Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே ! - S K M - H நன்றியுரை.. 17

அதிரைநிருபர் பதிப்பகம் | May 06, 2011 | ,

எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே!

நான் மறக்க முடியாத பழைய மாணவர்களுள் ஒருவரான சகோதரர் ஜாகீர் ஹுசைன் தொலைபேசி வழியாக என்னிடம் பேட்டி கண்டு தொகுத்த பழைய நினைவுகளை ‘அதிரைநிருபர்’ வலைத்தளத்தில் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி !

வலைத்தளத்தில் வெளியான அந்தப் பேட்டியைப்படித்துவிட்டுப் பின்னோட்டமாக என்னுடைய பழைய மாணவ மாணவிகள் சிலர் வெளியிட்டுள்ள கருத்துக்களைக் கண்டு நான் மெய் சிலிர்த்துப்போனேன்!

நானே மறந்துபோன பல செய்திகளையும், தன்னடக்கம் காரணமாக நான் சொல்லத்தயங்கிய சில செய்திகளையும் சொன்னது கண்டு மகிழ்ந்து போனேன்!

நான் காதிர் முகைதீன் மேல் நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் பள்ளி ஆண்டு விழாக்களில் மாணவர்களைக் கொண்டுப் பல நாடகங்களை எழுதி இயக்கி அரங்கேற்றியுள்ளேன். அவற்றில் சில திருச்சி வானொலியிலும் ஒலிபரப்பாகியுள்ளன. என் நினைவில் நின்ற ‘மாவீரன் அலெக்சாண்டர்’, ‘தீரன் திப்பு சுல்தான்’ என்ற இரண்டு நாடகங்களை மட்டும் எனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் என் நினைவினின்றும் நீங்கி இருந்த ‘துணிவே துணை’, ‘தலைகேட்டான் தம்பி’, ‘நீதியா பாசமா’, ‘தாயகமே உனக்காக’, அட்வகேட் சுந்தரம், B.A.,B.L.’ போன்ற சில நாடகங்களைக் குறிப்பிட்டு அவற்றில் தாங்கள் நடித்த அனுபவங்களையும் பழைய மாணவ சகோதரர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

ஒரு மாணவ சகோதரர் (சபீர்) +2 அரசுப்பொதுத்தேர்வின்போது உயிரியல் தேர்வன்று வயிற்று வலியால் அவதியுற்றுத்தேர்வு எழுதச் சிரமப்பட்டபோது உரிய மாத்திரை வாங்கிக் கொடுத்து உதவிய நிகழ்வை நன்றியோடு நினைவு கூர்ந்திருந்தார்! பின்னொரு அரசுப் பொதுதுத்தேர்வில் கணிதப் பரீட்சையின்போது ஒரு மாணவர் மயக்கமுற்றதையும், முப்பது நிமிடங்கள் அவரை ஒய்வெடுக்கச் செய்து பின் தேர்வு எழுதச் செய்ததையும் நினைவு கூர்கிறேன்).

புது டில்லியிலிருந்து ஒரு பழைய மாணவ சகோதரி தன்னை மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிக்குத் தயார் செய்து அனுப்பி முதல் பரிசு பெறச்செய்ததை மகிழ்ச்சி பொங்கக் குறிப்பிட்டிருந்தார்!

நான் வகுப்பில் கணிதப்பாடம் கற்பிக்கும்போது இடை இடையே சில சுவையான செய்திகளையும், சில பொது அறிவுக் குறிப்புகளையும் கூறுவதுண்டு. அவற்றைக்கூட மறவாது சில மாணவ சகோதரர்கள் குரிப்பிட்டுள்ளார்கள்! எடுத்துக்கட்டாக தமிழில் போர் என்றால் ஆங்கிலத்தில் ‘War’; ஆங்கிலத்தில் ‘pour’ என்றால் தமிழில் ‘வார்’ (நீர் வார்த்தல்) என்று கூறிய சிறு செய்தியைக்கூட ஒரு மாணவ சகோதரர் நினைவு கூறி இருந்தார்! இவ்வாறு மீளும் பல பழைய மாணவச் சகோதரர்கள் முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட காலக்கட்டத்தின் நினைவுகளைக்கூட நினைவில் வைத்திருந்து தங்கள் கருத்துக்களை அள்ளித் தெளித்திருந்தது கண்டு நெகிழ்ந்து போனேன்!

அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

எனக்குக்கிடைத்துள்ள அத்தனை பாராட்டுதலுக்கும் வழியமைத்துத் தந்த காதிர் முஹைதீன் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் முன்னாள் தாளாளர், ‘அதிரையின் கல்வித்தந்தை’ ஹாஜி S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்களை இந்த நன்நேரத்தில் நன்றியோடு நினைவு கூர்வது எனது கடமையாகும். காதிர் முகைதீன் பள்ளி, கல்லூரிகளில் கட்டணமின்றி கல்வி கற்க உதவியதையும், B.Sc, பட்டப்படிப்பு முடித்தவுடன் ஆசிரியப்பயிற்சி இல்லாத நிலையில்கூடப் பள்ளியில் கணித ஆசிரியராக மூன்று ஆண்டுகள் பணியாற்ற வாய்ப்பு தந்ததையும், அடுத்து ஆசிரியப் பயிர்ச்சி (B.T.) முடித்தபின், B.T. ஆசிரியராகப் பனியமர்த்தியதையும், 1978ல் தமிழ் நாட்டில் +2 அறிமுகமானபோது P.G.T.C. என்ற படிப்பை முடிக்கச்செய்து P.G. ஆசிரியராகப் பணி உயர்த்தம் செய்ததையும், என்னைவிட மூத்த (Senior) ஆசிரியர்கள் பலர் இருக்க 1986ல் தலைமை ஆசிரியராகப் பனியமர்த்தியதையும், அதற்காக M.A. (வரலாறு) முதுகலைப்பட்டப்படிப்பை முடிக்கச் செய்ததையும் நெஞ்சில் நிறுத்தியவனாக மர்ஹூம் ஹாஜி S.M.S. அவர்களுக்கு என்றென்றும் நன்றியுடையவனாக இருப்பேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக எனக்கு இத்தகைய வாய்ப்புகளை அளித்து உதவிய அலகிலா அருளும், அளவிலா அன்பும் நிறைந்த அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப் புகழும்! அல்ஹம்துலில்லாஹ்!

என்றென்றும் மிக்க அன்புடன்,

- S.K.M. ஹாஜா முகைதீன்

17 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உங்கள் சிறப்பான தொண்டு மேலும் இமாம் ஷாபி பள்ளியில் தொடர உடல் ஆரோக்கியம் கைகொடுக்க மேலும் துஆ செய்கிறோம்.

sabeer.abushahruk said...

எங்க ஹாஜாமி சார் நோய் நொடியின்றி எல்லா செல்வங்களும் பெற்று நீடூழி வாழ என் து ஆ!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நல்ல ஆரோக்கியத்துடன் கல்விச் சேவை தொடர்ந்திட என்றும் எங்கள் துஆ !

அப்துல்மாலிக் said...

தாங்களீடம் படித்தமைக்கும், மாணவனாக இருந்தமைக்கும் நாங்கள்தான் நன்றிகடன் பட்டிருக்கோம், நீண்ட உடல் ஆரோக்கியத்தை கொடுத்து நமதூருக்கு கல்விப்பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

Shameed said...

எங்களின் துவா நீங்கள் நீடுழி வாழவேண்டும்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

மாணவனாக இருந்த தன்னை ஆசிரியராக மாற்றியவருக்கு நன்றி சொல்லி தன்னடக்கத்துடன் ஞாபகப்படுத்தியிருப்பது நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.

கல்வித்துறையில் மேன்மேலும் நீங்கள் சேவையாற்ற வேண்டும், நீங்கள் இணையத்தில் மூலம் உங்கள் சேவையை தொடரவேண்டும் என்பது எங்கள் அனைவரின் வேண்டுகோள்.

நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீடூழிவாழ து ஆ செய்கிறோம்

ZAKIR HUSSAIN said...

எனக்கு உங்களை பேட்டி எடுக்கவேண்டும் என்ற எண்ணம் வந்ததற்கு காரணம், இப்போது உலகளாவிய அளவில் உங்கள் மாணவர்கள் இருப்பதுதான் காரணம். உங்களுக்கு நன்றி சொல்லி எழுதியவர்கள் எல்லாம் கம்ப்யூட்டரில் எழுத தெரிந்தவர்கள், ஆனால் கம்ப்யூட்டரில் பேட்டியை பார்த்துவிட்டு சந்தோசப்பட்ட மாணவர்களும் ஏராளம்.

'நான் ஏதோ சும்மா பேசுகிற மாதிரிதான் பேசினேன், எப்படி எல்லா விசயமும் கரக்டாக எழுதியிருக்காப்லெ ஜாகிர்?' என்று வாவன்னா சாரிடம் நீங்கள் பேசிக்கொண்டிருந்ததாக சொன்னார்கள்.

உங்களிடம் பேசும்போது ஒரு பேப்பரில் பாயின்ட் ஃபார்மில் குறித்துக்கொண்டேன், பிறகு பேசியதில்தான் ஞாபகம்.
இருக்குமல்லவா அப்ப்டியே கம்ப்யூட்ட்ருக்கு மாற்ற வேண்டியதுதான்' என்று சொன்னேன்.

"ஆர்வம் இருக்கும் விசயங்கள் மறக்காது' - இதை சொன்னது வாவன்னா சார்.நான் அவரின் இந்த வார்த்தையில் அசந்து போனேன்...எத்தனையோ நாட்கள் படிக்கும் வாழ்க்கை பாடத்தை ஒரே வரியில் சொன்ன அவரின் திறமை கண்டு

சிலருக்கு அறிவின் விசாலம் அளந்து கொடுக்கப்பட்டிருக்கும்..வாவன்னா சாருக்கு அள்ளிவழங்கப்பட்டிருக்கிறது

. உங்களிடம் பேசும்போது நீங்கள் பழைய நினைவுக்கே போய் விட்டதாக என்னிடம் சொன்னதும். வாவன்னா சாரிடம் பேசும்போது " எனக்கு புது ரத்தம் கிடைத்த மாதிரி இருக்கிறது என சொன்னதும்' என் முயற்சிக்கு கிடைத்த மகிழ்ச்சியாக கருதுகிறேன்..இருப்பினும்..எல்லாவற்றிலும் நிறைந்து இருக்கும் இறைவனே மிகப்பெரியவன்

இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளுடன் மகிழ்வாய் வாழ துவா செய்கிறோம்.

Unknown said...

அன்பு ஆசானே,
உங்கள் தன்னடக்கத்திற்கு இன்னும் ஒரு எடுத்துக்காட்டு நீங்கள் பெற்ற பட்டங்களை எல்லாம் உங்கள் பெயருக்கு பின்னல் போட்டால் இடம் போதாது என்று சில பட்டங்களை மட்டும் குறிப்பிட்டிருகிரீர்கள்.

நான் சிறுவனாக இருந்தபோதுதான் மேலே நீங்கள் குறிப்பிடிருந்த சில நாடகங்கள் அரங்கேறின அதை காணும்போது நாமும் ஹாஜமீ சார் நாடகத்தில் ஒரு ரோலாவது கேட்டு பெறவேண்டும் என ஆசைப்பட்டேன் அனால் நீங்கள் தலைமை ஆசிரியர் பொறுப்பேற்றவுடன் நாடகம் எழுதுவதை நிறுத்திவிட்டீர்கள் என்று நினைகேறேன், ஆனால் ஒன்பதாம் வகுப்பு பயிலும்போது வேறு ஒரு சமூக நாடகத்தில் நடிக்க நேர்ந்தது அதில் நண்பன் நஜ்முதீன், நிமலன் இன்னும் சிலர் நடித்தார்கள் அதை தயாரித்தவர் தற்போதைய தலைமை ஆசிரியை ரோசம்மா டீச்சர் அவர்கள், நான் ரிகர்சல் பார்த்ததை போல் நடிக்காமல் கொஞ்சம் மிகையாக சொந்த வசனங்களை சேர்த்து பேசினேன் அதை நீங்கள் தனிப்பட்ட முறையில் பாராட்டினீர்கள் ஆனால் உண்மையில் படித்த வசனம் மறந்து விட்டதால் பதஷ்டதில் எதோ உளறினேன் அதற்காக டீச்சரிடம் வாங்கி கட்டிக்கொண்டேன் அது வேறு விஷயம்.
மறக்க முடியாத நினைவுகள்

உங்களுக்கு நோயற்ற, நீண்ட ஆயுளை எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்வானாக ஆமீன்

ஜபருல்லாஹ்
ஜித்தா

Anonymous said...

மின் அஞ்சல் வழி கருத்து..
-----------------------------------------

கண்ணியத்திற்குரிய ஆசான் ஹாஜி ஜனாப் S K M ஹாஜா முஹைதீன் M.A., B.Sc., B.T. அவர்களுக்கு,

நீங்கள் பயிற்சி பெற்ற ஆசிரியராக பணியைத் தொடங்கிய 1970 முதல் 1975 வரை பள்ளியின் பல பணிகளில் உங்களின் மாணவனாகிய நான், உங்களோடு சேர்ந்து நானும் உங்களுக்கு துணையாக நின்றவன் என்பதை இங்கு பெருமையோடு கூறிக் கொள்வதில் பெருமையடைகிறேன்.

நீங்கள் வகுப்பறையில் கணிதம் கற்பித்த முறையை நான் விளக்க ஆரம்பித்தால் பக்கங்கள் போதாது. ஆகவே அதைப்பற்றி இங்கே நான் விவரிக்க விரும்பவில்லை.

இருப்பினும் தாங்கள் படைத்த நாடகங்களின் பெயர்களை மட்டும் கூற விரும்புகிறேன்.

துணிவே துணை - 1971 மேடை நாடகம்.

தீரன் திப்பு சுல்தான் - 1972 மேடை நாடகம், 1975 வானொலி நாடகம்.

புலித்தேவன் - 1972 சுதந்திர தின வெள்ளி விழா மேடை நாடகம்.
ஆனால் தாங்கள் (SKMH) கல்லூரியில் படிக்கும்போது, தஞ்சையில் நடந்த அனைத்துக் கல்லூரி போட்டியில் புலித்தேவன் மேடை நாடகம் வெற்றி பெற்று, நீங்கள் சிறந்த நடிகர் என்ற முதல் பரிசு பெற்றிர்கள். அந்த புகை படத்தை என்னிடம் நீங்கள் காண்பித்துள்ளீர்கள்.

நிதியா பாசமா - 1969 க்கு முன் நீங்கள் untrained ஆசிரியராக பணிபுரிந்த போது அரங்கேறிய மேடை நாடகம். இந்த நாடகத்தின் வசனங்கள் சற்று மாற்றப் பட்டு அட்வகேட் சுந்தரம் B.A., B.L., என்ற பெயரில் 1973 ல் மேடை நாடகமாக அரங்கேறியது.

தாயகமே உனக்காக - 1974 மேடை நாடகம்,

ஒட்டக் கூத்தர் - 1975 மேடை நாகம். மேலும் 1969 க்கு முன் நீங்கள் untrained ஆசிரியராக பணிபுரிந்த போது அரங்கேறிய மேடை நாடகம். இந்த நாடகத்தின் வசனங்கள் சற்று மாற்றப் பட்டு திறக்கட்டும் சிறைக் கதவு என்ற பெயரில் 1977 முத்தமிழ் விழாவில் கல்லூரியில் அரங்கேறியது.

அறம் வளர்த்த அன்னை - 1976 முத்தமிழ் விழாவில் கல்லூரியில் அரங்கேறியது. இந்த நாடகத்திற்கு ஒரு தனி சிறப்புண்டு. பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் எமெர்ஜென்சி ஆட்சி காலத்தில் கொண்டுவந்த 20 அம்சத் திட்டத்தை மையமாக வைத்து, கதாநாயகனே இல்லாமல் விதவைப் பெண்ணை கதாநாயகியாக வைத்து இந்த நாடகத்தை அரங்கேற்றி, அறிஞர் பெருமக்களாலும் அரசியல் வாதிகளாலும் மிகப் பெரும் பாராட்டைப் பெற்றீர்கள்.

வீரன் வீராயி - தாங்கள் பல நகைசுவை காட்சிகளை தயாரித்திருந்தாலும்,வீரன் வீராயி நகைசுவை காட்சிகள் அன்றைய அதிரை மக்களால் மிகவும் பாராட்டுப் பெற்றது.

மாவீரன் அலெக்சாண்டர் - 1974 வானொலி நாடகம்.

தீரன் திப்புசுல்தான் - 1975 வானொலி நாடகம்.

இதுபோன்று எண்ணற்ற நினைவுகளை என் ஆசான் ஹாஜி ஜனாப் S K M ஹாஜா முஹைதீன் M.A., B.Sc., B.T. அவர்களிடம் நான் பயின்ற காலங்களை எழுதிக் கொண்டே போகலாம். இருப்பினும் சில குறிப்புகளை மட்டும் இங்கே தந்துள்ளேன்.

நூர் முஹம்மது / கதீப் - தமாம் / சவூதி அரேபியா.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அன்பின் நூர் முஹம்மத் காக்கா : என் யூகம் சரியென்றால்... நான் சிறுவனாக இருக்கும்போது நீங்களும் நண்பர்களோடு தின்னை நாடகங்கள் போட்டது ஞாபகம் இருக்கு....

உங்களைப் போல் வருடம் அதன் நிகழ்வுகளை கோர்வையாக ஞாபகத்திற்குள் வர மல்லுக் கட்டுகிறது !

ஒருவேலை ஜாகிர் காக்காவின் கருத்திலிருப்பதுபோல்...

/// "ஆர்வம் இருக்கும் விசயங்கள் மறக்காது' - இதை சொன்னது வாவன்னா சார்.நான் அவரின் இந்த வார்த்தையில் அசந்து போனேன்...எத்தனையோ நாட்கள் படிக்கும் வாழ்க்கை பாடத்தை ஒரே வரியில் சொன்ன அவரின் திறமை கண்டு.... ///

இப்போதான் உணர்கிறேன் உங்களின் ஞாபகத் திறனை...

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே !

Anonymous said...

தம்பி அபுஇபுறாஹீம் அவர்களுக்கு

இதுவரை நான் என் நண்பர்களோடு திண்ணை நாடகங்கள் போட்டதில்லை. ஆனால் உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரியிலும் அதிகமான நாடகங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளேன். பல மேடை பேச்சுக்களிலும் பட்டிமன்றங்களிலும் பங்கு பெற்றுள்ளேன்.

அதுவன்றி, நம் ஆசான் ஹாஜி ஜனாப் S K M ஹாஜா முஹைதீன் சார் அவர்கள் இயற்றிய சில நாடகங்களுக்கு, அவர்களின் கதை, வசனம், டைரக்சன் இவைகளுக்கு அவர்கள் கொடுத்த ஆணையை செயல் படுத்தும் உதவியாளராக படிக்கும் காலங்களில் இருந்திருக்கின்றேன்.

நூர் முஹம்மது / கதீப் - தமாம் / சவூதி அரேபியா

crown said...

அதுவன்றி, நம் ஆசான் ஹாஜி ஜனாப் S K M ஹாஜா முஹைதீன் சார் அவர்கள் இயற்றிய சில நாடகங்களுக்கு, அவர்களின் கதை, வசனம், டைரக்சன் இவைகளுக்கு அவர்கள் கொடுத்த ஆணையை செயல் படுத்தும் உதவியாளராக படிக்கும் காலங்களில் இருந்திருக்கின்றேன்.

நூர் முஹம்மது / கதீப் - தமாம் / சவூதி அரேபியா
--------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.செங்கள்,மண் (செங்கமண்) கொண்டு கட்டியதல்ல ஹாஜாமி சாரின் தொடர்பு அது மரியாதை,அன்பு, நட்பு கொண்டு கட்டப்பட்ட மதிப்புச்சின்னம் .(அபுஇபுறாகிம் காக்கா இப்ப நீங்க இவங்க யாருன்னு புரிஞ்சிருப்பீங்க)இவர் தம்பியை நினைத்து நல்ல ஒரு இஞ்சி(சாறு நல்ல இறங்கவிட்டு) டீ குடிச்சிட்டு யோசிங்க இந்த "அருமை" காக்காவைப்பற்றி விளங்கும்.

Yasir said...

உங்கள் சிறப்பான தொண்டு மேலும் இமாம் ஷாபி பள்ளியில் தொடர உடல் ஆரோக்கியம் கைகொடுக்க மேலும் துஆ செய்கிறோம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// இவர் தம்பியை நினைத்து நல்ல ஒரு இஞ்சி(சாறு நல்ல இறங்கவிட்டு) டீ குடிச்சிட்டு யோசிங்க இந்த "அருமை" காக்காவைப்பற்றி விளங்கும். //

இம்தியாஸ் காக்கா !?, கிரவ்னு... கிர்ர்ர்ர்ன்ன்னு வருது(டா)ப்பா !

crown said...

அபுஇபுறாஹீம் சொன்னது…

// இவர் தம்பியை நினைத்து நல்ல ஒரு இஞ்சி(சாறு நல்ல இறங்கவிட்டு) டீ குடிச்சிட்டு யோசிங்க இந்த "அருமை" காக்காவைப்பற்றி விளங்கும். //

இம்தியாஸ் காக்கா !?, கிரவ்னு... கிர்ர்ர்ர்ன்ன்னு வருது(டா)ப்பா !
-------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும் சரியா புடிச்சிடியல!!!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவுன்(னு) : இங்கே பெரியவங்க இருக்கிற இடம்... அறிந்தும் அறியாமலும் - அறியாத வயது நிகழ்வுகள் பக்கம் வா(டா)ப்பா கொஞ்சம் பேச வேண்டியிருக்கு !

HAJA ISMAIL said...

மரியாதைக்குறிய ஆசிரியர் ஹாஜி ஜனாப் S K M ஹாஜா முஹைதீன் M.A., B.Sc., B.T. அவர்களின், நன்றியுரைக்கு, நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
நன்றியுரையிலும் ஆசான் அவர்கள், நெஞ்சம் கவர்ந்த நெகில்ழ்ச்சியான் சம்பவங்களை நினைவு கூர்ந்து, மெய்சிலிர்க்க வைத்து விட்டார்கள், அதற்காக மீண்டும் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

அடுத்ததாக சகோதரர் நூர் முஹம்மது, (கத்தீப் - தமாம் -சவூதி அரேபியா.) அவர்களை நன்றாக நினைவுக்கு வருகிறது,பேச்சு போட்டியிலும், மேடை நாடகங்களிலும், நிறையவே தனது பங்களிப்பை செய்திருக்கிறார்.
அதிலும் எனது அண்ணன் "சாகுல் ஹமீதுவுக்கும்", நூர் முஹம்மது,
அவர்களுக்கும் பேச்சு போட்டியில் சரியான் பலபரிச்சை, நடக்கும் .ஒரு தடவை இரண்டு பேருக்குமே !! முதல் பரிசு கிடைத்தது.

ஒரு தடவை தனி நடிப்பு போட்டியில் எனது அண்ணன் சாகுல் ஹமீது அவர்கள் யாரும் எதிபாராத விதமாக ,சட்டையை கலட்டி எரிந்து முதல் பரிசை தட்டி சென்றார், அந்த போட்டியில் நூர் அவர்களுக்கு இரண்டாம் பரிசுதான் கிடைத்தது.

ஒட்டக் கூத்தர் - 1975 மேடை நாடகம் "திறக்கட்டும் சிறைக்கதவு" என்ற பெயர் மாற்றத்துடன் (கடைசி நாட்களில்தான் பெயர் மாற்றம் செய்யப்பட்டது) முதன் முதலில் உயர் நிலைப்பள்ளியில்தான் அரங்கேற்ற பட்டது கல்லூரியில் அல்ல.

இதில் இன்னொரு விசேஷமும் இருந்தது, என்ன வென்றால்,அந்த வருடம் வரை ஜனாப் S K M அவர்கள் இயக்கிய நாடகங்களில். "பெண்" வேடங்களை மாணவர்கள் தான் ஏற்று நடித்து வந்தனர், ஆனால் இந்த "திறக்கட்டும் சிறைக்கதவு" நாடகத்தில்தான் ஒரு மாணவியே!! கதா நாயகியாக நடிக்க வைக்க பட்டார். பிறகு அடுத்த வருடம் நடத்தப்பட்ட ""இலச்சமா? இலட்சியமா? ""(ஊடலும் கூடலும் என்ற நாடகம்தான் இலச்சமா? இலட்சியமா? என்று பெயர் மாற்றம் செய்யபட்டிருந்தது) என்ற நாடகத்திலும் கதாநாயகியாக நடித்தார்
அந்த மாணவியின் பெயர் "சரஸ்வதி"

அந்த இரண்டு நாடகங்களிலும், "தீரன் திப்பு சுல்தான்" வானொலி நாடகத்திலும், நானும் நடித்தது, இன்றும் எனக்கு சந்தோசத்தை தருகிறது!!
.
"தீரன் திப்பு சுல்தான்" வானொலி நாடகம், திருச்சி, திருநெல்வேலி, கோயம்முத்தூர் ஆகிய வானொலி நிலையங்களில், ஒலிபரப்பப்பட்ட அன்று, எனது தெருவில் எல்லார் வீட்டு வாசல்களிலும் , பெண்கள் கூட்டமாக கூடி நின்று , கேட்டு ரசித்து பாராட்டியது இன்றும் எனது மனதில் பசுமையாக உள்ளது.

தாயகமே உனக்காக - 1974 மேடை நாடகம்தான் பிறகு , மாவீரன் அலெக்சாண்டர் - 1974 என்ற வானொலி நாடகமாக மாற்றப்பட்டதாக நாபகம்.

அன்புடன்,
ஹாஜா இஸ்மாயில் .எம்
அல்-ஜுபைல் சிட்டி,சவுதி அரேபியா

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு