Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இன்னமுமா புரியல ? ! - அனுபவம் பேசுகிறது ! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | May 09, 2011 | , ,

அட.. ! நீங்க நினைச்சீங்கள அதேதாங்க..

அந்த காட்சி வழித்தொடர்பியல (Visual Communication) பத்திதாங்க அசலா அசைபோட போறேன்...

என்ன காக்கா உங்க கூட பேசி ரொம்ப நாள் ஆச்சே, ஊர்ல எல்லாரும் எப்புடி ஈக்காக?

எல்லாம் நல்லாத்தான் ஈக்காக தம்பி. அது சரி... சவூதி அரேபியாவிலிருந்து சவுத் இந்தியாக்கு திடீர்னு காத்தடிக்குதே என்ன சங்கதி!?

ஒன்னும் இல்ல காக்கா, உங்களைலாம் பார்க்க விண்ணைத்தாண்டி வரமுடியாட்டியும் நம் மண்ணின் நிகழ்வுகளை கண் முன் கொண்டுவரும் நமதூர் வலைப்பூக்கள் மூலம் கல்வி மாநாடு நிகழ்ச்சிய பார்த்தேன், பண்ணன்டாம் கிளாஸ் புள்ளயோல்வலெல்லாம் பொது தேர்வு எழுதி இருக்காக. உம்மா, வாப்பா காரவொல்லாம் நம்ம புள்ளைய அடுத்து என்ன படிக்க வைக்கிறதுன்னு யோசிக்க
ஆரம்பிச்சாடகன்னு தெரியுது.

அதான் காக்கா இந்த பாழாப்போன 2G 3G சோனியாஜி'ன்னு மக்கள் காஞ்சி போயிருக்கிறத பத்தி பேசாம, நாம படிச்ச காட்சி வழித்தொடர்பியல் பத்தி நம்ம மக்களுக்கு சொல்லி நாடு உருப்படுதோ இல்லையோ நாம உருப்பட வழியபாபோம்கிற நினைப்புல எழுதிகிட்டு இருக்கேன். நீங்க அப்பறமா நம்ம ஊர் வலைப்பூல வந்து பாருங்க காக்கா.

இப்போ எழுதபோறேன்…..

ஆம்! வாழ்கையில் நாம் ஒவ்வொருவரும் பல காட்சிகளை கண்டிருப்போம்.பல காட்சிகளில் கோர்வைதான் நம் வாழ்கை. நான் கண்ட/கற்ற காட்சி வழித்தொடர்பியல் (Visual Communication) பட்டப்படிப்பை பற்றி ஒரு அலசல் செய்ய ஆசைபடுகிறேன்.

விசுவல் கம்யுனிகேசன் என்று சொன்னவுடன் சிலருக்கு ஞாபகம் வருவது சினிமாதுரைக்கான படிப்பு என்பதுதான். உண்மையில் இதில் சினிமா என்பது பத்தில் இரண்டு பகுதி எனலாம். மேலும் அறிய கீழே படிப்போமே!!

பயிற்சி விவரம் :
  • Diploma in Visual Communication (6 months)
  • B.Sc., Visual Communication (3 years)
  • M.Sc., Visual Communication (2 years)
இதை சார்ந்த இன்ன பிற முதுநிலை பட்டப்படிப்புகள்
  • M.A. Advertising and Public Relation (2 years)
  • M.A. Mass Communication and Journalism (2 years)
இப்படிப்பின் 'சபாஷ்(+ve) என்ன? சவால்(-ve)' என்ன? என்பதை பார்போமா?

முதலில் இந்தப்படிப்பைக்கொண்டு எந்தந்த துறைக்கு நுழையலாம், எதையல்லாம் கற்றுக்கொடுப்பார்கள் என்று பார்ப்போம். சாதாரணமாக ஒரு பட்டபடிப்பு படித்தால் அது நம்மை ஒரு துறைக்கோ அல்லது அதிகபட்சமாக மூன்று, நான்கு துறைக்கோ செல்வதற்கு உதவும். ஆனால் இந்தப்படிப்பைகொண்டு பல்வேறு துறையில் கால் பதியலாம்.

அவைகளில் சில :-
  • 1. Compeer
  • 2. Film Critic
  • 3. Editor
  • 4. DTP Operator
  • 5. Script Writer
  • 6. Photographer
  • 7. Cinematographer
  • 8. film maker (Short film/Documentary/Cinema/Serial)
  • 9. Journalist
  • 10. Drawing Artist
  • 11. 3D Animator
  • 12. Web Designer
  • 13. Graphic Designer
  • 14. Printing Technology
  • 15. Copyrighter
  • 16. Advertiser
மேலே குரிப்பிடப்பட்டவைகளில் பெரும்பாலானோர் தேர்ந்தெடுப்பது photography, cinematography, film Industry, Graphics / Web / 3D
Designing, Journalism, Advertising. குறிப்பிட்ட துறையில் ஜாம்பவான் ஆவது அவரர் ஆர்வத்திற்கேற்ப அமைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

அட..! என்ன காக்கா! சட்டுன்னு நாற்காலி நுனில உட்கார்ந்துகிட்டு மானிட்டர முறைச்சு முறைச்சு பார்க்கிறீங்க போல!! ஓஹோ.. மேலும் தெரிஞ்சிக்க ஆசையா இருக்கோ!!

சரி சரி.. 'சட்டு புட்டுன்னு விசயத்துக்கு வாப்பான்னு' நீங்க சொல்றது என் காதுல விழுது.. இதோ உங்களுக்காக..

சபாஷ் (+ve)
  • நாளடைவில் ஒருவன் இதை படித்து Journalist ஆனாலும் மற்ற துறைகளை பற்றிய ஞானமும் இருக்கும்.
  • ஒவ்வொரு செமெஸ்டர் விடுமுறையிலும் பயிற்சிக்காக நமக்கு விருப்பமான துறையில் அதற்கேற்ற நிறுவனங்களுக்கு சென்று பயிலும் போதே பயிற்சி பெறலாம்
  • (ஒருசிலர் பிராஜக்ட் என்ற பெயரில் கல்லூரி பக்கம் எட்டிகூட பார்கமாடார்கள், தேர்வு நாளை தவிர.)
  • உதாரணம்: All India Radio, O&M Advertising Agency Visit, Assistant Photographer, Assistant Journalist, Acting, News Reading
  • ஆர்வத்தோடு கல்வி கற்கும் முறை.
  • அதிகப்படியான துறைகளில் சுயமாக, பகுதி நேரமாக சம்பாதிக்கும் வழிகள் உண்டு.
  • உதாரணம்: Web Designing / Logo, Brochure, Business Card Designing, Photography, Videography, etc.,
  • படித்து முடித்ததும் நமக்கு போட்டியாக ஆட்கள் குறைவுதான்
  • மேல்நிலைப்பள்ளியில் நாம் காமர்ஸ், அறிவியல், கணினி போன்ற எந்த துறையை தேர்ந்தெடுத்து படித்திருந்தாலும் இந்த படிப்பை தேர்ந்தெடுக்க அனுமதி உண்டு.
சவால் (-ve)
  • UG படிப்பதற்குகூட PG (Parental Guidance) தேவைப்படும். காரணம் ஹராம்,ஹலாலை பிரித்தெடுத்துக் கூறுவதற்கு.. இப்படிப்பு கொஞ்சம் அப்படித்தான். பொழுதுபோக்கையே ஒரு பிழைப்பாக வைத்திருப்போருக்கு இது வாழைபழத்தை உரித்து வாயில் திணிப்பது போல்தான்.
  • நமதூரில் சிலர் (சிலரா? பலரா?) பெருநாள் அன்றுகூட பெரிய (வெள்ளித்) திரைக்கு வெள்ளை வேட்டி உடுத்திக்கிட்டு போகும் கூட்டம் இருக்கிறப்போ இத சொல்லவா வேணும். அவர்களுக்கு இப்படிப்பு பெரிய சினி கோட்டை. (என்னோடு படித்த சிலரிடம் கல்லூரி நூலகத்தில் அவர்கள் எடுத்த புத்தகங்களைவிட பல நூறு மடங்கிற்கு மேல் திரைப்பட சி.டி.க்கள்தான் அதிகம்.)
  • ஒரு சிலர் எல்லா துறையையும் அரை குறையாக, ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒரு கால் என்றமுறையில் கற்று என்னவாகவேண்டும் என்று இறுதி வரை முடிவெடுக்கமுடியாமல் இருக்கும் சூழ்நிலையும் உண்டு.
  • இப்படிப்பிற்கு அதிகப்படியான செயல் வடிவ பயிற்சி தேவை என்பதால், இப்படிப்பை தொலைதூர கல்வி மூலம் பயின்றால் வெகு குறைவான அறிவே பெறமுடியும்.
  • விரும்பியதை மட்டும் படிக்க உகந்ததல்ல. உதாரணத்திற்கு நிரூபரகவோ, ஓவியராகவோ மட்டும் ஆகவேண்டும் மற்ற பலாய் முசீபத்துகலெல்லாம் நமக்கு வேண்டாம் என்று நினைப்பவர்கள், கலவையாக இருக்கும் இப்படிப்பை படிப்பதற்கு பதில் B. A. Journalism, B. A. Fine Arts போன்ற விரும்பிய தனித்துவ துறைக்கான படிப்பை தேர்ந்தெடுத்து விரும்பிப்படித்து நன்கு தேர்ச்சி பெறமுடியும்.
  • என் பிள்ளை 'ஒரே ஊர் சுற்றுகிறான், சினிமாக்கு போறான், காலேஜில 100% வருகை பதிவு வாங்க மாட்டிருக்கான்' என்றெல்லாம் இப்பட்டபடிப்பு ஆசிரியரிடம் நீங்கள் புகார் கூறினால்... உங்களை பட்டப்பகலில் மேலும் கீழும் வேற்றுகிரக வாசியை பார்ப்பதுபோல் பார்த்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. இப்படிப்புகளை கற்றுக் கொடுப்பவர்கள் ஒன்னும் வாவண்ண சாரும், எஸ்.கே.எம்.ஹாஜாமி சாரும் அல்ல. ஹும்ம்.. சீனி விற்பனை செய்கின்ற கடையில் போய் 'என் பையன் அதிகம் சீனி சாபிடுகின்றான் கன்டியுங்கள்' என்று புகார் செய்யும் கதைதான்.
என் கருத்து:

என்னை பொறுத்தவரையில் இப்படிப்பு ஒரு கூர்மையான கத்தியை போல். கத்தியை வைத்து காய்கறி அறிவதும், கழுத்தை அறிவதும் பயன்படுத்துபவரின் மனநிலையை பொறுத்தது. ஆனால், ஜாக்கிரதை இரு முனையிலும் கூர்மை அதிகம்.

WARNING: HANDLE EEMAN WITH CARE

மேலும் தகவல் அறிய பின்னூட்டத்தில்(comments) பின்னி எடுத்தால் அனைவருக்கும் பயனளிக்கும் என நம்புகிறேன்.

இல்லாவிடில் அனுப்புங்க visualmeera@gmail.com என்ற உங்கள் அன்பு சகோதரனின் மின்னஞ்சலுக்கு..

அடுத்து யாரோ அவங்க படிச்சத அலசல் பண்ணுறதுக்கு கச்சல கட்டிக்கிட்டு நிக்கிறதா தெரியுதே!!

சீக்கிரமா வாங்க.. இந்த கல்விக்கான மாதத்தில் உங்களைத்தான் எதிர்பார்த்தோம்.

இப்படிக்கு,

-மு.செ.மு.மீராஷாஹ் ரஃபி அஹமத்
-Web Designer & Digital Media Visualizer
-B.Sc., Visual Communication
-M.A.Advertising and Public Relation

16 Responses So Far:

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். சபாஸ் சரியான போட்டியை ஆரம்பித்திருக்கிறீர்கள் தம்பி! வாழ்துக்கள்.சவாலான எழுத்துறையில் திவாலான பல பத்திரிக்கை உள்ளது. உங்கள் அனுகூலமான (WARNING: HANDLE EEMAN WITH CARE) எச்சரிக்கை அருமை உங்களைப்போல் உள்ளவர்கள் பத்திரிக்கைத்துறைக்கு வரனும்.அருமை!வேறென்ன சொல்ல???

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(மீ) : கோடு போட்டா எப்படியிருக்குமென்றூதானே கேட்டோம் ரோடு மட்டுமா போட்டிருக்கே ! சூப்பர் ரூட்டுமெல்ல போட்டுக் கொடுத்திருக்கே !

படிப்பின் பயணங்கள் (என்றுமே) முடிவதில்லை என்றொரு படைப்பை பேச்சு வழக்கில் ஆரம்பித்து இரயில் பயணங்களில் தொடர்ந்து பேருந்து ஜன்னலோரம் அமர்ந்த உணர்களை ஏற்படுத்திய இந்தப் படைப்பு அருமையான கிரியேட்டிவ் (உருவாக்கமே)...

கத்தியைக் கையில் கொடுத்து செய்ய நினைத்ததைச் செய் என்று சொல்லியவிதமும் அதன் வேதனையோ சாதனையோ கத்தியை வைத்திருப்பவனின் திறன் அல்லது ஆர்வத்தைப் பொறுத்தது !

இப்படியொரு ஆக்கம் எழுதனும்னா படிக்கும்போதே பாடங்களை ஊன்றி ரசித்திருக்கனும் (கொடுப்பினை) !

sabeer.abushahruk said...

சபாஷ்,
எதையும் சுவாரஸ்யமாக சொல்லத் தெரிந்த வாத்தியார்னு இங்கே ஏற்கனவே நிரூபிச்சாச்சு. எனக்கு முதல் பெஞ்சைக் கொடுத்துவிடவும். எல்லா பீரியடையும் அட்டென்ட் பண்ற டைப் நான்.

துவக்கமே தூக்கலா இருக்கு. கலக்குங்க தம்பி (களே)

யாருக்காவது ஹைட்ராலிக்ஸ்/ஹெவி மெஷினரீச்ல இன்டெரெஸ்ட் உண்டா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//யாருக்காவது ஹைட்ராலிக்ஸ்/ஹெவி மெஷினரீச்ல இன்டெரெஸ்ட் உண்டா? //

இதென்ன கேள்வி இண்டெரஸ்டா சொல்றவங்க கேட்கிற கேள்வியா இது !.

கற்றவர் எல்லாம்
கைதூக்கிவிட வேண்டும்

என்று கவி வரி தந்திட்டு இப்படியெல்லாம் கேட்க்கப்படாது ! அதலால் START SCRIPT WRITING > ACTION >>>>>>>

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(மீ):

திரைப் படங்களில் பார்வை பதிக்கும் யாவரும் அதன் நிழல் நிஜங்களை அறிந்திருப்பதில்லை பெரும்பாலும் அதிலும் அவைகளின் காட்சியமைப்பு பயண்பாட்டின் தடம் மாற்றமாக இருப்பதனால் நாம் அதிலிருந்து ஒதுங்கியிருக்கோம்.

காட்சி அமைப்பின் அற்புதங்களை விளங்கியிருந்தால் நாமும் சாதிக்கலாம், என்று வேகம் வரும் அதனை பயண்பாட்டுக்குள் கொண்டு வரும் லாவகமும் பயின்றவர்களின் கையில்தான் இருக்கிறது.

நான்கு வருடங்களுக்கு முன்னால் நான் வேலை செய்யும் தொழிற்சாலையின் ஒரு நாள் செயல்பாட்டினை ஆவணப் படம் எடுக்க மூன்று தனித் தனி நிறுவனங்களை வரவைத்து ஆளுக்கு அரைநாள் படமாக்க அனுமதிக்கப்பட்டனர்.

அதன் காட்சியமைப்புகள் எப்படியிருக்க வேண்டுமென்று மேலோட்டமாக சொல்லியிருந்தோம்.

மூன்று நிறுவனங்களும் தங்களது முழுமையான அதாவது எடிட்டிங் எல்லாம் முடித்து தனித் தனியாக டி வி டியாகத் தந்தார்கள் அதனை நானும் நிதானமாக பார்த்தேன்.

முதலாவது நிறுவனம் :-
என்னால் நம்ப முடியவில்லை இது நான் வேலை செய்யும் ஃபேக்டரிதானா என்று அவ்வளவு ரிச் லூக் தத்ரூபமாக இருந்தது... அதுவும் ஆட்களின் முகங்களை காட்டாமல் இயந்திரங்களையும் அதன் இயக்கங்களையும் உற்பத்தியாகும் பொருட்களையும் காட்டியிருந்தனர் அற்புதமாக.

இரண்டாவது நிறுவனம்:-
வழக்கமான ஆவணப்படம் எடுப்பதைப் போல் அறிமுகம் காட்டி முதலாளி அப்புறம் சுற்றும் கேமராவோடு பின்குரலின் தொடர் பேச்சுதான் அதிகமிருந்தது, அதிலும் எங்கேயும் நிலைத்திருக்காமல் பாட்டும் பாடலும் பார்ப்பதுபோல் காட்டிவிட்டு அதிபட்சமாக முதலாளி மற்றும் அவரின் மகனின் படங்கள் அடிக்கடி (ராஜீவ் காந்தி மாதிரி) வந்துகிட்டே இருந்தது.

மூன்றாவது நிறுவனம்:
ஆவணப்படத்திற்குரிய துவக்கம், பாதி திரை மறைக்கும் எழுத்துக்கள் இருப்பினும் ஃபேக்டரியிலிருக்கும் இயந்திரங்களையும் அதோடு வேலைகள் செய்யும் நபர்களின் முகங்கள் அடிக்கடி வந்தது அதுவும் தென்னிந்தியாவின் அரபிக் கடலோரப் பகுதி முகங்களுக்கு முக்கியத்தும் அளிக்கப்பட்டிருந்தது !

ஒரு கேள்வி : இந்த மூன்றில் என்னுடைய முதலாளி எதனைத் தேர்ந்தெடுத்திருப்பார் ? / முதலாளியின் மகன் எதனைத் தேர்ந்தெடுத்திருப்பார் ? / நான் எதனைத் தேர்ந்தெடுத்திருப்பேன் ?

ஒரு சிறு கிளைக் கேள்வி : நீங்கள் எதனைத் தேர்ந்தெடுத்திருப்பீர்கள் !? அந்த மூவரின் உருவாக்கும் திறன் (creativity) எப்படியனதாக இருந்திருக்கிறது ?

அவர்களுக்கு கொடுத்த கருப் பொருள் (concept) அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு இயங்கும் தொழிற்சாலையாகக் காட்டவேண்டும்"

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//சவாலான எழுத்துறையில் திவாலான பல பத்திரிக்கை உள்ளது.//

கிரவுன்(னு) : அப்படியே தும்மிட்டேன்(டா)ப்பா !

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

தம்பி மீராசா..

விசுவலாக பார்த்து கேட்டமாதிரி உணர்வு உங்களின் இந்த ஆக்கத்தை படித்தது. தெரியாத விசயத்தை மிக அருமையாக புரியும் படி நகைச்சுவையுடன் கூடிய அறிவுரைகளை கலகலப்பா சொல்லிப்புடியே தம்பி.. வாழ்த்துக்கள்..

இரண்டு நாள் வேலை அதிகம் அதான் உடன் கருத்திட முடியவில்லை.

Jounalism பற்றி விரிவா ஒரு கட்டுரை எழுதுங்களேன்..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சூப்பரா +ve and -ve செய்திகளை சொல்லிவிட்டு இறுதியில் "HANDLE EEMAN WITH CARE"
என்று உங்கள் தீர்ப்பை சொல்லிவிட்டதால், உங்கள் தீர்ப்பை மாற்ற எந்த நாட்டமையாலும் முடியாது.

Meerashah Rafia said...

வஅலைக்கும் முஸ்ஸலாம்.
crown சொன்னது…
//
உங்களைப்போல் உள்ளவர்கள் பத்திரிக்கைத்துறைக்கு வரனும்.//


சகோ.கிரவுன் கூறுவதுபோல் பத்திரிகை துறைக்கு செல்லத்தான் இதை படித்தான்..போகப்போகத்தான் தெரிந்தது தமிழக ஊடகம் காவி கால்தலங்களும்,மஞ்சள் துண்டுகளும், மஞ்சள் பத்திரிக்கைகளும் , பச்சை பொய்யும் நிறைந்தவையாக இருக்கிறதென்று. நடுநிலையான அல்லது இசுலாமிய கருத்துக்கேற்ற ஊடகத்திற்கோ
செல்லலாமென்றால், என்று பிரியும் என்று தெரியா கூட்டங்களுக்குள் சிக்க விருப்பமின்றி அனைத்தையும்கைவிட்டேன்/ என்பதுதான் உண்மை. இன்றும் நன்கு பயின்ற பத்திரிக்கை துறையை நழுவவிட்ட வருத்தம் உள்ளிருக்கத்தான் செய்கிறது.

//sabeer.abushahruk சொன்னது…
யாருக்காவது ஹைட்ராலிக்ஸ்/ஹெவி மெஷினரீச்ல இன்டெரெஸ்ட் உண்டா?//
சகோ. சபீர் மறுபடியும் நீங்களாகவே மாட்டிகொண்டுவிட்டீர். இதற்கும் சகோ.அபு இபுராஹிம்தான் நாட்டாமை.

தாஜுதீன் காக்கா.. உங்கள் ஆர்வத்திற்கான பதில் இன்ஷா அல்லாஹ் பதியப்படும்.

Shameed said...

ஒரு செய்தியை சொன்னால் புரியாது! அதே செய்தியை படித்தாலும் புரியாது! அதே செய்தியை படமாக (விசுவலாக) பார்த்தால்தான் நம் நாட்டு மக்களுக்கு உடனே புரிகின்றது இதுதான் இன்றைய இந்தியாவின் நிலைமை இதனால்தான் இன்று சினிமா கொடிகட்டி பறக்கின்றது.சகோ சொல்வது போல் கத்தி காய்கறிக்கா கழுத்துக்கா என்பதை கத்தியை கையில் வைத்திருப்பவர் தான் தீர்மானிக்கவேண்டும்

Shameed said...

sabeer.abushahruk சொன்னது… //
யாருக்காவது ஹைட்ராலிக்ஸ்/ஹெவி மெஷினரீச்ல இன்டெரெஸ்ட் உண்டா? //

கேள்வியை இப்போதே ரெடி செய்து வைதுகொள்ளப்போகின்றேன்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இரவில் படிக்கும்போது மின்சாரம் போகாதா? என்று ஏங்கிய மனசு அது ஒரு பொற்காலம் !

இப்போ மின்சாரம் வந்திடாதா? என்று படிக்க உட்காரும் மாணவ பருவம் ! (விடுமுறையிலும்) இது கனாக் காலம் !

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். வெளினாடுகளில் மின்சாரம் போனால் ஆச்சரியம். நம் நாட்டில் மின்சாரம் இருந்தால் ஆச்சரியம் மற்றும் ஸாக்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(மீ) : அருமையான இவ்வாக்கத்தினை கண்டதும் மேலும் விப்ரங்கள் சேகரித்து நெருங்கிய சொந்தம் அவர்களது மகனை இவ்வருடம் படிக்க அப்ளிகேஷன் வாங்கியிருப்பதாக தகவல் தந்தார்கள். ஏற்கனவே இஞ்ஜினியரிங் எலெக்ட்ரானிக்ஸ் எடுக்க இருந்த அந்த மாணவருக்கு கிராஃபிக்ஸ் மற்றும் டிசைனிங்கில் ஆர்வம் இருப்பது பெற்றோருக்கும் தெரியும் ஆதலால் இம்முடிவு அம்மாணவனின் முழு சம்மதத்தோடுதான் என்றும் சொன்னார்கள் !

Meerashah Rafia said...

அபுஇபுறாஹீம் சொன்னது…

//அவர்களது மகனை இவ்வருடம் படிக்க அப்ளிகேஷன் வாங்கியிருப்பதாக தகவல் தந்தார்கள்....அந்த மாணவருக்கு கிராஃபிக்ஸ் மற்றும் டிசைனிங்கில் ஆர்வம்...//

இதில் ஆர்வம் உள்ளவருக்கு சென்னையில் உள்ள Image College of Arts,Animation & Technology (ICAT) - http://www.icat.ac.in.
போன்ற நிறுவனங்கள் டிப்ளோமோ என்றில்லாமல் கிராஃபிக்ஸ் டிசைனிங் ஒரு பட்டப்படிப்பாகவே வைத்துள்ளார்கள். சினிமா போன்ற துறைகளை தவிர்த்து கிராஃபிக்ஸ் மட்டும் பயில இது ஒரு சிறந்து வழி.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இதில் ஆர்வம் உள்ளவருக்கு சென்னையில் உள்ள Image College of Arts,Animation & Technology (ICAT) - http://www.icat.ac.in.//

தகவலுக்கு நன்றி முயற்சிக்கவும் சொல்கிறேன் இன்ஷா அல்லாஹ் !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு