Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வித்தியாசமானவர்கள் - பகுதி 3 24

ZAKIR HUSSAIN | May 26, 2011 | ,

 எப்போதோ நடந்த விசயங்களுக்கு இன்றைய வரை மனதில் வைத்துக்கொண்டு தானும் முன்னேராமல் மற்றவனையும் முன்னேராமல் தடுக்கும் "பிரேக் இன்ஸ்பெக்டர்" கள் நிறைந்த உலகம் இது. இதில் காமெடி என்னவென்றால் ஒரு அட்சரம் கூட பிசகாமல் தான் இப்படி ஆகிவிட்டதற்கு தான் எந்த விதத்திலும் காரணம் இல்லை என்று கல்வெட்டு மாதிரி சொல்வார்கள்.

சில வருடங்களுக்கு முன் [ இங்கேயும் ஃபிளாஸ்பேக் எல்லாம் எழுதுவோம்ல'] எனக்கு தெரிந்த ஒருவர் தான் முன்னேராமல் போனதற்க்கு காரணம் , 'கப்பலுக்கு போகும் போது குறுக்க பண்ணி கிராஸ் ஆயிடுச்சி'... அதுதான் காரணம் என்றார். இதை சொன்னவர் அதிராம்பட்டினத்து காக்கா. அதை ஆர்வத்துடன் கேட்டது முத்துப்பேட்டை நானா. இந்த முத்துப்பேட்டைக்காரர் திடீரென்று மண்டையில் பல்ப் எரிய..எப்படி காக்கா தண்ணிக்கப்பலுக்கு குறுக்கே பண்ணி கிராஸ் பன்னமுடியும்..லாஜிக் உதைக்குதே என இஸ்ரோ விஞ்ஞானி ரேஞ்சுக்கு கேட்டார்.

உடனே அதிரை ஆள்..'சொல்ரதை சரியா கேளுங்க... நான் நடக்கும்போது கிராஸ் ஆனதுன்னு சொன்னேன்... கப்பல் போகும்போது நடுக்கடலில் கிராஸ் ஆனுச்சினா சொன்னேன்" என்றார். இந்த விசயம் நடந்தது இந்தியா சுதந்திரம் அடைய முன்னாடி. தெரியுமா என்றார். உடனே இந்த முத்துப்பேட்டைக்காரர் சொன்னது'..." இருந்தாலும் காக்கா இத்தனை வருசத்திலெ அந்த பண்னி செத்திருக்குமே காக்கா..இன்னுமா நீங்க முன்னேர அந்த பண்ணி தடையா இருக்கு?' என்று ஒரு குரோர்பதி கேள்வி கேட்டாரே....

வாழ்க்கையில் பணம் அதிகம் சம்பாதிக்க சிலர் எடுத்திருக்கும் ஒப்பற்ற முயற்ச்சிகளை பார்த்தீர்களானால்Millionair Mindset நடத்தும் வெள்ளைக்காரன் கூட தலையில் துண்டுபோட ஆரம்பித்துவிடுவான்.[ அவைங்களும் சரியா சொல்ரானுகளானு அவனுகளுக்கெ வெளிச்சம் ]

# ஒப்பற்ற முயற்சிகளை பார்ப்போம்.

  • ராசியான மணிபர்ஸ் என்று நாய் விழுந்து குதறியமாதிரி ஒரு பர்ஸ் வைத்திருப்பார்கள்.
  • தலைமாட்டுக்கு மேல் உள்ள சில படங்களுக்கு பத்தி காண்பிப்பார்கள்.[ பில்கேட்ஸ் , அம்பானி ஆபிசில் குத்துமதிப்பா ஒரு 200 படமாவது இருக்கனுமே காக்கா]
  • கல்லா பெட்டியில் மவுலூது ஒதிய கேசட்டை வைத்திருந்த ஒருவர் சொன்னது...'பணம் வரும்'
  • கையில் வைத்திருக்கும் சில நூல் சமாச்சாரங்கள் கஸ்டமரை கொண்டுவந்து சேர்க்கும் என்று ஒரு ஆள் அமெரிக்காவின் சிட்டி பேங்க் குரூப்பில் கிரடிட்கார்ட் பகுதியின் ஜெனரல் மேனேஜரையே நம்பவைத்து ஜல்லியடித்ததை பார்த்து அசந்து விட்டேன்.
  • பிரிதொருவர்... தான் போட்டிருந்த பெல்ட் ரொம்ப அறுதபழசாகிப்போனதை சொல்லிக்காட்டியவரை ராஜபக்சேயை பார்ப்பது போல் பார்த்தார். சிலருக்கு வருமானம் அதிகம் இருந்தாலும் தனக்கு செலவுப் செய்து கொள்வதை அது அத்யாவசியமாக இருந்தாலும் வேஸ்ட் என நினைப்பார்கள்.
  • முன்பு பழக்கப்பட்ட ஒருவர் ...அவரின் வருமானத்தில் ஒரு நாளைக்கு ஒரு லேப்டாப் வாங்கலாம், கணக்கில் திறமையான ஆள். இருந்தாலும் அவரின் பாக்கெட்டில் இருக்கும் சின்ன சின்ன பேப்பர்களுடன் கொஞ்சம் பணம் , பார்க்கிங் சீட். இன்னபிற பேப்பர் சமாச்சாரங்களை எப்படி மெயின்டைன் செய்கிறார் என்பது ஒரு மிகப்பெரிய கேள்வி.
  • இங்கு ஒருவர் [உறவினர்] இருந்தார், 10 நிமிடம் அவரிடம் பேசினால் குறைந்தது 20 பிசினஸ் அவரால் செய்ய முடியும் என்பதுபோல் பேச்சு இருக்கும். நானும் ஒரு மரியாதைக்கு அவர் பேசுவதையெல்லாம் அக்கரையுடன் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் போன பிறகு அவரது நண்பர் என்னிடம் சொன்னது
              ' என்ன சொல்றாப்லெ...ரொம்ப அள்ளிவிடுவானே???'

              'ச்சே அப்படியெல்லாம் இல்லெ"

' எனக்கு தெரியும்..இவன்லாம் விட்டா ரால் வித்தே ராக்கெட் வாங்கிடலாம் நு சொல்வான் ... தமிழில் புதுக்கவிதை , மரபுக்கவிதை மாதிரி 'வெடப்பு கவிதை' நு ஒன்னு இருக்கும்னு அப்பதான் தெரிஞ்சது.

காருக்குள் உட்கார்ந்து “ YOU CAN DO IT.. I CAN DO IT” என ஒருவர் கத்திகொண்டிருந்தார்...இன்னொரு ஏஜன்சியில் இருந்தவராகையால் செமினார் சமயங்களில் பார்க்கும் வாய்ப்பு அதிகம். ஆனாலும் கத்திய இடம் ஒரு டிராபிக் லைட் அருகில். எதற்க்கு கத்தினீர்கள் அன்று என கேட்டபோது ..அப்போதுதான் வாழ்க்கையில் முன்னேர முடியும் என்றார். அவ்வளவும் POWERFUL POSITIVE AFFIRMATION தெரியுமா என்றார்.

பலகீனமான எண்ண ஓட்டம் உள்ளவர்கள் அதை மறைக்க கத்துவார்கள் என்பது "ஜென் [ZEN]' தத்துவம்.

ZAKIR HUSSAIN

24 Responses So Far:

Yasir said...

வித்தியாசமானவர்களை பற்றி நல்ல நகைச்சுவை ததும்ப வழக்கம்போல் கலக்லாக எழுதியுள்ளீர்கள் காக்கா

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அசத்தல் காக்காவின் ஆர்டிகலில் ஏதாவது ஒரு சில குறை கண்டுபிடிச்சு விமர்சனம் செய்யலாம்னு தேடித் தேடிப் பார்க்கிறேன் ம்ம்ம்ஹும்ம்ம்ம் ஒன்னுமே கிடைக்க மாட்டேங்குது அப்படின்னா எப்பத்தான் வித்தியாசனமாங்களை திருத்துறது ? விமர்சனம் பன்னலைன்னா திருந்தமாட்டங்களா ?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஜாஹிர் காக்கா,

வித்யாசமானவர்களை வித்யாசமாக எழுதியிருக்கீங்க...

முதல் நான்கு வரிகளில் சொன்ன ஸ்பீட் பிரேக்கர் மனிதர்களை நிறைய சந்தித்ததுண்டு. தன் மோசமான நிலைக்கு தானே காரணம் என்று ஒத்துக்கொள்வது ஒரு சிலரே.

//•ராசியான மணிபர்ஸ் என்று நாய் விழுந்து குதறியமாதிரி ஒரு பர்ஸ் வைத்திருப்பார்கள்.//

இந்த மாதிரி சென்டிமெட் பார்ட்டிகள் ரொம்ப அதிகம்..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

எங்க அலுவலகத்தில் ஓர் அறைகுறை ஆங்கில அறிவுள்ள மேலாளர், MS wordல் அவர் அறிவுக்கு தகுந்தார்போல் எதாச்சு type செய்துவிட்டு, right click செய்து spelling check செய்து மைக்ரோ சாப்ட் கொடுக்கும் Optionல் அவருக்கு தெரிந்த ஏதாவது ஓர் வார்த்தையை select செய்து நமக்கு மடலாக அனுப்புவார். வரும் பாருங்க மடல்.. நம்ம பக்கத்து மாநிலத்து மொழியைகூட தெளிவா படிச்சு பேசிடலாம், ஆனா அந்த ஆளு எழுதுன ஆங்கிலத்தை நீங்களேல்லாம் படிச்சுட்டா போதும் காக்கா நம்ம நாட்டு IAS exam ஈசியா பாஸ்பண்ணிடலாம்.

இப்படியுமா இருப்பாய்ங்க !

sabeer.abushahruk said...

"வெடப்புக் கவிதை" கலக்கல்.

ரால் வித்தே
ராக்கெட் வாங்கிடலாம்
மீன் வித்தே
மூனுக்குப் போயிடலாம்

வாயைக் கொண்டே
வங்காளம் போகலாம்
நோயை எல்லாம்
பேசியே போக்கிடலாம்

...தயவுசெய்து இதைத் தொடருங்கப்பா. வித்தியாசமா இருக்கும். நான் கொஞ்சம் லேட்டா வர்ரேன்.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

நாய் குதறிய பர்ஸ் இதை படித்ததும் முதலில் என் பர்ஸ்சை எடுத்து பார்த்துக்கொண்டேன் அப்படி ஒன்றும் குதறல் இல்லை!

கட்டுரையில் விமர்சனமும் உதாரனங்களும் அருமை

SHameed
dammam

Unknown said...

சகோ ஜாகிர் அவர்களிடமிருந்து மற்றுமொரு வித்தியாசமான பதிவு,

கூகுளில் அதிரையை தேடியபோது, ஒரு வலைப்பூ கிடைத்தது அதில் அதிரை நிருபர் அளவுக்கு புல் மீல்ஸ் கிடைக்கவில்லை என்றாலும் ஈவினிங் ஸ்நாக்ஸ் போல சில விஷயங்கள் படிக்க முடிந்தது நீங்களும் போய் பாருங்களேன்.http://adiraivasi.blogspot.com/

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//"வெடப்புக் கவிதை" கலக்கல்.

ரால் வித்தே
ராக்கெட் வாங்கிடலாம்
மீன் வித்தே
மூனுக்குப் போயிடலாம்

வாயைக் கொண்டே
வங்காளம் போகலாம்
நோயை எல்லாம்
பேசியே போக்கிடலாம்//

குறுகிய தெருவிற்கு
அகல இரயில் பாதை !
சம்சாரம் தாக்கி
மின்சாரம் மறைந்தது !

sabeer.abushahruk said...

காருவா போதுமே
கார் வாங்கிடலாம்
பத்துரூவா போதும்யா
பஸ்ஸே வாங்கலாம்!

(அதுசரி, என்ன ஹமீது இப்பவெல்லாம் செக்ரெட்டரி வச்சிதான் பின்னூட்டுவாரோ?)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எஞ்சிய சாப்பாடு
கெஞ்சியவனுக்கு விருந்து!
உறவுக்குள் உரசல்
ஊருக்குள்ளே அலசல் !

Sஹமீத் காக்காவை உள்ளே வர அளவுகோடு ஆசிரமத்தில் கோடு போட்டிருப்பாங்களோ!!

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
sabeer.abushahruk சொன்னது…
"வெடப்புக் கவிதை" கலக்கல்.

ரால் வித்தே
ராக்கெட் வாங்கிடலாம்
மீன் வித்தே
மூனுக்குப் போயிடலாம்

வாயைக் கொண்டே
வங்காளம் போகலாம்
நோயை எல்லாம்
பேசியே போக்கிடலாம்.
-------------------------------
மொட,மொட சட்டையும்
கர,கர பேச்சும் தலைவனாக்குமா?
கையில் புட்டியும், வெத்தல பெட்டியும்
சினிமா கவிஞனாக்குமா?
தண்டவாளம் மட்டுமே இருந்தா
கம்பன் வருமா?
கையிள் அறிப்பு காசுதருமா?
காகம் தலையில் எச்சம் போட்டால்
கணினியில் இமெயில் வருமா?
மூட நம்பிக்கையும், வெத்து பழமொழியும்
வித்தியாசமானவர்கள் நம்மவர்கள்.
சகோ.ஜாஹிர் வழக்கம் போல் தலையில் குட்டு
எழுத்தில் ஸோட்டு!அறிஞர்கள் அவையில் இந்த சின்னவனின் பாராட்டு.

crown said...

பொதுவில் ,கருத்துப்பதிவில், சரியான படி பதியமுடியாது(சரியான வணங்காமுடியா இந்த கணினி?) போனதால் மறுபடியும், மறுபடியும் கணினி படியும் படி பதிந்தேன் . மன்னிக்கவும் .

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//மறுபடியும் கணினி படியும் படி பதிந்தேன் . மன்னிக்கவும் . //

பக்கத்துப் பதிவில் சொன்னது தான் இங்கேயும் !

பிளாக்கில் புடிக்காத வார்த்தை "மன்னிக்கவும்"

கணினிக்கும் மல்லுக் கட்டத் தெரியும்னு சொல்லியா தெரியனும் !

chinnakaka said...

ஒரு சிலர் உண்டு தண்னம்பிகை இழந்து தன் வாழ்க்கையை தொலைத்து காலத்தை குறை கூறி பழியை படைத்தவன் மீதே சுமத்துகிறார்கள் நஊது பில்லாஹி
فَذَرْهُمْ فِي غَمْرَتِهِمْ حَتَّىٰ حِينٍ
எனவே, அவர்களை ஒரு காலம் வரை தம் அறியாமையிலேயே ஆழ்ந்திருக்க விட்டுவிடும். 23:54
ஆகவே, சிறிது காலம் வரை நீர் அவர்களை விட்டும் விலகியிருப்பீராக.37:178.

Meerashah Rafia said...

இப்படி கட்டுரையையே வித்தியாசமாக எழுதும் நீங்களும் ஒரு வித்தியாசமானவர்களே.

இது எப்புடி...?!?
வித்தியாசமா கம்மன்ட் அடிச்சோம்ல...?!?

ZAKIR HUSSAIN said...

///வித்தியாசமாக எழுதும் நீங்களும் ஒரு வித்தியாசமானவர்களே.//

இப்படியே உசுப்பேத்தி, உசுப்பேத்தி...ரணகள படித்திட்டீங்கப்பா...

கொஞ்சம் பிசி நாளை மற்றவர்களுக்கு பதில் எழுதிடலாம்

அபு ஆதில் said...

வித்தியாசமானவர்கள் பகுதியில வித்தியாசமானவர்கள் பற்றி வித்தியாசமாக சொல்லியிருப்பது அழகு என்றால், அதை ZAKIR HUSSAIN வித்தியாசமாய் சொல்லியிருப்பது தான் ரொம்பவும் அழகு.

ZAKIR HUSSAIN said...

இந்த ஆக்கத்துக்கு ஊக்கம் தந்த என் பாசத்துக்குறிய சகோதரர்கள் ஜாபர்,கிரவுன், அபு ஆதில், சின்னக்காக்கா,அபு இப்ராஹிம், தாஜுதீன்
மீராசா, யாசிர் அனைவருக்கும் எனது நன்றி. ஒரு வாரமாக இங்கு கடும் வெயிலும் சாயந்தரத்தில் பெய்யும் கடும்மழையில் ட்ராபிக் ஜேமில் படும் அவதியில் கொஞ்சம் கிரியேட்டிவ் மைன்ட் இருப்பதும் ஏதொ சர்க்யூட் பிரச்சினை மாதிரி எழுதக்கூட முடியவில்லை.

[எதோ தீஞ்ச வாடை வருதே,,,,துபாயில் வெயிலில் அவதிப்படும் ஆட்களின் வயத்தெரிச்சலா...'கடும் மழை' என்ற வார்த்தையை படித்த பிறகு...]

ZAKIR HUSSAIN said...

அதிரை நிருபர்" கவனத்திற்க்கு...

டெக்னிக்கள் & வடிவமைப்பு.

தமிழ் / ஆங்கிள வரப்புகள் சமயங்களில் காணாமல் போய்விடுகிறது [ உமர் தமிழ் ஏரியா] . பேஜ் லோடிங் தாமதமாகிறது. பிற வளைத்தளங்களின் பெயர்கள் ஒரே மாதிரி இருப்பதற்க்கு பதில் 'ஸ்க்ரீன் ஷாட்' மாதிரி போட முடியுமா?. ஓஸ்வாஸ் பள்ளிக்கூடம் மாதிரி கிடக்கும் சில வலைத்தளங்களுக்கு ஏதாவது புத்துயிர் தர முடியுமா? [ வாசகர்கள் யோசனை வரவேற்கப்படுகிறது !!!...]

'நம் பதிவுகள்' நிறைய காலி இடம் கிடக்கிறது [ ப்ளாட் போட்டு வித்திடலாமானு சாகுல் கேட்டால் நான் பொறுப்பல்ல ] நம் பதிவுகள்' நிறைய காலி இடம் கிடக்கிறது [ ப்ளாட் போட்டு வித்திடலாமானு சாகுல் கேட்டால் நான் பொறுப்பல்ல ]. நல்ல விசயங்கள் கற்றுத்தரும் யூ ட்யூப் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் இணைக்களாம் [ உதாரணம்; வின்டோ 7 , ஆபிஸ் 2010 பயன்பாடுகள், என்னிடம் டீ சர்ட்டை எப்படி சீக்கிரமாக மடிப்பது என்ற ஜப்பானின் யூ ட்யூப் இருக்கிறது.. நம் ஊரை மகிழ்விக்க ..எப்படி ஹைதராபாத் தம் பிரியாணி செய்வது, தந்தூரி சிக்கன் அடுப்பு இல்லாமல் எப்படி செய்வது..[ இதெல்லாம் போடாட்டி சாப்பிடாமெ செத்த பாவம் வந்துடப்டாதுல]

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

///[எதோ தீஞ்ச வாடை வருதே,,,,துபாயில் வெயிலில் அவதிப்படும் ஆட்களின் வயத்தெரிச்சலா...'கடும் மழை' என்ற வார்த்தையை படித்த பிறகு...]//

நேற்று டெஸர்ட் சமையல் கட்டில் நின்றது நீங்கதானா காக்கா ? தீஞ்சிருந்தாலும் செம டேஸ்ட் காக்கா !

உங்க காட்டில் மழை என்றால் நாங்களிருக்கும் நாட்டில் மணல் மலைகள்... ஏறினோம் இறங்கினோம்... ஆனால் டிராஃபிக் ஜாம் இல்லை !

இனிப்பு சாப்பிடலாம் வாங்க காக்கான்னு கவிக் காக்கவை அழைத்தேன் இனிப்போடுதான் இருக்கிறேன் என்றார்கள் எறும்பு மொய்க்காம பார்த்துகிட்டுன்னு சொன்னது டெஸர்ட் ஹூமர் !

டெஸர்ட் சஃபாரி(குதிரை)யிலிருக்கும்போது என் தம்பி மகன் சொன்னான் ஓட்டுநருக்கு வழி தெரியவில்லை அதான் இங்கேயே சுத்திகிட்டு இருக்கார்னு !

எங்களைப் பார்த்து பயப்படாத ஒட்டகம் ரொம்பவே பிடிச்சிருந்தது ஆனால் ஏறி உடகார்ந்து சவாரி செய்தால் எந்திருக்காதோ என்று எங்களுக்குத்தான் பயம் இருந்தது !

யாசிரின் மகன் மணல்மேட்டு எட்ஜிலிருந்து என்ஜாய் என்று ஓடும் மணலை ஓரங்கட்டப்பார்த்தார் !

இடுப்பை மடிக்க/ஒடிக்க ஆரம்பித்ததும் துடிப்பானவங்க அங்கேயிருக்கட்டுமென்று மணல் படிக்கட்டில் வந்து அமர்ந்து கொண்டேன்...

எங்களோடு வாந்தியும் வருமென்று இடம் ஒதுக்கி வைத்திருந்தோம் ஆனால் வர மறுத்து விட்டது...

இதுக்குன்னு ஒரு பதிவு போடனும்... அங்கே மழைன்னு சொன்னதும் எங்க பாலை(விசிட்) கண்ணுக்கு முன்னாடி வந்து கண்ணாடி மாட்டிடுச்சு காக்கா !

ஆகவே... மழை பேய்ந்ததும் காய்ந்திடும்... எங்க வெயில் என்னைக்குமே வெயில்தான் காக்கா !

sabeer.abushahruk said...

சரியாச் சொன்னீர்கள் அபு இபுறாஹீம். டெஸெர்ட் சஃபாரி ஒரு கவிதையாய் என் நினைவில் நிற்கிறது.

நாளைக்குள் எழுதிடறேன். ஃபோட்டோஸ் மற்றும் விடியோவோட போட்டா மலேசியாக்காரருக்குத்தான் எறியும்.

Yasir said...

”பாலைவனத்தில் ஒரு சோலைவனம்” என்று தலைப்பு வைங்க காக்கா....அந்த அளவிற்க்கு என்ஜாய் செய்தோம்

அதிரைநிருபர் said...

//ZAKIR HUSSAIN சொன்னது…

அதிரை நிருபர்" கவனத்திற்க்கு...

டெக்னிக்கள் & வடிவமைப்பு..///



சகோதரர் ஜாஹிர் அவர்களின் யோசனைக்கு மிக்க நன்றி.

ஒரு வாரம் பொருத்திருங்கள்... நீங்கள் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்ற முயற்சி செய்கிறோம்.

தங்களிடம் ஓர் வேண்டுகோள்... ஜூன் 21ம் தேதி அதிரைநிருபர் தன் முதல் வருடத்தை நிறைவு செய்கிறது.. நேரம் கிடைத்தால் அதிரைநிருபர் செயல்பாடுகள் பற்றி வித்யாசமா எழுதுங்கள் சகோதரர் ஜாஹிர்.

இப்னு அப்துல் ரஜாக் said...

ஜாகிர் காக்கா மாதிரி - கட்டுரையும் வித்தியாசம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு