மார்க்கத்தை ஊரில் இருப்பதைப் போன்று கடைபிடிப்பதில் உள்ள சிரமங்கள் மாதிரி அடுத்த மிகப்பெரிய சிரமம் “கல்வி” .
முக்கியமாக நடுத்தர வயதுடைய இன்றைய நம் பெண்கள் தனது பிள்ளைகளுக்கு உதவியாக கல்வியில் [முக்கியமாக ஹோம் ஒர்க், ப்ராக்டிஸ் போன்ற விசயங்களுக்கு தயாராக இல்லை அல்லது தகுதியானவர்களாக இல்லை] இதன் காரணம் நம் பெண்கள் படிப்பதில் ஊரில் இருந்த பெரியவர்களுக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை. நான் இங்கே சொல்ல வருவது இப்போதைக்கு 35 - 40 வயது ஆன நம் பெண்கள் படித்திருந்தால்... அது 1976, 1980 களில் ஆரம்பக்கல்வி கற்றிருக்க கூடிய நமது பெண்கள்..இன்னும் பின்னால் உள்ள வருடத்துக்கு போனால் நிலைமை இன்னும் மோசம். முன்பெல்லாம் 'மேவிலாசம்" எழுதத் தெரிந்தால் போதாதா? என கேட்கும் பெரியவர்களும் உண்டு. மேவிலாசம் என்பது அட்ரஸ்தான்..ஆக அட்ரஸ் எழுதத் தெரிந்தாலே வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைத்ததாக நம்பும் பெரியவர்களின் பிள்ளைகள் சாதிக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்பதை ஆர்டிக்கில் எழுதியெல்லாம் விளக்க முடியாது...குறும்படம் தான் எடுக்க வேண்டிவரும்... இப்போது உள்ள சிலபஸ் இன்னும் கொடூரமானது. முன்பு டிகிரியில் படித்ததை பிரைமரியில் கேட்டு சாவடிக்கும். இதற்கு இப்போது உள்ள ஆண்களும் சரி , பெண்களும் சரி தயாராக இல்லை.
தயாராக இல்லை என்பதற்காக இவர்கள் தப்பிக்கவும் முடியாது. ஏனெனில் தன் மகளை / மகனை முன்னேற்ற இவர்களின் அடுத்த ஆயத்தம் ட்யூசன். இப்போதைக்கு ட்யூசனுக்கு கொடுக்கும் பணத்தில் குறைந்தது மவுன்ட்ரோட்டில் கடையோ, அல்லது தஞ்சாவூர் மாவட்டத்தில் நல்ல விளைச்சலில் உள்ள தென்னந்தோப்போ வாங்கி விடலாம். இன்னும் சில நாடுகளில் பள்ளிக்கூட படிப்புக்கே அதிக காசு / பணம் அழ வேண்டி இருக்கிறது. ஸ்கூல் ஃபீஸ் கட்டியே ஏழையாக்கிவிடும் சில நாடுகள். ஆனாலும் முட்டாளாக வளரும் தனது குடிமகன்களுக்கு அதீத செலவு செய்யும்.
பிள்ளைகளை சரியாக படிக்க வைக்கத் தவறும் போது இந்த பெற்றோர்கள் அவர்களது பிள்ளைகளை கல்யாணம் செய்து கொடுக்கும்போது சில விதமான காம்ப்ரமைஸ் செய்து கொள்ள வேண்டி வரும். எது எப்படி இருந்தாலும் வெளி நாட்டில் இருந்த பிள்ளைகள் [முக்கியமாக பெண் பிள்ளைகள்] நம் ஊர் மாதிரி 'அத்துவான காட்டில்" காலம் தள்ளிவிடும் என நீங்கள் நினைத்தால் அது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறி [என்னைப் பொருத்த மட்டில்]. சம்பாதிக்க வந்த ஆண்கள் வெளிநாட்டில் வேலை, வேலை என்று ஒடிக்கொண்டிருக்கும் போது பிள்ளைகள் எப்படி வளர்கிறது என்பதில் கவனம் தேவை. பதின்ம வயதை அடையும்போது பெற்றோர்கள் ஒரு நண்பனைப்போல் பழகத்தெரிய வேண்டும். இல்லாவிடில் இவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்த பிள்ளை "பெற்றோர்கள் என்னைப் புறிந்து கொள்ளவில்லை" என்று ஒற்றை வரியில் உங்கள் பல வருட தியாகத்தை பஸ்பமாக்கி விட்டு போய்விடலாம். ஒரு விசயம் பெற்றோர்கள் மறந்து விடக்கூடாது. நீங்கள் வளர்ந்த சூழலில் பிள்ளைகள் வளர வில்லை. "ஒழுக்கம் ஊருக்கு ஊர் மாறிக்கிடக்கு' எனும் ஜெனரேசனோடு நாம் வாழ வேண்டியிருக்கிறது.
"தொழுகை இல்லாத வாழ்க்கை வெறுமையானது' என்பதை பிள்ளைகளுக்கு சரியாக உணர்த்த வேண்டும். தொழுகையை சரியாக கடைபிடிக்கும் பிள்ளகள் சீர்தூக்கிப் பார்த்து நடக்கும் தன்மை உடையது என்பது என் ஆணித்தரமான கருத்து. இதனால் கால ஓட்டத்தில் வரும் சல சலப்புக்கு பெரியவர்களிடம் இவர்கள் அதிகம் பலம் காட்டுவதில்லை.
வெளி நாட்டில் வேலை காரணமாகவும் , அதன் பிசி காரணமாகவும் சில பெற்றொர்கள் தன் பிள்ளையிடம் ஒரு விதமான் தூரம் மெயின்டைன் பன்னுவார்கள். எப்படி யிருந்தாலும் வார விடுமுறைகளில் தனது சவால் களையும் கஷ்டங்கலையும் பிள்ளைகளிடம் சொல்வதில் தவறு இல்லை என நினைக்கிறேன். அதே சமயம் தன்னால் அதை சரி செய்து விட முடியும் என்பதையும் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் பிள்ளைகளுக்கு ஒரு தன்னம்பிக்கை வராமல் போகும்.
அடுத்து மருத்துவம்...தான் தங்கியிருக்கும் நாட்டின் சூழ்நிலைக்கு சம்பந்தமில்லாமல் சாப்பிடும் பழக்கம் இந்தியாவிலும் தொற்றிக் கொண்டுள்ளது. வெளிநாட்டில் வாழும் பலர் ஊருக்கு வந்த போது தஞ்சாவூருக்கும் , சென்னைக்கும் அலையும் சூழ்நிலை தவிர்க்க சிறந்தது, உடல் பயிற்சி. இதை நம் பெண்கள் செய்வதே இல்லை. அது ஏதோ ஆண்கள் சம்பந்த பட்ட விசயம் மாதிரி அதைப்பற்றி சிந்திப்பதே இல்லை. சமீபத்தில் ஊர் போயிருந்த நான் நியூராலஜி சம்பந்தப்பட்ட நோய்களில் நம் பெண்கள் கணிசமான அளவு பாதிக்கப்பட்டிருந்ததை பார்த்தேன். [மைக்ரைன், நரம்புத்தளர்ச்சி, தூக்கமின்மை, இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம்]
பெரும்பாலான விசயங்கள் லைஃப் ஸ்டைல் நோய்கள். வெளிநாட்டில் இருப்பதால் வீட்டுக்குள்லேயே இருப்பது, வாரத்துக்கு ஒரு நாள் கூட வெளியே போகாமல் ஏறக்குறைய நவீன கைதி வாழ்க்கை... கணவன் வீட்டுக்கு வந்தாலும் வெளியெ கூட்டி போகாமல் ஊரில் உள்ள நோயாளிகள் சம்பந்தமாக மட்டும் பேசுவது [இது என்ன வார்ட் விசிட்டா] நம் ஊர் ஆட்களை பார்த்தாலும் ஒரே மெடிக்கல் ரிப்போர்ட்...வாழுங்கப்பா....வாழுங்க...பேசுறதுக்கு எவ்வளவோ விசயம் இருந்தும் ஏன் உங்களுக்கு இந்த வேலை?. பெரும்பாலான [வெளிநாட்டில் வசிக்கும் நம் பெண்கள் ஆண்களை சார்ந்து வாழ்கிறார்கள். இது ஆரோக்கியமானதா எனும் கேள்விக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
வெளி நாட்டில் வேலை பார்க்கும்போது காலையில் / மாலையில் நடப்பது சாத்தியமே இல்லை என்று சத்தியம் செய்பவர்கள், ஊருக்கு வந்தவுடன் உடல் ஆரோக்கியத்துக்கு யோகா மாஸ்டர் ரேஞ்சுக்கு தன் பிள்ளைகளுக்கும் [அவனுங்க நல்லபடியாத்தான் இருக்கானுங்க] மற்றும் தன் வீட்டு பெண்களுக்கும் அறிவுரை சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள்.
இதுவரை பெற்றோர்களின் தகுதியை பார்த்தாலும் வளர்ந்து வரும் பிள்ளைகள் [வெளி நாட்டில்] என்ன தகுதியை கொண்டிருந்தால் தனது இலக்கை அடைந்து முன்னேர முடியும் என்பதற்கு சில விசயங்களை பார்க்கலாம் அடுத்த பகுதியில்...
தொடரும்,.......
- ZAKIR HUSSAIN
Photography; Afzal Hussein Bin Zakir Hussain
23 Responses So Far:
தொடரட்டும் உங்கள் வித்தியாசமான எதார்த்தமான சவால்....நாங்களும் விடாமல் விரட்டி விரட்டி படிப்போம்
//பெரும்பாலான விசயங்கள் லைஃப் ஸ்டைல் நோய்கள். வெளிநாட்டில் இருப்பதால் வீட்டுக்குள்லேயே இருப்பது, வாரத்துக்கு ஒரு நாள் கூட வெளியே போகாமல் ஏறக்குறைய நவீன கைதி வாழ்க்கை... //
எதார்த்தம் !
மற்றுமொரு சைகாலஜிகல் பிரச்சினை வெளியில் சென்றால் செலவுகளைச் சமாளிக்க எடுக்கும் சிரத்தை !
மிரட்டல் தொடரட்டும் !
ஜெனேரேஷன் இடைவெளி இப்படியிருக்குமோ !?
அந்தகக் கலாத்தில் "ஓஹோ எந்தன் பேபி" வாப்பாமார்கள் பாடியது !
இந்தக் காலாத்தில் "ஷக்கலக்க பேபி" மவனுவோ பாடுவது கேட்டது !
ஜாகிர் ஹுசைன் காக்கா சொன்னது போல் கல்வியில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. ஏனன்று சொன்னால் அப்போ உள்ள பெற்றோர்கள் ஆர்வம் காட்டவில்லை.இப்போ உள்ள பெற்றோர்கள் தனது பிள்ளைகளுக்கு கல்வியில் ஆர்வம் காட்டுகிறார்கள்.இப்பொழுது அயல் நாடுகளுக்கு சென்று தனது பிள்ளைகள் கஸ்ட்டபடுவதை கண் கூடாக பார்த்துக் கொண்டுயிருக்கிறார்கள்.அது மட்டுமா பெண் பிள்ளைகளையும் படிக்க வைப்பதில்லை.இப்படி இருக்க எப்படி தனது பிள்ளைகளுக்கு படித்துக் கொடுப்பார்கள். இப்போ உள்ள பெண்கள் தொலைகாட்சியிலும்,அலைபேசிகளிலும் இருந்துக் கொண்டே இருக்கிறார்கள்.இப்படி இருக்க எப்படி அவர்கள் பிள்ளைகளுக்கு படித்துக் கொடுப்பார்.நாம் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். இப்போ உள்ள பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள்.இப்போ உள்ள பெற்றோர்கள் தனது பெண் பிள்ளைகளை
10- த்தாம் வகுப்பு அல்லது +2 வகுப்போடு முடித்து விடுகிறார்கள்.நீ கல்லூரி படித்து என்ன செய்ய போராய்.வீட்டில் உள்ள அடுப்படி வேலைய பாரு நீ படித்தாலும் சம்பாதிக்க போவது கிடையாது.உம்மாவுக்கு துணையாக இருந்து வேலையை பார்த்துக் கொடு.உன் அண்ணனோ,தம்பியோ படிக்கவில்லை ஆதலால் நீயும் படிக்க தேவை இல்லை.நீ வீட்டில் உட்காருகிரவதான் உனக்கு படிப்பு தேவை இல்லை.தொழுகை சரியாக இருந்தால் எல்லாம் சரியாக ஆகிவிடும்.பிள்ளைகளுக்கு முதலில் தொழுகை,தீன்,ஒழுக்கம் பற்றியும் சொல்லி கொடுத்தால் போதும் படிப்பு தானாக வரும் அதில் எந்த சந்தேகமும் இல்லை.
சமாளிக்கமுடியாத சவால்களாய்த் தொகுப்பதால் குறுக்குக்கேள்வி கேட்கமுடியாமல் போஇவிடுகிறது.
"நோ கொஸ்ஸின்ஸ் யுவர் ஆனர்" என்று சொல்லிட்டுப் போகலாம் என்றுதான் வந்தேன். ஆனால், நீ என்னவோ நானும் அபு இபுறாகீமும் (வேறு யார்லாம் இந்த லிஸ்ட்ல இருக்காங்களோ அவர்கள் இந்த ப்ராக்கெட்குள்ளே பதியவும்) வார நாட்களில் மனைவிகளை வெளியே கூட்டிப்போகாதமாதிரி எழுதியிருப்பதால் கீழ்கண்ட கேள்விகளைக் கேட்டுவிட்டு முடித்துக் கொள்கிறேன்.
- எவ்வளவுதான் முன்கூட்டியே ப்ளான் பண்ணாலும் வார நாட்களின் இறுதியில் வீட்டுக்குள்ளே வரும்போதே கொடாலித்தைல வாசமும் "தலைவலிக்குது. பிள்ளைகளைக் கூட்டிப்போய்ட்டு வந்துடுங்க" எனும் வசனமும் கேட்டால் அது எங்க தப்பா?
- வெளிலே போஇ "தென்றல்" காற்றை சுவாசிப்போம் வாவென்று எவ்வளவுதான் " செல்லமே" நு கூப்பிட்டாலும் துளசி, செல்லம்மாவைவிட்டு நகராதவர்களை எப்படிக்கூப்பிட்டுச் செல்வது?
-"ச்கூபி டூ" வில் வரும் மான்ஸ்ட்டர் கூட அந்த எபிஸோடிலேயே மர்மம் அவிழ்க்கும்; ஒரு பொணத்தை சுற்றி ஒருவாரம் அழுத சீரியல்களிலிருந்து எங்கள் (நம்மா?) மனைவியரை மீட்க ஏதாவது வழி யுண்டா?
- சவாலை சமாளியேன் பார்ப்போம்
Afsal,
If I say
that
you have
vacuumed the
dirt from my heart
with your
first photo
I should say
you
made me
dropped into
the second photo
but not
blown
like your object.
(A best photographer can only shoot a drop when it breaks. Your father attu photographer used to take photo of crops not drops when they glow not when blow)
jaakir,இனிமே "நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்"ன்னு கிளம்பினே...
//'அத்துவான காட்டில்"//
objection!!!
ஏய் துவான், எதை அத்துவானக் காடு என்கிறாய்?
கண்ணுக்கெட்டும் தூரம் வரை
கம்பீரமாய்க் கடல்
காலைத் தொட்டு உதிரும்போது
காதலுடன் மணல்
...வேணாம், எழுதிடுவேன், எழுதிடுவேன் எங்க ஊரைப்பற்றி, வேணாம்.
அனப்புனர்:
அபுஇபுறாஹிம்
பெறுநர்:
பதிவர் அவர்கள்
பொருள் : இன்றைய சவால் பகுதி-2 சார்ந்தே இந்தக் கருத்து...
ஐயா:
தாங்கள் எழுதிய இன்றைய சவால் பகுதி-2 நிறைவில் தொடருக்கும் கீழ் இட்டிருக்கும் புதிய புகைப்படக் கலைஞர் எடுத்த படம் சொட்டும் நீர் அதுவும் தழும்பும் நிறைந்த தண்ணீரில் ! அருமை !
நிற்க, என்னதான் ஆங்கில ஆங்கில எழுத்துக்களைத்தான் தட்டச்சு செய்கிறேன் ஆனால் இங்கே தமிழில் மொழிமாற்றம் செய்து வந்து விடுகிறது.
//'அத்துவான காட்டில்"//
இப்படி எழுதியதற்கு கண்டனம் !
இப்படிக்கு,
அபுஇபுறாஹிம்
காணவில்லை:
பெயர் : அபு இபுறாகீம்
ஊர் : அத்துவானக் காடு
காணப்போன நேரம்: செத்த நேரம் முன்பு
தீர்வு: பிரம்மையிலிருந்து மீண்டு பழயபடி போட்டுத் தாக்கவும். போரடிக்குதுப்பா.
சபீர் & அபு இப்ராஹிம்....
நீங்கள் வேண்டுமென்றால் நமது ஊரைப்பற்றி பெருமையாக பேசலாம். ஆனால் நான் எழுதிருக்கும் 'அத்துவானக்காடு' வளர்ந்து வரும் பிள்ளைகள் [ வெளிநாட்டில் ] பார்வையில்.
அன்று முற்றும் என முடித்தெழுதி விட்டு இன்று தொடரும் என்கிறீர்கள்.இது தான் எடிடராக்கா மற்றும் கவிகாக்காவின் சதியா!
ஜஸாக்கல்லாஹ் ஹைர்.
//என்ன தகுதியை கொண்டிருந்தால் தனது இலக்கை அடைந்து முன்னேற முடியும் என்பதற்கு பல விசயங்களை பார்க்கலாம் அடுத்த பகுதியில்...//
வருக!வருக!விரைந்து!!
நிச்சயம் ஃபால்லோ பண்ணவேண்டிய விடயங்கள், உடற்பயிற்சியே வாழ்வின் சிறந்த மருத்துவம் என்பதை விளங்கிக்க வேணும் (நாமும்தான் சொல்றோம் எங்கே செய்றோம்)
தொடருங்க காக்கா
நடைமுறை வாழ்க்கையில் எதிர்கொள்ள கூடிய சவால்கள் எதிர் கொண்டு வெற்றி அடைந்தால் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்
போட்டோ சூப்பர்
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
/// இப்போது உள்ள சிலபஸ் இன்னும் கொடூரமானது. முன்பு டிகிரியில் படித்ததை பிரைமரியில் கேட்டு சாவடிக்கும். இதற்கு இப்போது உள்ள ஆண்களும் சரி , பெண்களும் சரி தயாராக இல்லை.
தன் மகளை / மகனை முன்னேற்ற இவர்களின் அடுத்த ஆயத்தம் ட்யூசன்.
ஒரு விசயம் பெற்றோர்கள் மறந்து விடக்கூடாது. நீங்கள் வளர்ந்த சூழலில் பிள்ளைகள் வளர வில்லை. "ஒழுக்கம் ஊருக்கு ஊர் மாறிக்கிடக்கு' எனும் ஜெனரேசனோடு நாம் வாழ வேண்டியிருக்கிறது.
"பெற்றோர்கள் என்னைப் புறிந்து கொள்ளவில்லை" என்று ஒற்றை வரியில் உங்கள் பல வருட தியாகத்தை பஸ்பமாக்கி விட்டு போய்விடலாம்.
"தொழுகை இல்லாத வாழ்க்கை வெறுமையானது' ///
******************************************************************************
--- இவைகள் அனைத்தும் உண்மையே!
மாற்றி யோசிப்போம்!
நண்பர் ஜகபர் சாதிக் எழுதியது போல் தனது இலக்கை அடைவதற்கு என்ன வழியில் முயற்சி செய்ய முடியுமோ அந்த வழியில் முயற்சி செய்யவும்.முயற்சி செய்தால் தான் அந்த இலக்கை அடைய முடியும்.முயற்சி செய்யா விட்டால் நாம் சாதிக்க வேண்டிய இலக்கை அடைய முடியாது.இதற்கு மட்டுமல்ல எல்லா காரியங்களுக்கும் இந்த வாசகம் பொருந்தும் நாம் எதை அடைய வேண்டுமோ அதைதான் அடைய வேண்டும்.தேவை இல்லாத இலக்குக் நுழைய கூடாது ஜகபர் சாதிக் மிக அழகாக எழுதியிருக்கிறார்.நமக்கு என்ன தேவையோ அதற்கு முயற்சி எடுத்து முன்னேரே முடியும்.தனது தகுதிக்கு ஏற்றவாறு முன்னேறுவதற்கு வலி வகுக்கும்.
Mohamed சொன்னது…
//நண்பர் ஜகபர் சாதிக் எழுதியது போல் தனது இலக்கை அடைவதற்கு என்ன வழியில் முயற்சி செய்ய முடியுமோ............. //
மன்னிக்கவும்,
Mr.Mohamed (தற்சமயம் இப்பெயரை பலர் கொண்டிருக்கின்றனர்) உங்களை தெரியவில்லை.நீங்கள் கூறிய புகழுக்கு முழு சொந்தக்காரர் மலேசியக்காரரே.அழகான எழுத்து நடையும் அவரையே சாரும்.
சகோதரர் ஜஹபர் சாதிக் அவர்களுக்கு நன்றி. எனக்கு என்னவோ அவ்வளவு சிறந்த எழுத்தாற்றல் இருப்பதாக எண்ணியதில்லை.
சகோதரர் அலாவுதீன்...தேர்ந்தெடுத்து வரிகளை பாராட்டுவதன் மூலம் ஏதொ உருப்படியாக நான் எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன். இருப்பினும் உங்கள் [ உன் ] 'கடன் வாங்கலாம் வாங்க' தொடருக்கு இதெல்லாம் ஈடாக முடியாது.
சகோதரர் அப்துல் மாலிக் , முஹம்மது..இருவரின் உற்சாக வார்த்தைகளில் இந்த வீக் என்ட்நேரம் கிடைத்தால் பகுதி - 3 எழிதி விடலாம்.
ஹாஜி சாகுல்...உங்கள் படங்களை என் வீட்டில் எல்லோருக்கும் காண்பிப்பேன்...என் மகன் அஃப்சல் சொல்வது "ஏன் ஊரில் நீங்கள் எடுத்த படங்கள் சாகுல் அன்கிள் பார்வையில் இல்லை" ....சபீர் சொன்ன மாதிரி எனக்கே சந்தேகம் வருகிறது..நான் அட்டு போட்டோ எடுக்கிறேனோ???
மலைபோல் நம்மை (பொற்றோர், குழந்தைகள்) எதிர்நோக்கும் சவால்களுக்கிடையில் அன்றாடம் நடக்கும் நேற்றைய இன்றைய சவால்களையும் மிக அழகாக விளக்கிய விதம் அருமை
அஸ்ஸலாமு அலைக்கும். இங்கு யார் எழுதினாலும் நேரம் கிடைக்கும் போது உடனே கருத்து எழுதிவிடும் நான் இவர் எழுதினால் மட்டும் கூர்ந்து படித்து எழுத வேண்டியுள்ளது. காரணம் நாளுக்கு நாள் இவரின் எழுத்தில் உள்ள கூர்மை, நேர்மை யாரையும் தலையில் ஐஸ்வைக்காமல் சமூகத்திற்கு சொல்லும் பாங்கு. இவரின் நண்பர் கவிஞர் மிகமிதமாக ஆனால் அழுத்தமான வார்தைகளில் சமூக கருத்து சொல்வார் என்பதையும் இங்கு பதிய வேண்டியது என் கடமை.
-------------------------------------------------------------------தன் மகளை / மகனை முன்னேற்ற இவர்களின் அடுத்த ஆயத்தம் ட்யூசன். இப்போதைக்கு ட்யூசனுக்கு கொடுக்கும் பணத்தில் குறைந்தது மவுன்ட்ரோட்டில் கடையோ, அல்லது தஞ்சாவூர் மாவட்டத்தில் நல்ல விளைச்சலில் உள்ள தென்னந்தோப்போ வாங்கி விடலாம். இன்னும் சில நாடுகளில் பள்ளிக்கூட படிப்புக்கே அதிக காசு / பணம் அழ வேண்டி இருக்கிறது. ஸ்கூல் ஃபீஸ் கட்டியே ஏழையாக்கிவிடும் சில நாடுகள். ஆனாலும் முட்டாளாக வளரும் தனது குடிமகன்களுக்கு அதீத செலவு செய்யும்.
------------------------------------------------------------------
இதிலிருந்து பெற்றோறாகிய நாம் படிப்பினை பெறனும்.
பெரும்பாலான விசயங்கள் லைஃப் ஸ்டைல் நோய்கள். வெளிநாட்டில் இருப்பதால் வீட்டுக்குள்லேயே இருப்பது, வாரத்துக்கு ஒரு நாள் கூட வெளியே போகாமல் ஏறக்குறைய நவீன கைதி வாழ்க்கை... கணவன் வீட்டுக்கு வந்தாலும் வெளியெ கூட்டி போகாமல் ஊரில் உள்ள நோயாளிகள் சம்பந்தமாக மட்டும் பேசுவது [இது என்ன வார்ட் விசிட்டா] நம் ஊர் ஆட்களை பார்த்தாலும் ஒரே மெடிக்கல் ரிப்போர்ட்...வாழுங்கப்பா....வாழுங்க...பேசுறதுக்கு எவ்வளவோ விசயம் இருந்தும் ஏன் உங்களுக்கு இந்த வேலை?. பெரும்பாலான [வெளிநாட்டில் வசிக்கும் நம் பெண்கள் ஆண்களை சார்ந்து வாழ்கிறார்கள். இது ஆரோக்கியமானதா எனும் கேள்விக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
-----------------------------------------------------------------
எந்த ஒரு ஆறறிவு ஜீவனுக்கு impriority complex கூடாது. தேவை superiority complex ஆனாலும் இது பெண்ணுக்கு சற்று ஆனைவிட குறைவாக இருந்தால் ஆனை ஆனையிடமாட்டார்கள் இதனால் ஈகோ பிரட்சனை வராது. ஆனை சார்ந்து இருக்கனும் என்பது சுய ஒழுக்கம் , சமூக கட்டுபாடை பெண்ணுக்குள் விதைக்கும். இல்லறம் நல்லறமாக இருக்கும். இறைவன் அப்படித்தான் பெண்னை படைத்துள்ளான். அதே வேளை ஆனுக்கு தான் என்ற அகங்காரம் இருந்தால் அங்கே போட்டி உருவாகிவிடும். சில விசயங்கள் நூலிழையில் வித்தியாசப்படும் பெரும் விசயங்களாகிவிடும்.
வெளி நாட்டில் வேலை பார்க்கும்போது காலையில் / மாலையில் நடப்பது சாத்தியமே இல்லை என்று சத்தியம் செய்பவர்கள், ஊருக்கு வந்தவுடன் உடல் ஆரோக்கியத்துக்கு யோகா மாஸ்டர் ரேஞ்சுக்கு தன் பிள்ளைகளுக்கும் [அவனுங்க நல்லபடியாத்தான் இருக்கானுங்க] மற்றும் தன் வீட்டு பெண்களுக்கும் அறிவுரை சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள்.
---------------------------------------------------------------
இது ஒருவகை மன நோய்தானே மருத்துவரே? தன்னால் முடியாததை தம்மைச்சார்ந்தவர்கள் மூலம் நிறைவேற்றத்துடிக்கும் நல்ல எண்ணம் கொண்ட கெட்ட நோய் இது. இதனால் தன்னை சார்ந்தவர்களின் மேல் உரிமை என்று திணிப்பது. இப்படி திணிப்பதால் ஏற்கனவே முடிவுசெய்திருந்த தன் விருப்பம் என்பது சம்பந்தபட்ட மகனுக்கோ, மகளுக்கோ, ஏற்படுவது. உதாரணம். தாம் மருத்துவம் படிக்க ஆசை பட்ட ஏதோ ஒரு காரணத்தில் அது நடக்காமல் போனால் மருத்துவமே விருப்பமில்லாத வேறு துறையின் மேல் விருப்பம் கொண்ட பிள்ளைகள் மீது திணிப்பது.(சரியானு மருத்துவர் அய்யா நீங்கதான் சொல்லனும் நான் விடு ஜூட்)
To Brother CROWN,
//எந்த ஒரு ஆறறிவு ஜீவனுக்கு impriority complex கூடாது. தேவை superiority complex ஆனாலும் இது பெண்ணுக்கு சற்று ஆனைவிட குறைவாக இருந்தால் ஆனை ஆனையிடமாட்டார்கள் இதனால் ஈகோ பிரட்சனை வராது. ஆனை சார்ந்து இருக்கனும் என்பது சுய ஒழுக்கம் , சமூக கட்டுபாடை பெண்ணுக்குள் விதைக்கும். இல்லறம் நல்லறமாக இருக்கும்//
இது ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விசயங்களாக இருந்தால் பரவாயில்லை. பெண்ணுக்கு ஆண் பெண்ணை விட உயர்ந்தவன் என்று ஆட்சி செலுத்துவதுதான் காலக்கொடுமை. இதனால் விவாகரத்து போன்ற விசயங்களிலும் ஆண்களின் திமிரில் விளைந்த சில பிரச்சினைகளிலும் பெண்ணை ஒரு பிச்சைக்காரி மாதிரி காசு பணத்துக்கு கெஞ்ச விடுவது.....என்னைப்பொருத்தவரை கடுமையான தண்டனைக்குட்படுத்த வேண்டிய விசயம்.
CORRECTION: impriority complex....INFERIORITY COMPLEX.
ZAKIR HUSSAIN சொன்னது…
To Brother CROWN,
//எந்த ஒரு ஆறறிவு ஜீவனுக்கு impriority complex கூடாது. தேவை superiority complex ஆனாலும் இது பெண்ணுக்கு சற்று ஆனைவிட குறைவாக இருந்தால் ஆனை ஆனையிடமாட்டார்கள் இதனால் ஈகோ பிரட்சனை வராது. ஆனை சார்ந்து இருக்கனும் என்பது சுய ஒழுக்கம் , சமூக கட்டுபாடை பெண்ணுக்குள் விதைக்கும். இல்லறம் நல்லறமாக இருக்கும்//
இது ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விசயங்களாக இருந்தால் பரவாயில்லை. பெண்ணுக்கு ஆண் பெண்ணை விட உயர்ந்தவன் என்று ஆட்சி செலுத்துவதுதான் காலக்கொடுமை. இதனால் விவாகரத்து போன்ற விசயங்களிலும் ஆண்களின் திமிரில் விளைந்த சில பிரச்சினைகளிலும் பெண்ணை ஒரு பிச்சைக்காரி மாதிரி காசு பணத்துக்கு கெஞ்ச விடுவது.....என்னைப்பொருத்தவரை கடுமையான தண்டனைக்குட்படுத்த வேண்டிய விசயம்.
CORRECTION: impriority complex....INFERIORITY COMPLEX.
---------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நன்றி மருத்துவரே என் கருத்துக்கு உங்களின் கருத்துக்கும், என் வார்த்தை (எழுத்து பிழைன்னு தப்பிக்க மாட்டேன் காரணம் எனக்கு எந்த COMPLEX கிடையாது)யின் தவறை திருத்தி சொன்னதுக்கும்.
Post a Comment