Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கனாக்கண்டேன் தோழா !!! 18

அதிரைநிருபர் பதிப்பகம் | May 13, 2011 | , ,

ஊரில் ஒன்றாய் நாமிருந்த காலத்தை
உறக்கத்தில் நான் கண்டேன் தோழா!
நீ என்னருகே இருந்த நாட்களெல்லாம்
உள்ளத்தின் பெருநாட்கள்

காலைமாலை இறைக்கல்வி பயில
இறைஇல்ல பள்ளி சென்றோம்
இனிதே திருக்குர்'ஆனையும்
இன்முகத்துடன் ஓதி முடித்தோம்

பள்ளி ஒஸ்தாரிடம் அன்று வாங்கியஅடி
இன்று எம் வாழ்வின் மெத்தைப்படி
முறையே ஓதியவர் ஏற்றம் பெற்றார்
தவறியவர் தட்டுக்கெட்டுப்போனார்.

குளிக்கச்சென்ற தென்னந்தோப்பில்
ஆசிரியர் இன்றி பாடம் நடக்கும்
மைனாக்குருவிகளின் பள்ளிக்கூடம்
மத்தாப்பின்றி கொண்டாட்டம் சேரும்

ஒன்றாக பள்ளி சென்றோம்
நன்கு பாடம் படித்தோம்
பள்ளியில் படிக்க தவறியதை
டியூசனில் படித்து முடித்தோம்

உலகத்தை உருண்டையாய்
உருட்டிவிளையாண்ட பழிங்கியும்
சாட்டையை சட்டென சுழற்றி
சுற்றித்திரிய வைத்த பம்பரமும்

மேக்காற்றில் அசைந்தாடும்
வால் நீண்ட பட்டமும் அதற்கு
கட்டணமின்றி அனுப்பிய தந்தியும்
அதை பெற்றுக்கொண்ட பட்டமும்

கூறிய இருமுனைக்'கில்லி'யும்
ஆசானாய் அதன் நீண்ட கம்பும்
தேடிச்சேர்த்த ஜெமிலாட்டு மூடியும்
கொத்தனாரின்றி கட்டிமுடித்த மண்வீடும்

ஆயுதமாய் அட்டபில்லும்
அதில் அடிபட்ட சிட்டுக்குருவியும்
இரக்கப்பட வைத்து விடும் எம்மை
அதை பறக்க விட மனசு துடிக்கும்

தட்டுத்தடுமாறி அடித்த தட்டச்சும்
முற்றுப்பெறாத ஆங்கிலப்பயிற்சியும்
இன்று கனவுகளில் வந்து செல்லும்
உள்ளக்காயத்திற்கு மருந்து போடும்

உம்மாவிடம் அடம்பிடித்து வாங்கிய
அலிலப்பரும், ஜாமின்ட்ரி பாக்ஸும்
இன்று உள்ளத்தில் படம் வரைந்து
உற்சாகத்தில் கோட்டை எழுப்பும்.

ப.கோட்டையில் வாங்கிய பெருநாள்சட்டை
மடமட சப்தம் வந்த வேட்டி
மாமா தந்த ஓமக்ஸ் வாட்ச்சு
ஆசையுடன் அப்பாதந்த அல்வா துண்டு

முதலில் கைப்பிடித்த கல்லுக்குச்சியும்
பிறகு பழகிய கைநடன கணிப்பொறியும்
எம் மனசுக்குள் அரங்கம் அமைத்து
நடுவரில்லா பட்டிமன்றம் நடத்தும்

கப்பல் போன்ற ஊதா தொப்பியும்
காசில்லாமல் கரைசேரும் ஆசைகளும்
காட்சிகள் பல இங்கு அரங்கேறும்
நம் கனவுகளில் எல்லாம் நடந்தேறும்

கள்ளத்தனமாய் ஓட்டிய மோட்டார் சைக்கிளும்
காசில்லாமல் பழகிக்கொண்ட பாஸ்போர்ட்எடுக்குமுறை
எட்டுத்தப்பில் கனவில் வந்து செல்லும்
உள்ள ஏக்கத்துடன் மறைந்து போகும்

மாலை நேர விளையாட்டு
நம்மை எல்லாம் சீராட்டும்
மஹ்ரிப்பின் பாங்கு ஒலி
விளையாட்டிற்கு முடிவு கட்டும்

சுத்தம் செய்த எம் உடலும்
சுகமாய் இரவும் ஆரம்பமாகும்
இருள் வந்து இருக்கை அமைக்கும்
தெரு விளக்கு விழித்துக்கொள்ளும்

மின்வெட்டு பொட்டிக்கடையும்
குத்துவிளக்கில் மிளிரும் கொட்டகையும்
எண்ணெய் தடவிய காகிதமோ
தன்பக்கம் கொசுக்களை ஈர்த்தெடுக்கும்

மின்மினிப்பூச்சிகள் வானில் பறக்கும்
பாசஉம்மா தந்த காசில் உள்ளம் மிதக்கும்
நண்பர்கள் கூட்டம் ஒன்றாய் சேரும்
இன்பமாய் இனியதை வாங்கி திண்கும்

எங்கோ இருக்கும் எனக்கும்
அங்கே இருக்கும் உனக்கும்
இடையிடையே வந்து செல்லும்
உறக்கத்தில் மேய்ந்து செல்லும்

கருமையில்லா அரும்பு மீசையும்
கன்னத்தில் சிறுகுன்றுகளாய் பருவும்
மனதிற்குள் அலைபாயும் ஆசைகளும்
மல்லாக்க படுக்க வைத்த இதயமும்

சீராக வாரிச்சீவிய சிங்கார தலைமுடியும்
இன்று சின்னாபின்னமானது நாகரீகமாய்
பரட்டைத்தலையன் இன்று பெருமைப்பட்டான்
தலைசீவி வந்தவனை வெட்கப்படவைத்தான்.

அன்று மழையில் நனைந்த உடலும்
வெயிலில் அலைந்த களைப்பும்
பனியில் பார்த்த பாட்டுக்கச்சேரியும்
பரணில் வைக்கப்படாத நினைவுகளும்

மரணித்த நம்மவர்கள் போக
மீதி இருக்கும் நீயும், நானும்
தொலைத்த இன்பத்தை திரும்பிபெறுவோமோ?
அதற்கு முன் இறைவனடி சேர்வோமோ?

இன்று ரசிக்க நம் ரயிலடி சென்றாலும்
புசிக்க நல்ல பிரியாணி தின்றாலும்
இருக்க நல்ல இருக்கை கிடைத்தாலும்
அனுபவிக்க அருகில் நீ இல்லையடா தோழா!

அன்று விளையாடித்திரிந்த நாட்களில்
எங்கோ தொலைத்து வந்த இன்பம்
இன்று சல்லடையாய் தேடினாலும்
எங்கும் இல்லையடா தோழா!

இன்ஷா அல்லாஹ் இங்கு கனவுகள் தொடரும் காட்சிகள் படரும் காணத்தவறாதீர் கட்டணமேதுமில்லை.

- மு.செ.மு. நெய்னா முஹம்மது

18 Responses So Far:

Anonymous said...

தாஜுதீன் சொன்னது... :

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் நெய்னா முகம்மது...

மிக அருமை.. தங்களின் எந்த ஒரு பதிவை படித்தாலும் ஊருக்கு சென்று வந்து உணர்வு என்றுமே.

வெளிநாட்டில் இருக்கும் யாராவது ஊருக்கு போகனும் என்ற ஏக்கத்தில் இருந்தால் சகோதரர் நெய்னா அவர்களின் கட்டுரை கவிதைகளை படியுங்கள், இலவசமாக ஊருக்கு போயிட்டு வரலாம்.

//அன்று விளையாடித்திரிந்த நாட்களில்
எங்கோ தொலைத்து வந்த இன்பம்
இன்று சல்லடையாய் தேடினாலும்
எங்கும் இல்லையடா தோழா! //

உண்மைதான், ஆனால் இணையத்தின் மூலம் பழைநினைவுகளை செய்திகளை பரிமாறிக்கொள்வதிலும் ஓர் ஆனந்தம் இருக்கத்தானே செய்கிறது.

வாழ்த்துக்கள் சகோதரர் நெய்னா..

Thursday, May 12, 2011 7:32:00 PM அன்று

Anonymous said...

sabeer.abushahruk சொன்னது... :

எம் எஸ் எம்மின் தோழர் அதிர்ஷ்டக்காரர், எத்தனை அற்புதமான சிறு பிராயத்து நனவுகள்! இத்தனை நிகழ்வுகளிலும் உடன் இருந்த அந்த தோழர்/கள் இவற்றை வழிமொழிய வாருங்களேன்.

வெல் டன் எம் எஸ் எம்!

Thursday, May 12, 2011 7:16:00 PM அன்று

Anonymous said...

அபுஇபுறாஹீம் சொன்னது...:

இப்படியொரு கனவு நான் கண்டதில்லை (!!) நட்பை வைத்து நாலு நாலு வரியாக வாறியனைத்திருக்கும் அற்புதம்...

இவ்வ்வ்வ்வ்ளோ நேரம் பின்னூட்ட வாசலில் சரியான மல்லுக் காட்டி சோர்ந்திருந்தால் இப்போ வாருங்கள் மக்களே... ஏதோ இந்தக் குடில் கட்டிக் கொடுத்தவர் வீட்டில் ஒட்டடை அடித்திருக்கிறார் அதான் கதவை கொஞ்சம் நேரம் சாத்தி வைத்திருந்தார் !!!

MSM(n)ன் கண்ட கனவு பதிவுக்குள் வந்திட ரொம்ப நேரமாயிடுச்சோ !?

Thursday, May 12, 2011 7:34:00 PM அன்று

Anonymous said...

sabeer.abushahruk சொன்னது... :

//சாட்டையை செவ்வனே//

நெய்னா,

"செவ்வனே" என்பது "சிவனே" என்பதன் திரிபு வார்த்தை என்று ஒரு பேச்சுண்டு.

"சாட்டையை சட்டென" தர்க்கமில்லாதது.

(ரொம்ப பேசிட்டேனோ?)

Thursday, May 12, 2011 7:53:00 PM அன்று

Anonymous said...

அபுஇபுறாஹீம் சொன்னது...:

கவிக் காக்காவின் வரிகளிலும் தர்க்கமில்லை ஆதலால் அவ்விடத்தில் சட்டென்று "சாட்டையை சட்டென" பொருந்திப் போனது(ம்) சரியே !

அங்கேயும் கவனிக்க !

Thursday, May 12, 2011 7:59:00 PM அன்று

Anonymous said...

M.H. ஜஹபர் சாதிக் சொன்னது...:

அந்த பந்தம் நானாக இருக்கக்கூடாதா! சொந்தமாகிப் போனேனே நெய்னா!
நிச்சயமாக அதனால் நான் அவன் இல்லை. அவன் யாரு நெய்னா, மைனாவிடமாவது தூதனுப்பி தெரியப் படுத்தனுமே!
நிச்சயம் நானும் கனவு காணனும், அது நீனா(நெய்னாவா)கத்தான் இருக்கனும்.

Friday, May 13, 2011 12:13:00 AM அன்று

Anonymous said...

Crown சொன்னது...:

sabeer.abushahruk சொன்னது…
//சாட்டையை செவ்வனே//

நெய்னா,

"செவ்வனே" என்பது "சிவனே" என்பதன் திரிபு வார்த்தை என்று ஒரு பேச்சுண்டு.

"சாட்டையை சட்டென" தர்க்கமில்லாதது.

(ரொம்ப பேசிட்டேனோ?)
-------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.இது தர்கமல்ல! நாம் குதர்கம் செய்யும் வர்கமல்ல. மார்கம் வேண்டிசெய்யும் திருத்தம் அழைத்து செல்லும் சுவர்கம். ஆமீன்.

Thursday, May 12, 2011 11:59:00 PM அன்று

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
சூப்பர் நெய்னா,
அந்த பந்தம் நானாக இருக்கக்கூடாதா?
சொந்தமாகிப்போனேனே!
அந்த தோழாவவை யாரென்றுசொல் நெய்னா,மைனாவிடமாவது தூது அனுப்பனுமே!
நானும் கனவு காணணும்,அது நீனாக(நெய்னாவாக)இருக்கணுமே!வருவியா(கனவில்) நெய்னா!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

இங்கு பின்னூட்டமிட்ட அனைத்து சகோதர அன்பர்களுக்கு என் நன்றிகளும் து'ஆவும்.

நிஜ வாழ்வில் கானல் நீராகிப்போன எத்தனையோ ஆசாபாசங்களை கனவு வாழ்வில் கண்டு மகிழ்கிறேன்.

உடன்பிறந்தவனில்லா குறையை சிறுபிராய நட்பு இங்கு நிறைவு செய்யும்.

யாவருக்கும் ஒரு நாள் மரணமுண்டு என்ற இறை சமத்துவமே எம்மை செம்மைபடுத்தும்.


தலை நரை கண்டாலும் இளம் கனவு இருக்கும் வரை இன்னும் தொடரும் இன்ஷா அல்லாஹ்.


மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

crown said...

பள்ளி ஒஸ்தாரிடம் அன்று வாங்கியஅடி
இன்று எம் வாழ்வின் மெத்தைப்படி
முறையே ஓதியவர் ஏற்றம் பெற்றார்
தவறியவர் தட்டுக்கெட்டுப்போனார்.
--------------------------------------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும். மேற்படி வார்தை சொன்னபடி உன்மைதான் என்பதை மெத்தபடித்தவர்கள் அறிவர்.இந்த வித்தைபடி எல்லாம் நல்லபடியாகத்தான் அமையும். ஓதுவீராக!

crown said...

மேக்காற்றில் அசைந்தாடும்
வால் நீண்ட பட்டமும் அதற்கு
கட்டணமின்றி அனுப்பிய தந்தியும்
அதை பெற்றுக்கொண்ட பட்டமும்.
----------------------------------------------
கம்பியின்றி செல்லும் தந்தி கட,கட,கட்,கட்
இங்கு நூல் வழி செல்லும் தந்தி தத்தி,தத்திசெல்லும். நூல் இல்லாமல் பட்டமும் இல்லை. நூல் படிக்காமல் பட்டமும் இல்லை. படித்தால் எங்கும் பறக்கலாம் .வானமே எல்லை.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.


சான்றோர்க‌ள் அவையில் இந்த‌ சின்ன‌ப்பைய‌னின் த‌வ‌றை ("செவ்வ‌னே" என்ப‌தை செம்மையாக‌ என்று கூட‌ நான் சொல்லி இருக்கலாம்) சுட்டிக்காட்டிய‌ அபுஇபுறாகீம் காக்காவிற்கும் உன் க‌ன‌வில் நான் வ‌ந்து விளையாட‌ விரும்பும் (ப‌ச்சை த‌லைப்பாகை அணியாம‌ல் வ‌ந்தால் ச‌ரிதான்) என் ம‌ச்சான் ஜ‌ஹ‌ப‌ர் சாதிக்கிற்கும் என் ந‌ன்றிக‌ளும் து'ஆவும்.

க‌ன‌வில் வ‌ந்து விளையாட‌ காசென்ன‌ வேண்டும்? க‌ளைப்பெங்கு உண்டு? நீண்ட‌ நாட்க‌ள் க‌ன‌வு அனுப‌வ‌த்தில் நான் க‌ண்ட‌ உண்மை என்ன‌வெனில் (பி.ஹெச்.டி. செய்யாம‌ல் க‌ண்ட கண்டுபிடிப்பு) ந‌ம்மை துர‌த்தி வ‌ருப‌வ‌ர் வேக‌மாக‌ ஓடி வ‌ருவார் ஆனால் ந‌ம்மால் வேக‌மாக‌ க‌ன‌வில் ஓட‌ முடியாது. ந‌ம் கால்க‌ளுக்கு ஏதோ க‌ண்ணுக்குத்தெரியாத‌ ஒரு பூட்டு போட‌ப்ப‌ட்டிருப்ப‌து போல் இருக்கும். யாருக்கேனும் அனுப‌வ‌ம் உண்டா?


மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

crown said...

உம்மாவிடம் அடம்பிடித்து வாங்கிய
அலிலப்பரும், ஜாமின்ட்ரி பாக்ஸும்
இன்று உள்ளத்தில் படம் வரைந்து
உற்சாகத்தில் கோட்டை எழுப்பும்.
-------------------------------------------------
இதுபோல் நினைவுகளை அழிக்க ஏதும் அழிப்பான் உள்ளதா?? எதில் அழியும் அன்று இதயத்தில் போட்ட வட்டமும்,சதுரமும்,சகலமும்.!!!!!!

crown said...

சுத்தம் செய்த எம் உடலும்
சுகமாய் இரவும் ஆரம்பமாகும்
இருள் வந்து இருக்கை அமைக்கும்
தெரு விளக்கு விழித்துக்கொள்ளும்
------------------------------------
அஹா!! என்னவோரு அருமையான சொல்விளையாட்டு இருள் வந்து இருக்கை அமைக்கும்.தெருவிளக்கு விழித்து கொள்ளும். கண்ணைமூடி ரசித்தேன். கண்தூங்காமல் தவித்தேன்,தேன்,தேன்....அப்புறம் சிறு திருத்தம் சொன்னது அபுஇபுறாகிம் காக்காவல்ல கவிஞர் சகோ. சபீர் அவர்கள்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.


சான்றோர்க‌ள் அவையில் இந்த‌ சின்ன‌ப்பைய‌னின் த‌வ‌றை ("செவ்வ‌னே" என்ப‌தை செம்மையாக‌ என்று கூட‌ நான் சொல்லி இருக்கலாம்) சுட்டிக்காட்டிய கவிக்காக்காவுக்கு என் ந‌ன்றிக‌ளும் து'ஆவும்.

அதை இங்கு முறையே சுட்டி(குட்டி)க்காட்டிய‌ ச‌கோ. த‌ஸ்த‌கீருக்கு வ‌லைமாம‌ணி ப‌ட்ட‌ம் ஏற்ற‌தாக‌ இருக்கும் என எண்ணுகிறேன். இதிலும் த‌ந்தி விட‌ நினைக்க வேண்டாம்.......


மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

crown said...

அன்று மழையில் நனைந்த உடலும்
வெயிலில் அலைந்த களைப்பும்
பனியில் பார்த்த பாட்டுக்கச்சேரியும்
பரணியில் வைக்கப்படாத நினைவுகளும்.
------------------------------------------

சிறு திருத்தம். மன்னிக்கவும். பரனில் என்று இருக்கனும். அப்புறம் பரனில் தூக்கிப்போடாத பண்டமாய் நம் நினைவுகளை இதய அறையில் சுமக்கும் சுமை அருமை.( நைனா நான் சொல்வது தவறு இருந்தால் மன்னிக்கவும். இங்கு உள்ள சான்றோர்கள் தான் பதில் சொல்லனும்).

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.


சான்றோர்க‌ள் அவையில் இந்த‌ சின்ன‌ப்பைய‌னின் த‌வ‌றை ("செவ்வ‌னே" என்ப‌தை செம்மையாக‌ என்று கூட‌ நான் சொல்லி இருக்கலாம்) சுட்டிக்காட்டிய கவிக்காக்காவுக்கு என் ந‌ன்றிக‌ளும் து'ஆவும்.

அதை இங்கு முறையே சுட்டி(குட்டி)க்காட்டிய‌ ச‌கோ. த‌ஸ்த‌கீருக்கு வ‌லைமாம‌ணி ப‌ட்ட‌ம் ஏற்ற‌தாக‌ இருக்கும் என எண்ணுகிறேன். இதிலும் த‌ந்தி விட‌ நினைக்க வேண்டாம்.......


மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

crown said...

மரணித்த நம்மவர்கள் போக
மீதி இருக்கும் நீயும், நானும்
தொலைத்த இன்பத்தை திரும்பிபெறுவோமோ?
அதற்கு முன் இறைவனடி சேர்வோமோ?

இன்று ரசிக்க நம் ரயிலடி சென்றாலும்
புசிக்க நல்ல பிரியாணி தின்றாலும்
இருக்க நல்ல இருக்கை கிடைத்தாலும்
அனுபவிக்க அருகில் நீ இல்லையடா தோழா!

அன்று விளையாடித்திரிந்த நாட்களில்
எங்கோ தொலைத்து வந்த இன்பம்
இன்று சல்லடையாய் தேடினாலும்
எங்கும் இல்லையடா தோழா!
------------------------------------------------------------------

தண்ணீரை மாலையாக கோர்க முடியாது. ஆனால் கண்ணீரை மாலையாக்க முயல்கிறேன். தவிக்கிறேன்.ஆறா துயர்கொள்கிறேன் ஆனாலும் ஆருதல் கைகள் எடுத்து துடித்துக்கொள்கிறேன் இப்படிபட்ட நம்பிக்கைத்தரும் கவிதைகள் வழியாக.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு