வா.. வின் ஓவியம்
என்ற சீரிய நோக்கின்
விளைவே சமச்சீர் கல்வி!
எல்லாத் தரப்பிலும்
ஏகபோக வரவேற்பு!
வந்ததோ வந்தது தேர்தல்!
ஆட்சி மாற்றமும் வந்தது!
மீண்டும் அம்மாவின் எழுச்சி!
கலைஞர் திட்டமோ வீழ்ச்சி!
‘சமச்சீர் கல்வி வேண்டும்,
பாடங்கள் மாற வேண்டும;’
இது புதிய அரசின் கொள்கை!
மீண்டும் பழைய புத்தகங்கள்
மாணவர்க்கு வழங்கப்படும்.
விலைவாசி உயர்வால் மக்கள்
வாங்கிய அடிகளின் அத்தனை
வரிகளும் மக்களின் முதுகில்!
பத்தாம் வகுப்பு நூல்களின்
நகல் எடுத்துப் பகல் முதுழும்
பாடம் நடத்தின பல பள்ளிகள்!
விழலுக்கு இறைத்த நீராயிற்று!
பாடங்களின் வழிகாட்டி நூல்களை
மாணவர் தந்து உதவிக் கொள்வர்.
அவ்வளவு நூல்களும் கடைகளில்
சங்கமமாகி, சுருள்களாயிப் போயின!
வழிகாட்டி நூல்கள் வெளியாகவில்லை;
விரைவில் கிடைப்பது குதிரை கொம்பே!
மாணவர், பெற்றோர், ஆசிரியர் அவதி;
கண்ணான கல்வியோ கரை காணா அகதி!
இது அரசின் முழு மூச்சு முழக்கம்:
‘தீண்டாமை ஒரு பாவச்செயல்;
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்;
தீண்டாமை மனிதத் தன்மையற்ற செயல்.’
பழைய அரசின் திட்டங்களைத் தீண்டாமை
பாவச்செயல், பெரும் குற்றம் அல்லவா!
புத்தகம், சட்டசபை பழையது மேல் எனில்
பழைய ஆட்சியே மேல் என மக்கள்
சிந்திக்க மாட்டார்களா என்ன!
-- உமர்தம்பிஅண்ணன்
கற்பவனாக இரு / கற்பிப்பவனாக இரு
கல்வி அமைச்சகம் கீழ்
‘மாணவர் ஒரே நிலை;
கல்வியும் ஒரே நிலை!’என்ற சீரிய நோக்கின்
விளைவே சமச்சீர் கல்வி!
எல்லாத் தரப்பிலும்
ஏகபோக வரவேற்பு!
புது நூல்கள் அச்சாகி,
பள்ளிகளுக்கு வந்தன. வந்ததோ வந்தது தேர்தல்!
ஆட்சி மாற்றமும் வந்தது!
மீண்டும் அம்மாவின் எழுச்சி!
கலைஞர் திட்டமோ வீழ்ச்சி!
‘சமச்சீர் கல்வி வேண்டும்,
பாடங்கள் மாற வேண்டும;’
இது புதிய அரசின் கொள்கை!
மீண்டும் பழைய புத்தகங்கள்
மாணவர்க்கு வழங்கப்படும்.
விலைவாசி உயர்வால் மக்கள்
வாங்கிய அடிகளின் அத்தனை
வரிகளும் மக்களின் முதுகில்!
பத்தாம் வகுப்பு நூல்களின்
நகல் எடுத்துப் பகல் முதுழும்
பாடம் நடத்தின பல பள்ளிகள்!
விழலுக்கு இறைத்த நீராயிற்று!
பாடங்களின் வழிகாட்டி நூல்களை
மாணவர் தந்து உதவிக் கொள்வர்.
அவ்வளவு நூல்களும் கடைகளில்
சங்கமமாகி, சுருள்களாயிப் போயின!
வழிகாட்டி நூல்கள் வெளியாகவில்லை;
விரைவில் கிடைப்பது குதிரை கொம்பே!
மாணவர், பெற்றோர், ஆசிரியர் அவதி;
கண்ணான கல்வியோ கரை காணா அகதி!
இது அரசின் முழு மூச்சு முழக்கம்:
‘தீண்டாமை ஒரு பாவச்செயல்;
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்;
தீண்டாமை மனிதத் தன்மையற்ற செயல்.’
பழைய அரசின் திட்டங்களைத் தீண்டாமை
பாவச்செயல், பெரும் குற்றம் அல்லவா!
புத்தகம், சட்டசபை பழையது மேல் எனில்
பழைய ஆட்சியே மேல் என மக்கள்
சிந்திக்க மாட்டார்களா என்ன!
-- உமர்தம்பிஅண்ணன்
கற்பவனாக இரு / கற்பிப்பவனாக இரு
10 Responses So Far:
மு.க. நேற்றே சொல்லிட்டார் "என் பாடலை எடுத்திட்டாவது எப்பாடு பட்டாவது சமச்சீர் கொண்டு வாருங்கள் என்று !"
அம்மா என்னைக்குத்தான் மு.க.வின் சொல்கேட்டார் ? அவரின் மேடைப் பேச்சை மட்டும் கேட்பார் பதிலறிக்கை தயாரிக்க !
'முட்டையிடும் கோழிக்கன்றோ வலி தெரியும்?' எனும் சொலவடை நினைவுக்கு வருகிறது. 'அம்மா'வின் உத்தரவால் மாணவர்களோடு சேர்ந்து ஆசிரியப் பெருமக்களும் படுகின்ற அவதியை, ஆசிரியர் ஒருவர் உணர்ந்து இங்கு எழுதியிருப்பது மிகப் பொருத்தம்.
எனினும், ஜெ. மாறப்போவதில்லை: http://www.satyamargam.com/1711
> பழமொழிக்கேற்ப பின் புத்தியின் போக்கை தெளிவாக வரைந்துள்ளார்கள் வா.வாத்தியாரவர்கள்.
> ஆக இதையெல்லாம் பார்த்தால் கருவக்கார ஆட்சியை விட வாப்பா மொவன் ஆட்சியே தேவலாம் போல் தெரிகிறது.
>மேலும் என்னனமோ, காலம் தான் பதில் சொல்லனும்.
>இந்த மாதிரியான திடீர் போக்கால் இந்தாண்டு SSLC யில் முதல் இரண்டாம் மூன்றாம் இடத்தில் 40 பேர் பெற்ற தரம், அடுத்தாண்டு 10க்குள் தான் வருவார்கள்.இதன் பின்விளைவை அடுத்த ஒட்டுமொத்த ரிசல்ட்டில் நிச்சயம் உணர முடியும்.
//பாடங்களின் வழிகாட்டி நூல்களை
மாணவர் தந்து உதவிக் கொள்வர்.
அவ்வளவு நூல்களும் கடைகளில்
சங்கமமாகி, சுருள்களாயிப் போயின!//
சார் இதிலுமா அரசியல்வாதிகளின் கெடுபிடி...முன்பு மாணவர்களால் அஸ்ஸாம் அரசு கவிழ்ந்து ஒரு மாணவரே அரசை நடத்தவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டதாக ஞாபகம்.
தமிழ்நாடும் அப்படி ஆகிவிடுமோ?
"பழைய அரசின் திட்டங்களைத் தீண்டாமை
பாவச்செயல், பெரும் குற்றம் அல்லவா!
புத்தகம், சட்டசபை பழையது மேல் எனில்
பழைய ஆட்சியே மேல் என மக்கள்
சிந்திக்க மாட்டார்களா என்ன!"
அ.தி.மு.க-வுக்கு ஓட்டுப்போட்ட மக்கள் தற்போதே ஏண்டா போட்டோம் என்று உணரும் நிலை வருமோ!
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை துறந்து ஆட்சியாளர்கள், மாணவர்களின்..எதிர்கால சமுதாயத்தின் பயன் கருதி முடிவுகள் எடுக்க வேண்டும்
மாணாக்கர்களின் மேல் அக்கரையுள்ள ஒவ்வொரு ஆசிரியர்களின் மனசாட்சி இங்கு பேசுகிறது.
//பழைய அரசின் திட்டங்களைத் தீண்டாமை
பாவச்செயல், பெரும் குற்றம் அல்லவா!
புத்தகம், சட்டசபை பழையது மேல் எனில்
பழைய ஆட்சியே மேல் என மக்கள்
சிந்திக்க மாட்டார்களா என்ன! //
இந்தம்மாவின் செயல்பாடுகள் இப்படியே போனால் "பழைய ஆட்சியே மேல்" என்று தமிழ்நாட்டு அனைத்து மக்களும் சொல்லும் காலம் வெகுவிரைவில் இல்லை.
//ஜமீல் சொன்னது…
ஜெ. மாறப்போவதில்லை: http://www.satyamargam.com/1711 //
ஜமீல் காக்கா பகிர்வுக்கு மிக்க நன்றி.
புள்ளிவிபரங்களுடன் பதியப்பட்ட அருமையான பதிவு. எல்லோரும் சத்தியமார்க்கம் தளத்திற்கு சென்று படித்துப்பாருங்கள்.
முதலில் கல்வியை அரசின் பிடியிலிருந்து நீக்கி,அது ஒரு தனிப்பட்ட அதிகாரம் கொண்ட அமைப்பாக மாறவேண்டும்.எலெக்ஷன் கமிஷன் மாதிரி.அதுக்கு தலைவராக குரேஷி மாதிரி தலைவரும் வரவேண்டும்.அப்பத்தான் கல்வி துறை உருப்படும்.
வருத்தமாகதான் இருக்கு கல்வியையும்/மாணாக்களையும் அரசியல் பந்தாடுகிறதை எண்ணி :(((
Post a Comment