நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இரயிலடிக்கு போவோமா !? - ஃபோட்டூன் 18

அதிரைநிருபர் பதிப்பகம் | புதன், மே 04, 2011 | , , , ,


கம்பன் ஏமாற்றினாலும் கழகங்களின் தலைவர்கள் காற்று வாங்க இங்கே வந்திருக்காங்க...

இவர்களோடு நீங்களும் அங்கே சென்றால் என்ன பேசுவீர்கள் ?

ஓட்டு வேட்டை முடிந்ததும் ஓய்வெடுக்க வந்திருக்கும் இடமோ அதிரைப்பட்டினம்... ஒருவேளை மின்சார இரயில் வருமென்று காத்திருக்காங்களோ ?

இனி உங்கபாடு.. ஜமாய்ங்க மக்களே !

- அபுஇபுறாஹீம்

18 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

மலரும் நினைவுகள் !

கருணாநிதி : இதோ தம்பி கைப்புள்ள சாய்ந்திருக்கும் தண்டவாளத்தில்தான் தலை வவத்து படுத்திருந்தேன் அன்று எனக்குத் தெரியும் கம்பன் வரமாட்டான் ஆனால் வம்பன்கள் வருவார்கள் என்பது மட்டும் அன்றே எனக்குத் தெரிந்தது...

ஜெயலலிதா : ஆ முதல் இங்கே வந்து நாற்காலி போட்டுட்டாரா இனிமே மனைவி மக்கள் பேரன்ங்கள் வருவார்கள் அப்புறம் என்ன... மத்தங்களுக்கு இதயத்தில் இடம்தான் !

வைகோ : அழகாயிருக்கும் இந்த ரம்மியமான இரயிடியிலிருந்துதான் ஈழம் சென்றேன் இங்கேயும் வந்துவிட்டது இந்தக் கும்பல் நமக்கு உடகாரக் கூட இடம் தரமாட்டார்கள் அப்படியே நடைபயணம் செல்வோம்...

ராமதாஸ் : இப்படியொரு பசுமையான இடமிருப்பது அன்றே தெரிந்திருந்தால் இங்கேயே தோட்டம் போட்டிருப்பேனே... அதனாலென்ன தமிழறிஞர் இருக்கிறார் இதயத்திலிருப்பங்க கிட்டே சொல்லு வாங்கி தந்திடுவார் இந்த இடத்தை..

விஜயகாந்து : ஹும் தண்டம் தணடவாளத்தில் படுத்துக்கிடக்கிறது அடிபடப் போறார்...

வடிவேலு : இங்க பாருடா... கைபுள்ளக்கு தெரிந்தது கூட கேப்டனுக்கு தெரியல.. இங்கே இரயிலே ஓடாதுன்னு தானே தலைவர் இரயில் மறியலுக்கு வந்திருக்காரு....

sabeer.abushahruk சொன்னது…

செம மேட்டர்.

அன்பும் பாசமும் பரிவும் இறக்கமும் மிக்க புரட்சி எழுத்தாளர் முஜீப் அவர்களுக்கு:

"என் பேர்லயும் நான் எழுதின மாதிரி ஒரு பின்னூட்டம் இட்டு என்னை இந்த சபையிலிருந்து ரட்சிக்கவும். நன்றி!"

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

இது எங்க பாரம்பரிய நாட்டின் இரும்பு எல்லை,இது நாங்க சாதித்த,சாதிக்க வேண்டிய இடம்,சுனாமி எதுவும் வராமல் தடுக்கும் தடுப்பு சுவர் தான் இந்த நடை மேடை.
உங்களுக்கு இங்கே இடமில்லை நீங்க போக வேண்டிய இடம் கொடநாடு,சுடுகாடு தான்,
இங்கே மறிக்க ரயிலும் வராது,வெட்ட பெருமரமும் கிடையாது,அலயாத்தி காடு சரிவராது.
உங்களை விட சிரிப்பு நடிகரெல்லம் எங்கூரில் உண்டு.
இங்கே இணையத்தமிழை வளர்க்கிறோம்,சங்கத்தமிழ் வளர்ப்பதில்லை

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

///இங்கே இணையத்தமிழை வளர்க்கிறோம்,சங்கத்தமிழ் வளர்ப்பதில்லை //

சபாஷ் ! அருமை !

இணையத்தில் எழுத எழுத்துரு தந்த தவப் புதல்வன் பிறந்த் ஊர் ! அவரும் இங்கே பரீட்சைக்காக படித்திருக்கிறார் !

Shameed சொன்னது…

தாத்தாவுக்கு நாற்காலி போட்டு உட்காரவைத்து விட்டு அம்மாவை நிர்க்க வைத்ததை வன்மையாக கண்டிக்கின்றோம்!

Ahamed irshad சொன்னது…

விஜ‌ய‌காந்த‌ உட்காந்திருக்கும் இட‌ம் என் ஃபேவ‌ரிட் சீட்..அத‌னால‌ ம‌ப்பு பார்ட்டி க‌ப்பெல்லாம் தாங்க‌ முடியாது..அந்தாள‌ தூக்கி கழிவ‌றை ப‌க்க‌த்துல‌ வெக்கிற‌து பெட்ட‌ர்..ஆட்டுக்குட்டிக‌ளைகூட‌ அந்த‌ சீட்டைவிட்டு விர‌ட்டிய‌ வ‌ர‌லாறும் உண்டு..ஆங்..சொல்லிப்புட்டேன்..:))

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

ரொம்ப நாளைக்கு பிறகு நம்மூர் இரயிலடி கலர்புள்ளா இருக்குங்கோ..

ஹமீது காக்கா, இதுக்கொள்ளாம் போய் கண்ட அறிக்கை விட்டிருக்கியலே... எல்லோரும் நல்லா ரிலக்ஸா தானே இருக்காங்க...

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//அந்த‌ சீட்டைவிட்டு விர‌ட்டிய‌ வ‌ர‌லாறும் உண்டு..ஆங்..சொல்லிப்புட்டேன்..:)) //

13ம் தேதி கிடைக்கப் போற சீட்டட விட அவ்ளோ சுத்தமனாத அந்த சீட்(டு) !

Shameed சொன்னது…

தாத்தா நாற்காலி போட்டு உட்காந்து இருக்கும் ஸ்டைலை பார்த்தால் இலங்கை தமிழருக்கு உண்ணா விரதம் இருப்போதுபோல் உள்ளது.அதிரை பட்டினத்திற்கு வந்தால் உண்ணும் முடிவுடன் வாருங்கள் நாங்கல்லாம் காளை மீன் பண்ணா மீன் கொடுவா மீன் என்று வகைவகையாய் சமைத்து விருத்தாளிகளை கவனிக்கும் ஒரு ஊர்தான் அதிரை பட்டினம் (பாருங்க முன்ன அந்த போட்டொவுலே இருந்த ஆட்டை ஆட்டையை போட்டுடோம்முளோ)

Yasir சொன்னது…

ஹலோ..அ.நி இதென்ன ரயிலடி வாரமா ? இப்பெடியெல்லாம் தொடர்ந்து ரயிலடி சம்பந்தமான படங்களையும் செய்திகளையும் போட்டு கொண்டு இருந்தால் அடுத்த வாரம் யூ.கே போக இருந்த முடிவே மாத்திகிட்டு-- ஊருக்கு போய்விடுவேன் அந்த நஷ்ட ஈட்டை உங்களிடம்தான் கிளைம் செய்வேன்...அவ்வளவு ஈர்ப்பு இந்த ரயிலடி மேல்

sabeer.abushahruk சொன்னது…

கருனாநிதி: 
" நோய் முற்றிய நிலையில் ஓய்வெடுக்க வந்த இடத்தில் இந்த இருக்கையின் சக்கரங்களை கழட்டிச்சென்றது நிச்சயமாக கழகக் கண்மணிகளாக இருக்க வாய்ப்பில்லை. கழகம் செய்பவர்கள்தான் நான் சட்டசபை செல்வதைத் தடுக்க சதி செய்கிறார்கள். அழகிரி, உனக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் மிருகத்தை எழுப்பி என் சக்கரங்களை பிடுங்கித்தா"

ஜெயலலிதா: 
" மதுக்கூர் வழி பஸ்ஸும் போயிடிச்சி. வடசேரி வழி பஸ்ஸும் போயிடிச்சி. இனி எப்ப என் உயிர்த்தோழி வந்து நாங்க மன்னார்குடி செல்வது? ஆட்சி அமைத்ததும் முதல் வேலையாய் கம்பனை அதிரையிலிருந்து மன்னார்குடி வழி கொடநாட்டுக்கு மாற்றியே தீருவேன்"

வைகோ:
"அம்மாவென்றழைக்காத நாளில்லையே...தம்மா துன்டு இடம்கூட தரவில்லையே...நடையாய் நடந்து கழுதையாய் கதறி உழைத்து முடித்தபின் உதைத்து எறிந்தனரே"

விஜயகாந்த்:
"திட்ட நாக்கு ஊறுது; அடிக்க கை அரிக்குது; கட்சிக்காரனிடம் முதுகு இருக்கு ஆனா பக்கத்தில இல்லை. இந்த ஊருக்கு ரயில் வராததற்கு பாகிஸ்தான் காரனின் சதிதான் காரணம். உடனே புறப்பட்டு தீவிரவாதிகளை கைது செய்யனும். ஒரு லாரி நிறைய விஸ்கியும் துணைக்கு அனுஷ்காவையும் உடனே அனுப்புங்கடா"

ராமதாஸ்:
"என்ன ஊருயா இது? கண்ணுக்கெட்டின தூரம்வரை ஒரே உப்பளமா இருக்கு. தாவுவதற்கோ வெட்டுவதற்கோ மரங்களையே காணோம். படப்பொட்டிய தூக்கிட்டு ஓடலாம்னு பார்த்தாலும் தியேட்டரே இல்ல. அண்புமணி ஆசிரமம் அஐத்து பார்ப்போமா?"

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் வடிவேலு:

""ஹய்யோ ஹய்யோ... இன்னுமா நம்மல நம்புறாய்ங்க இந்தூர்ல? கணபதி அய்யரோடு ஓடிப்போன எங்கக்காவைத்தேடி வந்தா இவிங்க என்னய ரொம்ப நல்லவன்றாய்ங்களப்பு!

டாப்ட்டென் சொல்றவன் மாதிரி இருந்துகிட்டு கேப்ட்டனாம்ல? டாஸ் தோத்தியா, மட்டை பிடிச்சியா, பந்தை நக்கினாயா, ஹவுஸ்ஸட் கேட்டாயா, பால் வாஸ் நாட் கமிங் டு த பேட் என்று பேட்டி குடுத்தியா அல்லது வைட் பால்ல பேட்டை தொட்டு அவுட்தான் ஆனியா? கேப்ட்டனாம்ல. 

ஆஆ நானும் கேப்ட்டந்தான் நானும் கேப்ப்டந்தான்"

Yasir சொன்னது…

கலைஞர் : என்னப்பா கைப்புள்ள இப்படி ஹையா வந்து தண்டாவளத்தில் வந்து உட்காந்துட்டியே...இரயில் வந்துட்டா அப்புறம் கேப்டனை திட்டுவதற்க்கு எனக்கு வேர ஆளை தேட முடியாது…….

வடிவேலு : இரயில் வரும் ஆனா வராது

அம்மா : இங்கே ரயிலை வரவிடாமல் பெரியவர் மாயவரத்திலே தடுத்து வைத்துள்ளார்..இது தேச குற்றமில்லாயா ? நான் ஆட்சிக்கு வந்தால் இந்த மீட்டர்கேஜ் தண்டவாளத்திலயே...பிராட்கேஜ் ரயிலை விட்டு காட்டுவேன்

விஜயகாந்த : அம்மா வந்தால் இது நிச்சயம் நடக்கும்..நடக்….நடக்… ( மயங்குகிறார், உப்பளத்தில் வீசிய காற்றினால் அல்ல உள்ளே இறக்கிய போதையால்)

வைகோ : அய்யோ…நம்மள யாரும் மதிக்கமாட்டுகிறாங்களே இப்படியேபோனால் ”வைகோ “வாகிய நான் "சைகோ" ஆகிவிடுவேன்

ரமதாஸ் : இந்த அலையாத்தி மரங்களையும்,ஆலமரங்களையும் வெட்டி எடுத்து செல்வதற்க்காகவே நான் மத்திய அரசிடம் இங்கு இரயில் விட முறையிடுவேன்

Yasir சொன்னது…

கவிக்காக்காவின்...குபிரென்று சிரிக்கவைக்கும் உரையாடல்களை கண்டு மெய்மறந்து சிரித்து ரசித்தேன்....இன்னைக்கு சோடாகுடிக்காமலே..பாடாபடித்திபுட்டீக காக்கா....

முதல் பரிசு கோஸ்ஸ் டூ கவிக்காக்கா.......

அ.நி சிறந்த கமெண்ட்ஸ்க்கு பரிசெல்லாம் உண்டுல்ல !!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//அ.நி சிறந்த கமெண்ட்ஸ்க்கு பரிசெல்லாம் உண்டுல்ல !!! ///

முதல் பரிசோ ஒன்று அதனைக் கொண்டு எல்லா கமெண்ட்ஸ்க்கும் எப்படி கொடுக்கலாம்னு கழங்களின் தலைகளிடமே கேட்டு சொல்லிடுறேனே !

அபு ஆதில் சொன்னது…

சகோ.யாஸிர்,
//கவிக்காக்காவின்...குபிரென்று சிரிக்கவைக்கும் உரையாடல்களை கண்டு மெய்மறந்து சிரித்து ரசித்தேன்....இன்னைக்கு சோடாகுடிக்காமலே..பாடாபடித்திபுட்டீக காக்கா....//
கவிக்காக்கா சோடா குடித்தாலும் நமக்கெல்லாம் அவர்கள் கொடுப்பது பழரஸம் தான்.
SO .....முதல் பரிசு கோஸ்ஸ் டூ கவிக்காக்கா.......

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

இவர்கள் அந்தக் காலத்திலே இதே இரயிலடியில வந்து படிச்சிருந்தாங்கன்னா அரசியலுக்கு வந்திருப்பாங்களா !?

மாத்தியோச்சு பார்த்தேன்...

ஒருவேளை இப்படியிருந்திருக்குமோ ?

மு.க : ஹோம்ச் சயிண்ஸ் முடிச்சுட்டு வரலாறும் கவிதையும் கதைகளும் எழுதித் தள்ளிக் கொண்டிருக்கலாம் !

ஜெ : ஏதாவது ஒரு பள்ளியில் ஆங்கிலம் சொல்லித் தரும் டீச்சராக இருந்திருப்பார் ! (நிச்சயம் நடிக்கப் போயிருக்க மாட்டார்)

வைகோ : கடல் வழி ஆராய்ச்சியிலும் மறைந்திருப்பவர்களை கண்டு பிடிப்பதில் கிள்ளாடியாகிருப்பார் !

வி.க.: பார்டர் மார்க்கில் பாஸ்ஸாகி எல்லைப் பாக்கம் காவலுக்கு நின்றிருப்பார் !

ர.தா. : தாவரவியல் படிச்சுட்டு மருத்துவம் பார்த்துக் கொண்டிருப்பார் !

வ.வே.: கலெக்டருக்கு டபாலியாக பணிகிடைத்து சேவை செய்திருப்பார் !!

அப்ப்டின்னா உருப்பட்டிருப்பாங்களோ !?

அதிரை முஜீப் சொன்னது…

sabeer.abushahruk சொன்னது…
செம மேட்டர்.
அன்பும் பாசமும் பரிவும் இறக்கமும் மிக்க புரட்சி எழுத்தாளர் முஜீப் அவர்களுக்கு:
"என் பேர்லயும் நான் எழுதின மாதிரி ஒரு பின்னூட்டம் இட்டு என்னை இந்த சபையிலிருந்து ரட்சிக்கவும். நன்றி!"
***********

புரட்சி(த்தலைவியின்)கவி(?) அவர்களுக்கு, நமக்கு இந்தப்பதிவில் நாட்டம் இல்லாததால்,தங்களின் கோரிக்கைக்கு உதவ முடியாததற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கின்றேன்!.

ஒரு வேலை உதவலாம் என்று யோசித்தாலும்,

//ஒரு லாரி நிறைய விஸ்கியும் துணைக்கு அனுஷ்காவையும் உடனே அனுப்புங்கடா"//

என்ற ரேஞ்சிகெல்லாம் நம்மால் யோசிக்க முடியாதுங்கோ! என்பதையும் இங்கே ஆழமாக கூற கடமைப்பட்டுள்ளேன்!

அப்துல்மாலிக் சொன்னது…

நான் உக்காந்து அரச்ச இடம் காலியாயிருக்கு (வி. கா. லேர்ந்து நாலாவது), தப்பிச்சோம். என் சீட் ஸ்ராங்க்

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு