மு.க. பவர் கட்டு...ஜெ.ஜெ.பவர் ஹிட்டு!

ஆட்சி மாறுது
காட்சி மாறுது !
பேச்சு மாறுமோ அம்மா
ஏச்சிப் போடுமோ நம்மை?

'சோ'வென்று பெய்யும் மழையை நம்பு
'சோ'வென்ற பொய்யன் மொழியை நம்பாதே!
"SO" பின்னாலிருந்தது யாரென்று கேட்பவர்க்கு
சோ’வென்று தெரிந்ததும் சோர்ந்திடாதே!

நரேந்திர மோடியை விழாவுக்கு அழைக்காதே
நம்மூர் தாடிகளின் விலாவை ஒடிக்காதே!
நம்பித்தான் ஓட்டளித்தோம் உமக்காகா
வம்பியாக இனிமேலும் இருந்திடாதே !

தேர்தல் வாக்குறுதிகள் கலந்திட்டது குருதியோடு
வாசல் வரை வந்திட்ட அம்மனியே !
அதிக இடம் கிடைத்ததால் இனியில்லை
இடஒதுக்கீடு என்று சொல்லிடாதே !

மின்வெட்டு எங்கள் கழுத்தில் விழாமல்
கண் கட்டிக் கொண்டு இருந்திடாதே !
மதுக்கூர் வடசேரி நீடாமங்கலம் சரிதான்
மன்னார்குடிக்குள்ளே போனா நாட்டுமக்களுக்கு சனிதான்!

'பவர்கட்'டு படிப்படியா
வெட்டும் நேரம் கொறையணும்....
அம்மா 'பவர்' என்னங்கறது
அப்பப்ப புரியனும்!

கேட்டு பார்த்துட்டோம்
கிடைச்ச பாடில்லை

கெஞ்சிக் கேட்டுட்டோம்
நெஞ்சு இரங்கல

கட்சி துவங்கிட்டோம்
காயை நகர்த்திட்டோம்

தமிழ்நாட்டு நலனை மனதில் ஏத்திக்கோ
வடநாட்டு அம்மையாரோடு தோழி போட்டுக்கோ
கொடநாடு போகையில் தோழி மாத்திக்கோ
டெல்லிப் பக்கம் ஒரு கண் வச்சுக்கோ !

மூன்றாவது முறை முதலமைச்சரா
நீங்க இருப்பதோடு அடுத்த..
வாரிசுகள் தமிழக மக்கள்தான்னு
வாழ்ந்துதான் காட்டணும்!

- சபீர்
- Sabeer abuShahruk

20 கருத்துகள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

அசந்து போயிட்டோம் அப்படியே !
அள்ளிக் கொண்டு வந்திடியல !
அலைக் கற்றை வீசி ஆட்சியிழந்த ஐயாவை
அப்படியே உட்டுங்க அவங்க வூட்டுக்கு போலீஸ் வேண்டாம்ங்க !

மாற்று அரசியல் செய்யத்தான்
எங்க தலைங்க வந்திருக்காங்க
மாத்தி மாத்தி பேசி ஏமாத்திடாதீங்க !

இன்னுமிருக்கு எழுதிடத்தான்...
என் தம்பி கிரவ்ன் வருவான்
ஏத்தி ஏத்தி விட்டுடுவான் இன்னும் கொஞ்சம்....

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

தோழியும் போட்டாச்சு
டீப் பார்ட்டிக்கும் கூப்ட்டாச்சு
சட்டமன்றத்தையும் மாத்தியாச்சு
சட்டத்தையும் மாத்த முடிவெடுத்தாச்சு
சும்மாவல்ல நான்
சுதந்திர தேவிநான்
அவர் செஞ்செதெல்லாம் எது
அதெல்லாம் இனியேது!

crown சொன்னது…

நல் மக்களுக்கோர் செய்தி!
இன்னும் இருக்குதடா மனு நீதி!
அதன் மறு பக்ககமோ அநீதி -
அதுதான் அதன் அகராதி!
அய்யனுக்கே அது வரபிரசாதம்!
மற்றாருக்கெல்லாம் அது சாத்தான் வேதம்!
வேண்டாம் அந்த சனியன்!
இதை உணர வேண்டும் எம் தமிழர்!
-----------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். மேலே உள்ளவை நான் முன்பு எழுதியது.இதை அந்த அம்மா மனதில் நிறுத்தி மனு நீதியை நிருத்தனும்,திருந்தனும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

அம்மா 'பவர்' என்னங்கறது
அப்பப்ப புரியனும்!
ஐயாவுக்கும் புரியனும்
அன்னைக்கும் தெரியனும்!

சென்னையிலே இனி ட்ராபிக் ஜாம்
செய்யாட்டி என்ன வித்தியாசம்
செருக்கான ஆட்சி என்னெடெ
செத்த ஆட்சி உன்னெடெ!
(கவிக் காக்கா உங்க 2 வரி களவு எடுத்தாச்சு)

crown சொன்னது…

நரேந்திர மோடியை விழாவுக்கு அழைக்காதே
நம்மூர் தாடிகளின் விலாவை ஒடிக்காதே!
நம்பித்தான் ஓட்டளித்தோம் உமக்காகா
வம்பியாக இனிமேலும் இருந்திடாதே !
---------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.
நம்மவர் விலாவை ஒடிக்காதேன்னு மட்டும் இருந்திருக்கலாமோ? காக்கா! சரியென்றால் பரிசீலனை பண்ணவும்.

crown சொன்னது…

மின்வெட்டு எங்கள் கழுத்தில் விழாமல்
கண் கட்டிக் கொண்டு இருந்திடாதே !
மதுக்கூர் வடசேரி நீடாமங்கலம் சரிதான்
மன்னார்குடிக்குள்ளே போனா நாட்டுமக்களுக்கு சனிதான்!
-----------------------------------------------------------
அஹாஹாஹாஹாஹா...............பொறையேரிக்கிச்சு,உங்க கிச்சுமுச்சுல.

crown சொன்னது…

பாப்பாவுக்கு பாட்டு கேட்டுஇருக்கோம். அம்மாவுக்கு பாட்டு புதுசு!மெட்டும் புதுசு, ஆனாலும் பவுசு.ஆங்காங்கே குட்டும், அளவான வேண்டுகோளும் படிக்க, படிக்க சுவை.வைத்த கோரிக்கைகள் யாவும் நம் அன்றாட தேவை.செய்யனும் இந்த அம்மா நல்ல சேவை.இது நம்ம எதிர்பார்ப்பு, தொலையனும் இந்த அம்மா இறுமாப்பு.இது நடந்தால் மத்தாப்பு,தித்திப்பு.

ZAKIR HUSSAIN சொன்னது…

அம்மையார் வெப் சைட் வச்சிருந்தா அப்படியே காப்பி & பேஸ்ட் செய்து அனுப்ப வேண்டிய கவிதை.

அபு முஹம்மத் சொன்னது…

Website of Dr. Jeyalalitha is http://www.puratchithalaivi.org/

sabeer.abushahruk சொன்னது…

பெயரில் "தம்பி" என்பதால் சேட்டை அதிகமாக இருக்கிறது. ஏனெனில், இந்த கோஷங்களின் தலைப்பும் பாதி கோஷங்களும் அவரோடது. பேர் மட்டும் முழுசா என்னுதா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

இன்று பதவி ஏற்பு நிக்ழவு நடந்தேறுகிறது !

அட தமிழகமே ! அழைத்திருக்கிறார் முகமூடியிட்ட கேடியை அவருக்கு ஒரு பெயராம் மோடி.. இனிமேல் இந்த அம்மா moodyயாகத்தான் இருக்கப் போகிறார் புன்னகை என்ன விலை என்று கேட்டிடுவாரோ நம்மிடம் !?

Yasir சொன்னது…

சூப்பர் காக்கா....கவிபாடி கோரிக்கை வச்சாச்சு...இனிமே அம்மா...சும்மா இருக்காமல் தவிர்க்கவேண்டியதை தவிர்த்து,செய்யவேண்டியதை செய்யணும்...இல்லையென்றால் சுனாமி எந்நேரமும் வந்து தாக்கி ஆட்சியை தூக்கிவிடும்

Shameed சொன்னது…

N தம்பியும், சபீரும் கலந்து பேசி போலந்து கட்டுவது போல் தெரிகின்றது!!! நடக்கட்டும் நடக்கட்டும்.
கவிதை JJ என்று இருந்தது.

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்,

சபீர் காக்கா சான்ஸே இல்லை, பீஸ் போன அரசியலில் பவர்புல்லான கவிதை.

sabeer.abushahruk சொன்னது…

//கவிதை JJ என்று இருந்தது.//
இன்னும் சங்கத்தை களைக்கலயா?

Shameed சொன்னது…

சங்கத்து சார்பா யாரையும் காணோம் மேனேஜர் (JJ) உள்பட பிறகு எப்படி
களைப்பது!

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

நேற்று (தமிழ்நாட்டை) ஆண்டவனை ஒதுக்கிவிட்டு !
இன்று (தமிழ்நாட்டை) ஆள வந்திட்ட ஒற்றத் தலைவி(தி)யே !

சொல்லித்தானே வைத்தோம்
மோடி என்ற கேடியை
அழைத்து வராதே என்றும் !

நேற்று வரை ஆனவமில்லை போல் நடித்தாய்
இன்று முறையே அவனவனை யாரென்று கேட்கிறாய் !

மக்களோடு மக்களாக மன்னிப்பும் அளித்தோம் உமக்கு
மனிதநேய மக்கள் யாவரும் வாக்குகளை வாரி அளித்தோம் !

பதவிக்குள் வந்ததும் பாராமுகமாக இருக்கிறாயே !
பரிதவிக்கும் முஸ்லீகளை பரிகசித்து விடாதே !

ஐந்து ஆண்டுகள் காத்துதான் இருக்கனுமா ?
அதன் பின்னர் என்ன நடக்குமென்று நேற்றே காட்டியும் விட்டோமே !

எங்களை ஆள்பவனும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறான் !!!

sabeer.abushahruk சொன்னது…

அழகாகச் சொன்னீர்கள் அபு இபுறாஹீம், நாம பயந்ததுபோலவே நடக்குது பார்த்தியலா?

Adirai Iqbal சொன்னது…

உங்களையெல்லாம் பார்த்தா பாவமா இருக்கு

sabeer.abushahruk சொன்னது…

//உங்களையெல்லாம் பார்த்தா பாவமா இருக்கு//

என்னதான் பண்றது இக்பால் சார், தேங்கிக் கிடக்கின்ற சேற்றுக் குட்டைக்குள்ளேயே கிடந்து புழுத்துப் போனது அலுத்துப் போனதால்தானே மாற்றம் வேண்டி மறுபடி போய் மாட்டுறோம்.

வெறுமே பாவப்படாமே பரிகாரம் சொல்லுங்க பாய்.