Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இளைஞனே ! 17

அதிரைநிருபர் பதிப்பகம் | May 17, 2011 | , , , ,

பழமையை முழுதாய் ஒதுக்காதே!
புதுமையை முழுதாய் ஏற்காதே!

சிந்தை சீர்தூக்கி அல்லவை தள்ளு!
நல்லதை அள்ளு! வாழ்வில்
வேண்டாம் திள்ளு, முள்ளு !

கற்பனையை நிசமாக்க முயல்வாய்!
நிசத்தினை பொய்யாக்குவோரை இகழ்வாய்!
வருவாய் ஒளிக்கதிராய்!

பெறுவாய் நல் மதிப்பை!
விரைவாய் பணி முடித்து-
தருவாய் நலம் பல
நம் சமுதாய முன்னேற்றத்திற்கு...

- crown -

புதிராய் புலப்படுகிறது !
புதினம் காட்டிய இயக்கங்கள்...

புத்தி சொன்னால் ஏளனம்
பித்து பிடித்தவங்க என்று !

இயக்கவெறி வைத்த வேட்டு
சிதறியோடியது நம்ம ஓட்டு !

ஒற்றுமையை கற்றுத்தந்த நம் மார்க்கம்
வேற்றுமையில் கண்டதோ வேறு மார்க்கம் (வழி)!

இளமை துள்ளும் இஸ்லாமியனே
இனிமேலும் இழக்காதே சுயபுத்தியை !

எதிர்த்தாள ஒரு இயக்கம்
ஏசிப்பேச ஒரு இயக்கம்
தக்லீதுக்கு ஒரு இயக்கம்
தர்மம் கேட்கவும் இயக்கம்

இப்படியாக ஏகப்பட்ட இயக்கங்கள்
என்று மறையும் இந்த மயக்கம் !

- கிரவ்னுக்கு(ம்) காக்கா

17 Responses So Far:

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

சகோதரர் தஸ்தகீர்,

நாளே வரியானாலும், நச்சுண்டு இருக்கு,

//சிந்தை சீர்தூக்கி அல்லவை தள்ளு!
நல்லதை அள்ளு! வாழ்வில்
வேண்டாம் திள்ளு, முள்ளு !//

நாவை திக்கு முக்காட வைக்கிறது இந்த வரிகள். நாவிற்கு நல்ல exercise.

வாழ்த்துக்கள்.

sabeer.abushahruk said...

தலைப்பைப் பார்த்ததும் எனக்கோவென்று நினைத்து உள்ளே போனால் இது எஞ்சோட்டுப் பசங்களுக்கல்ல, இன்னும் இளையவருக்கு என்றுணர்ந்தேன்.

நறுக்கென்று நாலு வரி கிரவுனும்; வெடுக்கென்று நாலு வரி கிரவுனுக்கு காக்காவும் போட்டுத்தாக்கியிருப்பது சிறப்பாயிருக்கிறது.

இந்தா வர்ரேன்.

crown said...

ஒற்றுமையை கற்றுத்தந்த நம் மார்க்கம்
வேற்றுமையில் கண்டதோ வேறு மார்க்கம் (வழி)!
----------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.அருமையா சொன்னிய காக்கா!ஆமா மார்கத்துக்குள் என்ன மூர்கம்? நேர்வழி, நேர்வழி நாங்க மட்டும்தான்னு சொல்லி நம் சகோதர்களுக்கு வைப்பதேன் கொள்ளி??இவர்களை நாளை நம் சமூகம் வைக்கனும் தள்ளி.

Yasir said...

தள்ளு,அள்ளு,திள்ளு,முள்ளு என்று நாக்கை திக்குமுக்காட வைத்த வரிகள்...வரிகள் சிறிதேயனும் வலிமைமிக்க வாழ்வியல் தத்துவங்களை வானுயர தரும் அழகு வார்த்தைகள்...வாழ்த்துக்கள் கவிஞரே...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மார்க்கம் முன்வைத்து ஏன் தர்க்கம்
அதிலும் ஏனிந்த என்ன மூர்கம்?

நேர்வழி(யே), எங்கள் நேர்வழி
மட்டும்தான்னு சொல்லிச் சொல்லி
சகோதர்களுக்கு வைப்பதேன் கொள்ளி?
இவர்களை தாம் வைக்கனும் தள்ளி. !

---------------------

கிரரவுனு இப்ப எப்படின்னு சொல்லு பார்ப்போம் !?

Yasir said...

அபுஇபுராஹிம் காக்காவின் இயக்கங்களை பற்றிய வரிகள்....இயக்க மயக்கத்தில் இருப்பவர்களை குணப்படுத்தும் மருந்தாக செயல்படட்டும்..அற்புதமான கவிதை காக்கா

crown said...

அபுஇபுறாஹீம் சொன்னது…

மார்க்கம் முன்வைத்து ஏன் தர்க்கம்
அதிலும் ஏனிந்த என்ன மூர்கம்?

நேர்வழி(யே), எங்கள் நேர்வழி
மட்டும்தான்னு சொல்லிச் சொல்லி
சகோதர்களுக்கு வைப்பதேன் கொள்ளி?
இவர்களை தாம் வைக்கனும் தள்ளி. !
-----------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் . முன்பு இது போல் எழுதிவிட்டதால் நான் அதை மருபடியும் எழுதுவதை பெரும் பாலும் தவிர்கிறேன்.

Shameed said...

என்னப்பா கூட்டணி போட்டு கொண்டு கவிதையில் வெடி வைத்து தூள் பரத்துரிங்க

sabeer.abushahruk said...

நல்ல முனைப்போடு துவங்கிய கவிதை சட்டென முடிந்தது ஒரு குறைபோலத் தெரிவதால் அபு இபுறாஹீம் நீட்டினாரா?

கிரவுன் உற்சாகப்படுத்தும்போதெல்லாம் மெய்சிலிர்க்கும். இதிலும்தான். புதுமை பழமை என்று மை வைத்துவிட்டு, பிறகு வாராய் என்று உற்சாகப்படுத்தி இழுப்பது நல்ல உக்தி.

கிரவுன் தமிழுரை இங்கு தலையாய பாடமாக!

அபு இபுறாஹீமின் தொடர்ச்சியில் புணைவைவிட எதார்த்தமே விஞ்சி நிற்கிறது.

வாழ்த்துகள் சகோதரர்களே!

sabeer.abushahruk said...

//வருவாய் ஒளிக்கதிராய்
தருவாய் நலம் பல
பெறுவாய் நல் மதிப்பை//

சூப்பர்ப்


//புதிராய் புலப்படுகிறது !
புதினம் காட்டிய இயக்கங்கள்...//
எனக்கும்தான்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஒரு குறைபோலத் தெரிவதால் அபு இபுறாஹீம் நீட்டினாரா?///

கிரவுனிடம் கேட்டது களை கட்டும் வரிகள்
அவன் தந்ததோ காளை சுட்டும் வரிகள் !

கோர்த்தே தந்திடு என்றேன்
பின்னி எடுத்து விட்டான்..

பாதி(யாக)எழுத்திட்டேன்
மீதி(யோடு)எழுதிடுங்களேன் என்று சொல்லாமல் இருந்திட்டான்...

இருப்பினும்..

உள்ளத்தில்
உள்ளதை
உள்ளபடியே
உருக்கியெடுத்திட
உங்களுக்கும்
உரிமையுண்டென்று
உறவாடும்போது
உரைத்திட்டான்

உளறுகிறோன்னோ நிறைய ?

crown said...

அபுஇபுறாஹீம் சொன்னது…
ஒரு குறைபோலத் தெரிவதால் அபு இபுறாஹீம் நீட்டினாரா?///

கிரவுனிடம் கேட்டது களை கட்டும் வரிகள்
அவன் தந்ததோ காளை சுட்டும் வரிகள் !

கோர்த்தே தந்திடு என்றேன்
பின்னி எடுத்து விட்டான்..

பாதி(யாக)எழுத்திட்டேன்
மீதி(யோடு)எழுதிடுங்களேன் என்று சொல்லாமல் இருந்திட்டான்...

இருப்பினும்..

உள்ளத்தில்
உள்ளதை
உள்ளபடியே
உருக்கியெடுத்திட
உங்களுக்கும்
உரிமையுண்டென்று
உறவாடும்போது
உரைத்திட்டான்

உளறுகிறோன்னோ நிறைய ?
--------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் உலறலும் கவிதையாகும். சிலர் கவிதையும் உலறலாகும்.

sabeer.abushahruk said...

உண்மையாக
உறைத்தால்
உலறலல்ல
உள்ளக்கிடக்கைகளையும்
உள்
உணர்வுகளையும்
உவகையோடு
உன்னதமாக
உலகுக்கு
உணர்த்தும்
உமது
உரையில்
உயிருண்டு!

ZAKIR HUSSAIN said...

அது எப்படி கிரவுன் தட்டினால் மட்டும் கீ போர்டில் தமிழாய் கொட்டுகிறது???

அபு இப்ராஹிம் தொடர்ந்ததும் தமிழ்த்தேன்...

crown said...

ZAKIR HUSSAIN சொன்னது…
அது எப்படி கிரவுன் தட்டினால் மட்டும் கீ போர்டில் தமிழாய் கொட்டுகிறது???

அபு இப்ராஹிம் தொடர்ந்ததும் தமிழ்த்தேன்...
--------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். சகோ.ஜஹீர் நீங்க எப்ப கீபோர்ட தட்டினாலும் மனதத்துவ கருத்துக்களும். நகைச்சுவையும் கொட்டுதோ அதே மாதிரிதான் இதுவும். ஆனால் உங்களிடம் இருந்து கொட்டுவது அதிகம் என்னிடமிருந்து வருவது கம்பி. சும்மா , ஒரு கொத்து கரிவேப்பிலை போல.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//sabeer.abushahruk சொன்னது…

உண்மையாக // வே

உருக்கிட்டீங்க !

அப்துல்மாலிக் said...

இளமை துள்ளும் இஸ்லாமியனே
இனிமேலும் இழக்காதே சுயபுத்தியை

இது ரொம்பமுக்கியம் அமைச்சரே..!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு