும் சீட்டுக்கட்டில் ஜோக்கரை மட்டும் ஜாக்கிரதையா ஒழித்து வைத்தோம்.

சீக்ரட் ஆப் சக்சஸ்
நோன்பு துறக்க பேரிச்சம்பலத்தைவிட எம்மை வருடி திருடிய ஷேக்கு ஊட்டு கொய்யாகாயை எங்கள் சீக்ரட் ஆப் சக்சசான அரிசிக்குள் அபேஸ் பண்ணி காயை பழமாக்கி நோன்பு திறப்போம்ல!!

கே'புள்'
கிரிக்கட் பார்பதற்காக எங்கோ போகும் கேபுள் கணக்சனுக்கு காப்பர் வயரில் தந்தி விட்டு அன்றைய இஞ்சினியர் ஹாரூனின் முயற்சியை கொண்டு கண்டு ரசித்தோம்.

வெளிநடப்பு ஆர்பாட்டம்
ஷேக்கு ஊட்டுல நாட்டமை படம் பார்க்க ஒரு ரூபாய் வசூலிப்பதால்,காசே இல்லாமல் கொழுத்து கத்திரி வெயிலில் எங்கள் சாச்சி ஊட்டு சன்சைடிளிருந்து ஜென்னல் வழியாக நாட்டாமையின் தீர்ப்பை கண்டு ரசித்தேன்(அப்ப மறுமை தீர்ப்பு சரியாய் தெரியா வயசு).

முதலும் கடைசியுமாக நாங்கள் செய்த புளியமர பிசினஸ்
ஆறாம் கிளாஸ் படிக்கும்போது, வண்டிப்பேட்டையில் புளியமரத்தை புளிஞ்சு,உலுக்கி எடுத்து அதை வீட்டு சன்சைடில் உட்கார்ந்து வரி சலுகையுடன் விற்பனை செய்து, அதை வைத்து மோர் கடை, கடலை முட்டாய், கல்கோனா,இலந்தவடை, பள்ளிமுட்டாய், விறுவிறுப்பு முட்டாய் போன்றவை "கடன் அன்பை முறிக்கும்" என்று மனதுக்குள் முரிக்கிக்கொண்டு நானும் இன்று ஜப்பானில் இருக்கும் ஈனா.மூனா.சானா.சுகைபும் விற்று ஆளுக்கு கிட்டத்தட்ட நாற்பத்தி ஆறு ரூபாய் பிரித்து பிசினசை க்ளோஸ் செய்தோம். மிச்சமீதிகளை நாங்களே நபுசு கேக்காம சாப்பிட்டு முடிச்சுட்டோம்.

சுட்ட இட்லி சுடப்பட்டது
ஏலாம் கிளாஸ் மன்னார்குடி ஹாஸ்டலில் படிக்கும்போது ஒரு ஆளுக்கு காலையில் மூன்றோ, நாளோ சிறிய இட்லித்தான். ஒரு நாள் பசிக்கொடுமையால் ஆயா அங்குட்டு திரும்பும்போது ஹையா என்று சுட்ட எட்டு இட்லிய ஊதா நிற சிருவாளுக்குள் சுட்டோம்.

கல்லுகுட்சி காணபோச்சி
எல்.கே.ஜி.படிக்கும்போது எத்துனை பேருடைய கல்லுகுச்சி என் வாயினுள் போனிச்சுன்னு எனக்கு ஞாபகம் இல்லையே.

என் கடன் 'ஒரு ரூபாய் ஐம்பது பைசா'
பழைய இமாம் ஷாபி(ரஹ்) இஸ்கூல்ல அவட்டை ஆச்சிட்ட முழு ஆண்டு தேர்வு முடிஞ்ச அன்னைக்கு ஒன்னர்வா கிட்ட கடன் வச்சிருந்தேன். பத்துவருஷம் கழிச்சு குடுக்க பார்த்தேன்..ஆச்சிய காணோம்.. அல்லாட்ட மன்னிப்பு கேட்டாச்சு. அந்த அளவு பொறுமை கொண்ட ஆச்சிக்கு இப்போ ஓ போடலாம்னு நினைச்சேன். ஒப்பாரி வச்சிட்டங்கலானு அல்லாதான் அறிவான்.

இறுதி வரை போராட்டம்
மாவீரன் கஜினியைபோல் பல வருடம் போரடி கட்டகடசீல ஜெயித்தது 'ஜாவியாவில் உயரத்தை அளந்து பார்க்கும் அந்த சிகப்பு கோட்டைதான்'..
அன்று போட்டோம்ல நாங்க சிங்க நடைய!!!
ok..who is next to write their own biography?

sabeer.abushahruk சொன்னது…

தம்பி மீராஷா,
உங்கள் சிறு வயது சேட்டைகள் வாசிக்கையில் வயிறு வலிக்க சிரித்தேன், சிந்தை மகிழ ரசித்தேன்.  சேட்டைகளைப் போலவே அவற்றை சொல்லியிருக்கும் விதம் காப்பி ரைட்ஸ் வாங்குமளவுக்கு இலக்கியத்தரம். 

வாழ்க!  தலைநோன்பு மேட்டர்ல கீழே உள்ளதையும் வாசித்து விடுங்கள்:

விடாதே பிடி!
 
தலைநோன்பு பிடித்தவொரு
கலையாத நினைவு ...
பின்னிரவில் விழித்து
பிடித்துவிடத் தயாராகி
உண்டு காத்திருந்தும்
உறங்கும்வரை வருமென்ற
உருவநோன்பு வரவேயில்லை!
 
மண்பானைத் தண்ணீரும்
முதல்நாள் நோன்பும்
ஒன்றுக்கொன்று ஒவ்வா
எதிர்மறைச் செயல்கள்!
 
வீம்பு பிடித்தேனும்
நோன்பு பிடித்தோம்
அன்னை தடுத்தார் 
சொன்னதைக் கேளோம்!
 
சஹரில் விழித்து பின்
லுஹரில்தான் விழித்தோம்
இடைப்பட்ட நேரத்தில்
பசிதாகம் பொறுத்தோம்!
 
உச்சி  வெயில்வேளை
ஊருணியில் குளித்தோம்
குளித்த தண்ணீரைக்
குடல்முட்டக் குடித்தோம்
 
அச்சுவெல்லப் பாச்சோறும்
பச்சரிசிப் பிடிமாவும்
இளநீரின் வழுக்கையும்
இறால் பதித்த வாடாவும்
நோன்புக் கஞ்சி மல்லாவும்
நன்னாரி சர்பத்தும்
முன்னாலே இருக்கும்
தலைநோன்பு திறக்கவென!
 
படைத்தவன் பெரியவன்
எனும் பாங்கின்
அழைப்போசை கேட்குமுன்
அமுதமாய்க் காதில்விழும்
அடிக்கும் நகராவோசை!
 
மஃரிபுக்குப் பிறகு அரை
மயக்கத்திலே கிடக்கையில்
மண்டைக்குள்ளே கேள்வி
நோன்பு
பிடித்தேனா விட்டேனா?!

-sabeer
thanks to www.satyamargam.com

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

கலக்கிடேப்பா ! அறிந்து அறியாமலும் என்று அழகிய எழுத்து நடை வரிசையாக ஒவ்வொரு இடத்திற்கு அழைத்துச் சென்ற பாங்கு, சந்துக்கும் சுவற்றிற்கும் தாவிடும் லாவகம் ! இப்படி உன் எழுத்துக்களை ரசிக்கத்தான் கோடு போட்டேன் ரோடே போட்டுட்டே !

சபாஷ் !

Shameed சொன்னது…

நான் அண்ணன் ஷாகுல் சார் ஆரிப் முவரும் புல்லெட் பைக்கில் தஞ்சாவுருக்கு (ஏற் கன்) துப்பாக்கி வாங்க போய்க்கொண்டு இருந்தோம் மூன்றாவது ஆளாக கடைசியில் அண்ணன் ஷாகுல் சார் இருந்து கொண்டு டேய் சாவன ஆடு வருது பஸ் வருது ஒருத்தன் குறுக்க போறான் வளைவு வருகின்றது என்று ஓட்டிக் கொண்டிருந்த எனக்கு அறிவுரை வழங்கிக்கொண்டே வந்தார் ,அப்போது ஆரிப் சொன்னான் ஆள் இல்லாத இடமா பார்த்தது வண்டியை நிறுத்து ஒன்னுக்கு இருந்து விட்டு போகலாம் என்று நான் சொன்னேன் கடைசி சீட்டில் இருந்து கொண்டு அண்ணன் ஷாகுல் சார் தான் பைக்கை ஒட்டுகிறார் அவரிடம் சொல்லி வண்டியை நிறுத்தசொல் என்றதும் அண்ணன் ஷாகுல் சாருக்கு வந்ததே கோபம் செருப்பால அடிப்பேண்டா நாயே இனி யார் ரோட்டில் குறுக்கே வந்தாலும் நான் ஒன்றும் சொல்லமாட்டேன் என்று சொல்லிய ஒரு அரைமணி நேரத்தில் திரும்பவும் ஆரம்பித்தார் டேய் பார்த்ததுபோ ஒரு நாய் ரோட்டில் அடிபட்டு கிடக்குது என்றார் கிட்டே போனதும் அது ஒரு சட்டை துணி என்று அறிந்ததும் நாங்கள் கேட்டோம் இப்போ சட்டை துணிக்கு நாய் என்று பெயர் மாத்தியாச்சா சார் என்று ,அன்றில் இருந்து இன்றுவரை எங்கள் குருப்பில் யாரும் புது சட்டை போட்டால் நாய் நல்ல இருக்குதே இந்த நாயை எங்கு எடுத்தீர்கள் என்று கேலியும் கிண்டலும் தான் இப்போதும் கூட நாங்கள் சட்டையை சட்டை என்று சொல்வது கிடையாது நாய் என்றும் நாயை சட்டை என்றும் மாற்றித்தான் சொல்வோம் சபீர் ஊர் வரும்போதெல்லாம் வாங்கப்பா எல்லோரும்கும் ரெமொண்ட்ஸ்ல் போய் நல்ல நாயா எடுத்து வருவோம் என்றுதான் சொல்வார்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//Shameed சொன்னது…
நான் அண்ணன் ஷாகுல் சார் ஆரிப் முவரும் புல்லெட் பைக்கில் தஞ்சாவுருக்கு (ஏற் கன்) துப்பாக்கி வாங்க போய்க்கொண்டு இருந்தோம் ///

இது எல்லாமே அறிந்த வயதுக் குசும்பாவுல இருக்கு !? சரி சரி ஊர்வோலத்துல பெரிசுங்க வரத்தானே செய்வாங்க ! இருக்கட்டும்...

Sஹமீத் காக்கா : சட்டை எப்போது நன்றியுள்ளதாமே !?

Unknown சொன்னது…

அன்பு அதிரைநிருபர் வாசகர்கள் அனைவருக்கும்- அதிரை கடற்கரைத்தெரு சேர்ந்த அபுசபீக்(முகமது ரபீக்) யின் அஸ்ஸலாமு அலைக்கும்.

முதல் முயற்ச்சி என்பதால் அதிகம் எழுத முடியவில்லை- வரும் நாட்களில் மீண்டும் சந்திப்போம்

Meerashah Rafia சொன்னது…

sabeer.abushahruk சொன்னது…
//உங்கள் சிறு வயது சேட்டைகள் வாசிக்கையில் வயிறு வலிக்க சிரித்தே//

நானே எழுதிமுடித்து ஒருகனம் படித்துப்பார்த்ததும் என்னை அறியாமல் சிரித்தேன்.

தலை நோன்பென்ற தலைப்பிற்கு ஒரு அழகிய கவி காவியம்..


msm(mr)

sabeer.abushahruk சொன்னது…

என் ஏ எஸ் சாரோட சேட்டைகள் அதிரை சார்ந்ததா ராம்நாட் சார்ந்ததா? தென்னையும் தென்றலும் என நாம் புலம்புவதுபோல் பனையும் பாலை மணலும் என அவர்கள் புலம்பலும் வித்தியாசமாகவே இருக்கும்.

ஹமீது, ஏர்கன் கொண்டு சுட்டது ஏர்கன்னே இல்லாமல் சுட்டதுபோன்ற மேட்டரை திருட்டுத்தனமாக சட்டையைப் போட்டு ஒளித்துவிட்டது முறையல்ல.

அபு இபுறாகீம், நீங்க, crown,, யாசிர், ஜாகிரெல்லாம் ரொம்ப நல்லவய்ங்களோ?

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//அபு இபுறாகீம், நீங்க, crown,, யாசிர், ஜாகிரெல்லாம் ரொம்ப நல்லவய்ங்களோ? //

வளைகுடா வெள்ளிக் கிழமையைக் கூட அதி(ரை)காலையாக மற்றி வைத்தவங்க இருக்க்கும் சபையிது அடக்கித்தான் வாசிக்கனும்... வருகிறேன் சிக்கிரமே உண்ட கலைப்பு... கொண்ட தூக்கம் மிச்சம் (ஆறு நாட்களில் 1 மணிநேரத் தூக்கத்தினை சரி செய்ய வேண்டும்) :))

சட்டென்று மனசு ஞாபகத்திற்கு வந்தது...

அன்று !

பள்ளிவாசலுக்குச் செல்லும்போது ஒருசில பெரிசுங்க / (அன்றைய) இளசுங்க அவர்கள் நேராக தொழுகைக்கு சென்றுவிடுவார்கள் அவர்களைத் தொடர்ந்தே நானும் சென்று தொழுதிட்டு வருவேன் கால்கழுவாம பள்ளிவாசலுக்குள் ஏறினேன்னு அன்றைய பெரிசு கீழிறக்கி விட்டாங்க உடனே கோபத்தில் கேட்டேன் "அங்களெல்லாம் கால் கழுவாம நேர போறாங்க ஹவுலுப் பக்கமே போகாம என்னைய மட்டும் ஏன் தடுக்கிறீங்கன்னு ?" அப்புறம்தன் தெரிந்தது அவர்கள் வீட்டிலேயே ஒலுச் செய்திட்டு வந்திடுறாங்கன்னு !!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

mohamed சொன்னது…
அன்பு அதிரைநிருபர் வாசகர்கள் அனைவருக்கும்- அதிரை கடற்கரைத்தெரு சேர்ந்த அபுசபீக்(முகமது ரபீக்) யின் அஸ்ஸலாமுஅலைக்கும். ///

அலைக்குமுஸ்ஸலாம், சகோ. அபுசபீக் : உங்களின் முதல் வருகை மகிழ்ச்சியே ! வாருங்கள்.... எங்களின் புன்னகையோடு "நல்வரவு"

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

MSM(மீ) ஜாவியா உள்ளேச் செல்ல அளவு கோட்டைத் தொட்டதும் சிங்க நட்டை போட என்னால் முடியவில்லை... அப்போ அளவுக் கோட்டுப் பக்கம் போகாம் தனி கேட்டுப் பக்கம் உள்ளே அழைத்துச் செல்லப் படுவேன் (மரைக்காவுல !)

Shameed சொன்னது…

mohamed சொன்னது…
//அன்பு அதிரைநிருபர் வாசகர்கள் அனைவருக்கும்- அதிரை கடற்கரைத்தெரு சேர்ந்த அபுசபீக்(முகமது ரபீக்) யின் அஸ்ஸலாமு அலைக்கும்.

முதல் முயற்ச்சி என்பதால் அதிகம் எழுத முடியவில்லை- வரும் நாட்களில் மீண்டும் சந்திப்போம்//


யாருப்பா அது இன்னும் கொஞ்சம் விவரமா யாருன்னு சொன்ன நல்லைருக்குமே!

Shameed சொன்னது…

நான் முன்பு சொன்ன சட்டை மேட்டர் அறிந்தும் அறியாமலும்

இப்போது சொல்லும் மேட்டர் அறியாத வயது நிகழ்வுகள்

நோன்பு நேரத்து இரவில் வெட்டிகுளத்தில் இருந்து ஒரு ஆமை ஏறி ரோட்டில் போய்கொண்டு இருத்தது அதை பிடித்து அடியோ அடி என்று அடித்தும் அது சாகவில்லை எப்படி சாகடிப்பது என்று யோசனை செய்தபோது உப்பளத்தில் இருந்து உப்பு ஏற்றி வந்த லாரி ஒன்று வந்தது பிடித்து வைத்திருந்த ஆமையை ஓடிக்கொண்டிருந்த லாரியின் பின் சக்கரத்தில் போட்டதும் சக்கரம் ஆமையின் மீது ஏறியதும் அங்கு நின்ற எங்கள் சாகாகள் அனைவருமீதும் ஆமை குடால் பீச்சி அடித்தது நாற்றம்மேன்றால் நாத்தம் சரியான நாற்றம் இன்று நினைத்தால் கூட குடலை பிரட்டும்

Shameed சொன்னது…

அபுஇபுறாஹீம் சொன்னது… //இது எல்லாமே அறிந்த வயதுக் குசும்பாவுல இருக்கு !? சரி சரி ஊர்வோலத்துல பெரிசுங்க வரத்தானே செய்வாங்க ! இருக்கட்டும்...//என்ன போச்சோட பேச்சா "பெருசு"ன்னு சொல்லிடியோ ஓ அண்ணன் ஷாகுல் சாரையா? அவுக எப்போவுமே எங்களுக்கு பெருசுதான்.

ZAKIR HUSSAIN சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ZAKIR HUSSAIN சொன்னது…

நேற்று அண்ணன் N.A.S சாருடன் பேசினேன் [ இப்போது அவர் வியட்னாமில்]

' டேய் காலையிலே எழுந்து இன்டெர்னெட்லெ தமிழ் பேப்பர் படிக்கிற என்னை...எப்போதும் அதிரை நிருபர் படிக்க வச்சிட்டீங்கடா என்று சொன்னார். சபீர் என்னடா இந்த அளவுக்கு தமிழ்லெ பின்னியெட்டுக்கிறான்..சத்தியமா சொல்ரேன்டா..உங்க தமிழ் படிச்ச பிறகு நான் தமிழில் எழுதவெ யொசிக்கிறேன்டா தப்பா தமிழ்லெ எழுதுக்கூடாதுல..."

சாகுல்..உங்கள் மேட்டர் [ சார் / ஆரிப்/ மோட்டோர் பைக்/ நாய்] விசயம் படித்து தன்னாலே சிரிக்க ஆரம்பித்து விட்டேன். வீட்டிலெ பிள்ளைங்கல் எல்லாம் முத்துப்பேட்டை தர்காவில் கட்டிக்கிடக்கும் ஆளை பார்க்கிறமாதிரி பார்க்க ஆரம்பிச்சிடுங்க.

சபீர்...நானும் சாகுல் உடன் ஏர்கன் எடுத்து தவக்களை சுட்டிருகிறேன்..வெட்டி குளத்தில். ஆனால் தவக்களை இருக்கும் இடத்துக்கும் பெல்லட் பாயும் இடத்துக்கும் குறைந்தது 5 மீட்டராவது இருக்கும். [ அப்படி ஒரு குறி தவறாத திறமை என்னிடம் இருந்தது.இது நூரானிக்கும் தெரியும்...பல்லவ குளத்து பக்கம் குருவி அடிக்க அட்டைப்பிள் எடுத்து போவது குருவியைத்தவிர எலக்ட்ரிக் கம்பி / கேபிள் ஜாயின்டர் எல்லாவற்றிலும் சரியாக அடி விழும்]

புத்தர் பிறந்த 'கயா'வில் பிறந்து ...ஆஸ்பத்திரியில் , மழை பெய்யும் இரவில் , யாரொ ஒரு ஏழைப்பெற்றோரிடம் வளர்க்க கொடுத்து அந்த பிள்ளை இப்போது கமென்ட் எழுதியிருக்கு'னு நினைச்சிடாதே....

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//என்ன போச்சோட பேச்சா "பெருசு"ன்னு சொல்லிடியோ //

மெய்யாலுமே... பெருசான மேட்டருன்னு தான் சொன்னேன்... அன்றைய சிறுசுங்கதான் இன்றைய பெருசுன்னு காதில் விழுந்துவிட்டதோ !?

Ahamed irshad சொன்னது…

ஆஹா ஆஹா...அதிராம்ப‌ட்டின‌த்தாங்கிற‌து பெருமையா இருக்கு என‌க்கு..!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

தம்பி மீராசா,சூப்பர். உன் சாச்சி வீட்டில் உன் இளம்களவை படித்து சிரிசிரித்து இவனா மீராசா என்று அசந்து விட்டார்கள்.அந்த மலரும் நினைவில் உம்மானிமா பெரியம்மா அவர்களை பற்றி எதுவுமில்லையா என்று கேட்டார்கள்.

Meerashah Rafia சொன்னது…

//M.H. ஜஹபர் சாதிக் சொன்னது…
தம்பி மீராசா,சூப்பர். உன் சாச்சி வீட்டில் உன் இளம்களவை படித்து சிரிசிரித்து இவனா மீராசா என்று அசந்து விட்டார்கள்.அந்த மலரும் நினைவில் உம்மானிமா பெரியம்மா அவர்களை பற்றி எதுவுமில்லையா என்று கேட்டார்கள்.//

இன்னும் நிறைய இருக்கு.இவை அரைமணிநேரத்தில் எழுதப்பட்டவை.உம்மாநியம்மாவை பற்றி எழுதனுமேன்றால் ஒரு தனி கட்டுரையே எழுதணும்.
--------------------------------
நாட்டாமை சகோ. அபு இபுறாஹீம்,இது சரியில்லை......நானும் சபீர் காக்காவும் எதிர்பார்த்ததுபோல் பிண்ணூட்டங்கள் பின்னி எடுக்கப்படவில்லை என்ற கவலை.நடக்கட்டும் நடக்கட்டும். அடுத்தமுறை தங்கள் நண்பரில் அறியாவயது பற்றி எழுதச்சொன்னால் நிறைய கரக்கலாம்னு நினைகிறேன்..

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

தம்பி MSM(மீ): பின்னூட்டங்கள் பின்னியெடுக்கும் ஏன்னா அவைகள் பின்னால் வருதினாலே.. வளைகுடா விடுமுறை அயர்வும், சிலருக்கு வேலை பளுவும் காரணங்கள் இன்று கலலகட்டும்...

எனக்கு வேலை பளு என்று சொல்வதைவிட அழுத்தமே ஆதிக்கம் செலுத்துகிறது அவைகளை ஒரு முறை(த்து) பார்வையிட்டுவிட்டு இங்கே ஊர்வலத்தில் கலந்தும் கொள்வோம்...

அப்துல்மாலிக் சொன்னது…

ஆஹா பின்னியெடுக்குறீங்க மக்கா எல்லோரும், விரிவான பின்னூட்டத்துக்கு நேரமின்மையால் நானும் படிச்சி என்னோட அறிந்தும் அறியாமலும் திருட்டை நெனெச்சி லயிச்சிக்கிறேன் என்பதையும் இங்கே பதிவுசெஞ்சிக்கிறேன்

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்,

சபீர் காக்கா, தம்பி மீராசா... ம்ம் சரியான போட்டி...

இது எல்லா ஜெனரேசன் செய்யும் லூட்டி...

அறிந்து அறியாத தவறுகளுக்காக படைத்தவனிடம் மன்னிப்பு கேட்போம்..

Yasir சொன்னது…

அறிந்தும் அறியாமலுக்கும் அவசரமாக படித்தவுடன் கருந்திட வேண்டும் என்று நினைத்தேன்...ஆனா வேலைப்பளு பெண்டு எடுத்துவிட்டது....கவிகாக்காவிற்க்கு நிறைய அனுபவம் உண்டோ அழகாக வடித்து இருக்கிறீர்கள்...நான் நேரிடையாகவெல்லாம் இதை செய்தது இல்லை...பிரண்டுகள் செய்தால் ஹெல்பராக வேலைப்பார்த்து இருக்கிறேன்..அவர்கள் பறித்து தருவதை ஸ்டோர் செய்வது என் பணி....

Yasir சொன்னது…

Shameed சொன்னது
//யாருப்பா அது இன்னும் கொஞ்சம் விவரமா யாருன்னு சொன்ன நல்லைருக்குமே!//

அது யாருமில்ல காக்கா...என் அன்புத்தமயன் முகமது ரபீக் தான்....உங்கள் ஆருயிர் நண்பரும் கூட...நானா அதிரை நிருபர் உங்களை வரவேற்கிறது.

Shameed சொன்னது…

Yasir சொன்னது…
//அது யாருமில்ல காக்கா...என் அன்புத்தமயன் முகமது ரபீக் தான்....உங்கள் ஆருயிர் நண்பரும் கூட...நானா அதிரை நிருபர் உங்களை வரவேற்கிறது//


ஒ அவன்தான் இவனா?